Jump to content

இலங்கை அரசியல்வாதி தாத்தா ஒருவருக்கு வந்த பெரும் பிரச்னை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது கொழும்பு  ஆங்கில பத்திரிகையில் வந்த ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு. முடிந்தவரை... ரசிக்கக் கூடியவாறு மொழி பெயர்த்துளேன்

.New.jpg

 

கொழும்புக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றில் இருந்து தெரிவான நீடித்த அனுபவ முடைய ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்

இன்றைய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராகவும் இருக்கும் இந்த அரசியல்வாதியோ, பெண்கள் விசயத்தில் கில்லாடி என பெயர் எடுத்தவர்.

ஏனெனில், அழகிய பெண்களுடனான தொடர் சகவாசங்களினால், எப்போதும் அவரது 'சொத்தினை' கறல் பிடியாமல் வைத்திருந்தமையால், அவரது வயதுக்காரருக்கு வரக்கூடிய இயலாமை எல்லாம், நம்மாளுக்கு.... வர.... சான்சே இல்லை. 

அவ்வளவு பெரிய, பேர் போன கில்லாடிக்கு அண்மையில் பெரிய சோதனை வந்து விட்டது.

ஒரு வார இறுதி நாட்களை அமர்க்களமாக கொண்டாட, தாத்தா ஒரு சிவத்த அழகான இளம் பொம்பிளை ஒன்றை தள்ளிக் கொண்டு, ஹொலிடே இன் ஹோட்டல் ஒன்றினில் புகுந்து விட்டார். 

தண்ணிப் போத்தல் ஒன்றை இருவருமே சேர்ந்து காலி செய்த பின்னர், இரவாகி விடவே, கட்டில் ஏறினர் இருவரும்.

தாத்தாவின் வேகத்துக்கு முடிந்தவரை ஒத்துழைத்த பெண் களைத்து சோர்ந்து விட்டார். 

தாத்தாவோ சோர்வதாக இல்லை, அதற்கான அறிகுறிகளும் இல்லை. இன்னாட இது, இவருக்கு மட்டும் இப்படி, அது எப்படி என விசாரித்து, தாத்தா, 'வயாகரா' கஸ்டமர் என்று புரிந்த போது, ஓகோ, அதுவா தாத்தாவின் இந்த வேகத்தின் ரகசியம் என வியந்தார் அம்மணி.

ஒருவாறாக தாத்தா, போதும் என்று, பரிபூரண, நெஞ்சம் நிறைந்த திருப்தியுடன்  ஓய்ந்த போது.... நித்தரையும் வந்துவிட்டது.

சரி படுக்கலாம் என்று கட்டிலில் சாய்ந்தால்...... பெரிய......ய பிரச்சனை.. நித்திரை வரவே இல்லை. அதுக்கு காரணம் இருந்தது.

எது 'அண்ணாமலை' போல 'கம்பீரமாக' இருக்க வேண்டும் என்று தாத்தா விரும்பினாரோ, அது கம்பீரமாகவே தொடர்ந்து இருந்தது. 'வழக்கம்' ஆக நடப்பது போல 'பாயும் புலி',  'பதுங்கும் எலி' ஆக மறுத்தது.

நேரமோ இரவு 12:30. பிரச்சனை தீரும் அறிகுறிகளும் இல்லை. அரண்டு போன அரசாங்க அமைச்சரோ, பெரும் மனச் சங்கடத்துடன், பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த, இளம் அழகியை தட்டி எழுப்பினார்.

ஆகா, கில்லாடித் தாத்தா மீண்டும் ஒரு ரவுண்டுக்கு ரெடி போல என்று, நித்திரை போல நடித்த பெண்ணோ, தாத்தாவின், தொடர்ந்த உற்சாகமில்லா குரலால், ஏதோ பிரச்சனை போல் என்று எழுந்து, தாத்தாவின் பிரச்சனையை அறிந்து கொண்டார்.

விசாரித்த போது, தாத்தா, அழகிய பெண்ணைத் தள்ளிக் கொண்டு வந்த சந்தோசத்தில், மேலதிகமாக மாத்திரைகளை போட்டுத் தள்ளி (overdose) இருக்கிறார், நல்லா என்ஜாய் பண்ண வேண்டும் என்டு தான்.....

ஆனால் இப்படி ஒரு பிரச்சனை வரும் எண்டு தெரியாமல் போய் விட்டதே.

விபரமான அந்தப் பெண், நல்லது, இப்படியே யோசியாமல், டாக்டரிடம் போகலாம் என்று சொன்னார்.  'வெட்கக் கேடு, இப்படியே எப்படி போறது'.. என்றார், பெரும் கலக்கத்தில் இருந்த இலங்கை அரச அமைச்சர்.

'அதெல்லாம் பிரச்சனை இல்லை, நீங்கள், இந்த பிரச்சனையுடன் டவுசரைப் போட வேண்டாம், கஷ்டமாயிருக்கும். சாரத்துடனே வாருங்கள் போகலாம்' என்று அழைத்தார் அவர்.

சாரத்தினை மடித்து, ஆனால் கட்டாமல்  இரண்டு கைகளினாலும் கீழ் நுனிகளைக் பிடித்துக் கொண்டு, 'அடி வாங்கிக் கொண்டு, நடந்து வரும் நம்ம வடிவேலு போல' நடந்து போய், பெண்ணின் காரினுள் ஏறி அமர்ந்து கொண்டார்.

போகும் வழியெல்லாம், 'இப்ப எப்படி'... 'என்னைத்தை.. அப்படியே தான் இருக்குது... சனியன்'.... கதைதான்.

காரை, நாரகேன்பிட்டி பகுதியில் இருக்கும் தனியார் வைத்தியாசலைக்கு கொண்டு சென்று, ஒரு அறையினையும் புக் பண்ணி, 'நோயாளித் தாத்தாவையும்' படுக்க வைத்து விட்டார், அந்தப் பெண்.

சிறிது நேரத்தில் ஒரு இளம் வைத்தியர் தம்பி, தாத்தாவினைப் பார்த்து, ஊசி ஒன்றை அடித்து, 'அப்படியே படுத்திருங்கள், 20 நிமிடத்தில் வருகிறேன் என நகர, 'ஒரு நிமிசம்...' என்று அழைத்த தாத்தா, 'மகனே,  நான் யார் என்று உனக்கு இப்போது தெரிந்திருக்கும், உன் கையைக் காலாய் நினைத்துக் கொண்டு கேட்கிறேன், இந்தக் கருமாந்திரத்தை பத்தி மூச்சு விட்டுடாதே ராசா'.. என்று வேண்டிக் கொண்டார்.

ஆனாலும் தாத்தாவின் பிரச்சனை, 20 நிமிடங்களின் பின்னும் தீர்ந்த பாடாயில்லை. இளம் டாக்டர் தம்பி, இப்போது, அனுபவம் மிக்க, பெரிய டாக்டரை அழைத்தார் உதவிக்கு.

பெ..ரிய.. டாக்குத்தர்... ஐயா... பெ..ரிய.. ஊசியோட வந்து, மலை...யை குத்தி.... அங்கே, நீக்கமற நிறைந்து இருந்த இரத்தத்தினை வெளியே எடுத்த பின்னரே...'பாயும் புலி, பதுங்கும் எலியாகியது'.

எல்லாம், நோர்மல் ஆன பிறகு, அங்கே கோட்டலுக்கு வெளியே காய்ந்து கொண்டிருந்த  'செக்யூரிட்டி பசங்களைக் அழைத்து, எங்கப்பா, இருகிறீங்க, இங்க வாங்கப்பா' என்று கூப்பிட்டு தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் மீண்டார் அவர்.

ஆனாலும் தனது சாரத்தினை அங்கே மறந்து விட்டுச் செல்ல, வைத்தியசாலை 'இங்கே ஒரு பொருள் விடப் பட்டுள்ளது என்று அழைக்க', அதை எடுக்கப் போன செக்யூரிட்டி ஆசாமி, என்ன விசயம் என்று விசாரிக்க.... காதும், காதும் வைத்த மாதிரி இருக்க வேண்டிய விசயம், இப்ப, நான் எழுத, நீங்களும் வாசித்து சிரிக்க வேண்டிய விசயமாக போட்டுது.  :grin:

Link to comment
Share on other sites

ஹஹா அருமை நாதாமுனியர்:grin:

2 அல்லது  3 நாட்களுக்கு முன் இலங்கை தமிழ் இனணயம் ஒன்றில் இந்த படத்தை பார்த்தேன். அப்போது நினைத்தேன் இது ஒரு  வில்லங்கமான விடையமாகதான் இருக்கவேண்டும் என்றுtw_open_mouth:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் வாட்டர் பம் வெடிச்சு சிதறுற அளவுக்கு வரேல்லை tw_yum:

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த அளவில் உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை ....
இதற்கு இதயமும் ஒத்துழைக்க வேண்டும்  வயாகரா மருந்தின் தொழில்பாடின் படி பார்த்தால் 
ஒரு பரபரப்பு மன நிலையில் இருக்கும்ஒருவருக்கு 
இப்படி நீண்ட நேரம் இருக்கும் என்பது நம்பும்படியாக இல்லை.

ஓவேர் டோஸ் ஆனால் இதய குழாய்களே பாதிப்பை கொடுக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.