• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

பெரியாரும் சொற்சிலம்பமும் சுய முரண்பாடும்

Recommended Posts

இங்கே பலருக்குத் தெரியாத விடயம் சிங்கள அரசால் தடை செய்யப்பட்ட முதலாவது தமிழ் அமைப்பு இலங்கைத் திராவிடக் கட்சியாகும். இதன் தலைவரும் மற்றும் தொண்டர்களும் விசாரணைகளின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.இழன்செழியனு

Share this post


Link to post
Share on other sites

நாம் குறிப்பிட்டது போல அது ஒரு குறிப்பு. பெரியாரின் பாதிப்பில் தான் தமிழீழ சுதந்திரப் போராட்டம் எழுந்தது என்பது முழுத் திரிபு. தனித் தமிழ்நாட்டுக் கொள்கையின் பாதிப்பு இருந்திருக்கலாம்..ஆனால் பெரியார் ஒன்றும் ஈழத்தில் தாக்கத்துக்குரிய ஜீவனே அல்ல..! பெரியார் ஈழத்தில் மதிக்கப்பட்ட நபரும் அல்ல. விடுதலைப் போராட்டம் வளர்ந்த பின்னர் கூட எம் ஜி ஆருக்கு தந்த மதிப்பை வேறு எவரும் பெறவில்லை. <_<

சிவத்தம்பியின் சில ஆய்வுக் குறிப்பில் எமக்கு உடன்பாடில்லை. குறிப்பாக பெரியாரின் பெண்ணிலைவாதம் சர்வதேச அளவில் விதந்து போற்றப்படுவதாக கூறிவிட்டுள்ளதானது... சிவத்தம்பி ஆய்வுக்கு அதிகமாக பெரியார் பற்றி தனது குறிப்புகளுக்காக அவரை முன்னிலைப்படுத்தியுள்ளமை தெரிகிறது. சிவத்தம்பியின் சில ஆய்வுகள் கடும்விமர்சனத்துக்கு உரியவையாக இருந்தன...!

மேற்கத்தையே பெண்களின் வாழ்வியலை அவதானித்து எழுந்ததே பெரியாரின் பெண்ணிலைவாதம். பெரியாரா ஒன்றும் வெட்டி விழுத்த அவர் ஒன்றும் படிப்பறிவுள்ள ஜீவனே அல்ல..! :blink:

Share this post


Link to post
Share on other sites

ஈழப்போராட்டம் தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் சிங்கள அரசின் அடக்குமுறை என்பது உண்மைதான். ஆனால் தமிழர்களின் பண்பாட்டு எழுச்சியில் பெரியாருக்கு மாபெரும் பங்கு உண்டு.

சாதி ஒழிப்பில் பெரியாரை விட பாரதிக்கு பங்கு உண்டு என்று நெடுக்காலபோவான் கூறுவது அரைகுறை அறிவின் வெளிப்பாடு. பாரதி மீது நமக்கு என்றென்றும் மதிப்பு உண்டு. ஆனால் அவரை பெரியாரோடு ஒப்பிட முடியாது.

முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவராத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து அதனை அடக்குவதற்காகப் போராடியவர் பெரியார். சாதி அடையாளத்தின் தலைவராக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளுங்கள் என்று சொல்ல அப்போது பெரியாரைத் தவிர எவருக்கும் துணிவில்லை. தாழ்த்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக அம்பேத்கார் போரடியபோது அதனை எதிர்த்து காந்தியடிகள்உண்ணாவிரதம் மேற்கொண்டார். எல்லாத் தலைவர்களும் காந்தியடிகள் பக்கம் நின்ற போது துணிந்து அம்பேத்கார் பக்கம் நின்றவர் பெரியார்தான். பெரியாரின் அந்தத் துணிவும் ஆதரவும் அம்பேத்காருக்கு கிடத்ததால்தான் அவராலும் வெற்றிபெற முடிந்தது.

இந்தியத் தேசியத்தின் முகத்திரையை பெரியார் கிழித்ததுபோல் யாரும் கிழிக்கவில்லை. அடக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் சாட்டையைச் சுழட்ட அவர் தயங்கியதில்லை. தமிழ் நாட்டு விடுதலையில் இறுதி வரை உறுதியாக இருந்தவர்.

நெடுக்காலபோவான் போன்ற ஆரிய அடிவருடிகள் தமிழர்களை இழிவு படுத்தி வரும் பார்ப்பனர்களை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்தாலும் இன்று வரைக்கும் அவர்களின் ஆதரவு சமஸ்கிருதத்துக்குத்தான். இது தெரியாத இவர்கள் பெரியாரைக் கன்னடர் என்று வரிக்கு வரி தூசிக்கின்றனர். ஆனால் தமிழர்களின் வாழ்வியல் பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு ஒரு குரலும் கொடுக்கவில்லை. அங்கு தமிழர்களுக்காக போர்க்குரல் கொடுத்த அத்தனைபேரும் பெரியாரின் வாரிசுகளே!

இன்று பல நெருக்கடிகளிலும் ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்கள் யார்? எங்களுக்காக சிறையில் வாடியவர்கள் யார்? நெடுக்கால போவான் வக்காலத்து வாங்கும் பூணுல்காரர்களா? இல்லை பெரியாரின் கொள்கையாளர்களா?

பெரியார் மனிதர். அவர் நேசித்தது மனிதம், அவர் வெறுத்தது ஆதிக்கம், அவர் காண விரும்பியது சமத்துவம், இதுதான் பெரியார். அந்தப் பெரியாரைத் தொட மனுவின் புத்திரர்களே அவர்தாம் அடிவருடிகளே நீங்கள் யார்??????????

Share this post


Link to post
Share on other sites

தமிழை உயிராக எண்ணி வாழ்ந்த, இனமானக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரைப் பற்றி பாடிய கவிதை.

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக் குகையில் சிறுத்தை எழும்

இவர்தாம் பெரியார்.

எவ்வளவு அழுத்தமான வரிகள். இதே பாரதிதாசன்தான் பாடியவர் பார்ப்பான் அவன் தலையைத் தடவ பார்ப்பான் என்று. நெடுக்காலபோவான் தூயவன் போன்று மதவெறியில் மூழ்கி அறிவைத் தொலைத்து நிற்பவர்கள் தலையைத் தடவப் பார்த்த பார்ப்பானின் கலை நக்கித்திரியப் பார்க்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

பெரியார் என்ற கன்னட சாதி வெறியர் ( பிராமண மக்களை வெறித்தனத்தோடு சாதியத்தின் கீழ் பார்த்ததனால்) பற்றி அவரின் பித்தலாட்டங்கள் பற்றி பேசியது பல. மீண்டும் மீண்டும் பேசி அவருக்கு அநாவசிய விளம்பரம் அளிப்பது எமக்கு அவசியமில்லை. ஈழத்தில் சாதி ஒழிப்பு என்பது கூட பெரியாரை உச்சரித்து எழவில்லை. தமிழீழப் போராட்டத்தின் தேவை மக்களிடையே இருந்த பிளவுகளைக் களைந்து ஒற்றுமைப்படுத்த வேண்டியதாக இருந்ததால் சாதி என்ற அற்பத்தனமான மனிதப் பிளவு அவசியமற்றது உணரப்பட்டது. இந்திய தேசிய விடுதலைக்கும் மக்களின் பங்களிப்பும் ஒற்றுமையும் அவசியமானதாக இருந்ததால் அன்றும் சாதிப் பிளவுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தேவை வெள்ளையனை வெளியேற்ற அவசியமாகி இருந்தது.

பாரதியின் சாதி ஒழிப்பு அணுகுமுறை மென் போக்கானதுடன் எந்த ஒரு பிரிவு மக்களையும் வெறித்தனத்தோடு நோக்குவதாக அன்றி அனைவருக்கும் உணர்விப்பத்தோடு அரவணைப்பதாக இருந்தது.

பெரியார் தனது அரசியலுக்காக கையில் எடுத்ததே பிராமணிய எதிர்ப்பு. அது சாதி ஒழிப்பு அல்ல. பிராமணிய எதிர்ப்பு என்பதே சரியான உச்சரிப்பு. அதை சிவத்தம்பியின் வரிகளும் தெளிவாக்குகின்றன. ஆனால் சிவத்தம்பி குறிப்புக்களில் எழுதியள்ளவற்றை தானே கடைப்பிடிக்கத்தவறியும் உள்ளார். யாழ்ப்பாணப்பண்பாடு என்று ஆய்வு செய்தவர் யாழ்ப்பாணத்தில் பெரியாரின் பெண்ணிலைவாதம் முத்தி ஆண்களும் பெண்களும் நிர்வாண நடனம் ஆடினர் என்றோ அல்லது ஆட வேண்டும் என்றோ சிவத்தம்பியால் எழுத முடியுமா..?! ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பு சார்ந்த ஒழுங்கங்களில் ஒன்று அவசியமில்லை...திருமணம் என்பது அவசியமில்லை பெண் எவனோடும் எப்போதும் ஆண் எவளோடும் எப்போதும் காட்டுமிராண்டி வாழ்வுக் காலத்தில் இருந்தது போல வாழ்வதே நாகரிகம் என்று சிவத்தம்பி பெரியாரின் பெண்ணிலைவாதத்தை தான் சார்ந்த யாழ்ப்பாண சமூகம் மீது சொல்ல முடியுமா..?! முடியாது.

சிவத்தம்பியைப் பொறுத்தவரை பல நல்ல ஆய்வுகளை செய்திருக்கும் அதேவேளை சில முரண்பாடான விடயங்களை தனது பிரபல்யத்துக்காக கையாண்டும் உள்ளார். பெரியாரும் தனது அரசியல் சமூகப் பிரபல்யத்துக்காக எடுத்ததே பிராமணிய எதிர்ப்பு என்பது. பெண்கள் அடக்கப்படுகிறார்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூறிக் கொண்டு பெண்களை அடக்கி ஒடுக்கியவர்களும் அவர்கள் தான்.

காவேரி நீர்ப்பிரச்சனையில் திராவிடக் கட்சியினரை விட சினிமா உலகம் அதிகம் செய்துள்ளது எனலாம். ரஜனிக் காந் உண்ணாவிரதம் இருந்தது..அவரும் கன்னடர் என்ற படியால்..சிறிது தாக்கமானதாக இருந்தது. கன்னடர்கள் எப்போதுமே தாங்கள் தமிழ்நாட்டினரை விட மேலானவர்கள் என்ற சிந்தனைப் போக்குடையவர்கள். மலையாளத்தினர் தெலுங்கர்கள் போலன்றி கன்னடர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு இழக்காரப் பார்வை உண்டு. அதுக்கு பெரியார் போன்ற கன்னடர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் சில தமிழ்நாட்டுக் கும்பல்கள் தான் காரணம். தமிழன் தமிழனுக்குரிய சிந்தனைகளை தமிழர்களுக்குள் செய்யாது பிராமணன் பார்ப்பர்னன் என்று தமிழர்களுக்கு பிரிவினைகளை மூட்டிக் கொண்டு சாதி ஒழித்தாராம் கன்னடப் பெரியார்..! அவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும் அரசியல் அரங்கில் அவருக்கு சவாலாக இருந்த பிராமண சமூகத்துக்கு எதிராக தாழ்த்தப்பட்ட சமூகங்களைக் தூண்டவும் கையில் எடுத்ததே பிராமண எதிர்ப்பு. ஆனால் எட்டயபுரத்து பிராமணத் தமிழனான பாரதி தமிழனாக இருந்து கையில் எடுத்ததெ தமிழர்களுக்குரிய சிந்தனையின் வெளிப்பாட்டில் அமைந்த சாதி ஒழிப்பு...!

தமிழ்நாட்டை மட்டுமே கன்னடர்களும் பிறமாநில பின்புலம் உள்ளவர்களும் ஆண்டனர் ஆளுகின்றனர். மற்றைய மாநிலங்கள் சுதேசியகளையே அதிகம் தலைவர்களாக்கி உள்ளனர். கோடித் தமிழர்கள் ரஜனிகாந்தை தலைவா என்று கொண்டிருக்கின்றன. அவர் சொல்வதத வேதம் என்று கருதுகின்றன. இதுதான் பெரியார் ஏற்படுத்திய பகுத்தறிவின் விளைவு..! இப்படியான தமிழர்களின் பலவீனச் சூழலை பெரியார் அன்று தனது சுயநலத்துக்காக பயன்படுத்தி தமிழகத்தில் செல்வாக்குச் செய்தார். ஏன் அவரால் தமிழ் நாட்டை விட சாதி வெறி அதிகம் தலைகாட்டிய மாநிலங்களில் கால்பதிக்க முடியவில்லை. சிவத்தம்பி இவற்றை ஏன் கையாண்டு பெரியார் பற்றி முன்னிலைப்படுத்தல்களை நியாயப்படுத்தத் தவறினார். ஆக தேவைக்கு ஏற்ப சிவத்தம்பியும் வரலாற்று மறைப்புக்களைச் செய்வார் என்பது நிரூபணமாகிறது.

எம்மைப் பொறுத்தவரை பெரியாரை விட பாரதியே சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அதிகம் தமிழன் என்ற பற்றுறுதியோடு தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் சமூக மாற்றத்தை கோரி நின்றிருக்கிறார் என்பது தெரிகிறது. பாரதி பேசிய பெண்ணிலைவாதம் பெண்களின் வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதோடு மனித விழுமியங்களைக் காக்கவும் வழிகாட்டுகிறது. பெரியாரின் சிந்தனைகளை தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்ற பார்வையில் கொண்டு அவர்களை அப்படி ஆக்கிட முனைகிறது. பெரியார் கன்னடத்தில் போய் பெண்களே திருமணம் முடிக்காதீர்கள்..கண்டவனோடும் கண்டபடி போங்கள். அடுத்தவள் கணவனையும் காதலனையும் காதலியுங்கள்..குடும்பம் நடத்துங்கள்..பிள்ளை குட்டி பெறுங்கள்..ஆனால் திருமணம் என்று குடும்பம் என்ற அலகு உருவாக்கத்துக்கு உதவாதீர்கள். நாய் பன்றி போல குட்டி போட்டுவிட்டு போய் விடுங்கள். அதுகள் றோட்டில அலைஞ்சு நல்ல பிரஜைகளா வளர நான் என் பகுத்தறிவுப் பாலை ஊட்டுகிறேன் என்றிருக்கலாமே. அல்லது பெரியார் போதித்த படிதான் கன்னடர்கள் வாழ்கின்றனரா இன்று. தமிழ் நாட்டில் தான் வாழ்கின்றனரா.

மேற்குலகநாடுகளே குடும்பப் பலவீனங்கள் கண்டு செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கின்றன. பிரியும் குடும்பங்களால் அரச செலவீனம் அதிகரிப்பது அவர்களுக்குத் தனித் தலையிடியாகியுள்ளது. இதற்கிடையில் சிவத்தம்பி சொல்கிறார் பெரியாரின் பெண்ணிலைவாதத்தை...சிவத்தம்பி எவற்றைப் பெரியாரின் பெண்ணிலைவாதம் என்று குறிப்பிடுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.. மேற்குலகம் விதந்து போற்றுகின்றது என்று..! :)

Share this post


Link to post
Share on other sites

கன்னடன் பெரியார் பற்றி சொல்வது போன்று மலையாளி எம்ஜிஆர், தெலுங்கன் வைகோ பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன்.

ஒரு கேள்வி!

மாற்றின் லூதர் கிங், முகமத் அலி இவர்கள் அமெரிக்கர்களா? ஆபிரிக்கர்களா?

கொண்டலீனா ரைஸ் அமெரிக்கர் இல்லையா?

Share this post


Link to post
Share on other sites

கன்னடன் பெரியார் பற்றி சொல்வது போன்று மலையாளி எம்ஜிஆர், தெலுங்கன் வைகோ பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன்.

ஒரு கேள்வி!

மாற்றின் லூதர் கிங், முகமத் அலி இவர்கள் அமெரிக்கர்களா? ஆபிரிக்கர்களா?

கொண்டலீனா ரைஸ் அமெரிக்கர் இல்லையா?

அவர்கள் யாராய் இருப்பினும் தங்களைத் தாங்களே பகுத்தறிவாளன் என்றும் அடுத்தவரைக் காட்டுமிராண்டிகள் என்று தாங்கள் அவர்களை இரட்சிக்க வந்தவர்களாவும் கதையளந்து ஒரே இன மக்களுக்குள் ஒரு பிரிவினருக்கு எதிராக ஒழிப்பு அழிப்பு என்று அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அடுத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரவில்லை. அதைச் செய்த அதி பகுத்தறிவாளன் பெரியார் மட்டுமே..! <_<:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

சாதி ஒழிப்பிற்கும் சமூக விடுதலைக்கும் பெரியார் போராடிய அளவுக்கு பாரதி உட்பட எவரும் போராடவில்லை.

காந்தியடிகள், பாரதி போன்றவர்கள் புண்ணுக்கு மருந்து போட்டார்கள் ஆனால் பெரியார் செய்ததோ அறுவைச் சிகிச்சை.

இந்தியாவில் சாதிப்பிரச்சனை இருந்தது உண்மை. அதை மறுக்க முடியாது. ஆனால் அந்த ஜாதிப்பிரச்சனையால் அனுகூலம் அடைந்தவர்கள் வெறுமனே பிராமணர்கள் அல்ல. அரச குடும்பத்தினர், பண்ணையர்கள், என்று பல ஜாதிப்பிரிவினர் பலன் பெற்றனர். சொல்லப் போனால் பிராமணர்கள் கோவில் தவிர்ந்த மற்றய விடயங்களில் அன்றைய பெளத்த பிக்குகள் போல ஆதிக்கம் செலுத்தியதாக அறியவில்லை.

அப்படியிருக்க பெரியாருக்கு பிராமணர்களை மட்டுமே குறி வைக்க வேண்டிய அவசியமென்ன?

இரண்டாவது பிராமணர்கள் ஜாதி பிடித்தவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்று பெரியார் பிராமணர்களை ஒதுக்கி, நடந்த முறை மட்டும் ஜாதி அற்ற போக்கா? பிராமணிகளை எவ்வாறு ஜாதி வெறி பிடித்தவர்கள் என்கின்றோமோ பெரியாரும் ஜாதி வெறி பிடித்தவர் தான். இரு தரப்பின் செயற்பாடும் தான் வேறு வேறே தவிர, கொள்கைகளில் வேறுபாடு கிடையாது.சொல்லப் போனால் பெரியார் செய்தது அறுவைச் சிகிச்சையில்லை. புண்ணை மேலும் பெருப்பித்தலே.

நண்பரே!

முதலில் சமத்துவம் என்றால் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்து மதிப்புக் கொடுப்பது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதில்லாமல்" பாம்பைம் பார்ப்பாணியையும் கண்டால் முதலில் பார்ப்பாணியை அடி, பிறகு பாம்பை அடி" என்று கதைத்தால் அதன் பெயர் சமத்துவமல்ல. ஒரு வகை ஜாதி வெறியே!

பாரதி மீது நமக்கு என்றென்றும் மதிப்பு உண்டு. ஆனால் அவரை பெரியாரோடு ஒப்பிட முடியாது.

முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவராத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து அதனை அடக்குவதற்காகப் போராடியவர் பெரியார். சாதி அடையாளத்தின் தலைவராக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளுங்கள் என்று சொல்ல அப்போது பெரியாரைத் தவிர எவருக்கும் துணிவில்லை. தாழ்த்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக அம்பேத்கார் போரடியபோது அதனை எதிர்த்து காந்தியடிகள்உண்ணாவிரதம் மேற்கொண்டார். எல்லாத் தலைவர்களும் காந்தியடிகள் பக்கம் நின்ற போது துணிந்து அம்பேத்கார் பக்கம் நின்றவர் பெரியார்தான். பெரியாரின் அந்தத் துணிவும் ஆதரவும் அம்பேத்காருக்கு கிடத்ததால்தான் அவராலும் வெற்றிபெற முடிந்தது.

நானும் பெரியாரையும் பாரதியையும் ஒப்பிட மாட்டேன்.

பசும்பொன் தேவர் மட்டுமல்ல, மாபொசி தமிழ் தேசியமாக போராட்டத்தை கொண்டு செலல் எத்தணித்தபோது, அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தவர் பெரியார். ஏனென்றால் தன்னை விட யாரும் புகழ் பெறக் கூடாது என்ற சிந்தனையே. அதற்கும் துணிந்த பெருந்தலைவர் பட்டம் கொடுங்கள். இவர் பிராமணிகளுக்கு எதிராக ஜாதி வெறியைக் கிளப்பி விட்டால் அது சாதி அடையாளமல்ல. ஆனால் முத்திலிங்கத் தேவர் தான் ஜாதி அடையாளமாம். என்ன சுத்துமாத்து?

சும்மா சொல்லுங்கள். பசும்பொன்தேவருக்கும், பெரியாருக்கும் என்ன வித்தியாசம்? பசும்பொன், தேவர் இனம் சாரதவர்களுக்கு எதிராக ஜாதி வெறியூட்டினார். பெரியார் பிராமணிகளுக்கு எதிராக ஜாதி வெறியூட்டினார். எல்லாமே ஒன்று தான்.

காந்தியடிகள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நின்றதில் தவறு ஏதுமில்லை. இடஒதுக்கீடு என்பது கூட ஜாதி வாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடு தானே.

இந்தியத் தேசியத்தின் முகத்திரையை பெரியார் கிழித்ததுபோல் யாரும் கிழிக்கவில்லை. அடக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் சாட்டையைச் சுழட்ட அவர் தயங்கியதில்லை. தமிழ் நாட்டு விடுதலையில் இறுதி வரை உறுதியாக இருந்தவர்.
ஓ! கடைசியில் தமிழ்நாட்டு விடுதலை கிடைத்துவிட்டதா? ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள். அன்று மெட்ராஸ் ஆக இருந்த போது தமிழன், தெலுங்கன், கன்னடன், மலையாளி என்ற பாகுபாடுகள் இருந்ததில்லை. பின் தமிழுக்கு தனிநாடு கேட்க வெளிக்கிட்ட போது எத்தனை தமிழ் பிரிவுகள் மற்றய மானிலங்களுக்குள் உள்வாங்கப்பட்டன? இன்றைக்கு பெங்களுர் தமிழ்மக்கள் செறிந்து வாழ்ந்தபோதும், கன்னடர்களைக் கண்டு அஞ்ச வேண்டி ஏற்படும் நிலையில் தான் உள்ளான். சிறையில் இன்னமும் பல தமிழர்கள் எவ்வித விசாரணையும் இன்றி வாடுகின்றனர்! தமிழ்நாடு பெறப்பட்டதை சமீபத்தில் கொண்டாடிய கலைஞர், மிகவும் வேதனையோடு தமிழ்நாடு பிரித்ததில் தோற்றுப் போனதை ஒத்துக் கொண்டார்

கடைசியில் தமிழ்நாடு விடுதலை பெறவில்லை. அண்டை மானிலங்களோடு தினமும் சண்டை. தமிழனை மதிக்காத நிலையில் அவர்கள் நடக்கின்றார்கள். அவர்கள் பெரியாரின் கொள்கைகளைத் தூக்கி எறிந்து விட்டு தங்களின் தேசியத்தோடு சிந்திக்கின்றார்கள். ஆனால் தமிழன் மட்டும் அதைத் தூக்கி வைத்து ஆடுகின்றான்.

பெரியார் கொள்கை என்பது ஒரு வித திசை திருப்பல். இது கூட தமிழனின் வளர்ச்சிப் பாதைக்கான முட்டுக்கட்டை. இன்றைக்கு ஊடகத்தை எடுத்தால் அதில் பாப்பாணி தான் ஆதிக்கம் என்று கூக்குரல் எழுப்புகின்றார்கள். ஆனால் மற்றவர்களிடம் உள்ள பணப்பலத்தினால் அந்தப் பாப்பாணியை முந்திக் கொண்டு ஊடகத்தை வளர்க்க முடியாதா? நிச்சயம் முடியும். ஆனால் ஏன் முடியவில்லை என்றால் இந்தக் கன்னடக்காரன் இவர்களுக்கு கற்றுக் கொடுத்தது, தி்ட்டித் தீர்ப்பது மட்டுமே. அதனோடு இவர்களது கடமை முடிந்து போனது.

இன்று பல நெருக்கடிகளிலும் ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்கள் யார்? எங்களுக்காக சிறையில் வாடியவர்கள் யார்? நெடுக்கால போவான் வக்காலத்து வாங்கும் பூணுல்காரர்களா? இல்லை பெரியாரின் கொள்கையாளர்களா?

இந்தக் கேள்விக்கு இந்த பெரியார் வெறிக்கும்பல்கள் தான் பதில் சொல்ல வேண்டும். உமாபதி சிவாச்சரியார், சம்பந்தமூர்த்தி நாயனர், ஆறுமுகநாவலர், சுப்பிரமணியபாரதியார், நம்பியாண்டார் நம்பி என்று பிராமணர்களாக இருந்து தமிழ்வளர்த்த முன்னோர்கள் இருந்த தமிழ் உலகம் எங்கே? இன்றைக்கு திராவிடக் கும்பல்கள் தமிழர்களே இல்லை என்று ஒதுக்கி வைக்கும் பிராமணிகள் எங்கே? பிராமணிகள் மீது தனி வெறியைக் காட்டி அவர்களை தமிழ்தேசியத்துக்கு எதிரானவர்களாக ஆக்கிய பொறுக்கிகள், இப்போது பிராமணிகள் தமிழ்தேசியத்தை ஆதரிப்பதில்லை என்று கூக்குரல் போடுகின்றார்கள்.

இன்றைக்கு தேவாரங்களாகட்டும், தமிழ் தேசியக் கலையாகக் கணிக்கப்படும் பரதமாகட்டும், ஏதோ ஒரு வகையில் பிராமணர்கள் காப்பாற்றி வந்தது.

ஆனால் இந்த சமணவெறி பிடித்த இளங்கோ தமிழரின் எதிரிகள் பிராமணிகள் என்று வெறியூட்டல் செய்கின்றார். சொல்லப் போனால் இந்தச் சமணவெறியருக்கு இந்து மதத்தைச் சாராதவர்கள் அல்லது, அவ்வாறு தங்களைக் காட்டாதவர்கள் தமிழ் பற்றிக் கதைத்தால் அதை மட்டுமே தூக்கிப் பிடிப்பார். திருக்குறளில் மதங்களைப் பற்றிய வாக்கியமில்லாததால் அதை தூக்கிப் பிடிப்பார். பின்னர் வாழ்ந்த இளங்கோ அடிகளை சமணர்கள் தங்களுக்குரியவர் என்று பொய் உரிமை கோரியதால் அதையும் தூக்கிப் பிடித்தார். ஆனால் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் படித்தவை, 5வகை நிலங்களுக்கு உரிய கடவுளில் ஒருவரான முருகனைக் குறித்து என்பதால், அதைப் பற்றி ஒன்றும் பேசமாட்டார்.

தனக்குள் வெறியை வைத்துக் கொண்டுள்ள இந்தச் சமண வெறியர், மற்றவர்களை வெறியர்கள், அடிவருடிகள் என்று சொல்லிக் கொள்வது நகைப்புக்குரியது.

காவேரி்ப் பிரச்சனைக்கு குரல் கொடுத்தது பெரியார் புத்திரர்களாம். ஆனால் காவேரிப் பிரச்சனை பெரிதானே இந்தப் பெரியார் கும்பல்களால் தானே? ஆனால் பெரியார் படிப்பித்த பாடாகிய திட்டித் தீர்த்தலோடு நிற்பதால் அந்தப் பிரச்சனை என்னும் முடியவில்லை. முடிவது போலவும் தெரியவில்லை.

பெரியார் மனிதர். அவர் நேசித்தது மனிதம், அவர் வெறுத்தது ஆதிக்கம், அவர் காண விரும்பியது சமத்துவம், இதுதான் பெரியார். அந்தப் பெரியாரைத் தொட மனுவின் புத்திரர்களே அவர்தாம் அடிவருடிகளே நீங்கள் யார்??????????

இறுதியாக வழமையான பெரியார் புராணத்தோடு முடித்திருக்கின்றார்.நல்ல மூளைச்சலவை. ஆனால் மேலே சொன்னது போல சமத்துவம் என்றால் எல்லோரையும் சமனாக மதிப்பது மட்டுமே. அது பெரியார் செய்யவில்லை.

(மனுவின் புத்திரர் என்கின்றார். மனு நீதி என்பது ஒரு அரசனின் கொள்கை. அது மதக் கொள்கையல்ல. இதற்கும் இறைபக்திக்கும் முடிச்சுப் போடும் நபர் எவ்வளவு முட்டாளாக இருப்பார் என்பது புரிகின்றது. )

.............................

நான் பிராமணன் போன்ற தோற்றத்தை இங்கே இளங்கோ போன்றவர்கள் ஏற்படுத்த முனைவனமூலம் தங்களின் வெறிபிடித்த கொள்கையை நியாயப்படுத்த முனைகின்றனர். ஆனால் நானும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவனே. என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்தேசியத்த்தின் பாதையிலேயே நான் செல்ல விரும்புகின்றேன்.

அங்கே நீ, பிராமணி, நீ வெள்ளாளர், நீ தலித், நீ நாயக்கர் என்ற எந்தப் பிரிவினை வாதங்களையும் கொண்டிருக்க கூடாது. அதை விட திட்டித் தீர்ப்பது கொள்கையாக எப்போதுமே இருக்க கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையைத் தகர்க்கும் அதேவேளை எந்த ஒரு பிரிவுக்கும் உயர் நிலையையும் காட்டக் கூடாது.

யாழ்களத்தில் "தலித்" என்ற பெயரில் ஒருவர் இணைந்தபோது உண்மையில் கோபம் வந்தது. பிறகு பரிதாபமாக இருந்தது. அன்று ஒரு குறித்த வகுப்பை தாழ்த்தி அசிங்கமாகப் பேசப் பாவிக்கப்பட்ட ஒரு சொல்லை, தாங்களாக தங்களைப் பாவிக்க வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிற்பாட்டியிருக்கின்றது என்றால் அதன் பெயர் இளங்கோ சொல்வது போல பெரியாரின் சமத்துவம் செய்த வேலையா? உண்மையிலேயே எம் மக்களை தாங்களாகவே அடிமைச் சிந்தனைக்குள் மூழ்கடித்து, அன்னியன் எம் தோளில் சவாரி செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும் நிலைக்கே இது இட்டுச் செல்லும். இன்று தமிழ்நாட்டின் நிலையைப் பார்க்கின்றபோது அவ்வாறு தான் தோன்றுகின்றது. என்றைக்கு தமிழன் தான் தர்ந்தவனில்லை என்று நினைக்கின்றானோ அன்றே வாழக்கையில் உயர்ச்சி பெறுவான்.

............................

நான் இவ்வாறு கதைத்தவுடன் சமணப் பெரியார் இளங்கோ, என்னையும் பாப்பாணியாக்கி, வெறி, பாசியம், அடிவருடி, வேணுமென்றால் இதற்குள்ளும் பெண்ணடிமை என்பதைப் பாவித்து தனது அறிவுப் புலமைக் காட்டுவார் என்பது மட்டும் நிதர்சனம்.

Share this post


Link to post
Share on other sites

எவ்வளவு அழுத்தமான வரிகள். இதே பாரதிதாசன்தான் பாடியவர் பார்ப்பான் அவன் தலையைத் தடவ பார்ப்பான் என்று. *****, தூயவன் போன்று மதவெறியில் மூழ்கி அறிவைத் தொலைத்து நிற்பவர்கள் தலையைத் தடவப் பார்த்த பார்ப்பானின் கலை நக்கித்திரியப் பார்க்கிறார்கள்.

எவன் காலை நக்குகின்றார்? நீர் கன்னடக்காரனின் காலை மட்டுமல்ல,*** நக்கித் திரிகின்ற பிழைப்பு போன்றா நான் செய்கின்றேன். பாப்பாணி பாப்பாணி என்று ஒரு கன்னடவெறி பிடித்த நாய் தமிழனின் கட்டமைப்பைக் குலைத்து, அவனை சமுதாயத்துக்குள்ளேயே அடிபட வைத்து சிதைக்க முயல்கின்றான். அதை தூக்கிப் பிடிக்கின்ற நீர், நக்கியா? நான் நக்கியா?

இன்றைக்கு கன்னடக்காரன் தங்களின் இனத்துக்குள்ளே இப்படி சாதிவெறியைக் கொட்டித் தீர்க்கின்றானா? இன்றைக்கு மற்றய தென்மானிலங்களிலும் பார்க்க கர்நாடாக அறிவியல்ரீதியாக வளர்ந்திருக்கின்றது. ஆனால் அன்று இருந்த சென்னை மட்டும் இன்று வரைக்கும் மாறவில்லை. ஏன்?

தமிழ்தேசியம் என்று இருந்ததை திராவிடமாக காட்ட முனைந்ததற்கு காரணம். தமிழ்தான் மூத்தமொழி என்ற உண்மையை மறைக்கவே. சமீபத்தில் தோன்றிய மொழிகளை தமிழுக்கு நிகராக வைத்து, திராவிடம் என்று சொல்ல முனைந்து தமிழுக்கு உரிய பழம்பெரும் பெருமையை மறைக்க முயன்றுள்ளார் இந்தக் கன்னடக்காரர். ஆனால் இது கூடப் புரியாமல் நக்கிப் பிழைக்கும் கும்பல் புலம்புகின்றது.

இந்த ஜாதி வெறியை ஊட்டிவிட்ட உங்களின் போக்கிரித்தலைவனால். ஆரியன் ஆரியன் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று திட்டுவது எல்லாம் கைப்புண்ணுக்கு காலில் மருந்து கட்டுவது போல. இப்படித் திட்டித் தீர்ப்பதால் எங்களின் சமுதாயம் முன்னேறுமா? எனக்குத் தெரியும். இந்த வெறிக்கும்பல்களுக்கு அது நோக்கமில்லை. தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் அரவணைத்து தமிழ் தேசியக் கொடிக்குள் கொண்டு செல்லவிடாமல் தடுப்பது யார்? இந்த வெறிக்கும்பல்கள் தானே?

எனக்க ஒரு நம்பிக்கையிருக்கின்றது. அது என் தனிப்பட்ட விருப்பம். நான் வைத்திருக்கும் நம்பிக்கை இந்த வெறிக்கும்பல்களுக்கு எரிச்சலைத் தருகின்றது என்றால் யாருக்கு மதவெறி? என் நம்பிக்கைக்குள் மூக்கை நுழைக்கும் இந்த போக்கிரிகள் மதவெறி பிடித்தவர்களா? அல்லது நானா?

பெரியார் தமிழுக்காக என்ன செய்தவர். தமிழன் பித்தலடாட்டகாரன், பிசாசு என்று திட்டித் தீர்ப்பதைத் தவிர?

Share this post


Link to post
Share on other sites

கன்னடன் பெரியார் பற்றி சொல்வது போன்று மலையாளி எம்ஜிஆர், தெலுங்கன் வைகோ பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன்.

ஒரு கேள்வி!

மாற்றின் லூதர் கிங், முகமத் அலி இவர்கள் அமெரிக்கர்களா? ஆபிரிக்கர்களா?

கொண்டலீனா ரைஸ் அமெரிக்கர் இல்லையா?

உங்களுக்கு என்னும் அடிப்படையே விளங்கவில்லை போலிக்கின்றது. அமெரிக்காவை எடுங்கள். ஒருவன் அமெரிக்காவில் என்னவும் செய்யலாம். ஆனால் அவன், பாதுகாப்புத் துறையிலோ, அல்லது ஜனாதிபதியாகவோ வர முடியாது. குடியேற்ற நாடான அமெரிக்காவே இப்படி என்றால் மற்றய நாடுகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

இது ஏன் என்றால் தமிழ், அதன் கலாச்சாரம், பற்றிக் கதைக்கவேண்டுமனால், அல்லது வழிகாட்டியாக இருக்க வேண்டுமானால் அவன் தமிழனாகவே இருக்க வேண்டும் என்பதே என் அவா. அது தான் உண்மை. ஏனென்றால் அப்போது தான் அவன் ஓரளவாவது இன உணர்வோடு நடப்பான்.

மற்றும்படி எவனும் எப்படியும் இருக்கலாம். தேசியம் தவிர்ந்த எதற்குமே எம்ஜீஆர் தகுதியுடையவர் தான்.

Share this post


Link to post
Share on other sites

தூயவன்! உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள்.

இந்த மூவரில் தமிழ்நாட்டில் உள்ள 6 கோடித் தமிழர்களுக்கும் யார் முதலமைச்சராக வருவதை விரும்புகிறீர்கள்

1. கலைஞர்

2. ஜெயலலிதா

3. வைகோ

உங்கள் விருப்பத்தை மட்டும் சொல்லுங்கள்

Share this post


Link to post
Share on other sites

பிறப்பினால் ஒருவர் இன்ன சாதி என்பது எவ்வாறு தவறோ அவ்வளவு தவறு பிறப்பினால் ஒருவர் தமிழர் அல்லது கன்னடர் என்பது.

இதைத் தான் குறுந் தேசிய வாதம் என்பார்கள்.இன்று சிங்களவர்களாகிய தமிழர்கள் இலங்கையில் உண்டு.அவ்வாறே தமிழரானா பறங்கியர், அரபியர் ,தெலுங்கர் உண்டு இலங்கையில்.தமிழ் நாட்டில் தமிழரான தெலுங்கர்,கன்னடர் உண்டு.தமிழர் என்பதற்கான வரயறை ஒருவரின் பிறப்பில் இருந்து மட்டுமே வருகிறது என்றால் கதிர்காமரும் தமிழர் தான்.உலகில் தூய இனம் என்பதெல்லாம் நாசியத்துடன் செத்து விட்ட கோட்பாடுகள்.சாதியம் பிறப்பால் ஏற்படுவதில்லை ஆகவே பார்ப்பனர்கள் மேல் வெறி கொள்ளாதீர்கள் என்று சொல்லிக் கொண்டே ,பிறப்பால் ஒருவர் தமிழர் இல்லை அதனால் அவர் தமிழர்களுக்குத் தலமை தாங்க முடியாது என்று சொல்கிறீர்கள்.

இங்கே எவரும் பிறப்பால் சாதியம் பேசவில்லை, பார்ப்பனீயம் என்பது மனிதர்கள் பிறப்பால் இன்ன இன்ன சாதி என்றும் இவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும்சொல்வது.அது ஒருகுறிப்பிட்ட சமூகத்தையோ சாதியத்தையோ குறிப்பது இல்லை.எல்லா சாதிய ஒடுக்குமுறைக்கும் ஒடுக்குமுறையாளருக்கும் பொதுவான சொல்லாடல்.ஈழத்தில் இது வேளாளரின் சாதிய அடக்குமுறையையே குறிக்கும்.

தமிழர் என்போர் தமிழ் ,மொழி பேச வேண்டும் என்பதே இப்போது இல்லாது ஆகி வருகிறது.தமிழர் என்போர் தமிழ் மரபுகளை, வாழ்வியலை, அறம் சார் நெறிகளை காவுவோராக இப்போது வரயறுக்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுய்களாக வாழ்ந்து வரும் தெலுங்கு, மற்றும் கன்னட மொழி மக்களும் இன்று தமிழர்களே.திராவிடராக இருந்த சேர சோழ பாணிடியரின் வாரிசுக்களே இன்று தெலுங்கரும்,கன்னடரும்,மலையாள

Share this post


Link to post
Share on other sites

தமிழர் என்போர் தமிழ் ,மொழி பேச வேண்டும் என்பதே இப்போது இல்லாது ஆகி வருகிறது.தமிழர் என்போர் தமிழ் மரபுகளை, வாழ்வியலை, அறம் சார் நெறிகளை காவுவோராக இப்போது வரயறுக்கப்படுகிறது.

யாழ் களத்தில சில அதி புத்திசாலிகள் வரையறுக்கிற அதி நவீன கோட்பாடுகள் இருக்கே நினைச்சா புல்லரிக்குது. ஒன்றும் வேணாம் பேசாமல் டி என் ஏ பிங்கர் பிரிண்ட் மட்டும் போதும் என்றிட்டால் கன பிரச்சனை தீர்ந்திடும். அதில தமிழரும் சிங்களவரும் ஒன்றென்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் மொழி பேசாவிட்டாலும் தமிழர் மரபுகளை வாழ்வியலை அறம் சார் நெறிகளை காவுவோரில் சிங்களவர்களும் உள்ளனர்..! ஆகவே அவர்கள் தமிழர்கள். ஆனால் புலம்பெயர்ந்த இடங்களில் தமிழில் பேசினானும் தமிழர் மரபுகளைத் தொலைத்த வாழ்வியலை விட்ட மேற்குலக மரபுகளுக்கு தாவியவர்கள் தமிழர்களே அல்ல..! நல்ல கோட்பாடப்பா...! வரவேற்க வேண்டியது கடமை..! :icon_idea::icon_idea:

பெரியார் வழிகாட்ட கன்னடத்திலேயே ஆயிரம் சூத்தைகள் இருக்கும் போது காட்டுமிராண்டி என்று கொண்டு தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கத்தான் முடிந்தது. தமிழ் இனம் என்பதற்கு தனியார் கோட்பாடுகளை குப்பையில் போட்டுவிட்டு ஐநா விதிகளின் பிரகாரம் நிறுவின் மொழி என்பது முக்கியமானது. கன்னடன் வந்து தமிழர்களுக்குள் உள்ள பிரிவினைகளை ஆழமாக்கி குளிர்காய அனுமதிப்பதிலும் பாரதி போன்ற தமிழர்களின் வழியில் தமிழர்கள் பயணிப்பதே தமிழர்கள் தங்களுக்கே உரித்தான மரபுகளுடன் வாழ்வியலுடன் அறம் சார் தன்மைகளுடன் தங்கள் இனத்தன்மையை இப்ப யாழில் முளைத்த புதிய கோட்பாட்டின் படியும் பழைய கோட்பாடுகளின் படியும் பாதுகாக்க முடியும். கன்னடன் வந்துதான் தமிழர்களை ஆழ வேண்டும் வழிகாட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளைக் கலைத்துவிட்டு..தமிழ்நாடு என்ற நாமத்தைக் கலைத்துவிட்டு ஈழத்தில் புலிகளைக் கலைத்துவிட்டு தமிழீழக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு கருணாநிதியைக் காட்டிலும் திறமையான பகுத்தறிவான ஒரு வெள்ளைக்காரனை ஆட்சியில் அமர்த்தலாம். ஈழத்தில் ராஜபக்ஷவுக்கு கீழ வாழலானமே..! ஏன் தான் செய்ய மறுக்கினமோ தெரியல்ல..புதிய புதிய கோட்பாடுகளை தங்களுக்கு ஏற்றாப்போல நிறுவுபவர்கள்..!

அவையும் அவையிட கோட்பாடும்..கன்னடப் பெரியாருக்கு..அந்நியருக்கு சேவகம் செய்யும் கொத்தடிமைத்தனம் இன்னும் தமிழர்களை விட்டு அகலவில்லை..! அது அகலும் போதே சுதேசியப்ப்ற்றும் தேசப்பற்றும் வளரும். அதுவரை தமிழர்களுக்கு நாடும் இல்லை அடையாளமும் இல்லை..! அடுத்தவன் பேச்சில் மயங்கி சுயமிழக்க வேண்டியதுதான்..! :icon_idea: :P

Share this post


Link to post
Share on other sites

வேறு பல இனக் குழுக்களைப் போலன்றித் தமிழர் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை. தமிழகம் எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட இராச்சியங்கள் அல்லது அரசுகளின் கீழேயே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து வருகிறது. தமிழ் மொழியைப் பேசுகின்ற தமிழருடைய அடையாளம், வரலாற்று ரீதியில், சிறப்பாக மொழி சார்ந்ததாகவே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தமிழர் என்பதற்கான வரைவிலக்கணம், தமிழ் மரபுகளைப் பேணிக்கொண்டு ஆனால் தமிழ் பேசாத புலம் பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கும் விதத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%...%AE%B0%E0%AF%8D

தமிழருக்குப் பிறந்து தமிழ் மொழி பேசாத புலம் பெயர் தமிழரின் பிள்ளைகள் வெள்ளையரா இல்லை சிங்களவரா?

Share this post


Link to post
Share on other sites

தமிழர்கள் யார் என்பதை எப்படி வரையறுப்பது?

1994 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது தமிழ், தமிழர் இயக்கத்தில் நானும் தியாகுவும் மற்ற தோழர்களும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்த வேளையில் குணாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகம் வெளிவந்தது. அப்போது இந்தக் கேள்வி எதிர்கொண்டது. அதற்காகவே கோவைக்கு அருகில் ஒரு சிற்றூரில் ஒரு நாள் முழுவதும் நண்பர்களிடையே விவாதம் நடந்தது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போது அதை ‘இனி’ பத்திரிகையிலும் பதிவு செய்தோம். மரபு இனம் போல் அல்லாமல் தேசிய இனம் என்பது சமூக, வரலாற்று வழியில் உருப்பெறுகிறது. பொதுவான மொழி, தேசிய மனநிலை, பொருளாதார வாழ்வு, வாழ்வியல் பரப்பு ஆகிய காரணிகள் வரலாற்று வழியில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய சூழலில் இணைந்து தேசிய இனம் உருப்பெறுகிறது. இவற்றில் மொழி முதன்மையான காரணி.

தெலுங்கு அல்லது வேறு அயல்மொழியை பூர்வீகத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நூற்றாண்டுக் கணக்கில் தமிழகத்தில் வாழ்ந்து தெலுங்கு மொழியுடனும், அந்த நாட்டுடனும் தொடர்பற்று, தமிழையே வாழ்க்கை மொழியாக, சமூகத் தாய் மொழியாக ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியே ஆவார்கள். வேற்று மொழிகளை பூர்வீகமாக தாய் மொழிகளாகக் கொண்டவர்களுக்கும் இது பொருந்தும்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா அயல்மொழிக்காரர்களும் தமிழ்த் தேசியத்தின் பகுதி என்று இதன் பொருள் அல்ல. எவ்வளவு காலமாக இங்கு இருந்தபோதிலும், அவர்களுடைய மொழியுடனும், நாட்டுடனும், அவர்களுக்குத் தொடர்புகள் இருந்தால் அவர்கள் தமிழர்கள் என்ற தேசிய நிலைக்கு வராதவர்கள்.

எல்லைப் பகுதிகளில் சிறுபான்மையாக இருப்பவர்கள் தமிழ் தேசியத்தின் பகுதி அல்ல. அவர்கள் தமிழ்த் தாயகத்தின் சிறுபான்மையினராக இருக்க முடியும். அதே நேரம் சிறுபான்மையினர் சிறுபான்மையினராகவே இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. அவர்கள் பெரும்பான்மையினராக ஆக அனுமதிக்க முடியாது என்பதுதான் நாங்கள் அன்றைக்கு வரையறுத்தது. அது இன்றைக்கும் சரியாகப் பொருந்துகிறது என நான் கருதுகிறேன்.

சுப. வீரபாண்டியன்

http://www.yarl.com/forum3/index.php?showt...aded&start=

Share this post


Link to post
Share on other sites

மார்க்சிய இயங்கியலை எழுதிய குணாவின் பாசிச தமிழ்த் தேசியம் தெலுங்கு பேசுகிற தலித் மக்கள் உள்ளிட்டு தமிழகத்தில் நு¡ற்றுக் கணக்கான ண்டுகளாக வாழ்ந்து வருகிற தெலுங்கு பேசுவர்களை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்கிறது. இந்த வெளி§யுற்றம் என்பது அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு தமிழ்தேசியத்தின் பெயரிலான இனக் கொலை நடவடிக்கைக்கான முஸ்தீபு. இதுதான் இனக்கொலையாக கொசவாவில் பொஸ்னியாவில் ருவாண்டாவில் தேசியத்தில் பெயரில் நடந்தது. இது அப்பட்டமான பாசிசம் என மார்க்சியரான கோ.கேசவனும் தலித்தியக் கோட்பாட்டாளரான அ.மார்க்சும் குறிப்பிடுகிறார்கள் இவ்வாறான சூழ்நிலையில் இருந்துதான் நீங்கள் முன்வைக்கும் தமிழ் தேசம் பற்றிய எனது கேள்விகள் அமைகிறது. இவ்வாறான வரலாற்று அனுபவத்திலிருந்து நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசத்தின் கருத்தியல் மற்றும் எதிர்காலம் எவ்வாறாக இருக்கப் போகிறது என்று கருதுகிறீர்கள்?

தியாகு : உங்களுடைய உதாரணம் ஒரு குறிப்பிட்ட வரலாற்று இயக்கத்தின் உதாரணம்.ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு இயக்கம் எடுக்கக் கூடிய முடிவின் தன்மைகள் தொடர்பான உதாரணம். நாம் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒரு கருத்தியலாக தேசியம் என்ற பொதுக் கோட்பாட்டை என்ற பேசாது வரலாற்றுப் போக்கை பார்த்தோமானால் சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேசிய சமுதாயங்கள் உருவாவது என்பது- அந்த தேசிய சமுதாயங்களுக்குப் பொருத்தமான தேசிய அரசுகள்.உருவாவது என்பது ஒரு முற்போக்கான பங்கு வகிக்கிறது. இது இன்று நேற்றல்ல. லெனின் தனது தேசிய இனச் சிக்கல் குறித்த ய்வுகளில் தேசிய இனச் சிக்கலை எப்படி அணுகவேண்டும் என்று சொல்லும் போதும் இதுதான் முதல் செய்த§. முதலாளித்துவ வளர்ச்சியினுடைய எந்தக்கட்டத்தில் ஜரோப்பா எப்படி ஒரு பிற்போக்கு ஜரோப்பாவாக முடிமன்னராட்சி மதகுருமார்கள்¢ன் திக்கத்தில் இருந்த ஜரோகப்பாவாக அரசுகளாக இருந்தபோது- தேசிய அரசுகளாக மொழிவழிப்பட்ட எல்லைக்ககுட்பட்ட அரசுகளாக இல்லாமல் எப்படிக் கலந்து கிடந்தன என்பதையும் பார்ப்தோடு ஐனநாயக வளர்ச்சிப் போக்கில் சமய மறுமலர்ச்சி மதகுருமார்களின் திக்கம் ஒழிக்ப்பட்ட நிலைமை வாக்குரிமையின் விரிவாக்கம் இதனோடு இணைந்துதான் தேசிய அரசுகளின் உருவாக்கத்தை அவர் பார்க்கிறார். சமூகத்தில் ஏற்படுகிற ஐனநாயக வளர்ச்சிக்குப் பொறுத்தமான ஒரு அரசு வடிவம்தான் தேசிய அரசு வடிவம்.

புரட்சிகர ஐனநாயகம் என்று லெனின் குறிப்பிட்டது போல நாங்கள் புரட்சிகர சமூக நீதி என்று குறிப்பிடுகிறோம். தமிழ்நாட்டுச் சூழலில் அது புரட்சிகர சமூகநீதி. புரட்சிகர சமூகநீதிக் கண்ணோட்டத்திலான தமிழ்த் தேசியம். இந்தத் தேசியம் தேசிய எக்ஸக்ளுஸிவ்நெஸ்சுக்கு எதிரானது. குணா போன்றவர்கள் முன்வைக்கிற பாசிசப் போக்குள்ள தேசியத்திற்கு எதிரானது. தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் தமிழர்கள் அல்ல அவர்களை வெளியேற்ற வேண்டும் போன்ற கருத்துக்களை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. வரலாற்றுப் பரிணாமம் என்பதும் உருவாக்கம் ( நஎழடரவழை¦ யனெ ளவயடிடைளையவழை¦) என்பதும் ஒரு நீண்ட செயல்போக்கு கொண்டது. மிகுந்த வரலாற்றுத் தன்மை கொண்டது. இந்த அடிப்படையில் பல்§வுறு பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள். இரத்தசுத்த அடிப்படையில் தேசிய இனம் உருவாவதில்லை. அவர்களை இணைத்துக் கொண்டுதான் தேசிய இனம் உருவாகிறது. அமெரிக்க தேசியத்தைப் பார்த்தோமாயின் வெளிப்படையாகத் தெரியும். நவீன உதாரணம் அமெரிக்கா. அவர்கள் பண்பாட்டில் மட்டுமல்ல மொழியிலேயே இதை நாம் காணலாம். அடிப்படையில் ங்கில வொகாபுலரி இங்கிலீ– ஸ்டரக்சர். உச்சரிப்பு எனும் வகையில் ஸ்லாங் எனும் வகையில் அது பல வகைகளைத் தனக்குள் இணைத்துக் கொள்கிறது. கவே து¡ய தமிழ்த்தேசியம் கலப்பில்லாத தமிழ்த் தேசியம் போன்ற கருத்துக்கள் எனக்கில்லை. நான் விருமபுகிற தமிழ்த்தேசியம் ஒரு அகண்ட ஐனநாயகக் கண்ணோட்டத்தோடு கூடிய சமூக மாற்றத்துக்குகுத் துணைசெய்யக்கூடிய மக்கள் நலன்சார்ந்த சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய தமிழ்த் தேசியமாகும்..

அப்படி இல்லாத தேசியங்கள். ¦ஐர்மன் நாசிசம் என்று சொன்னீர்கள்.. இந்திய வகைப் பாசிசம் இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கட்டம் வரைக்கும் பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கெதிராக இந்திய தேசியம் எதிர்மறையானதாக இருந்தாலும் கூட ஒரு க்கபூர்வமான பாத்திரம் வகித்தது. உளளார்ந்து அதற்கு எந்த முறபோக்குப் பாத்திரமும் இல்லை. அது ஐ¡தியத்தோடு சமரசம் செய்து கொண்டது. ஐ¡தியத்தைப பாதுகாத்தது. க்கபூர்வமான வரலாற்றுக் காலகட்டம் கடந்த பின் அது முற்றிலும் ஏதிர்புரட்சித்தன்மை கொண்டதாக பிற்போககானதாக கியது. அது முழுக்க இந்துத்துவத்தைச் சார்ந்து நிற்கிறது. இராமன் போல் எங்களுக்கு ஒரு தேசியநாயகன் வேண்டுமென மல்கானியா கேட்கிறான். பார்ப்ப்னியக் கருத்தியில்அரசியலாக இந்திய தேசியஅரசியல் இருககிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மதச்சார்பின்மைவாதிகள் உள்பட இந்திய தேசியத்தை முன்வைக்கிற அனைவருமே தவிர்க்கமுடியாமல் இந்துத்வத்தின் பக்கம் போய்விடுகிறார்கள்

தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்மறைப் போக்குகள் பறறி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும. ஓடுக்கப்ப்ட ஒரு தேசியத்தின-வெளியிலிருந்துஏகாதிபத்தியத

Share this post


Link to post
Share on other sites

பெரியார் போலவே இங்கு பக்கம் பக்கமா ஒட்டுபவரின் முன் பின் முரண்பாடுகள்..

முன்பு..

1. புலம்பெயர்ந்தவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அவர்களின் கலாசாரம் பண்பாடு பாரம்பரியத்தில் இருந்து எப்படி மாறினாலும் தமிழ் பேசுவதால் தமிழர்கள்.

இப்போ..

1. தமிழ் பேசுவதுதான் தமிழர்கள் என்று காட்டாது தமிழ் பேசாதவர்களையும் காட்ட வேண்டும். பாரம்பரியம் மரபு வழி அறவழி நின்றிருந்தால் போதும்.

முன்பு..

2. கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் என்றால் என்ன? அவை காலத்தோடு மாறுபடுபவை...! அவற்றை வைத்து தமிழர்கள் என்று அடையாளம் காட்ட முடியாது. அப்படி என்றால் தமிழர்கள் கோவணத்தோடு இருக்க வேண்டும் முடியுமா..?

இப்போ..

2. தமிழர்கள் என்று சொல்ல பாரம்பரியம் மரபு காப்பவர்களாக இருக்க வேண்டும். தமிழ் மொழி தான் பேச வேண்டும் என்ற முக்கியமில்லை.

முன்பு

3. அறம் என்றால் என்ன..? மரபு என்றால்...என்ன. அதைக் கட்டிக்காக்கக் கோருபவர்கள் பிற்போக்குவாதிகள்.

இப்போ...

3. அறம்..மரபு...பாரம்பரியம் காப்பதால் தமிழர் என்றும் காட்டாப்படுவர். அதுவே மூற்போக்கான கோட்பாடு..!

முன்பு...

4. தமிழ் தேசியம் என்பது என்றோ தோன்றிய கோட்பாடு..!

இப்போ..

4. தமிழ் தேசியம் என்பது புலம்பெயர்ந்தவர்களையும் உள்வாங்க என்று இன்று மாற்றியமைக்கப்பட வேண்டிய கோட்பாடு. ( அப்போ புலம்பெயர்ந்தவர்களின் தேசியம் எதுவாக இதுவரை இருந்தது...??)

இப்படிப் பல...முன்னுக்குப் பின் முரணாக அலட்டிக்கொள்வதே பெரியார் என்ற கன்னட பிராமண எதிர்ப்பு சாதி வெறியரின் கொள்கையும் ஆகும்..!

தமிழ் தேசியம் என்பதன் அடிப்படை..இனத்துவத் தேவை..இனம் ...தமிழினம்..என்பதற்கான எந்த சர்வதேச அங்கீகாரமுள்ள பார்வைகளையும் அம்சங்களையும் உள்ளடக்காமல் ஒரு சிலர் புளுகுத்தள்ள என்று இங்கு கோட்பாடுகள் சமர்ப்பிக்கின்றனர். கோட்பாடு கொள்கை என்ன அடிப்படையில் எழுகின்றன என்ற அடிப்படை தெரியுமோவும் தெரியவில்லை. பெரியாருக்கு வக்காலத்து வாங்கப் போய் தமிழர்களின் தேசியத்தை பலவீனப்படுத்தக் கூடிய செயல்களில் இவர்கள் இறங்குவதானது முற்போக்கு என்ற வழமையான இவர்கள் தங்களின் பிற்போக்கான சிந்தனை வெளிப்பாட்டை தெளிவாகக் காட்டுகிறது..!

தமிழ் தேசியம் உலக வரலாற்றில் இடம்பெற வேண்டின்..அதற்கு பல ஆதார அம்சங்களைத் தேட வேண்டிய வேளையில்..நிலைமாறு கோட்பாடுகளைப் புகுத்திக் கொண்டிருப்பதானது இனத்துவ அங்கீகாரத்தையே பாதிக்கும். ஒரு இனம் மொழி பிரதேசம் பாரம்பரிய கலாசாரம் மதம் என்ற அடிப்படைகளில் உருவாகின்றது. அது சார்ந்து எழும் தேசியக் கொள்கை..அடிக்கடி மாறுநிலை அடைவது யாழ் களத்தில் மட்டுமே...! :icon_idea::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

தூயவன் என் மீது தேவையற்று சொற்களை அள்ளி வீசுகிறார்.

மதச்சார்பற்ற பகுத்தறிவுவாதியான என் மீது சமணச் சாயம் பூசுகிறார். எனது குடும்பம் சைவத்தில் ஊறிய வைதீகமான குடும்பம். ஆனால் நான் மட்டும்தான் எங்கள் குடும்பத்தில்முதல் தோன்றிய நாத்திகன்.

சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகளும். அதில் வரும் கவுந்தி அடிகளும் சமணத் துறவி என்று சிலப்பதிகாரமே கூறுகிறது. தூயவன் சிலப் பதிகாரத்தை மட்டுமல்ல அவர் தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்தை பற்றிக்கூட அவருக்கு ஒன்றும் தெரியாது.

நான் சமணத்தை பரப்புபவனாக இருந்தால் ( பரப்புவதற்கு அது மதமல்ல. பௌத்தமும் சமணமும் பார்பனர்களின் உயிர்க் கொலைகளுக்கு எதிராக எழுந்த தத்துவங்கள். ) முதன் முதலில் அதனைத் தோற்றுவித்த வர்த்தமன மகாவீரரைப் பற்றித்தான் பேசியிருப்பேன். அவரைப் பற்றி இன்று வரை ஒரு வரிகூட எழுதவில்லை. ஆனால் நான் வள்ளுவரைப் பற்றியும் இளங்கோவடிகளைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும்தான்அதிகமாகப் பேசியுள்ளேன். காரணம் வள்ளுவரின் மானுடமும் இளங்கோவடிகளின் தமிழ்த் தேசியமும் பெரியாரின் பகுத்தறிவும் என்னைக் கவர்ந்த காரணத்தினால்தான்.

மதங்கள் அனைத்துமே மடமையின் பிறப்பிடம். அதிலும் இந்து மதத்தை எதிர்க்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம்தான்உள்ளது. நமது தமிழர்களை மேலும் மேலும் மடமையில் ஆழ்த்தும் மதம். புழுத்துப் புரையோடிப்போன அந்த மதத்துக்கு புத்துயிர் ஊட்ட புருஷர்கள் இந்த யாழ்களத்தில் புறப்பட்டு விட்டார்கள்.

நான் ஒளவையார் பற்றிக் கதைக்க வில்லையாம். தூயவனே! எனது பதிவுகளைப் போய்ப் பாரும். நீர் கூறும் சமணம் சங்காலத்தில் எட்டிக் கூட பார்க்கவில்லை. அனால் நான் சங்க இலக்கியங்களைப் பற்றி அதிகம் பேசியுள்ளேன். குறிஞ்சி நில மன்னனான முருகன்மீது எனக்கு மதிப்பு உண்டு. அனால் நீர் உயர்த்திப் பிடிப்பது பார்ப்பனர்கன் கற்பித்த பாலகணபதியின் தம்பியான பாலசுப்பிரமணியனை.

தமிழ்த்தேசிய அடையாளங்களை மதங்கள் பின்னுக்கு தள்ளுகின்றன என்பதே எனது ஆதங்கம் அதிலும் இந்துமதம் அந்த அடையாளங்களை காவுகொள்ளப் பார்க்கிறது.

எனது ஒவ்வொரு எழுத்தும் தமிழ்த் தேசியம் என்ற தளத்தில் நின்றுதான் எழுகின்றன. ஆனால் உமது எழுத்தோ ஆரியனின் கால் தடத்திலிருந்து எழுகின்றன.

நீர் தூக்கிப் பிடிக்கும் கழிசடை மதமான இந்து மதத்தை பெரியார் மட்டும் எதிர்க்கவில்லை வள்ளுவர், சங்கப் புலவர் கபிலர் முதற் கொண்டு பாவணர், மறைமலையடிகள், வள்ளலார் இராமலிங்க இடிகள், பாரதிதாசன், மற்றும் இன்று தமிழ்த் தேசியத் தளத்தில் நிற்கும் நெடுமாறன்ஐயா, பேரா. சுபவீ, வரை அனைவரும் காறி உமிழ்ந்தவர்கள்தாம். காரணம் அந்த மதம் தமிழின விரோதத்தைக் கக்குவதால்தான். உம்மைப் போன்ற ஆரிய அடிவருடிகளுக்கு அது தெரியாது. காரணம் இந்துக் கடவுள்களின் பச்சை விபச்சாரத்தை தெய்வீகம் என்று போற்றும் ஞானசூனியம் நீர்.

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தில் சைவமும் தமிழும் இரு கண்கள்..! எந்த மதமும் மனிதனின் அறிவியல் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதாக வரலாறில்லை. மதங்கள் வாழ்வியல் விழுமியங்களை மக்களுக்கு எளிய வடிவில் எடுத்துச் செல்கின்றன. மதங்கள் நெறிகளாக பார்க்கப்பட வேண்டியவை. அவை சொல்லும் அறம்,மரபு, வாழ்வியல் கருத்துக்களை மக்கள் தெளிந்து உள்வாங்க வேண்டும்..! மதங்களும் காலத்துக்கு காலம் சவால்களைச் சந்தித்து அசிங்கமான இடைச் செருகல்களுக்கு ஆளாகி உள்ளன. பெரியார் போன்று வெண்ணையாக இருக்காமல் அன்னமாக இருந்து மதங்கள் போதிக்கும் மனித விழுமிய எண்ணப்பாடுகளை வாழ்வியல் நெறிகளை அற நெறிகளை மக்கள் கையாளும் போது அறிவியல் உலகோடு சஞ்சரிப்பதும் இலகு...மக்களின் வாழ்வும் சுபீட்சம் பெறும்..!

இதை உணராத பெரியார் போன்ற சுயநலவாதிகள் பகுத்தறிவு என்ற போர்வையில் தங்கள் மனதில் இருந்த பாலியல் வக்கிரமான சிந்தனைகளை மதங்கள் மீது காட்டி மக்களை அவமானப்படுத்தினர். பிராமண சமூகத்தைத் தாழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பெரியார் செயற்பட்டதாலேயே அவருக்கு சைவத்தின் மீதும் இந்து சமயத்தின் மீதும் வெறுப்பை பொழிய வேண்டிய தேவை வந்தது. இஸ்லாத்தை கிறிஸ்தவத்தை அவரால் இந்து சமயத்தைப் பழித்தது போல பழிக்க இடமளிக்கப்படவில்லை. நெகிழ்வுப் போக்குள்ள மதமான இந்துமதத்தை தனது பாமரத்தனமான பகுத்தறிவால் வாங்கு வாங்கென்று வாங்கி மூக்குடைபட்டதே பெரியார் கண்ட மிச்சம்..!

அறிவியல் உலகின் வளர்ச்சில் கிறீஸ்தவ மத ஆதிக்கம் என்ன என்பதை அறியாத சிலபேர் இங்கு வந்து மதங்கள் மக்களை மூடர்களாக்குகின்ற எங்கின்றனர். பிறப்புரிமையியல் தொடங்கி பல கண்டுபிடிப்புக்கள் கிறிஸ்தவ மதப் பாதிரியார்களின் முயற்சியால் உதித்தன. பல மத தடைகளையும் மீறி அயன்ஸ்ரீன் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி விபரித்தார். இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற கணித மேதை ஒரு பிராமண சமூகத்தவர்..! அன்னை தெரேசா ஒரு கிறிஸ்தவ மதத்தவர்..! ஆக உலகமே வியக்கும் படி சேவை செய்தவர்கள் பலர் மத நம்பிக்கைகளோடு அறிவியலையும் வளர்த்திருக்கும் போது பெரியார் என்ற பாமரன் மட்டும் தனது சின்னத்தனமான பகுத்தறிவால் மதங்கள் மக்களை மூடர்களாக்குகிறது என்று கூறி பிராமண சமூகத்தின் மீதிருந்த தனது வெறித்தனமா எதிர்ப்பை பலவீனமான தமிழர்கள் மத்தியில் விதைத்து தனது அரசியல் மற்றும் சமூகச் செல்வாக்கை உயர்த்த முனைந்து தோற்றுப்போனார்..! உலகிலேயே இந்துக்கள் அதிகம் வாழும் நாடா இந்தியாவும் அதிகம் இந்துக்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குவதும் பெரியாரின் கூச்சல் போக்கிரித்தனமானது அறிவார்த்தமில்லாதது என்பதை நிறுவி விட்டுள்ளது..! :D

Share this post


Link to post
Share on other sites

கிறிஸ்தவ மதம் அறிவியலுக்கு செய்தவைகள் பற்றி எமக்கு தெரியாது என்று நினைத்துக்கொண்டு தவறான கருத்துக்களை விதைக்க வேண்டும்.

சூரியன் நடுவிலே இருக்கிறது என்ற அறிவியல் உண்மையை சொன்னவர்களை கிறிஸ்தவ மதம் என்ன செய்தது என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?

Share this post


Link to post
Share on other sites

பெரியார் என்பருடைய கருத்து பார்வை பகிர்வு முற்போக்கு சிந்தனை..அது பகுத்தறிவு என்றால்..அதை அங்கிகரிக்க போபவர்களை

தூக்கிலிட வேண்டும்......

சபேசனுக்கு இதை விட்டால் வேறு வேலையே இல்லையாஃ...பார்ப்பாணியம்...ஆரி

Share this post


Link to post
Share on other sites

கிறிஸ்தவ மதம் அறிவியலுக்கு செய்தவைகள் பற்றி எமக்கு தெரியாது என்று நினைத்துக்கொண்டு தவறான கருத்துக்களை விதைக்க வேண்டும்.

சூரியன் நடுவிலே இருக்கிறது என்ற அறிவியல் உண்மையை சொன்னவர்களை கிறிஸ்தவ மதம் என்ன செய்தது என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?

கிறிஸ்தவப் பாதிரிமார் அறிவியல் கற்கவும் ஆய்வுகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்ட அதேவேளை அவர்கள் கடவுள் என்ற நம்பிக்கையை மக்களிடம் தகர்க்கக் கூடிய தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் இன்றும் அமெரிக்க ஆய்வுகூடங்களில் நடத்தப்படும் பல ஆய்வுகள் வெளி உலகுக்கே தெரியாமல் தான் தடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக ஜனநாயகத்தைக் குறை சொல்ல முடியாது. ஆனால் இளங்கோ குறிப்பிட்டது போல பெரியார் சொன்னது போல மதங்கள் மக்களின் அறிவியல் வளர்ச்சிக்கு தடைபோட்டன என்பது தவறு...! அவை மட்டுப்படுத்திய அனுமதிகள் வழங்கின. இன்று அந்த நிலையும் தகர்ந்து மதம் ஒரு வழி அறிவியல் இன்னொரு வழி என்று இரு வழிகளில் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. இதில் ஒன்று இன்னொன்றை கட்டுப்படுத்துவது என்பது தவறான பரப்புரை..கண்ணோட்டமே..! பாடசாலைகளில் விஞ்ஞானமும் படிக்கிறோம்..சமயமும் படிக்கிறோம். சொல்ல முடியுமா சமயம் படிப்பதால் விஞ்ஞானம் விளங்கப்படவில்லை என்று. எவ்வளவு முட்டாள் தனமான வாதம் பெரியார் முன்வைத்தது என்பது இதில் இருந்தாவது உணரப்பட வேண்டும்..! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

மதம் அறிவியலுக்கு கேடுதான்!

பாம்பு சந்திரனை விழுங்குவதால் சந்திர கிரகணம் நடக்கிறது உண்மையாகவே நம்புபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

பிள்ளையாரின் சாபத்தால்தான் சந்திரன் தேய்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்.

மனிதன் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல் என்று நம்புபவர்கள் பல கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

நோய்களுக்கு மருத்துவரிடம் செல்லாமல் ஆலயங்களுக்கும், மதப் போதகர்களிடமும் சென்று மேலும் துன்பத்தை தேடுபவர்கள் இருக்கிறார்கள்.

இப்படி அறிவியலுக்கு கேடு விளைவிக்கின்ற மத நம்பிக்கைகளை சொல்லிக்கொண்டே போகலாம்...

Share this post


Link to post
Share on other sites

மதச்சார்பற்ற பகுத்தறிவுவாதியான என் மீது சமணச் சாயம் பூசுகிறார். எனது குடும்பம் சைவத்தில் ஊறிய வைதீகமான குடும்பம். ஆனால் நான் மட்டும்தான் எங்கள் குடும்பத்தில்முதல் தோன்றிய நாத்திகன்.
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வெறியர்கள், அடிவருடிகள் என்று திட்டித் தீர்க்கும் இளங்கோ தன் பெற்றோர்கள் கூட, இந்து சமயச் சார்புள்ளவர்கள் என்று சொல்வதன் மூலம் மறைமுகமாக தன், பெற்றோரைக் கூட விட்டு வைக்காத போது, என் மீது மரியாதையோடு எழுதுவார் என்று நான் எதிர்பார்த்தது தப்புத் தான். ஆனால் பெரியாரிடம் தாங்கள், பொறுமையைப் படித்ததாக எழுதிக் கொள்ளும், அவரின் இலட்சணம் எழுத்துக்களில் அப்பட்டமாகவே தெரிகின்றது.

சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகளும். அதில் வரும் கவுந்தி அடிகளும் சமணத் துறவி என்று சிலப்பதிகாரமே கூறுகிறது. தூயவன் சிலப் பதிகாரத்தை மட்டுமல்ல அவர் தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்தை பற்றிக்கூட அவருக்கு ஒன்றும் தெரியாது.

உம். உண்மை தான். எனக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள் தான் படித்த மேதாவிகள். பகுத்தறிவு என்பதன் அடிப்படையே, மற்றவர்களைத் தாழ்த்தி தங்களுக்கு பெருமை பேசுவது தானே. எனக்கு ஒன்றும் தெரியாததால் எனி வரும் காலங்களில் எழுதுகின்றபோது, ஆதாரங்களையும் இணையுங்கள். அது தான் பகுத்தறிவாளான உங்களுக்கு அழகு.

நான் சமணத்தை பரப்புபவனாக இருந்தால் ( பரப்புவதற்கு அது மதமல்ல. பௌத்தமும் சமணமும் பார்பனர்களின் உயிர்க் கொலைகளுக்கு எதிராக எழுந்த தத்துவங்கள். ) முதன் முதலில் அதனைத் தோற்றுவித்த வர்த்தமன மகாவீரரைப் பற்றித்தான் பேசியிருப்பேன். அவரைப் பற்றி இன்று வரை ஒரு வரிகூட எழுதவில்லை. ஆனால் நான் வள்ளுவரைப் பற்றியும் இளங்கோவடிகளைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும்தான்அதிகமாகப் பேசியுள்ளேன். காரணம் வள்ளுவரின் மானுடமும் இளங்கோவடிகளின் தமிழ்த் தேசியமும் பெரியாரின் பகுத்தறிவும் என்னைக் கவர்ந்த காரணத்தினால்தான்
சமணசமயம் தான் தமிழ்மக்களுக்கு உரியது என்று கருத்து வைத்து எழுதும்போது மகாவீரரைப் பற்றி நிச்சயமாக உம்மால் எழுத முடியாது. ஏனென்றால் மகாவீரரும் பீஹாரில் பிறந்த ஆரியனே. தமிழர்களுக்கு இந்து மதம் சொந்தமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த உம்மால், மகாவீரரைப் பற்றிக் கதைத்து, சமணத்தையும் ஆரியப் பிறப்பாக காட்ட வைத்துவிடக் கூடாது என்ற அச்சமே அது பற்றிப் பேசவிடாமல் தடுத்தது என நான் உணர்கின்றேன்.

மற்றது "பாப்பானரின் உயிர் கொலைக்கு எதிரான....." என்ற கருத்து பிழையானது. அன்று தமிழர்களும் ( பெரியார் பார்வையில் கன்னடர்களை உள்ளடக்கிய திராவிடம்) அன்று உயிர்பலிகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் முன்பு பலி கொடுத்த இடமே, பின் ஆலயத்தில் பலிபீடமாக மாறியிருக்கும் என்கின்ற சாத்தியத்தை மறுக்க முடியாது. இதை விட கடந்த ஜெயலலிதா ஆட்சியில் பலி கொடுத்தலை தடை செய்தபோது, சுதேசிகளின் உரிமைகளில் தலையிடுவதாகவும், தமிழரின் அடிப்படையைக் குலைப்பதாகவும் கருணாநிதி உற்பட்ட திராவிடக்கட்சிகள் குரல் கொடுத்தனர். பின் அச்சட்டமும் திருப்பபெறப்பட்டது. எனவே சும்மா பாப்பாணி குரோதம் காட்டிக் கொண்டு திரியாதீர்கள்.

பெரியாரின் கருத்து உமக்கு பகுத்தறிவாக தெரிவது உம் எண்ணம். ஆனால் தமிழ்தேசியத்தைக் கூறுபோட்டுச் சிதைக்க வந்த ஒரு போக்கிரிக் கருத்து என்பது என் எண்ணம். அவ்வளவே!

மதங்கள் அனைத்துமே மடமையின் பிறப்பிடம். அதிலும் இந்து மதத்தை எதிர்க்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம்தான்உள்ளது. நமது தமிழர்களை மேலும் மேலும் மடமையில் ஆழ்த்தும் மதம். புழுத்துப் புரையோடிப்போன அந்த மதத்துக்கு புத்துயிர் ஊட்ட புருஷர்கள் இந்த யாழ்களத்தில் புறப்பட்டு விட்டார்கள்.

வழமையான குரோதக் கருத்துக்கள். புதுசாக ஒன்றுமில்லை. ஆனால் இந்துமதம் மற்றய மதங்கள் போல, எவரையும் உள்ளுக்கு வா என்றும் சொல்லவில்லை. வெளியால் போ என்றும் சொல்லவில்லை. சிறிய விடயம் ஒன்றைக் கதைத்தால் உடனே மரணதண்டனை விதிக்கின்ற இஸ்லாம் போல கடுமையாகவும் நடந்து கொள்ளவில்லை. இன்றைக்கு இளங்கோவால் இவ்வளவு தூரம் தனது வெறுப்பை உமிழ இடமளிக்கின்றது என்றால் அது கூட அதன் பெருந்தன்மை. ஏனென்றால் ஒவ்வொருவனுக்கும் சுய அறிவு இருக்கின்றது. இவர்கள் தங்களின் வெறித்தனத்தை உமிழ்ந்தவுடன் அதை நம்பி ஏமாந்து போவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அதனால் தான் இவர்களின் கருத்து எடுபடுவதில்லை.

நிச்சயமாக நான் இந்து மதத்தை உயிருட்ட வேண்டியதில்லை. ஏன் என்றால் இத்தனை கோடி மக்களால் பின்பற்றப்படுகின்ற ஒரு வழிநெறிக்கு நான் கதைத்து தான் பின்பற்றுவார்கள் என்ற விதியில்லை. ஆனால் செத்துச் சாம்பலாகிப் போன சமணப் பித்துக்களுக்கு உயிரூட்டல் செய்வது யார் என்று தெரியும். மயில்பீலியால் நிலத்தைத் தடவு, உச்சவெயிலில் நடுவீதியில் போ என்று மகாவீரர் சொன்னதைக் கேட்டு யார் போவான்?

திருவள்ளுவரை இந்தப் பாடுபடுத்துகின்றீர்கள். அகிம்சை வலியுத்தியவர் மகாவீரர் என்பதற்காக, அகிம்சை வழி நிறுத்திய, காந்தியையோ, அல்லது லெப்.கேணல் திலீபன் அண்ணாவையோ, அன்னை பூபதியையோ எதிர்வரும் காலத்தில் சமணர்கள் என்று கதை விட்டு எழுதாமல் இருந்தால் புண்ணியம்.

நான் ஒளவையார் பற்றிக் கதைக்க வில்லையாம். தூயவனே! எனது பதிவுகளைப் போய்ப் பாரும். நீர் கூறும் சமணம் சங்காலத்தில் எட்டிக் கூட பார்க்கவில்லை. ஆனால் நான் சங்க இலக்கியங்களைப் பற்றி அதிகம் பேசியுள்ளேன். குறிஞ்சி நில மன்னனான முருகன் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் நீர் உயர்த்திப் பிடிப்பது பார்ப்பனர்கன் கற்பித்த பாலகணபதியின் தம்பியான பாலசுப்பிரமணியனை.
நன்றாக நழுவுகின்றீர்கள். முருகவழிபாடு தமிழனுக்கு உரியது என்பதை ஏற்றுக் கொள்கின்றீர் என்கின்றீர். ஆனால் அதே நீர் தான், தமிழனுக்கு கடவுள் இல்லை என்றும், அனைத்து வழிபாட்டு முறைகளும் தமிழருக்குரியதில்லை என்றும் வலியுத்தி வந்ததை முந்திய பதிவுகளில் இருந்து எடுத்துக்காட்டவா? அல்லது திராவிடம் என்பது தமிழ்தேசியத்தை வலியுறுத்தி என்றால் ஏன் முருகவழிபாட்டை, எதிர்க்கின்றீர்கள். மழை தருகின்ற இந்திரனை தேவலோக அதிபதியாக்க விட்டது எம் தப்பு. ஆனால் நீங்கள் என்னடா என்றால் அது அவர்களுக்கே உரியது என்பது எவ்வகையில் சரி?

ஆரியர்கள் வந்து எம் நம்பிக்கைகளை உள்வாங்கி, எம்மில் அதிகாரம் செலுத்துகின்றபோது, பெரியார் சொல்வது போல எம் நம்பிக்கைகளை அடகுவைத்து விட்டு, எமக்கு ஒன்றுமில்லை போலப் போவது என்ன நியாயம் என்பது தான் என்கேள்வி.

இழந்து போனதைப் பெறுவது தான் போராட்டம். எம் உரிமையை இழந்ததால் தான் இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம். முதலில் தமிழ்தேசியம் என்று கதைத்தால் அதைப் பற்றிக் கதையுங்கள். உங்களுக்குள்ள குழப்பம் என்னவென்றால் பெரியாரை ஆதரித்துக் கதைக்கின்றபோது, நாத்திக கொள்கைகளையும், ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றீர்கள். உங்களின் துர்அதிஸ்டமான நிலையைக் கண்டு வருந்துகின்றேன். உலக வரலாறுகளை எடுத்துப் பாருங்கள். அவை அனைத்துமே, மதம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் என்று கொண்டிருக்கும். தமிழனுக்கு ஒரு கலாச்சாரம் இருக்கின்றது என்று உலகத்துக்கு வலியுறுத்த விரும்பினால், மற்றவர்கள் இதை அனைத்தையும் எதிர்பார்ப்பார்கள். அவ்வாறன நிலையில் வழமையான உங்களின் ஆரியம் மீதான வெறி எடுபடாது.

இப்படியான நிலமையை உணர்ந்த சில பகுத்தறிவு பேசுவோர், சைவமக்களின் பொங்கலை, தமிழர் திருநாளாக பிரகடனப்படுத்த முனைகின்றனர்.

தமிழ்த்தேசிய அடையாளங்களை மதங்கள் பின்னுக்கு தள்ளுகின்றன என்பதே எனது ஆதங்கம் அதிலும் இந்துமதம் அந்த அடையாளங்களை காவுகொள்ளப் பார்க்கிறது. எனது ஒவ்வொரு எழுத்தும் தமிழ்த் தேசியம் என்ற தளத்தில் நின்றுதான் எழுகின்றன. ஆனால் உமது எழுத்தோ ஆரியனின் கால் தடத்திலிருந்து எழுகின்றன.

தமிழ்தேசியம் என்று வலியுறுத்த விரும்பினால், அங்கே சனாதனதர்மத்தின் இருப்பை என்றைக்குமே மறுத்துவிட முடியாது. சனாதன தர்மமும் தமிழும் ஒன்றாக ஒட்டி வாழ்ந்த உறவை, இந்து நதிக்கரையில் இருந்த சிற்பங்கள் கூட அடையாளப்படுத்துகின்றன. சுமார் 5000ம் ஆண்டுகளாக தமிழும், சனாதனதர்மமும் ஒன்றாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலமையை, நேற்று வந்த மூடன் கதைத்தான் என்பதற்காக தூக்கிப் போட வேண்டிய தேவை யாருக்குமில்லை.

எந்தவொரு கலாச்சாரத்தின் உருவாக்கமும் மதங்கள் தான் தான் அடிப்படை. அது இயற்கை வழிபாடாக இருந்தாலும் சரி, உருவவழிபாடாக இருந்தாலும் சரி. ஆனால் உங்களின் பகுத்தறிவு என்பது, நேற்று வந்த ஆரியனிடம் எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டு தமிழனின் வரலாறு என்பது, ஈவேரா காலத்தில் தான் ஆரம்பிக்கின்றது என்று கதை எழுதுங்கள் அது தானே உங்களின் ஆசை?

மக்களே!

எந்தவொரு சமுதாயத்தையும் பிரிவினை உருவாக்கி சிதைக்க முடியும் என்பது தான் வரலாறு. வைணவமும், சைவமும் கடுமையான முரண்பாட்டில் இருந்தபோது, இடையில் புகுந்தவை தான், சமணமும், பெளத்தமும். இதை பிற்காலத்தில் உணர்ந்த ஆதிசங்கரர் அனைத்து பிரிவுகளையும் ஒன்றாக்கி, வழிபாட்டு முறைகளும் ஒரே சிந்தனை என்பதை நிருபித்தார். அப்போது அது சரியாக இருந்தபோதிலும், அதில் உள்ள குழப்பங்களே இந்தப் பெரியார் விரோதிகள் பாவிப்பது. சைவமும் வைணவமும் வார்த்தைகளால் மற்றவர்களை தாக்கிப் பேசியது தான், இவர்கள் கொள்ளும் புராணக் கதைகள்.

அவ்வாறன அவதூறுகளை மதம் மீது பற்றுக் கொண்டவர்களே கணக்கில் எடுக்காதபோது, இந்தப் போக்கிரிகள் ஏன் கணக்கில் எடுக்கின்றார்கள்? அவர்களுக்குத் தேவை வசைபாடல். சைவரும், வைணவரும் திருஸ்டித்த அவதூறுகளுக்கு உயிர் கொடுக்கநினைக்கும் இந்தப் போக்கிரிகளின் சிந்தனைகளுக்குள் மாட்டுப்படாதீர்கள்.

எவ்வாறு வைணவ -சைவ பிரிவினைக்குள் இடையில் புகுந்த, சமணமும், பெளத்தமும் தமிழர்களை ஆக்கிரமிக்க நினைத்ததோ, அவ்வாறே, பெரியார் என்ற நபர், தமிழர்களுக்குள் பிரிவினைகள உருவாக்கி மேலும், மேலும் முட்டி மோதி வைக்க முயன்றார். அதன் பலனைத் தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு தமிழனுக்கு சுத்தி அநீதிகள் நடக்கின்றபோது தட்டிக் கேட்ட முடியாத அளவுக்கு பாப்பாணி- திராவிட என்ற பிரச்சனை தமிழனுக்குள் வளர்க்கப்பட்டு, தமிழனின் நியாயமான சிநதனைகள் மூடி மறைக்கப்படுகின்றன. இன்றைக்கு மற்றய மாநிலங்கள் தமிழனின் பிரச்சனைகளைக் கணக்கெடுக்காத நிலமைக்குள் தமிழனுக்குள் வளர்க்கப்பட்ட இந்தப் பிரிவினைவாதங்களும் முக்கிய பங்காற்றுகின்றன.

தமிழ் உலகத்தை மேற்குறித்த, பிராமணர்களும் வளர்திருந்தபோது, அவர்களை பிரிவினை செய்து தமிழனின் வளர்ச்சியைக் குன்ற வைத்து, மேற்கத்திய கலாச்சாரத்தை உள்வாங்க வைத்த பெருமை இந்த கும்பல்களுக்குரியது. தமிழனின் அடைப்படையான ஒவ்வொரு வழிபாட்டு முறைகளையும், பிழை பிடிக்கும் இவர்கள் காதலர் தினம் என்றும், பூப்புனித நீராட்டு விழா வேண்டாம் என்கின்ற இவர்கள், டேற்றிங்கை உள்நுழைய வைத்தும் சிதைக்க முனைகின்றனர்.

உங்களின் எண்ணங்களைச் சிதைக்க இந்தப் போக்கிரிகள் தங்களை, பகுத்தறிவாளர் என்றும், மேதாவிகள் என்று வரையறை செய்து, உங்களைக் கேலி பண்ணியும், மற்றவர்களை மடையர் என்ற நினைப்பிலும் கதைப்பார்கள். ஆனால் ஒன்று. சைவமும் வைணவமும் எப்போது ஒன்றானதோ, அப்போது சவால்களைச் சந்திக்க முடியாமல், எவ்வாறு சமணமும், பெளத்தமும் தோற்றுப் போனதோ, அவ்வாறே இந்த கும்பல்களின் போக்கிரித்தனத்தை தகர்க்க வேண்டுமானால் தமிழ்தேசியத்தை உண்மையான வலியுத்தலை தெளிவாக உணர்ந்து ஒன்றிணைய வேண்டும்..

ஆரியர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான எம் வழிபாட்டு முறைகளை மட்டுமல்ல, இந்தப் போக்கிரிகள் தங்களின் வெறிக் கொள்கைக்கு தமிழ்தேசியம் என மூலாமிடுவதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியதே முக்கிய கடப்பாடாகும்.

( நெடுமாறன் ஜயா தொடக்கம், மற்றய தமிழ்தேசிய ஆதரவாளர்களுக்கு தமிழ் தேசியத்தை நிலை நிறுத்த இப்போதைக்கு தமிழ்நாட்டு நிலமையை கருத்தில் கொண்டு திராவிடக் கொள்கையை வலியுத்துவதைத் தவிர வேறுவழியில்லை. தமிழ்தேசிய என்று வலியுத்த அவர்கள் புறப்பட்டால் அவர்கள் மீதான சந்தேகம் தனித்தமிழ்நாடு என்று மத்திய அரசு எண்ணும். ஆகவே இளைய சமுதாயம் வலியுத்த வேண்டியது இந்தியாவிற்கு தமிழ்தேசியம் பாதிப்பற்றது என்பதையும், அது பெரியார் வலியுத்தல் அல்ல என்பதையும் தான்.)

Share this post


Link to post
Share on other sites

நீர் தூக்கிப் பிடிக்கும் கழிசடை மதமான இந்து மதத்தை பெரியார் மட்டும் எதிர்க்கவில்லை வள்ளுவர், சங்கப் புலவர் கபிலர் முதற் கொண்டு பாவணர், மறைமலையடிகள், வள்ளலார் இராமலிங்க இடிகள், பாரதிதாசன், மற்றும் இன்று தமிழ்த் தேசியத் தளத்தில் நிற்கும் நெடுமாறன்ஐயா, பேரா. சுபவீ, வரை அனைவரும் காறி உமிழ்ந்தவர்கள்தாம். காரணம் அந்த மதம் தமிழின விரோதத்தைக் கக்குவதால்தான். உம்மைப் போன்ற ஆரிய அடிவருடிகளுக்கு அது தெரியாது. காரணம் இந்துக் கடவுள்களின் பச்சை விபச்சாரத்தை தெய்வீகம் என்று போற்றும் ஞானசூனியம் நீர்.

எல்லாவற்றுக்கும் மறுப்பு எழுதிய தூயவனால் மேற்கூறிய எனது எழுத்துக்களை மறுக்க முடியவில்லை. இதில்தான் எல்லா சூட்சுமங்களும் அடங்கியுள்ளது. தூயவனின் மறுப்புகள் கூட அப்பட்டமான பொய்களே!

நான் தமிழர்களின் வரலாற்றை சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்கி (இதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொர்பும் இல்லை. அது சரஸ்வதி நாகரிகத்தின் தொடர்ச்சி என்று இல்லாத நதியைக் கூறி அவாள்கள் புதுக் கரடி விட்டுக்கொண்டிருக்கிறார்கள ) வள்ளுவர் இளங்கோவடிகள் என்று எழுதும்போது இவர் நான் பெரியாரில் இருந்து தொடங்குகிறேன் என்று புதுக் கரடி விடுகிறார். நான் கேட்கிறேன் நெடுமாறன் ஐயாவைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டால் தமிழன் வராலாறு அவரிடமிருற்து தொடங்குகிறது என்று அர்த்தமா?????

இன்று தமிழகத்தில் இந்து மதத்தை தீவிரமாக எதிர்த்து வரும் திருமாவளவன், வீரமணி, நெடுமாறன், சுபவீ, அறிவுமதி, தியாகு, கொளத்தூர் மணி, மணியரசன், இன்னும் பல தமிழ் உணவாளர்கள் தமிழீழத்திற்காக உரிமைக் குரல் கொடுக்கும்போது தூயவனின் எஜமானர்களான இந்து மதக் காப்பாளர்கள் முழு முச்சுடன் அதை எதிர்க்கிறார்கள்.

மதச்சார்பற்ற இனமானத் தமிழ்த் தேசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். தூயவன் நெடுக்காலபோவான் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தை இந்து மதத்தோடு தொடர்பு படுத்தும் இழி வேலையைச் செய்ய முனைகிறார்கள்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், தமிழ்க் கடல் மறைமலையடிகள், மற்றும் தமிழ்ச் சித்தர்கள் போன்ற கொள்கையாளர்களும் எதிர்த்த மதம்தான் நீர் தூக்கிப் படிக்கும் மூவாயிரம் மலங்களின் மொத்தக் கலவையான இந்து மதம்.

பார்ப்பனர்களிடம் மட்டுமல்ல பார்ப்பன வேஷம் போடும் சூத்திரனிடமும் எச்சரிக்கையாக இருங்கள் என்பதுதான் அந்த ஈரோட்டுக் கிழவன் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம், பகுத்தறிவு மற்றும் பயனுள்ள அரசியல் தத்துவம்.

தூயவனே ! உமது எஜமான விசுவாசமும், ஆரிய கைக்கூலித்தனமும் ஈரோட்டுப் பாசறையில் பகுத்தறிவுப் பயிற்சி பெற்ற எங்களுக்கு புரியாமல் இல்லை.

உமது வெற்றுப் பேச்சுக்கள் எம்மிடம் எடுபடாது

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்  செய்திகள் ஆக்கம்கள் இணைக்க முடியவில்லையே எப்படி இணைப்பது ?
  • ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்
  • மட்டுவில் வியாளனுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கு போல படுகுது. பிள்ளையான் கட்டாயம் வெல்லுவார்  இம்முறை கூத்தமைப்பு கிழக்கில் மரண அடி  வாங்கவேண்டும், கிழக்கின் அரசியல் வேறு வடக்கின் அரசியல்வேறு என்று இந்த கூத்தாடிகளுக்கு புரிய வேண்டும். கும்மான் மீது எனக்கு தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும் ,முஸ்லிம்களுக்கு இவரது பெயரை கேட்டாலே வயிற்றில் புளி கரைவதால் இம்முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்   
  • மழை மேகம் பொழியுமா... நிழல் தந்து விலகுமா...
  • சிலோன் விஜயேந்திரன் | ஜெயமோகன் July 12, 2020     கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன். நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல்லிக்காட்டினார். எனக்கு கம்பதாசனைப்பற்றி அவர் எழுதிய சிறுநூலையும் அளித்தார் உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் கம்பதாசனை கொஞ்சம் கவனம் எடுத்து படித்தது அதன் பிறகுதான். அவ்வப்போது அவரைப்பற்றி எழுதியும் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சென்னையில் ஓர் இலக்கியவிழாவில் சந்தித்தேன். மீண்டும் கம்பதாசன் பற்றிய பேச்சு, ஒரு கவிதையை அன்றும் பாடிக்காட்டினார் கம்பதாசன்   இப்படி ஒருவரின் ஆத்மாவை மறைந்த ஒரு படைப்பாளி கொள்ளைகொள்வது இலக்கியத்தின் வியப்புகளில் ஒன்று. சென்ற ஆண்டு விந்தனுக்கு நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது – அதாவது ஒரே ஒருவரால். அவர் விந்தனின் பெரும்பக்தர். விந்தனின் நூல்களை தானே அச்சிட்டு கிட்டத்தட்ட இலவசமாக வினியோகம் செய்தார். என்னை ஓர் இலக்கியவிழாவில் சந்தித்து விந்தனின் நூல்களை அளித்து விந்தனைப்பற்றி எழுதவேண்டும் என்று கோரினார். நான் எழுதினேன் திராவிட இயக்க எழுத்தாளரான விந்தனுக்கு திராவிட இயக்க ஆதரவு ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபட்டு பணமேதும் சேர்க்கவில்லை. அவர் திராவிட இயக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று நான் சொல்லியும்கூட எவரும் அவரைப் படித்ததாகவோ ஏதேனும் எழுதியதாகவோ தெரியவில்லை. ஆனால் ஒருவன் எஞ்சியிருக்கிறான். அவன் எப்போதுமிருப்பான் சிலோன் விஜயேந்திரன் திருப்பூர் கிருஷ்ணன் பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் சிலோன் விஜயேந்திரன் போல் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். *சிலோன் விஜயேந்திரன் என்ற எழுத்தாளரை இன்று எத்தனைபேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் பழகியவர்கள் கள்ளம் கபடமில்லாமல் வாழ்ந்து மறைந்த அவரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சுமந்துகொண்டிருப்பார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் 2004 ஆகஸ்ட் 26 அன்று தம் 58 வயதில், சென்னை திருவல்லிக்கேணி அருகே தாம் தங்கியிருந்த குடியிருப்பில், ஒரு தீவிபத்திற்கு ஆட்பட்டு இறந்து போனார் அவர். இது நடந்து சில நாட்கள் கழித்து ஒரு பத்திரிகைச் செய்தி மூலம் இத்தகவலை அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகம் எப்படிப்பட்ட எழுத்தாளர்களையெல்லாம் கண்டிருக்கிறது என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. சிலோன் விஜயேந்திரன் ஒரு வில்லன் நடிகர். நடிகர் சிவாஜி கணேசனோடு நடித்த `பைலட் பிரேம்நாத்` என்ற அவரது முதல் படமே அவருக்குப் பெரும்புகழ் தந்தது. பிறகு `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார். நடிகர் சுமன் மூலமாக `பிரளய சிம்மன்` என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். பின் தெலுங்குப் பட உலகிலும் புகழ்பெற்றார். தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை நடிகராக வந்தாலும் பெரிதும் வில்லன் பாத்திரங்களிலேயே நடித்தார். அவரது தோற்றம் வில்லனுக்கேற்ற வகையில் இருந்தது. குணத்தில் அவர் வில்லனல்ல, குழந்தை. சிறந்த நாடக நடிகரும் கூட. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஜூலியஸ் சீசர், புரூட்டஸ் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். நாடக நடிப்பிற்காக `நவரச மன்னன்` என்ற பட்டம் பெற்றவர். கவிஞர் கம்பதாசனின் மாபெரும் ரசிகராக வாழ்ந்தவர். கம்பதாசனின் அற்புதமான கவிதையாற்றலைத் தமிழுலகிற்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். `கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார். `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். `அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவைதான். அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது. மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் எனத் தமிழகத்தின் பல மூத்த பதிப்பகங்கள் சிலோன் விஜயேந்திரன் எழுத்துக்கு ஆதரவு கொடுத்தன. அவர் நிறைய எழுதினார். நடிப்பதை விடவும் எழுதுவதே அவருக்கு மிகப் பிடித்திருந்தது. மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற பலரால் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் எனப் பல பட்டங்கள் பெற்றவர். தமிழின் பழைய இலக்கியம் முழுவதையும் கற்றுத் துறைபோகியவர். சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என எல்லாவற்றைப் பற்றியும் அவரிடம் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவரது இலக்கிய அறிவு வியக்கச் செய்வது. பல பழம்பாடல்களை கண்களில் ஒரு மயக்கத்தோடு அவர் கடகடவென ஒப்பிப்பார். காலமாவதற்குச் சில நாட்கள் முன்பு திருவல்லிக்கேணி அருகே தற்செயலாக அவரைச் சந்தித்தேன். என் கைகளைப் பற்றிக் கொண்டு அளவிட முடியாத பாசத்தோடு அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களை நினைத்துப் பார்க்கிறேன். பல காலம் கழித்து என்னைச் சந்திக்க நேர்ந்ததால் அவரது விழிகளில் தென்பட்ட அன்பின் பளபளப்பு இன்றும் நினைக்கும் போதெல்லாம் என்னை நெகிழச் செய்கிறது. பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். வாழ்நாள் முழுவதும் வறுமை அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. தன் புத்தகங்ளை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வருவார். நான் அவருடைய ஒவ்வொரு புதுப் புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அது நான் படிக்க விரும்பும் சிறந்த நூலாகத்தான் இருக்கும். சிறந்த நூல் அல்லாத எதையும் அவர் எழுதியதில்லை. ஆபாசக் கலப்பில்லாமல் சமூகப் பொறுப்போடு எழுதியவர். புது நூல் வெளிவந்ததும் அவர் என்னைச் சந்திக்க வருவது ஏதோ என் மூலம் ஒரு பிரதி விற்றுவிட முடிகிறது என்றல்ல. என்னைச் சந்திக்க அப்படி ஒரு காரணத்தையும் சந்தர்ப்பத்தையும் அவர் உண்டாக்கிக் கொண்டார். நாங்கள் மணிக்கணக்கில் பேசினோமா, நாள்கணக்கில் பேசினோமா தெரியாது. பழைய இலக்கியங்கள் குறித்து அவர் பேசினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தன் நூல் ஒன்று நா.பா. தலைமையில் வெளியிடப் படவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது அவரின் வாழ்நாள் ஆசையாக இருந்தது. நா.பா. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுத்தார். சென்னையில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் அந்தக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இறுதியில் ஏற்புரை சொல்லும்போது சிலோன் விஜயேந்திரன் `நா.பா.வின் தலைமையில் நூல் வெளியீடு` என்ற தன் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், நா.பா.வுக்கு நன்றி தெரிவித்து ஒலிபெருக்கியிலேயே விம்மிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார். நா.பா. காலமானபோது அவர் அடைந்த துயரம் அளவிட இயலாதது. விஜயேந்திரன் தோற்றம் வித்தியாசமானது. செம்மை கலந்து பளபளக்கும் தலைமுடி. கண்களில் எப்போதும் ஒரு சிவப்பு. கரகரப்பான குரல். அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். பொதுத் தோற்றத்திலிருந்து மாறுபட்ட ஒரு தன்மை அவரிடம் இருந்தது. அவரின் தோற்றம்தான் அவரை வில்லன் நடிகராக ஆக்கியிருக்க வேண்டும். வாழ்வில் யாருக்கும் அவர் வில்லனல்ல. என்போன்ற பலருக்கு இனிய நண்பர் அவர். முரட்டுத் தோற்றத்தோடு அவர் திகழ்ந்தாலும் அவரைப் போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள் அபூர்வம். ஈ எறும்புக்குக் கூட அவரால் கெடுதல் நினைக்க முடியாது. விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன். (எந்தப் பொருளில் பாடச் சொன்னாலும் சொன்னவுடன் அடுத்த கணமே தங்குதடை இல்லாமல் உடனே கவிதை பாடுபவர்களை `ஆசுகவி` என்பார்கள். தமிழ் எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் ஆசுகவியாகத் திகழ்ந்தவர். இடைக்காலப் புலவர்களில் பல ஆசுகவிகள் உண்டு.) விஜயேந்திரனும் சொன்னவடன் கவிதை பாடக்கூடிய ஆற்றல் படைத்தவர். `ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வரலாறு` என்பது விஜயேந்திரன் எழுதிய நூல்களில் ஒன்று. தம் தாயார் மதுரையில் பிறந்தவர் என்றும் தந்தை ஈழத்தில் பிறந்தவர் என்றும் விஜயேந்திரன் சொன்னதுண்டு. மற்றபடி அவர் குடும்பம், உறவுகள் போன்றவை குறித்து நான் கேட்டதில்லை. `நவரசத் தனிநடிப்பு` என்றொரு நிகழ்ச்சியைப் பல இடங்களில் நிகழ்த்தினார். எழுத்தால் வருமானம் வராது என்று அவருக்குத் தெரியும். ஆனால் நடிப்பாலும் அதிக வருமானத்தை அவர் ஈட்ட முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். ஏதோ நடிகர்களெல்லாம் மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சமூகத்தில் தவறான ஒரு பிரமை இருக்கிறது. அந்த பிரமை பெரும் வெளிச்சத்தில் மின்னும் முதல்நிலை நடிகர்களைப் பொறுத்தவரை சரி. மற்றபடி துணை நடிகர்களின் பொருளாதார நிலை சொல்லும் தரமுடையது அல்ல. இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை துணைநடிகர்கள் பொருளாதார ரீதியாக எவ்விதமெல்லாம் சிரமப்படுகிறார்களோ என்று நினைத்தால் மனம் பதறுகிறது. விஜயேந்திரன் அவரது கடைசிக் காலங்களில் ஒருநாள் என்னைத் தேடி வந்தார். `சாப்பிட்டீர்களா?` என்றேன். பேசாமலிருந்தார். `வாருங்கள்` என்று உணவகம் அழைத்துச் சென்றேன். நானும் அவருமாகச் சாப்பிட்டோம். கைகழுவிக்கொண்டு வந்த அவர், `இப்படி வயிறாரச் சாப்பிட்டு நெடுநாள் ஆகிறது!` என்றார். அதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்தது. என்னையே கூர்மையாகப் பாசத்தோடு பார்த்த அவர், தன் கைகளால் என் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார். அந்தக் காட்சியை வியப்போடு அந்த உணவகத்தின் பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இலக்கிய உலகில் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்த சிலோன் விஜயேந்திரன் போன்றவர்கள் பாரதியாரின் இலக்கியத்திற்கு மட்டும் வாரிசு அல்ல. அவரது வறுமைக்கும் வாரிசு. இவரைப் போன்ற பலர் இன்னும் தமிழகத்தில் இருக்கிறார்கள். பாரதியைப் பொருளாதார வறட்சியில் வறுத்தெடுத்த தமிழ்ச் சமூகம், அவரது இலக்கிய வாரிசுகளையும் அவ்விதமே பாரதிக்கு இணையாகத் தொடர்ந்து கெளரவித்து வருவது குறித்து நாம் மெச்சிக் கொள்ளத்தானே வேண்டும்!     திருப்பூர் கிருஷ்ணன்     https://www.jeyamohan.in/132375/