Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம்
எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்;
மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே
கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்;
திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை
வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்;
தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம்
உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு!

***

எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும்
முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும்
அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும்
ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள
அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்!

***

எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே
எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி.
வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன்
எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில;
கணந்தொறும் இவ்வுலகில் தேவைகளும் கணக்கில.
உள்ளத்தே உதித்த வண்ணக் கலவைகளை
அள்ளித் தெளித்திடு அன்புடன் நாள்தொறும்!
வையகமும் வளமாய் வண்ணப் பொலிவுறும்! - மனம்
எல்லையில்லாக் களிப்பினில் வானத்தே பறந்திடும்!

 
 

 

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசத்தின் கவிதைக்கும், 
அவரை நீண்ட நாட்களின் பின், களத்தில் காண்பதிலும் மிக்க மகிழ்ச்சி.:)

மிக்க நன்றி தமிழ் சிறி. :) அடிக்கடி இங்கு வருவதுண்டு. வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். இனிமேல் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகத் தொடர்ந்தும் எழுதுவேன். :)  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாசமுள்ள கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்  மல்லிகை, வாழ்த்துக்கள்...!  :)

கருத்துக்கும், என்றென்றும் வாழ்த்திடும் உள்ளத்துக்கும்  நன்றிகள்,  சுவி அண்ணா :) 

Link to post
Share on other sites
 • 1 year later...
 • கருத்துக்கள உறவுகள்

அழகு மனம்

சிந்தை கெடு  கொடும் வஞ்சனைத் தீயும்
ஊனினை,  உள்ளத்தை நலிவுறச்செய் கோபமும் 
அண்டை மானிடர் பால் கொள் பொறாமையும் 
அண்டமும் தனதே, சர்வமும் தானே எனும் கர்வமும் 
எண்ணத்தில் இவையனைத்தும் இல்லாத மனிதர்க்கு 
காணும் அனைத்தும் அழகுறத் தோன்றிடும் -  அவர் 
மனவுலகும் அழகாகும்; மகிழ்ச்சியில் மூழ்கிடும்!

***************************************

உறவுகளின் சங்கீதம்

உள்ளங்களில் ஊற்றெடுக்கும் அன்பெனும் ஜீவநதிகள்
தேசங்கள் கடந்து பாயாமல், சிறு குவளைகளுக்குள் தேங்கிடுமோ?

புள்ளினம் போல் தேசமெலாம் பறந்து திரிந்து உறவு கொண்டாடி
உள்ளம் மகிழாமல், தத்தம் கூண்டுகளுக்குள் நாம் முடங்கிடுவமோ?

புல்லாங்குழலின் துளைகளை அடைத்துவிட்டு, அதை மீட்ட
கோபியரும், கோபாலரும் மகிழும் கானம் பிறந்திடுமோ?

பிரிந்து பெரும் பிரவாகத்துடன் ஓடும் நதிகளின் சங்கமம் தான் அழகு!

விரிந்த வானத்தே பட்சிகள் கூடிப்பறந்திட தோன்றிடும் கோலமும் அழகு!
பரந்த உலகிலே பிரிந்த உறவுகள் எல்லாம் கூடிப் பேசி மகிழ்வதும் அழகே!

புல்லாங்குழலின் துளைகளில் விரல்கள் நர்த்தனமிட்டு, உட்சென்ற காற்றை இனிய கீதமாக்கும்.

நல்லுள்ளங்கள் நயமுடன் வார்த்தைகள் நவின்றிட பிறந்திடும் உறவெனும் உன்னத சங்கீதம்!

Edited by மல்லிகை வாசம்
Formatting
 • Like 1
Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவின் முழு நிலவொளியில் சலனமற்ற கடலோரம்,
வளைந்து கடலை வணங்கும் தென்னைமர ஓலை சாமரம் வீசும்;
குளிர்தென்றலும் மெல்ல வந்து மேனி தழுவி நழுவிச் செல்லும்;
கள்ளமுடன் முறுவல் பூக்கும் நிலவொளியில் ஒளி விண்மீன்கள்;
செல்லிடப் பேசியில் ஆர்ப்பாட்டமில்லா மெல்லிசையில் லயிக்கும் 
ஆழ்மனம் அமைதியின் எழிலினை நயந்து களிப்புறும், ஆர்ப்பரிக்கும்!
************************

சிறு சிறு துளிகள் மண்ணைத் தழுவி 
வெள்ளமாய் பாயும் மழையின் பிரவாகமும்,
வசந்தகாலம் கண்கவர் வண்ணமாய் மலர்ந்து 
காற்றினில் ஆடி மகிழும் மலர்களின் குதூகலமும்,
வானவெளியே எழில்மிகு கோலமென ஒருங்கே சேர்ந்து 
உல்லாசமாய் திரியும் பட்சிகளின் ஊர்வலக் காட்சியும்,
சுரங்கள் பல சேர்ந்து ராகமாகி காற்றலைகளில் 
பரவி காதோரம் செல்ல ஏற்படும் பரவசமும், 
அழகு தமிழ் சொற்கள் பொருள்பட சேர்ந்து 
கவிதையாய் பிறக்கையில் அதில் வரும் இன்பமும் 
உணர்ந்து ரசித்து அவற்றில் மூழ்கிடும் தருணங்கள் 
மானிடன் மனதில் தோன்றும் ஆணவத்தை அழித்திடும்;
ஒன்றாய் இணைந்து வாழ்தலின் அழகினை உணர்த்திடும்! 

***********************

 

 

 • Like 2
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

தனிமைக்கு அருமருந்தாம் - அதுவே 
தன்னுள்ளே சிக்க வைக்கும் போதையுமாம்; 
தினந்தோறும் கடல்போல தகவல்களை அள்ளித் 
தந்திடினும் அதில் முத்துக் குளித்து அவற்றின் 
உண்மை தன்மையினை அறிந்திடுதல் கடினமாம்;
முகநூலாம் - நட்புக்கோர் நூலாம் - எனினும் அது ஓர் 
முகமன் நூலாம்; கலை அலங்காரம் செய்த முகம் போலாம்! :11_blush:

(கலை அலங்காரம் - Make-up)

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2017 at 8:03 PM, suvy said:

இரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகிய கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள் மல்லிகை வாசம் .....!  tw_blush:

கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சுவி அண்ணா :11_blush:

Link to post
Share on other sites
 • 3 months later...
 • கருத்துக்கள உறவுகள்

அழுக்காறு
**************
மல்லிகையின் நறுமணம் கண்டு முல்லை மலர் வாடுவதில்லை;
பென்குயினின் மிடுக்குநடை கண்டு அன்னம் தன் அழகு நடையை மறப்பதில்லை;
ஆழ்கடல் வாழ் மீனினங்கள் காணும் அழகை
வானவெளியே வலம் வரும் புள்ளினங்கள் காணாது வருந்துவதில்லை.
நம் ஒவ்வோர்க்கும் தனித்தனி ஆற்றலை அளித்தனன் இறைவன்.
நம் தனித்துவமே நம் எல்லோர்க்கும் ஆபரணங்களாம் - எனினும்
தங்கத்தில் பதித்த மணிவைரம் ஒளிர்வதால் தங்கத்தின் மதிப்பு குறைவதுமில்லை; இரண்டும் சேர்ந்து அழகாய் மிளிர தவறியதுமில்லை.
பெருமை மிகு மானிட ஜாதிக்கு
பொறாமை எனும் புற்றுநோய் வீணே.
அழுக்காறு எனும் அழுக்கினை அகற்றி
அன்பு எனும் பாலத்தில் அனைவரும் இணைய, உள்ளத்தில் ஆனந்த நதி சலனமின்றிப் பாய்ந்திடுமே! 

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கஜந்தி said:

அருமை

நன்றி கஜந்தி ?

Link to post
Share on other sites
 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

போலிப் புன்னகையும், பசப்பு மொழியும் அலங்கரித்த மானுடம் பேருடனும், புகழுடனும் சீர்பெற்று வாழ்ந்திடும்.
இவை அல்லால், அது வாழும் கலை தெரியாப் பொருள் எனப் பெயர் பெறும்!

*******************

நல்லவரையும், நன்மையையும் மட்டும் வேண்டி நிற்க இது சொர்க்கம் அல்ல, பூலோகம்; வல்லவன் தான் வாழ்வான் என கீதை சொல்லும் மார்க்கம்!

*********************

நலிந்தோரை நசுக்கிய வலியவர் சொல்வதே தர்மமாம் - ஆதலால் 'தர்மமே இறுதியில் வெல்லும்' என்று சொல்வதும் நிஜம் தான் போலும்! 🤔 🤡🤣

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் நீங்கள் நிறைய எழுதுவீங்கள் .......பின் இப்போதுதான் மீண்டும் தொடர்ந்து வருகின்றீர்கள்,சந்தோசமாய் இருக்கு மல்லிகை வாசம். நல்ல கவிதைகள்.....இன்னும் நிறைய எழுதுங்கள் வாசிக்க ஆவல் .....!  😁 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

நிஜங்களை தேடித்தேடி தினந்தினம் பயணம்
நீதி, நியாயங்கள் அருகிவிட்ட உலகில்.
நிலையில்லா வாழ்வில் நிலைத்திடா நிஜங்களால் நலிந்திடும் மனதில் நிம்மதியேது?
'நினைவினில் பரம்பொருள் ஒன்றே நிலையெனக் கொள்ளல் நல'மென ஞானியர் நவின்றது 
நடைமுறை வாழ்வினில் நமக்கு ஒவ்வுமா?
நர்த்தனமாடிடும் நடராஜன் அவன் ஆட்டுவிப்பில் 
நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Lara said:

சிறு சிறு கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.

வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி லாரா. 😊

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நாமும் ஓர் பொம்மையென நம்நிலை உணர்ந்து 
நாள்தொறும் நம்கருமம் நலமுடனே ஆற்றுதலும்,
நிஜம் இதுவேயென உணர்தலும் நிம்மதி தரும்.

இது தான் நிஜம்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2019 at 5:10 PM, ஜெகதா துரை said:

மல்லிகை வாசம் உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. 

நன்றி ஜெகதா. 

*****************************************

தன்னலம் மறுத்திட்ட உயர் இலட்சிய மறவர்,
துர்க்குணம் அறியாத் தம் தொழில் ஆற்றி வாழ்
நம் சகமனிதர், இல்லறம் வளர்த்த அன்புத் தாய்மார், 
வானுயர் விருட்சங்களாய் வளர்ந்து - இப்புவிக்கு 
வளம் தரவல்ல இளஞ்சிறு தளிர்கள் - சிறார்கள்
இன்ன நல்லுயிர்கள் இன்று நம்முடனில்லை - எனினும் 
நினைவுதனில் கலையாது நிலைத்திருக்கும் அவர் தியாகம்! 🙏🙏🙏

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தானும் தன் குடும்பமும் சாப்பிடுவதற்கும், வீடு கட்டுவதற்கும் சம்பாத்தியம் செய்ய,  காரணமாக இருந்த மினி லாரியின் உருவத்தை... வீட்டின்மேல் பதித்து வைத்து  தன் நன்றியை தெரிவிக்கும்  வீட்டுக்காரர்.
  • ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியீடு – பதிலை வழங்கியது அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை உத்தியோகப்பூர்வமாக முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ள விடயங்கள் அண்மையில் கசிந்திருந்த நிலையில், தற்போது உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அந்த அறிக்கைக்கான பதில் நிலைப்பாட்டை அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்படவுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில், இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக, மாற்று சர்வதேச பொறிமுறைகள் குறித்து ஆராயுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய முறையில் அவதானம் செலுத்தப்படாதுள்ளமை, மீண்டும் அவ்வாறான மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் நிலைமை, இராணுவமயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் கவலையளிப்பதாக உள்ளன எனவும் யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் இந்த அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை அதிகரிக்கச் செய்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் உருவாகியுள்ளன என்றும் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இருதரப்ப்பினரதும் மனித உரிமை மீறல்கள் குறித்து நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது என்றும் இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றத்தை, பின்னோக்கிச் செல்வதற்கு செயற்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவின் 28 அதிகாரிகள், நிர்வாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்த ஆண்டு, போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட தரப்பினர் குறித்து ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அரசாங்கங்கள் நியமித்த வெ்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்தியபோதும் உண்மைகளை நம்பகத்தன்மையை வெளிக்கொண்டுவரவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தவறிவிட்டன எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தேசிய அளவில் தீர்வு காண்பதற்கான இயலாத நிலையிலும் ஆர்வமற்றத்தன்மையிலும் இருப்பதால், சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கா, சர்வதேச சமூகம் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஐ-நா-ஆணையாளரினால்-சமர்ப்/
  • ஜெயலலிதாவின்  மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின் ‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல்  ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி  27ல் ஜெயலலிதாவிற்கு  நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவிற்கு  உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் அவரின்  நினைவகம் திறக்கப்படுவது அவருக்கு  செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள்,  விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் கட்டுப்பணம்  வாங்க பயன்படும் என்பதற்காக  நினைவிடம் கட்டித் திறப்பு விழா செய்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகி விட்டனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம்,  கொடநாடு பங்களாவில் நடந்த கொலை,  கொள்ளைக்கு காரணமானவர்கள் என அத்தனை  குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜெயலலிதாவின்-மரணத்திற்/
  • பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 7 ஆயிரத்து 245 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இது என்றும் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 10 ல் நான்கு கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி இங்கிலாந்தில் மொத்தம் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 907 இறப்புகள் பதிவாகியுள்ளன என ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. http://athavannews.com/பிரித்தனியாவில்-கொரோனா-த/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.