• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

பெரியாரும் சொற்சிலம்பமும் சுய முரண்பாடும்

Recommended Posts

கர்ப்பம் இடையூறானது !

""...பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது.

...புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும்.

குடியரசு கட்டுரை 1.3.1931

""...இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்

மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது...

தந்தை பெரியார் பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு விடுதலை 28.6.1973

நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்?

தந்தை பெரியார் "வாழ்க்கைத் துணை நலம்' எனும் புத்தகத்திலிருந்து 1938ஆம் ஆண்டு பதிப்பு

ஆண்களின் சூழ்ச்சி !

...அன்றியும் ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால், பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன், பெண்கள் என்றும் விடுதலைப் பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடு படுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

பெண் விடுதலை

...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.

தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை.

"குடியரசு' (12.8.28)

பத்தினி என்பது முட்டாள்தனம்

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும்

மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு

இயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.

"விடுதலை' (4.5.73)

தேசிய குற்றம்

ஒரு பெண்ணை தாய், தகப்பன், பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை துணி அலங்காரங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண்தானே? இது தேசிய குற்றமாகாதா?

ஆண் போல நடக்க வேண்டும்

...எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்ணும் தன்னை "பெண் இனம்' என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது.

திருப்பத்தூரில் (15.9.46) பெரியார் சொற்பொழிவு

சுயேச்சைக்கு விரோதம்

...ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.

"குடியரசு' (6.4.1930)

திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது

புருஷன் மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து திருமண முறையில், புருஷன் மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன்.

""நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கண்ணகி பற்றி பெரியார்...

"".....கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான்; கோவலன் இறந்து போகிறான். இதை அறிந்த அம்மாள் கண்ணகிக்குப் பெரும் கோபம் வந்து, நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்... கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப்பெண்.

""அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும் போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்து விடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர, வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை (முலை) வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் "பாஸ்பரஸ்' இருக்குமா? இந்த மூடநம்பிக்கை கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?

""அக்கினி பகவானுக்கு கண்ணகி, "பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்களைச் சுடு!' என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் சாம்பலானார்களாம்; மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்! இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால், நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா? – என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம தர்ம

மனு நூல், ராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?...

""...பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது, கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல், ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி! வணங்கத்தக்கவள்! தெய்வமானவள்! பாண்டியன் "குற்றவாளி' இதுதானே சிலப்பதிகாரக் கதை? இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு, நமக்குச் சொந்தம் என்றா சொல்வது?

""இவைகளைத்தான் நாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!...''

(28.7.1951 விடுதலையில் வெளியாகிய பெரியாரின் உரை ஆதாரம் : 22.12.2001 விடுதலை)

உப்பு, மிளகாயா பெண்கள் !

"ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது?

"விடுதலை' (11.10.48)

கல்யாண முறை ஒழிய வேண்டும் !

கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன?

"விடுதலை' (28.6.73)

தமிழனுக்கு தனிவழி கிடையாது !

தமிழன் நடந்து கொள்வதற்கென்று தனிமுறை, வழிமுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது.

"குடியரசு' (27.11.43)

(தொடரும் :-)

( நன்றி துக்ளக் )

நன்றி இட்லி வடை வலைப்பூ.

Share this post


Link to post
Share on other sites

கலியாணம் பெண்ணுக்கு தேவையில்லை என்று சொல்லிச் சொல்லியே 70 வயதில் 25 வயதுப் பெண்ணைக் கலியாணம் செய்த *** ஈ வே ரா...! இவர்கள் எல்லாம் தந்தையர். தந்தை என்ற நிலையையே கேவலப்படுத்திய கொடிய மனித விதிவிலக்கு இந்த பெரியார்..!

பெண் கர்ப்பம் தரிப்பதையே கேவலமாக விமர்சித்தவருக்கு தன் சொந்தப் பிறப்புப் பற்றிய சிந்தனையே இல்லாமல்...பெண்ணின் ஆணின் படைப்பின் பகுத்தறிவு இல்லாமல் போனது....இவர் *** அல்லது...சாதாரண மனிதன் தானா..????! :rolleyes::icon_idea:

*** சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

கர்ப்பத்தைப் பற்றி இவனது தாய், இவனைப் பெத்துப் போடு முன்பு சிந்தித்திருக்க வேண்டியது. என்னவோ, இந்தப் பகுத்தறிவு சிறப்பானது! வல்லது! உங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்று சொல்லி புராணம் பாட கும்பல் வரும்.

Share this post


Link to post
Share on other sites

தேவையில்லை

பெண்ணை

நிலையையே

சிந்தனையே

மனிதன் தானா

இவனை

உங்களைக்

கட்டுப்படுத்தவில்லை

அய்யோ! அய்யோ (வடிவேல் பாணியில் படிக்கவும்) :lol::lol::(:icon_idea::rolleyes::lol:

Share this post


Link to post
Share on other sites

பெண் உரிமை

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை. (கு3.11.79;8)

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். (கு.16.11.30;7)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். (கு.8.2.31;12:2௧)

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். (கு.28.4.35;5:1)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (கு.16.6.35;7:3)

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (கு.21.7.46;2:2)

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். (வி.14.2.61;1:பெ,செ.)

திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். (வி.5.4.61;1:பெ.செ.)

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)

இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? (பெ.சி.மி.187)

நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். (வி.22.3.43;3:4)

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும். (கு.5.6.48;14:2௩)

கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள். (கு.29.9.40;15:3)

பெண்கள் மதிப்பிழந்து போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாய்த் தங்களை அலங்கரித்துக் கொள்வதேயாகும். (வி.15.6.43;1:3)

தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. (வி.11.10.48;3:2)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (கு.1.5.27;5:3)

இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்? (கு.3.11.29;8)

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.(கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா?(வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தி

Share this post


Link to post
Share on other sites

இவைகள் தந்தை பெரியார் பெண்ணுரிமை பற்றி சொன்னவைகள்

Share this post


Link to post
Share on other sites

சிலர் ஒரு களத்திலேயே மாறி மாறி முன்னுக்குப் பின் முரணாக ஒரு நாளிலேயே கருத்து சொல்வார்கள்.

தந்தை பெரியார் ஆரம்பத்தில் கொண்டிருந்த கருத்துக்களை பின்னாளில் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விடயம் அல்ல.

தந்தை பெரியார் ஒரு காலத்தில் சந்நியாசியாகவும் இருந்திருக்கிறார். சாமி சிலைகளுக்கு பூக் கோர்க்கின்ற வேலையை செய்திருக்கிறார்.

கோயில் தர்மகர்த்தாவாக இருந்திருக்கிறார்.

அப்பொழுது அவர் சொன்ன கருத்துக்கள் கிடைத்தால் அவைகளையும் கொண்டு வந்து போடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சிலர் ஒரு களத்திலேயே மாறி மாறி முன்னுக்குப் பின் முரணாக ஒரு நாளிலேயே கருத்து சொல்வார்கள்.

தந்தை பெரியார் ஆரம்பத்தில் கொண்டிருந்த கருத்துக்களை பின்னாளில் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விடயம் அல்ல

ஆக அவர் ஒரு சந்தர்ப்பவாத சமூக வெறியன்..பிராமண சமூக வெறியன்...அப்படி என்று கருதுதலே தகும். அவரையெல்லாம்..பெரியார்....தந்த

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சிலர் இதை உண்மை இல்லை, முறையற்ற உறவுகளை தடை செய்யப்பட்டிருந்தது என்று வாதிட்டாலும், தடை இருந்தது உண்மைதான்.

ஆனால் அந்த தடை அர்த்தமற்றது என்பதை எமது தலைவர் அனுபவத்தின் ஊடாக உணர்ந்து கொண்டார். அந்த தடை பின்பு நீக்கப்பட்டது. இன்று பல தளபதிகள், போராளிகள் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

யாருமே ஆரம்ப காலத்தில் கொண்டிருக்கும் கொள்கைளை கடைசி வரை கொண்டிருப்பதில்லை. அப்படிக் கொண்டிருப்பவர்கள் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அனுபவங்களின் ஊடாக அவர்களின் கருத்துக்கள் கொள்கைகள் மாறிக் கொண்டு முன்னோக்கிச் செல்லும்.

அது சந்தர்ப்பவாதம் என்று நீங்கள் சொன்னால், உலகில் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்.

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சிலர் இதை உண்மை இல்லை, முறையற்ற உறவுகளை தடை செய்யப்பட்டிருந்தது என்று வாதிட்டாலும், தடை இருந்தது உண்மைதான்.

ஆனால் அந்த தடை அர்த்தமற்றது என்பதை எமது தலைவர் அனுபவத்தின் ஊடாக உணர்ந்து கொண்டார். அந்த தடை பின்பு நீக்கப்பட்டது. இன்று பல தளபதிகள், போராளிகள் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

யாருமே ஆரம்ப காலத்தில் கொண்டிருக்கும் கொள்கைளை கடைசி வரை கொண்டிருப்பதில்லை. அப்படிக் கொண்டிருப்பவர்கள் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அனுபவங்களின் ஊடாக அவர்களின் கருத்துக்கள் கொள்கைகள் மாறிக் கொண்டு முன்னோக்கிச் செல்லும்.

அது சந்தர்ப்பவாதம் என்று நீங்கள் சொன்னால், உலகில் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்.

இயலாக்கட்டத்தில் தான் புலிகளை வாதத்துக்குள் இழுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களில் நீங்களும் ஒருவர். அந்த வகையில் உங்கள் இயலாமை....??! சரி அதிலும் கூட நீங்கள் முண்ணுக்குப் பின் முரணாபவர் என்பீர்கள்....சரி விடுவம்...

விசயத்துக்கு வந்தால்..இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் அப்படிக் கொள்கைகள் இருப்பினும்..புலிகள் பெண்கள் திருமணமே செய்யக் கூடாது..கலியாணம் என்பது பெண்ணடிமைத்தனம்..என்றெல்லாம் கடையளந்துவிட்டு திருமணம் செய்யவில்லை. போராளிகளுக்கு கடமையும் மரணமும் காத்திருப்பன. அந்த வகையில் பொறுப்புக்கள் அதிகம் என்பதால் குடும்பப் பொறுப்புக்களையும் கவனிப்பது கூடுதல் சுமை என்பதால் அதிலிருந்து விலக்களித்தனர். இன்றும் முதல் 5 வருட சேவைக்காலத்தில் திருமணம் செய்ய முடியாது. அதன் பின்னர் அவர்கள் விரும்பின் பட்சத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் திருமணத்துக்காக இயக்கத்தை விட்டு விலகுவது என்பது உடனடிச் சாத்தியமில்லை. தளபதிகளாகிய பின்னர் அவர்களின் களப்பங்களிப்புக் குறைந்து திட்டமிடல் அதிகம் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் விரும்பினால் மட்டும்.

ஆனால் பெரியார் என்ற *** 18 வயதில் முடித்து அனுபவப்பட்ட பின் இவ்வளவு பகுத்தரிவு வாதம் பேசிய பின் 76 வயதில் 22 வயதுப் பெண்ணை முடிச்சிருக்கின்றார்என்றால்...அது முரண்பாடல்ல..முரண்டு பிடிக்கிறது..! :P :lol:

*** கருத்து நீக்கப்பட்டதுடன், ஒரு சொல் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

ஒரு இலட்சம் என்பது தவறு. கோடிக்கணக்கான என்பதே சரி!

அவர் தந்தை பெரியாரை தாராளமாக ஒருமையில் அழைக்கட்டும்.

தந்தை பெரியார் மீது செருப்புக்கள் எல்லாம் வீசப்பட்டன. தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் முன்னால் இதெல்லாம் ஒன்றுமே அல்ல.

ஆனால் நெடுக்காலபோவானின் பரிதாப நிலையை பாருங்கள்!

நாம் இங்கே தந்தை பெரியார் பற்றி பேசியது குறைவு. பகுத்தறிவுக் கருத்துக்களையே முன்வைக்கிறோம். அது தந்தை பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நெடுக்காலபோவான் துணைக்கு அழைத்த தோழர் ஜீவாவும் ஒரு பகுத்தறிவுவாதிதான். தந்தை பெரியார்,தோழர் ஜீவா, அறிஞர் அண்ணா, காமராஜர், பழ.நெடுமாறன், சுபவீ என்று எல்லோரும் காட்டுகின்ற வழியில், அவைகள் சரியான வழியாக இருப்பதால், நாம் அதில் நடக்கிறோம். (இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களில் சிறிது மாறுபாடுகளும், செய்முறைகளில் வேறுபாடுகளும் உண்டு. நோக்கம் என்பது ஒன்றுதான்)

சரி! இப்பொழுது விடயத்திற்கு வருவோம்

நாம் சிவன், விஸ்ணு போன்றவைகள் இல்லை என்கிறோம். அவைகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்கின்ற உண்மைகளை சொல்கிறோம்.

நாம் இங்கே கடவுள் என்று நம்பப்படுபவைகள் பற்றி விமர்சிக்கிறோம். அதை நெடுக்காலபோவானால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அவரும் இந்த சித்திரங்களை வணங்குபவராக இருக்கலாம்.

பதிலுக்கு அவர் "பெரியார், பெரியார்" என்று கூச்சலிடுகிறார்.

இங்கே வித்தியாசத்தை பாருங்கள்.

நாம் கடவுள் பற்றி கேள்வி எழுப்புகிறோம்.

அவருடைய பதில் ஒரு மனிதரை தாக்குவதாக இருக்கிறது.

இது நெடுக்காலபோவானின் பரிதாபநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

Share this post


Link to post
Share on other sites

ஒரு இலட்சம் என்பது தவறு. கோடிக்கணக்கான என்பதே சரி!

அவர் தந்தை பெரியாரை தாராளமாக ஒருமையில் அழைக்கட்டும்.

தந்தை பெரியார் மீது செருப்புக்கள் எல்லாம் வீசப்பட்டன. தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் முன்னால் இதெல்லாம் ஒன்றுமே அல்ல.

ஆனால் நெடுக்காலபோவானின் பரிதாப நிலையை பாருங்கள்!

நாம் இங்கே தந்தை பெரியார் பற்றி பேசியது குறைவு. பகுத்தறிவுக் கருத்துக்களையே முன்வைக்கிறோம். அது தந்தை பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நெடுக்காலபோவான் துணைக்கு அழைத்த தோழர் ஜீவாவும் ஒரு பகுத்தறிவுவாதிதான். தந்தை பெரியார்,தோழர் ஜீவா, அறிஞர் அண்ணா, காமராஜர், பழ.நெடுமாறன், சுபவீ என்று எல்லோரும் காட்டுகின்ற வழியில், அவைகள் சரியான வழியாக இருப்பதால், நாம் அதில் நடக்கிறோம். (இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களில் சிறிது மாறுபாடுகளும், செய்முறைகளில் வேறுபாடுகளும் உண்டு. நோக்கம் என்பது ஒன்றுதான்)

சரி! இப்பொழுது விடயத்திற்கு வருவோம்

நாம் சிவன், விஸ்ணு போன்றவைகள் இல்லை என்கிறோம். அவைகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்கின்ற உண்மைகளை சொல்கிறோம்.

நாம் இங்கே கடவுள் என்று நம்பப்படுபவைகள் பற்றி விமர்சிக்கிறோம். அதை நெடுக்காலபோவானால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அவரும் இந்த சித்திரங்களை வணங்குபவராக இருக்கலாம்.

பதிலுக்கு அவர் "பெரியார், பெரியார்" என்று கூச்சலிடுகிறார்.

இங்கே வித்தியாசத்தை பாருங்கள்.

நாம் கடவுள் பற்றி கேள்வி எழுப்புகிறோம்.

அவருடைய பதில் ஒரு மனிதரை தாக்குவதாக இருக்கிறது.

இது நெடுக்காலபோவானின் பரிதாபநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

கடவுள்கள் பற்றிய ஆபாசச் சித்தரிப்புக்கள் தவறு என்பதை ஏலவே உங்களுக்கு உணர்த்தி உள்ளோம். அவை வேற்று மத ஆதிக்கக் காலத்தில் செருகப்பட்ட மதங்களை மலினப்படுத்தும் நோக்கிலான புனை கதைகள்..! அவையல்ல மதங்கள் சொல்லும் உண்மைகள். அவை விழிப்பவை வேறு என்பது உங்களுக்கு அறிவியலும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் சொல்லி வருகின்றோம். கவனியுங்கள்..! :lol:

Share this post


Link to post
Share on other sites

ஈழத்து பார்ப்பான்களும் நச்சுப் பாம்புக்கு இணையானவர்கள் என்பது இந்தக் களத்துக்கு வந்தபின்பே புரிகிறது :P

Share this post


Link to post
Share on other sites

ஈழத்து பார்ப்பான்களும் நச்சுப் பாம்புக்கு இணையானவர்கள் என்பது இந்தக் களத்துக்கு வந்தபின்பே புரிகிறது :P

அட!

பெரியாரின் போக்கிரித் தனத்தைப் பற்றிக் கதைச்சால் பார்ப்பாணர் பட்டம் கட்டி, பெரும் சாதனை புரிந்து விட்டீர்களே தோழா!

என்ன செய்ய, எதற்கெடுத்தாலும் ஆரிய எதிர்ப்பு என்று திட்டித் தீர்த்து உங்களுக்கு பழகிப் போயிருக்கும். இல்லையா? :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அட!

பெரியாரின் போக்கிரித் தனத்தைப் பற்றிக் கதைச்சால் பார்ப்பாணர் பட்டம் கட்டி, பெரும் சாதனை புரிந்து விட்டீர்களே தோழா!

என்ன செய்ய, எதற்கெடுத்தாலும் ஆரிய எதிர்ப்பு என்று திட்டித் தீர்த்து உங்களுக்கு பழகிப் போயிருக்கும். இல்லையா? :lol:

இதை நெடுக்காலபோவான் ஐடியிலேயே சொல்லியிருக்கலாமே? :P

தந்தை பெரியாரின் கருத்துக்களை முழுமையாக இல்லாமல் துண்டு துண்டாக கத்தரித்து, எந்தச் சூழ்நிலையில் சொன்னார் என்பதையும் மறைத்து அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்க கங்கணம் கட்டி அலைகிறது ஒரு சிறு கும்பல்....... அந்த கும்பல் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் தான் என்பதைச் சொல்ல எந்தத் தயக்கமும் எமக்கில்லை....

Share this post


Link to post
Share on other sites

இதை நெடுக்காலபோவான் ஐடியிலேயே சொல்லியிருக்கலாமே? :P

தூயவனுக்கு கடவுச்சொல் தெரிய வாய்ப்பில்லை.

அது எல்லாம் தெரிந்த, அவர் சொன்னா ஊரே சொன்னமாதிரியான குருவி.. சுயதடை என்று சுத்துமாத்துவிட்டார். எனினும் சிரங்கைச் சொறிஞ்சா விடமுடியாத மாதிரி மீண்டும் வந்திருக்கின்றார்..

Share this post


Link to post
Share on other sites

தூயவனுக்கு கடவுச்சொல் தெரிய வாய்ப்பில்லை.

அது எல்லாம் தெரிந்த, அவர் சொன்னா ஊரே சொன்னமாதிரியான குருவி.. சுயதடை என்று சுத்துமாத்துவிட்டார். எனினும் சிரங்கைச் சொறிஞ்சா விடமுடியாத மாதிரி மீண்டும் வந்திருக்கின்றார்..

ஓ! அப்படியா சேதி!!!

தோழர் தூயவன் மன்னிக்கவும்.....

Share this post


Link to post
Share on other sites

தூயவனுக்கு கடவுச்சொல் தெரிய வாய்ப்பில்லை.

அது எல்லாம் தெரிந்த, அவர் சொன்னா ஊரே சொன்னமாதிரியான குருவி.. சுயதடை என்று சுத்துமாத்துவிட்டார். எனினும் சிரங்கைச் சொறிஞ்சா விடமுடியாத மாதிரி மீண்டும் வந்திருக்கின்றார்..

இவர் கிருபனுக்கு இன்னும் சிலருக்கு குருவியோட முற்பிறவி பகை போல. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இவருக்கு குருவி போல யார் எழுதினாலும் அது குருவியாத்தான் தெரிகிறது. இவர் கருத்துக்கு கருத்தெழுதியதிலும் யார் கருத்தெழுதினம் என்று சிரங்கு நோண்டுற வேலையைத்தான் செய்கிறார் அதிகம். ஏலவே மட்டுறுத்தினர் யாழ்பாடி இப்படி எழுத வேண்டாம் என்று அறிவுறுத்தியும் இவர்கள் கேட்பதில்லை. மோகனும் இதற்கு உடந்தையாக உள்ளாரா...??! :lol::rolleyes::unsure:

லக்கிலுக் நமக்கும் குருவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பல தடவைகள் சொல்லியும் சந்தேகம் பிடிச்ச ஜீவங்களின் சந்தேகத்தைக் கலைக்கிறது வேலை மிணக்கேடு என்பதால் ஏதோ உளறட்டும் என்று விட்டாச்சு.

பெரியாரின் அணுகுமுறைகள் சிலவற்றில் எமக்கு உடன்பாடில்லை. நவகால உலக ஒழுங்கிற்கு பெரியார் அவசியமில்லை என்பதும் உண்மை ஈழத்தைப் பொறுத்தவரை. பெரியார் ஈழத்தில் பெரிதும் அறிமுகப்படுத்தப்பட்ட நபரும் அல்ல...! அநேகருக்கு அவரைத் தெரியவே தெரியாது. :lol:

Share this post


Link to post
Share on other sites

இவர் கிருபனுக்கு இன்னும் சிலருக்கு குருவியோட முற்பிறவி பகை போல. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இவருக்கு குருவி போல யார் எழுதினாலும் அது குருவியாத்தான் தெரிகிறது. இவர் கருத்துக்கு கருத்தெழுதியதிலும் யார் கருத்தெழுதினம் என்று சிரங்கு நோண்டுற வேலையைத்தான் செய்கிறார் அதிகம். ஏலவே மட்டுறுத்தினர் யாழ்பாடி இப்படி எழுத வேண்டாம் என்று அறிவுறுத்தியும் இவர்கள் கேட்பதில்லை. மோகனும் இதற்கு உடந்தையாக உள்ளாரா...??! :lol::rolleyes::unsure:

லக்கிலுக் நமக்கும் குருவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பல தடவைகள் சொல்லியும் சந்தேகம் பிடிச்ச ஜீவங்களின் சந்தேகத்தைக் கலைக்கிறது வேலை மிணக்கேடு என்பதால் ஏதோ உளறட்டும் என்று விட்டாச்சு.

பெரியாரின் அணுகுமுறைகள் சிலவற்றில் எமக்கு உடன்பாடில்லை. நவகால உலக ஒழுங்கிற்கு பெரியார் அவசியமில்லை என்பதும் உண்மை ஈழத்தைப் பொறுத்தவரை. பெரியார் ஈழத்தில் பெரிதும் அறிமுகப்படுத்தப்பட்ட நபரும் அல்ல...! அநேகருக்கு அவரைத் தெரியவே தெரியாது. :lol:

:lol::lol: :P :P :lol:

Share this post


Link to post
Share on other sites

தாரகி முதல் சிவத்தம்பி வரை தமிழ்த் தேசியத்தின் ஊற்றுவாயை அறிந்த அனைவரும் பெரியாரைப்பற்றி எழுதி விட்டனர்.

தமக்குப் பெரியாரைத் தெரியாது போனால் அது உலகத்துக்கே தெரியாது என்பவர்களை நினத்துச் சிரிப்பதா அழுவதா?

இவ்வாறான அறிவுபூர்வமான கருத்துக்களைச் சொல்லக் கூடிய எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் யார் என்று களத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

லக்கி நாய் குரைத்து நிலவுக்கு எதாவது நடந்திருக்கா?முடின்ச்சா இரண்டு கல்லை எடுத்து எறிந்தீர்கள் என்றால் ஊளையிடும் ....

Share this post


Link to post
Share on other sites

தாரகி முதல் சிவத்தம்பி வரை தமிழ்த் தேசியத்தின் ஊற்றுவாயை அறிந்த அனைவரும் பெரியாரைப்பற்றி எழுதி விட்டனர்.

தமக்குப் பெரியாரைத் தெரியாது போனால் அது உலகத்துக்கே தெரியாது என்பவர்களை நினத்துச் சிரிப்பதா அழுவதா?

இவ்வாறான அறிவுபூர்வமான கருத்துக்களைச் சொல்லக் கூடிய எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் யார் என்று களத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

லக்கி நாய் குரைத்து நிலவுக்கு எதாவது நடந்திருக்கா?முடின்ச்சா இரண்டு கல்லை எடுத்து எறிந்தீர்கள் என்றால் ஊளையிடும் ....

பேராசிரியர் சிவத்தம்பி பெரியாரைக் குறிப்புகளில் குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் ஈழத்தில் பெரியாரை உதாரணம் காட்டி தமிழ் தேசியம் எழவில்லை. பெரியாருக்கு ஈழத்தில் சிலையும் இல்லை பெரியாருக்காக சிலை உடைப்பும் இல்லை. பெரியார் பற்றி எங்கும் போதிப்பதும் கிடையாது.

தமிழ் தேசியம் கன்னடனால் பிறப்பிக்கப்பட்டது என்பது சுத்த சுத்துமாத்து. கால இடைவெளியில் கன்னடன் தனது தென்னிந்திய செல்வாக்குக்காக கையில் எடுத்ததே தமிழ் தேசியம். அது இறுதியில் ஐக்கிய இந்தியாவுக்குள் தமிழ்நாடு மாநிலத்தை உருவாக்கியதோடு வெற்று இந்தி எதிர்ப்போடு முடங்கிப் போனது. இறுதியில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்ததோடு சரிந்து போனது. இன்று சிலை வைப்புக்கும் உடைப்புக்கும் மட்டுமே பெரியார்..!

பெரியார் விதைத்த பிராமணிய எதிர்ப்பு என்ற சாதி வெறி இன்று வெகுவாக இல்லை. ஒரு சில கறுப்பு அங்கி மனிதர்கள் சிலைகளை உடைக்கலாம். ஆனால் மக்களின் மத உரிமைகளை அழிக்க முடியாது. பெரியாரை விட பாரதி போன்றவர்களே சாதி ஒழிப்புக்கு அதிகம் பங்காற்றியுள்ளனர். பாரதிக்கு ஈழத்தில் சிலை உண்டு. வள்ளுவனுக்கு உண்டு. ஒளவைக்கிழவிக்கு உண்டு. காந்திக்கு உண்டு. எம் ஜியாருக்கு உண்டு. ஆனால் பெரியார் என்ற சந்தர்ப்பவாதிக்கு சிலை வைக்க ஈழத்தமிழன் ஒன்றும் முட்டாள் இல்லை..!

இங்கு சில மெத்தப்படிச்ச ஜென்மங்கள் உளறுவதையே கருமமாகக் கொண்டுள்ளன. அவற்றிற்கு யதார்த்த உலகம் என்ன என்று தெரியுமோ தெரியாது. எந்தக் குகைக்குள் வாழ்கிறார்களோ..தெரியாது..! :lol:

Share this post


Link to post
Share on other sites

பெரியாரை விட பாரதி போன்றவர்கள் சாதி ஒழிப்பிற்கு அதிகம் பங்காற்றி உள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால் பாரதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்து புரட்சி செய்தார்.

பெரியாரை விட பாரதி சற்று அதிகமாகவே பார்ப்பனர்களை கண்டித்தார். அதனால் பார்ப்பனர்கள் பாரதியை ஒதுக்கி வைத்து பட்டினி போட்டு சாகடித்தனர்.

ஆனால் இதற்காக ஈழத்தில் பாரதிக்கு சிலை வைக்கப்படவில்லை.

இந்து வேளாள அரசியல் தலைவர்கள் ஈழத்தில் "பகுத்தறிவுச் சிந்தனைகள்" வந்து விடாது பார்த்துக் கொண்டனர். பாரதியும் ஈழத்தில் பராசக்தி பக்தனாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டான்.

திருவள்ளவருக்கும் நீறு பூசித்தான் சிலை வைத்தனர்.

ஈழத்தமிழினத்தின் முன்னைய இந்து வேளாள தலைமைகள் மக்களை ஏமாற்றி வைத்திருந்தனர்.

புதிய தலைமையின் வழிகாட்டலில் இன்று மக்கள் தெளிவு பெறத் தொடங்கி இருக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

சாதி ஒழிப்பிற்கும் சமூக விடுதலைக்கும் பெரியார் போராடிய அளவுக்கு பாரதி உட்பட எவரும் போராடவில்லை.

காந்தியடிகள், பாரதி போன்றவர்கள் புண்ணுக்கு மருந்து போட்டார்கள் ஆனால் பெரியார் செய்ததோ அறுவைச் சிகிச்சை.

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்திலும் எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின் பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும். இலங்கையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட ஒரு வரவேற்பே இருந்தது. ஆனால் இருந்தது என்பது உண்மை. 1920,30 களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டி என்னும் கிராமத்தில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார். இத்தகைய ஒரு குழுமம் கிழக்கிலங்கையிலுமிருந்தது. பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கிய எஸ்.டி. சிவநாயகம் மட்டக்களப்பில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார். அவர் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக செ. இராசதுரை (பின்னர் பாராளுமன்ற அங்கத்தினர்/அமைச்சர்), எஸ்.இ. கமலநாதன் ஆகியோர் விளங்கினர். அரசியல் நிலைப்பட்ட தமிழின உணர்வு வளர்ச்சியில் 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கிய ஆர்வம் காட்டிற்று. இந்தக் கட்சியினர் தங்கள் கட்சிப் பிரசாரங்களில் அண்ணாதுரை, திமுகவின் கருத்துப் பரப்புகைக்குப் பயன்படுத்திய சொற்பொழிவு முறைமையைப் பயன்படுத்தினர். இவர்களும் பாசறை, தளபதி போன்ற பதங்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய பின்பற்றுகைகளுக்கு மேலே சென்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், திராவிட இயக்கத்தினருடன் நேரடித் தொடர்புகளும் ஏற்படுத்தினர். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அ. அமிர்தலிங்கமும், பெரியாரையும் அண்ணாதுரை அவர்களையும் சந்தித்தனர் (தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர் 1974).

இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வழிசாவழித் தமிழரிடையே, குறிப்பாக 1950 களில் திராவிட இயக்கம் முக்கியமான அரசியற் செல்வாக்குக் கொண்டிருந்தது. இச்செல்வாக்கு இலங்கையின் மலையகத்தில் (Hill Country of Sri Lanka) உள்ள தோட்டத் தொழிலாளரிடையே பரவத் தொடங்கியதும் அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இளஞ்செழியனுக்குள்ள இடம் முக்கியமானதாகும்.

இந்த வரலாற்றுண்மையை அண்மையில் வெளிவந்த பெ.முத்துலிங்கத்தின் 'எழுதாத வரலாறு' (கொழும்பு 1997) என்னும் நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.

பெரியாரின் மறைவின் பின்னரே இது பெரிதும் உணரப்படலாயிற்று (1973). பெரியார் பற்றிய இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசியத்தினைத் தமது அரசியல் நிலைபாடாகக் கொள்கின்றன. இலங்கையில் நடைபெறும் ஆயுதந்தாங்கிய ஈழத்துத் தமிழர் விடுதலை இயக்கத்தின் ஊடாட்டம், இந்தச் சிந்தனை உருவாக்கத்திற் கணிசமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறலாம்.

இன்று முன்னணியில் நிற்கும் புலமை முக்கியத்துவமுள்ள பல இளைஞர்கள் இந்தக் கண்ணோட்டத்திற் பிராமணியத்தின் கடுமையான விமர்சகர்களாக உள்ளனர் என்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஒரு சமூகவியல் உண்மையாகும். இவர்கள் பற்றி இவ்வாய்வின் தொடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவர்களின் இந்த எழுத்துச் சிந்தனைப் போக்குகள், கடந்த சில வருடங்களாகக் காணப்படாத முறையில் தமிழ்நாட்டின் சிந்தனை வெளிப்பாடுகளில் இருதுருவத் தன்மையைக் காட்டுகின்றன.

இத்தகைய ஒரு புலமை நிலை தோன்றுவதற்கான இன்னுமோர் அரசியற் பின்புலத்தையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

முன்னர் பொதுவுடைமைக் கட்சிகளோடு தொடர்புகொண்டிருந்த, அவற்றிலிருந்து பிரிந்து சென்றவர்களே பெரியாரின் மீள்கண்டுபிடிப்பில் முன்னுக்கு நிற்கின்றனர்.

ஆனால், இந்த மீள்கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய அமிசம் உள்ளது. இந்தப் பெரியாரிய மீட்பு, செயற்பாடு சார்ந்த ஓர் அரசியல் நடைமுறையாக மாறாது, பண்பாட்டுத் துறை நடவடிக்கையாகவே உள்ளது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.

பெரியார் பற்றிய இந்த மீள்கண்டுபிடிப்பு, சமகாலச் சர்வதேசச் சிந்தனையில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பெண் நிலைவாதத்தைத் தமிழ்ச் சமூகநிலைப்படுத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. குடும்பம், கற்பு பற்றிய பெரியாரின் சிந்தனைகள் இன்று சர்வதேசியப் பெண்நிலை வாதத்திலே விதந்து போற்றப்படுபவையாகவுள்ளன (நட்டாலி பிக்கெறிங்).

http://www.noolaham.net/library/books/01/59/59.htm

ஈழநூல் 059

நூல் திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு

ஆசிரியர்: கா. சிவத்தம்பி

மின்னூலாக்கம் இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • உடையார், செயப்பிரகாசம் - ஜெயமோகன் லடாய் போன மாதம் நடந்தது. பல பதிவுகள் ஜெயமோகன் தளத்திலும் முகநூலிலும் படித்திருந்தேன். செயப்பிரகாசம் சார்பில் சட்டநடவடிக்கை (வக்கீல் நோட்டீஸ்) அனுப்ப, பதிலுக்கு ஜெயமோகன் செயப்பிரகாசம் மீது வழக்குப்போட்டிருக்கின்றார். அதை மீளப்பெறுமாறு பலர் கேட்டிருக்கின்றார்கள் என்ற மட்டில் உள்ளது. இதையெல்லாம் யாழில் இணைத்து பக்கங்களை வீணாக்க விரும்பாததால், அதைவிட பலருக்கு இவர்கள் இருவரையும் தெரியாததால், ஒட்டவில்லை.   ஜெயமோகன் செயப்பிரகாசம் பற்றி எழுதிய சில வரிகள்..  இலக்கியச்சூழலுக்கு வெளியே உள்ள அரசியல்வாதிகள்,சாதிச்சங்க ஆட்கள் இலக்கியவாதிகளை மிரட்டுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு ,முதலாளித்துவ எதிர்ப்பு ,அமெரிக்க எதிர்ப்பு  ,ஒட்டுமொத்தமாக அரசுஎதிர்ப்பு. ஆனால் அரசின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார்.   இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவுறுத்த விரும்புகிறேன். ஒன்று நான் மிகமிக கடுமையாக கண்டிப்பது இந்த கண்டனத்தில் பா.செயப்பிரகாசம் அவர்கள் ஒரு பொருட்படுத்தத் தக்க சிறுகதையாசிரியர் என்று சந்தடி சாக்கில் சொல்லி வைத்திருப்பதைத்தான். அதை இதில் கையெழுத்திட்டிருக்கும் எழுத்தாளர்கள் எவரேனும் ஏற்பார்கள் என்றால் அவர்கள் மேற்கொண்டு இலக்கியம் பேசாமலிருப்பதே ந
  • ஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று  நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கியது. நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பிரிட்டன் முனைந்த போதும் ஜேர்மனி முந்திக்கொண்டது.   தெற்கு பால்டிக் பிரதேசத்தை பலப்படுத்தியாகிவிட்டது என்னும் நிலையில் அடுத்து ஃபின்லாந்து மீது தனது கவனத்தை திருப்பியது சோவியத்யூனியன். ரஷியப் பேரரசின் ஒரு பகுதியாக நீடித்த ஃபின்லாந்து அக்ரோபர் புரட்சிக்கு பிறகே சுதந்திரத்தை அனுபவித்தது என்றாலும் அச்சமயம் கலவரமும் கலகமும் ஃபின்லாந்தை மாறி மாறி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஜனநாயக நாடாக இருந்த அந்த தேசத்தை குட்டிச்சுவராக்கியவர் Baron Mannerheim. ஸார்  மன்னரிடம் (ரஷ்ய முடியாட்சியில் அதன் மன்னரை Tsar  என அழைப்பது வழக்கம்.) ஜெனரலாக இருந்தவர். இவர் வருகைக்கு பிறகு, ஃபின்லாந்து சோவியத் எதிர்ப்புக்கான அடித்தளமாக மாறியது. யார் சோவியத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, யார் ஸ்ராலினுக்கு எதிராக சதி செய்ய வேண்டுமானாலும் சரி, இங்கே இடம் உண்டு. வரவேற்பு உண்டு. பிரிட்டனின் மேற்பார்வையில் இங்கு வரிசையாக பல பாதுகாப்பு கோட்டைகள் அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி தன் பங்கிற்கு விமானத்தளங்களை அமைத்துக் கொடுத்தது. மொத்தம் 2000 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான அளவுக்குப் பெரிய தளம் அது. ஃபின்லாந்திடம் அப்போது இருந்ததோ வெறும் 150 விமானங்கள் மட்டுமே. இந்த 150 விமானங்களுக்கு இத்தனை பெரிய தளம் அங்கே அமைக்கப்பட்டதற்குக் காரணம் சோவியத்திற்கு எதிரான தளமாக  அதை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே.   பின்லாந்தின் எல்லைகளை குறித்த சோவியத்தின் கவலை ஃபின்லாந்தை பலப்படுத்தவேண்டிய, தனது எல்லைகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் சோவியத்திற்கு இருந்தது. எதிரி தேசங்கள் வந்து கூடாரம் அமைத்து தாக்குதல் தொடுக்கும் வரை சும்மா இருப்பதற்கில்லை. போலந்து வரை வந்துவிட்ட நாசிகளால் ஃபின்லாந்தை ஆக்கிரமிக்க எத்தனை நாள் பிடிக்கும்? பிரிட்டனும் பிரான்ஸும் கூட ஜேர்மனி பக்கம் இருப்பது போல அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய அவசியம் சோவியத்திற்கு. பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தது சோவியத். ஃபின்லாந்துக்கு சோவியத்திடம் பெறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக, பொருளாதார உதவி. ஃபின்லாந்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட சிதைந்து போயிருந்தது. எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் சோவியத் உதவிக்கரம் நீட்டினால் பற்றிக்கொள்ளும். இரண்டாவது, Leningrad Murmansk ரயில்வே பாதையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி. வெளியுலகத்தோடு  தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஃபின்லாந்துக்கு இந்த ரயில் தடம் அவசியம். சோவியத்தின் உதவி இல்லாமல் இந்தப் பாதையைப் பயன்படுத்தமுடியாது. இந்த இரு உதவிகளையும் ஃபின்லாந்துக்கு அளித்து அவர்கள் ஒப்புதலுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாமா என்று யோசித்தது சோவியத். ஒக்ரோபர் 5, 1939 அன்று ஃபின்லாந்தை தொடர்பு கொண்டது சோவியத். உங்கள் பிரதிநிதி யாரையாவது அனுப்பி வையுங்கள். தொங்கலில் இருக்கும் சில விஷயங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். ஃபின்லாந்தின் எதிர்வினை விசித்திரமாக இருந்தது. உடனடியாக தனது எல்லையில் ராணுவத்தைக் குவித்தது. தலைநகரம் ஹெல்ஸின்கியில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் துரிதமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது. பங்கு சந்தையை இழுத்து மூடியது, கையோடு அமெரிக்காவையும் தொடர்பு கொண்டது. ஆபத்தில் இருக்கிறோம், உதவி தேவை. சோவியத்திற்கு புரியவில்லை. அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டோம்? ஏன் இந்த அநாவசிய பீதியும் குழப்பமும்? உட்கார்ந்து பேசலாம் என்று மட்டுமே சொன்னோம். பிறகு , புரியவைத்தார்கள். உங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து லெனின்கிராட் (தற்போதைய பெயர் சென்ற் பீற்றர்ஸ்பேர்க்) தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. அரசியல் குழப்படியும் பொருளாதாரக் குழப்படியும் அதிகம் இருக்கும் உங்கள் தேசத்தால் உங்கள் எல்லைகளை பாதுகாகமுடியாது. நீங்கள் அவ்வாறு தவறும் பட்சத்தில் உங்கள் எல்லைகள் எதிரிகளால் கைப்பற்றப்படும். இது சோவியத்தில் நலன்களுக்கு அச்சுறுத்தலானது. நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவொன்றுதான். லெனின்கிறராடில் இருந்து உங்கள் எல்லையை பின்னோக்கிக் கொண்டு செல்லுங்கள். கடல்புறத்தில் உள்ள சில சிறிய தீவுகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். பதிலுக்கு இதைவிட கூடுதல் நிலப்பரப்பை உங்களுக்கு வழங்குகிறோம். கூடுதல் என்றால் கிட்டத்தட்ட இரட்டிப்பு. தற்போதைய நிலபரப்பைப் போலவே வளமானதாக அந்தப் பிரதேசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறோம். இன்னொரு உதவியும் வேண்டும். லெனின்கிராடோடு இணைக்கும் Hangoe அல்லது வேறு ஏதேனும் ஒரு நுழைவாயிலை எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு கொடுங்கள். பாதுகாப்புக்காக கடல்படை தளத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆரம்பத்தில் அதற்கு இணங்குவதை போல் காட்டிக்கொண்டாலும்,  ஃபின்லாந்தின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளைத்தான் சோவியத் எழுப்பியுள்ளது என்று அரசாங்க அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் கஜன்டேர். பிறகுதான் பின்வாங்க ஆரம்பித்தது ஃபின்லாந்து. தருகிறோம் ஆனால் இப்போது இல்லை. முப்பது வருடம் ரொம்ப அதிகம். வேண்டுமானால் ஒரு சில ஆண்டுகள் போட்டுக்கொள்ளலாம். இரு மடங்கு பிரதேசம் போதாது. கூடுதல் பிரதேசம் தேவை. ஒரு மாதத்திற்கு இழுத்தடித்தார்கள். ஏதேதோ காரணங்கள் சொன்னார்கள். நியூயோர்க் ரைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. ஃபின்லாந்து சோவியத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள தயக்கம் காட்டுவதற்கு காரணம் அமெரிக்காவின் ராஜதந்திரம். சோவியத்தோடு சேராமல் ஃபின்லாந்திடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன. சோவியத்திற்கு புரிந்துவிட்டது. இனி ஃபின்லாந்து பயன்படாது. எதிரணியில் சிக்கிவிட்டது. சோவியத்தின் யூகம் சரிதான் என்பது நவம்பர் இறுதியில் தெளிவானது.   சோவியத் – பின்லாந்து யுத்தம் – Winter war   நவம்பர் 30,1939 அன்று சோவியத் படைகள் ஃபின்லாந்துக்குள் நுழைந்தன. ஃபின்லாந்து போர்பிரகடனம் செய்தது. பனிக்கால போர் (Winter war) என்று இந்த யுத்தம் அழைக்கபட்டது. இந்த யுத்தம் நடைபெற்ற போது வெப்பநிலை கிட்டத்தட்ட -45 பாகையாக இருந்தது.    கையோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவியையும் கோரியது. ஐரோப்பிய நாடுகள் ஃபின்லாந்திற்கு ஆதரவு கொடுத்தன. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சோவியத் செய்தது  தவறுதான். என்ன இருந்தாலும் சிறிய நாடான ஃபின்லாந்தின் மீது  சோவியத் போர் தொடுத்தது முறைகேடான செயல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலை. சோவியத்தால் ஐரோப்பா போர்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்நிய நாடுகள் மீது தலையிடுவதே அதன் வேலையாகப் போய்விட்டது. லீக் ஒஃவ் நேஷன்ஸ் உடனடியாக சோவியத்தை விலக்கிவைத்தது. ஆச்சரியம் என்று தான் சொல்லவண்டும். செக்கோஸ்லவாக்கியா, போலந்து என்று ஹிட்லர் வரிசையாக ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து வந்த போது சும்மா இருந்த லீக், சோவியத் என்றதும் உடனடி நடவடிக்கை எடுத்தது  விநோதம் தான். ஃபின்லாந்து மீதான சோவியத்தின் தாக்குதல் குறித்து பல வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளர்கள். சில கருத்துக்கள் பின்லாந்து மீது சோவியத் ஆக்கிரமிப்பு என்றும், வேறு சில கருத்துக்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகையில் சோவியத்யூனியன் தனது எல்லைப்பாதுகாப்பிற்காக எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுகின்றன. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மூன்றும் பெரும்குரல் எழுப்பின. ஐயோ நாம் தான் அப்போதே சொன்னோமே. நாம் பயப்படவேண்டியது ஹிட்லரை பார்த்து அல்ல. ஸ்டாலினை பாரத்துதான். எப்படி நம் கண்முன்பாகவே ஃபின்லாந்தை ஆக்கிரமிக்கிறார்கள் பாருங்கள். கம்யூனிசம் எத்தனை ஆபத்தான சித்தாந்தம் என்று படித்து படித்துச் சொன்னோமே, பார்த்தீர்களா? முதலாளிகள் முதலாளித்துவம் என்று நம்மை திட்டிக்கொண்டிருந்தார்களே, பாருங்கள். சோவியத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இப்படித்தான் இருக்கும். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் சோவியத்தை வீழ்த்துவோம். முதலாளித்துவத்தை செழுமைப்படுத்துவோம். சோவியத்தை பொறுத்தவரை அது லெனின்கிராட்டை பாதுகாப்பதற்கான போர். ஆகவே தயங்காமல் முன்னேறினார்கள். முதல் கட்டமாக ஃபின்லாந்தின் ஆர்டிக் துறைமுகம் கைப்பற்றபட்டது. லெனின்கிராட்டை நெருங்குவதற்கான மார்க்கமாக அது அமைந்தது என்பதே காரணம். இதற்கு இரு வாரங்கள் பிடித்தன. இரண்டாம் கட்ட போர், ஆமை வேகத்தில் நடந்தது. கடும் குளிர் தொடங்கியிருந்தது. மூன்றவாவது கட்டம், வான்வழித் தாக்குதல். ஃபின்லாந்தின் ராணுவத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு தாக்கியழிக்கபட்டன. ஆயதத் தொழிற்சாலைகள் ரயில்ப் பாதைகள், துறைமுகங்கள், விமானத்தளங்கள் ஆகியவை மீது குண்டுகள் வீசப்பட்டன. நான்காம் கட்ட போர் ஒரு மாத காலும் நீடித்தது. நோக்கம் Mannerheim Line பகுதியை உடைத்து முன்னேறுவது. ஊடுவல் கடினமானது என்று கருதபட்ட இந்தப் பகுதியில் வரிசை வரிசையாக பாதுகாப்பு கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. இதை அகற்ற முடிவு செய்த சோவியத், பலமான பீரங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது. பாதுகாப்பு அரண்களைத்தான் முதலில் தாக்கினார்கள். அரண்கள் அமைக்கப்படிருந்த அடித்தளம் தகர்க்கப்பட்டது, பிறகு கோட்டை விழுந்தது. மார்ச் 12, 1940 அன்று மாஸ்கோவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஃபின்லாந்துக்கும் சோவியத்திற்கும் இடையில் தூதுவர் போல செயற்பட முடியும். என்று கேட்கப்பட்ட போது பிரிட்டன் மறுத்துவிட்டது. பிரான்ஸுக்கும் விருப்பமில்லை. சோவியத் ஃபின்லாந்தை முடியடித்ததையும், கடினமான பாதுகாப்பு அரண்களை தகர்த்ததையும், இறுதியில் சோவியத்திடம் ஃபின்லாந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதையும் இந்த இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ ஏன் சோவியத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று சண்டைக்கு வந்தார் டலாடியர். என்னையும் சாம்பரலைனையும் விட ஸ்டாலின் பலம் வாய்ந்தவரா? ஃபின்லாந்தை காரணமாக வைத்து சோவியத் மீது போர் தொடுக்கவேண்டும் என்று இந்த இரு நாடுகளும் கணக்கு போட்டு வைத்திருந்தன. ஆனால், அதற்குள் சோவியத்  போரை முடித்து கொண்டுவிட்டது. சோவித்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையில் இணைப்பாக செயல்பட ஸ்வீடன் ஒப்புக்கொண்டபோது பிரிட்டனும் பிரான்ஸும் முகத்தை சுளித்துக்கொண்டன. சோவியத் Mannerheim Line பகுதியை இணைத்துக்கொண்டது. ஹாங்கோ கைப்பற்றப்பட்டது. அதே சமயம், Petsamo என்னும் பகுதியையும் அதிலுள்ள நிக்கல் சுரங்கதையும் ஃபின்லாந்திடமே திருப்பித் தந்தது. நவம்பர் 30, 1939 தொடக்கிய போர் மார்ச்13, 1940 ல் முடிவடைந்தது. 20, மார்ச் 1940 மாதம் பிரான்ஸ் பிரதமர் டலாடியர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஃபின்லாந்தை காப்பாற்ற முடியாததால் எழுந்த கடும் விமர்சனங்களால் எடுக்கப்பட்ட முடிவு. பின்னர் பவ்ல் ரெனாய்ட் (Paul Reynaud) பொறுப்பேற்றுக்கொண்டார். சோவியத் லெனின்கிராட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகளை மாத்திரம் தேர்வு செய்து அவற்றை மட்டும் இணைத்துக்கொண்டது. இது ஆக்கிரமிப்பு போர் அல்ல, பாதுகாப்பு போர் தான் என்பதை அழுத்தமான பதிவு செய்தது. ஸ்வீடனின் ஆதரவு இதில் சோவியத்திற்கு கிடைக்காமல் விட்டிருந்தால் பிரிட்டனும் பிரான்ஸும் சோவியத்திற்கு எதிராக போரை தொடுக்க கூடி நிலைமை இருந்தது. போலந்து பிறகு ஃபின்லாந்து. சோவியத்தின் தொடர் வெற்றி பிரிட்டனையும் பிரா்னஸையும் ஆட்டம் காணச் செய்தது. சோவியத்யூனியனுக்கு இத்தனை பலமா? பொதுவுடமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தொழிற்சங்கம் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி. ஃபின்லாந்து கோட்டையை தகர்த்து தவிடுபொடியாக்கும் படியான நவீன பீரங்கிகளை இவர்கள் எப்படிப்பெற்றார்கள். ஐயோ, நாம் நினைத்ததை விட அதிக பலமுள்ள தேசமாக அல்லவா இருக்கிறது சோவியத்யூனியன்? இத்தனை அபாகரமானவரா ஸ்ராலின்?  இது நமக்கு அச்சுறுத்தல் தான். சோவியத்தின் வெற்றி ரூமேனியாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு வேளை நம்மிடம் திரும்புவார்களோ? ரூமேனியாவின் அச்சத்திற்கு காரணம் பெஸ்ஸராபியா (Bessarabia) முதல் உலகப் போர் முடிவில், அதாவது 1918 ல், சோவியத்யூனியனிடம் இருந்து பெஸ்ஸராபியாவை கைப்பற்றியிருந்தது ரூமேனியா. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வெற்றி பெற்று, புதிய சோவியத் அரசை கட்டுமானம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. இனியொரு போர் வேண்டாம் என்று போல்ஷ்விக் கட்சி முடிவு செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூமேனியா பெஸ்ஸராபியாவை ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டது. சோவியத்தின் பலம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுவிட்டதால், தன் மீது சோவியத் போர் தொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தது ரூமேனியா. சோவியத் போர் தொடுக்கவில்லை. ஆனால் பேசியது. நீங்கள் செய்தது தவறு. திருப்பிக்கொடுத்துவிடுங்கள். ரஷ்ய கப்பல்கள் Danube பகுதிக்குள் நுழைந்தன.  போர் எதுவும் தேவைப்படவில்லை. ரூமேனியா அடிபணிந்தது. பார்டிக் முதல் கருங்கடல் வரை Hangoe   முதல் Danube வரை எல்லைகளைப் பலப்படுத்தி விட்டாயிற்று. ஸ்ராலின் சற்றே சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். ஹிட்லர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேற்குலக நாடுகளிடம் இருந்து எந்தவித தொந்தரவும் இதுவரை இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அவர்கள் உதவிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே அபாயம் சோவியத்யூனியன். போலந்து, ஃபின்லாந்து என்று அடுத்தடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய எச்சரிக்கை செய்தியை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டியுள்ளது. ஆரம்பிக்கலாம்.   நோர்வே மீது ஹிட்லரின் பார்வை நோர்வேயை தேர்வு செய்திருந்தார் ஹிட்லர். ஜேர்மனிக்கு பிரிட்டன் வைத்திருந்த செக்மேட் நோர்வே. முதல் உலகப்போர் சமயத்தில் வைத்த செக்மேட் அது. ஜேர்மனியின் தொழில் உற்பத்திக்கு(எனவே ஆயுத உற்பத்திக்கும்) இரும்பு இறக்குமதி அவசியம். ஜேர்மனி தனது இரும்பு தேவைகளுக்கு நோர்வே துறைமுகத்தைத்தான் சார்ந்திருந்தது. வடக்கு ஸ்வீடனில் உள்ள சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்படும் இரும்பு நோர்வே துறைமுகம் வழியாக ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். முதல் உலகப்போருக்கு பிறகு ஜேர்மனியின் இரும்பு போக்குவரதைக் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டன் தனது ராணுவத்தளத்தை நோர்வேயில் அமைந்திருந்தது. நோர்விக் என்னும் துறைமுகத்திற்கு அருகில். ஒக்ரோபர் 1939 ல் இது குறித்து ஹிட்லரிடம் தெரிவிக்கபட்டது நோர்வே நமக்கு முக்கியம். ஒரு வேளை பிரிட்டன் கைப்பற்றிவிட்டால் நாம் முடங்கிவிடுவோம். ஆயுதத் தொழிற்சாலை முடங்கிப்போகும். பிரிட்டனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் போர்த் திட்டத்தில்  நோர்வே இருக்கட்டும். அதெற்கென்ன ஆகட்டும் என்றார் ஹிட்லர். திட்டத்தை விரிவாக்குபவர்களை அவர் எப்போதும் கடிந்து கொண்டதில்லை. பிரிட்டனும் நோர்வே குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் போர் கபினெட்டில் அப்போது புதிதாக இணைந்து கொண்டிருந்த சேர்ச்சில், நோர்வே மீது தீவிர ஆர்வம் செலுத்துபவராக இருந்தார். சாம்பர்லைனிடம் விரிவாக பேசினார். நோர்வே நமக்கு அவசியம். நோர்வே துறைமுகத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிச்சயம் ஜேர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். இதையே சாக்காக வைத்து நோர்வேயை நாம் கைப்பற்றிவிடலாம். என்ன சொல்கின்றீர்கள். பின்னால் இது தான் நடந்தது என்றாலும் அப்போதைக்கு சாம்பர்லைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தயங்கினார். ஹிட்லர் இன்னொரு காரியம் செய்தார். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் அமைதி ஒப்பந்தக் கோரிக்கை அனுப்பிப்பார்த்தார். ஒக்ரோபர் 10 ம் திகதி பிரிட்டன் ஜேர்மனியின் அமைதிக் கோரிக்கையை நிராகரித்தது. இரு தினங்களை கழித்து பிரான்ஸும் அதையே செய்தது. சரி போ என்று விட்டுவிட்டார் ஹிட்லர். திட்டத்ததை முன்னெடுத்து செல்வதில் அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. டிசம்பர் 19, 1939 ல் இருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு ராணுவ டிவிசன் போதும் முடித்துவிடலாம் என்று ஆரம்பத்தில் திட்டமிட்டனர். பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியம் என்று கணித்தனர். ஒன்று, அச்சமூட்டுவது. எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்படவேண்டும். நோர்வேயை ஆச்சரியத்திலும் ரத்தத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கடிக்கவேண்டும். அங்கே ஏதோ சலசலப்பு கேட்கிறதே என்று சாம்பரலைன் திரும்பி பார்ப்பதற்குள் இந்த பிரதேசம் ஜேர்மனிக்கு சொந்தமானது என்னும் பலகையை மாட்டி நம் ஆட்களை நிறுத்திவிடவேண்டும். இரண்டாவது அம்சம், ராணுவ பலம். நவீன அதிவேக ஜேர்மன் போர்க்கப்பல்களை இந்த தாக்குதலின் போது நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கேற்றாற்போல விரிவாகத் திட்டமிடவேண்டும். துரிதமாக தாக்குதலை ஆரம்பித்து ஒவ்வொரு பிரதேசமாக கைப்பற்றிக்கொண்டே செல்லவேண்டும். சுதாகரிப்பதற்கு அவகாசம் கொடுத்துவிடக்கூடாது. போர்கப்பல்கள் மட்டுல்லாமல், விமானப்படை, ரைஃபிள் பிரிகேட், காலாட்படை அனைத்தும் தயாராகவேண்டும்.  தலைநகரம் ஒஸ்லோவும் அருகிலுள்ள நகரங்களும் பேர்கன், நார்விக், ற்ரொம்ஸோ, ற்ரொன்ட்ஹைம், ஸ்ரவாங்கர். (Oslo, Bergen, Narvik, Tromsö, Trondheim, Stavanger) திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஜெனரல் von Falkenhorst என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் முதல் உலகப்போரின்போது ஃபின்லாந்தில் பணியாற்றியவர். பிரதேச முன் அனுபவம் கொண்டவர். திட்டம் முழுமையடைந்ததும் அதற்கு ஒரு செல்லப்பெயர் சூட்டப்பட்டது. – Operation Weserübung. மார்ச் முதலாம் திகதி ஹிட்லர் திட்டத்தை கொஞ்சம் நீடித்தார். எப்படியும் பெரும்படையுடன் போகப்போகிறோம். நோர்வேயுடன் சேர்ந்து கூடவே டென்மார்க்கையும் கைப்பற்றிவிடலாமே!  இப்போது விட்டால் அதற்கென்று தனியே ஒரு நடை போகவேண்டியிருக்கும். இரண்டையும் முடித்து விட்டு வந்தால் ஒரு வேலை தீர்ந்தது. என்ன சொல்கின்றீர்கள்? டென்மார்க் முக்கியமான பிரதேசம் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிய நாடு. ஆனால் ஜேர்மனியின் எல்லையோடு சேர்த்து ஒட்டிக்கொண்டுள்ள நாடு. சோவியத் அதன் எல்லைகளை காத்துக்கொண்டதை போல் நாங்களும் எங்கள் எல்லைகளை காத்துக்கொள்ள வேண்டாமா? நாளையே டென்மார்க்கை நுழைவாயிலாகக் கொண்டு சோவியத்தோ பிரிட்டனோ தாக்காது என்று என்ன நிச்சயம்?  அத்துடன் நோர்வே மீதான தாக்குதலுக்கு டென்மார்க் பின்தளமாக பாவிக்க வேண்டிய அவசியம் உண்டு. மற்றொரு பக்கம், ஜேர்மனி கைப்பற்றுவதற்குள் நாம் நோர்வேயைச் சுற்றி வளைத்து விட வேண்டும் என்னும் நோக்கில் வேகவேகமாக பாய்ந்து முன்னேறியது பிரிட்டன். போரில் யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்து இருந்த நோர்வேயின் நடுநிலைத் தன்மையை முதலில் குலைத்தது பிரிட்டன் தான். பிரிட்டனின் அத்துமீறல் ஹிட்லரை திருப்திப்படுத்தியது. நாளை யாரும் ஜேர்மனியை குறைகூற முடியாது. அப்படி சொல்வதாக இருந்தாலும் பிரிட்டனைத் தான் முதல் ஆக்கிரமிப்பாளர் என்று அழைக்கவேண்டியிருக்கும். பிரிட்டன் கடற்படை தயாரானது, ஏப்ரல் 8ம் திகதி நோர்வேக்குள் பிரிட்டன் காலடி எடுத்து வைத்தது. ஜேர்மனி வரும் என்று தெரியும். நோர்வேயை கைப்பற்றும் என்றும் தெரியும். அப்படி நடக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டன் திட்டமிடவில்லை. வீரர்களும் குழம்பி நின்றனர், ·        பிரிட்டன் வருவதை நோர்வே விரும்பவில்லை, ஜேர்மனி விரும்பவில்லை. எதிர்க்கிறார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? ·        ஜேர்மனியை எதிர்த்து போராடவேண்டுமா அல்லது நோர்வேயை எதிர்த்தா? ·        சுரங்கங்களை நாம் என்ன செய்யவேண்டும்? அவற்றை கைப்பற்றுவது மட்டும் தான் நம்முடைய பசியா அல்லது நோர்வேயை பாதுகாக்க வேண்டுமா?   பிரிட்டன் குழம்பி தவித்த வேளையில் ஜேர்மனி ஏப்ரல் 9, 1940 அதிகாலை வேளை டென்மார்க்கை தாக்கியது. இது இருமுனை தாக்குதல். ஒரு பக்கம், ஜேர்மானிய தூதர் Renthe Fink  டென்மார்க்கில் அயல் துறை அமைச்சரிடம் பேசிக்கொண்டிந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் உங்களைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். உங்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஜேர்மனி முடிவு செய்துள்ளது. எங்கள் படைகள் வந்துகொண்டிருக்கின்றன.(அவர் பேசிக்கொண்டிருந்தபோது, படைகள் உள்ளே நுழைந்துவிட்டன.) எதிர்ப்பு காட்டவேண்டாம். அநாவசியமாக சங்கடப்படவேண்டாம். சரணடைந்துவிடுங்கள். மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவிக்க மறுத்தால், உங்கள் தலைநகரம் கோப்பன்ஹேகன் மீது குண்டுகள் வீசப்படும். வேறு வழி தெரியவில்லை. ஏப்ரல் 9, 1940 அன்றே மிக குறுகிய நேரத்தில் டென்மார்க் சரணடைந்தது. சண்டை சில மணி நேரங்களே நடைபெற்றதால் இழப்புகளும் மிக குறைவாகவே இருந்தது.   நோர்வே யுத்தம். ஏப்ரல் 8,1940 ல் நோர்வே தாக்குதல் ஆரம்பித்திருந்தது. வான் வழி, தரை வழி, கடல் வழி மூன்றிலும் தாக்குதல் கொடுத்தது ஜேர்மனி. இரண்டு மாதங்கள் நீடித்த இந்த யுத்தம், ஜுன் 10, 1940 ல் முடிவடைந்தது. நேச நாடுகளின் ஆதரவையும் தாண்டி ஜேர்மனி நோர்வேயை முறியடித்து ஆக்கிரமித்தது. டென்மார்க்கைப் போல் அல்லாமல், நோர்வே எதிர்ப்பு யுத்தத்தை இறுதிவரை நடத்திய பிறகே சரணடைந்தது. வடக்கு பகுதியில் நார்விக் துறைமுகத்திற்காக மிக கடுமையான யுத்தம் நடைபெற்றது. நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ராணுவத்தின் கூட்டு அணி நார்விக் துறைமுகத்திற்காக கடும் சண்டையிட்டது. Battle of Narvik என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த யுத்தம் பல கட்டங்களாக நடைபெற்றது. மே 28 ம் திகதி, ஜேர்மனியை முறியடிக்கவும் செய்தது. ஆனால் ஜுன் 9 ம் திகதி ஜேர்மனி நார்விக்கை மீண்டும் கைப்பற்றியது. இத்துடன் முடிந்து விடவில்லை. ஸ்வீடனையும் தொட்டுப் பார்த்தது ஜேர்மனி. நார்வே, டென்மார்க் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளை கைப்பற்றிய பிறகு ஸ்வீடனையும் சுற்றி வளைத்தது. ஸ்வீடன் அவர்களுக்கு தேவையில்லை. தேவை ராணுவத் தளபாடங்களையும் துருப்புக்களையும் ஸ்வீடன் வழியாகக் கொண்டு செல்வதற்கு அனுமதி மட்டுமே. ஸ்வீடன் நடுநிலை வகித்த நாடு என்பதால் ராணுவ வழிமுறைகள் பிரயோகிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஜுன் 18, 1940 ல் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டார்கள்.   பிரிட்டனில் அரசியல் குழப்பம் மே 7 மற்றும் மே 8,1940 ல் பிரிட்டன் கொமன்ஸ் சபையில் சூடான விவாதங்கள் நடைபெற்றன. ஆரம்பித்து வைத்தவர் சேர் ரோஜர் கீஸ். அட்மிரல். (Sir Roger Keyes) நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. ராணுவச் சீருடையை நான் இங்கே அணிந்து வந்ததன் காரணம் என் சக ராணுவத்தின் கவலையை  இங்கே தெரியப்படுத்த தான். என் நண்பர்கள் அனைவரும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். கடல்படையை குறை சொல்லமுடியாது. நாங்கள் முழு பலத்துடன் தான் இருக்கிறோம். பிரச்சனை, தலைமையில் தான்.   பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகல் – புதிய பிரதமராக சேர்ச்சில் சாம்பர்லைன் மீது பரவலாக அதிருப்தி பரவியிருந்ததை அனைவரும் அறிவர் என்றாலும் முதல் முதலாக அதை அழுத்தமாக பதிவு செய்தவர் ரோஜர் கீஸ் தான். இவர் அமர்ந்ததும், சாம்பர்லைன் கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) சேர்ந்த லியோ அமரி (Leo Amery) எழுந்தார். எனக்கு இந்த ஆட்சியில் சிறிதளவும் திருப்தியில்லை. போர் விவகாரங்களை நம் பிரதம மந்திரி நாம் எதிர்பார்த்தவாறு கையாளவில்லை. மிகவும் வருத்தமளிக்கக்கூடிய செயல் இது. புதிய தேசிய அணி ஒன்று உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், முதல் உலகப் போரில் பிரதமர் லாயின் ஜோர்ஜ்க்கு கீழ் ராணுவ கபினெட் ஒன்று செயற்பட்டு வந்ததைப் போல் இப்போதும் ஒரு கபினெட் ஆரம்பிக்கவேண்டும். எதிரிகளோடு மோதி அழிக்கும் வலுவும் தீரமும் கொண்டவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். வெற்றிமீது தீரா காதல் கொண்ட ஒருவர் நமக்கு தேவை. இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தையும் சொல்லி தன் உரையை முடித்துக்கொண்டார். உருப்படியாக ஒன்றையும் செய்யாமல் மிக நீண்ட காலமாக இங்கே அமர்ந்திருக்கிறாய். உடனே வெளியேறு. கடவுளின் பெயரால் சொல்கிறேன் வெளியேறு. மறுநாள், எதிர்க்கட்சி தலைவர் (லேபர் கட்சி) ஹெர்பேர்ட் மாரிஸன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். ஓ செய்யலாம், வாக்கெடுப்பு நடத்தினால்தான் எனக்கு இங்கே எத்தனை நண்பர்கள் என்று தெரியவரும். நான் தயார் என்னை என் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரதமர் சாம்பர்லைன். நிச்சயம் நான் இல்லை என்று தன் கையை உயர்த்தினார் கன்சர்வேடிவ் உறுப்பினர் ராபேர்ட் பூத்பை. முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தவர் என்று அறியப்பட்ட முன்னாள் பிரதமர் லாயிட் ஜோர்ஜ் எழுந்தார். நம் பிரதமருக்கு நண்பர்கள் யார் என்பது இங்கே முக்கியமல்ல. அது பிரச்சனையும் அல்ல. தேசம் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று சாம்பர்லைன் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். தியாகம் செய்ய இந்த தேசம் தயாராக இருக்கிறது அதற்கான ஒரு தலைமை உருவானால். என் விண்ணப்பம் இது தான். நம் பிரதமர் முதலில் தன் பதவியை தியாகம் செய்யட்டும். இறுதியாக சேர்ச்சில் பேசினார். சண்டை சச்சரவுகள் இதோடு சாகட்டும். தனிப்பட்ட சண்டைகளை மறப்போம். நம் வெறுப்பை நம் எதிரி மீது காட்டுவதற்காக சேமித்து வைப்போம். கட்சி நலனை புறக்கணிப்போம். அது இப்போது முக்கியமல்ல. நம் சக்தியை ஒன்று திரட்டுவோம். நம் தேசத்தின் ஒட்டு மொத்த வலிமையையும் ஒன்றாக்குவோம். பலமாக குதிரைகள் நம் தேசத்தை முன்னால் இழுத்துச்செல்லட்டும். விவாதத்தை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாம்பர்லைன் தோற்றுப்போனார். மே 10 ம் திகதி சாம்பர்லைன் தனது பதவியை துறந்தார். சேர்ச்சில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.(கன்சர்வேடிவ் கட்சி தலைவராக சாம்பர்லைன் நீடித்தார்) கன்சர்வேடிவ்க் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து புதிய கூட்டணியை உருவாக்கினார் சேர்ச்சில். நோர்வே டிபேட் அல்லது நார்விக் டிபேட் என்று இந்த சம்பவம் அழைக்கப்படுகிறது. ஃபின்லாந்து தாக்குதலின் போதும் சரி, நோர்வே தாக்குதலிலும் சரி பிரிட்டன் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஜேர்மனியை வளரவிட்டது தவறு போன்ற குற்றச்சாட்டுகள் சாம்பர்லைன் மீது சுமத்தப்பட்டன. அதன் விளைவு தான் இந்த சூடான விவாதம். சாம்பர்லைனை ஆதரித்த பலரே அவருக்கு எதிராக திரும்பினர். சாம்பர்லைனின் அரசியல் அணுகுமுறையை தொடக்கம் முதலே தீவிரமாக எதிர்த்து வந்த சேர்ச்சில், இந்த முறையும் தன் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தினார். சோவியத்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையிலான போரின் போது ஃபிரெஞ்சு பிரதமர் டிலாயர் பதவி விலகியதை போலவே ஜேர்மனி நோர்வே போரின் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகவேண்டிவந்தது. (தொடரும்)   நூல்  இரண்டாம் உலகப்போர் எழுதியவர்  மருதன் வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே
  • புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு. சுயாந்தன்     எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன்.  பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும்.    அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீதமான எண்ணம்  தோன்றியது. ஆங்கில யுத்தத் திரைப்படங்களைக் காணும் எந்த எளிய ரசிகனுக்கும் உண்டாகும் யுக்தியற்ற எண்ணப்பாடு இது. அதாவது இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கினால் எந்த இயக்குநருக்கும் நடிகருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று. உண்மையில் என்னிடம் தெரிவுகளே இல்லை. இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கும் தொழிநுட்ப மற்றும் ஏனைய உத்திகள் இல்லை. இம்முயற்சி இந்நாவலைச் சிறுமைப்படுத்தும். அந்த அளவுக்கு இந்நாவலின் தரம் அதீதமானது. இந்நாவலின் வாசிப்பு எனக்கு அபரிமிதமான அனுபவங்களை உண்டாக்கியது. குறிப்பாக வணிக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியத்தந்தது என்றும் கூறமுடியும்.    பாண்டியன் என்ற கதாபாத்திரம் ஒரு இலட்சிய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. பலர் இக்கதாபாத்திரத்தை அராஜநாயகன் என்று குறிப்பிடுகின்றனர். அது மேலோட்டமான வாசிப்பின் வெளிப்பாடு.     நாவலில் "தமிழ்ப் பேரவை" என்றொரு அத்தியாயம் வருகிறது. இது நாவலில் முக்கியமான உரையாடல்பகுதி. பாண்டியனின் (சிங்காரம்) உலகளாவிய குரல் முரண்பட்டு ஒலிக்கும் இடம் இது. தன் நாவல் முழுக்க அங்கதம் கொண்டு நிரப்ப பாண்டியனை அதிகம் பயன்படுத்தியுள்ளார் சிங்காரம். அத்துடன் அவனை இலட்சிய நாயகனாக்கப் பல இடங்களில் முனைகின்றார்.    கு.அழகிரிசாமிக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் அதிலும் குறிப்பாக முத்தொள்ளாயிரம் என்ற இலக்கியத்தில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதை ஒரு முக்கியமான பழந்தமிழ் இலக்கியம் என்றும் கு.அ குறிப்பிட்டுள்ளார். அதுபோல ப.சிங்காரம் தனது மேற்படி புனைவில்  முத்தொள்ளாயிரத்தின் தமிழ்க் குறியீட்டை மூன்று பாடல்களைக் கொண்டு விபரித்துள்ளார். அடுத்துவரும் அத்தியாய உரையாடல்களுக்கு அதுவே துணையாக நிற்கிறது.   தென்னன் நெடுமாடக் கூடல் அகம், பூம்புனல் வஞ்சி அகம், வேல்வளவன் பொற்பார் உறந்தை அகம் என்று முடிவுறும் மூன்று பாடல்களிலும் தமிழ்வாழ்வின் போகம் முழக்கமிடப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்பகாலத் தமிழ் வாழ்வுக்கான அழிவின் சான்று என்று ஒரு தத்துவமும் எள்ளலும் கலந்த அத்தியாயத்தைக் கொண்டுவருகிறார் சிங்காரம். இதனை பாபிலோனியனின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் விதம் மிக உன்னதமான ஒரு உத்தி. புதுமைப்பித்தன் தன் மரபின் மூடத்தன்மைகளை எள்ளிநகையாடும் அதே போதம் சிங்காரத்திடம் சன்னதமாக வெளிப்படுகிறது.    தமிழ்ப்பெருமை பேசுபவர்களைப் பார்த்து "தவறான நம்பிக்கைகளின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னிளப்பமாக மாறிவிடும்" என்கிறார்.    'கால இடத் தேவைகளுக்கு ஏற்ப சமுதாய அமைப்பு முறை தோன்றுகிறது, மாறுகிறது. ஜாதிமுறை வெவ்வேறு பெயர்களுடன் எல்லாச் சமுதாயங்களிலுமே இருந்திருக்கிறது. இருந்து மாறியிருக்கிறது. எனவே நமது ஜாதிமுறை பற்றி நாம் வெட்கப்படத் தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்போதிருப்பது போன்ற ஜாதிமுறை தேவையா என்பது கேள்வி. எனக்குத் தெரிந்த வரையில் ஜாதி ஒழிப்பு வேலையல்ல முதற்கடமை. நம் மக்களிடையே பரந்த மனப்பான்மையை வளர்ப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யஆவுமே வெறும் விளையாட்டு வேலிகள்' இது ஜாதிமுறை தோன்றியமைக்கான காரணத்தை நாடகத்தன்மையில் பாண்டியன் கூறிய பதில்.    நாவலின் தொடக்கம் எந்தத் தமிழ் நாவலும் தராத ஒரு உற்சாகத்தை அளித்தது. மெடானின் போர்க் காட்சியும் ஜப்பானியர்களின் ஊடுருவலும் இயற்கை இகந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. பாண்டியனின் அறிமுகம் ஒரு திரைநாயகனுக்கான அறிமுகம் போன்றது. முதல் ஆறு அத்தியாயங்கள் ஒரு போர்நாவலுக்கான சுவாரசியத்துடன் விரிவுறுகின்றது. பின்னர் திடீரென செட்டியார்களின் வணிக எழுச்சி வீழ்ச்சி பற்றிய விவரணைகள் இடம்பெறுகின்றன. அவை அங்கங்கே சலிப்பை உண்டாக்கினாலும் நாவலின் நகர்வில் தளர்வை ஏற்படுத்தவில்லை. அதற்கு சிங்காரம் கையாண்ட மொழிநடையும் இயற்கை வர்ணனையும் இன்னொரு காரணம் என்பேன்.    இந்நாவலுக்கான தகவல்களும் தரவுகளும் மிகத் துல்லியமானவை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன்- ஜெர்மனி- அமெரிக்கா- பிரிட்டன்- ஜப்பான் முதலிய நாடுகள் தமது ஆதிக்கத்தை உலக அரங்கில் நிலைநாட்ட மேற்கொண்ட அழிச்சாட்டியங்கள் சித்திரமாக்கப்பட்டுள்ளது. அப்போர்களுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல்களின்  பெயர் விபரம் தொட்டு அந்தச் சமர்களின் முக்கியத்தூவம் இழப்புக்கள் வரையும் பதிவு செய்யப்படுகிறது. மேலும் முக்கியமாக இந்திய தேசிய இராணுவம் மற்றும் இந்திய விடுதலை பற்றி மிக முக்கியமான சித்திரம் பதியப்படுகிறது. அது பாண்டியனின் உள்ளார்ந்த விருப்பம். அதற்காகத் தன்னையே இறுதியில் இழக்கிறான். சுபாஸ் சந்திர போஸ் வழங்கிய வேலையை முடித்து அவரிடம் பாராட்டை வாங்கி மேலும் தனது திறமைகளைக் காட்டுகிறான்.  இந்தோனேசியாவில் இருந்து டச்சுப் படைகளைத் துரத்த வேண்டும் என்று அங்கேயே போராளிக்குழு அமைத்து இணைகிறான். அந்த இலட்சியத்துக்காகவே பாண்டியன் இறந்து போகிறான்.    இந்நாவல் என்னைப் பொறுத்த வரை ப.சிங்காரத்தின் மிக உச்ச படைப்பு என்றே கூற வேண்டும். எக்காலத்துக்கும் உரிய நாவல் இது. இதிலுள்ள வாழ்க்கைப் படிப்பினைகள் இலட்சிய வேகங்கள் மிகப்பழுத்த அத்வைதிக்குரியவை. அதே நேரம் லௌகீகத்தின் பகட்டு மற்றும் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகிறது. அதனால்தான் செட்டியார்களின் வாழ்க்கை நீண்ட அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் சிங்காரத்தின் பழந்தமிழ் அறிவு பிரமிக்க வைக்கிறது. மிகச் சிலரே தமது படைப்புக்களில் துல்லியமாக  செவ்விலக்கிய பேரிலக்கியக் காட்சிகளைக் காட்டுவார்கள். அவர்களில் தலையாயவர் சிங்காரம். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சங்க இலக்கியம், கம்பராமாயணம், திருக்குறள் என்று இன்னோரன்ன இலக்கியச் சுவைகளைத் தனது படைப்புக்களின் பொருத்தமான இடங்களில் பொருத்திவிடுகிறார்.   இந்நாவல் பற்றிப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். அதில் ஜெயமோகனின் 'வரலாற்று அபத்தத்தின் தரிசனம்' மிக முக்கியமானது. மற்றும் சி.மோகனின் கட்டுரைகளும். இந்நாவலைப் படித்த பின்னர் இவற்றையும் வாசிப்பது நாவலின் உபரி அர்த்தங்களை நமக்களிக்கும்.    எனது அண்மைய பயணங்கள் நீண்டதூரங்களுக்கு மோட்டார் வண்டியில்தான் அமைகின்றது. முன்பும் அப்படித்தான். இனியும் அதுவே என் விருப்பு.  அப்போது நான் இந்நாவலை எண்ணிக் கொள்வேன். புயலிலே சிக்கிய பாண்டியன் என்ற கதாபாத்திரமாக என் பயணத் தூரங்களின் விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்வேன். அதுவே என் மீவிருப்பு.    உங்களில் யாருக்காவது பயணம் , யுத்தம், உளவு, போராட்டம், இலக்கியம் என்ற வகையில் ஒரு படைப்பை வாசிக்க ஆர்வம் இருந்தால் புயலிலே ஒரு தோணி வாசியுங்கள். அதன் ஆழங்கள் எந்தக் கடலிலும் கப்பலுக்கு இலகுவில் நங்கூரம் போடக்கூடியது.    http://www.suyaanthan.com/2020/07/blog-post.html
  • மஹாவம்சம் தமது உன்னதமான நூல் என்று புலுடா விட்டுக்கொண்டிருந்தார்கள் இந்த பிக்குமார்கள். மக்களும் இவர்களை கேள்வி கேட்டால் வில்லங்கம் என்று பேசாமல் இருந்து விட்டார்கள். சமூக ஊடகங்கள் வந்த பின்னர், சிங்கத்துக்கு எப்படி மனிதப் பிள்ளைகள் பிறக்க முடியும் என்று கேள்விகள் கேட்க, ஆடிப்போய்.... ராவணனை சிங்களவர் ஆக்க முனைகிறார்கள். அதனால் தான் கோணேஸ்வரர், கோகன்னர் ஆக மாத்தப் பார்க்கிறார்கள். இப்ப போய், நம்ம சங்கரி ஐயா, திருடனுக்கு தேள் கொட்டிற மாதிரி ஆனந்தமான கேள்வி கேட்டால்.... என்ன பதில்தான் கிடைக்கும்?