Jump to content

ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு"  என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிறுவர்களின் வீடு 

சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன்

பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான்.

வாசலில் ஒரு சிறுவன்

பாண்டி விளையாடுகிறான்.

முற்றத்தில் ஒரு சிறுவன்

மழையிலாடுகிறான்.

கூடத்தில் ஒரு சிறுவன்

பல்லாங்குழி விளையாடுகிறான்.

சமையலறையில் ஒரு சிறுவன்

சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான்.

கழிப்பறையில் ஒரு சிறுவன்

கதவைத் திறந்துவைத்துப் போகிறான்.

குளியலறையில் ஒரு சிறுவன்

சத்தமாகப் பாடுகிறான்.

படுக்கையறையில் ஒரு சிறுவன்

அம்மாவின்மேல் கால்போட்டுத்

தூங்குகிறான்....

ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்

சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்!

-சேயோன் யாழ்வேந்தன்

நன்றி: ஆனந்த விகடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடனில் பிரசுரமானபின் நான் என்னத்தை மறு பிரசுரம் செய்வது...!

 இணைப்புக்கு நன்றி சேயோன்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் எத்தனையோ.... பருவங்கள் இருந்தாலும்,
வயது போன பின்பும்.... இனிமையாகவும், பசுமையாகவும், கவலை இல்லாமலும்....
இருக்கும் வாழ்க்கை என்றால், சிறுவர் வாழ்க்கை தான். 
அதனை அழகாக எழுதி, ஆனந்த விகடனும் பிரசுரித்த... சேயோனுக்கு பாராட்டுக்கள்.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருந்தாலும், யாழ் மண் வாடை இல்லாமல் தமிழக வாசகர்களைக் குறிவைத்த வார்த்தைகளாக உள்ளன. சிலநேரம் பாண்டியும் பல்லாங்குழியும் யாழுக்கு இந்திய தொலைக்காட்சிகளுடன் யாழுக்கு வந்திருக்கலாம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

கவிதை நன்றாக இருந்தாலும், யாழ் மண் வாடை இல்லாமல் தமிழக வாசகர்களைக் குறிவைத்த வார்த்தைகளாக உள்ளன. சிலநேரம் பாண்டியும் பல்லாங்குழியும் யாழுக்கு இந்திய தொலைக்காட்சிகளுடன் யாழுக்கு வந்திருக்கலாம் :cool:

கிருபன்ஸ்....
உங்களின், அதே.... கேள்விகள் என்னிடமும்  ஏற்பட்டது.
ஆனால்.... சேயோன் யாழ் வேந்தன், யாழில் பிறந்து.... 
சிறுவனாக இருக்கும் போது.... தமிழகத்திற்கு  வந்து, அங்கு.... வளர்ந்தவராக இருந்திருப்பார் என்றே நினைத்தேன்.
அதனை..... மண்வாசனை என்றும் மாறாது என்று கூறுவார்கள்.
அது, சேயோன் விடயத்திலும், இருந்திருக்கலாம்.
அல்லது...அவர், ஈழத் தமிழனை மிக, மிக... நேசிக்கும்.... ராஜவன்னியன் போன்ற, ஒரு உறவாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Fri Nov 13 2015 22:45:38 GMT+0530 (India Standard, தமிழ் சிறி said:

வாழ்க்கையில் எத்தனையோ.... பருவங்கள் இருந்தாலும்,
வயது போன பின்பும்.... இனிமையாகவும், பசுமையாகவும், கவலை இல்லாமலும்....
இருக்கும் வாழ்க்கை என்றால், சிறுவர் வாழ்க்கை தான். 
அதனை அழகாக எழுதி, ஆனந்த விகடனும் பிரசுரித்த... சேயோனுக்கு பாராட்டுக்கள்.  Smiley

நன்றி தோழர்!

On Sat Nov 14 2015 01:13:12 GMT+0530 (India Standard, தமிழ் சிறி said:

கிருபன்ஸ்....
உங்களின், அதே.... கேள்விகள் என்னிடமும்  ஏற்பட்டது.
ஆனால்.... சேயோன் யாழ் வேந்தன், யாழில் பிறந்து.... 
சிறுவனாக இருக்கும் போது.... தமிழகத்திற்கு  வந்து, அங்கு.... வளர்ந்தவராக இருந்திருப்பார் என்றே நினைத்தேன்.
அதனை..... மண்வாசனை என்றும் மாறாது என்று கூறுவார்கள்.
அது, சேயோன் விடயத்திலும், இருந்திருக்கலாம்.
அல்லது...அவர், ஈழத் தமிழனை மிக, மிக... நேசிக்கும்.... ராஜவன்னியன் போன்ற, ஒரு உறவாகவும் இருக்கலாம்.

On Sat Nov 14 2015 00:47:09 GMT+0530 (India Standard, கிருபன் said:

கவிதை நன்றாக இருந்தாலும், யாழ் மண் வாடை இல்லாமல் தமிழக வாசகர்களைக் குறிவைத்த வார்த்தைகளாக உள்ளன. சிலநேரம் பாண்டியும் பல்லாங்குழியும் யாழுக்கு இந்திய தொலைக்காட்சிகளுடன் யாழுக்கு வந்திருக்கலாம் :cool:

தோழர்களுக்கு, தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.  தி.கோபாலகிருஷ்ணன் என்பது பெற்றோர் இட்ட பெயர்.  அந்தப் பெயரில் சில கவிதைகள் அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் 2003க்கு முன்பு வெளியாகியுள்ளன. அதன் பின்பு, சேயோன் யாழ்வேந்தன் என்ற பெயரில் மட்டுமே எழுதி வருகிறேன். (எனது மகன்கள் ஆழிவேந்தன், ஆழிமுகிலன் என்று ஏற்கனவே யாழ் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன்). மனிதனை நேசிப்பவன், தமிழனை நேசிப்பதில் தயங்குவதில்லை.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய், தமிழ் மொழி.  உலகு என்ற சொல், முதன் முதலில் தோன்றியது தமிழில். அந்தப் பொருளில் பிற மொழிகளில் சொற்களே இல்லாமல் இருந்ததும் உண்டு,மற்றபடி தமிழன் என்ற தனிச்செருக்கும் கிடையாது. ஈழத் தமிழருடன் தொடர்பு, பள்ளி மாணவனாக ஊர்வலங்கள் போனபோது ஏற்பட்டது, இன்று வரை தொடர்கிறது.  களத்தில் குருதி சிந்தியதில்லை என்றாலும், நவம்பர் 26 ல் இருமுறை குருதிக்கொடை தந்தேன் (ஆழிவேந்தன் ஒரு முறை).  மனிதரில் பிளவு தேவையில்லை, அது அரசியல்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, nunavilan said:

வாழ்த்துக்கள் சேயோன் யாழ் வேந்தன்.

நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, seyon yazhvaendhan said:

தோழர்களுக்கு, தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.  தி.கோபாலகிருஷ்ணன் என்பது பெற்றோர் இட்ட பெயர்.  அந்தப் பெயரில் சில கவிதைகள் அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் 2003க்கு முன்பு வெளியாகியுள்ளன. அதன் பின்பு, சேயோன் யாழ்வேந்தன் என்ற பெயரில் மட்டுமே எழுதி வருகிறேன். (எனது மகன்கள் ஆழிவேந்தன், ஆழிமுகிலன் என்று ஏற்கனவே யாழ் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன்). மனிதனை நேசிப்பவன், தமிழனை நேசிப்பதில் தயங்குவதில்லை.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய், தமிழ் மொழி.  உலகு என்ற சொல், முதன் முதலில் தோன்றியது தமிழில். அந்தப் பொருளில் பிற மொழிகளில் சொற்களே இல்லாமல் இருந்ததும் உண்டு,மற்றபடி தமிழன் என்ற தனிச்செருக்கும் கிடையாது. ஈழத் தமிழருடன் தொடர்பு, பள்ளி மாணவனாக ஊர்வலங்கள் போனபோது ஏற்பட்டது, இன்று வரை தொடர்கிறது.  களத்தில் குருதி சிந்தியதில்லை என்றாலும், நவம்பர் 26 ல் இருமுறை குருதிக்கொடை தந்தேன் (ஆழிவேந்தன் ஒரு முறை).  மனிதரில் பிளவு தேவையில்லை, அது அரசியல்.  

மன்னிக்கவேண்டும் நண்பரே. பெயர் யாழ்வேந்தன் என்று உள்ளதால் யாழில் வசிக்கின்றீர்கள் என்று எண்ணிவிட்டேன். தொடர்ந்தும் யாழ் களத்தில் வாசம் செய்யவேண்டும் நண்பரே.

Link to comment
Share on other sites

ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்

சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்,

பரந்துபட்ட அகில மானிட அனுபவமாக மனித உணர்வுகளை மேம்பட எத்தனிப்பது உயர்ந்த கவிதைகளின் பண்பு. வாழ்த்துக்கள் கவிஞா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On Mon Nov 16 2015 11:54:46 GMT+0530 (India Standard, nunavilan said:

வாழ்த்துக்கள் சேயோன் யாழ் வேந்தன்.

நன்றி தோழர்!

3 hours ago, poet said:

ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில்

சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்,

பரந்துபட்ட அகில மானிட அனுபவமாக மனித உணர்வுகளை மேம்பட எத்தனிப்பது உயர்ந்த கவிதைகளின் பண்பு. வாழ்த்துக்கள் கவிஞா

தங்களின் கனிவான கருத்துக்கு நன்றி ஐயா!

13 hours ago, கிருபன் said:

மன்னிக்கவேண்டும் நண்பரே. பெயர் யாழ்வேந்தன் என்று உள்ளதால் யாழில் வசிக்கின்றீர்கள் என்று எண்ணிவிட்டேன். தொடர்ந்தும் யாழ் களத்தில் வாசம் செய்யவேண்டும் நண்பரே.

இத்தகைய சொற்களை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  உங்கள் கருத்து எவ்விதத்திலும் என்னைப் புண்படுத்தவில்லை.  என்னை சுயவிளம்பரம் செய்துகொள்வதற்கு நீங்கள் நல்ல வாய்ப்பையல்லவா வழங்கியிருந்தீர்கள்!  யாழ் களத்தில் எப்போதும் மகிழ்வுடன் தொடர விரும்புகிறேன். விரைவில் யாழ் மண்ணிலும் கால் பதிக்க அவா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.