Jump to content

சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

போற போக்கை பார்த்தால் சும்மா இருக்கிற அவுஸ்திரேலியா அதிகாரிகளையும் இந்த விடயத்தில் நித்திரையால் எழுப்பி  நம்ம ஆட்களே போட்டு குடுத்து கேள்வி கேட்ட இளையோரை சொறிலங்காவில் கொண்டு போய் விட்டு விடுவினம் போல் உள்ளது அவ்வளவு சிங்கள விசுவாசம் .

கேள்வி கேட்ட இளையோரை அல்ல! அவுஸ் போன்ற மேற்கு நாட்டு நடைமுறைகளுக்கு ஒவ்வாமல் கூச்சல் போட்டு, வன்முறை அச்சுறுத்தல் விடுத்த ரௌடிப் பொறுக்கிகளை அவுசிலிருந்து அனுப்ப வேண்டும் என்பதே என் கருத்து! உயிரைக் காக்க நாடு மாறி வந்தா அந்த அந்த நாடுகளின் சட்ட நடைமுறைகளை மதிச்சு நடக்க வேணும்! அதை விட்டுப் போட்டு "சிறிலங்காக் காட்டுச் சட்டத்தை எனக்குத் தேவையான நேரம் செய்வேன், ஆனால் நாடுகள் அனுதாபத்தோடு பார்க்க வேணும்" என்பதெல்லாம் வெறும் benefit tourism தான்! அசைலம் அல்ல! 

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2015, 12:22:45, Justin said:

கேள்வி கேட்ட இளையோரை அல்ல! அவுஸ் போன்ற மேற்கு நாட்டு நடைமுறைகளுக்கு ஒவ்வாமல் கூச்சல் போட்டு, வன்முறை அச்சுறுத்தல் விடுத்த ரௌடிப் பொறுக்கிகளை அவுசிலிருந்து அனுப்ப வேண்டும் என்பதே என் கருத்து! உயிரைக் காக்க நாடு மாறி வந்தா அந்த அந்த நாடுகளின் சட்ட நடைமுறைகளை மதிச்சு நடக்க வேணும்! அதை விட்டுப் போட்டு "சிறிலங்காக் காட்டுச் சட்டத்தை எனக்குத் தேவையான நேரம் செய்வேன், ஆனால் நாடுகள் அனுதாபத்தோடு பார்க்க வேணும்" என்பதெல்லாம் வெறும் benefit tourism தான்! அசைலம் அல்ல! 

பதிலுக்கு அவர்களும் "போர் முடிந்து 7 வருடமாகின்றது சொந்த வீடு இன்னமும் உயர் பாதுகாப்பு வலயத்தில்.சொந்த ஊரை தேட வேண்டி உள்ளது சிங்கள பெயர் போட்டு உள்ளார்கள் , மாமனும் மச்சானும் இன்னமும் பயங்கரவாத தடை சட்டத்தில் இதெல்லாம் இல்லாதாக்கி இயல்பு  வாழ்க்கையை தருவன் என்று தான் சுமந்திரன் போன்றவர்கள் வாக்கு கொடுத்து தேர்தலில் வென்று வந்தவர்கள் கடைசியில் வென்றபின் குடுத்த வாக்கை மறந்து செயற்பட்டதால் உணர்ச்சி வசமாய் கேள்வி கேட்டோம் அது பிழையா? "  என்று அவுஸ்திரேலியா அதிகாரிகளிடம் அவர்களும் பதிலுக்கு முறையிட்டால்?

இங்கு சுமந்திரனின் அரசியலை விட ரௌடிப் பொறுக்கிகள் கீழே தான் உள்ளார்கள் என்பதை மனவருத்ததுடன் ஒத்துகொள்கின்றன்.

அனுதாபத்தோடு பார்க்க வேணும் என்று  அவர்கள் விரும்பி இருந்தால் வாழ்வு இல்லை சாவு எனும் கடல் பயணம் அவர்களுக்கு தேவை ஏற்பட்டிருக்காது. 

சத்தமாய் கேள்வி கேட்ப்பது அவுஸ்திரேலியாயாவில் பிழை என்று இதுவரைக்கும் இல்லையாம் .

ஊரில் இருந்து இயல்பு வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துவதை விட்டு ஏன் சுமந்திரன்  கனடா ,usa,லண்டன் ,அவுஸ்திரேலியா என்று பறந்து பறந்து ஊரவன் காசில் உண்டியல் குலுக்கிறார்?

மொத்தத்தில் தமிழருக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து நல்லபிள்ளை பெயர் எடுப்பதே சுமத்ரனின் முதல் நோக்கம் .அத்துடன் தன்னுடைய மேட்டுக்குடி  விசுவாசிகளுக்கும் சொறிலங்கா ஹொலிடே போகேக்கிலை அல்லக்கை உதவிகள் செய்வது உண்மைதான். ஆக எதிர் காலத்தில் சுமந்திரன் எல்லோருக்கும் பிரச்சனைதான் .இந்த விடயத்தில் புலியை எதிர்கின்ரம் என்று அடிப்படை உரிமைகள் கேட்க்கும் அப்பாவி தமிழரின் குரல் வளையை நசுக்குவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல .இது தொடர்ந்தால்  விரும்பதாகாத விளைவுகள்  உருவாவதை எவரும் தடுக்கமுடியாது ஏனெனில் கடந்த கால படிப்பினைகள் அவ்வாறு உணர்த்துகின்றன .

பச்சையாக சொல்வதானால் அமிர்தர் காலம் போல் மக்களை, இளையோரை திரும்பவும் பகடை போல் எண்ணுதல் மீண்டும் கசப்பான காலங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும் எமது அடுத்த தலைமுறையின் எதிர்காலம் .

அதுக்காக பனம்கொட்டை நடுவது இன்றைய தமிழரின் அத்தியாவசிய தெவையாகிவிடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கேள்வி கேட்பதற்கும் தூசணத்தால் ஒருவரைப் பேசவிடாது துரத்தியடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு! இதுவே சிங்களவன் 2009 இல் நடந்த ஒரு தமிழர் ஆர்ப்பாட்டத்தில் செய்திருந்தால் அவர்களை சிங்கள ரௌடிகள் என்றிருப்பீர்கள்! இது உங்களோடு அரசியல் தளத்தில் முரண்படும் கருத்துடைய சும் என்பதால் ரௌடிகள் ஏதோ நியாயமான கேள்வி கேட்ட அப்பாவிகளாகி விட்டார்கள்!

உங்களுக்கு இன்னும் புரியாத ஒன்று: சும் புலம்பெயர் தமிழர் தெரிவு செய்த ஆளல்ல! தாயகத் தமிழரின் தேர்வு! அவர்கள் விரும்பா விட்டால் அடுத்த தேர்தலில் சும் மும் அவுட் த.தே.கூவும் அவுட்! விடயம் இவ்வளவு சிம்பிளாக இருக்க ரௌடிகள் ஏதோ தங்கள் தலையில் தான் பொறுப்பு இருப்பது போல குத்தி முறிவது தான் வேடிக்கை! :cool:

Link to comment
Share on other sites

31 minutes ago, Justin said:

பச்சை மேற்குறிப்பிட்ட கருத்திற்கு மட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எமது தளம் உங்கள் அரசியல் தளம் என்று வேறு இல்லை சிங்கள அரசியல்  தமிழ் அரசியல் தளம் எனும் பார்வை உருவாகதவரை மீண்டும் மீண்டும் நமது அடுத்த தலை முறைகளுக்கு துரோகம் செய்கின்றம்.

தயவு செய்து புலி எதிர்ப்பு அரசியலையும் தற்போதுள்ள அரசியலையும் விட்டு மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் நல்லது.

ஜனநாயக அரசியலை நம்புவதும்  அமெரிக்க அரசு  நீதி நேர்மையுடன் நடக்கின்றது  என நம்புவதும் ஒன்றுதான் .

உண்மையில் முறைப்படி வென்று வந்தால் இந்தியாவுக்கும் மேற்குலகுக்கும் முதுகை கோணியபடி வந்து போக தேவையில்லை மேற்குலகை 

குசிபடுத்தும் அறிக்கைகள் தேவை இல்லை.

தாயகத்தின் குழப்பும் மாயைகள் தேர்தல் விதி முறைகள், "தமிழ் தேசிய கூட்டமைப்பு" எனும் சொற்பதம் தடை செய்யபட்டால் தெரியும் சங்கதி .

ஆனால் அதன் மீதான சவாரி இன்பம் போகாது.

சில விடயங்கள் பொது வெளியில் கதைக்கமுடியாது ஆனால் புரிந்து கொள்ள முடியும் விடயமிக்கவர்களால் .

நீண்ட அதிகார சுகத்துக்காக சிங்களவரை குசிபடுத்திரம் என்று   பழையவர்கள் சென்ற பாதையை திரு சுமந்திரன் போன்றவர்கள் தொடர்ந்தால் அது வேறு விளைவுகளை உருவாக்கி விடும் .

அதுக்காக மோட்டுதனமாக 5 கட்டம் என நீங்கள் நினத்தால் அது உங்கள் அறிவிலித்தனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

நீங்கள் உட்பட தமிழ் தேசிய தீவிர கருத்தாளர்களின் குறைபாடென்று நான் கருதுவதைத் தான் மேலே எழுதியிருக்கிறீர்கள்:

"ஒன்று நீங்கள் எங்களோடு, அல்லது நீங்கள் பயங்கரவாதிகளோடு" என்று ஜோர்ஜ் புஷ் கூறிய மாதிரி இருக்குது! தமிழ் அரசியலில் பன்முகத் தன்மை இல்லாமை தான் 2009 இல் புலிகள் போன பின்னரும் புலி ஆதரவாளர்களான மக்கள் இன்னும் குழம்பித் திரிய இப்படி றௌடிகளை உருவாக்கக் காரணம்!

மேலும், "மக்களுக்கான மக்களுக்கான" என்று நூறு தரம் எழுதும் உங்களுக்கு தாயக மக்களின் தேவை உண்மையில் தெரியுமா? தங்கள் தேவை தாயக மக்களுக்குத் தெரியாமலா சும் மையும் த.தே.கூவையும் தேர்ந்தார்கள்? நீங்கள் குறிப்பிட்ட இதே "குழப்பமான" சிறிலங்காத் தேர்தல் முறைமையை வைத்துக் கொண்டு தான், புலிகள் கைக் காட்டி விட்டு 22 பா.உக்கள் தெரிவானார்கள்! அப்போது இந்தத் தேர்தல் மக்கள் விருப்பைப் பிரதிபலிப்பதில்லை என ஏன் சொல்ல முடியவில்லை உங்களால்? கொள்கைகள், அது தனி மனிதனுடையதானாலும் சமூகத்தினுடையது ஆனாலும், consistency வேண்டும்! எங்களுக்கு இலாபமெண்டால், நல்லது, எங்களுக்குக் குத்தினால் " சீ இது கக்கா!" என்பதெல்லாம் ஐந்தாம் வகுப்போட மறைய வேண்டிய குணம்!:cool:

1 hour ago, ஜீவன் சிவா said:

பச்சை மேற்குறிப்பிட்ட கருத்திற்கு மட்டும்.

மன்னிக்கவும்! கீழ் பந்தியை நீக்கி விட்டேன்!

Link to comment
Share on other sites

ஆர்ப்பாட்டம் ... ம்ம்ம்ம் ... தேவையா இது?

ஆ கதிரைகள் ஒன்றும் கைகளில் அகப்படவில்லையா? ... சரி கதிரைதான் வேண்டாம், போகும்போதாவது பக்கத்து கடைகளில் கொஞ்ச முட்டைகள் வாங்கி கொண்டு போய் இருக்கலாமே? ... அடுத்த தடவையாவது அப்ஸ்ரயஸை யூஸ் பண்ணுங்கோ?

குறிப்பு: முட்டை அடித்தல் மேலை நாடுகளில் சகஜமுங்கோ! அதெல்லாம் ஓர் குற்றமல்ல!

  Blair_2643792k.jpg

  MAIN-John-Baird.jpg

article-2226000-093B0E14000005DC-20_634x

Miliband-egged-in-south-L-016.jpg

2D1397BF00000578-3259523-image-a-51_1443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2015, 4:49:40, Paanch said:

அடிவாங்கினால் வலியில் எல்லோரும் ஐயோ..! ஐயோ...! என்றுதான் கத்துவார்கள்.tw_astonished: tw_astonished:

அவுசில் அடிவாங்கிய சுமந்தினோ....!! "விக்கி ஐயாவை கட்சியைவிட்டு வெளியேற்று" என்று கத்துகிறாராம்.tw_tired:tw_weary:

விக்கியரை, சுமந்திரனை  தெரிந்த மக்கள் தாயகத்தில் புலவார் யாரையும் தெரியேல்ல, உவர் ஏன் உங்க நிண்டு ஊளை இடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2015, 12:52:06, Sasi_varnam said:

இங்க நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னன்னா ..
அசௌகரியத்துக்குள்ளான சுமந்திரன் சார் படபடப்பிலாமல் தில்லா விடை சொல்லி கிளம்பிப் போய்ட்டார்.
இங்க மேட்டர் என் இன்னும் நீட்டி முழங்குது?
அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாய் கதைத்த இளையவர்கள் கப்பலில் புதிதாக வந்த அகதிகள் என்று எதனை வைத்து, யாரால் அடையாளம் காணப்பட்டார்கள்?
யாரோ ஒருவரின் அனுமானம், அதை வைத்து இவ்வளவு பொல்லாப்பு தேவைதானா?
எதையோ விவாதிப்பதை விட்டு இப்போ பிரித்தானிய, அவுஸ்த்ரேலிய குடிவரவு, அகதி விண்ணப்பம், வெளியுறவுக் கொள்கை, அரசியல் சாசனம்....

Way to go ..

அவர் படபடக்க தேவையில்லை, உங்க படபடப்பை உருவாக்கத்தானே வந்தவர், அவரின் அரசியல் அவதார நோக்கம் நிறைவேறி விட்டுது, எதற்க்காக இறக்கப்பட்டாரோ அதை செவ்வனே செய்து போட்டார். அவருக்கு சிங்களவன் சன்மானம் காத்திருக்கு. ஒரு முட்டுக்கட்டை விக்கியர். அதற்கும் விண்ணப்பம் அவுசில் போட்டாச்சு. நல்லிணக்க அரசாங்கத்தின் முன்னேற்றம் அடுக்கிக் கொண்டே போகலாம். உள்நாட்டுப் பொறிமுறை விசாரணை இணக்கம், மஹிந்த மின்சாரக் கதிரையிலிருந்து மீட்பு, புலம்பெயர் எதிர்ப்பு இல்லை, இனி எந்தச் சிங்களவனும் பயப்பிடாமல் வருவான், ஒருகூட்டம் மாலையோட வரவேற்க காத்திருக்கும். ஏன்னா ஊர் இரண்டு பட்டிடுட்டு. ஆனால் இவர்கள் இல்லாத போது கைதிகள் விடுதலை? ராசதந்திரிகள் எதிர் பாக்காத விடயம் போல் தெரிகிறது. ஏன்னா அமைச்சர் ஒருவர் அப்பிடி நக்கல் அடிச்சிருக்கிறார். ஆனாலும் ஒரு விளக்கம் தயார் பண்ணிக்கொண்டு வருவார்கள் ராச தந்திரிகள். ரணில் ஒரே நேரத்தில் பல காய்களை நகர்த்துவது போல் தெரிகிறது. வெளிஉறவு அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு பாவம். இத்தனை ஆயிரம்  விருப்பு வாக்குகளை பெற்று அந்த மக்களின் நம்பிக்கைக்கு தீ வைப்பவனை யாராவது நம்புவானா? தன் வேலை முடியுமட்டும் இவர். அடுத்து இன்னொரு இந்திரனோ, சந்திரனோ இறக்கி விடப்படுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜேர்மன் அதிபர் பதவியில் இருக்கும்போது ஒருசிலர் முட்டையால் வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதற்காக யாருமே வெகுண்டெழவில்லை. மாறாக அந்த சம்பவத்துக்குரிய காரணத்தை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் / ஊடகவியளாளர்கள் ஆராய்ந்தார்கள்.அதற்குரிய தீர்வையும் கண்டார்கள்.

ஆனால் இங்கே??????????
படிக்காதவர்கள்,பள்ளிக்கூடம் போகாதவர்கள்,கோஷ்டிகள் என நீளத்திற்கு அடுக்கிக்கொண்டே போவார்கள். அதை விட கட்டுரை கவிதை எக்கச்சக்கம்.

கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்த இனம் தமிழினம் அல்லவா. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இங்கேயும் தான் காரணம் ஆராயப்படுகிறது! 

1) தாயகத்தில் எலக்சன் வென்ற சும் வெளிநாடு வந்ததால் துரத்தினோம் 
2) 58K வோட்டுகளில் கள்ள வோட்டு இருக்குது, அதால துரத்தலாம் (ஆனால் ஒரு துண்டு ஆதாரம் கூட இல்லை!)
3) சும் தீவிர தமிழ் தேசியம் பேசாததால் துரத்தினோம்
இப்படி பல சொல்லி பொறுக்கிகளை நியாயப் படுத்துகிறோம்! 

இந்தக் கலவரத்திலும் சும்மும், பக்கத்தில் இருக்கிற அம்மணியும் இந்தப் பொறுக்கித் தனமான கூத்திற்கு என்ன காரணம் என்று அமைதியாகச் சொல்லி விட்டார்கள், நீங்க கேட்டீர்களோ தெரியாது! அது இது தான்:
"பதிலைக் கேட்க உங்களுக்குப் பயம்!" 

அது தான் காரணம்! நான் நினைக்கிற இன்னொரு காரணம், புலம்பெயர் தமிழர்களின் அரசியல், பொறுக்கித் தனத்திலும் arrogance இலும் கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது! இந்தப் பொறுக்கித் தனம் சும் மைப் போல நாளைக்கு எல்லாரையும் தாக்கும்! அப்ப இந்தப் பொறுக்கி சப்போர்ட் காரரெல்லாம் தங்கள் கோவணத்தை உருவி முகத்தை மூடிக் கொள்ள வேண்டியான் (கோவணம் மிச்சம் இருந்தால்!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த என்னை, இரண்டு மாதத்துக்கு முதல் கோவில் கூட்டத்திற்கு வா என்று
கூட்டிகிட்டு போனார்கள், அங்கு போன பின்தான் விளங்கிச்சு படித்த கனவான்களின்
அட்டகாசம், என்ன அடிபடாத குறைதான். கொஞ்சநாள் யாழ் பல்கலையில் படிக்க
வேண்டி வந்துவிட்டது, அப்ப ஒரு விரிவுரையாளர் சென்னார், உங்களுக்கு இப்ப
உள்ளுக்கு வரமால் இருப்பவர்களுக்கு என்ன வித்தியாசமென்றால் அவங்கள் சந்தியில்
நின்று விசிலடிக்கிறார்கள், நீங்கள் கொளரவமாக உள்ளுக்குள் வந்து விசிலடிக்கின்றீர்களென்று.

கப்பலால் வந்தாலென்ன, விமானத்தில் வந்தாலென்ன எல்லாரும் கிடைத்த சந்தில் சிந்து
பாடுபவர்கள்தான் அதிகம். இதில் சுமந்திரனென்ன யார்  மாட்டுப்பட்டுப்பட்டாலும் இதே கதிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

உடையார்.. இந்தக் கோதாரி விழுவாராலை தான்.. நான் விடியக்காலமை ஏழு மணிக்கே போய், முருகனைக் கும்பிட்டிட்டு ஓடி வந்திருறது..!

அதால கொஞ்சப் பேர், இவர் கிறிஸ்ரியனா இருப்பாரோ என்றும் சந்தேகப்படுவது உண்டு! 

ஆனால் உண்மை எனக்கும்.. அந்த முருகனுக்கும் தெரியும்!

இஞ்சையும் உங்கட பிரச்சனை தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

சும்மா இருந்த என்னை, இரண்டு மாதத்துக்கு முதல் கோவில் கூட்டத்திற்கு வா என்று
கூட்டிகிட்டு போனார்கள், அங்கு போன பின்தான் விளங்கிச்சு படித்த கனவான்களின்
அட்டகாசம், என்ன அடிபடாத குறைதான். கொஞ்சநாள் யாழ் பல்கலையில் படிக்க
வேண்டி வந்துவிட்டது, அப்ப ஒரு விரிவுரையாளர் சென்னார், உங்களுக்கு இப்ப
உள்ளுக்கு வரமால் இருப்பவர்களுக்கு என்ன வித்தியாசமென்றால் அவங்கள் சந்தியில்
நின்று விசிலடிக்கிறார்கள், நீங்கள் கொளரவமாக உள்ளுக்குள் வந்து விசிலடிக்கின்றீர்களென்று.

கப்பலால் வந்தாலென்ன, விமானத்தில் வந்தாலென்ன எல்லாரும் கிடைத்த சந்தில் சிந்து
பாடுபவர்கள்தான் அதிகம். இதில் சுமந்திரனென்ன யார்  மாட்டுப்பட்டுப்பட்டாலும் இதே கதிதான்.

நீங்கள் சொல்வது சரி! "கல்விச் சான்றிதழ் என்பது தமிழர்களைப் பொறுத்தவரை இன்னுமொரு சாதி முறைமை மட்டுமே" என்று சுகன் சொன்னார். மிகச் சரியான கருத்து. ஆனால், எல்லாரும் எல்லாருக்கும் றௌடித்தனம் காட்டுகிறார்கள் என்பதால் நாம் இதை மௌனமாகக் கடந்து போக வேண்டுமென்பதில்லை!

சில இந்தியர்களிடம் "ஏன் இப்படி உங்கள் நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து விட்டன?" என்று  கேட்டால் "பாலியல் வன்முறைகள் எல்லா நாட்டிலும் தான் நடக்கிறது" என்கிறார்கள். இதன் அர்த்தம் நாம் பாலியல் வன்முறையை சர்வதேச நியமமாக ஏற்றுக் கொண்டு மௌனமாக இருந்து விட வேண்டும் என்பதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்தியர்களிடம் கேட்டால் அப்படிதான் சொல்வார்கள் ....

வெளியில் இருக்கும் நீங்கள் ஏன் குமுறுகிறீர்கள் ? இந்தியர்கள் வெளிநாடுகளிலா பாலியல் கொடுமை செய்கிறார்கள் ?

சுமந்திரன் இனத்தை விற்றால் வோட்டுபோட்ட உள்ளூர் சனம்தான் கேட்கவேண்டும்.
இந்தியன் உள்ளூரில் பாலியல் கொடுமை செய்தால் வெளியில் இருக்கும் நீங்கள் எல்லோரும் துள்லாம் .....?
வசதிக்கு ஏற்ப பாயாது ...... நீதியை நீதியாக பேசுங்கள்.

இந்தியரிடம் குறைபாடு இருக்கிறது ...
இலங்கையிலும் உள்ளூரில் வசதி இன்மை செய்தி தணிக்கை அரச இயந்திர சக்கரம் இருக்கிறது.

நீதி நியாயத்தை எவன் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம்.
மனிதன் கேட்கவேண்டும் அது ஆறு அறிவு சார்ந்த ஒரு விடயம்.

இவளவு காலமும் தமிழ் இனம் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து இருக்கிறது 
சட்டரீதியாக மொழி கல்வி மறுப்பு இருக்கிறது 20 வருடம் முன்பே ஐ நா இதை பதிவு செய்து 
அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறது 

1984இல் அமெரிக்காவில் இலங்கை இனவாத அரசு பட்டியலில் இருந்து இருக்கிறது.
என்ன காரணம் காட்டி அதில் போட்டார்களோ அவளவும் தொடர்கிறது.

இப்போ முதலீட்டு முதலைகளுக்கு ஒரு பெரிய பிரச்சனை ... இலங்கை இனவாத அரசாக இருக்கும்போது 
ஐ நாவில் வழக்கை சந்திக்க வேண்டும் ..... இன்று ஐ நா பெரியவர்கள் தடம் புரண்டு தள்ளி விட்டாலும்.
அப்படியே கிடக்கையில் போட முடியாது.

இதை எல்லா இடமும் அழித்து தமிழர்களை பாதாளத்தில் தள்ள வேண்டும்.
இதற்கு சிங்கள அரசு அக்ண்டுபிடித்த அழிரப்பர் சம் சம் கும்பல்.

எனது கருத்து மிகவும் தவறானதாக கூட இருக்கலாம்.

இந்த உள்ளக பொறிமுறை என்ற குரங்கு தனத்தில் தமிழனுக்கு என்ன லாபம் ?
இதை ஏன் ஒரு தமிழன் முக்கி முறிந்து செயல் படுத்த வேண்டும் ?
நாம் போராடி தோற்றுபோகாலம் ...... இன்றைய ஐ நா கூட இல்லை அது ஒரு இன அழிப்பு இல்லை என்று தீர்ப்பு கூறலாம்.
அதற்கு முன்பே தமிழன் ஒருவன் குத்தி முறிய வேண்டிய காரணம் என்ன ?

இலங்கை தப்பு இல்லை என்றால் ... ஏன் சங்க்சன் கொண்டுவந்தீர்கள்? என்ற கேள்வியும் 
தொடர் வழக்கும் இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ...

குற்றமிழைத்த மிலொசொவிக் வழக்கும் ..... அவர் ஜெலில் வைத்தே கொலை செய்யபட்டதன் காரணமும் என்ன ?
மிலோசவிக் தான் குற்றவாளி இல்லை என்று வாதடவில்லை. ஐ நா வின் குற்றத்தை கையில் எடுத்தவுடன் போட்டு தள்ளினார்கள். 

நாம் புலிகள் குற்றவாளிகள் இல்லை என்பதற்கு வழக்கு தொடுக்கவில்லை ....
எமக்கு நடந்த கொடுரம்  அதற்கு ஐ நா வின் பதிலை கேட்ட வழக்கு பதிவாகி இருக்கிறது.

இந்த நேரம் ஒரு தமிழன் ஆடும் உள்ளக கூத்தில் இவளவு காலமும் கொடுமைகளை சந்தித்த தமிழ் இனத்திற்கு என்ன லாபம் ?

இந்த எட்டப்பனை யார் தேர்ந்தால் என்ன ....
சாணி அடித்து கலைக்க வேண்டும்.

கருத்தால் கருத்தை வெல்லும்   உங்கள் அச்சாபிள்ளை வேலை சினிமா படம் ஏதும் எடுக்க உதவும்.
வெள்ளைக்காரன் இந்தியாவை ஆக்கிரமித்து உள்ளதை எல்லாம் வறுகினான்.
உங்கள் கருத்து படி வருகுவது தவறு என்று இந்தியர்கள் கருத்து எழுதி .... இங்கிலாந்து ராணிக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
உண்ணாவிரதம் சத்தியா கிரகம் என்று போராடிய காந்தி ரௌடி.

உங்கள் பார்வையில் ஆனந்த சங்கரிதான் உலகின் சிறந்த போராளி !
மன்னிக்க வேண்டும் மனிதர்களுக்கு ஆறு அறிவு ......... உலகில் போராட்டம் என்பது அடக்குமுறை ஒரு எல்லையை தாண்டும்போது 
தானாக உருவாகும் ஒன்று.
மனித அறிவு .... ஏன் ? என்ற கேள்வியை கேட்கும் ... தானாகவே மறுக்க தொடங்கும்.
அதுவே ஒரு போராடம்தான்.

உலகம் முழுதும் இதுதான் நடக்கிறது .... இனியும் நடக்கும்.
இனி சுமந்திரன் போகும் இடமெல்லாம் அடிக்க வேண்டும். 

தமிழர்களுக்கு சிங்கள இன வெறியர்களிடம் இருந்து விடிவு வேண்டும்.
வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.

எட்டப்பர்கள் காக்கை வன்னியர்களை மக்கள் ஏற்றுகொள்ள போவதில்லை துரத்தி துரத்தி அடிப்பார்கள்.
உங்களுக்கு ஒரு குசும்பு தகவல் ...... காக்கை வன்னியனையும் காட்டி கொடுப்பிட்கு முன்னம் உள்ளூர் மக்கள் ஏற்றுக்கொண்டுதான் இருந்தார்கள்.
தேர்தல் வைத்திருந்தால் ........... ஒரு 68 ஆயிரம் வாக்கு போட்டிருப்பார்கள். 

நான் இதில் கேட்டது ஒரே ஒரு கேள்விதான் ...
பதிலை தந்தால் .... நாமும் உங்களைபோல அறிவை வளர்கலாம். 

Link to comment
Share on other sites

இன்று ... தமிழினத்தின் விடிவிற்காக, மெல்பேனில், சும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக ஒரு தகவல்! ... அங்கு விடியட்டும் ... கேட்டு விட்டு விபரமாக எழுதுகிறேன்! ... அதற்குள் சும் சாகமாட்டார் என ஜேசுவிடம் மன்றாடுவோமாக

Link to comment
Share on other sites

ஏன் சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்?

இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தக் கூடாது என்று கூறி சிலர் சிட்னியின் Homebush நகரில் சிலர் கடந்த ஞாயிறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். ஏன் தாங்கள் இப்படியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்று தன்னிலை விளக்கம் தருகிறார் செயற்பாட்டாளர் யோகராஜா அவர்கள்.  

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/eennn-cumntirnnnukku-etiraak-aarppaattttm?language=ta

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.