• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

பொல் (தேங்காய்) சம்பல் செய்யும் முறை. விளக்குகிறார் வெள்ளையர்.

Recommended Posts

 

 வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு

 

 • Like 7

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சைத் தொட்டுட்டீங்கள் நாதம்...!  :)

Share this post


Link to post
Share on other sites

நன்றி இணைப்புக்கு சகோ முனி!! இந்த வெள்ளை யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளார். இவரிடம் தான் எப்படி உணவுகளை சுவைத்து உண்ணணும் என்று பழக வேணும்!

Share this post


Link to post
Share on other sites

இனிமேற்காலத்திலை வெள்ளையள் சொன்னால்த்தான் எங்கடடை சனமும் நம்பும்...tw_glasses:

Share this post


Link to post
Share on other sites

இப்பவெல்லாம் எமது உணவகங்களில் அவா்களும் அவா்களது உணவகங்களில் நாங்களும் .......

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

Share this post


Link to post
Share on other sites

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

நீங்கள் சொல்லுறது பச்ச முளவாய் சம்பல். இவர் போடுறது முளகாய்த்தூள் சம்பல். 

பொறகு, எங்கண்ட இடிச்ச சம்பல், பொரிச்சு இடிச்ச சம்பல், அரைச்ச பச்ச முளவாய் சம்பல், அரைச்ச செத்த முளவாய்ச் சம்பல், இஞ்சிச் சம்பல், தூதுவளைச் சம்பல், உள்ளிச்சம்பல்...

பிறகு சிங்களவரின்ற, கட்டசம்பல், மாசிக்கருவாட்டுச் சம்பல், றால் சம்பல்..... இன்னும் சொல்லலாம்.

தமிழ் நாட்டில இந்த சம்பல்கள் இல்லையக்கோய், ஏனென்டா இவை, டச்சுக்காரர் உபயம். மலேசியா, இந்தோனேசியா வில இருந்து அவயள் கொண்டாந்து உங்க தேங்காயப் போட்டு உல்டா பண்ணி எடுத்தது...

Share this post


Link to post
Share on other sites

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

Share this post


Link to post
Share on other sites

அருமையான பதிவு முனியர்.வாய் ஊறுது.

இந்த சம்பலை  நீங்களே இலகுவாய் செய்து சாப்பிடலாம் சுவைப் பிரியன்!

Share this post


Link to post
Share on other sites

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

Share this post


Link to post
Share on other sites

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

Share this post


Link to post
Share on other sites

 

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

 

மருதர்,

கறி குறித்த ஆய்வு செய்தால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

மிளகு தமிழர் திரவியம். இதுவே உறைப்பு என்னும் ஆறாவது சுவையினை தந்தது. இந்த மிளகை வைத்து வியாபாரம் செய்யப் போய்த் தான் சோழர்கள், கடாரம், ஸ்ரீ விஜயம், சீயம் வென்றார்கள்.

இந்த மிளகை வாங்கி, குர்பானியால் பலியிடப் படும், விலங்குகளை, உறைப்பூட்டி, பிரியாணி ஆக்கினர் அரேபியர்கள்.

அரபுலகில் இருந்து, மெதுவாக ஐரோப்பா போனது, மிளகு. 

மிளகு அறிமுகமாகும் வரை, ஐரோப்பாவில் 'உறைப்பு' என்னும் சுவை தெரிந்திருக்கவில்லை. இதனை அரேபியர்கள் தான் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தார்கள்.

மிளகினால் வந்த உறைப்பினால், மெய் மறந்த, அரச, பணக்காரக் குடும்பங்கள், மிளகுக்கு பதில் தங்கத்தினை கொடுத்து பண்டமாற்று செய்தார்கள். சில நாடுகள், மிளகினை வரியாக (Pepper Tax), ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த மிளகு வர்த்தகத்தினால் வந்த பெரும் பணத்தினால், அரபிகள், மாலைதீவு, இந்தோனேசியா நாடுகளை முஸ்லிம் நாடுகள் ஆக்கின. இந்தியாவினுள் பூந்து கொண்டார்கள்.

அதேவேளை, துருக்கியின் ஒட்டோமான் பேரரசு, ஐரோப்பியர்கள் தமது கடல் வழியினை பயன் படுத்துவதை தடை செய்ததால், அரேபியர்கள், பெரும் பணம் உழைத்தார்கள்.

ஐரோப்பியர்கள், மிளகு உற்பத்தி செய்பவர்களை தேடி புதிய பாதை காண கிளம்பினர். போத்துகேயர் கிழக்குப் பக்கமாக போய் 1493 ல் சேரநாடு போயினர்.மிளகு கண்டு திரும்பினர்.

அதவேளை, அதே மிளகை தேடி மறுபக்கம் போன ஸ்பானிய கொலம்பஸ் கோஸ்டியில் இருந்த டியாகோ, புதிய உலகத்தில் இருந்து 1494 ல்  மிளகாயினைக் கொண்டு வந்தார்.

மிளகு சந்தை விழ, ஸ்பானியர்கள் அக மகிழ, போர்த்துக்கேயர்கள் மிளகாயினை கொண்டு நம்ம பகுதிக்கு வந்து,  அதை அறிமுகப் படுத்த, நம்ம ஆக்களும், சிங்களமும் சேர்த்து 1506 முதல் 1520 இக்கு இடையில், 'நக்கினார் நாப்புரட்டார்' என்று சுதந்திரதினையே கொடுத்து தொலைத்தோம்.

ஆக மனிதரின் 'உறைப்பு'எனும் நாசமாய்ப் போன சுவை உணர்வு, பல அனர்த்தங்களை உண்டாக்கி உள்ளது.:(

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

கறி மிளகினால் சுவை ஊட்டப் பட்ட எமது சொத்து.

போர்த்துக் கேயர், மிளகாய், உருளைக் கிழங்கு, தக்காளி, பூசணி உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகப் படுத்தி, கறிப் புரட்சி செய்தர்கள்.

ஆனால் அவர்கள் மிளகாய் உண்டாக்கிய ஆர்வ மிகுதியால் பசு மாடுகளில் கை வைக்கப் போய், கோயில், விகாரை களில் தானம் கொடுக்கப் பட்ட மாடுகளுக்காக, கோவில்கள், விகாரைகளை இடிக்கப் போய், மக்களைப் பகைத்து டச்சுக் காரகளிடம் நாட்டினை இழந்தனர்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

ஒடியல் புட்டு...பழஞ்சோத்தோடை பச்சைமிளகாய்....பனங்கிழங்கு துவையல்......இப்பிடி இன்னும் எக்கச்சக்கம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • Krishnan Nallaperumal 1 ஜனவரி அன்று புதுப்பிக்கப்பட்டது       இக்கேள்விக்குத் தாமதமாகப் பதில் எழுதுவது வருத்தமாக இருந்தாலும், இன்றாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்! இன்றுதான் இக்கேள்வியைக் கண்டேன்! இன்னும் சிறப்பாக, 'மற்ற இந்திய மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு, சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்?' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்! ஏனென்றால், ஏனைய இந்திய மொழிகளில் இல்லாத, தமிழ் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்பண்பே, சீனர்கள் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் சிறப்புக் காரணம்! தமிழ்மொழி மட்டுமே தூய உயர்தனிச் செம்மொழி! வேதமொழி, சமஸ்கிருதம் உள்ளிட்ட, ஏனைய இந்திய மொழிகள்அனைத்தும் கலப்பு மொழிகள்! எழுத்துமுறை(Orthography), ஒலியமைப்பு(Phonetics) போன்றவற்றில் அவை தமிழ்மொழியைப் போல் கொண்டிருந்தாலும், தத்தம் மொழிகளின் சொல்வளம் பெருக்க, உலகவழக்கில் இல்லாத சமஸ்கிருதமொழிச் சொற்களையே பெருமளவு கடன் வாங்கியவை! உருது, இந்துஸ்தானி, சமஸ்கிருதம் என்ற கூட்டுக்கலவை மொழியான இந்தி, வட இந்திய பிராகிருதமொழிகள் பலவற்றையும் அழித்துவிட்டு, ஏனைய இந்திய மொழிகளையும் அழிக்கத் திட்டமிட்டு, இந்திய ஒற்றுமையையும், அமைதியையும் அழித்து வருகிறது! சமஸ்கிருதச் சொற்கள் என்பவை, இறந்துபோன வேதமொழிச் சொற்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்க! வழக்கிறந்துபோன செம்மொழியான சமஸ்கிருதச் சொற்களைக் கலப்பதாலேயே இந்திய மொழிகள் வளம் நாடுகின்றன. மேன்மேலும், சமஸ்கிருதத்தைக் கலப்பதாலேயே அவை வளர்ச்சியும் பெறுவதாக நினைக்கின்றன. வழக்கிறந்துபோன செம்மொழிகளான இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து சொற்களைக் கலந்து, மொழியை வளப்படுத்துதல் என்ற உத்தியையே மேலை ஆரிய ஐரோப்பிய மொழிகளும் கடைப்பிடிக்கின்றன. இதேபோல், வழக்கிறந்துபோன செம்மொழிகளான Persian, Arabic மொழிச் சொற்களைக் கலப்பதாலேயே இஸ்லாமிய மொழிகள் வளம் நாடுகின்றன. உலகின் மொழிகளின் வளர்ச்சி என்பது மேலே குறிப்பிட்ட மூன்று கலப்புமொழி வகைகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்! எல்லா மொழிகளும் உயர்மொழியாக ஏற்றுக்கொள்ளும் இறந்துபோன பொதுமொழியே, அம்மொழிகளின் ஒற்றுமைக்குக் காலனாக மாறிவிடுகிறது! இவ்வுலகில், இன்றும் உயிருடன் செழிப்போடு உயிர்வாழும் இரண்டே செம்மொழிகள் தமிழ்மொழியும், சீனமொழியும் மட்டுமே! தமிழும், சீனமும், பன்னாட்டுச் செம்மொழிகள்! இவ்விரண்டு மொழிகளும் பிறமொழிச் சொற்களைக் கடன்பெறாமல், தாய்மொழிச் சொற்களை வைத்துக்கொண்டே புதிய புதிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தன. தொடர்வண்டி, மின்னாற்றல், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்றியமையாதது போன்ற சொற்களைத் தமிழ் உருவாக்கியதுபோலவே, சீனமொழியும் உருவாக்கிக்கொண்டது! தொடக்கத்தில் சீனமொழி அறிவியல் வளர்ச்சியில் பிற்பட்டு இருந்தாலும், இத்தாய்மொழி பண்பு காரணமாக, ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, அறிவியல் தொழில்நுட்ப அறிவில், இன்று உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது! உலகின் தலைசிறந்த முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன! ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட முதல் 200-களின் இல்லை! கல்விவாய்ப்புகள் சீனாவில் பெரும்பான்மை மக்களிடம் சென்றடைந்துவிட்டது! சீனமொழியைப் போல, தமிழ், உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாக நின்று, தனித்தமிழ் வளர்த்ததால், வழக்கிறந்துபோன சமஸ்கிருதத்தைச் சாராமல், சீனமொழியைப்போல், உயிர்ப்புடன் விளங்கி வருகின்றது! தமிழ் உயர்தனிச் செம்மொழிகளில், Orthography-எழுத்துமுறை மற்றும் Phonetics-ஒலியியல் ஆகியவற்றில் தலைசிறந்த மொழி! தமிழ், அதேவேளை, உலகத்தாய்மொழிகளில், ஒரே உயர்தனிச் செம்மொழியாக இயங்கி வருகின்றது! சீன அறிஞர்கள், பண்டைய காலத்தில், தமிழே உலகப்பொதுமொழியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். தமிழ் மொழியை ஆராய்வதன் மூலம், உலகப் பொதுமொழியாக வளர்வதன் கூறுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, சீனமொழியை வளப்படுத்தவே சீனர்கள் தமிழ் மொழியைக் கற்கிறார்கள்! தமிழ்மொழியில், சீனர்களைக் கவர்ந்த மொழி அம்சம், வேர்ச்சொற்கள் அடிப்படையாக, சொற்குடும்பங்கள், சொற்குலங்கள் தமிழில் கொத்துக்கொத்தாய் இருக்கும் பண்பே! எடுத்துக்காட்டாக, பாறைத்துண்டைக் குறிக்கும் கல் என்னும் தமிழ் வேர்ச்சொல், கல்லுவது(தோண்டுதல்), கலித்தல், கணீரென ஒலித்தல், உணர்ச்சி மிகுதல், மிகுதல், கலி(சனி), கற்றல், கற்பித்தல், கற்பனை, கல்லூரி, கல்வி, கலை உள்ளிட்ட எண்ணற்ற சொற்களைக் கொண்டு, சொற்குடும்பமாக இயங்குகின்றது. வேர்ச்சொற்கள் சொல் திரிந்தும், பொருள் திரிந்தும் மாறுபடும்போது, இன வேர்ச்சொற்குடும்பங்கள் உருவாகின்றன. பல சொற்குடும்பங்கள் சேர்ந்து சொற்குலங்கள் உருவாகின்றன. இத்தகைய பண்புகளை ஆய்ந்து, சீன மொழியை மேம்படுத்துவது சீனர்களின் ஆய்வுத் திட்டங்களில் ஒன்று! சீன மொழியைப்போல, உலகில் உயிர்ப்புடன் வாழும் செம்மொழி தமிழ் என்பதும் அவர்களின் தமிழ்மொழி ஆர்வத்துக்குக் காரணம் என்றாலும், மேற்குறித்த ஆய்வுத் திட்டங்கள் சீனர்களிடம் உள்ளன. நாம் நம் தமிழுக்கும், நம் மக்களுக்கும் எவ்வாறு தொண்டுசெய்யப் போகிறோம்? —————————————————————— திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களின் கேள்வி : "தமிழின் சிறப்புகளை தங்கள் மூலம் அறிவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். என் ஒரே சந்தேகம்KA,Ga மற்றும்PA BA விற்கு தமிழில் ஏன் ஒரே ஒரு எழுத்து மட்டுமே இருக்கிறது கா மற்றும் பா." பலரும் கேட்க நினைப்பது; அறியாததால், தமிழ் மொழியின் குறைபாடு என ஏனைய இந்தியமொழி பேசுபவரால் குற்றம் சொல்லப்படும்போது, விடையில்லாமல் பலரும் விழிக்கக் காணலாம். விடை: ஆங்கிலத்தில் KA, Ga என்னும் இரண்டு ககரங்கள்(சமஸ்கிருதத்தில் நான்கு ககரங்கள்- க-வர்க்கம் எனப்படும்), PA, BA என்னும் இரண்டு பகரங்கள் (சமஸ்கிருதத்தில் நான்கு பகரங்கள்- ப-வர்க்கம் எனப்படும்) இருப்பதுபோல், தமிழிலும் மூன்றிற்கும் மேற்பட்ட ககர, பகர ஒலிகள் உண்டு! ஆனால், மூன்றையும், ஓர் ஒலியின் திரிபாகக் கொண்டு, ஒரே ஒலிக் குழுக்குறி (Phonems) தமிழில் அமைத்துள்ளனர் பண்டைய தமிழர்கள். தமிழ்மொழியின் எழுத்தையும், ஒலி அமைப்பையும் பின்பற்றிய வடமொழி இலக்கணத்தில், பாணினி இதை விரித்து, 'க, ச, ட, த, ப' என்னும் ஐந்திற்கும், ஒவ்வொன்றிற்கும் நான்கு ஒலி எழுத்துக்களாகக் குறித்து, க-வர்க்கம், ச-வர்க்கம், ட-வர்க்கம், த-வர்க்கம், ப-வர்க்கம் என்பவை அவற்றின் இன மெல்லின எழுத்துக்களுடன் சேர்த்து, 25 ஒலி எழுத்துக்களை உருவாக்கினார்கள்! தங்கம் - என்ற சொல்லை THAnGam என்றுதான் உச்சரிக்க முடியுமே தவிர, THAnKAm - என்று உச்சரிக்கவே இயலாது. ஏனென்றால், இச்சொல்லின் பிறப்பியல் அப்படித்தான் அமைந்துள்ளது. இவ்விலக்கண விதிகளைத் தொல்காப்பியம் : பிறப்பியல் சூத்திரங்களை அறிந்து, படித்து, முறையாக,ஓர் ஆசிரியரிடம் கற்றுக்கொள்வதன் மூலம், தமிழ் ஒலி உச்சரிப்பில் தேர்ச்சிபெறலாம். [தொல்காப்பியம் - பிறப்பியல்: மொழிமரபு இங்கு தரப்பட்டுள்ளது. இன்னும், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பவையும் கற்றுக் கொண்டால், மொழியை முறைப்படி பலுக்க(உச்சரிக்க) முடியும். உந்தி முதலா முந்து வளி தோன்றி - தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - பல்லும் இதழும் நாவும் மூக்கும் - அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் - உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி - எல்லா எழுத்தும் சொல்லும் காலை - பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல - திறப்படத் தெரியும் காட்சியான. 1 ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 - சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 - டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 - அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10 அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் - நா நுனி பரந்து மெய் உற ஒற்ற - தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11 - அணரி நுனி நா அண்ணம் ஒற்ற - றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12 நுனி நா அணரி அண்ணம் வருட - ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13 - நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற - ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் - லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14 இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15 - பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16 - அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை - கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17 - மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் - சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் - மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18 சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் - தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் - தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி - ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து - சொல்லிய பள்ளி எழுதரு வளியின் - பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து - அகத்து எழு வளி இசை அரில் தப நாடி - அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20 - அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் - மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21 ] பள்ளியில், தமிழ்மொழி பயிற்றுவிக்கும் போது, இவையெல்லாம் , முறையாகக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். தமிழ் பற்றில்லாதவர் ஆட்சியாளராய் இருப்பது, ஈராயிரம் ஆண்டுகளுக்கும்மேல் இன்னும் தொடர்கின்றது. சங்க காலத்தில், சராசரித் தமிழனுக்கு, அவரவர் வீட்டில், தந்தைமார்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட முறைப்படியான தமிழ் ஒலிப்புமுறைக் கல்வி, இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, விடுதலை அடைந்த இந்திய நாட்டின் தமிழ் மாநிலத் தமிழ் மக்களுக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை. யாரிடம் சொல்லி அழ! எண்ணாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, தமிழர்கள் Phonemes - தமிழ் ஒலிஎழுத்துக்களை உருவாக்கினார்கள். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் அவை பதியப்பட்டு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றியே, வேத, சம்ஸ்கிருத எழுத்துமுறைகள் Phonemes என்னும் ஒலியியல் முறைப்படி, ஆரியர்களால் அமைக்கப்பட்டன. ஐரோப்பியர்கள் சமஸ்கிருதம் கற்றது 17–18ம் நூற்றாண்டுகளில். 19ம் நூற்றாண்டில், Phonetics - ஒலியியல் என்னும் புதிய துறையை, சமஸ்கிருத ஒலியியல் முறையைப் பின்பற்றி, 'க', 'ங' எழுத்துக்கள் தொண்டை ஒலிகள்(Guttural, கண்ட்யம்) 'ச', 'ஞ' எழுத்துக்கள் அண்ண ஒலிகள் (Palatal, மூர்த்தன்யம்) 'ட','ண' எழுத்துக்கள் நாவொலிகள் (Lingural, தாலவ்யம்) என்றும் வழங்கினர். இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி இலக்கணங்களில் இம்முறையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒலிப்பு முறைகளை உற்று ஆராய்ந்த ஒலியியல் ஆய்வாளர்கள், பாணினி வகுத்த ஒலியியல் முறை தவறானது என்பதைக் கண்டார்கள். உண்மையில், இம் மூன்று வகை ஒலிகளும், தொல்காப்பியத்தில் வகுத்ததுபோல, நாவின் முதல், இடை, கடை ஒலிகள் என்பதைக் கண்டுபிடித்தார்கள்! அதன் பிறகே, ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7 சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8 டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9 என்னும் தொல்காப்பிய ஒலியியல் Phonetics சூத்திரம் எவ்வளவு நுட்பமான அறிவியல் பூர்வமானது என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்தனர். பாணினியின் சம்ஸ்கிருத ஒலி இலக்கணம் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டது எனபதையும், தொல்காப்பியத்தை சரிவர உணராத பாணினி, ஒலி இலக்கணத்தைத் தவறாகக் குறித்துவிட்டார் என்பதையும் கண்டார்கள் ஐரோப்பியர்கள். சீனர்கள் ஏன் தமிழ்மொழியைக் கற்கிறார்கள் என்பது இப்போது இன்னும் தெளிவாக விளங்கும்! இக்கேள்வியைக் கேட்ட திருமிகு. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி! 21.1 ஆயிரம் பார்வைகள் · ஆதரவு வாக்காளர்களைக் காண்க · பகிர்ந்தவர்களைப் பாருங்கள்     Surendhar Nagarajan, Sara Subramaniam, Gnanaskaran Maniமற்றும் கூடுதல் 699 நபர்கள் இதை ஆதரித்து வாக்களித்தனர்   ஆதரவு வாக்கு· 702703   பகிர்க· 41     நன்றி https://ta.quora.com/        
  • "புடவை எங்கை காயுது நடையை எங்கை நிறுத்தலாம்" எண்டு அலையுது கணக்குப்பிள்ளை 😎
  • தமிழில்  எவ்வளவு செல்லமாக "குஞ்சா மணி" என்று பெயர் இருக்க  சும்மா போய் அதை "மர்ம உறுப்பு ", "மறைந்த பருப்பு" என்று சொல்வதை எல்லாம்  நான் வன்மையாக கண்டிக்கிறேன்  
  • அடுத்ததடவை நீங்கள் இலங்கைக்குப் போகும்போது சொல்லுங்கள் நானும் கூடவருகிறேன், வந்து உங்களை வவுனியா நொச்சிமோட்டைப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன் அங்கு உங்களுக்கு ஒரு வீரனுக்குரிய மரியாதை தந்து விளக்கமும் தருவார்கள் பெற்றுக்கொள்ளலாம்.