• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ராஜன் விஷ்வா

"மலைகளுக்கப்பால்" - ராஜன் விஷ்வா

Recommended Posts

 

இந்த மலைகளுக்கப்பால் தான்
நான் இருக்கிறேன்
 
மலைமுகட்டில் ஊற்றெடுக்குமிந்த நதி
இந்த மலைகளுக்கப்பால்
சமவெளிகளை விளைவிக்கிறது
 
பகலிரவு காலத்தை நகர்த்தும்
உக்கிரச் சூரியன் உதிப்பதும்
இந்த மலைகளுக்கப்பால் இருந்தே
 
மேய்வன விரும்பும் புல்வெளிக்காடும்
தவழ்வன பொழியும் மழைக்காடும்
இந்தமலைகளுக்கப்பால் தான் சந்திக்கின்றன
 
ஒலியின் மொழியை நூற்றாண்டுகளாக
எதிரொலித்தபடியுள்ளன பள்ளத்தாக்குகள்
இந்த மலைகளுக்கப்பால்
 
காற்றும் நிலமும் நீரும்
ஆதிநிர்வாணாத்தோடிருக்கும்
முடிவிலா ஆரண்யமிருப்பதும்
இந்த மலைகளுக்கப்பால் தான்
 
இரவு அந்தகார சுவையுடன்
இருளாகவேயுள்ளது
இந்த மலைகளுக்கப்பால்
 
கடவுள் எல்லைக்கோடு அகதிகளென
எதுவுமேயில்லை இந்த மலைகளுக்கப்பால்
உயிர்வாழ்தலை தவிர
 
துயர்கசியும் பாடலொன்றை
சுமந்தபடி வரும் பறவைகள்
தஞ்சமடைகின்றன் இறுதியாக
இந்த மலைகளுக்கப்பால்
 
பிரபஞ்ச இருப்பின் இயக்க
சூத்திரத்தில் எதுவித சமரசமுமில்லை
இந்த மலைகளுக்கப்பால்
பூ பூக்கிறது
.
.
...சருகாகிறது
 
பெரு வெளியென விரிந்திருக்கும்
இந்த மலைகளுக்கப்பால்
உண்மையில் ஒன்றுமேயில்லை
 
அந்தரத்தில் உறைந்தபடி
இந்த மலைகளுக்கப்பால்
இருப்பது நான் மட்டுமே
 
-ராஜன் விஷ்வா
 
நந்தலாலா இணைய இதழில் இந்த கவிதை பிரசுரமாகியுள்ளது
 
 
 
 

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கவிதைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

அருமை விஷ்வா அருமை.

Share this post


Link to post
Share on other sites

அழகான மலைப்பகுதி மனச்சித்திரத்தில் உருவாகும் வண்ணம் கவிதை சொற்சித்திரமாக வந்துள்ளது. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites
On 16/11/2015, 13:05:39, ராஜன் விஷ்வா said:
பிரபஞ்ச இருப்பின் இயக்க
சூத்திரத்தில் எதுவித சமரசமுமில்லை
இந்த மலைகளுக்கப்பால்
பூ பூக்கிறது
.
.
...சருகாகிறது
 
பெரு வெளியென விரிந்திருக்கும்
இந்த மலைகளுக்கப்பால்
உண்மையில் ஒன்றுமேயில்லை
 
அந்தரத்தில் உறைந்தபடி
இந்த மலைகளுக்கப்பால்
இருப்பது நான் மட்டுமே
 
-ராஜன் விஷ்வா
 

பிடித்த வரிகள்.

தொடருங்கள் ராஜன் விஷ்வா.

Share this post


Link to post
Share on other sites

தம்பி ராஜன் விஸ்வா,
உங்கள் எழுத்துக்களில் முதிர்ச்சி தெரிகிறது.
நிறைய வாசிப்பீர்கள் போல இருக்கிறது.
புவியல் பாடம் கேட்பது போல இருந்தது கவிதை..

வாழ்த்துக்கள்  
 

Share this post


Link to post
Share on other sites

அந்தரத்தில் உறைந்தபடி

இந்த மலைகளுக்கப்பால்

இருப்பது நீங்கள் என்றால்...!

 

இப்பால் இருந்து

ரசிப்பது நானே....!

நல்ல கவிதை , ராஜன் விஷ்வா...!!

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் இருந்தும் ஒன்றுமேயில்லாத   உணர்வுடன் ஒரு மனிதன்
இப்படித்தான் எனக்கு விளங்கியது.
யாராவது ஒரு பொழிப்புரை எழுதினால் இன்னும் பல விசயங்களை விளங்கிக் கொள்ளலாம்.

Share this post


Link to post
Share on other sites

பிரபஞ்சத்தை நகர்த்தும்,

இரகசியம் கூட..,

இந்த மலைகளுக்கப்பால் தான்,

மறைந்திருக்கின்றது!

 

சிவ தாண்டவத்தின்,

சூத்திரமும் கூட,

இந்த மலைகளுக்கப்பால் தான்,

மறைந்திருக்கின்றது!

 

எனக்கும்...,

அந்த மலைகளுக்காபால்,

எட்டிப்பார்க்க ஆசை தான்..!

 

வாழ்த்துக்கள் ராஜன் விஷ்வா...!

Share this post


Link to post
Share on other sites

உயிரான உறவுகளுக்கு வணக்கம்,

சற்றே வேலைப்பளு கூடிவிட்டது, மீண்டும் பழைய படி உங்களுடன் விரைவில் இணைந்து கொள்வேன், உங்கள் அன்பிற்கு நன்றி..

என்னில் மிகு அன்புகொண்ட புங்கை அண்ணனுக்கு இதை எழுதும் போதே மனதில் சமர்ப்பணம் செய்து விட்டேன்

Share this post


Link to post
Share on other sites

அருமையான  கவிதை  விஷ்வா 

நீ இன்னும் உச்சம் பெறுவாய்.  வாழ்த்துகள் நண்பா. 

Share this post


Link to post
Share on other sites

அருமையான  கவிதை  விஷ்வா 

 

மேலும் வளரனும் வரலாற்றில் வரனும் tw_blush:

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்து தெரிவித்த புங்கை, சுவி, சசி வர்ணம், அஞ்சரன், கிருபன், வாத்தியார், நெர்கொலு தாசன், ஜீவன் சிவா அண்ணன்களுக்கு நன்றி...

 

நிழலி அண்ணா ஒருமுறை சொன்னதிலிருந்து கவிதைக்கு பொழிப்புரை தருவதில்லை வாத்தியாரே... tw_blush:

ஒரு மழைக்கவிதை எழுதின நேரம் பேய் மழை பெய்யுது, அடுத்த மழைக்கு வெளியிடலாம் என்டிருக்கேன் :cool:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல்     சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. பதிவு: ஜூலை 13,  2020 17:08 PM சென்னை, சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ மனு மீது மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13170851/Sathankulam-fatherson-death-affair-CBI-files-petition.vpf  
    • வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே  
    • கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை: கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி   அமெரிக்காவில் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பதிவு: ஜூலை 13,  2020 14:36 PM வாஷிங்டன், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,581,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 571,518 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 33.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனாவிற்கு  'மாஸ்க் அணிவதால் பயனில்லை என்றும், கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை எல்லாம் வதந்தி என, அமெரிக்காவில் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது, அமெரிக்காவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், 'கொரோனா பார்ட்டி' நடத்தும் அபாயகரமான பழக்கம் திடீரென தொற்றி வருகிறது. கொரோனா பார்ட்டியில் பங்கேற்றதால் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு, பரிசு என்ற விபரீத அறிவிப்பும் வெளியிட்டு வருவது நெஞ்சை பத பதக்க வைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்டு தொற்றுக்கு ஆளாகி உயிரையும் பறிகொடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொற்று ஏற்பட்ட பின் அந்த இளைஞர், நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் என வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டெக்சாஸ் மாகாண சான்  பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் என்ற  மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜேன் ஆப்பிள்பை கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 வயதாகும் அந்த இளைஞர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி என நம்பியுள்ளார். அதனால் அவர், கொரோனா பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். கொரோனா பாதித்தவர்களும் அந்தப் பார்ட்டியில் பங்கேற்றதால் அவரும் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞர்கள் கொரோனா தொற்றை அலட்சியப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்தார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13143655/Man-30-Dies-After-Attending-a-Covid-Party-Texas-Hospital.vpf
    • எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு விடுமுறை தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில் தருநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122ஆம் பிரிவின் அடிப்படையில், வாக்காளர் ஒருவருக்கு தேவையான விடுமுறை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், வாக்களிப்பிற்காக விடுமுறை கோரி விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், நான்கு ங்களுக்குக் குறையாத, சம்பளத்துடன் கூடிய, விடுமுறையொன்று வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு விடுமுறை பெறுபவர்களின் விபரங்கள், வேலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்களிப்பதற்கான விடுமுறைக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதிருத்தல், உரிய விடுமுறைக் காலத்தை வழங்காதிருத்தல், வாக்களிப்புக்கான விடுமுறைக்காக சம்பளம் வழங்காதிருத்தல், விடுமுறைக்காக விண்ணப்பிப்பதற்காக, வாக்காளர் அட்டையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தல் மற்றும் வாக்களிப்புக்காக விடுமுறை பெற்றால் தொழிலை இழக்க நேரிடும் என எச்சரித்தல் ஆகியன குறித்து கடந்த காலங்களில், முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், குறித்த விடயத்துக்காக ஊழியர் ஒருவரினால் கோரப்படும் விடுமுறையை வழங்காதிருத்தல், நீதவான் நீதிமன்றமொன்றில், வழக்குத் தாக்கல் செய்து தண்டனை வழங்கக்கூடியதொரு குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது விடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக, வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்காளர் அட்டையை மீளக் கோரும் பட்சத்தில், அதனை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு,  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, தனக்கு விடுமுறை வழங்கப்படாமை குறித்து வாக்காளர் ஒருவர் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கும் பட்சத்தில், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் ஆணையாளர் ஆகியோரின் ஊடாக, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/வாக்களிப்பதற்கான-சந்தர்/