Jump to content

கற்றுக்கொள்ளுதல்..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கற்றுக்கொள்ளுதல்.

ஒருவரிடம்  இருந்து   கற்றுக்கொள்ள  நிறைய  விஷயம் இருக்கு ,அதிலும்  நமக்கு  மிக மிக  பிடித்த அல்லது  நாம்  மேலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து  கற்றுக்கொள்ளுதல் என்பது மிக அலாதியானதும் பிரியத்துடன்  கூடியதும் அல்லவா ...

அவ்வாறு தலைவர்  பிரபாகரன் என்னும் மனிதனிடம்  இருந்து  கற்றுக்கொள்ள  அவ்வாறே  நிறைய  விஷயம் இருக்கிறது 
குழந்தைகளுடன்  இறங்கி  தானும் குழந்தையாகும் குணம்,
எதிரியை மதிக்கும் விதம் , 
மிக  நீண்ட கால  செயற்பாட்டுக்கான தயார் படுத்தல், 
நாளை  என்ன  வேணும்  எமக்கு  என்பதற்கான  சரியான திட்டமிடல், 
ஒவ்வெரு  நிர்வாகத்தையும் திறமையின் அடிப்படையிலும் கெட்டித்தனதுடன் கூடிய செயற்பாடு  கொண்டு  இயங்கும்  ஒருவரை  இனம்கண்டு  கொடுப்பது  பொறுப்பை,
காயம் அடைத்த போராளிகள் சும்மா இருக்க  கூடாது  என அவர்களுக்கான  தொழில் படிப்புக்கள்,
உலங்கெங்கும் இளையவரை  அனுப்பி நாட்டுக்கு தேவையான படிப்புக்கள்,
நாட்டில் பெரும் நிர்வாக கட்டமைப்புக்கள்.

என அவரின் இந்த  போராட்ட கால வாழ்வில்  எதையும்  முடியாது ,தெரியாது ,செய்ய இயலுமா பார்ப்பம்  என்னும் கதைகளுக்கும் சொற்களுக்கும்  இடமளித்தது கிடையாது ,செய் ,செய்து  முடி ,செய்யலாம்  ஒரு   பிரச்சினையும்  இல்லை என்னும் ,நம்பிக்கை  வசனங்களே இருந்தது இப்பவும் பலரிடம் இருக்கிறது .

அவ்வாறு  அவரிடம் இருந்து அவரை   புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள நிறையவே எங்களுக்கு  இருக்கும் போது,பலர் இணையங்களில் தங்களை போராளிகளாக விடுதலை பற்றாளர்கள் ஆக காட்டி ,அதி  உச்ச விசுவாசிகள் போல தங்களை  அலங்கரித்து எடுத்ததுக்கு எல்லாம் அவனை போடணும், இவனை போடணும் என குமுறுவது  காணும்  போது ஒன்று மட்டும்  புரிகிறது .

இவர்கள் பிரபாகரன்  என்னும் மனிதனிடம்  இருந்து  எதையும் கற்றுக்கொள்ளவில்லை ,மாறாக அவர் கையில் இருந்த ஆயுதம் பற்றியே அறிந்து  கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,வன்முறை தான் பாதை எனவும் எடுத்தமா  ஆளை  போட்டமா போனமா என்றுதான் பிரபாகரன்  வாழ்ந்தார், என்பதும் தான் இவர்களில்  பிரபாகரன்  பற்றிய புரிதல் தெரிதல் .

அவரிடம்  இருந்த  ஆளுமையை தூர நோக்கு சிந்தனைகளை  புரிந்து கொள்ளவோ ,அறிந்து  கொள்ளவோ இவர்கள்  தயாராக  இல்லை ,இதன்  அடிப்படையில்  தான் இப்படியானவர்களில்  செயல்களால்  தான், பிரபாகரன்  என்னும் மனிதர்  பலர்  மத்தியில்  இன்னும் வன்முறையாளர்  என்னும் வரையறையில்  நிக்கிறார் .

ஆக தலைமை உங்களுக்கு  ஆயுத வழிகளை  மட்டும் காட்ட வில்லை ,மாறாக பல வழிகளை நிர்வாகத்தை கட்டியெழுப்பி நடத்தி  காட்டியவர் ,ஆகவே இவைகளை நீங்களும் தொடர்ந்து செய்யலாம் என்பதுதான் சொல்லவரும் செய்தியாக உள்ளது .

பிரபாகரன் என்றால் துவக்கு தான் என்னும் நிலையை  மாற்றுங்கள் ,அவர் அதை  தாண்டி என்னவெல்லாம்  அங்கு நிர்வகித்தார்  செய்தார் என்று கொஞ்சம்  யோசியுங்கள் ,அவைகளை  மீள எம்மால்  செய்ய  முடியுமா  என  சிந்தியுங்கள் இளையவர்களே .

சரியான ஒரு  தலைவரை, சரியாக பயன்படுத்துவது  தான்,  சரியான பாதைக்கு  வழிவகுக்கும் .

தலைவரை கற்றுக்கொள்ளுங்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

இவ்வளவு தமிழ்ச் சனத்தையும், சிங்கள இராணுவத்தையும்..... மேய்க்கிறத்துக்கு, ஆயுதத்தை நம்பாமல், 
தலைவரை.... மேடையில் நின்று,  நற்சொற்பொழிவு  ஆற்றி....  அவர்களின் மனதை மாற்றியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா.... ரதி.
"மயிலே.... மயிலே.... இறகு போடு என்றால்,  எந்த மயிலும்... இறகு போடாது". என்ற பழ மொழியை நீங்கள் வாசிக்க வில்லையா? :cool: :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

ஆயுதம்  அவரின்  பேரம்  பேசும்  சக்தியாகவே  இருந்தது ,ஒவ்வெரு  போரையும்  புலிகள்  வெல்லும் போதே  உலகம்  சரி  இலங்கை  அரசும்  சரி சமதான  பேச்சுக்கு  இறங்கி  வந்தன ,முழுமையாக  அவர்  ஆயுதத்தை  நம்பி  இருந்தால் அது இலங்கையில்  சிங்கள  மக்கள்  கூட  ஒரு  நிமிடம்  ஏனும்  கண்மூடி  தூங்கி  இருக்க  முடியாது .

அவர்  எல்லாம் சரியாக தான்  செய்தார்  நாம்  தாம்  அவரை  தவறாக  உணர்த்தோம் அதுதான் உண்மை .

நன்றி  வருகை  தந்து  கருத்துக்கள்  பகிர்த்த  அனைத்து  உறவுகளுக்கும் tw_blush:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம்  அவரின்  பேரம்  பேசும்  சக்தியாகவே  இருந்தது ,ஒவ்வெரு  போரையும்  புலிகள்  வெல்லும் போதே  உலகம்  சரி  இலங்கை  அரசும்  சரி சமதான  பேச்சுக்கு  இறங்கி  வந்தன ,முழுமையாக  அவர்  ஆயுதத்தை  நம்பி  இருந்தால் அது இலங்கையில்  சிங்கள  மக்கள்  கூட  ஒரு  நிமிடம்  ஏனும்  கண்மூடி  தூங்கி  இருக்க  முடியாது .

அவர்  எல்லாம் சரியாக தான்  செய்தார்  நாம்  தாம்  அவரை  தவறாக  உணர்த்தோம் அதுதான் உண்மை .

நன்றி  வருகை  தந்து  கருத்துக்கள்  பகிர்த்த  அனைத்து  உறவுகளுக்கும் tw_blush:

உண்மையிலும் உண்மை. தவறுகள் எங்கேயோ இருக்க தலைவரின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் ஏளனம் செய்கின்றார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயங்கள் .

உலக வரலாற்றில் பல தனி மனிதர்களின் ஆழுமை இப்படியான பல நிகழ்வுகளை  தெளிவாக சொல்லியே வந்திருக்கு . 

எதுவும் தெரியாமல் பிரபாகரன் என்ற தனி மனிதன் முப்பது ஆண்டுகளுகள் இலங்கை அரசை இந்திய அரசை ஏன் சர்வதேசத்தையும் தன்னை பற்றிய கவனத்திற்குள் கொண்டுவந்திருக்க முடியாது .

ஆனால் அவருக்கு தெரியாத அவரால் வெளிவர முடியாத விடயங்களும் பல இருந்தது .

அரசியல் காய் நகர்தல் என்ற விடயத்தில்  அவர் தோற்றுவிட்டதுதான் உண்மை .

அவரால் தமிழ் ஈழம் அல்லது தமிழர்களுக்கு ஒரு தீர்வு எடுத்துகொடுக்கமுடியாமல் போனது அஞ்சரன் எழுதிய அவ்வளவு விடயங்களையும் புறம் தள்ளிவிடும் .

பிரபாகரன் போகும் பாதை அவரையும் அழித்து கடைசியில் தமிழர்களையும் அழிக்கும் என்று அப்பவே சொன்னவர்கள் பலர் இருந்தார்கள் அவர்கள் சொன்னதுதான் உண்மை ஆகியதே ஒழிய பிரபாகரனின் என்ற தனிமனிதனின் ஆழுமை அல்ல .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.பிரபாகரன் போகும் பாதை அவரையும் அழித்து கடைசியில் தமிழர்களையும் அழிக்கும் என்று அப்பவே சொன்னவர்கள் பலர் இருந்தார்கள் அவர்கள் சொன்னதுதான் உண்மை ஆகியதே ஒழிய பிரபாகரனின் என்ற தனிமனிதனின் ஆழுமை அல்ல .

Thanks Arjun.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவர்களால் மாரித் தவளை மாதிரி கத்த தெரிந்ததே தவிர தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற முடியவில்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தலைவரில் பிழை பிடிப்பதோ அல்லது குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை. அவரை விமர்சிப்பதற்கு கூட எனக்குத் தகுதி இல்லை.ஆயினும்,
தலைவரால் கூட எங்கள் மக்களை ஒன்றினைக்க முடியாது போய் விட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர் ஆயுதத்தை முக்கியமாக கருதியது.

எந்த அடக்கு முறைக்கு எதிராக போராட தொடங்கினாரோ அதே அடக்கு முறையை தனது மக்களுக்கு எதிராக பயன் படுத்தினார்.அதில் குறுகிய காலத்தில் சில நன்மைகள் இருந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் பார்க்கும் போது மிகவும் ஆபத்தானாது. எங்கட அழிவுக்கு முக்கிய காரணம் அது தான்.
மு.வாய்க்காலின் வன்னியில் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது வட,கிழக்கில் உள்ள மக்கள் வாயை மூடிக் கொண்டு இருந்ததற்கு சுயநலம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும்,முக்கிய காரணம் இது தான்... ஏன் தலைவரால் அனைத்து மக்களையும் ஒன்றினைக்க முடியாது போனது?, மக்களை விடுங்கள் சுயநலமிக்கவர்கள் என்டால் புலிகளில் இருந்து கருணாவோடு பிரிந்து போன புலிகளை கூட ஒற்றுமையாக ஓரணியில் வைத்திருக்க முடியவில்லை?,பிரியாமல் ஏன் தடுக்க முடியவில்லை?...கருணாவின் பிரிவை தலைவர் நினைச்சிருந்தால் தடுத்திருக்கலாம். கருணா அந் நேரத்தில் ஒரு தனி மனிதர் இல்லை.தலைவருக்கே தெரிந்திருக்கும்.

என்ன தான் தமிழ் மக்களுக்குகாகப் போராடினாலும் தன்ட ஊர் மக்களுக்கு அதிக் நன்மைகள் செய்திருக்கிறார்.
சமாதான காலத்தில் இருந்து தனது மனைவியின்/அவரது வழி ஆட்கள்,சு.ப போன்ற அரசியல் வழி சொல்கிறதை கேட்டு ஆமாம் போடத் தொடங்கிட்டார்.
வன்னியில் அந் நேரம் வசித்த மக்களை சந்தித்தாரோ இல்லையோ தெரியாது.ஆனால் இங்கேயிருந்து போன பெரிய தலைகள்,தமிழக சினிமாக்காரர் போன்றவர்களை சந்தித்து தன்ட இமேஜை தானே கெடுத்து கொண்டார்.
முக்கியமாக தலைவருக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இருக்கவேயில்லை.
உலக அரசியலை புரிந்து கொள்ளவில்லை/புரிநது கொண்டாலும் அதற்கேற்ப நடக்க முயற்சிக்கவில்லை.
ஆயுத வெற்றியில் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தார்.

மற்ற இயக்கங்களோ அல்லது தலைவர்களோ பல் வேறு காரணங்களுக்காக போராட முடியாமல் போக தலைவ்ர் மட்டும் தான் நீண்ட கால நோக்கில் இயக்கத்தை கொண்டு நடத்தினார்.அதே நேரத்தில் அவரால் தான் இவ்வளவு அழிவும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வளவு காலம் போராடி,இவ்வளவு மக்களையும்,போராளிளைகயும்,அவரது குடும்பத்தையும்,அவரையும் அழித்து அவர் சாதித்தது என்ன?...இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்களை ஒரு கேவலமான நிலைக்கு தள்ளிய அவப் பெயர் புலிகளுக்கும்,தலைவருக்கும் கிடைத்தது. இதை விட மற்ற இயக்கங்கள் மாதிரி முதலே இயக்கத்தை கலைத்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காதோ என்னவோ?

நாடு கேட்டு போராட‌ வெளிக்கிட்டு,இப்ப மு.வாய்க்காலுக்காக நீதி கேட்டு நிற்கிறோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டுக்கு ஒரு தலைவன் தான் இருக்கமுடியும்.

துவக்கு தூக்கின எல்லாருக்கும் தலைவன் சிந்தனை வரக்கூடாது. அப்படி ஒவ்வொரு இராணுவ சிப்பாய்க்கும் தலைவன் நினைப்பு வந்து விட்டால் அவன் உண்மையான நாட்டு சிந்தனையாளன் அல்ல. 


தன்னடக்கம் ஒவ்வொரு தொழிலும் இருக்க வேண்டும்.

 

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 6.11.2015, 17:16:03, ரதி said:

அஞ்சரன்,நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் அத்தகைய ஆளுமைகள் இருந்தாலும் அவரும் ஆயுதத்தை மட்டும் தானே நம்பினார்

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.