• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்

Recommended Posts

யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்

NOV 01, 2015 

JAFFNA

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர்  31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப்  பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய  இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது.

இக்கட்டுiரையானது இங்கிலாந்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மற்றும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையம் என்பவற்றின் நிதியுதவியுடன் இலங்கையின் இனக்கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு மையமானது“விருப்பமற்ற மீள்குடியேற்றம்: நகரப் பிரதேசங்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும்”என்னும் தலைப்பில் மேற்கொண்டுள்ள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இவ்வாய்வின் குழுத்தலைவராக கலாநிதி ரஜித் லக்ஸ்மன் அவர்களும் சிரேஷ்ட ஆய்வாளர்களாக கலாநிதி கோ. அமிர்தலிங்கம் மற்றும் திரு.தனேஸ்  ஜயதிலக அவர்களும் ஆய்வு உதவியாளர்களாக திரு ந. குருசாந், திரு ம. விஜேந்திரன்  மற்றும் திரு செ. அமலதாஸ் ஆகியோரும் பணிபுரிகின்றனர்.

இவ்வாய்வுக்காக தொளாயிரம் குடும்பங்களைப் பற்றிய தகவல்கள் யாழ் .மாநகரசபைக்குள்  உள்ளடங்கும் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர்  பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முப்பத்தியெட்டு கிராமசேவகர் பிரிவுகளில் கருத்தாய்வு மற்றும் விரிவான நேர்முகக் கலந்துரையாடல்கள் மூலம் திரட்டப்பட்டன.

1983 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண மாவட்டமே யுத்தத்தின் மையப் பிரதேசமாக விளங்கியது. யுத்தத்தினால் மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாரிய சவால்களைச் தொடர்ந்தும் சந்தித்தபோதிலும் 1990 ஆண்டிலிருந்து தொடங்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இடம்பெயர்வு 2009 ஆண்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது உச்சக்கட்டத்தினை எட்டியபோதும் இக்காலகட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு கட்டங்களில் மீளக்குடியேற்றப்பட்டமையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆயினும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து குடியேற்றங்களுக்குத் தடையாகவிருந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு யாழ். நகரத்தை அண்மித்த கரையோரப்பகுதிகள் அனைத்திலும் மக்கள் குடியேற்றம் பெருமளவிற்கு நிறைவுபெற்று விட்டது.

யுத்தம் முடிவடைந்து மீள் குடியேற்றம் முடிவுக்கட்டத்தினை நெருங்கினாலும் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளால் ஏற்பட்ட துன்பங்களும் சுமைகளும் இன்றும் மக்கள் மனதைவிட்டு நீங்காமல் வடுக்களாகவே உள்ளன.

இவ்வாய்வானது யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளால் ஏற்பட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள், கல்வி நிலைமைகள், இளைஞர்களின் நடத்தை, வன்முறையின் பருமன் மற்றும் போக்கு என்பன உள்ளடங்கலாக பல்வேறுபட்ட தகவல்களை விஞ்ஞான ரீதியாக வெளிக்கொணர முற்படுகின்றது.

யுத்தகாலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.  ஆய்வுக்குட்படுத்தப்பட்ட யாழ்.நகரையொட்டிய கரையோரப் பிரதேசத்தின் வாழ்வாதாரம் மீன்பிடியினை மையமாகக் கொண்டிருந்தமையினால்  உயர்பாதுகாப்பு வலய அமுலாக்கம், கடல்வலயத் தடைச்சட்டங்கள், மீனவர்களின் உயிரிழப்புக்கள், நவீனமீன்பிடிக் கருவிகளைப் பயன்படுத்த முடியாமை, நிச்சயமற்றதன்மைகள், ஏற்றுமதி வாய்ப்புக்கள் இன்மை போன்ற காரணங்களினால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் யுத்தத்திற்குப் பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. உயர்பாதுகாப்பு வலயம்,மற்றும் கடல் வலயத் தடைச்சட்டம் என்பன நீக்கப்பட்டு விட்டன. நவீன மீன்பிடிக் கருவிகளைக் கொள்வனவு செய்வதிலோ அல்லது மீன்களை நாட்டின் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்வதிலோ எவ்வித தடைகளும் காணப்படவில்லை.

ஆனாலும் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தில் இன்னும் பிரச்சினைகள் இருப்பதாகவே குறிப்பிடுகின்றனர். கடலில் மீன்பிடி வளம் பெருமளவுக்கு குறைந்து விட்டதாகவும் சுனாமிக்குப் பின்னர் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய மீனவர்களினதும் ஏனைய பிரதேசத்து உள்ளுர் மீனவர்களினதும் அத்துமீறல்கள் தமது வாழ்வாதாரத்தினை அதிகம் பாதிப்பதாக ஆய்வுப் பிரதேச மீனவர்கள் குறைப்படுகின்றனர்.  மீன்பிடியும் அதனுடன் தொடர்புடைய வருமானமும் குறைந்து வருவதால் குறிப்பாக இளைஞர்கள் புதிய தொழில்களை தேடிச் செல்வதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்பகாலம் தொட்டு யாழ். மாவட்டம் கல்வித்துறை வளர்ச்சிக்கு பெயர் பெற்றதாகும்.  ஆனால் யுத்தகாலத்தில்நிச்சயமற்றதன்மை,போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், ஆசிரியர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலம்பெயர்வு, வளப்பற்றாக்குறைகள் போன்ற காரணங்களினால் யாழ். மாவட்டத்தின் கல்விநிலைமை மோசமடைந்தது.

யுத்தகாலத்தில் மாணவர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்ததுடன் நிலைமை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றது.

குறிப்பாக நிச்சயமற்ற நிலைமை நீங்கி மாணவர்கள் விரும்பிய பாடசலைகள் மற்றும் பகுதிநேர வகுப்புக்களுக்குச் சென்று அச்சமின்றி கல்விகற்கக் கூடியநிலை தற்போது காணப்படுகின்றது.  ஆனால் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகஇளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்து போக்குவரத்துத் தடைகள் யாவும் நீங்கிய பின்னர் பல புதிய வாய்ப்புக்கள் உருவாகிய போதும் யுத்தகாலத்தில் தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்வதில் யாழ்.மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்புக்கள்  காணப்படாமையினால் தற்போது தொழில் தகைமைசார் வேலைகளுக்கு வெளிமாவட்டங்களைச் சோந்தவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் தமக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் சிலர் குறைப்படுகின்றனர்.

அத்துடன் நாட்டின் தென் பகுதியிலிருந்துபொருட்கள் சேவைகள் உள்ளுர் சந்தைக்கு அதிகம் வருவதால் தமக்குரிய வாய்ப்புக்கள் பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள்  தெரிவிப்பதுடன் அது உள்ளூர் வேலைவாய்ப்புக்களிலும் தாக்கம் செலுத்துவதாக பலர் குறிப்பிடுகின்றனர்.

புலம்பெயர்வு என்பது யாழ். மாவட்டத்தினைப் பொறுத்து பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து 1981 ஆம் ஆண்டு வரை இலங்கையில் கொழும்புப் பெரும்பாக நகரப்பகுதிக்கு அடுத்தபடியாக சனத்தொகை ரீதியில் யாழ்ப்பாண நகரமே  இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஆனால் 2010 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண நகரத்தின் தரவரிசை பதின்னாகாவது இடத்திற்குபின்தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தினால் ஏற்பட்ட புலம்பெயர்வே இதற்குரிய பிரதான காரணியாகும்.

புலம்பெயர்வினால் ஏற்பட்ட சனத்தொகை வீழ்ச்சியினால் யாழ். நகரமும் முழு மாவட்டமும் பின்னடைவினைச் சந்தித்த போதும் யுத்தகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் புலம்பெயர்ந்தோர் தமது உறவினர்களுக்கு அனுப்பிய பணம் மிகுந்த பங்களிப்பினை வழங்கியுள்ளது.

யுத்தகாலத்தில் புலம்பெயர்ந்தோரின் பணம் பெரும்பாலும் நுகர்வுத் தேவைக்கும் திருமணங்களுக்கும் தமது உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.  யுத்தம் முடிந்தபின் புலம்பெயர்ந்தோரின் பணம் முதலீட்டுத் தேவைகளுக்கும் சமூகத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய சமூகநலன்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் புலம்பெயர்ந்தோர் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம் இங்குள்ளவர்களை சோம்பேறிகளாக்கி உழைப்பின் அருமை தெரியாமல் இளைஞர்கள் பிழையான வழிகளில் செல்லவும் வழிவகுக்கின்றது என்னும் குற்றச்சாட்டும் எழாமலில்லை.

யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின் பின்னர் அளவுக்கதிகமான வங்கிக் கடன் மற்றும் லீசிங் வசதிகள் பிரச்சினைக்குரிய விடயங்களாகவே மக்களால் அடையாளங்காணப்படுகின்றன. மக்கள் அளவுக்கதிகமாக கடனாளிகளாக ஆகிக் கொண்டிருப்பதாகவே தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2014 ஆம் ஆண்டில் வங்கி அடர்த்தியானது (தலா 100,000 பேருக்கான வங்கிகளின் எண்ணிக்கை) மேல் மாகாணத்தில் 21.1 வீதமாகக் காணப்படுகையில் வடமாகாணத்தில்  21.6 வீதமாக காணப்படுகின்றது.

இதன்மூலம் மேல் மாகாணத்தினைவிட நாட்டிலேயே வங்கியடர்த்தி கூடிய மாகாணமாக வடமாகாணம் திகழ்கிறது.

வடமாகாணத்திலேயே சனத்தொகையிலும் நகர மயமாக்கத்திலும் யாழ். மாவட்டம் முக்கியத்துவம் பெறுவதால் அளவுக்கதிகமான வங்கிச்சேவைகளின் விரிவாக்கம் யாழ்.நகர மக்களால் பிரச்சினைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றது.

சமூகமும் சமூகஉறவுகளும்  மிகவேகமாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. கடன்கள் மற்றும் சீட்டுக்கள் பாரிய பிரச்சினைகளாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. கடன்கள் மற்றும் சீட்டுக்கள் காரணமாக நம்பிக்கைத் துரோகங்களும் ஏமாற்றுதல்களும் சமூக உறவுகளை சீர்குலைக்கின்றன.

யுத்தத்திற்குப் பின்னர் இளைஞர்களின் நடத்தையில் பாரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. சில இளைஞர்களின் மதுப்பாவனை,மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாதல் அதனுடன் கூடிய திருட்டுக்கள், குழுச் சண்டைகள் என்பன சமூக ஒழுக்கத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன.

சினிமா மோகம், இணைய வசதியுடன் கூடிய செல்போன்களின் பாவனை அதிகரிப்பு இளைஞர் குழாத்தினை மிகமோசமாகப் பாதிப்பதாக பெற்றோர்களுக்கும் சமூகத்தலைவர்களும் குறிப்பிடுகின்றனர்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் மதுப்பாவனை மற்றும் போதைவஸ்துக்கள் என்பனவற்றுக்கு அடிமையாகி திருட்டுக்கள் மற்றும் குழுச்சண்டைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் சில பொலிஸ்  மற்றும் இராணுவ உத்தியோகத்தர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஆய்வுப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்த சில மணித்தியாலங்களில் அவர்கள் வெளியில் வந்தசந்தர்ப்பங்களையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் 2015, ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்நிலைமை பாரியளவுக்கு நீங்கி சாதகமான மாற்றங்கள் தெரிவாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு யுத்தமுடிவானது யாழ். நகர மக்களுக்கும் ஒட்டுமொத்த யாழ். மாவட்ட மக்களுக்கும் பாரிய வாய்ப்புக்களை திறந்து விட்டிருந்தபோதிலும் அவ்வாய்ப்புக்களுடன் பல சவால்களும் சேர்ந்தே காணப்படுகின்றன.

வாய்ப்புக்களை உச்சப்படுத்துவதிலும் சவால்களை வெற்றி கொள்வதிலுமே யாழ். நகரத்தினதும் மாவட்டத்தினதும் எதிர்கால சுபீட்சம் தங்கியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

– கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்

கொழும்புப் பல்கலைக்கழகம்.

http://www.puthinappalakai.net/2015/11/01/news/10864

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு ஆய்வு .

இணைப்பிற்கு நன்றி கிருபன் .

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி கிருபன்....!

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி கிருபன்....!

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தேசியம், ஐக்கியம், தமிழர் பலம் -இலட்சுமணன் தேர்தல் எனும் வசந்த காலம், அரசியல் வானில் உதயமாகத் தொடங்கியதன் வெளிப்பாடுகளாகத் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் மெல்லமெல்ல மேலௌத் தொடங்கியுள்ளன.  ‘வேதாளம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல்’ தமிழர்களின்  உரிமை, தமிழர்களுக்கு இடையேயான ஐக்கியம், தமிழர் பலம் எனப் பல்வேறு கோசங்கள், அரசியல்வாதிகளால்  வெளிப்படுத்தப்படுகின்றன.  அரிதாரம் பூசிய அரசியல் நடிகர்களின் கூத்துகளையும் பம்மாத்துகளையும்  வரலாற்றுச் சாதனைகளாகவும் தமிழ் மக்களின் வரலாறாகவும் பார்க்கும் காலமாகவே தற்போதைய நிலைமைகள் அமைந்துள்ளன.  சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்த அரசியல் வீச்சும், போராட்ட குணமும் தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லை. அப்போதைய தலைமைகளுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இன்று தரம் கெட்டுப் போய்விட்டன.  ஆயுத மௌனிப்பின் பின்னர், எழுந்துள்ள தமிழர் அரசியல் சூழ்நிலையானது, போர்க் குணம் கொண்டதாகவோ, தமிழரின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதாகவோ அமையவில்லை.  மாறாக, தமிழரின் அரசியல் செல்நெறியானது, சுயலாப நோக்கம் நிறைந்ததாகவும் ஒவ்வோர் அரசியல்வாதியும்  தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வர்த்தக அரசியலாகவே, தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது. தமிழரது அரசியல் விடுதலைக்காக, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு, வாக்கு என்ற ஆயுதத்தின் மூலம், தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் தேவைகள், அபிலாசைகள் தொடர்பில், இதுவரை காலமும் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியல்படுத்திக் கூறமுடியுமா? தொழில்வாய்ப்பு ரீதியாக, அபிவிருத்தி ரீதியாக, சமூகப் பிரச்சினைகள் ரீதியாக, பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, அரசியல் உரிமைகள் தொடர்பாக, அரசியல் கைதிகள் தொடர்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக, இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகளை தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளால் பட்டியல்படுத்த முடியுமா? என்பது தமிழ் மக்களின் உள்ளத்தில் இருந்து எழும் எழும்வினா. தமிழரின் தேசிய அரசியலுக்குள் சிக்குப்பட்டுப் போயுள்ள இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்த பின் காணாமல் போய்விடுகின்றனர்.  தமிழர் உரிமை கிடைத்தால்தான், மற்றையவை கிடைக்கும் எனச் சுருக்கமாகத் தமது கடமையை முடித்து விடுகின்றனர். சிலர், தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள, மக்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தமது முகத்தைக் காட்டி, உசுப்பேற்றும் கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, வேறெதையும்  அறியாதவர்கள் போல், நழுவி விடுவர்.   ஆயினும், இத்தகைய அரசியல்வாதிகள் தமது அரசியல் உரிமைகளுக்கு அப்பால்,  அந்த அரசியலால் வரும் சலுகைகளை, நூறு சதவீதம் அனுபவித்துக் கொள்கின்றனர். இந்த அனுபவிப்புகளின் ‘ருசி’ தொடர்ந்தும் தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ‘பசி’யை ஏற்படுத்துகின்றது.  இந்தப் பின்புலத்திலேயே, தமிழர்களது அரசியல் பயணம் நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழரின் ஐக்கியம் தொடர்பாக, உரத்துக் கத்துபவர்களே, தமிழரின் ஐக்கியத்தைச்  சிதைப்பவர்களாக இருப்பதை நாம் எல்லோரும் காண்கின்றோம்.  தேசியம், ஐக்கியம் பற்றி உரக்கக் குரல் கொடுப்பவர்கள், தமிழரின்  ஐக்கியத்தை உண்மையில் வலியுறுத்துபவர்கள், தமிழர் அபிலாசைகள் நிச்சயம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்று சிந்திப்பவர்கள், அனைவரது பாதுகாப்பையும் இருப்பையும் தொடர்ந்து பேணவேண்டும் எனச் சிந்திப்பவர்கள், தம்மால் மற்றவர்கள் வெளியேற்றப்படவில்லை என்றும் தாமாகவே வெளியேறிச் சென்றனர் எனக் கருத்துத் தெரிவிப்பவர்கள், கடந்த காலங்களை மறந்து, பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம் எனக் கருதுபவர்கள், தற்போது தமிழ்க் கூட்டமைப்பில் பிரச்சினை இல்லை எனச் சொல்பவர்கள், மாற்றுத் தலைமை என்பது தமிழ்த் தலைமையைச் சிதைப்பதற்கான சதி எனப்  பரப்புரை செய்பவர்கள், ஏன் ஒன்றை மட்டும் இதுவரை கூறவில்லை; சிந்திக்கவில்லை; முன்வைக்கவில்லை.  சிலவேளை, இந்தக் கேள்விகளும் கூட, தமிழர் அரசியல்வாதிகளின் செவிக்கு எட்டாத செய்தியாக அல்லது எட்டியும் எட்டாத செய்தியாகத் தமிழ்த் தலைமைகளுக்குச் சென்றுவிடலாம் எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உண்மையில், தமிழரது அபிலாசைகள், உரிமைகள், தேவைப்பாடுகள் தொடர்பான அக்கறையும் கவனமும் தார்மிகப் பொறுப்பும் தம்மிடம் இருப்பதாக இருந்தால், தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைக்கட்சி என்ற வகையில், அனைவரையும் அரவணைத்து கொள்ள வேண்டும். இதற்காக எடுக்கும் முயற்சி, தேர்தல் காலத்தில் வாக்கு சேகரிக்கும் போட்டியாக இல்லாமல் இருக்க வேண்டும்.  தமிழர் பிரதிநித்துவத்தின் உண்மையான தத்துவார்த்தங்களைப் பாதுகாப்பதற்கு, உண்மையிலேயே இதயசுத்தியுடன் இருந்தால், தமிழர் அபிலாசைகள் நிறைவேறும். இதற்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில், குறிப்பாக, தேர்தல் முடிந்த காலாண்டில், தனிக்கட்சியாக, தனிச் சின்னத்தில், புதிய பதிவுடன் செயற்படுவதுடன், அதற்கான யாப்புத் தயாரிக்கப்படும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட வேண்டும்.  மேலும், உட்கட்சி ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதுடன், தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து விலகி,  ஜனநாயக மயப்படுத்தப்பட வேண்டும். இதுவே, கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறுவதற்கு அடிப்படைக் காரணமாகவும் மீண்டும் இணைவதற்கு தடையாகவும் இருக்கின்ற காரணங்களாகும்.  எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ஐக்கியம் பற்றி உரக்கக் குரல்கொடுப்பவர்களும் “மாற்று அணி வேண்டாம்; அது தமிழ்த் தேசியத்தைப் பலமிழக்கச் செய்யும் சதி” எனக் கருத்துரைப்பவர்களும் தமிழ் மக்களின் இந்த அபிலாசைகளைப் பகிரங்கமாக அறிவித்து, வெளியேறியவர்களை வழிப்படுத்த, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த செயலில் இறங்குவார்களா?   அல்லது, தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் கூட்டமைப்பு, பழைய பல்லவி போல், இழுத்தடிப்பு வேலைகளில் இறங்கிவிடுமா? என்ற அச்ச உணர்வு இயல்பாகவே தமிழ் மக்களுக்கும் வெளியேறிச் சென்ற கட்சிகளுக்கும் உண்டு.  தமிழர் அரசியல் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் குரல் தரவல்ல, அதிகாரம் அளிக்கப்பட்டவர், பகிரங்கமாக இதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்வார்களா?  உண்மையில், தமிழரின் ஐக்கியம் பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்தால், மனதார நினைத்தால் இதைச் செய்தேயாக வேண்டும். இதைத் தமிழ் மக்கள் இதயபூர்வமாக வரவேற்கிறார்கள்.  இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே, எதிரிகள் எங்கோ ஓடி மறைவர் எனத் தமது அரசியல் பலத்தை, மக்கள் உறுதிப்படுத்துவார்கள். எனவே, தமிழ் மக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொறுப்பு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்க உரியதாகும்.   இது இவ்வாறு இருக்க, மாற்றுத் தலைமைகள் தொடர்பான சிந்தனைகள், முடிவுறுத்தப்பட்டு ஒரு கட்சி ஜனநாயகத்துக்குள், தமிழர் அனைவரும் ஒன்றிணைய அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.  இதற்கு மாற்றுத் தலைமை, கூட்டமைப்பின் தலைமையை மாற்றினால் தாம் இணைவதாகக் குறிப்பிட்டுள்ளமை, மாற்றுத் தலைமையின் அரசியல் சாணக்கியம் இன்மையையும் கொள்கைத் தெளிவின்மையையும் வெளிக்காட்டுகிறது.  நாம் எதைச் செய்கிறோம்; என்ன செய்கிறோம்; எப்படிச் செய்கிறோம்; அதன் பின்விளைவுகள் என்ன என்பது பற்றிச் சிந்திக்காத, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகவே  இதைப் பார்க்கவேண்டி உள்ளது.  மாற்றுத் தலைமை தமிழர் அரசியலில் எடுக்கும் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாகவும் ஸ்திரமற்ற நிலைப்பாடு உடையதாகவும் உள்ளது. தமிழரது அரசியல் இது தொடர்பாக இந்திய விஜயத்தின் பயனற்ற தன்மை அவரது தமிழ் திரையுலக நடிகர் ரஜினி சந்திப்பின் ஊடாக வெளிப்பட்டிருக்கிறது. இது, மாற்றுத் தலைமையின் தலைமை, அரசியல் முதிர்ச்சி உடையவரா என்ற ஐயப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.  பொங்கலின் பின்னர், ஓரிரு நாள்களில் தங்கள் கட்சிப் பதிவு தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தவர்கள், தங்களுக்குள் புடுங்குப்பட்டு பொங்காமல் போய்விட்டனர்.  தமிழரது தீர்வுத்திட்டம், அடுத்த பொங்கலுக்கு, அடுத்த தீபாவளிக்கு என்று விமர்சிப்பவர்களின் மாற்றுத் தலைமைக் கனவும்  கூட்டும் அக்கட்சிப் பதிவும் பொங்காமல் உடைந்த பானையாகப் போய்விட்டது என்ற கருத்துகளும் மக்களிடம் முளைவிடத் தொடங்கிவிட்டன.  அது எப்படி இருப்பினும், தமிழர் அரசியலில் ஐக்கியம் தொடர்பாக, மாற்றுத் தலைமைக் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கியம் தொடர்பாகப் பேரம் பேசலாம்; பேசாமலும் விடலாம்.  ஏனெனில், இங்கு எவரும் இனி வரும் காலங்களில், எதையும் செய்யப்போவதில்லை. ஏனெனில், அதைத்தான் கடந்த கால வரலாறுகள், கற்றுத்தந்து கொண்டிருக்கின்றன.  தேசியம் சய ஐக்கியம் சய தமிழர் பலம் சக  தமிழர் பிரதிநிதிகள் சமன் தமிழ் மக்கள் பாவம்.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேசியம்-ஐக்கியம்-தமிழர்-பலம்/91-244425  
  • பொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஜனவரி 22 பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், அந்தத் தேர்தலுக்கான அரங்கு, நாடு பூராகவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுகள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று, ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், மீண்டுமொரு தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது, அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல்களில் முதன்மையானது பொதுத் தேர்தலாகும். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களைக் காட்டிலும், பொதுத் தேர்தலை, தமக்கான பேச்சுவார்த்தையாளர்களை (பிரதிநிதிகளை) அடையாளப்படுத்தும் தேர்தலாக, தமிழ் மக்கள் கருதுகிறார்கள். அதுதான், அதிக தருணங்களில் வாக்களிப்பு என்பது, ஒரு தரப்பை நோக்கி அதிகம் குவியவும் காரணமாகி இருக்கின்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் காலத்திலும் அதனை தோற்கடித்த தமிழரசுக் கட்சிக் காலத்திலும், அனைவரும் ஒன்றிணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலத்திலும், அதுவே பிரதிபலித்தது. விடுதலைப் புலிகளது எழுச்சியின் பின்னரான நாள்களில், தேர்தல்களுக்கான முக்கியத்துவம் தமிழ்ப் பரப்பில் சுருங்கியிருந்தது. அதனையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருங்கிணைத்ததன் மூலம், புலிகளே மாற்றி அமைத்தார்கள். அதன் பின்னரான காலம் என்பது, கூட்டமைப்பை நோக்கிய திரட்சியாக மாறியது. இந்தக் கட்டத்திலிருந்துதான், இந்தத் தேர்தலையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈபிஆர்எல்எப் ஆகிய கூட்டமைப்பின் ஆரம்பப் பங்காளிகள், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பல காலமாகின்றது. அதுபோல, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களும், கூட்டமைப்பிலிருந்து விலகிவிட்டார்கள். ஆனால், கூட்டமைப்பின் அத்திபாரம் என்பது, குறிப்பிட்டளவு உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. அந்த அத்திபாரத்தை அசைக்கும் வேலைகளை, தென்னிலங்கையின் மேலாதிக்கச் சக்திகளும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் மாற்றுத் தலைமையைக் கோரிய தரப்புகளும் செய்து பார்த்தன. ஆனாலும், அதில் அவர்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதிகபட்சம், கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சிலர் உதிரிகளாக மாறினார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான பத்து ஆண்டுகளில், கூட்டமைப்பின் நிலைபெறுகை என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டியதாகவே இருக்கின்றது. அது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏக நிலைக்கும் வழிகோலியிருக்கின்றது. கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத்தலைமை என்கிற உரையாடல், இன்றைக்குத் தேய்ந்து போய், தமிழரசுக் கட்சிக்கு மாற்றான தலைமை என்கிற விடயம் மேலொங்கிவிட்டது. இந்தத் தேர்தலிலும், தமிழரசுக் கட்சி தலைமையிலான அணிக்கே கூட்டமைப்பு அடையாளம் சூட்டப்பட்டிருக்கின்றது. மாறாக, கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சி, தமிழரசுக் கட்சி என்றவாறாக களம் இல்லை. ஏனெனில், கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு மற்றும் ஆசனப் பங்கீடு என்பது, கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் முடிவுகளாகவே இருக்கின்றன. பங்காளிக் கட்சிகள் யாரைத் தேர்தலில் களமிறக்க வேண்டும், யாரை களமிறக்கக் கூடாது என்பது வரையில், தமிழரசுக் கட்சி தலையீடுகளைச் செய்கிறது. அதுபோலவே, கூட்டமைப்புக்கு மாற்றான தலைமையாக எழ நினைத்த தரப்புகள் எல்லாமும், தமிழரசுக் கட்சிக்கு மாற்றான தலைமையொன்றை கட்டியெழுப்பும் கட்டத்தை நோக்கி இறங்கியிருக்கின்றன. மாற்றுத் தலைமைக் கோஷக்காரர்களிடம் காணப்படும் ஆளுமைக் குறைபாடு மற்றும் தேர்தல் அரசியலைக் கையாளுவதில் அவர்கள் பெற்ற தோல்வி என்பன, தமிழரசுக் கட்சியின் ஏகநிலை எழுச்சியின் மற்றைய காரணங்களாகும். தைப் பொங்கல் விழாக்கள் தொடங்கி, தேர்தலை இலக்காகக் கொண்ட நிகழ்வுகளை, கூட்டமைப்பு தொடங்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (காங்கிரஸ்) வரை எல்லாக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த விழாக்களின் அளவைக் கருத்தில் கொண்டாலே, ஒரு கட்சி அல்லது, அதன் தலைமை தன்னுடைய தேர்தல் இலக்கை எவ்வளவாக வரையறுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். கூட்டமைப்பு, வடக்கு- கிழக்குப் பூராகவும் நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்க, வடக்குக்குள் மாத்திரம், முன்னணி தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டது. இன்னொரு தரப்பான விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர், தங்களுக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சார்ந்த குழப்பத்தோடு இன்னமும் இருக்கின்றனர். விக்னேஸ்வரனின் அணியில், ஈபிஆர்எல்எப், டெலோவில் இருந்து அண்மையில் பிரிந்த  சிறிகாந்தா - சிவாஜிலிங்கம் அணி உள்ளிட்டன இருக்கின்றன. இதன் இணைப்புப் புள்ளியாக, தமிழ் மக்கள் பேரவை இருக்கின்றது. இதனைத் தாண்டிய மக்களை அணுகும் காட்சிகளை, அந்த அணி பெரியளவில் பதிவு செய்யவில்லை. அதிக பட்சமாக, விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைகள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோரின் ஊடகச் சந்திப்புகள் இடம்பெறுகின்றன. அப்படியான கட்டத்தில்தான், மழைக்கு முளைக்கும் காளான்களின் முயற்சிக்கு ஒப்பான இன்னொரு முயற்சியாக, சுயாதீனக்குழு என்கிற பேச்சுவார்த்தைக் குழுவொன்று மீண்டும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளர் கோரிக்கைகளோடும் சுயாதீனக்குழுவொன்று எழுந்து வந்திருந்தது. அந்தக் குழுதான், பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டும் எழுந்திருக்கின்றதா  என்பது தெளிவில்லை. ஆனால், விக்னேஸ்வரனோடு பேசுவதிலிருந்துதான், பேச்சுவார்த்தைகளையே ஆரம்பிப்போம் என்கிற ஒரு வரையறையை அந்தக் குழு வைத்திருப்பதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த முப்பது ஆண்டுகளில், ஏக ஆளுமை செலுத்திய தரப்பொன்றின் ஏற்பாடுகள் அல்லது ஏவல்களுக்கு அப்பால், சுயாதீனக் குழுக்களோ செயற்பாட்டாளர்களோ, பெரிய சாதனைகள் எதனையும் செய்துவிட்டிருக்கவில்லை. அவர்களை, அரசியல் கட்சிகளும் பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஒரு சாக்குக்காக  அவர்களோடு பேசி அனுப்புவதோடு கடமை முடிந்தது என்கிற தோரணையோ, இதுவரை வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சிக் கட்டங்களிலும், அதுவே நிலைமையாக இருந்தது. அப்படியிருக்க, பேரவை செல்லாக்காசாகி விட்டிருக்கின்ற இன்றைய கட்டத்தில், அதன் பின்னணியில் எழும் சுயாதீனக் குழுக்களினால் அதிசயங்களை நிகழ்த்திவிட வாய்ப்பில்லை. கூட்டமைப்புக்கு எதிரான அணியினரையே ஒன்றாக இணைக்க முடியாதளவுக்கான ஆளுமைக் குறைபாட்டை, பேரவை வெளிப்படுத்திவிட்டதான கருத்து இருக்கின்றது. அப்படியான கட்டத்தில், அந்தப் பேரவையின் பின்னணியில் எழும் சுயாதீனக்குழு, தமிழ்த் தேசியக் கட்சிகளோடு என்ன அடிப்படைகளை முன்வைத்துப் பேசப்போகின்றன என்பதும் முக்கியமான கேள்வியாகும். அது தவிரவும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலவற்றைப்போல, பேரவையும் தன்னுடைய சிந்தனை மட்டத்தை, யாழ்ப்பாணத்தை இலக்காக்கியே வைத்துக் கொண்டிருக்கின்றது. அது, கிழக்கு மக்களையோ அதன் புவியியல் சார் குடிப்பரம்பலையோ கருத்தில் எடுப்பதில்லை. அதனால், ஒரு பிரதேசத்தைத் தாண்டி, அவற்றால் கவனம்பெற முடிவதில்லை. வடக்கில் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஈபிஆர்எல்எப் எடுத்தாலும், கிழக்கில் அந்த முடிவில் இருக்க முடியாது என்று ஈபிஆர்எல்எப்பின் கிழக்கு முக்கியஸ்தர் ஒருவர் கூறுகிறார். ஆக, ஒரு கட்சியே அதன் பிரதேச, பிராந்திய நிலைகள் குறித்து யோசிக்காமல், யாழ்ப்பாணத்தை இலக்காக வைத்துச் செயற்படுகின்ற நிலையில், கிழக்கு மக்களின் மனங்களை மாற்றுத் தலைமையாகத் தங்களை வரிந்து கொள்ளத் துடிக்கும் தரப்புகள் வெல்வது கடினமாகும். அப்படியான நிலையில், அது, ஏற்கனவே ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சிக்கு) இன்னொரு வாய்ப்பை இலகுவாக வழங்கிவிடும். தமிழ்த் தேசியக் கட்சிகள், பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், அறிக்கை வழியாகவுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இயங்கு தளத்தில் இருப்பவர்களால், மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், ஊடகச் செய்திகளுக்கும் வதந்திகளுக்கும், அறிக்கைகளுக்கும், ஓரிரண்டு நாட்களே ஆயுள். அப்படியான நிலையில், மக்களோடு மக்களாக நேரடியாக இயங்கும் எந்தத் தரப்பாகினும், மேலேழுந்து வரும். அதனையே, தேர்தல் முடிவுகளும் பிரதிபலிக்கப் போகின்றன.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொதுத்-தேர்தலை-நோக்கிய-தமிழ்த்-தேசியக்-கட்சிகளின்-நகர்வு/91-244365
  • வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை. எல்லாம் குருமூர்தி உத்தரவு.
  • ரஜனி, கமல் அரசியலை பற்றி சீமான் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் சந்தர்ப்ப அரசியல் செய்கின்றார்கள், கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் அரசியல் பக்கம் வந்திருப்பார்களா? இந்த இரு பெரும் மலைகளுடன் மோதும் திராணி இவர்களுக்கு வருமா? விஜயகாந்தை போல் துணிவு இவர்களுக்கு இல்லை.மக்களுக்கு சேவை செய்யாமல் சுய நல அரசியல் லாபம் தேட முனைகிறார்கள்.முதல்வர் கதிரை காலியாக இவர்களுகென்று இருக்கிறதாக நினைக்கிறார்கள். 60 வருடங்களாக அரசியல் செய்யும் தி மு க வெறும் 26% வாக்கு வாங்கியே வைத்திருக்கிறது.இத்தனைக்கும் அரசியலுக்கு வராமலே ரஜனி சொல்கிறார் தனக்கு 21% வாக்கு வங்கி இருக்கென்று சொல்கிறார்.
  • மர்ம உறுப்பு என்பது private parts என்பதன் தமிழாக்கம். மர்மத்துக்கு என்ன அர்த்தம்? ரகசியம்/மறைபொருள் என்பதுதானே? இதன் இன்னொரு அர்த்தம் privacy. என்னதான் வெக்கை என்றாலும் மேலாடையை து(தி)றந்தாலும் கீழாடையை, அரையில் ஒரு துணியாவது இருக்கும்படி பார்துக்கொள்கிறோம் அல்லவா? ஏன்? ஏன்றால் அந்த பகுதியின் நீள, அகல, கன பரிமாணங்கள் என்ன என்பது எமக்கும், எமக்கு மிக நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரிந்த “மர்மங்கள்”.  இவை மர்மங்களாக இருக்க வேண்டும் என்பது எதோ ஒரு கட்டத்தில் எல்லா மனிதநாகரீகங்களும் எடுத்த முடிவு (சில பழங்குடிகளுக்கு இவை இன்றும் மறைபொருள்/மர்மம் இல்லை). எனவேதான் இனப்பெருக்க உறுப்புகளை மஎனும் மர்ம உறுப்பு என்கிறோம்.