Jump to content

எழுதுகின்றேன்........: நிழலி

Recommended Posts

மூன்று வாரங்களுக்கு முன்பாக என் Mobile phone அதிகாலை 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்து விட்டது என்று அதிர்வை ஏற்படுத்தியது

இந்த நேரத்தில் வரும் குறும்செய்திகள் எனக்கு எப்பவுமே சந்தோசத்தினை கொடுப்பதில்லை. மரணம் பற்றிய அறிக்கைகளையும், துயரம் அப்பிய செய்திகளையுமே தாங்கி வருவன அவை. கிலேசம் மிக்க தருணங்களை தருவன அவை.

நித்திரையில் இருந்தாலும் பூனை நடந்தாலே அதன் சத்தத்தில் முழிச்சு எழுபவன் நான். பொதுவாக IT யில் தொழில் செய்பவர்களுக்கு ஆழமான நித்திரை என்பது ஒரு கனவு. எனக்கு அது அநேகமாக வாய்ப்பதில்லை.

குறுஞ்செய்தியை வாசிக்கின்றேன். எனக்கு மிகவும் நெருக்கமான மாமா - அம்மாவின் தம்பி - யின் மரணச் செய்தியை தாங்கி அது வந்திருந்தது. அக்கா அனுப்பி இருந்தா. அவரை மாமா என்று ஒரு போதும் அழைத்தது இல்லை. ஆங்கிலத்தில் 'அங்கிள்' என்றே அழைத்து வந்துள்ளேன்.

என் வாழ்க்கையில் எல்லா நெருக்கடியான தருணங்களின் போதும், ஏதோ ஒரு விதத்தில் அதை போக்கடிக்க உதவி புரிந்த ஒரு 'அங்கிள்' அவர்.

எமக்கு இருக்கும் பல உறவுகள் பல நண்பர்கள் மத்தியில் உண்மையான உறவு மற்றும் நண்பர்கள் யார் என்று அடையாளம் காணும் வாய்ப்புகளை வாழ்க்கை துயரமான பொழுதுகளில் தான் வழங்கும். நல்லா இருக்கும் போது ஒட்டும் உறவுகள் துன்பப்படும் போது தூரம் சென்று விடும் என்பர்.

ஆனால் என் அங்கிள்  நாம்  துயரப்படும் பொழுதுகளில் தோள் நின்றவர். எல்லா கடினமான பொழுதுகளிலும் அவர் எமக்கருகில் நின்றவர். என் அப்பாவின் மரணத்தின் போது அனைத்து விடயங்களிலும் எனக்கு தோள் கொடுத்து தோழனானவர்.

துயரமான பொழுதுகளில் தோள் நின்ற உறவுகளை நினைவில் வைத்துக் கொள்வது ஒரு நல்ல மனிதன் செய்யும் விடயங்களில் ஒன்று.

நான் கனடா வந்த பின் கழிந்த 8 வருடங்களில் அவருடன்  ஒரே ஒரு முறை தான் கதைத்து இருந்தேன். இப்படி ஒரு 'அங்கிள்' இருப்பதையே மறந்து இருந்தேன்.

நன்றி மறந்து இருந்தேன். 

--------------------------------------

இதை தொடர்வேன் என்று நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

 8 வருடங்களில் அவருடன்  ஒரே ஒரு முறை தான் கதைத்து இருந்தேன். இப்படி ஒரு 'அங்கிள்' இருப்பதையே மறந்து இருந்தேன். // இந்த குற்றவுணர்வை  கடந்துவிடுதல் எளிதல்ல ... எனக்கும் அனுபவம் உண்டு.

Link to comment
Share on other sites

மறந்து இருந்ததற்கும் ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கும். பரபரப்பான குடும்பம்,வேலையாக கூட இருக்கலாம், மாமாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Link to comment
Share on other sites

உங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!!

5 hours ago, நிழலி said:

மூன்று வாரங்களுக்கு முன்பாக என் Mobile phone அதிகாலை 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்து விட்டது என்று அதிர்வை ஏற்படுத்தியது

இந்த நேரத்தில் வரும் குறும்செய்திகள் எனக்கு எப்பவுமே சந்தோசத்தினை கொடுப்பதில்லை. மரணம் பற்றிய அறிக்கைகளையும், துயரம் அப்பிய செய்திகளையுமே தாங்கி வருவன அவை. கிலேசம் மிக்க தருணங்களை தருவன அவை.

நித்திரையில் இருந்தாலும் பூனை நடந்தாலே அதன் சத்தத்தில் முழிச்சு எழுபவன் நான். பொதுவாக IT யில் தொழில் செய்பவர்களுக்கு ஆழமான நித்திரை என்பது ஒரு கனவு. எனக்கு அது அநேகமாக வாய்ப்பதில்லை.

குறுஞ்செய்தியை வாசிக்கின்றேன். எனக்கு மிகவும் நெருக்கமான மாமா - அம்மாவின் தம்பி - யின் மரணச் செய்தியை தாங்கி அது வந்திருந்தது. அக்கா அனுப்பி இருந்தா. அவரை மாமா என்று ஒரு போதும் அழைத்தது இல்லை. ஆங்கிலத்தில் 'அங்கிள்' என்றே அழைத்து வந்துள்ளேன்.

என் வாழ்க்கையில் எல்லா நெருக்கடியான தருணங்களின் போதும், ஏதோ ஒரு விதத்தில் அதை போக்கடிக்க உதவி புரிந்த ஒரு 'அங்கிள்' அவர்.

எமக்கு இருக்கும் பல உறவுகள் பல நண்பர்கள் மத்தியில் உண்மையான உறவு மற்றும் நண்பர்கள் யார் என்று அடையாளம் காணும் வாய்ப்புகளை வாழ்க்கை துயரமான பொழுதுகளில் தான் வழங்கும். நல்லா இருக்கும் போது ஒட்டும் உறவுகள் துன்பப்படும் போது தூரம் சென்று விடும் என்பர்.

ஆனால் என் அங்கிள்  நாம்  துயரப்படும் பொழுதுகளில் தோள் நின்றவர். எல்லா கடினமான பொழுதுகளிலும் அவர் எமக்கருகில் நின்றவர். என் அப்பாவின் மரணத்தின் போது அனைத்து விடயங்களிலும் எனக்கு தோள் கொடுத்து தோழனானவர்.

துயரமான பொழுதுகளில் தோள் நின்ற உறவுகளை நினைவில் வைத்துக் கொள்வது ஒரு நல்ல மனிதன் செய்யும் விடயங்களில் ஒன்று.

நான் கனடா வந்த பின் கழிந்த 8 வருடங்களில் அவருடன்  ஒரே ஒரு முறை தான் கதைத்து இருந்தேன். இப்படி ஒரு 'அங்கிள்' இருப்பதையே மறந்து இருந்தேன்.

நன்றி மறந்து இருந்தேன். 

--------------------------------------

இதை தொடர்வேன் என்று நம்புகின்றேன்

ஒரு முறையாவது கதைத்தீர்கள் தானே....... அதைவிட மாமாவுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்  தன்னுடைய மருமகனைப் பற்றி... அவர் குறை நினைத்திருக்கவே மாட்டார்! கவலையை விடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா..இரண்டா.. நிழலி..?

புலம் பெயர்ந்தவனின் மனம் இரும்பால் செய்யப்பட்டிருக்க வேண்டும்!

காலம் முழுவதும் தனக்குக் கொள்ளி வைக்க ஒரு மகன் இருக்கிறான் என்று எண்ணியிருந்த அப்பாவுக்கு.. அருகிலிருந்து விடையனுப்பக் கூட விடாத விதி எங்களது!

தனது இயலாத காலத்தில் அருகிலிருந்த கவனித்துக் கொள்வான் எனது மகன் என்று எண்ணியிருந்த தாய்க்கு. எதுவுமே செய்ய இயலாத இயலாமை!

இரத்தச் சொந்தங்கள் கூட ஒன்றை ஒன்று சந்திக்கும் போது.. ஒருவர் பெயரை மற்றவருக்குச் சொல்லி அறிமுகம் செய்ய வேண்டிய நிலை!

கூடப் பிறந்ததுகளின் வீட்டுக்கப் போகும்போது கூட... ஒரு விருந்தாளியை வரவேற்பது போல... வரவேற்கும் சொந்தங்கள்!

தொடர்பாடும் நேரங்கள் குறைந்து செல்வதும்,  தூரங்கள் அதிகரித்துச் செல்வதும் தான் முக்கிய காரணங்கள் என நினைக்கிறேன்!

உங்களைப் போல பலர் இருக்கிறார்கள்! (நான் உட்பட)

இதயங்களுக்குள் வைத்துப் பொருமுவதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்?

ஊரில் இருக்கும் உறவுகள்.. அழுது..கண்ணீர் விட்டுத் தங்கள் கவலைகளைக் கழுவிக் கொள்கின்றன! 

நாங்கள் மட்டும்.. எமது வாழ் நாள் முழுவதும்.. ஒரு விதமான குற்ற உணர்வின் உறுத்தல்களுடன் வாழ வேண்டியுள்ளது தான் கொடுமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்ற உறவுகளிலேயே... தாய்மாமன் உறவுக்கு, மிகுந்த முக்கியத்துவத்தை கொடுப்பவர்கள் தமிழர்கள்.
அந்த இழப்பு, மிகவும் சோகமானது. உங்கள் துயரத்தில்... நாமும் பங்கு கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்திக்கு, பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் மாமாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்...!

புங்கையின் கருத்தை கனிவுடன் நினைக்கின்றேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் மாமாவின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமனாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் நிழலிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இயந்திரத்தனமான வாழ்வு ஆறுதலான நொடிகளைக் கூட தருவதில்லை என்பது உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாவின் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிளின் பிரிவினால் துயர் உற்று இருக்கும் நிழலியண்ணாவிற்கும், குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமனாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் நிழலிக்கும் குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

மாமாவின் பிரிவினால் துயருற்றிருக்கும் நிழலியண்ணாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

 நிழலியண்ணாவிற்கும், குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியண்ணாவிற்கும், குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.