Jump to content

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா


Recommended Posts

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா

 
ஆஸ்திரேலியாவின் கான்பரா வனப்பகுதியில் திரியும் கங்காருகள். (கோப்புப் படம்)
ஆஸ்திரேலியாவின் கான்பரா வனப்பகுதியில் திரியும் கங்காருகள். (கோப்புப் படம்)

கங்காரு, கோலா கரடி, கிரிக்கெட், ஆப்ரா ஹவுஸ் (Opera House) இவற்றைத் தவிரவும் ஆஸ்திரேலியாவின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பு வதற்கு பல விஷயங்கள் உள்ளன.

உலகின் ஆறாவது பெரிய நாடு என்பதைவிட கவனத்தை ஈர்க்கும் விஷயம் ஒரு மொத்த கண்டத்தையுமே அடைத்துக் கொண்டிருக்கும் நாடு அது என்பதுதான். எவ்வளவு நீண்ட கடல் எல்லை! 1.2 கோடி சதுர கிலோ மீட்டர் நீளம்!

இப்போதும்கூட ஆஸ்திரேலி யாவின் கடற்கரைப் பரப்புகளில் தான் மக்கள் அதிகம் வசிக்கி றார்கள். (80 சதவீத ஆஸ்தி ரேலியர்கள் கடற்கரையிலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் அமைந்த பகுதிகளில்தான் வசிக்கிறார்கள்). நாட்டின் நடுபக்கமாக (அதாவது உட்புறம்) செல்லச் செல்ல பசுமையோ பசுமை. ஆஸ்திரேலியாவின் 91 சதவீத பகுதி பசுமையானது என்றால் பெருமூச்சு விடுவதைத் தவிர நாம் என்ன செய்யப் போகிறோம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பலவித தாவர இனங்களும் மிருகங் களும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணக் கிடைக் காதவை. தூய்மை கெடாத மழைக் காடுகள், தொன்மையான பாறை வடிவங்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் கடற்கரைகள் என்று ரம்மியமான இயற்கை வனப்பு களை ஏராளமாகக் கொண்ட நாடு.

சுமார் 200-க்கும் அதிகமான மொழிகள் இங்கே பேசப்படு கின்றன. ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழி. ஆனால் இத்தாலியன், க்ரீக், அராபிக், வியட்நாமிஸ், மாண்டரின் என்று பலவித மொழிகளைப் பேசுபவர்கள் எக்கச்சக்கம். என்ன காரணம் என்பது இன்னொரு புள்ளிவிவரத்தைப் படித்தால் தெளிவாகிவிடும்.

வளரும் நாடுகளை எடுத்துக் கொண்டால் மிக அதிக அளவில் (சதவீதமாகப் பார்த்தால்) பிற நாடுகளிலிருந்து குடியேறுப வர்களைக் கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடம் வகிக்கிறது ஆஸ்திரேலியா. இன்று ஆஸ்தி ரேலியாவில் வசிப்பவர்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் பிற நாட்டில் பிறந்தவர்கள்.

ஆஸ்திரேலியர்கள் உல்லாச வாசிகள். வளர்ந்தவர்களில் 80 சதவீதம் பேர் ஏதோ ஒருவித சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்களாம்.

மடியில் உள்ள பையில் குட்டியை சுமந்து சென்று தாய்மைக்கு புது இலக்கணம் படைத்தாலும் கங்காருவை அங்கே யாரும் தெய்வமாக நினைப்ப தில்லை. எனவே அங்கு கங்காரு இறைச்சி தாராளமாகக் கிடைக் கும்.

ஆட்டிறைச்சியைவிட கொழுப்பு குறைவானது என்பதால் ஆரோக்கியமானது என்ற விஞ் ஞானக் கோணமும் விற்பனைக்கு உதவுகிறது. ஆனால் இதெல்லாம் உதவாத பேச்சு என்றும் தோன்றுகிறது. காரணம் உலகில் உடல் பருமனானவர்கள் நிறைந்த நாடு என்ற பெயரை ஆஸ்திரேலியா அடிக்கடி பெற்று வருகிறது. மக்களில் கால்வாசி பேர் பருத்த உடலுடன் காட்சியளிக்கிறார்கள். ஆக கங்காரு இறைச்சியும் உதவ வில்லை, பலவித விளை யாட்டுகளில் தீவிர ஈடுபாடு கொண்ட வர்கள் என்ற இமேஜும் இந்தக் கோணத்தில் பொருந்தவில்லை.

ஆங்கிலேயர்களை போம் (pome) என்று குறிப்பிடுகிறார்கள் ஆஸ்திரேலியர்கள். Prisoners of Mother of England என்பதன் சுருக்கம் இது.

ஒருகாலத்தில் குற்றவாளிகளை ‘இறக்குமதி’ செய்வதற்காகவே ஆஸ்திரேலியாவைப் பயன்படுத் தினார்கள். ஆனால் இன்று அங்கு நடைபெறும் குற்றங்கள், அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் அதிக அளவில் இல்லை.

மிகப் பெரிய ஒட்டுமொத்த நிலப்பரப்பைத் தவிர டாஸ்மேனியா என்ற தீவும் இதற்குச் சொந்தம். தவிர சின்னச் சின்னத் தீவுகள் நிறைய இந்த நாட்டின் பகுதிகளாக விளங்குகின்றன.

இதன் வடக்கில் இந்தோனே ஷியா, பாபுவா நியூ கினியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளும் வடக்கில் சாலமன் தீவுகளும் தென்கிழக்கில் நியூசிலாந்தும் உள்ளன.

பொருளாதாரச் செழிப்பில் உலகளவில் 12-வது இடத்தில் உள்ளது. வாழ்க்கைத்தரம், உடல் நலம், கல்வி போன்ற பலவற்றில் முன்னணியில் இருக்கிறது.

6 மாநிலங்களைக் கொண்டது ஆஸ்திரேலியா. அவை நியூ சவுத் வேல்ஸ், டாஸ்மேனியா, க்வீன்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரே லியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா. மேலவை, கீழவை இரண்டும் கொண்ட நாடாளுமன்றம் உள்ளது. தவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி அரசு உண்டு. இதன் தலைவரைப் ப்ரிமீயர் என்கிறார்கள்.

தவிர இரண்டு பெரிய எல்லைப் பகுதிகளும் (நம் நாட்டின் யூனியன் பிரதேசங்கள் போல) இங்கு உண்டு. அவை ஆஸ்திரேலியன் கேபிடல் டெரிடெரி மற்றும் வடக்கு டெரிடெரி. இவற்றின் அரசுத் தலைவரை முதலமைச்சர் என்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் ஆளுநர் உண்டு. அவர் பிரிட்டிஷ் மகாராணியின் பிரதிநிதி.

ANZUS ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பை தேடிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த ஒப்பந்தத்தின் விரிவாக்கம் Australia, New zealand, US பாது காப்பு உடன்படிக்கை என்பதாகும். இதன் மூலம் அமெரிக்காவுடனும் இணைந்து செயல்பட ஆஸ்திரே லியா ஒத்துக் கொண்டது. முழுவது மாக பசிபிக் கடல் பகுதி தொடர்பான ராணுவ விவகாரங்களில் இந்த நாடுகள் ஒத்துழைப்பதாக ஒத்துக் கொண்டுள்ளன.

எந்த நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடந்தாலும் அதைப் பொதுவான அச்சுறுத்தலாக நினைத்து மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம் 1949-55 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. முழுவதுமாக கம்யூனிஸத்துக்கு எதிராகப் பலம் வாய்ந்த கூட்டணி இருக்க வேண்டும் என்ற எண் ணத்தில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கை இது எனலாம்.

இதுமுழுக்க நடைமுறைப் படுத்தப்பட்டதா என்பதையும் இதில் நேர்ந்த சில சிக்கல்களையும் பிறகு பார்ப்போம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/அடாவடி-பின்னணி-கொண்ட-ஆஸ்திரேலியா-1/article7849536.ece?homepage=true&relartwiz=true

Link to post
Share on other sites

அடாவடிப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 2

 

 
 
 
 
 • ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களான அபாரிஜின்கள்
  ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களான அபாரிஜின்கள்
 • பழங்குடியின போர் வீரர்கள்.
  பழங்குடியின போர் வீரர்கள்.

கடந்த 1769 அந்த ஆண்டில் அரிதான நிகழ்வு ஒன்று நடக்கவிருந்தது. புதன் கிரகம் சூரியனுக்கு முன்புறமாக அந்த வருடம் கடக்கவிருந்தது. உலகின் தென்பகுதியில்தான் இதைப் பார்க்க முடியும். இதை கவனிப்பதற்காக ஓர் ஆராய்ச்சிக் குழுவை அனுப்பத் தீர்மானித்தது பிரிட்டிஷ் அரசு.

ஆனால் இதில் ரகசியம் ஒன்றும் புதைந்திருந்தது. உலகின் மிகத் தெற்குப் பகுதிகளில் எங்கெல்லாம் பிரிட்டன் கால் பதிக்கலாம் என்பது குறித்து அறிவதுதான் இந்தக் குழுவின் முக்கிய வேலை.

இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டவர் ஜேம்ஸ் குக் என்பவர். இந்தக் கப்பலில் கூடவே ஒரு வானியல் நிபுணரும் தாவரவியல் நிபுணரும் அனுப்பப்பட்டனர்.

ஏப்ரல் 1769-ல் தஹிதி பகுதியிலிருந்து (தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ளது இது) வானியல் அற்புதத்தைக் கவனிக்க முடிந்ததாக வானியல் நிபுணர்கள் செய்தி அனுப்பினர். ஆனால் அந்தப் பயணம் அதோடு நிறைவு பெறவில்லை, தொடர்ந்தது. நியூசிலாந்தை அடைந்தது. அதைத் தாண்டி மேலும் பயணித்தது. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையை அவர்கள் அடைந்தபோது பிரமித்தனர். காரணம் அந்தப் பகுதியை அதுவரை ஐரோப்பியர்கள் கண்டதில்லை.

அவர்கள் சென்ற கப்பலின் பெயர் என்டவர். 1770 ஏப்ரல் 19 அன்று கப்பலில் இருந்தவர்கள் அரைத் தூக்கத்தில் இருந்தபோது, தாவரவியல் நிபுணர் மட்டும் விழித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் விழிகள் விரிந்தன. கேப்டன் ஜேம்ஸ் குக்கை விரைவில் தன்னருகே வருமாறு அழைத்தார். அவர் சுட்டிக் காட்டிய திசையில் அழகிய குன்றுகளும், பசுமையான பள்ளத்தாக்குகளும் காணப்பட்டன.

ஆக ஐரோப்பியர்களின் பார்வை முதலில் விழுந்தது ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைதான். அடுத்த இரண்டே வாரங்களில் அவர்கள் ஒரு குறுகிய கடற்கரைப் பகுதிக்குச் சற்று தள்ளி கப்பலை நிறுத்தினர். இறங்கி கடற்கரையை அடைந்தனர்.

அங்கே இரண்டு உள்ளூர்வாசிகள் தயார் நிலையில் இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஈட்டிகள். தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம் அங்குமிங்குமாகச் சுட்டார் கேப்டன் குக். அபாரிஜின்கள் (உள்ளூர்வாசிகளான மண்ணின் மைந்தர்கள்) சிதறி ஓடினர். வெளியாட்களைப் பற்றிய செய்தியை பரவ விட்டனர். மறைவுகளிலிருந்து அவர்கள் பிரிட்டிஷ்காரர்களை நோட்டமிட, அவர்களோ அந்தப் பகுதியை கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்தார்கள். உடனடியாக அந்த இடத்துக்கு ‘பாடனி பே’ (தாவர விரிகுடா) என்று பெயரிட்டனர்.

இப்படிப் பெயர் சூட்டும் வைபவத்தை அங்கே நிறையவே நிகழ்த்தினார் ஜேம்ஸ் குக். வேறொரு பகுதிக்கு ஹெர்வி விரிகுடா என்று பெயரிட்டனர். (ஹெர்வி என்பது ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி). ஒரு நதிக்கு என்டவர் நதி என்று பெயரிட்டார்கள் (அது அந்தக் கப்பலின் பெயர் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே). இன்னொரு பகுதிக்கு பாயின்ட் சொலான்டெர் என்று பெயர் சூட்டினார்). (சொலான்டெர் என்பது அந்தப் பயணத்தில் இடம் பெற்ற ஒரு விஞ்ஞானியின் பெயர்).

ஒரு சின்னக் குன்றின் மீது ஏறிய ஜேம்ஸ் குக் அங்கு யூனியன் ஜாக் கொடியைப் பறக்கவிட்டார். கூட இருந்தவர்கள் வாழ்த்துகளைக் கூறினார்கள். துப்பாக்கிக் குண்டுகள் முழக்கமிட்டன. ஆஸ்திரேலிய கண்டத்தின் கிழக்குப் பாதி இனி மன்னர் மூன்றாம் ஜார்ஜின் ஆளுகைக்கு வரும் என்று பிரகடனப்படுத்தினார் ஜேம்ஸ் குக்.

அங்குள்ள பழங்குடி மக்களை மிகவும் வியப்போடு கவனித்தார் ஜேம்ஸ் குக். அதை வார்த்தைகளிலும் வடித்தார்.

‘’இவர்கள் ஐரோப்பியர்களைவிட மிக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற் றையும் பெற்றிருக்கிறார்கள்’’.

தான் கால் வைத்த பகுதி பிரிட்டனுக் கானது என்று ஜேம்ஸ் குக் ஏன் அறிவிக்க வேண்டும்? அபாரிஜின்களுக்கு எதிரான போர்ப் பிரகடனமா அது? அல்ல. பிரான்ஸும் போர்ச்சுக்கல்லும் ஓர் உலகின் புதிய பகுதிகளை வலைவீசித் தேடிக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியில் பிரிட்டனுக்கு ஒரு முன்னுரிமை கிடைக்கும் விதத்தில்தான் கேப்டன் குக் அப்படிச் செயல்பட்டார். ஆனால் நேரடி பாதிப்பு என்னவோ அபாரிஜின்களுக்குதான் உண்டானது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2/article7864709.ece

Link to post
Share on other sites

அடாவடிப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 3

 

 
கடந்த 1870-ல் ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸ் பகுதியில் குடியிருந்த பிரிட்டிஷ்காரர்கள்
கடந்த 1870-ல் ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸ் பகுதியில் குடியிருந்த பிரிட்டிஷ்காரர்கள்

பிரிட்டன் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கால் பதித்த தற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே நெதர்லாந்துக் காரர்கள் அந்தப் பெரிய நிலப்பகுதியின் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமித்து விட்டிருந்தார்கள். அதாவது ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதி டச்சுக்காரர்களின் வசம் சென்று விட்டிருந்தது. அந்தப் பகுதியை அவர்கள் ‘‘நியூ ஹாலந்து’’ என்று குறிப்பிடத் தொடங்கினர்.

என்றாலும் அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியை முதலில் தன் வசம் கொண்டு வந்தது பிரிட்டன்தான். தங்கள் கைவசம் வந்த பகுதியை ‘‘நியூ செளத் வேல்ஸ்’’ என்று கேப்டன் ஜேம்ஸ் குக் குறிப்பிட்டார். இது கிட்டத்தட்ட கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதையுமே கொண்டிருந்தது. இந்தப் பகுதி விரைவிலேயே உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் என்று அப்போதே அவர் குறிப்பிட்டார்.

டச்சுக்காரர்கள் தாங்கள் ஆக்ரமித்த பகுதிக்கு எதற்காக நியூ ஹாலந்து என்ற பெயரை வைக்க வேண்டும்? 1644-ல் ஹாலந்தைச் சேர்ந்த கடல்வழி கண்டுபிடிப்பாளரான ஏபெல் டஸ்மான் என்பவர் பல புதிய தீவு களைக் கண்டுபிடித்து அவற்றை ஹாலந்துக்குச் சொந்தமாக்கினார். (ஹாலந்தும், நெதர்லாந்தும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்). இப்போது ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியாக விளங்கும் டாஸ் மேனியா என்ற பகுதிக்குக்கூட இவர் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட தென் பகுதிக்கு டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் என்றுதான் இவர் பெயரிட்டிருந்தார். ஆனால் 1788-ல் சிட்னி பகுதியில் கிழக்கு ஆஸ்திரேலியாவை பிரிட்டன் கைப்பற்றியபோது அந்தப் பகுதிக்கு நியூ செளத் வேல்ஸ் என்று பெயரிட்டனர். உடனே அதே ‘நியூ’ வில் தொடங்கும் விதத்தில் ‘நியூ ஹாலந்து’ என்று அவசரமாகப் பெயரிட்டார்கள் டச்சுக்காரர்கள்.

முதன் முதலில் எழுத்துப் பூர்வமாக இந்தப் பெயரை ‘‘நியூ ஹாலந்து’’ என்று குறிப்பிட்டவர் ஆங்கிலேயேக் கேப்டனான வில்லியம் டாம்பியர்!

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் தான் கால்பதித்த ஆஸ்திரேலியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடியது பிரிட்டன். ஆனால் நெதர்லாந்தைப் பொறுத்தவரை தான் கைப்பற்றிய பகுதிக்கு ‘நியூ ஹாலந்து’ என்று பெயர் வைத்ததே தவிர மற்றபடி டச்சுக்காரர்கள் அந்தப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடவில்லை, நிரந்தரக் குடியேற்றமும் செய்ய வில்லை.

அந்தப் பகுதியில் மண் வளம் சிறப்பாக இல்லாததும், குடிநீர் தட்டுப்பாடு இருந்ததும் நிரந்தரக் குடியேற்றம் செய்வதை தடுத்திருக்க வாய்ப்பு உண்டு.

பிரிட்டன் சுறுசுறுப்பாக செயல்பட்டது. தனது ஆஸ்திரேலிய எல்லையை வரையறுத்துக் கொண்டது. ஆளுநராக பிலிப்ஸ் என்பவரை நியமித்தது.

ஆனால் நியூ ஹாலந்து என்ற பகுதி கொஞ்சம் தோராயமாகத் தான் இருந்தது. அதாவது பிரிட்டன் நியூ செளத் வேல்ஸ் பகுதியை வரையறுத்துக் கொள்ள மீதிப் பகுதி (அதாவது அந்த கண்டத்தின் மேற்குப் பகுதி) ‘நியூ ஹாலந்து’ என்று ஆனது.

மொத்த கண்டத்திற்கு ‘டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ்’ அல்லது ஆஸ்திரே லியா என்று பெயர் சூட்டப்பட்டது 1804-ல்தான். காலப்போக்கில் இந்தப் பெயர் நிரந்தரமானது.

ஜேம்ஸ் குக்கின் வரவுக்குப் பின்னால் ஆங்கிலேயர்களில் ஒரு பகுதியினர் அங்கு நிரந்தரக் குடியேற்றம் செய்வதற்கு அனுப்பப் பட்டனர். கூடவே 11 பிரம்மாண்ட கப்பல்களும் அனுப்பப்பட்டன. இவற்றில் உணவுப் பொருட்க ளோடு ஆயுதங்களும் இருந்தன. 250 ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் இருந்தது பெரிய விஷயமல்ல. 750 சிறைக் கைதிகளும் அனுப்பப்பட்டதுதான் வியப்பு. இத்தனைக்கும் அந்தமான் போல ஆஸ்திரேலியாவில் ஒன்றும் சிறைகள் கிடையாது. பிறகு ஏன்?

புதிய இடத்தில் நிலங்களைப் பண்படுத்த வேண்டியிருந்தன. எதிரிகளை (பழங்குடியினர்!) கையாள வேண்டியிருந்தது. இதற்கெல்லாம் கைதிகளின் உதவி தேவைப்பட்டது.

ஆனால் அவர்கள் இறங்கிய ஆஸ்திரேலியப் பகுதி சேறும், சகதியுமாக இருந்தது. சுத்தமான குடிநீர் குறைந்த அளவிலேயே கிடைத்தது. எனவே கேப்டன் பிலிப் வேறு பகுதியைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். கப்பல் நகர்ந்தது. அங்கு அற்புதமான ஒரு பகுதியைக் கண்டார் பிலிப். அந்தப் பகுதிக்கு பிரிட்டிஷ் உள்துறை அமைச்சரின் பெயரை வைத்தார். அவர் பெயர் சிட்னி பிரபு. அந்த இடம்தான் இன்றைய சிட்னி என்பதை சொல்லத் தேவையில்லை அல்லவா?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3/article7868800.ece

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 4

 

 
1789-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் ‘பாடனி பே’ பகுதியில் பிரிட்டன் கைதிகள் கப்பலில் இருந்து இறக்கப்படுவதை சித்தரிக்கும் வரைபடம்.
1789-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் ‘பாடனி பே’ பகுதியில் பிரிட்டன் கைதிகள் கப்பலில் இருந்து இறக்கப்படுவதை சித்தரிக்கும் வரைபடம்.

ஆளுனர் பிலிப்பின் ஆணைக் கிணங்க, மரங்கள் வெட்டப்பட்டன. தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டன. ‘’முடிந்தவரை அங்கிருக்கும் பழங்குடி இன மக்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தாமலேயே குடியேற்றத்தை நிகழ்த்த வேண்டும்’’ என்றது மேலிடத்து உத்தரவு. இதற்கு இயோரா என்ற உள்ளூர் இனத்தைச் சேர்ந்த பெனெலாங் என்பவரைப் பயன்படுத்திக் கொண்டார் பிலிப்.

பெனெலாங் வெள்ளையர்களின் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் நன்கு புரிந்து கொண்டவராக இருந்தவர். ஆங்கிலேயர்களுக்குப் பெரிதும் உதவினார். அவர் பெயரை ஓரிடத்திற்குச் சூட்டினார்கள் ஆங்கிலேயர்கள். அதன் பெயர் பெனலாங் முனை. இன்றைய பிரபல சிட்னி ஒபேரா ஹவுஸ் இருப்பது அந்த இடத்தில்தான்.

பழங்குடி இனத்தவர் பதறிப் போனார்கள். தங்கள் நிலங்களெல் லாம் பறிபோகின்றனவே! போதாக் குறைக்கு பெரியம்மை நோய் வேறு அவர்களைத் தாக்கியது. கொத்துக் கொத்தாக இறந்தார்கள். வெளிநாட்டு ஆட்களிடம் தங்கள் நிலங்கள் பறிபோன துக்கத்தைத் தாங்க முடியாமல் அதிக அளவில் குடிக்கத்

தொடங்க அதனாலும் இறப்பு கள் அதிகமாயின. ஒரு கட்டத் தில் பெனெலாங்கே தனது செய்கை யின் விளைவு குறித்து அதிர்ச்சி அடைந்தார். அவரும் மதுவுக்குத் தீவிர அடிமையாக அதன் காரண மாகவே இறந்தார்.

ஆஸ்திரேலியாவில் சிறைகளை உருவாக்கிய பிரிட்டன் தங்களது கைதிகளை அங்கு குடியேற்றியது. இதன் மூலம் கைதிகளுக்கு ஒரு புதுவாழ்வு அமைத்துக் கொண்ட தாகப் பெருமைபட்டுக் கொண்டது பிரிட்டன். அந்தக் கைதிகள் பிரிட்டிஷ் குடியேற்றத்துக்கு உதவி னார்கள்.

நியூ செளத் வேல்ஸின் கவர்ன ராக நியமிக்கப்பட்ட பிலிப் கைதி களுக்கு ஒரு சலுகை கொடுத்தார். நடுநடுவே கொஞ்ச காலம் அவர் களுக்குச் சுதந்திரம் வழங்கப்படும். அதாவது ‘பரோல்’. இந்தக் காலக் கட்டங்களில் அவர்கள் தங்களுக் குப் பிடித்த இடத்தில் வசித்து, தங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யலாம்.

ஆனால் புதிய சிக்கல் முளைத்தது. பெண் கைதிகளும் பிரிட்டனிலிருந்து ஏராளமாக அனுப்பப்பட்டனர். இவர்கள் ஆண் கைதிகளால் தொடர்ந்து பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாயினர்.

1803ல் ஆங்கிலேய அதிகாரிகள் மற்றொரு கடும் சிறையை நியூ சவுத் வேல்ஸில் உருவாக்கினர்.

இந்தப் பின்னணியை எல்லாம் மறந்துவிட்டு இன்றயை ஆஸ்திரேலியாவில் 1788 ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியா தினம் என்று கொண்டாடுகிறார்கள். அதுதான் சிட்னிக்கு ஆங்கிலேயக் கப்பல் முதலில் வந்த தினம். இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கும்

வெள்ளையர்களின் முன்னோர் களில் யாராவது ஒருவராவது கைதியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

அதே சமயம் தனியார் நிறுவனம் ஒன்று தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு என்ற இடத் தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இது கொஞ்சம் வித்தி யாசமாக இயங்கியது. அபாரிஜன் களிடமிருந்து நிலத்தை வாங்குவது, அப்படி வாங்கிய நிலத்தை ஆங்கி லேயர்களுக்கு அதிக விலைக்கு விற்பது. கிடைக்கும் லாபத்தைக் கொண்டு பண வசதி இல்லாத, பிரிட்டிஷ் தொழிலாளிகளை ஆஸ்தி ரேலியாவில் குடியேற்றுவது. ஒரு கட்டத்தில் பொருளாதார சீர்குலைவு காரணமாக இந்த நிறுவனத்தை அரசே எடுத்துக் கொண்டது.

ஆங்கிலேயர்களின் குடியேற் றத்தால் அபாரிஜின்கள் எனப்படும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் கடற்கரைப் பகுதிகளிலிருந்து மேலும் மேலும் உள்ளுக்குத் தள்ளப் பட்டார்கள். துப்பாக்கி முனையில் இப்படி இடம் மாறிய மக்கள் புதிய நிலங்களில் தண்ணீரையும், உணவையும் தேடி தவிக்க நேர்ந்தது. குடியேறிகள் மீது பழங்குடி மக்கள் தங்களால் இயன்ற தாக்குதலைச் செய்தார்கள். அவர்களது கால்நடைகளைக் கொல்வது அதில் முக்கிய வழி யாக இருந்தது. பதிலுக்கு வெள் ளையர்கள் பழங்குடி இனமக்கள் தங்கிய பகுதிகளிலுள்ள தண்ணீரில் விஷம் கலந்தனர். நேரடிப் போராட் டங்களும் நடைபெற்றன. பழங்குடி இனங்களில் தலைவர்கள் உரு வாயினர். ஆனால் காலப்போக்கில் ஆங்கிலேயர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் பழங்குடி மக்களுக்கு

ஏற்பட்டது. மிகக் குறைவான கூலிக்கு ஆங்கிலேயர்களிடம் வேலை பார்க்கத் தொடங்கினர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-4/article7876228.ece

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 5

 

 
ஆஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள காடியா தங்கச் சுரங்கம்.
ஆஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள காடியா தங்கச் சுரங்கம்.

மெல்போர்ன், அடிலைடு ஆகியவை இன்றைய ஆஸ்திரேலியப் பெரு நகரங்களில் முக்கியமானவை. அவை எப்படி உருவாயின என்பதைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் தங்கத் தொடங்கிய பிரிட்டிஷ்காரர்கள் ஆட்டுப் பண்ணைகளை அமைத் தனர். அவர்களில் ஒருவரான ஜான் பேட்மேன் என்பவருக்கு மாபெரும் நிலப்பரப்புக்குச் சொந்தக்காரராக வேண்டும் என்று பேராசை முளைத்தது. ஆஸ்திரேலியாவில் இதற்காகப் பயணம் செய்தார். யர்ரா (Yarra) நதிக்கரையில் இருந்த ஓர் இடத்தைப் பார்த்த தும் ‘‘ஒரு கிராமமாகவே விளங்கக் கூடிய இதுதான் என் நகரம்’’ என்று கத்தினார். அங்குள்ள உள்ளூர்வாசிகளுக்கு ஆசை காட்டி அவர்கள் நிலங்களை வாங்கிக் கொண்டார். கொஞ்ச நஞ்சமல்ல இரண்டரை லட்சம் ஹெக்டேர் நிலப்பகுதி! இதற்குப் பதிலாக அவர் கொடுத்தது என்ன தெரியுமா? கம்பளங்கள் மற்றும் கத்திகள் அவ்வளவுதான்.

இதை அறிந்ததும் சிட்னியின் கவர்னர் பர்க் என்பவர் இந்த ஒப்பந்தங்கள் செல்லுபடியாகாது என்றார். ‘’என்ன ஒரு கருணை உள்ளம். உள்ளூர்வாசிகள் ஏமாற் றப்பட்டதை உணர்ந்ததால் உரு வான அறிவிப்பு இது’ என்றெல் லாம் உருக வேண்டாம். ‘இந்த நிலங்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமானது’ என்று கூறிவிட்டு கீலாங் என்ற பகுதியில் பேட்மேனுக்குக் கொஞ்சம் நிலம் ஒதுக்கினார்.

அதே சமயம் தெற்கு ஆஸ்திரேலி யாவில் இருந்த அடிலைடு என்ற பகுதியில் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் தன் ஊழியர்களைக் குடியமர்த் தியது. இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாகக் கொண்டவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கைதிகளோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். தாங்கள் தங்கிய பகுதியின் நிலங்களைப் பிறருக்கு விற்று அந்த தொகையைப் பயன்படுத்தி ஏழை பிரிட்டிஷ் தொழிலாளிகள் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து குடியமர்த்தினார்கள். ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடி உண்டாக, பிரிட்டிஷ் அரசிடம் இந்த நிறுவனம் ஒப்படைக்கப்பட்டது. இதற்குள் அந்தப் பகுதியில் வெள்ளி, ஈயம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் கிடைப்பது கண்டுபிடிக்கப்பட, சுரங்கங்கள் உருவாகத் தொடங்கின.

ஆக அபாரிஜின்கள் எனப் படும் உள்ளூர்வாசிகள் கடற் கரைப் பகுதிகளை விட்டு மேலும் ஆஸ்திரேலியாவின் உட்பகுதிக் குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. அதுவும் பெரும் பாலும் துப்பாக்கி முனையில் அவர்கள் வெளியேற்றப்பட் டார்கள். ‘‘கொஞ்சம் வாடகை கொடுத்துவிட்டு எங்கள் நிலங் களை அனுபவியுங்கள்’’ என்று கெஞ்சும் அளவுக்கு அவர்கள் இறங்கிவிட்டார்கள். உள்ளூர் வாசிகள் எதிர்த்தால் அவர்களது நீர்நிலைகளில் விஷயத்தைக் கலப்பது போன்ற அராஜகங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஈடுபட்ட னர். இதன் காரணமாக அபாரி ஜின்களிடையே தலைவர்கள் தோன்றலாயினர். இவர்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை வெளிப் படையாகவே எதிர்க்கத் தொடங் கினார்கள்.

ஆக்ரமித்த வெள்ளையர்கள் வேறொரு விதத்தில் அபாரி ஜின்களை அமைதியாக்கினார்கள். அற்பமான ஊதியத்துக்கு அவர்களை வேலைக்கு (ஆடு மாடுகளை மேய்ப்பது) அமர்த்தி இதன் மூலம் அவர்கள் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகைப் பற்றி கேள்விப்பட்டு அதிக அளவில் அங்கு ஐரோப்பியர்கள் வரத் தொடங்கினார்கள். ஆஸ்தி ரேலியாவை மேலும் மேலும் கடந்தால் மறுபக்கத்தில் சீனா வந்துவிடும் என்பதுகூட பாமரத்த னமாக எண்ணியவர்கள் இருந் தார்கள். ‘ஆஸ்திரேலியாவின் மறுபுறத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடுகிறது என்று, இல்லை, இல்லை, ஒரு பாலைவனம்தான் இருக்கிறது’ என்றும் பலவித வதந்திகள் பரவின.

இவற்றின் உண்மையை அறியப் பலரும் ஆஸ்திரேலியாவின் மறு பகுதியை நோக்கிப் பயணம் செய்தனர். இவர்களில் சிலர் இறந்து போக, அவர்களை ஹீரோக்களாகக் கொண்டாடி மகிழ்ந்தது ஆஸ்திரே லியா.

கைதிகளை கிழக்கு ஆஸ்திரேலி யாவுக்கு கொண்டு வந்து தள்ளும் பழக்கம் ஒருவழியாக 1840-களில் நிறுத்தப்பட்டது. உன்னதமான வர்கள் தங்குவதற்கேற்ற பிரதேசமாக ஆஸ்திரேலியா கருதப்பட்டதும் ஒரு காரணம்.

1851-ல் நியூ செளத் வேல்ஸிலும் மத்திய விக்டோரியாவிலும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வளவுதான். ஆஸ்திரேலி யாவில் குடியேறியவர்களில் இருந்து இங்கிலாந்திலிருந்து சிலர் வரை விழுந்தடித்துக் கொண்டு அந்தப் பகுதிகளை நோக்கி செல்லத் தொடங்கினார்கள். தங்கச் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் சட்டம், ஒழுங்கு கெடத் தொடங் கியது.

சீனாவிலிருந்து படகுகளில் ஏறி பலர் ஆஸ்திரேலியாவுக்கு வந்தனர். தங்கத்தில் அவ்வளவு ஆசை. ஆனால் ஆஸ்திரேலி யாவிலிருந்த வெள்ளையர்கள் ஆசியர்களைத் தடுத்து நிறுத்த, இனக்கலவரம் மூண்டது. நகர மறுத்த சீனர்கள் சிட்னியிலும் மெல் போர்னிலும் வணிகக் கேந் திரங்களை உருவாக்கினார்கள். அதே சமயம் அவர்களில் பலர் சூதாட்டக் கிடங்குகளையும் விபச்சார விடுதிகளையும் தொடங் கினார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. (இன்றளவும் இந்த இரு நகரங்களிலும் சைனா டவுன் எனப்படும் தனித்துவம் மிக்க பகுதிகள் உள்ளன).

தங்கச் சுரங்கங்கள் காரணமாக மெல்போர்ன் மற்றும் சிட்னி தனி கவனத்தைப் பெற்றது. ரயில் போக்குவரத்து, தந்தி வசதி, மின்சார வசதி போன்றவையெல்லாம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்தப் பகுதிகள் ஏதோ கண் காட்சித் திடல் போல் ஆயின. சிறு பொருள்கள் விற்பனையிலிருந்து விபச்சாரப் பெண்களின் நடமாட்டம் வரை நிரம்பி வழியத் தொடங்கின அந்தப் பகுதிகள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-5/article7886839.ece

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 6

 

 
1854-ல் நடைபெற்ற யுரேகா ஸ்டாக்கேட் புரட்சியை சித்தரிக்கும் ஓவியம்.
1854-ல் நடைபெற்ற யுரேகா ஸ்டாக்கேட் புரட்சியை சித்தரிக்கும் ஓவியம்.

பிரிட்டிஷ் பிரதிநிதியான கவர்னர் அவசர அவசரமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘ஒவ்வொரு மாதமும் அரசு தரும் லைசன்ஸை உரிய தொகை செலுத்திப் பெற்றவர்கள் மட்டுமே அந்த மாதம் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடலாம்’.

விக்டோரியாவின் இந்த லைசன்ஸுக்கான கட்டணம் மிக அதிகமானதாக இருந்தது. இதன் காரணமாக ஏழைகள் தங்கம் தேடும் வேலையை நிறுத்திக் கொண்டு அவரவர் வேலைகளில் ஈடுபடுவார் என்று நினைத்தார் கவர்னர்.

ஆனால் இதில் புதிய சிக்கல் முளை விட்டது. விக்டோரியாவின் ஒரு பகுதியாக இன்னமும் விளங்கு கிறது பல்லாரட் என்ற இடம். இங்கும் தங்கச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன.

இந்தச் சுரங்கங்களுக்கு உரிமை கொண்டாடியவர்கள் அரசின் லைசன்ஸைப் பெற மறுத்தனர். கட்டணத் தொகை மிக அதிகம் என்றனர். அரசோ அடிபணிய மறுத்தது.

சுரங்கக்காரர்கள் புதிய தர்க் கத்தை முன்வைத்தார்கள். ‘‘சுரங்க லைசன்ஸுக்காக நாங்கள் அளிக் கும் தொகை என்பது வரியைப் போலத்தான். வரி செலுத்து பவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறவும் உரிமை உண்டு.

எனவே எங்களுக்கும் அந்த சலுகையை அளிக்க வேண்டும்’’ என்றார்கள். அதுமட்டுமல்ல தங்கள் எதிர்ப்பை விதவிதமாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

பேகெரி குன்று என்ற இடத் தில் ஒரு கோட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டு, அது தங்கச் சுரங்கக் காரர்களுக்கு உரியது என்று அறிவித்தார்கள். இதற்கெல்லாம் தலைமை தாங்கியவர் பீடர் லலோர் என்பவர். அவர் சுரங்கக் காரர்களின் தலைவர் ஆனார். போதாக்குறைக்கு அரசுக்கு எதிராக புரட்சியைத் தொடங்கினார்கள். இதற்கு யுரேகா ஸ்டாக்கேட் என்று பெயரிட்டனர். தங்களுக்கென்று ஒரு கொடியை வேறு உருவாக்கிக் கொண்டார்கள்.

பிரிட்டனால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்களது ராணுவம் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் 30க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். கோட்டையின்மீது படபடத்த புதிய கொடி ராணுவ வீரர்களால் கிழிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அது அரசு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு அங்கு விஜயம் செய்யும் வி.ஐ.பி.க்களுக்கு இந்தக் கொடியிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கத்தரித்து கொடுக்கத் தொடங்கினார்கள். பிரிட்டனின் நேர்மையை வலியுறுத்தும் கெளரவச் சின்னமாக இது பார்க்கப்பட்டது. மகாராணி இரண்டாம் எலிசபத்துக்குக்கூட இதிலிருந்து ஒரு பகுதி அனுப்பப்பட்டதாம்.

அதற்குப் பிறகு ஆஸ்திரேலிய சரித்திரத்தில் இந்தக் கொடி (ஒரு கொடி கிழிக்கப்பட்டால் என்ன? அதைப்போல பல கொடிகளை உருவாக்க முடியாதா? என்ன?) பல முறை பல புரட்சிகளுக்குப் பயன் படுத்தப்பட்டது. ஆக சுரங்கக்காரர் களால் உருவாக்கப்பட்ட இந்தக் கொடி அரசுக்கு எதிராகப் புரட்சிகள் செய்யும் பலருக்கும் பொதுவான கொடியானது.

பல தொழிற்சங்கங்கள் இந்தக் கொடியைப் பயன்படுத்தத் தொடங்க, அரசுக்கு கடும் எரிச்சல் உண்டானது. ‘‘எந்தக் கட்டிடத்தின் மீதும் இந்தக் கொடி பறக்கக் கூடாது’’ என்று தடை பிறப்பித்தார் அன்றைய பிரதமர் ஜான் ஹோவர்டு.

2008ல் ஒரு குறிப்பிட்ட அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விளையாட்டு ரசிகர்கள் மேற்படி கொடிகளை அசைக்க, ஆஸ்திரேலிய கால்பந்துக் கூட்ட மைப்பு இதற்குத் தடை விதித் தது. இந்தக் கொடியை வைத்தி ருப்பவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றியது. அரசியல் சின்னங்களை விளையாட்டுப் போட்டிகளின்போது பயன்படுத் துவது சரியல்ல என்று கூறியது.

ஆஸ்திரேலியாவின் ஜனநாய கமே சுரங்கக்காரர்களின் புரட்சி யிலிருந்துதான் தொடங்கியது என்பது சிலரின் கருத்து.

அதுவும் தங்கம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் லைசன்ஸ் தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்பது பலருக்கும் (முழுவதுமாக சுரங்கம் தோண்டி யும் தங்கம் தட்டுப்படாதவர் களுக்கு) அதிகத் துன்பத்தை அளித்தது. அந்தக் காலகட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் விக்டோரியாவிலுள்ள தங்கச் சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பிரிட்டனி லிருந்து வந்தவர்கள். இவர்களில் சீனர்களும் கணிசமானவர்கள் (சுமார் 40000) இருந்தனர்.

சுரங்கம் தோண்டுபவர்களில் பல அபாரிஜின்களும் கூட சம்பந்தப் பட்டிருந்தனர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7895387.ece

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 7

 

 
1938-ம் ஆண்டில் சிட்னியில் வாழ்ந்த சீனர்கள். (கோப்புப் படம்)
1938-ம் ஆண்டில் சிட்னியில் வாழ்ந்த சீனர்கள். (கோப்புப் படம்)

வாரம் இருமுறை லைசன்ஸ் தொடர்பான சரிபார்ப்பை அரசு செய்தது. உரிய லைசன்ஸ் இல்லாத வர்களுக்குக் மிகக் கடுமையாக அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஒருமுறை ஸ்காட்லாந்து நாட்டு சுரங்கத் தொழிலாளி ஒருவரை பலர் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டனர். என்றாலும் அந்தக் கொலைகாரர்கள், சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பிவிட்டனர். இதற்குக் காரணம் ஒரு நீதிபதி என்ற தகவல் பரவியது.

இதைத் தொடர்ந்து சுரங்கம் வெட்டுபவர்கள் அக்டோபர் 17 அன்று ஒரு கூட்டத்தை நடத்தினர். விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை நீதிக்கு முன் மீண்டும் நிறுத்த வைப்போம் என்றார்கள். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் பென்ட்லிக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலையும் தீக்கிரையாக்கினார்கள்.

(பென்ட்லி என்பவர் மேற்குறிப் பிட்ட கொலையைச் செய்தும் தப்பித்தவர்களில் முக்கியமான வர்). இதைத் தொடர்ந்து தீ வைத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மூன்று பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சுரங்கம் வெட்ட லைசன்ஸ் வழங்கு வதை நிறுத்த வேண்டுமென்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அனை வருக்குமே வாக்குரிமை வேண்டு மென்றும் அவர்கள் வலிமையாகக் குரல் எழுப்பினர். (அனைவருக்கும் என்றால் குறிப்பிட்ட வயது நிரம்பிய அனைத்து ஆண்களுக்கும் என்றுதான் அர்த்தம். ஏனென்றால் உலக அளவில் அப்போது எந்தத் தேர்தலிலுமே பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது).

நவம்பர் 29, 1854 அன்று மற்றொரு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுரங்க வேலை செய்பவர்கள் தாங்கள் பெற்றிருந்த லைசன்ஸ்களை பகிரங் கமாகவே எரித்தார்கள். அதோடு தென்சிலுவைக் கொடி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். பின்னாளில் ‘யுரேகா கொடி’ என்று இது பிரபலம் அடைந்தது.

1855-ல் சீனர்களுக்கு எதிரான ஒரு சட்டம் இயற்றப்பட்டது. தங்க வேட்டை நோக்கத்தில் எக்கச்சக்க மான சீனர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட, (சுமார் அரை லட்சம்பேர்) சீனர்களுக்கு எதிரான போக்கு பரவத் தொடங்கியது.

சட்டம் அமுலுக்கு வந்ததும் பல சீனர்கள் பிரிட்டிஷ் பிரஜைகளாகி விட சம்மதித்து விட்டனர். இதைத் தொடர்ந்து காய்கறி மற்றும் பழ விளைச்சலில் அவர்கள் முன்னணி வகித்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு சீனக் கப்பல் மெல்போர்ன் துறை முகத்தை நோக்கிப் பயணம் செய் தது. அங்கு அந்த கப்பல் நுழை வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிட்னி துறை முகத்துக்கு அந்தக் கப்பல் வந்து சேர்ந்தது.

இந்தக் கப்பல் வருவது தெரிந்த தும் பெரும் கூட்டம் ஒன்று நாடாளுமன்றத்தை முற்றுகை யிட்டது. சீனப் பொருள்களை ஆஸ்திரேலியாவில் இறக்க அனு மதிக்கக் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். பிரதமர் பார்கேஸ் இதை ஏற்றுக் கொண்டார். ‘இந்த மறைமுகமான சீன முற்றுகையை நான் தடுத்து நிறுத்துவேன்’ என்றார்.

சீன வணிகர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். ‘‘ஆஸ்திரேலியாவில் நிரந்தர மாகத் தங்கிய சீனர்கள் இறக்கு மதி செய்யும் பொருள்கள் இவை. எனவே கப்பலில் வந்து சேர்ந்த பொருள்களை சிட்னி துறைமுகத் தில் இறக்க அனுமதிக்கலாம்’’ என்றது நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் பிரதமர் இதை ஏற்கவில்லை.

இப்போதும்கூட சீனாவும் ஆஸ்திரேலியாவும் நண்பர்கள் அல்ல.

தென் சீனக்கடலில் சீனா இப்போது ஒரு தீவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளெல்லாம் பதற்றமடைந்திருக்கின்றன. அந்தப் பகுதியிலுள்ள 200 சிறு சிறு நிலத்திட்டுகளை சீனா, வியட்நாம், தைவான் ஆகியவை சொந்தம் கொண்டாடுகின்றன. அந்தத் திட்டுகளின் சிறு பகுதிகளை ப்ரூனே, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகியவை தங்களுக்கு உரியது என கூறிவருகின்றன.

இந்த நிலையில் சீனா அங்குள்ள ஒரு பெரிய நிலத்திட்டில் தனக்கென்று ஒரு தீவு அமைத்துக் கொள்ள முயற்சிப்பதைப் பிற நாடுகள் விரும்பவில்லை.

‘‘இருதரப்புப் பேச்சு வார்த்தை நடத்தலாமே’’ என்று பிலிப்பைன்ஸ் பிரதமருக்கு சீன அதிபர் அழைப்பு விடுத்தார். ஆனால் இதை ஏற்க மறுத்துவிட்டார் பிலிப் பைன்ஸ் பிரதமர். ‘’ப்ரூனே, மலேசியா, வியட்நாம், தைவான் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சேர்த்து வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும் என்கிறார். சீனா வுக்கு இதில் தயக்கம் இருக்கிறது.

சீனாவின் இந்தத் தீவுக் கட்டுமானத்தைத் தொடர்ந்து சுற்றி யுள்ள நாடுகளில் பலவும் அமெரிக் காவின் உதவியை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டன. ஏனென்றால் சீனாவுக்கு எதிராக என்றால் அமெரிக்க உதவி தாராளமாகக் கிடைக்கும் என்பது அந்த நாடுகளின் எண்ணம்.

அமெரிக்க ராணுவத் தலைமை யகமான பென்டகன் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக் கிறது. ‘’கடந்த இரண்டே வருடங் களில் சீனா, தென்சீனக்கடலில் உள்ள 1174 ஹெக்டேர் பரப் புள்ள நிலத்திட்டுகளை ஆக்கிரமித் துள்ளது’’ என்கிறது அந்த அறிக்கை.

பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் பதற்றத் துடன் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ‘‘ஆஸ்தி ரேலியா எந்த ஒரு தரப்பையும் ஆதரிக்கக் கூடாது. நடு நிலையோடு விளங்க வேண்டும்’’ என்றிருக்கிறார்.

ஆஸ்திரேலியா மெளனம் சாதிக்கிறது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-7/article7899548.ece

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 8

 
 
8 மணி நேர வேலையை வலியுறுத்தி 1990-களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நாடாளுமன்றம் முன்பு பேரணி நடத்திய தொழிலாளர்கள்.
8 மணி நேர வேலையை வலியுறுத்தி 1990-களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நாடாளுமன்றம் முன்பு பேரணி நடத்திய தொழிலாளர்கள்.

கடந்த 1856-ம் ஆண்டு உலகத் தொழிலாளர்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்த ஆண்டு.

அதற்கு முன்பெல்லாம் ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழி லாளர்கள் தினமும் மிக அதிகமான நேரத்துக்கு (சுமார் 12 மணி நேரம்) வேலை வாங்கப்பட்டனர். இதற்கெதிராக அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி நாடாளுமன்றத்துக்கு ஊர்வல மாகச் சென்றனர். இதைத் தொடர்ந்து பொதுப் பணியில் ஈடுபடும் கட்டிடத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்றும் பழைய ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு சட்டம் முதலில் இயற்றப்பட்டது ஆஸ்திரேலியாவில்தான்.

ஆனால் அதே ஆண்டு நம்மில் பலராலும் ஏற்க முடியாத ஒரு ஏற்பாடும் அரங்கேறியது. அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்களும் பிரதி நிதிகளும் இனி மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவானது. நல்ல விஷயம்தானே என்பீர்கள். மூன்று அதிகப்படித் தகவல்கள். ஒன்று, ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை, இரண்டு அவர்கள் வெள்ளையர்களாக இருக்க வேண்டும். மூன்று அவர் களுக்குச் சொந்த வீடு இருக்க வேண்டும் அல்லது கணிசமான வாடகை தந்து அவர்கள் பிறர் வீட்டில் குடியிருக்க வேண்டும்.

விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா ஆகியவை சுயாட்சி அந்தஸ்து பெற்றன. எனினும் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆகியவை பிரிட்டன் வசம்தான்.விரைவிலேயே நியூ சவுத் வேல்ஸிலிருந்து குவின்ஸ்லாந்து பகுதி பிரிந்தது.

1880-கள் பொதுவாக ஆஸ்தி ரேலியாவுக்கு நன்மையாகவே அமைந்த வருடங்கள் எனலாம். இந்த காலகட்டத்தில் தங்கச் சுரங்கங்களால் பலனடைந்தவர் களில் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்து கொண்டு தங்களுக்கென புறநகர் பகுதிகளில் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதன் காரணமாக ரியல் எஸ்டேட் வணிகம் மிக அதிகமாக வளரத் தொடங்கியது - முக்கியமாக மெல்போர்னில்.

உலகிலேயே ஆஸ்திரேலியத் தொழிலாளிகள்தான் அதிஷ்ட மானவர்கள் என்று குறிப்புகளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள் அந்தக்கால எழுத்தாளர்கள். நல்ல உணவு, சிறந்த உடை, சொந்த வீடு என்றெல்லாம் அவர்களில் பலரும் நிறைவாகவே வாழ்ந்தார் களாம்.

ஆனால் புறநகர் பகுதிகளில் எல்லாம் வீடுகள் கட்டிக் கொள்வது மிகவும் அதிகரித்தபின் பழங்குடி மக்கள் மேலும் மேலும் தாங்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து துரத்தப் பட்டார்கள். கூடவே அவர் களுக்கு ஆதரவாக பிரிட்டன் இருப் பதுபோல் பசப்பு வார்த்தைகள் மட்டும் வலம் வந்தன. கண்துடைப்பு நாடகம் அரங்கேறியது.

1883-ல் அரசியல்வாதியும் முதலீட்டாளருமான அலெக் ஸாண்டர் ஃபாரஸ்ட் என்பவர் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்த கிம்பர்லி என்ற ஒரு பகுதியின் நில முகவராக தன்னை காட்டிக் கொண்டார். இந்தப் பகுதி மிகப்பெரியது. இங்கிலாந்தை போல கிட்டத்தட்ட மூன்று மடங்கு பரப்பளவு கொண்டது. 2,10,00,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆஸ்திரேலியர்களுக்கு குத்தகைக்கு விட்டார். பின்னாளில் அபாரிஜின்கள் ஆயுதம் தாங்கி தங்கள் எதிர்ப்பைக் காட்டியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணமாக அமைந்தது.

1887-ல் ஹென்றி லாசன் என்பவர் ‘குடியரசின் கீதம்’ என்ற பாடலை இயற்றினார். இதை ஆஸ்திரேலியாவின் தேசிய கீதமாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது ஏற்கனவே பிரிட்டிஷ் மகாராணியின் புகழ் பாடும் தேசிய கீதத்தை தொடரலாமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறத் தொடங்கின.

1899-ல் தென்ஆப்பிரிக்காவில் போயர் போர் (The Boer War) தொடங்கியது. பிரிட்டிஷ் சாம்ராஜ் யத்தின் சார்பாகப் போரிட ஆஸ்தி ரேலிய ராணுவ வீரர்களும் அனுப் பப்பட்டனர். இவர்கள் (முக்கிய மாக) குதிரைப் படைவீரர்கள். பிரிட்டிஷ் ராணுவத்தினரைவிட போர் கலையில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று பரவலாகக் கருதப்பட்டது. இப்படி அனுப் பப்பட்ட 12,000 ஆஸ்திரேலியர் களில் சுமார் 600 பேர் போரிலும் நோய்வாய்பட்டும் இறந்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. லண்டனில் ஆஸ்திரேலி யாவுக்கான அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் இதை ஏற்றுக் கொள்வது குறித்து கருத்துக் கணிப்பு கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிட்டன் இதை மிகக் கடுமையாக எதிர்த்தது.

பதிலுக்கு ‘‘பொதுவான அரசியல மைப்புச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இந்த கண்டத்தின் பிற பகுதிகளோடு எங்களை இணைக்கும் ரயில் பாதைகளுக்கான செலவுகளை எங்கள் தலையில் கட்டக்கூடாது’’ என்றது மேற்கு ஆஸ்திரேலியா. இதற்கு பிரிட்டன் சம்மதித்தது.

புதிய தலைநகர் ஆஸ்திரேலி யாவுக்குத் தேவை என்று கருதப்பட்டது. அது எது என்பதில் கடும் குழப்பங்கள் ஏற்பட்டன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-8/article7903352.ece

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 9

 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள யுரேகா டவர். (கோப்புப் படம்)
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள யுரேகா டவர். (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியாவின் தலைநகரம் சிட்னி என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘பாவம், மெல்போர்ன்தான் அந்த நாட்டின் தலைநகரம் என்பதைக்கூட அறியாத அப்பாவிகள் அவர்கள்’’ என்று இது குறித்து விமர்சிக்கும் அப்பாவிகளும் உண்டு.

இந்த இரண்டு நகரங்களில் எதுவுமே ஆஸ்திரேலியாவின் தலைநகரம் அல்ல. கான்பெர்ராவுக்குத்தான் அந்தப் பெருமை. சமீபத்தில் தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடியது கான்பெர்ரா.

இன்றளவும் மெல்போர்ன் மக்களுக்கும், சிட்னி மக்களுக்கும் குடுமிப்பிடி சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது. தங்கள் நகரம்தான் சிறந்தது என்று அவரவரும் கூறிக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு அடிலெய்டு மற்றும் ப்ரிஸ்பேன் ஆகிய நகரங்களும் தங்கள் முக்கியத்துவத்தை வெளிக்காட்ட முனைந்திருக்கின்றன.

‘‘எங்கள் உணவு வகைதான் சீப் அன்ட் பெஸ்ட். சிட்னி மக்களில் பலரும் மரியாதை தெரியாதவர்கள். நாங்கள் அப்படியல்ல. எங்கள் ரத்தத்திலேயே கலை ஊறி இருக்கிறது. டிராம் போக்குவரத்து எங்களிடம்தான் இருக்கிறது. தலைசிறந்த பல்கலைக்கழகத்தை (மெல்போர்ன் பல்கலைக்கழகம்) கொண்டிருப்பது நாங்கள்தான். உலகின் தென்பாதியில் உள்ள மாபெரும் அங்காடியான ‘Chaddy’ எங்கள் நகரில்தான் உள்ளது. உலகின் மிக உயரமான குடியிருப்புப் பகுதிகள் அமைந்த டவர் எங்களிடம் உள்ள யுரேகா டவர்தான். எங்கள் பொதுப் போக்குவரத்து மிகக் குறைவான கட்டணம் கொண்டது. உலக நீச்சல் போட்டிகள் நடைபெற்றது எங்கள் நகரத்தில்தானே. உச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய நிறுவனங்களில் பத்தில் ஏழு மெல்போர்னில்தான் இருக்கின்றன’’ என்று அடுக்கும் மெல்போர்ன் நகரத்தினர் எதிர்தரப்பின் எதிர்மறை விஷயங்களையும் பட்டியலிடுகிறார்கள்.

‘‘ஆஸ்திரேலியாவின் மிக மாசடைந்த நகரம் சிட்னிதான். சிட்னிக்காரர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். அந்த நகரின் டாக்ஸி ஓட்டுனர்கள்கூட கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள். அங்கு போக்குவரத்து நிர்வாகம் சரியல்ல. குரோனுல்லா (Cronulla) கடற்கரைக் கலவரங்களைப் போல எங்கள் நகரத்தில் எந்த அசிங்கமும் அரங்கேறவில்லை.

துறைமுகம் ஒபேரா ஹவுஸ் ஆகிய இரண்டை விட்டால் சிட்னியில் என்ன இருக்கிறது? எங்கள் நகரின் கட்டடக்கலை பலவிதங்களிலும் ரோல் மாடல். சிட்னியின் காப்பியை மனிதன் குடிப்பானா? சிட்னியை பார்க்கச் செல்வார்கள். ஆனால் வசிப்பதற்கு மெல்போர்னைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்’’ என்கிறார்கள் முத்தாய்ப்பாக.

வேறு சில மெல்போர்ன் ஆதரவாளர்களோ

‘‘சிட்னியை வடிவமைத்தது கிரிமினல்கள். மெல்போர்னை வடிவமைத்தது பொறியியல் வல்லுநர்கள்’’ என்கிற அளவுக்குக்கூடச் செல்கிறார்கள்.

இதைப் படிக்கும்போது ‘அதென்ன குரோனுல்லா கலவரங்கள்?’ என்ற கேள்வி எழுந்தால் இதோ அதற்கான விளக்கம்.

டிசம்பர் 2005-ல் நடைபெற்றன அந்தச் சம்பவங்கள். குரோனுல்லா என்பது சிட்னியின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு கடற்கரைப் பகுதி. அங்குள்ள சில உள்ளூர் சிறுமிகளிடம் லெபனானைப் பூர்வீகமாகக் கொண்ட சில ஆஸ்திரேலியர்கள் தவறாக நடந்து கொண்டார்கள் என்ற செய்தி வேகமாகப் பரவியது. (இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று பின்னர் தெரிய வந்தது). தவிர அங்குள்ள இரண்டு சமூக சேவகர்களும் தாக்கப்பட்டதாக ஒரு கூடுதல் செய்தி பரவியது. கடலில் யாராவது மூழ்கினால் அவர்களைக் காப்பாற்றும் சேவையை செய்ய விருப்பத்துடன் பதிவு செய்து கொண்ட சேவகர்கள் அவர்கள்.

டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை ஐயாயிரத் துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு குரோனுல் லாவில் கூடினார்கள். அரபுகளாகத் தோற்ற மளித்த ஆண்களை அந்த ‘மண்ணின் மைந்தர்கள்’ தாக்கினார்கள். லெபனானி லிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறி யவர்கள் பதிலுக்குத் தாக்கினார்கள்.

அப்படித் தாக்கிய குழுவைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் ஒருவன் ஆஸ்திரேலியக் கொடியை எரித்தான். இது பிரச்னையை மேலும் அதிகமாக்கியது. (மண்ணின் மைந்தர்கள் குழுவைச் சேர்ந்த பலரும் ஆஸ்திரேலியக் கொடி அச்சிடப்பட்ட உடைகளை அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது).

காவல்துறையின் அடக்குமுறை போதிய அளவு பலனளிக்கவில்லை. பலரும் படுகாயம் அடைந்தனர். 104 பேர் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது. பொதுச் சொத்துகளுக்கும் தனியார் சொத்துகளுக்கும் பெரும் சேதம் உண்டானது.

நல்லவேளையாக அதற்குப் பிறகு அங்கு கலவரங்கள் தொடரவில்லை. என்றாலும் அப்பகுதியில் ஓர் அமைதியின்மை தொடர்ந்து நிலவுகிறது. இதைத்தான் மெல்போர்ன்காரர் களில் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சிட்னிக்காரர்கள் இதையெல்லாம் கேட்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சிரிக்கிறார்கள்.

‘‘நூறுக்கும் மேற்பட்ட அழகிய கடற்கரைகள் எங்களிடம்தான் இருக் கிறது. அற்புதமான பல தீவுகள் எங்கள் நகருக்குச் சொந்தமானது. சிற்பக்கலையின் உன்னதத்தைப் பேசும் கலை வேலைப் பாடுகள் எங்களிடம்தான் இருக்கின்றன. எங்கள் நகரத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுமே உடற்பயிற்சியில் தேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். எங்கள் நகரின் வெப்ப நிலையும் எப்போதுமே சகித்துக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும். உலகின் தலைசிறந்த அழகிய இடங்களிலிருந்து ஒரிரு மணி நேரத்தில் எங்கள் நகரத்துக்கு வந்துவிடலாம்’’ என்கின்றனர் சிட்னிகாரர்கள்.

ஊடகங்களில் இப்படியொரு பட்டிமன்றத்தை இந்த இரு நகரங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரி, சிறந்த, புகழ்பெற்ற இந்த இரு நகரங்களில் ஒன்றுதானே ஆஸ்திரேலியா வின் தலைநகராக இருந்திருக்க வேண்டும்? பிறகு எப்படி கான்பெர்ரா நாட்டின் தலைநகரானது?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-9/article7911755.ece?homepage=true&relartwiz=true

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 10

 

 
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம்.
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம்.

இன்று கான்பெர்ராவில்தான் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் உள்ளது. அரசுத் துறைகள் அந்த நகரில்தான் இயங்குகின்றன. மகாராணியின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரலின் இல்லமும் அங்குதான் இருக்கிறது. ஆஸ்திரேலிய போர் நினைவகம், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், தேசிய அருங்காட்சியகம் போன்ற பல முக்கிய அமைப்புகளும் கான் பெர்ராவிலிருந்து இயங்கு கின்றன. ராணுவ பயிற்சியின் தலைமையகம்கூட இங்கிருந்து தான் இயங்குகிறது.

ஒரு நாட்டின் தலைநகரில் இவையெல்லாம் இருப்பது இயல்புதானே என்று கேட்கத் தோன்றுகிறதா?

நியாயம்தான். ஆனால் ஆஸ்திரேலியாவின் தலைநகராக எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுக்கும்போது சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்கள் அதிகமாகவே பரிசீலிக்கப்பட்டன என்பதைக் கூறினோம். பின் எப்படி கான்பெர்ராவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது? காரணம் நியூ சவுத் வேல்ஸ். அது மிகத் தெளிவாகவே கூறிவிட்டது. ‘எங்கள் பகுதியில் தலைநகர் அமைந்தால்தான் நாங்கள் ஆஸ்திரேலியக் கூட்டமைப்பில் இருப்போம்’ என்று.

அதே சமயம் கடற்கரைக்கு மிக அருகே தலைநகரம் இருக்கக் கூடாது என்றும் யோசிக்கப்பட்டது. கொள்ளை நோய்கள் அந்தப் பகுதிகளில் வர வாய்ப்பு அதிகம். தவிர எதிரிகளின் தாக்குதலும் கடற்கரைப் பகுதியிலிருந்துதான் தொடங்கும்.

ஆக மேலே கூறப்பட்ட பின்னணி களையும் கணக்கில் கொண்டு, கான்பெர்ரா தலைநகராகத் தேர்ந் தெடுக்கப்பட்டது. தலைநகருக் குரிய கட்டுமானப் பணிகள் அங்கு நடைபெற்று முடியும் வரையில் அரசு தாற்காலிகமாக மெல்போர்னி லிருந்து இயங்கும் என்றும் அறிவிக் கப்பட்டது. அதே சமயம் மெல்போர்ன் ஒருபோதும் தலைநக ராக அரசு ஆவணங்களில் குறிப் பிடப்படாது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் அரசு தனது எல்லைக்குள் இருந்த கான்பெர் ராவை பிரிய ஒத்துக் கொண்டது. கான்பெர்ரா தனிப்பரப்பானது.

வெளி நாட்டினரை அனுமதிப்பதில் வெளிப்படையாக ஆஸ்திரேலியா தயக்கம் காட்ட வில்லைதான். ஆனாலும் அவர் களின் மனவோட்டம் ஒரு சட்டத்தின் மூலம் தெளிவாகவே தெரிந்தது.

கடந்த 1901-ல் இமிகிரேஷன் கட்டுப்பாடுச் சட்டம் அங்கு அறி முகப்படுத்தப்பட்டது. இது ‘வெள்ளையர் ஆஸ்திரேலியக் கொள்கை’ என்றே அழைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து ஆங்கில உச்சரிப்புக்கான தேர்வில் வென்றால்தான் ஆஸ்திரேலியா வில் தங்க முடியும். அதாவது ஐரோப்பியர்கள் அல்லாதவர்களை வடிகட்ட அறிமுகமான இந்தச் சட்டம் அடுத்த 60 வருடங்களுக்குத் தொடர்வது.

1902-ல் பெண்களுக்கு வாக்குரிமை உண்டு என்ற பெரும் திருப்புமுனையை ஆஸ்திரேலியா ஏற்றுக் கொண்டது. ஆனால் பழங்குடியினருக்கும் ஆசிய, ஆப்ரிக்க பூர்வீகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாக்குரிமை கிடையாது. 1904-ல் கிரிஸ் வாட்ஸன் என்பவர் ஒரு மைனாரிட்டி அரசை அமைத்தார். உலகிலேயே தேசிய தொழிலாளர் அரசு என்ற ஒன்று முதலில் உருவானது இங்குதான்.

பின்னர் ஆல்ஃப்ரெட் டியாசின் என்பவர் அறிமுகப்படுத்திய ஒரு சட்டம் குறிப்பிடத்தக்கது. 12 முதல் 14 வயது வரை மற்றும் 18 முதல் 20 வயது வரை உள்ள சிறுவர்கள் கட்டாய ராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும்.

முதலாம் உலகப்போர் உருவானபோது அதில் ஆஸ்தி ரேலியா உற்சாகமாகப் பங்கு கொண்டது. 1914-ல்தான் ஜெர்மனி மீது போர் புரிந்ததாக பிரிட்டன் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் அதற்கும் முன்னதாகவே ஆஸ்திரேலிய ராணுவம் தன்னை தயார் நிலையில் வைத்துக் கொண்டது. ஒருவிதத்தில் ஆஸ்தி ரேலியா போர் வியூகங்களில் தன்னிச்சையுடன் செயல்பட்டது எனலாம்.

துருக்கியில் உள்ள கல்லிப்புலி என்ற இடத்தில் 1915-16-ல் போர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் படைகள் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை. ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றுவது இதன் முக்கிய நோக்கம். இப்படிக் கைப்பற்றினால் ரஷ்யாவுக்கான கடற்பயணம் எளிமையாகும். போருக்கு இது வசதியாக இருக்கும்.

இந்தப் போர் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா தீவிரமாகவே ஈடுபட்டது. இருதரப்பிலும் பெரும் சேதம். பிரிட்டிஷ் தரப்பால் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை. என்றாலும்கூட ஆஸ்திரேலியாவில் இதனால் ஒரு பெரும் எழுச்சி உண்டானது. எனினும் அரசின் கணக்குப்படியே 7594 ஆஸ்திரேலி யர்கள் இதில் உயிரிழந்தனர். 20,000 பேருக்குக் கடும் காயம்.

முதல் உலகப்போர் முடிந்தி ருந்தபோது போரில் இறந்திருந்த ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம். ஒன்றரை லட்சம் பேருக்குக் கடும் காயம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-10/article7918815.ece?homepage=true&relartwiz=true

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 11

 
ஆஸ்திரேலியாவின் 50 டாலர் கரன்ஸியில் இடம்பெற்றுள்ள எடித் கோவன் புகைப்படம்.
ஆஸ்திரேலியாவின் 50 டாலர் கரன்ஸியில் இடம்பெற்றுள்ள எடித் கோவன் புகைப்படம்.

கடந்த 1921-ல் எடித் கோவன் என்ற பெண்மணி ஆஸ்தி ரேலிய நாடாளுமன்ற உறுப்பி னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறை ஒரு பெண்ணுக்கு இப்பெருமை கிடைத்தது. (இந்த இடத்தில் வேறொரு முக்கியத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 1924-ல் குடிமகன்கள் அத்தனைபேரும் தேர்தலில் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் அரங் கேறியது). ஆனால் அவர் கூறிய ஒரு கருத்து கடும் விமர்சனத் துக்கு உள்ளானது. ‘‘இல்லத் தரசிகள் குடும்பத்துக்காக எவ் வளவு உழைக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் அந்தந்த குடும்பத் தலைவர் நியாயமான ஊதியத்தைத் கொடுக்க வேண்டும்’’. இது பலத்த சர்ச்சைகளை எழுப்பியது. பலவிதங்களில் அவர் நிந்திக்கப் பட்டார். என்றாலும் அவரது வாதத்தின் நியாயம் காலப்போக் கில் உணரப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலியாவில் அச்சிடப்பட்ட கரன்ஸியில் அவர் உருவமும் இடம் பெற்றது.

1930-க்களில் பங்குச் சந்தை யில் பெரும் வீழ்ச்சி. ஆஸ்திரேலி யாவுக்கு அளித்த கடனைத் திருப்பித் தருமாறு பிரிட்டிஷ் வங்கிகள்கூட நிர்பந்தம் அளித்தன. தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அரசின் செல வுகள் கட்டுப்படுத்தப்பட்டன. என்றாலும் மூன்றில் ஒரு பங்கு ஆஸ்திரேலியர்கள் வேலை யில்லாத நிலையில், தொழிலாளர் கட்சி அரசின் தலைவரான ஜேம்ஸ் ஸ்கல்லின் என்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமராகவும் விளங்கினார். அந்த நாட்டின் முதல் கத்தோலிக்கப் பிரதமர் இவர்தான். ஆனால் பொருளாதாரச் சீர்குலைவு காரணமாக இவர் பதவி இறங்க நேரிட்டது. அதே தொழிற் கட்சியைச் சேர்ந்த ஜோசப் லியான்ஸ் என்பவர் (இவர் முன்னாள் ஆசிரியர் மற்றும் டாஸ்மேனியாவின் பிரதமர்) பிரதமர் ஆனார்.

ஆஸ்திரேலியா பற்றி எழுதும் போது கிரிக்கெட் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலி யாவின் பங்கு முக்கியமானது.

1932-33 என்பது உலக கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா வித்தி யாசமான ஒரு சூழலுக்கு ஆளானது. அது இங்கிலாந்துக்கு ஒரு கருப்புப் புள்ளியும் கூட. ‘’பாடிலைன்’’ என்ற பெயரில் இது பிரபலமானது. கிரிக்கெட் ஒரு கனவான்களின் ஆட்டம் என்பது தவிடு பொடியானது.

டான் பிராட்மேனை கேப்டனாக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு கடும் அதிர்ச்சி. 1933 ஜனவரியில் நடைபெற்றது அந்தப் பரபரப்பான நிகழ்வுகள்.

டான் பிராட்மேன் அன்று ஆங்கிலேய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவரது சராசரி ரன் என்பது 139 என்பதாக இருந்தது. தவிர இந்தியா-பாகிஸ்தான் அணிகளைப் போல அப்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இரண்டு அணி களும் கடும் பகைவர்கள். இங்கி லாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் டக்ளஸ் ஜார்டைன். ‘‘பிராட்மேனை எப்படி வீழ்த்துவது?’’ இதுதான் ஜார்டைனின் முக்கிய சவாலாக இருந்தது. தனது மார்புக்கு அருகே பவுன்சாகி வரும் பந்தை அடிக்க பிராட்மேன் சிரமப்படுகிறார் என்பதை அறிந்ததும் ஹரால்டு லார்வுட் என்ற தனது அணி பந்து வீச்சாளரைக் கூப்பிட்டு ஒரு திட்டம் தீட்டினார் ஜார்டைன்.

வேகமாகப் பந்து வீசுவது, விக்கெட்டின் லெக்ஸ்டம்பின் அருகே மிக உயரமாக எழும்படி பந்தை வீசுவது. பேட்ஸ்மேனுக்கு இதில் பெரும் சங்கடம். நகர்ந்தால் விக்கெட் விழுந்துவிடும். பந்தை அடித்தால் மிக அருகில் நின்றி ருக்கும் ஃபீல்டர்களில் ஒருவர் பிடித்து விடுவார். இரண்டையும் செய்யவில்லை என்றால் பலத்த அடிபடும்.

அதேசமயம் கிரிக்கெட் விதிகளின்படி இப்படிப் பந்து வீசக் கூடாது என்பதல்ல.

இந்த வகைப் பந்துவீச்சு காரண மாக விளையாட்டு மைதானத்தில் கடும் அதிர்ச்சிகள் உண்டாயின. அதுவும் ஆஸ்திரேலிய ஃபீல்டு மேனான பெர்ட் ஓல்டுஃபீல்டு தலையில் பந்தினால் அடிபட்டு கீழே வீழ்ந்ததும் மைதானத்தில் இருந்த 50000 பேரும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி எழுந்து நின்றனர். இங்கிலாந்து அணி விளையாட்டு வீரர்கள் நடுங்கிப் போனார்கள். எப்படித் தப்பிக்கலா மென்று யோசித்தனர். பந்து வீச்சாளர் ஹரால்டு லார்வுட் தனது அணியினரிடம் ‘’பார்வையாளர்கள் நம்மைத் தாக்க வந்தால் ஸ்டம்ப்புகள் மூலம் நாமும் தாக்கலாம்’’ என்றார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என்றாலும் பாடிலைன் வகைப் பந்து வீச்சு இங்கிலாந்துக்கு அவப் பெயரைக் கொண்டு வந்தது. அதே சமயம் ‘‘இது ஜெயிப்பதற்கான ஒரு வியூகம். சட்ட மீறலும் அல்ல. எனவே இந்த சாமர்த்தியம் பாராட்டப்பட வேண்டும்’’ என்று கூறுபவர்களும் உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-11/article7922749.ece

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 12

 
கடந்த 1971 ஜனவரி 5-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே நடைபெற்ற உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி. (கோப்புப் படம்)
கடந்த 1971 ஜனவரி 5-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே நடைபெற்ற உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி. (கோப்புப் படம்)

கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக் கின்றன.

ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான்.

ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 1971-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் மைதானத்தில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. டெஸ்ட் மேட்ச்தான்.

ஆனால் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு போட்டி நடைபெற வில்லை. காரணம் மழை கொட் டித் தீர்த்தது. ‘‘இனி இந்தப் போட்டி நடக்காது’’ என்று அமைப்பாளர்கள் அறிவித்தனர். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றம் அளவு கடந்ததாக இருந்தது. சும்மா பேருக்கு ஒரே நாளில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தலாமா என்று யோசித்தார்கள். நாலாவது நாள் நல்லவேளையாக வருண பகவான் பார்வையாளராக வரவில்லை.

1971 ஜனவரி 5 அன்று நடந்தது அந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி! ஒவ்வொரு அணி யும் 40 ஓவர்கள் பந்து வீசின. வென்றது ஆஸ்திரேலிய அணி. பார்வையாளர்களுக்குப் பேரா னந்தம்.

‘‘அட, ஒரு நாள் போட்டியும் நன்றாகத்தானே இருக்கிறது’ என்று நினைத்தார்கள் விளையாட்டு ரசிகர்கள். ஆனால் பல நாடுகள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. (பின்னர் 1975-ல் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் அறிமுகமாயின).

அடுத்த பெரும் திருப்பு முனையை அறிமுகப்படுத்திய கெர்ரி பாக்கரும் ஆஸ்திரேலி யர்தான். அதுவரை பல்வேறு தேசங் களின் அணிகள் மட்டுமே போட்டியிட்டுக் கொண்டிருக்க, இவர் ‘தனிப்பட்ட ஒரு நாள் போட்டிகளை’ அறிமுகப்படுத் தினார். ஆஸ்திரேலிய அணி ஒருபுறமும், பிற உலக நாடுகளின் அணி மறுபுறமுமாக இது விளை யாடப்பட்டது. உலகெங்கும் உற்சாகமான ஆதரவும் கடுமை யான கண்டனமும் ஒருசேரக் கிடைத்தது.

கெர்ரி பேக்கர் இப்படி ஒரு முயற்சியில் ஏன் ஈடுபட வேண்டும்? பல கிரிக்கெட் வீரர்களுக்குப் போதிய அளவில் வருமானமில்லை என்று தான் நினைத்ததாகவும் அந்த நிலை மாறவேண்டுமென்று இப்படித் திட்டமிட்டதாகவும் அவர் கூறியதுண்டு. ஆனால் இன்னொரு காரணமும் இருந்தது. உலகளாவிய கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்தி ரேலியாவில் ஒளிபரப்பும் உரிமை அப்போது ABC எனப்படும் ஆஸ்தி ரேலிய ஒளிபரப்புக் குழுவிடம் மட்டுமே இருந்தது. இந்த நிலை மாறவேண்டும் என்று நினைத்தார் ஒரு டி.வி. சேனலுக்குச் சொந்தமான கெர்ரி பாக்கர். இன்று நடைமுறையில் சகஜமாகிவிட்ட பல விஷயங்கள் கெர்ரி பாக்கர் உருவாக்கிய போட்டிகளில்தான் அறிமுகமாயின.

தொலைக்காட்சிக் கோணத்தில் பலவித மாறுதல்கள். சிவப்பு வண்ணக் கிரிக்கெட் பந்து வெள்ளை நிறத்திலும் அறிமுக மானது. எக்கச்சக்கமான கேமரா கோணங்கள், கிராஃபிக் தொழில்நுட்பங்கள், பெருத்த தொகைக்கு தொலைக்காட்சி உரிமங்கள், வெள்ளை உடைக்குப் பதிலாக வண்ண வண்ண உடைகளுடன் கிரிக்கெட் வீரர்கள், பளீர் என்ற விளக்கொளியில் இரவிலும் ஆடப்பட்ட பந்தயங்கள்! ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிகபட்சம் பத்து ஓவர்கள் மட்டுமே பந்து வீசலாம் என்பதிலிருந்து வானிலை சரியில்லை என்றால் எவ்வளவு ஓவர்கள் என்பதுவரை கிரிக்கெட் விதிகளிலும் பலவித மாற்றங்கள். முக்கியமாக பந்தயம் போரடிக்கக் கூடாது. வேகம் வேண்டும். ‘டிராவில்’ முடியாமல், ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். இந்தக் கோணங்களில் ஃபீல்டிங்கிலும் பல வியூகங்கள் விதிகளாயின.

ஆஸ்திரேலியாவுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கிரிக்கெட் டெஸ்ட் பந்தயச் சரித்திரத்தில் ‘டை’யில் முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பங்கு பெற்றது. முதல் ‘டை’ ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் ஏற்பட்டது. இரண்டாவது சென்னையில் நடைபெற்றது.

1960 - 61ல் நடைபெற்ற முதல் போட்டி ஆஸ்திரேலிய அணியுடன் மேற்கிந்தியத் தீவு அணி மோதியது. இரண்டாவது போட்டி 1986-87-ல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது இந்திய அணி.

கிரிக்கெட் மட்டுமல்ல, டென் னிஸ் விளையாட்டிலும் ஆஸ்தி ரேலியாவுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. கிராண்ட் ஸ்லாம் பந்தயங்கள் என்று குறிப்பிடப்படும் கவுரவம்மிக்க நான்கு பந்தயங் களில் ‘ஆஸ்திரேலியன் ஓபன்’ என்பதும் ஒன்று.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-12/article7926974.ece?homepage=true&relartwiz=true

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 13

 

 
உலகின் முதல் முழு நீள திரைப்படமான The story of the Kelly Gang-ல் இடம்பெற்ற சண்டை காட்சி. | கோப்புப்படம்
உலகின் முதல் முழு நீள திரைப்படமான The story of the Kelly Gang-ல் இடம்பெற்ற சண்டை காட்சி. | கோப்புப்படம்

கிளாடியேட்டர் படத்தில் மின்னிய ரஸல் க்ரோ, எலிச பெத் வேடத்தில் திரையில் வாழ்ந்த கேட் ப்ளான்செட், ப்ரேவ்ஹார்ட் படத்தில் நம்மை வரலாற்று காலத்துக்கு அழைத்துச் சென்ற மெல் கிப்ஸன், மெளலின் ரூஜ் படத்தில் திறமை காட்டிய நிகோல் கிட்மேன் - இப்படி உலகின் தலைசிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஆஸ்திரேலியர்கள் பலர் உண்டு.

இவர்கள் எல்லாம் ஹாலிவுட் சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்ற வர்கள். ஆனால் ஆஸ்திரேலிய திரைப்பட வரலாறை நோக்கினால் அது மிகவும் மேடு பள்ளம் வாய்ந் ததாக இருக்கிறது. திடீரென்று மிகக் குறைவான திரைப்படங்களே தயாரிக்கப்படும். இன்ன காரணம் என்றே விளங்காமல் எக்கச்சக்கமான திரைப்படங்கள் பார்வைக்கு வரும்.

மெல்போர்னிலுள்ள அதனே யம் அரங்கு (Athanaeum Hall) மிகவும் தொன்மையானது. 1880-களிலிருந்தே இருக் கிறது. தொடக்கத்தில் இது நடன அரங்காகத்தான் இருந்தது. பின்னர் திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டன. தொடக்கத் தில் குறும்படங்கள்தான் இங்கு திரையிடப்பட்டன.

உலகின் மிகத் தொன்மையான திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்று லைம்லைட் டிபார்ட்மென்ட். மெல்போர்னில் இயங்கிய இது 1897-ல் தொடங்கப்பட்டது. 19 வருடங்களில் 300 திரைப்படங்களை (குறும்படங்கள் உட்பட) இது தயாரித்தது. அந்தக் காலத்தில் இது ஒரு பெரும் சாதனை.

உலகின் முதல் முழுநீள திரைப்படம் என்று யுனெஸ் கோவால் அறிவிக்கப்பட்டுள்ள படம் The story of the Kelly Gang. 4000 அடி பிலிம் நீளம் கொண்ட இந்தப் படம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஓடிய மாபெரும் வெற்றிப்படம். விமர்சகர்கள் பலரின் பாராட்டுதலைப் பெற்றாலும் சிலரது கண்டனங்களையும் பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு 26 வருடங்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டவர் ஆஸ்திரேலியரான நெட் கெல்லி (Ned Kelly). இவரைப் போன்றவர்களை ‘ புஷ் ரேன்ஜர்கள் (Bush rangers) என்று குறிப்பிடுவார்கள்.

ஆஸ்திரேலியாவில் உருவாகிக் கொண்டிருந்த குடியேற்றங்களில் உள்ள சிறைகளில் பிரிட்டிஷ் கைதிகள் அடைக்கப்பட்டனர். இந்தச் சிறைகளிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவிலேயே மறைந்து அதிகாரிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டி ருந்தவர்களைத்தான் புஷ் ரேன்ஜர்கள் என்று அழைத்தனர். இவர்களைப் பற்றிய கதைகளும் நாடகங்களும் அப்போது ஆஸ்திரேலிய மக்களிடையே வெகு பிரபலமாக இருந்தன.

அப்படிப்பட்டவர்களில் ஒருவ ரான நெட் கெல்லியின் வாழ்க் கையைக் கதையாகக் கொண்ட இந்தப் படத்தில் பின்னர் நடுநடுவே சில காட்சிகள் ஒட்டப்பட்டு கதையே மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அது தனிக்கதை.

1906 டிசம்பர் 26 அன்று மெல்போர்னில் இந்தத் திரைப்படம் வெளியானபோது தொடர்ந்து ஐந்து வாரங்கள் அரங்கு நிறைந்தவை யாக இருந்தன. படத் தயாரிப்பா ளர்கள் சாமர்த்தியமாகச் செயல் பட்டிருந்தனர். தொடக்கத்தில் (அதாவது அரங்கில் திரையிடு வதற்கு முன்) இலவசமாகவே சில திடல்களில் இந்தப்படத்தை திரையிட்டார்கள். வரவேற்பு நன் றாக இருந்தது. பின்னர் திரையரங் கில் காட்டியபோது இசை அமைப்பையும் சேர்த்துக் காட்டினார்கள். துப்பாக்கி ஒலி, தேங்காய் ஓடு குண்டுகளின் சப்தம் போன்றவை படத்துக்குத் தனி அந்தஸ்தை கொடுக்க, ஒலியுடன் பார்த்து ரசிப்பதற்காக மீண்டும் மக்கள் திரையரங்குகளை நோக்கி அலைமோதினார்கள்.

திரையிடப்பட்ட இரு வாரங் களுக்குப் பிறகு திரையில் நடப்பதை விவரிக்க வர்ணனை யாளர் ஒருவரும் நியமிக்கப்பட, ‘முழு அர்த்தத்தோடு படத்தை ரசிக்க’ ரிபீட் ரசிகர்கள் வந்தனர்.

ஒரு கிரிமினலை கதாநாயக னாகக் காட்டுவதா? ஆஸ்திரேலியா வில் சில பகுதிகளில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது. விக்டோரியா மாநில அரசு ‘புஷ் ரேன்ஜர்கள்’ பற்றிய படங்களுக்கெல்லாம் தடை விதிப்போம்’ என்றது.

இத்தனையும் மீறி தொடர்ந்து 20 வருடங்களுக்கு ஆஸ்திரேலியாவில் மாறி மாறி திரையிடப்பட்டது இந்தப் படம். ஆனால் காலப் போக்கில் இதன் பிலிம்ரோல்கள் சிதிலமடைந்து, உரிய பிரதிகளும் இல்லாமல் போகவே இப்போது பதினேழு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய பாகங்கள்தான் கிடைத்துள்ளன. ‘நல்லவேளையாக உச்சக்காட்சி இன்னமும் இருக்கிறது’ என்று சந்தோஷப்படுகிறார்கள் சில ரசிகர்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-13/article7929804.ece?homepage=true&relartwiz=true

Link to post
Share on other sites

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா- 14

 
மைதானத்தில் மட்டையை சுழற்றும் டான் பிராட்மேன் (கோப்புப் படம்)
மைதானத்தில் மட்டையை சுழற்றும் டான் பிராட்மேன் (கோப்புப் படம்)

பலவித விளையாட்டுகளையும் ஆஸ்திரேலியாவில் கொண்டாடுகிறார்கள். நிறைய கடற்கரைகள், பிரம்மாண்ட புல்வெளிகள், எக்கச்சக்கமான விளையாட்டு கிளப்புகள், அவற்றில் சேர மிகக் குறைவான கட்டணம் என்று அற்புதமான சூழல் அங்கு நிலவுகிறது. இவற்றின் காரணமாகத்தான் மக்கள் தொகை குறைவு என்றாலும்கூட கணிசமான அளவு பதக்கங்களை ஒவ்வொரு ஒலிம்பிக்ஸிலும் ஆஸ்திரேலியா பெற்று வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் பலவித புதுமைகளைப் புகுத்தியது ஆஸ்திரேலியா என்றோம். அந்தப் பட்டியலில் வேறு சிலவற்றையும் சேர்க்கலாம்.

ஒரு நாட்டின் கிரிக்கெட் குழுவுக்கு இரண்டு கேப்டன்கள் இருக்க முடியுமா? அந்த விந்தையும் ஆஸ்திரேலியாவில் நடந்தது. டெஸ்ட் பந்தயங்களுக்கான அணித் தலைவர் மார்க் டெய்லர். ஒருநாள் பந்தயங்களுக்கான அணியின் தலைவர் ஸ்டீவ் வாக். (அதுவரை எந்தவகையான பந்தயமாக இருந் தாலும் கேப்டனாக இருந்த மார்க் டெய்லர் இந்த முடிவில் கலங்கிப் போய்விட்டதும், சில மாதங் களுக்குப் பிறகு 'இரண்டிற்குமே ஸ்டீவ் வாகே தலைமை ஏற்கட்டும்' என்று வழிவிட்டதும் வேறு விஷயம்).

தேசியக் குழு ஒன்றையும் அடுத்த வரிசை அணி ஒன்றையும் ஒரே நேரத்தில் உலக நாடுகளுடன் விளையாடக் களம் இறக்கியதும் ஆஸ்திரேலியாதான். ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் இரு அணிகளுமே இறுதிச் சுற்றை அடைய, எப்படியும் ஆஸ்திரேலிய அணிதான் வெல்லும் என்ற சூழல் உருவானது! (அல்லது இதை 'எப்படியும் ஆஸ்திரேலிய அணி தோற்கும்' என்றும் சொல்லலாம்).

ஒரு நாட்டின் சரித்திரத்தில் மன்னர்களும் பிரதமர்களும் மட்டும்தான் இடம் பெற வேண்டுமா என்ன? சர்வதேச அளவிலேயேகூட கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கிய டான் பிராட்மேன் குறித்த விவரங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா குறித்த தொகுப்பு நிறைவு பெறாது.

எதிரணியினருக்கு ‘டான்’ போலவே சிம்ம சொப்பனமாக இருந்தாலும் டான் என்பதற்கு அர்த்தம் வேறு. டொனால்டு பிராட் மேன்தான் டான் பிராட்மேனாகி விட்டது.

ஒரே ஒரு கிரிக்கெட் ஸ்டம்ப், ஒரு கோல்ப் பந்து இவற்றை மட்டுமே கொண்டுதான் சிறு வயதில் பிராட்மேன் கிரிக்கெட் பயிற்சி செய்தாராம். தனது 22-வது வயதிற்குள்ளேயே பல உலக சாதனைகளைச் செய்துவிட்டார். ‘’இவர் மூன்று பேட்ஸ்மன்களுக்கு சமம்’’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பில் உட்ஃபுல் என்பவரால் குறிப்பிடப்பட்டவர்.

விளையாட்டுத் துறையில் ஆஸ்திரேலியாவுக்கு தனி கவுரவம் சேர்த்தவர் டான் பிராட் மேன். 1948-ல் தனது கடைசி இன்னிங்ஸில் ரன் எதுவும் எடுக்காமலேயே அவுட்டாகி ஓய்வு பெற்றார். அப்போது அவரது சராசரி ரன் விகிதம் 99.94. இது உலக சாதனை.

ஓய்வு பெற்ற பிறகும் தேர் வாளர், நிர்வாகி, எழுத்தாளர் என்று பலவிதங்களில் பிசியாகவே விளங்கினார். அவர் ஓய்வு பெற்ற 50 வருடங்களுக்குப் பிறகும் பிரதமர் ஜான் ஹோவர்டு‘’தற்போது இருப்பவர்களில் மாபெரும் ஆஸ்திரேலியர் டான் பிராட்மேன் தான்’’ என்று பாராட்டினார். தபால் தலைகள் நாணயங்கள் ஆகிய வற்றில் அவரது உருவம் இடம் பெற் றது. உயிரோடு இருக்கும்போதே இப்படி நடப்பது அபூர்வம்தான்.

கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களில் ஆஸ்திரேலியன் ஓபன் பந்தயத் துக்கு தனியிடம் உண்டு என்றோம். தொடக்க காலத்தில் ஆஸ்திரேலி யன் ஓபன் பந்தயங்கள் நடை பெற்றது ஒரு கிரிக்கெட் மைதானத் தில்தான். “லான் டென்னிஸ் அசோஸியேஷன் ஆஃப் ஆஸ் திரேலியா” என்ற அமைப்பு தான் இதை நடத்தி வந்தது. பின்னர் அது “டென்னிஸ் ஆஸ்திரேலியா” என்று அழைக்கப்பட்டது..

தொடக்கத்தில் பல வருடங்கள் மெல்போர்ன் நகரில் உள்ள செயிண்ட் கில்டா சாலையில் அமைந்த கிரிக்கெட் மைதானத் தில்தான் ஆஸ்திரேலியன் ஓபன் பந்தயங்கள் நடைபெற்றன. ஒவ் வொரு வருடமும் ஒவ்வொரு நகரில் இதை நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. என்றாலும் மெல்போர்னில்தான் டென்னிஸுக்கு அமோக ஆதரவு.

மெல்போர்னில் உள்ள “குயாங் லான் டென்னிஸ் க்ளப்” என்ற அமைப்பு அதற்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டது. ஆனால் இந்த அமைப்பும் பல்வேறு மைதானங் களும் டென்னிஸுக்கு ஏற்றவை யாக இல்லை என்று கருதப்பட்ட தால் “மெல்போர்ன் பார்க் மைதா னம்” உருவாக்கப்பட்டது. இதன் முதல் கட்டம் 1986-ல் தொடங்க, 1996-ல் அரங்கம் முழுமை யடைந்தது.

மைய டென்னிஸ் கோர்ட் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக் கப்பட்டது 2000 ஜனவரியில்தான். புதிய மைதானம் கட்டப்பட்டது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு என்பது உடனடியாக நிரூபணமானது. அந்த வருடமே பார்வையாளர்களின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகமானது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-14/article7936511.ece

Link to post
Share on other sites
 • 2 weeks later...

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா -15

 
இரண்டாம் உலகப்போரின்போது ஆஸ்திரேலிய ராணுவத்தில் பெண்கள் பிரிவு உருவாக்கப்பட்டது. அதில் பணியாற்றிய பெண்கள். (கோப்புப் படம்)
இரண்டாம் உலகப்போரின்போது ஆஸ்திரேலிய ராணுவத்தில் பெண்கள் பிரிவு உருவாக்கப்பட்டது. அதில் பணியாற்றிய பெண்கள். (கோப்புப் படம்)

கடந்த 1940-களில் இரண்டாம் உலகப்போர். ஜப்பானிய ராணுவம் தென்புறமாகவும் பாய்ந்தது. பிரிட்டனை மட்டுமே தனது பாதுகாப்புக்கு நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தது ஆஸ்திரேலியா. தருணம் பார்த்து அமெரிக்கா அங்கு நுழைந்தது. அமெரிக்க ராணுவத் தளபதி டக்ளஸ் மாக் ஆர்தர் இந்த விஷயத்தில் முக்கியப் பங்கு ஆற்றினார்.

1941-ம் வருடத்தின் இறுதி நாளில் தனது மக்களுக்கான புத்தாண்டு அறிவிப்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் கர்டின் கூறியது இது. ‘’எந்தவித தயக்கமுமின்றி நான் தெளிவாகவே அறிவிக்கிறேன். நாங்கள் அமெரிக்காவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் காலகாலமாக பிரிட்ட னுடன் நமக்குள்ள தொன்மையான தொடர்பு தொடரும்’’.

இந்த அறிவிப்பை அப்போது கடுமையாக விமர்சித்தவர்கள் இருந்தனர். எனினும் அமெரிக்கா வின் வரவு அழுத்தமாகவே இருந்தது.

1908-ல் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆல்ஃப்ரட் டீகின் எப்போதுமே புதுமையான தன்னிறைவு பெற்ற நாடாக ஆஸ்திரேலியா விளங்க வேண்டுமென்று நினைத்தவர். முக்கியமாக ஆஸ்திரேலியக் கடற்படை சுயமானதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார் (இது பிரிட்டனுக்கு உவப்பானதாக இல்லை என்பது வேறு விஷயம்).

இவர் அமெரிக்காவின் கடற் படையின் சிறப்புக் கப்பல்களை (Great White Fleet) ஆஸ்திரேலி யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது அந்தக் கப்பல்கள், தங்கள் மாண்பைப் பறைசாற்றும் வகையில் உலகத் தைச் சுற்றி வந்துகொண்டிருந்தன.

அமெரிக்கா இந்த அழைப்பை மகிழ்வுடன் ஏற்றது. அந்தக் கப்பல்கள் மெல்போர்ன், சிட்னி, அல்பானி ஆகிய நகரங்களில் நின்றன.

ஆஸ்திரேலியாவைச் சுற்றி யுள்ள கடற்பகுதியை பலப்பல ஆண்டுகளுக்குப்பிறகு பிரிட்டன் அல்லாத கப்பல்கள் தொட்டன. இது ஒரு பெரும் திருப்புமுனையாகக் கருதப்பட்டது.

பின்னர் ஆஸ்திரேலியா தானா கவே சில நவீன போர்க்கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங் கியது. இந்த முடிவு பிரிட்டனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மாக் ஆர்தர் என்பவர் கூட்டு நாடு களின் ஒன்றிணைந்த ராணுவத் தளபதிகளில் ஒருவராக நியமிக் கப்பட்டார். இவரது தலைமை யில் ஆஸ்திரேலிய ராணுவத்தி னர் பலரும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். தனது தலைமையகத் தையேகூட பிரிஸ்பேனில் அமைத்துக் கொண்டார் அவர்.

காலப்போக்கில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 11 ஆஸ்தி ரேலிய குடிமக்களும் இறந்தனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதத் துக்கு எதிராக அமெரிக்காவுடன் அழுத்தமாகவே கைகோர்த்துக் கொண்டது ஆஸ்திரேலியா.

ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு மிகவும் ஆதரவாகச் செயல்பட்டார் ஆஸ்தி ரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்டு. 2001-ல் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், 2003ல் ஈராக்கை அமெரிக்கா ஆக்ர மித்தபோதும் ஆஸ்திரேலியாவின் ஆதரவு தொடர்ந்தது. இதற்கு பதில் மரியாதையாக 2004-ல் புஷ் ஆட்சி ஆஸ்திரேலியாவுடனான ஒரு தடையற்ற வணிக ஒப்பந்தத்துக்கு உடன்பட்டது (என்றாலும் பிறகு ஆஸ்திரேலியப் பிரதமரான கெவின் ருட் என்பவர் இராக்குக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய ராணுவத்தினர் 2008-ல் வாபஸ் பெறப்படுவார்கள் என்று கூறியது வேறு விஷயம்).

அமெரிக்காவுடனான நெருக்கம் இப்படியிருக்க, பிரிட்டன் ஆஸ்திரேலியாவிடம் தனது உரிமைகளை அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டது.

காலப்போக்கில் தனது அணு ஆயுதங்களை சோதித்துப் பார்க்க ஆஸ்திரேலியா தகுந்த களம் என்று பிரிட்டன் தீர்மானித்தது. அங்குதான் காலி இடம் உண்டே.

தெற்கு ஆஸ்திரேலியாவில் மரலிங்கா என்ற பகுதி பிரிட்டனின் அணு ஆயுதச் சோதனைகளுக்குக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கொடுமை என்னவென்றால் அங்கு அனங்கு என்ற பழங்குடி மக்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் வழக்கம்போலவே துரத்தியடிக்கப் பட்டனர்.

என்னதான் தன்னிறைவு பெற்றா லும், ஆஸ்திரேலியாவில் ராஜ வம்சத்திடம் உண்டான ஈர்ப்பு தனிதான். 1954-ல் ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு மாத சுற்றுலாவில் வந்த போது, மக்களில் முக்கால்வாசி பேர் அவரை ‘தரிசனம்’ செய்தனர்.

பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலி யாவுக்குக் குடியேறுபவர்களுக்கு மட்டுமே ராஜமரியாதை என்ற போக்கு மாறியது. ஐரோப்பா விலிருந்து யார் வந்தாலும் முன்னுரிமை என்ற அளவுக்குத் தன் போக்கை தளர்த்திக் கொண்டது ஆஸ்திரேலியா. புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் புதிய குடியேற்றப் பகுதிகள் உருவாவதற்கும் இது பெரிதும் உதவும் என்று நம்பப்பட்டது.

1942-ல் சிங்கப்பூர் வீழ்ந்தது. 15000 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் ஜப்பானால் ராணுவ கைதி களாக்கப்பட்டனர். முதல் முறை யாக அபாரிஜின்களும் ஜப்பா னுக்கு எதிராக களத்தில் இறங்கி னார்கள்.

போரின் விளைவாக வேறொரு எதிர்பாராத திருப்பம் உண்டானது. வேலைக்குச் செல்ல போதிய ஆட்கள் இல்லாததால் பெண்கள் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர் களின் மதிப்பு கூட, சின்னதாக ஒரு பெண்கள் ராணுவமும் அங்கே உருவானது.

இரண்டாம் உலகப்போர் முடிவ தற்கு சில வாரங்களுக்கு முன் பிரதமர் குர்டின் தனது அலுவலகத் தில் இறந்துவிட, அவரது மிக நெருங்கிய நண்பரான பென் சிஃக்ப்லே அடுத்த பிரதமர் ஆனார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-15/article7991282.ece?ref=relatedNews

Link to post
Share on other sites

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 16

வியட்நாம் போரை நிறுத்தக் கோரி 1970 மே மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பேரணி நடத்திய அந்த நாட்டு மக்கள். | (கோப்புப் படம்)
வியட்நாம் போரை நிறுத்தக் கோரி 1970 மே மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பேரணி நடத்திய அந்த நாட்டு மக்கள். | (கோப்புப் படம்)

கடந்த 1950-ல் மெல்போர்னில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. அது நாடெங்கும் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சிகளில் அப்போதே ஒளிபரப்பப்பட்டது. அடுத்த பத்து வருடங்களில் சிட்னி யிலும் மெல்போர்னிலும் உள்ள 70 சதவீத வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இடம் பெற்றது.

1966-ல் ஒரு திருப்புமுனை. ஐரோப்பியர்கள் அல்லாத தாற் காலிக குடியேறிகளும் ஆஸ்திரேலி யாவின் நிரந்தரக் குடிமக்களாகும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆஸ்திரேலிய குடி மக்களாக என்ன வழிமுறையோ அதுவேதான் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கும் நடைமுறை என்றது அரசு. ஆக ‘வெள்ளையர் ஆஸ்திரேலியக் கொள்கை’’ (White Australia Policy) ஒரு முடிவுக்கு வந்தது.

ஜப்பானுக்கும் ஆஸ்திரேலியா வுக்கும் உள்ள உறவுகள் ஓரளவு சுமுகமாயின. இதற்குக் காரணம் அரசியல் அல்ல, வணிகம். ஆஸ்திரேலியாவின் மிக அதிகமான இறக்குமதி ஜப்பானுக் கும் என்று ஆனது.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஒருவர் உலக சரித்திரத்திலேயே ஒரு மிக வித்தியாசமான ‘சாதனையை’ செய்தார். தலைவர் இறந்ததை ‘இன்னார் மறைந்துவிட்டார்’’ என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால் ‘உண் மையாகவே’ இந்தப் பிரதமர் மறைந்தார்.

1966 ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியாவின் பதினேழாவது பிரதமராகப் பதவியேற்றவர் ஹெரால்டு ஹோல்ட். 1967 டிசம்பர் 17 அன்று தனது சில நண்பர் களுடனும், இரண்டு பாதுகாப்பாளர் களுடனும் மெல்போர்னுக்குப் பயணம் செய்தார். அங்கு அவருக்குப் பிடித்த செவியோட் என்ற கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு அலைகளின் வேகம் அதிகமாகவே இருந்தது. அந்தப் பகுதி ஏற்கனவே சிலரைக் காவு வாங்கிய பகுதியும்கூட. அங்கு ஹோல்ட் நீச்சலடிக்கத் தொடங்கினார். நண்பர்களின் எச்சரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை.

திடீரென்று பிரதமர் மற்றவர் கண்களுக்குப் புலப்படவில்லை. எங்கே மறைந்தார்? அபாய மணிகள் ஒலிக்கப்பட்டன. கடற்படை, வான் படை எல்லாமே அந்தப் பகுதியில் குவிந்தன. ஆனால் ஹோல்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹோல்ட் இறந்ததாக நம்பப்படுகிறார் என்று அரசு அறிவித்தது. துணைப் பிரதமர் ஜான் மேக்ஈவன் தாற்காலிகப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ஹோல்ட்டின் மறைவு சிலருக்குப் பெரும் வியப்பை அளித்தது. ஏனென்றால் அவர் ஒரு மிகச் சிறந்த நீச்சல் வீரர். தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் இருக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

இப்படி விமர்சித்தவர்களுக்கு வேறு சில கோணங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. சில மாதங்களாகவே அவருக்கு வலது தோள்பட்டையில் கடும் வலி இருந்திருக்கிறது. அதனால் அவர் டென்னிஸ் ஆடக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். எனினும் ஒரு வி.ஐ.பி. வித்தியாச மான முறையில் இறக்கும்போது பலவித யூகங்களும் எழுவது இயல்புதானே. ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டார் என்றனர் சிலர்.

இந்தக் கோணத்தை மையப் படுத்தி Who killed Herald Holt என்று ஒரு ஆவணப் படத்தை தயாரித்தார் பத்திரிகையாளர் ரேமார்டின் என்றவர். ஆனால் ஹோல்டின் மகன் இதைக் கடுமையாக மறுத்தார். இதைத் தொடர்ந்து அதிகாரபூர் வமான அரசு விசாரணை நடந்ததா? இல்லை. அது நேரத்தையும், பணத்தையும், வீணாக்கும் முயற்சி என்று அறிவிக்கப்பட்டது!

ஆஸ்திரேலியாவை பொறுத்த வரை வியட்நாம் போர் என்பது 1972-ல் முடிவடைந்து விட்டது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆஸ்திரேலியாவில் பலவித எழுச்சி கீதங்கள் உருவாயின. பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பல நூல்கள் அச்சிடப்பட்டன. இவையெல்லாமே வியட்நாம் புத்தகத்தில் ஆஸ்திரேலியா வுக்கான பங்களிப்பின் சிறப்பு குறித் ததாக இருந்தது. இவற்றின் பின்ன ணியில் அமெரிக்கா இருந்தது.

அமெரிக்க ராணுவத்தைவிட ஆஸ்திரேலிய ராணுவத்தை இந்த யுத்தத்தில் அமெரிக்கா கொஞ்சம் அதிகமாகவே நம்பியது எனலாம். காரணம் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க ராணுவத்தினருக்கு ஒரு மனச்சோர்வு உண்டாகி இருந்தது.

‘’நம் நாட்டுக்கு நேரடித் தொடர்பு இல்லாத ஒரு விஷயத்துக்காக எங்கோ தொலைதூரத்திலிருந்து போரிடுகிறோமே’’ என்பதுதான் அந்த மனச்சோர்வுக்குக் காரணம். தவிர அமெரிக்க ராணுவத்தில் ஆங்காங்கே வெள்ளை மற்றும் கருப்பர் இனச் சிப்பாய்களுக்கு நடுவே இனமோதல்கள் நடைபெற் றன. இந்தப் பிரச்சினையெல்லாம் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களிடம் இல்லாமல் இருந்தது.

ஆனால் இது ஒரு கட்டம் வரையில்தான். பொதுவாக ஆஸ்திரேலிய ராணுவம் மிக நீண்ட வருடங்களுக்கு எந்த யுத்தத்திலும் அதுவரை ஈடுபட்டதில்லை. இதன் விளைவு வெளிப்பட்டது.

1970-களில் வியட்நாமிலிருந்து ஆஸ்திரேலிய ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாடு வியட்நாம் போரில் பங்கு கொள்வது அனாவசியம் என்று நினைத்ததுதான். 1970-ல் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வர்கள் வீதி ஊர்வலம் போனார்கள் - ‘‘நமது வீரர்களை வியட்நாம் போரில் ஈடுபட வைக்கக் கூடாது’’ என்று.

பின்னொரு காலகட்டத்தில் போரிலிருந்து ஆஸ்திரேலியா தன் ராணுவத்தை விலக்கிக் கொண்டதோடு வேறொரு விதத்தி லும் வியக்க வைத்தது. வியட்நாமிலிருந்து வந்த அதிகாரிகளை ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிக் குள் அனுமதித்தார் அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமரான மால்கம் ஃப்ரேஸர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-16/article7995749.ece

Link to post
Share on other sites

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 17

 

கடந்த 1972-ல் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் நாடாளுமன்றம் முன்பு கூடாரம் அமைத்து தூதரகம் தொடங்கிய அபாரிஜின்கள். (கோப்புப் படம்)
கடந்த 1972-ல் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் நாடாளுமன்றம் முன்பு கூடாரம் அமைத்து தூதரகம் தொடங்கிய அபாரிஜின்கள். (கோப்புப் படம்)

1971ல் புதிதாக ஒரு கொடி உருவானது. அது ஆஸ்திரேலிய பழங்குடியினரின் கொடி (Australia’s Aborigingal Flag).

இந்தக் கொடிக்கு தனி மகத் துவம் கிடைத்தது. பழங்குடி இனத் தைச் சேர்ந்த ஹரால்ட் தாமஸ் என்பவர் இதை வடிவமைத்தார். (இதற்கான காப்புரிமையைகூட அவர் பெற்றிருக்கிறார்). இந்தக் கொடி இரண்டு பட்டைகள் கொண் டது. மேல் பாதியில் கருப்பு நிறம், கீழ் பாதியில் சிகப்பு நிறம். நடுவே மஞ்சள் வட்டம். இதில் கருப்பு என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்களைக் குறிக்கிறது. சிகப்பு என்பது பூமியைக் குறிக் கிறது. மஞ்சள் வட்டம் மக்களுக்கு வாழ்வு கொடுத்துக் காக்கும் சூரியனைக் குறிக்கிறது.

இந்தக் கொடியை தேசியக் கொடியாக அங்கீகரிக்கவில்லை. என்றாலும் அரசு விழாக்களில்கூட தேசியக் கொடியோடு இந்தக் கொடியும் ஏற்றப்படுகிறது.

சிட்னியில் ஒலிம்பிக்ஸ் நடை பெற்றபோது, அதற்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார் ஆஸ்திரேலிய வீராங் கனை கேத்தி ஃப்ரீமேன். அவர் வெற்றி பெற்றதில் அதிர்ச்சி யில்லை. ஜெயித்தவுடன் மைதானத்தை அவர் வலம் வர, அப்போது அவர் கைகளில் இரண்டு கொடிகள். ஒன்று தேசியக் கொடி. இன்னொன்று மேலே குறிப்பிட்ட அபாரிஜினல் கொடி.

பொதுவாக ஒலிம்பிக்ஸ் போட்டி யில் கலந்து கொள்ளும் ஒருவர் தன் தேசியக் கொடி அல்லாத வேறொரு கொடியைக் கையில் ஏந்தி வருவது புதுமை. அதோடு அது அந்த நாட்டை அவமானப்படுத்தும் காரியம் என்றும் கருதப்படும் (கேத்தி ஃப்ரீமேன் அதற்கு முன் ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில்கூட இந்த இரண்டு கொடிகளுடன் வலம் வந்தார்).

இரண்டு கொடிகளையும் தாங்கி வர கேத்தி அனுமதிக்கப்பட்டார். அபாரிஜின் இனத்தினருக்குப் பூசப்பட்ட மருந்து அது. பல துறை களிலும் முன்னேறிய அபாரி ஜின்கள் உண்டு. என்றாலும் அந்த இனங்களைச் சேர்ந்த பலருக்கும் அரசின் கல்வி மையங்கள் ஆகியவை எட்டியபாடில்லை. இதற்கு எதிர்ப்பாகத்தான் அந்தப் போராட்டம். அந்த ஸ்பெஷல் கொடிச் சலுகை.

போதாக்குறைக்கு சிட்னி ஒலிம் பிக்ஸுக்கான கட்டுமானப் பணி களுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலத்தில் பெரும்பாலும் அபாரிஜின்கள் வசிக்கும் இடங்கள் என்பது இவர்களது பெரும் கோபம். 'சிட்னி ஒலிம்பிக்ஸில் நாங்கள் கலந்து கொள்ளப் போவ தில்லை. அதுமட்டுமல்ல.. எங்கள் உணர்வுகளுக்கும், போராட்டத் துக்கும் ஆதரவளிக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள கறுப்பர்கள் மற்றும் பழங்குடியினங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் எங்கள் நாட்டில் நடக்கும் ஒலிம் பிக்ஸில் கலந்து கொள்ள வேண்டா மென்று வேண்டுகோள் வைக்கி றோம்' என்று இவர்கள் அறிக்கைவிட்டனர்.

ஆஸ்திரேலிய அரசு ஆடிப் போனது. பல சமாதான முயற்சி களை மேற்கொண்டது. விதவித மான உறுதிமொழிகளை அளித்தது. இறுதியில் ஏற்பட்ட உடன்பாட்டின் படிதான் சிட்னி மைதானத்தில் துவக்கவிழாவன்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்று பெரும் கெளரவம் அபாரிஜினான கேத்தி ப்ரீமேனுக்கு வழங்கப்பட்டது. இரட்டைக் கொடி அனுமதியும் வழங்கப்பட்டது.

விளையாட்டில் பல சாதனை களை நிலைநாட்டிய தங்கள் நாடு, இந்த உரிமையைத் தங்களுக்கு அளித்ததில் ஓரளவு சமாதான மானார்கள் அபாரிஜின்கள்.

1972ல் நான்கு பழங்குடியின ஆண்கள் கான்பெர்ராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியில் ஒரு பெரிய கூடாரக் குடையை விரித்து வைத்தனர். அதில் ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டினார்கள. அந்தப் பலகையில் ‘அபாரிஜினல் தூதரகம்’ என்று இருந்தது. இதற்கு 2000 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அங்கு சென்று தெரிவித்தனர்.

காவல்துறை பரபரப் பாகச் செயல்பட்டது. கூடாரம் கிழிக்கப்பட்டது. உள்ளிருந்த வர்கள் வெளியே தள்ளப்பட்டனர். இந்தக் காட்சிகள் எல்லாம் அன்று மாலையே பல்வேறு தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பப்பட, அரசின் நடவடிக் கைக்குப் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூடாரம் கிழிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் அழுத்தமாகவே இருந்தது. பாராளுமன்றத்துக்கு எதிர்ப்புறம் இருந்த நிலத்தில், அதன் சொந்தக்காரரின் அனுமதி யுடன் புதிய ‘அபாரிஜினல் தூதரகம்’’ திறக்கப்பட்டது. அதா வது எந்த அளவுக்குத் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதை இதன் மூலம் பழங்குடியினர் உணர்த்தினார்கள். இந்தச் செயல் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் 2005 ஆகஸ்டில் அரசு ஓர் அறி விப்பை வெளியிட்டது. அபாரிஜின் களின் கூடாரத் தூதரகம் குறித்து மறுபரிசீலனை செய்யப் படும். வருங்காலத்தில் அது எப்படி அரசோடு செயல்பட லாம் என்பதைப் பற்றி முடிவெடுக் கப்படும்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-17/article8008051.ece

Link to post
Share on other sites

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 18

திருடப்பட்ட குழந்தைகள் என்ற ஆஸ்திரேலிய அரசின் அராஜக திட்டத்தை நினைவுகூரும் வகையில் அங்குள்ள ஈடன்ஹில்ஸ் பகுதியில், ஒரு பழங்குடியின தாய் தனது குழந்தையை தேடுவதுபோல அமைக்கப்பட்ட சிற்பம்.
திருடப்பட்ட குழந்தைகள் என்ற ஆஸ்திரேலிய அரசின் அராஜக திட்டத்தை நினைவுகூரும் வகையில் அங்குள்ள ஈடன்ஹில்ஸ் பகுதியில், ஒரு பழங்குடியின தாய் தனது குழந்தையை தேடுவதுபோல அமைக்கப்பட்ட சிற்பம்.

அபாரிஜின்கள் பல விதங்களிலும் அவமானப்படுத்தப்பட்டார்கள். தேசியக் கணக்கெடுப்பில் இவர்கள் அடங்க மாட்டார்கள் என்று ஒரு காலத்தில் சட்டம் இயற்றப் பட்டது. ‘நாட்டின் தொன்மை யான விலங்குகள்’ என்ற தலைப் பில் இவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்ட அராஜகமும் ஆஸ்தி ரேலிய சரித்திரத்தில் உண்டு.

இந்த அடாவடித்தனத்துக்கு சிகரம் வைத்தது போல் அமைந்த நிகழ்வு ஒன்றும் அரங்கேறியது.

‘‘திருடப்பட்ட குழந்தைகள்’’ (Stolen child) என்ற ஆஸ்திரேலிய அரசின் திட்டம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான ஒன்று. அது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அபாரிஜின் இனக் குழந்தைகளின் ஒரு பகுதியினரை அரசு ‘கடத்தி’ தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டது. இது அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சி என்று அரசு கூற, இதை ஒருவகை இனப்படுகொலை என்றே வர்ணித்தனர் பலர். அபாரிஜின் இனத்தை அழிக்கும் முயற்சி என்றனர். முக்கியமாகக் கூட்டுக் குழந்தைகளை (வெள்ளை யருக்கும், அபாரிஜின் இனத்தவ ருக்கும் பிறந்தவை) கலாச்சார சவால்கள் என்றே அரசுத் தரப்பில் குறிப்பிட்டனர் சில அரசியல் வாதிகள். இப்படிப்பட்டவர்களை சமூகத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

அபாரிஜின்கள் எனப்படும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேயர்களால் துப்பாக்கி முனையில் அவர்கள் இருப்பிடங் களிலிருந்து அகற்றப்பட்டதைக் கண்டோம். இந்த நடவடிக் கையின்போது பழங்குடி மக்களில் பலரும் இறந்தனர்.

1910 முதல் 1969 வரை பழங்குடி இனங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் குடும்பங் களிலிருந்து கட்டாயமாக பிரித் தெடுக்கப்பட்டனர். காவல் துறை யும், சமூகநல சேவகர்கள் என்று கூறிக் கொண்ட சிலரும் இணைந்து செய்த செயல் இது. இப்படிப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இந்தச் சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும் சமூகநல அமைப் புகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வளர்ந்தனர். ஒரு சிலரை வெள்ளை இன மக்கள் தத்து எடுத்துக் கொண்டனர்.

இந்த அராஜகச் செயலை ‘‘இனங்களை ஒருங்கிணைக்கும் கொள்கை’’ என்று கூறிக் கொண் டனர். மனித உரிமையாளர்கள் இதைத் தொடர்ந்து எதிர்க்கத் தொடங்கினர்.

‘‘அவர்களை மீண்டும் வீட்டுக் குக் கொண்டு வாருங்கள்’’ (Bring them home) என்ற கண்டனக் குரல் வலுப் பெற்றது. 1995 மே, 11 அன்று இது உச்சமடைந்தது. இவர்கள் நடத்திய விசாரணையில் பல பழங்குடியினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை அமைப்பு சில பரிந்துரைகளை வெளியிட்டது. பிரிக்கப்பட்ட தலைமுறைக்குப் புதிய வாழ்வை அளிக்க வேண்டும், இப்படிப்பட்ட வரலாற்றுத் தவறைச் செய்த அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்பவை அவற்றில் சில.

ஆனால் அப்போதைய ஆஸ்தி ரேலிய பிரதமர் ஜான் ஹவார்ட் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். மன்னிப்பு கேட்டால் நஷ்ட ஈடு அளிக்க வேண்டியிருக்குமே என்பதும் ஒரு காரணம்.

ஆனால் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் தங்கள் சட்டப்பேரவைகளில் மன்னிப்பு கோரின. கேவின் ரட் என்பவர் 2007 டிசம்பர் அன்று பிரதமராக பதவியேற்றார். (2010 ஜூன் வரை பதவி வகித்தார். பின்னர் 2013 ஜூன் 27 முதல் செப்டம்பர் 18 வரை பிரதமராக இருந்தார்). இவரது தலைமையிலான தொழிற்கட்சி 2007-ல் தனது அரசு ‘குழந்தை களைத் திருடிய’ செயலுக்காக மன்னிப்பு கோரும் என்று அறிவித்தார். 2008 பிப்ரவரி 13 அன்று ‘‘அபாரிஜின்களுக்குத துன்பங்கள் ஏற்படுத்துவதுபோல் அமைந்த அரசின் கொள்கைகள், சட்டங்கள் ஆகியவற்றுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்’’ என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்னிப்பு கோரியபோது ‘ஆஸ்திரேலியாவின் ஆத்மாவில் படிந்த ஒரு கறையை நீக்குவதாக’ கூறினார். அப்போது அந்த நாட்டின் முன்னாள் பிரதமர்கள் பால் கீட்டிங், பாப் ஹாக், கோவிட்லாம் மற்றும் மால்கம் பிரேஸர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரான ப்ரெண்டென் நெல்சன் என்பவர் ‘மற்றவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால்தான் பாதிப்புகளை உணர முடியும். பழங்குடியின மக்களின் மொழி, அறியாமை போன்றவற்றை நாம் அறிய மாட்டோம். மன்னிப்பை மனமாறக் கோருகிறோம்’ என்றார்.

அது சரி, இப்படிக் குழந்தைகளைத் திருடுவதால் அரசு எதை சாதிக்க நினைத்தது? காலப்போக்கில் அபாரிஜின்கள் என்ற இனமே இல்லாமல் செய்ய முடியுமே. உடனடிப் பலனாக அவர் களின் தனித்துவமான பேச்சு வழக்கு களையும் சடங்குகளையும் இல் லாமல் செய்ய முடியும். (ஏனென் றால் புதிய சூழலில் வளரும் இக்குழந்தைகள் அவற்றை அறிய முடியாமல் போகும்).

இந்தக் குழந்தைகளில் சிலர் ஆங்கிலேயர்கள் ஆளும் பிற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-18/article8010728.ece

Link to post
Share on other sites

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 19

 
ஆஸ்திரேலியாவின் அபாரிஜின் இனத்தைச் சேர்ந்த நடிகர் ஜாக் சார்லஸ்.
ஆஸ்திரேலியாவின் அபாரிஜின் இனத்தைச் சேர்ந்த நடிகர் ஜாக் சார்லஸ்.

'அனைவரும் சமம்' என்ற சட்ட சீர்திருத்தத்தை சுமார் 40 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா கொண்டு வந்தது. தவிர சுரங்கங்களை விட்டுக் கொடுத்த அபாரிஜின் களுக்கு மானியத் தொகை வழங்க வேண்டுமென்றும் முடிவெடுக் கப்பட்டது. இருந்தாலும் இதெல் லாம் அபாரிஜின்களின் முன்னேற்றத்துக்குப் பெரிதாக உதவவில்லை.

அரசை எதிர்த்துப் போராடுவதற் காக தங்களுக்கென ஓர் இயக்கத்தையும் தனிக்கொடி யையும் அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். முழு சுதந்திரம் கிடைக்கப் போராடத் துவங்கினர். வேலைவாய்ப்பு அந்த நாட்டில் கொட்டிக் கிடந்தாலும் கல்விக் கான வாய்ப்பைச் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள முடியாமையால் அபாரிஜின்களில் பலரும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளனர். மிக அதிகமான போலீஸ் வழக்குகள் இவர்கள் மீது பதிவாகின்றன. முக்கியமாக குடி மற்றும் போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்காக.

தவிர, உலகிலேயே வெளிநாட்டு மாணவர்களை இழந்து வரும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது.

அதற்கு ஆஸ்திரேலியாவில் ஆங்காங்கே காணப்படும் இன வெறி முக்கியமாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் குவின்ஸ் லாண்ட் மாகாணத்தில் இந்தியர் ஒருவர் உணவகம் நடத்தி வருகிறார். இதுகுறித்து சில ஆஸ்திரேலிய இளைஞர்கள் அடிக்கடி விமர்சனம் செய்துள்ளனர். ஒரு சமயம் உணவகம் நடத்தும் இந்தியரையும் அவரது குழந்தைகளையும் இனவெறியுடன் விமர்சனம் செய்ய, அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அந்த இந்தியக் குடும்பத்தினர் மீது எச்சில் துப்பி அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள்.

சில வருடங்களுக்கு முன் புத்தாண்டு தினத்தன்று இரண்டு இந்தியர்கள் தாக்கப்பட்டனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார். மெல்போர்னில் இந்தியர் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

எதனால் இந்தியர்கள் தாக்கப் படுகிறார்கள்? இவை தனித்தனிச் சம்பவங்கள். இனவெறிதான் அடிப்படை என்று கூற முடியாது என்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆனால் இது தொடர்பாக ஆழமான விசாரணை எதையும் அந்த நாட்டு அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

சொல்லப்போனால் ‘‘இந்தியர் ஆஸ்திரேலியாவில் உயிரோடு கொளுத்தப்பட்டார்’’ என்ற வகைச் செய்திகள் அவ்வப்போது இடம் பெறுகின்றன. உலகிலேயே இனவெறி மிகுந்த நகரம் மெல்போர்ன் என்று சிலர் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

சுமார் 70,000 இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கிறார்கள். (இந்த எண்ணிக்கை சமீபத்தில் குறைந்திருக்கிறது).

இன்னமும்கூட ஆஸ்திரேலி யாவில் மண்ணின் மைந்தர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள் என்ற குறை அவர்களுக்கு உண்டு. அது உண்மையும்கூட. இதற்கு சமீபத்திய உதாரணம் ஜாக் சார்லஸ் என்ற நடிகருக்கு ஏற்பட்ட அனுபவம்.

ஜாக் சார்லஸ் அபாரிஜின் இனத்தைச் சேர்ந்தவர். நடிகர், இசைக் கலைஞர் என்று பன்முகம் கொண்டவர்.

ஆஸ்திரேலியாவில் ஒரு நாடக அமைப்பை உருவாக்கினார். இது முழுக்க முழுக்க உள்ளூர் தன்மை யைக் கொண்டதாக உருவாக்கப் பட்டது (அதாவது ஆங்கிலேய-அமெரிக்க வாடையில்லாமல்). அவர் குழுவின் முதல் நாடகத்தின் பெயர் ‘ஜாக் சார்லஸ் வீழ்ச்சிக்காக எழுந்து போராடுகிறார்’’ (Jock Charless is up and fighting).

பாரதி போன்று மாறுவேடமிட வேண்டும் என்ற போட்டியில் நிஜமான பாரதியும் கலந்து கொண்டபோது அவருக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என்பார்கள். அதுபோல 1972-ல் போனி என்ற தொலைக்காட்சித் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தனான கதாநாயக பாத்திரத்துக்கு இவர் விண்ணப் பித்தபோது, தேர்வுக்குக் கூப்பிடப் பட்டு அவரை நிராகரித்தார்கள். ‘‘நீல நிறம் கொண்ட கண்கள் அமைந்தவராக இருப்பவரைத்தான் நாங்கள் தேடுகிறோம்’’ என்றனர். பிறகு நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பு சென்றது.

கணிசமான திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் ‘The chant of Jimmy Blacksmith’ என்ற திரைப்படம் இவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது. பலவித கொடுமைகளுக்கும் அலைக் கழிப்புகளுக்கும் உள்ளாகும் ஓர் அபாரிஜின் பொங்கி எழுவதுதான் இதன் கதை. இது புத்தகமாக வெளிவந்தபோது புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஜாக் சார்லஸுக்கு (அதில் துணைப் பாத்திரத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும்) பெயர் வாங்கிக் கொடுத்த படம் இது.

சமீபத்தில் இரண்டுமுறை டாக்ஸி டிரைவர்கள் தன்னை ஏற்றிக் கொள்ள மறுத்ததாக அவர் கூறியது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானது. மெல்போர்னில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஆண்டின் ‘சிறந்த விக்டோரிய சீனியர் ஆஸ்திரேலியர்’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு டாக்ஸியில் அவர் ஏற முயன்றபோது பயணத்துக்கான கட்டணத்தை முதலிலேயே கொடுத்துவிட வேண்டும் என்றார் ஓட்டுநர். இறங்கிய பிறகு நீங்கள் பணம் கொடுக்காமலும் போகலாம் என்று தனக்குத் தோன்றுவதாகவும் கூறினார் அந்த ஓட்டுநர். ஜாக் சார்லஸ் மறுத்தார். அவரை ஏற்றிக் கொள்ள ஓட்டுநர் மறுத்துவிட்டார்.

அவர் தொடர்பான இரண்டாவது நிகழ்ச்சியும் மெல்போர்னில்தான் நடந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-19/article8017553.ece

Link to post
Share on other sites

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 20

 

பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்புடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட். | (கோப்புப் படம்)
பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்புடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட். | (கோப்புப் படம்)

அபாரிஜின் இனத்தைச் சேர்ந்த பிரபல ஆஸ்தி ரேலிய நடிகர் ஜாக் சார்லஸிடம் வழக்கத்துக்கு மாறாக “முதலில் கட்டணத்தைக் கொடுத் தால்தான் டாக்ஸியில் ஏற்றுவேன்” என்று ஒரு டாக்ஸி ஓட்டுநர் கூறிய தாக அறிவித்ததைப் பார்த்தோம்.

அவர் அவமானப்படுத்தப் பட்ட அடுத்த நிகழ்ச்சியும் மெல்போர்னில் தான் நடைபெற்றது.

விமான நிலையத்தில் வரிசை யில் வந்த டாக்ஸிகளில் ஒன்றில் இவர் ஏறப்போனபோது, இவரை ஏற இறங்கப் பார்த்த அந்த டாக்ஸி ஓட்டுநர் இவரை ஏற்றிக் கொள்ளா மலேயே சென்று விட்டாராம்.

இந்த நிகழ்ச்சிகள் பற்றி சமாளிப்பு விளக்கங்கள் வெளியாகியுள்ளன. “நாங்கள் இதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றது டாக்ஸி சேவை அமைப்பு.

“இரவு 10.00 மணியிலிருந்து காலை 5.00 மணிக்குள் டாக்ஸியில் செல்ல வேண்டுமென்றால், வண்டி யில் ஏறும்போதே குறிப்பிட்ட தொகையை யாராய் இருந்தாலும் கொடுத்துவிட வேண்டும். இது தான் ஆஸ்திரேலியாவில் பழக்கம்” என்றும் கூறுகிறது அந்த அமைப்பு. ஆனால் முதல் நிகழ்ச்சியில் தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் இரவு ஒன்பது மணிக்கு என்பதற்கு சான்று வைத்திருக்கிறார் சார்லஸ்.

ஆனால் சில ஆஸ்திரேலிய டாக்ஸி ஓட்டுநர்கள் அபாரிஜின் களைக் கண்டால் நிறுத்தாமல் செல்வது வழக்கமாகி விட்டது. முன் பின் தெரியாத வெள்ளையர்களிடம் வேண்டுகோள் விடுத்து அவர்கள் மூலம் டாக்ஸியை நிறுத்தச் செய்து அதில் ஏறிச் செல்ல வேண்டிய அவல நிலையும் பல இடங்களில் தோன்றிவிட்டதாம்.

அபாரிஜின்களுக்கான முழுமை யான சமத்துவம் கிட்டவில்லை யென்றாலும் கூட வேறொரு விதத்தில் தன் தனித்துவத்தை நிலைநாட்ட ஆஸ்திரேலியா முயன்று கொண்டிருக்கிறது. அது பிரிட்டனின் பிடியிலிருந்து மேலும் விடுபடுவதுதான்.

பல வருடங்களுக்கு முன்பே ஹென்றி லாசன் என்பவர் எழுதிய ‘குடியரசின் கீதம்’ என்ற பாடலை ஆஸ்திரேலியாவின் தேசிய கீதமாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது ஏற்கெனவே பிரிட்டிஷ் மகாராணியின் புகழ் பாடும் தேசிய கீதத்தைத் தொடரலாமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறத் தொடங்கின என்று குறிப்பிட்டோம். இப்போது அந்த விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது.

ஆஸ்திரேலிய அரசு Knights மற்றும் Dames போன்ற விருதுகளை இனி வழங்காது என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இவற்றை பிரிட்டிஷ் குடிமகன்களுக்கோ, பிரிட்டனுக்கு மேன்மையளித்த சாதனையாளருக்கோ வழங்குவது வழக்கம். Knight என்ற விருதை ஆண்களுக்கும், Dame என்ற விருதைப் பெண்களுக்கும் வழங்குவது வழக்கம்.

இதற்குமுன்பு ஆஸ்திரேலிய பிரதமராக இருந்தவர் இந்த விருதை இளவரசர் பிலிஃப்புக்கு வழங்க முடிவெடுத்தார். டோனி அபோட் என்ற அந்தப் பிரதமரின் முடிவு மக்களில் பலருக்கும் கடும் அதிருப்தியைத் தந்தது.

அடுத்த பிரதமராகி இருக்கும் மால்கம் டர்ன்புல் இனி இது போன்ற விருதுகளை ஆஸ்தி ரேலியா வழங்காது என்று அறிவித் திருக்கிறார். இது தொடர்பான ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பரிந்துரைகளை மகாராணி எலிச பெத்துக்கு இவர் அனுப்ப, அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

“இனி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாதனையாளர்கள் மட்டுமே இப்படி அரசால் கவுரவிக்கப்படு வார்கள்” என்கிறார் பிரதமர். அதே சமயம் ஏற்கெனவே கவுரவிக்கப் பட்டவர்களின் விருதுகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் உறுதி அளித்திருக்கிறார். எதிர்க் கட்சிகளும் இதை வரவேற்றிருக் கின்றன.

இந்த விருதுகள் பற்றிய சில கடந்த கால விவரங்களையும் பார்ப்போமே..!

1975-ல் ஆஸ்திரேலிய அரசு ‘கவுரவிக்கும் விருதுகளை’ அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு மால்கம் ஃப்ரேசர் என்பவர் தலைமையில் அமைந்த அரசு மேலே குறிப்பிட்ட நைட்ஸ், டேம்ஸ் விருதுகளை அறிமுகப்படுத்தியது. 1986-ல் பிரதமராக இருந்த பாப் ஹாக் இந்த விருதுகளை நிறுத்தி வைத்தார். 2014-ல் பிரதமராக இருந்த டோனி அபோட் இந்த விருதுகளை மீண்டும் அறிவித்தார்.

காமன்வெல்த் நாடுகள் என்பவற்றில் ஒரு காலத்தில் பிரிட்டனால் ஆட்சி செய்யப்பட்ட நாடுகள் அடக்கம். சுதந்திரம் பெற்ற பிறகு தங்கள் நாட்டு மக்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கும் வகையில் சட்டங்களை பல நாடுகள் மாற்றி அமைத்துக் கொண்டன. கனடா, ஆண்டிகுவா, பிர்படோஸ் ஆகிய நாடுகள் அமைந்த இந்தப் பட்டியலில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் கூட உண்டு.

எனினும் பிரிட்டன் மகாராணியை தங்கள் நாட்டின் கவுரவத் தலைவி யாக ஏற்க கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை ஒப்புக் கொண்டுள்ளன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-20/article8028691.ece

Link to post
Share on other sites

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 21

 
மால்கம் டர்ன்புல்
மால்கம் டர்ன்புல்

ஆஸ்திரேலியாவின் சுற்றுச் சூழல் மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில் மாறி வருகிறது. அதாவது பாதகமான விதத்தில்!. இதற்குப் பல காரணங்கள். என்றாலும் முக்கிய காரணமாக மாறி வரும் வெப்பச் சூழல் மற்றும் அங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் மிருகங்களையும் குறிப்பிடலாம்.

காடுகளை அழிக்கும்போது மண்ணில் உள்ள உப்புத் தன்மை மிக அதிகமாக அதிகரிக்கும். இதன் காரணமாக அங்குள்ள நீரின் தரம் குறையும். மேற்கு ஆஸ்திரேலி யாவிலுள்ள சுமார் ஏழு சதவிகித விவசாய நிலங்கள் இந்த அதிக உப்புத்தன்மை கொண்ட நீரினால் பாதிக்கப்படுகின்றன.

மிக அதிகமான கால்நடைகளின் மேய்ச்சலும் பசுமைப் பிரதேசங் களின் தன்மையைக்குறைத்து வருகிறது. மீன்பிடித்தலை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொள்ளா தது மீன் வளம் குன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் 20 புதிய கிருமிகள் அல்லது புதிய நோய் களால் ஆஸ்திரேலியா பாதிக்கப் படுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இறைச்சி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வந்த ஆஸ்திரேலியா அந்தப் பெருமையைப் பெருமளவு இழந்துவிட்டது. காரணம் அமெரிக்கா. தனது விவசாயி களுக்கு பல சலுகைகளைக் கொடுப்பதால், அவர்களால் குறைந்த விலைக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய முடிகிறது. அது மட்டுமல்ல பிற நாடுகள் தனக்குப் போட்டியாக இருக்கலாகாது என்ற காரணத்தால் அடக்க விலையை விட குறைந்த விலைக்கேகூட மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா கோதுமையை வாரி வழங்கியது (அளவுக்கு அதிகமான கோதுமை விளைச்சல் இருந்த போது அதை அமெரிக்கா கடலில் கொட்டிய விந்தையும்கூட நடந்த துண்டு) இப்படி ஆஸ்திரேலியா வுக்கு ஏற்றுமதி விஷயத்தில் கடும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

1836-ல் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி ஆஸ்திரேலியா மிக சக்தி வாய்ந்த நாடாக ஒரு காலத் தில் விளங்கும் என்றார். ஆனால் சமீபத்தில் தாமஸ் கெனேலி (இவர்தான் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்ற பிரபல நூலின் ஆசிரியர்). ‘’நான் குழந்தையாக இருந்தபோது எங்கள் குடும்பம் வறுமையானதாக இருந்தது. இப் போது வளம் சேர்ந்து விட்டாலும், எங்களால் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை’’ என் றிருக்கிறார். கணிசமான ஆஸ் திரேலியர்களின் கருத்தும் இதுதான்.

ஆப்பிரிக்காவிலும் அமெரிக்கா விலும் நிறவெறி தலைவிரித்தாடி யதை நாம் அறிவோம். அதே சமயம் பல்வேறு தலைவர்கள் இதற்கெதிராகப் போராடி ஓரளவு வெற்றி பெற்றதும் தெரிந்ததுதான். ஆனால் ஆஸ்திரேலியாவில் இன்னமும்கூட வெள்ளைத் தோலுக்கு உயர்வு மனப்பான்மை உண்டு. சென்ற வருடம்கூட ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் தங்கள் நாடு குடியரசாக விளங்க வேண்டும் என்ற லட்சியமில்லாமல், இங்கிலாந்து அரசியே தங்களது நாட்டின் ராஜாங்கத் தலைவராக தொடர்ந்து விளங்குவார் என்று தீர்மானித்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்கள் அநியாயமான விதத்தில் நடத்தப்படுகின்றனர். குடிபோதை என்ற காரணங்களுக் காகவெல்லாம் நீண்ட சிறை தண்டனையை அவர்களுக்கு அளிக்கத் தயங்குவதில்லை அந்த அரசு. தவிர நகரப் பகுதிகளிலிருந்து இந்த மக்களை முடிந்தவரை வெளியேற்றுவதிலும் முனைப்பு காட்டியது ஆஸ்திரேலியா. பிற நாடுகளும் மனித உரிமைக் கழகங்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதுகூட ‘’அப்படி நாங்கள் நடந்து கொண் டிருக்க வேண்டாம்தான்’’ என்று ஏதோ ஒப்புக்கு அந்த அரசு கூறியதே தவிர, மன்னிப்பு கேட்கவில்லை.

அவ்வளவு பரந்து விரிந்த நாட்டில் மக்கள் தொகை மிகக் குறைவு - சுமார் இரண்டு கோடிதான். நகரப் பகுதிகளில்கூட கட்டிடங்கள் அருகருகில் இருப்பது என்பது சில பகுதிகளில் மட்டுமே. எனவே பல வேலைகளுக்கு வெளிநாட்டி னரை வரவழைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய மாகி விட்டது. அதே சமயம் ஆங்கில அறிவை முக்கிய அளவு கோலாக வைத்துக் கொண்டு பிற நாட்டினரை அனுமதிக்கிறது ஆஸ்திரேலியா.

என்றாலும் ‘அமெரிக்காவைப் போல் இருக்க விரும்பி ஆப்பிரிக்கா போல ஆகிவருகிறோமோ’’ என்ற மனக்குறையை அங்கு பலரும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இப்போதைய நிலை நீடித்தால் இன்னும் நாற்பது வருடங்களில் அந்த நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசிபேர் ஆசியர்களாக இருப்பார்கள். இந்த நிலைக்காக கவலைப்படும் அரசு, நான்கு ஆண்டுகளுக்கு முன் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களின் எண் ணிக்கையை கணிசமாகக் குறைத் தது. அதுமட்டுமல்ல ‘குடும்ப மறு இணைப்புத் திட்டம்’’ என்பதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா வுக்குச் சென்று தங்கும் இளைஞர்களுடன், பிற நாட்டில் வசிக்கும் அவனது குடும்பத்தவர் இணைந்து தங்க வழிவகுத்திருந் தது ஆஸ்திரேலியா. இப்போது இந்தத் திட்டத்திற்கும் பலவித நிபந்தனைகளை விதிக்கிறது.

வேறொரு விதத்திலும் ஆஸ் திரேலியாவில் அமைதியின்மை நிலவுகிறது. வளர்ந்த நாடுகளில் பணக்காரர்களுக்கும், ஏழை களுக்குமிடையே உள்ள பொருளா தார வேறுபாடு மிக அதிகமாக இருப்பது இங்குதான்.

நீரிழிவு நோய், உடல் பருமன் இவை இரண்டும் ஆஸ்திரேலி யாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. தனக்கு நீரிழிவு நோய் வந்தது தெரி யாமலேயே இருப்பவர்கள் பலர். 63 சதவீதம் ஆஸ்திரேலியர்கள் தேவைக்கு அதிகமான எடை கொண்டவர்களாகவே இருக் கிறார்கள்.

போதாக்குறைக்கு ஓஸோன் படலத்தில் அதிக ஓட்டை விழுந் திருப்பது ஆஸ்திரேலியாவுக்கு மேலே உள்ள பகுதியில்தான். எனவே தோல் புற்றுநோயால் பாதிக் கப்படுபவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாகி வருகிறது.ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் மால்கம் டர்ன்புல். 2015 செப்டம்பரில் பிரதமரானவர்.

“ஆஸ்திரேலியா வரம் பெற்ற நாடு. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர - முதல் ஆஸ்திரேலியர்களோடு நாம் இன்னமும் சமாதானமாகப் போகவில்லை. தவறுகளை சரி செய்து இணைந்த மக்களாக நாம் வாழ வேண்டும்” என்கிறார். உணர்ந் ததை சரிசெய்யும்போது ஆஸ் திரேலியாவின் மதிப்பு உயரும்.

 

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-21/article8031350.ece

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • மொழி பெயர்ப்புக்கு,   நன்றி... நாதம்ஸ். இந்தக் கட்டுரையை.... வாசிக்க, எனக்கு இரண்டு நாள் எடுக்கும் ஐயா. சுருக்கமாக என்ன எழுதியிருக்கு என்று சொன்னால், நல்லது ராசா. 
  • அவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்? முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள். சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்? கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது.
  • வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார்.  அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது தந்தை சாட்சியமளிக்க சில வாரங்களுக்கு முன்பு, இராணுவ உளவுத்துறை அதிகாரிகள், வேலைக்குச் சென்றபோது அவரை பதுங்கியிருந்து, கொலை செய்தனர், எனது குடும்பத்தினரைக் பிரித்தெறிந்து, என் ஆத்மாவில் ஒரு பெரும் துவாரம் உண்டாக்கியதுடன்,அதன் மூலம் இலங்கை முழுவதும் இருந்த பத்திரிகையாளர்களைப் பயமுறுத்தினர். நான் ராஜபக்சேவையே இதுக்கு பின்னால் இருந்தார் என்று சொல்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸில், நீதிமன்றில், என் தந்தையின் கொலையில் பங்கு வகித்ததற்காக நான், அவர் மேல் வழக்குத் தொடுத்தபோது இதை நான் தெளிவுபடுத்தினேன். இலங்கை ஜனாதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்ட, நவம்பர் 2019 தேர்தல் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அளவிட முடியாத வேதனையையும், இலங்கை சிவில் சமூகத்தின் ஒழுங்கமைப்புக்கு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என் தந்தையின் கொலை குறித்து பிபிசி நிருபர் ராஜபக்சரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கேள்வியைத் தவிர்த்து, சிரித்தபடி கடந்து சென்றார். கடந்த வாரம், யு.என். மனித உரிமைத் தலைவர் மைக்கேல் பேச்லெட் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பெரும் அதிர்வு தரும் அறிக்கையை முன்வைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தொடர்ச்சியாக தோல்வியுற்றதற்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். அடுத்த வாரங்களில், யு.என். மனித உரிமைகள் கவுன்சில் சாத்தியமான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும். நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தனது சகோதரர் கோட்டபயாவை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் வைத்தார். ஒன்றாக, அவர்கள் இலங்கையில் சில மோசமான அட்டூழியக் குற்றங்களை நடாத்தினர், மேலும் அவர்களுக்கு எதிராக பேசுவதற்கு துணிந்த எந்த பத்திரிகையாளரையும் திட்டமிட்டு குறிவைத்தனர். 2015 இல் தனது சகோதரரின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து சுருக்கமாக பதவியை இழந்த போதிலும், குற்றம் சாட்டப்பட்ட இந்த போர்க்குற்றவாளி - கோட்டபய ராஜபக்ச, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கையில்  ஆவணப்படுத்தப்பட்டபடி, 2009 இல் எனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த மறைப்பு நாடகம், மிகச்சிறப்பாக இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை, மரணத்திற்கான காரணம் குறித்த மருத்துவமனையின் கண்டுபிடிப்புகளுக்கு முரணாக இருந்தது. புலனாய்வாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். சான்றுகள் வேண்டுமென்றே குளறுபடிக்குள்ளாகின. போலி சான்றுகளும் உருவாக்கப்பட்டன. கொலை தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று இரண்டு அப்பாவி பொதுமக்கள் கைதாகி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. மற்றொருவர் கைது செய்யப்பட்டு காவலில் இறந்தார். எனது தந்தை கொல்லப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 8, 2015 அன்று, இலங்கையர்கள் ராஜபக்ஷ ஆட்சிக்கு வாக்களித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர், இது முந்தைய ஆட்சியின் கீழ் பல கொடுமைகளுக்கு பலியானவர்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தது. பொலிஸ் புலனாய்வாளர்கள் விரைவில், அப்போது, பாதுகாப்பு செயலாளர் ராஜபக்சரால் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், 'திரிப்போலி' படைப்பிரிவில் 'ஸீரோ', எனும் பெயரில், ஒரு இராணுவ கொலைக் குழு இயங்கியதை கண்டறிந்தனர். ஆனால் புலனாய்வாளர்கள் ராஜபக்ஷவின் பங்கை அம்பலப்படுத்தியபோது, அவர்களின் விசாரணைகள் தடுமாற தொடங்கின. இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை, அவர் சட்டத்துக்கு மேலானவர். அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க நீதிபதிகள், பல நூற்றாண்டுகள் நாட்டில் நீடித்த, நீதி பாரம்பரியங்களை, உடைத்து எறிந்தார்கள். இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள், கொல்லப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, ஒரு மேல் நீதிமன்ற நீதிபதி அந்த வழக்கினை விசாரிக்க தடை விதித்தார். மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, வேறு,  நீதிபதிகள் அந்த விசாரணைகள், முன்னோக்கி செல்வதைத் தடுக்க உத்தரவுகளை பிறப்பித்தனர். இதனாலேயே, நான் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு, நீதி தேடி போக முடிவு செய்தேன். அந்த வேளையில், ராஜபக்சே ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்கான  ஒரு புதிய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார். அவரது முழக்கமாக இருந்தது: உளவுத்துறையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் அட்டூழியங்கள் குற்றம் சாட்டப்பட்ட உளவுத்துறை அதிகாரிகளை விடுவித்தல். எனது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரை இலங்கையர்கள் ஜனாதிபதியாக 15 மாதங்களுக்கு முன்பு, தேர்ந்தெடுத்தபோது, நான் அதனை, திகிலுடன் பார்த்தேன். ஜனாதிபதியாக அவரது புதிய அந்தஸ்து அவருக்கு வழக்குகளில் இருந்து விடுவிக்கும் சட்டப்பூர்வ, சக்தியைக் கொடுத்தது. ஜனாதிபதியாக, ராஜபக்ச, குற்றவாளிகள், தண்டனை பெறாதிருப்பதை உறுதிசெய்வதில்,  நேரத்தை வீணாக்கவில்லை. அவரை சட்டத்திற்கு மேலாக வைத்திருந்த நீதிபதிகளை அவர் பதவி உயர்த்தினார். குழந்தைகளை கொன்றதற்காக போர்க்குற்றத்தில் தண்டனை பெற்ற ஒரு சிப்பாய்க்கு அவர் மன்னிப்பு வழங்கினார். இத்தகைய கொடுமைகளை விசாரித்த துப்பறிந்த, நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இலங்கையின் குற்றவியல் புலனாய்வுத் துறையை நடத்தி, பல விசாரணைகளில் முன்னேற்றங்களை வழிநடத்திய FBI பயிற்சி பெற்ற பொலிஸ் நிர்வாகி ஷானி அபேசேகர, போலியான குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2020 மே மாதத்தில், ராஜபக்ஷ சிஐடியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார் - எனது தந்தையின் கொலைக்கான ஆதாரங்களை மூடிமறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு போலீஸ்காரரே அவர். இத்தகைய ஒருவரின் இலங்கை அரசிடம் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்று  சர்வதேச சமூகம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது. ராஜபக்சேவின் தேர்தல் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒவ்வொரு கதவையும் மூடியுள்ளது என்பதை பாதிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சர்வதேச சமூகம் நன்கு அறிவார்கள். மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின், பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மற்றும் ஒரு சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை உட்பட, வலுவான சர்வதேச நடவடிக்கை இல்லாமல் -  இலங்கையர்கள் கடந்தகால மனித உரிமை மீறல்களை மீண்டும் மீண்டும் உள்ளாகும் பேர் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தனது கொலையை முன்கூட்டியே உணர்ந்து கொண்டிருந்த, என் தந்தை, தனக்கே ஒரு இரங்கல் கட்டுரையினை எழுதி இருந்தார். அதில் "கருத்து சுதந்திரத்தை" கட்டுப்படுத்துவதற்கான, முதன்மை கருவியாக படுகொலைகள் நடக்க தொடங்கிவிட்டது என்று கூறி இருந்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், எதேச்சதிகாரம் மிக்கவர்களால் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை காண்கின்றோம். இது விசயத்தில், உலகம் ஒரு உறுதியான நிலைப்பாடினையும், கொலைகார எதேச்சதிகாரர்கள் தமது, அநியாயங்களுக்கு விலை கொடுப்பதை உறுதிசெய்யவும் வேண்டிய, நேரம் இது. அதேவேளை இன்று, அணா பொலிட்கோவ்ஸ்காயா, ஜமால் கஷோகி மற்றும் என் தந்தை போன்ற ஹீரோக்களின் கொலையாளிகள், உலக அரங்கில், நாடுகளின் தலைவர்களுடன் தோள்பட்டை தேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஒரு பத்திரிகையாளரைக் கொல்வது வளர்ந்து வரும் எதேச்சதிகாரர்களுக்கான மற்றொரு சாதாரணமான சடங்கு என்று தெரிகிறது. உபயம்: வாஷிங்டன் போஸ்ட் யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு. 🙏
  • ரேக்...  இற்  ஈசி... ஈழப் பிரியன்ஸ். 🙏 சென்ற... வெள்ளிக்கிழமை,  நடந்த பகிடிகள் போல் இதனையும்.    கடந்து போக வேண்டும் ஐயா.   வார விடுமுறையில்...  மகிழ்ச்சி மிக முக்கியம். 🥰 அது... தவறினால், வாரம் முழுக்க, மாடு மாதிரி வேலை செய்வதில் அர்த்தம் இல்லை. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.