Jump to content

தலைமகனுக்கு அகவை 61.


Recommended Posts

 

தலைவரை  வாழ்த்தி  பதியப்படும் கவிகளை  இங்கு இணைக்கிறேன் அறுபத்தியொரு  கவிதைகளை  இணைக்க வேண்டும் என்னும்  ஒரு  ஆசையில் முடிந்தால் நீங்களும் உங்கள்  கண்களுக்கு  தென்படும் வாழ்த்துப்பாக்களை இணையுங்கள்  உறவுகளே .

12301745_1058795870817825_62868192106810

 

 

1. எங்களுக்குள் இருக்கும் 
சின்னப்பிள்ளைத் தனங்களை நினைக்கும்போது
நீ இன்னும் எங்களுக்குள் 
ஆச்சரியங்கள் நிகழ்த்துகின்றாய்
வெறும் பேச்சுக்களில்
பிரபாகரன் ஆகிவிடவேண்டுமென
நினைக்கும்
வியாபாரிகள் மத்தியில்
நீ தெளிந்த உருவமாய் தெரிகின்றாய்
உனது மயிராகவும் கூட
ஒருவனும் ஆக முடியாது என
கடந்த ஆறு வருடத்தில்
வரலாறு நிரூபித்துவிட்டது
கால புருசர்கள்
வெறும் கைதட்டல்கள் மத்தியில்
உருவாக முடியாது.
நெடும்புயல்களுக்கு
பூகம்பங்களுக்கு
நெருப்பாறுகளுக்கு மத்தியில்
எழுந்த நிற்பது என்பதுதான்
பிரபாகரம்
வாழ்க எங்கள் பெருமை.

பொன் காந்தன்

 

 

2. அன்று ஒருவன் இருந்தான் !
காம பிசாசுகள் இல்லை!
கள்ள தருதலைகள் இல்லை!
வஞ்சக காடர்கள் இல்லை!
இனமில்லை,மதமில்லை,யாதி இல்லை! 
பொய் இல்லை புரளி இல்லை! அடிமை இல்லை அசிங்கம் இல்லை!
ஆங்கிலத்தின் ஆதிக்கமில்லை!
"மனிதர்கள் மட்டும் இருந்தார்கள். "
என் அண்ணணும் நீத்தான் என் மாமனும் நீத்தான் ஏன் என் அக்காளும் நீத்தாள் உனக்காய் உன் அடிமை இல்லா உணர்வுக்காய் துச்சமென உயிரை!
உன் பிறந்த நாளை விட உன் ஒரு சொல்லால் மண்ணோடு விதையாகிப்போன இதயங்களின் நாளே சிறந்தது! தலைவா!

தேவ் முகுத்த.

 

 

3.

"வழிகாட்டத் தலைவன் உண்டு -எங்கள்
வலிபோக்கும் மறவன் என்று
ஒளிகாட்டும் இறைவன் என்றோ-உம்மை 
விழிபூத்து காத்து நிற்கிறோம்"

61ம் அகவையில் அகிலம் வியந்த அண்ணனுக்கோர் வாழ்த்து"

கார்த்தகை இருபத்தியாறு..-எம்
ஊரெல்லாம் ஒன்றாகி கூத்தாடும்
பார்த்தீபன் பிறந்த நன்நாள்.

ஆண்ட பரம்பரை
காலமெல்லாம் கைகட்டி
ஆள வழியின்றி வாய் பொத்தி,
தலைகுனிந்து அடிபணிந்து-எம்
ஈழ மண்ணையும் விலைபேசி -சேற்றில்
உழும் எருமை மாடுகளாய் -எதிரிமுன்
மண்டியிட்ட தமிழருக்கு
வாழ நெறிகாட்டி-அவன் மாண்புதனை
நிலைநாட்ட வந்துதித்த
ஆண்டவனின் அவதார நாள் இன்நாள்..

வல்வை மண் அன்று -எம்
தொல்லை அழித்திடவென்று
நல்லான் எங்கள் நாயகனைத் தந்திட்ட
பொன்நாள் இன்று....

எங்கள்,
வலிபோக்க வந்த அருமருந்தாய்-எங்கள்
கலி நீக்க பிறந்த வேங்கை...-எமக்கு
விடியாதா எனநாம் விழிமூடிக்கிடக்க-எங்கள்
விடியலாய் ஒளிதந்த விடுதலை வேந்தின் 
ஜனன நாள் இன்று.

கோடரிக்காம்புகளாய்மாறி-அன்றெம்
வீடெரித்த பேய்களையும்
கொள்ளிகொடுத்த கொடுவாள்களையும்
பாடையில் ஏற்றிட -பாசறை மேவிய
எம் தேசத்து புதல்வனின் திருநாள் இன்று.

குட்டக்குட்ட குனிந்த தமிழனை
நெட்ட நிறுத்தி....
குட்டியவன் கைகளை வெட்டியெறிந்தும்
"கொட்டி கொட்டி"என்று பகைஎட்டி ஓட-எம்
பட்டி தொட்டி எங்கும் பகல் சமைத்திட்ட
ஈழவேந்தின் இனிய நன்நாள் இன்று.....

தன்னினம் காத்திட தன்னலம் மறந்து..,
மண்ணினை மீட்டிட மகிழ்வுகள் துறந்து...,
விண்ணிலும் பெரிய விரிமனம் கொண்ட
விடுதலை வேங்கையின் பிறந்தநாள் இன்று.

எங்கள் இருள்போக்கி-உலகில்
நாங்கள் வாழவழிகாட்டி
எங்கும் பரந்துவாழ் தமிழரின் உரிமை நிலைநாட்டி
உலக மேடையில் அவன் பேச உரிமைதந்த
மங்களநாயகன் அவதரித்த இனியநாள் இன்று.

இனவெறி மமதையில் கொலைவெறியாடிய 
ஈனரின் மமதைகள் அடக்கி
மானத்தமிழரின் மாண்புமிகு வீரத்தின்
தானைத் தலைவனாய் தனிநாடமைக்க
வேங்கையாய் குதித்த தனிப்பெரும் தலைவன்
வந்துதித்த நனிசிறந்த பொன்நாள் இன்னாள்.

தமிழரெல்லாம் "நான் தமிழன்" என்று
தலை நிமிர்ந்து சொல்லவென்று
வான்படையும் கண்ட தமிழ்ப்
பெருமறவன் பிறந்திட்ட பெருநாள் இன்று.

சிங்களவன் சினம்கொண்டு
சீறி எழ முடியாது....,
பதுங்கி அவன் பாழிருட்டில் 
பாய்யிட்டு ஒதுங்கிடவே-போர்
பறைசாற்றி பகைவிரட்ட பாய்ந்திட்ட
பெருவீரனின் திருநாள் இன்று.

தம்பி என்பார் சிலர்-எங்கள்
அண்ணன் என்பார் பலர்...,அன்பின்
மாமா என்றே மழழையரும்-எங்கள்
மாபெரும் தலைவா என்றே உலகத் தமிழினமும்,
விழித்திடவே நீ வாழ்க வாழ்க.....

பெற்றவரும் உற்றவரும் 
பெருமைகொள்ளும் தமிழ்மகனாய்,
கொற்றவரும் வித்தகரும்
வியப்புறு தலைமகனாய்,
எத்திசையும் உன்பெயரை
உச்சரிக்கும் உருத்திரனே
வாழ்க நீ வாழ்க....

வாழ்கவென்று உனை வாழ்த்த-என்னை
வாழ வழிதந்த எம் தாய்மண்தந்த பெருந்தலைவா
வாழ்க நீ பல்லாண்டு வாழ்க..

 

தம்பி
ஈழப்பிரியன் 

 

 

4.

தலைவர் 
...............
ஆர்ப்பரித்து அலைகடல்கள் அகமகிழ்ந்து குதிக்க..
பூப்படைந்து செடிகொடிகள் பூரிப்பில் மிதக்க..
வியப்படைந்த வானில் மேகம் மின்னல் ஒளி தெளிக்க..
மீட்பனவன் வந்துதித்தான் மண்ணுயிர்கள் மீட்க..
பாவமதும் சாபமதும் ஒன்றாகப் புணர்ந்து
கோரமெனும் ஓர் மகவை ஈன்றெடுக்க அதுவோ
வேகமென உருவெடுத்து மக்கள் பலி கேட்க
ஏகனவர் தம்வாழ்வை இரையாக்கிக் கொண்டார்..
சிறுவயதில் குழந்தைத்தனம் நிரம்பப் பெற்று இருந்தார்
விடலையிலே விடுக்கப்பட்டக் கட்டளையை உணர்ந்தார்
தனக்குரிய தோழர்களைத் திறம்படவே தெரிந்து- ஒரு
பெரும் மக்கள் படைதன்னைத் தன்பின்னே இணைத்தார்
பிறருக்காகத் தன்வாழ்வைப் பிழிந்தெடுத்துக் கொடுத்தும் -சிலர்
சுயலாப நோக்கோடு துரோகங்கள் இழைக்க
இவர் நம்பும் உயிர்நண்பன் பணம் பொருளை வேண்டி -இவர்க்
கெதிரான அரசாங்கம் தனில் காட்டிக் கொடுத்தான்.
பிறக்கையிலே செல்வங்களில் கொழிக்கவில்லை பிறர் போல்
சிறக்கையிலே உலகினிலே யாருமில்லை இவர் போல்
உறக்கமில்லை ஓய்வுமில்லை மக்கள் தொண்டில் வாழ்வு
இறக்கவில்லை மீட்பரவர் இடர்நீக்க வருவார்

 

- தோழமையுடன் தூயவன் -

 

 

5.

இறையோனை பாடிய தேவார முதலிகளை நாயன்மார்களாய் படித்தோம் இன்று உன்னை தேடி பாடும் எங்கள் தேவார முதலிகளை பார்க்கிறோம்........தலைவா

நித்தமும் உன்னை காண மனம் ஏங்குதே தலைவா இத்தனை துயர் கண்டும் உனைதேடுதே......

நந்திக்கடலே சொல்லம்மா எங்கே அதிசயம் நாங்கள் தேடும் அன்பு தலைவன் மர்ம ரகசியம்......

தலைவர் என்றொரு நம்பிக்கை மட்டுமே நெஞ்சில் இருக்கிறது அந்த நம்பிக்கையால் தான் இன்னும் உயிர் இங்கு எஞ்சி இருக்கிறது.....உன்னை தேடி பாடுகிறோம் தமிழ் இறையோனே தலைவா

மாதுளன்  கிருபா 

 

 

6. இருக்கிறாயா?
இல்லையா?
இந்த வினாவுக்கு
விடைகாண நான்
என்றும் முயன்றதில்லை
இருக்கிறாய் என்றும்
என் இதயத்தில் நீ
ஆயிரம் சூரியர்களின்
ஆற்றலோடு
வாழ்ந்திடுவாய் நீ
இவ் வையகம் உள்ளமட்டும்.

 

இணுவையூர்  மயூரன் 

 

 

7.

விடலை 
பருவமதை
விதையாக
நட்டு வைத்தான்
இனமும் 
மொழியுமதை
உரமாக 
இட்டு வைத்தான்
உதிரம் 
வியர்வையுமாய்
வேரின் வழி
ஊற்றி வைத்தான்
சாதி மதமும்
தலைக்கேறும்
போது அங்கே
கொஞ்சம்
தமிழனாய்
இருந்திடடா
செல்லமாய்
குட்டு வைப்பான்
ஒற்றை 
சொல்லது
உலகாளும்
மந்திரமாய்
மேதகு
என்பதுவே
தமிழ் பெற்ற
பேறல்லவோ
தம்பியண்ணா
என்றழைக்கும்
அண்ணனின் 
தம்பிகள்
நாங்கள்....

"பிரபாகரன்"

 

கரிகாலன்  மணிமாறன் 

 

 

 

8.

பகலெல்லாம் ஓளி வீசும் சூரியன்
இரவில் உறங்கச்சென்றிடுவான் - இது
குழந்தைகளின் கற்பனை கதை

எம் சூரியனோ எப்போதும் கண் துயின்றதில்லை அயர்ந்ததுமில்லை
வாழ்க தலைவா நீ - உனை
வாழ்த்தி வணங்குகின்றேன்

 

பரணி 

 

9.

பேடிப் பிறப்புக்களை
தேடி வேரறுக்க
ஈடினையில்லா 
தானைத் தலைவனாய்
தீபம் ஒன்று பிறந்த நாள்....!

ஈழத்தின் உச்சியில் 
சங்குகள் சப்திக்கும்
வங்கக்கரையில்
வைகறை வேந்தன் 
வந்துதித்த பொன்னாள்....!

எட்டுத்திக்கும் தமிழ்முரசு
கொட்டிச்சொல்லும் ஐயா 
உன் பிறப்பால் மீண்டது - எம்
இனமும் மொழியும் என்று...!

நாய்களும் பேய்களும் 
நயவஞ்சகப் பூனைகளும் 
நிற்க முடியாதையா உன்
நிழல் முன்னாடி கூட...!

ஆண்டுகள் ஆறுபத்துடன்
ஒன்றல்ல ஓராயிரமானாலும்
மாறாதையா மறவர் நெஞ்சில்
மாசற்ற உன் மாண்பு....!

 

திலீஸ்.

 

 

 

10. தமிழினம் தனக்கான, 
தனித்துவமான, முகவரியுடன்,
தரணியில்,
தலை நிமிர்ந்த நாள்,
நம் தங்கத் தலைவனின், 
பிறந்த நாள்.

 

சிவாஜினி 

 

 

 

11.."முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ? "

 

- கவிஞர் வாலி

Link to comment
Share on other sites

14.

ஆதவன் பிறந்தநாள் எங்கள் 
ஈழ சூரியன் பிறந்தநாள் 
முப்படை கண்டவேந்தனின் பிறந்தநாள் 
எங்கள் தலைவன் பிறந்தநாள்
பார்போற்றும் அண்ணனின் பிறந்தநாள் 
தலைவன் வாழ்க என்று கொட்டு முரசே
எட்டுத்திக்கும் அவன் புகழ் பாடு முரசே 

உன் பிறந்த நாளுக்காய். 
ஈழத்தாய் காத்திருந்தாள்
பார்வதத் தாய் வயிற்றில் வந்த 
செங்கதிர் ஞாயிறே வாழ்க நீ
வேலுப்பிள்ளை பெயர் சொல்ல
ஒரு புலிப்பிள்ளை வந்துதித்தாய்
ஈழத்தாய் தத்தேடுத்தால் உன்னை
தலை மகனாய் சுவீகரித்தால்
அண்ணன் வாழ்க என்று கொட்டுமுரசே

கரிகாலன் பிறந்தநாளில்  
தமிழர் நாம் தலை நிமிர்ந்தோம்
வீறு கொண்டு நாம் எழுந்து
வேங்கையாக களம் புகுவோம்
பகைகளைக் கொள்ள புலிகள் பிறக்கும்
புலிகளே மீண்டும் நாட்டை ஆளும்
அண்ணன் வாழ்க என்று கொட்டு முரசே 
எட்டுதிக்கும் அவன் புகழ் பாடு முரசே ...
அவன் இல்லை என்று எவன் சொன்னான் 
கடவுளும் தலைவனும் ஒன்றே
இல்லை என்போர்க்கு இல்லை
உண்டு என்போர்க்கு உண்டு

இன்பன் அருள்ராஜ்

 

 

15.சேர சோழ பாண்டியர்களின் வீரம் வரலாற்றிலுள்ளது.
ஆனால், அந்த வரலாறே உன்னுருவில் மறுவரம் வாங்கி பிறந்தது..,

வீர வரலாறே,
எங்கள் இனத்தின் விடியலே,
தமிழ்க்குலத்தின் அகரமே,
எதிரிகள் அஞ்சும் ஆயுதமே,
கோடணுகோடி தமிழர்களின் உயிரெழுத்தே,

உயிரே பிரபாகரா.., உம்மை வாழ்த்தி மெய்சிலிர்த்து நிற்கிறேன் தலைவா..., 

#HBD_TamilTiger.

தாயகம் சுரேஸ்

 

 

16.

கார்த்திகை மலர்கள் மணம் வீச,
விண்மீன்கள் விளக்கேற்ற,ஓயாத அலையாய் அறுபத்தியொன்றில் அடி எடுத்து வைக்கும் எம் கரிகாலனுக்கு பிறந்த நாள் இன்று !
புன்னகை சிந்திடும் தானை தலைவனுக்கு சிறந்த நாள் இன்று !

கார்த்திகை பூக்களை கோர்த்து
செம்பகத்தை தூதாக அனுப்பி
வாழ்த்து சொல்லலாம் என நினைத்தால்
அவ்விரண்டும் உனை பார்த்து கண் சிமிட்டி 
தலை வணங்கி நிக்கிறதே !

எம் தலைவனுக்கு வாழ்த்திங்கு
ஆயிரம்தான் படைத்தாலும்
உன் பெருமைக்கு ஈடு சொன்னால்
ஆயிரமும் பூச்சியமே !

நானொன்றும் வளர்ந்தவள் அல்ல !
"உனக்கென்று" கூறுகையில் என் கவி மேலும்,பேனா முனை மேலும் வெறுப்பெனக்கு !
அது நான் உன் மேல் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு !

தேசமெனும் மடல் எடுத்து
அன்பெனும் எழுது கோல் பிடித்து
வீரமெனும் மை ஊற்றி
என் கண்ணீரை சிதற வைத்து எழுதுகிறேன் ஓர் வாழ்த்து !!

கடவுளை யாரும் நேரில் பார்த்ததுண்டோ..?
சன்னியாசி கடவுளை உருவில் கண்டோம் !
பிரபாகரன் எனும் கடவுளை சிலோனில் 
நேரில் கண்டோம் !
ஆம்..
கடலில் இருக்கும் முத்தையும் விட மேலான முத்து நீ !
அம் முத்துக்குள் இருக்கும் சிற்பிகள் எம் இனம் !

இப்பொன்னான நன்னாளில் 
ஆளுமை நிறைந்த,அதிகாரம்
நிறம்பிய உன் உரையில்
உலகமே அதிர்ந்து உனை திரும்பி
பார்த்து மெய் சிலிர்த்து போகும்...!

இந்த நாள் எம் தாயகத்தின் திருநாள் !!

எல்லையில் நிற்கும் சிங்களமும்
குடிமனைக்குள் உலாவும் புளுனிகளும்
எப்போது வானலையில் உன் குரல்
முழங்கும்....
எப்போது எங்கே தமக்கு இடி விழும்
என உயிரை கையில் பிடித்து எச்சி விழுங்க கூட பயந்து ஏக்கத்தோடு
இருப்பார்களே அந்த திருநாள் 
இன்று எங்கே..?

எமக்காக மூச்சுக்காற்றை ஈந்து
எம் தாயக கனவை சுமந்த மாசில்லாத
வீரமூட்டிய தூசில்லாத தூயவனும் நீயே !
தலைவா உன் ஒற்றை பார்வை போதும்
எம் இனம் மகிழ்ச்சி உற்று வாழ்வதற்கு !
ஆம்..
உன் வரவிற்காய்....
இரணைமடு வான் பாயும்
வன்னி மண்ணில் மயில் ஆடும்
கோணவரை மீது முகில்கள் இரங்கும்
பாலாவி நீர் பதிகம் பாடும்
கீரிமலையில் நீர் ஊற்றெடுக்கும் 
வற்றாப்பளையாச்சி கண்கள் மிளிரும்
நந்தி கடலும் பொங்கி நுரை தள்ளும் !

அத்தனையும் ஆளாகி அழகாய் பூத்து பிறந்திடும் தமிழீழ தலைவா உன் வரவிற்காய் !

நாவும் தடுமாற,கைவிரல்கள் நிதானம் அற்று போக,எழுது தாளும் கண்ணீரில் நனைந்து போக ஏக்கத்தோடு வாழ்த்துகின்றோம்....
தாயகத்து மண்வாசனை நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கு தலைவா !!

 

மார்ஷல் மார்ஷல் 

 

 

17.

முகாந்திரம் 
என்னவென சொல்வேன்,
அவனின்றி 
இந்த இனமுண்டா
மொழிதான் உண்டா 
தன் மானம் உண்டா 
பெரு எழுச்சி உண்டா 
அடங்கா வீரம் உண்டா 
இவ்வினத்திற்கு
அனைத்தும் 
அவனாகி போக 
முகாந்திரம் 
என்னவென உரைப்பேன் 
அவன் எம் தலைவனாகி
போனதற்கு <3

#HBD_Tamiltiger

தன்னிகரில்லா தமிழன் 

 

 

18.

கார்த்திகைப் பூக்களே..
ஒருமுறை உங்களின் 
கைகளை கொட்டி மலருங்கள்..
எங்கள் தலைவன் பிறந்தநாளில் !
**********************************************

மு.வே.யோகேஸ்வரன்
+++++++++++++++++
மூங்கிலைத் தென்றலது மோதும்போது
மௌனத்தின் சங்கீதம் மனத்தினை நிறைக்கும்
பூங்குயில் ஒன்று புலர்காலைப் பொழுதில்
பாடும்போது நினைவுகள்..பஞ்சு பஞ்சாய் ஊர்வலம் போகும்..!

பூக்கள் இதழ் விரிக்கக் காத்திருக்கும்
பொன்னான வேளையிலே..
தேன்தேடும் வண்டுகள் தேமதுரக் குரலெடுத்து
பாடும்போது..எண்ணங்கள் பலவந்து வாட்டும்!

ஒன்றாக நம்மோடு இருந்தவர்கள்..
உணர்வுகளில் கூடுகட்டி வளர்ந்தவர்கள்..
வென்றாகவேண்டும் எங்கள் ஈழமதை என்ற
குறிக்கோளுக் காகவே வாழ்ந்தவர்கள்..

நாள்முழுதும் நம்மோடு கலந்தவர்கள்..
நம்மோடு ஒரே பாயில் படுத்தவர்கள்..
தோளோடு தோளாக இணைந்தவர்கள்..
தின்பதையும் நம்மோடு பகிர்ந்தவர்கள்..

காவலுக்கு போகும்நேரம் காய்ச்சலென்று
சொன்னால்.."நீ தூங்கு நான் போறேன்" என்றவர்கள்..
கணப்பொழுதில் கண்முன்னே குண்டேந்தி மடிந்தபோது
கண்நீரையன்றி வேறென்ன காணிக்கையாய் நாம் கொடுத்தோம்?

ஆனால்..திரை மறைவில்...
காற்று இவர்களுக்கு கையசைக்கும்..
கருங்கல் பாறையில் ஊற்றாக சுரக்கும்
உயிர்நதி இவர்களிடம் மண்டியிடும்..!
வான்மழை மேகங்கள் வந்து
தேன்மழை பொழியும்..

வண்ணத்துப் பூச்சிகள் தம்மினிய
வண்ணச் சிறகால் சாமரம் வீசும்..
சிட்டுக்கள் வயலின் இசைக்கும்..அதற்கு
சில்வன்டு சாரீரம் சேர்க்கும்..
மலர் மொட்டுக்கள் மலர்ந்திடத் துடிக்கும்..

பட்டுப் பூச்சிகள் கூட்டைவிட்டுப்
பறந்துவந்து கவி பின்னும்..
எம்மினிய நெஞ்சங்களே! மாவீரர்களே..!
பாரில் உள்ள உயிரினங்கள் அத்தனையும்
தலை வணங்கும் தன்னிகர் அற்ற உயிர்
நீங்கள்தான் செல்வங்களே!

எனினும்...
தலைவனுக்கு இன்று பிறந்தநாள்..
புலித்
தலைவனுக்கு இன்று பிறந்தநாள்..
தமிழர் தலைவனுக்கு இன்று பிறந்தநாள்..

அட..வீரம் பிறந்த நாள் இது..
விவேகம் பிறந்தநாள் இது..
நீதி பிறந்தநாள் இது..
மனிதம் பிறந்தநாள் இது...
தமிழரின்...
தாகம் பிறந்தநாள் இது..
எம்மினிய தலைவன் பிறந்தநாள் இது..

கார்த்திகைப் பூக்களே..
ஒருமுறை உங்களின் 
கைகளை கொட்டி மலருங்கள்..
எங்கள் தலைவன் பிறந்தநாளில் 
நீங்களும் பிறந்துள்ளீர்கள் என்று
பெருமை கொள்ளுங்கள்..
எனினும்..நாளையும்..
மறக்காமல் மலருங்கள்..
அன்றுதான் எங்கள் மாவீரர்கள் 
கண்விழித்துப் பார்க்கும் நாள்.!

 

யோகேஸ்வரன் வேலு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி! - கவிஞர் பழனி பாரதி

கானுறை வேங்கையின் 
கனலும் கண்களைப் பார்த்திருந்தால்... 
சமாதானத்தின் வெள்ளைச் சொற்கள் தீர்ந்து 
பீரங்கியின் மேல் அமர்ந்திருக்கும் 
புறாவின் சிறகுகளைத் தடவிக் கொடுத்திருந்தால்... 
நான் உங்களுக்கு அந்தப் பெயரைச் சொல்லவேண்டியதில்லை! 

 

இன அழிப்புக்கு எதிரான அந்தப் பெயர்... 
எங்களுக்கு ஓர் ஆயுதம்! 
அது எங்கள் படையெடுப்பு! 
அது எங்கள் மானங்காத்த சீருடை! 
அது எங்கள் காயம் ஆற்றிய சிகிச்சை! 

 

எம் பெண்களை வன்புணர வருகின்றவர்களின் வழியில் 
அது ஒரு கண்ணிவெடியாக இருந்தது!
எம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலாகச் சுரந்தது! 
மாபெரும் மனிதச் சங்கிலியான அந்தப் பெயர் 
எங்களுக்கு ஒரு விதை! 

 

அது எங்கள் பசி! 
அது எங்கள் தாகம்! 
அது எங்கள் இரத்தம்! 
அது எங்கள் தழும்பு! 
அது எங்கள் புன்னகை! 

 

காற்றில் தீச்சுடராய் அசையும் 
காந்தள் மலரைத் தொட்டுப் பாருங்கள் 
அந்தப் பெயரை நீங்களும் சூடிக்கொள்வீர்கள் 
உயிருருக்கும் யாழிசையைக் கேட்டுப் பாருங்கள் நீங்களும் 
அந்தப் பெயரை நீங்களும் பாடிச் செல்வீர்கள்! 

 

மனிதர்களுக்கு எதிரானவர்கள் 
அந்தப் பெயரை முள்ளிவாய்க்காலில் புதைக்க நினைத்தார்கள் ... 
நந்திக் கடலில் கரைக்க நினைத்தார்கள்... 
அது எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு 
அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டது 

 

அந்தப் பெயர் எங்கள் வழித்துணையல்ல! வழியே அதுதான்!!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அகவை 61
வலிபோக்க வென்றே!!!
வலிபெற்ற தாயே!!!
புலி வாழ்ந்த குகையே!!!
போனது காண் பகையே!!!
ஓராயிரம் ஆண்டுகளாய்!!!
ஓடுங்கிக் கிடந்தோமே!!!
பேராயுதமாய் பெற்றோமோ!!!
பெருமகனை!!!!
வாரது போல் வந்த மாமணியே!!!
நீயிருந்தால்!!!

நயினாதீவு பெயர் மாறிப்போகுமா?
நாய்களும் நரிகளும் எமை ஆளக்கூடுமா?
புலிகளின் குருதியில் பொய்யர்கள் ஆள்வதா?
பொறுத்தது போதும் பொங்கியெழ மாட்டாயா!!!!!
எங்கிருந்தாலும் எமக்குள்ளே நீயிருப்பாய்!!!
எரியாத சாம்பலுக்குள் எரிந்திடுவாய் நீ நெருப்பாய்!!!!
புரியாத புதிராக போனவனே நீ
பிறந்த நாளினிலே!!! 
கரிகாலன் புகழ் காலமெல்லாம் நிலைத்திடவே!!!
கன்னித்தமிழ் கவி கொண்டு வாழ்த்துவமே!!!!

 

-mahendran

Link to comment
Share on other sites

 

தமிழர்களின் தலைமகன்!!
இணையில்லா திருமகன்!!
வீரம் விதைத்த தமிழ்மகன்!!
மனிதம் போற்றும் நன்மகன்!!
விடியலை தேடும் பெருமகன்!!
விடுதலை தேடிய வீரமகன்!!

தியாகம் வீரம் மனிதம் சுதந்திரம் அன்பு பாசம் நேசம் தீரம் பயிற்றுவித்த எங்களின் தலைவன் வழிகாட்டி அடையாளம் பெருமை இணையில்லா சரித்திர தமிழன் தலைவன் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று!!

தமிழர் திருநாள்!!

 

கோகில் கிஸ்ணன் .

Link to comment
Share on other sites

 

 

அண்ணன் என்போமா?
எங்கள் மன்னன் என்போமா?
தமிழன்னை தலை மகன் என்போமா?
அத்தனையும் கடந்த உணர்வில்
அன்னையே என்போமா?!!!

போற்ற வழியறியோம்.
.பொங்கி எழும் வாழ்த்துக்களை
ஊற்ற மொழி அறியோம்...

பாடுகிறோம்..
பாடுகின்ற பாவெல்லாம் 
அண்ணா 
உனக்கான வாழ்த்தாக
வரம் கோடி நோற்று 
அத்தனையும் 
நீ வாழ ஊற்றி ஊற்றி 
வாகைகளாக உன்னை நாடி 
சூட வேண்டும் 
உந்தன் தோள்களில்...
ஓங்க வேண்டும் 
உந்தன் புகழ்!

விழி தொடும் 
பார்வைகளுக்கு 
அப்பாலும் 
பார்கின்றன 
எம் விழிகள் 
அக விழி திறந்துமே..
விழி வழி நீர் 
வார்த்து 
வாழ்த்து மலர் 
தூவுகின்றோம்..

விழி நிமிர்த்திய வீரா..
மொழி உயர்த்திய மறவா ..
தமிழர் கூன் நிமிர்த்திய பைந்தமிழா..
தமிழ் வாழ நீடூழி நீர் வாழுமையா!

பார் புகழும் தமிழே 
தமிழ் புகழும் கதிரே 
தங்கத் தமிழ்
மங்காமல் வாழ 
பொங்கு தமிழ் 
போல் 
பெருக்கெடுக்கும் புகழோடு 
காலமெல்லாம் 
காலங்கள் போற்றும் 
தலைவா 
நீடூழி நீ வாழ்க!

 

யாழ் புயல் .

 

இடர்தீர்க்கவென வந்த தலைவர்கள்
பாரினிலே இடம்மாறிப் 
போனகதையுண்டு
ஆனால் ஆறு படைகொண்டு
வீறுநடை கொண்டு-எம்
விடியலுக்காய் வந்துதித்த
தடம்மாறிப்போகாத 
தானைதலைவா நீ வாழ்க.

மதீஸ் 

 

பிரபா மாமா வாழியவே 
***********************************
பூத்துக் குலுங்குது பாரண்ணா – புதுப்
பூக்கள் சிரிப்பதைப் பாரண்ணா
நேற்று மலர்ந்திட்டப் பூக்களெல்லாம் - இன்று
சிரித்து மகிழுது பாரண்ணா

காற்று அடித்திடும் பக்க மெல்லாம் - தமிழ் 
புதல்வன் புகழ் வருகுது பாரண்ணா
போற்றி புகழ்ந்திட நாமெல்லாம் - புது 
மகனின் பிறப்பிது பாடண்ணா

எத்தனை மலர்கள் பூத்திடினும் – இந்த 
மகவின் அழகு யாரண்ணா 
விற்பன மாயவை வீசிடும் காற்றுடன்
தலைவன் உதய நாள் இதுவண்ணா

கற்பனைக் கெட்டாத வீர உருவம் - தமிழின் 
தலைமகன் என்பதையறிய ண்ணா 
பேய்களும் பிசாசுகளும் சூழ் கொண்ட 
மண்ணை காத்திட உதித்த உறவண்ணா

கற்றவர் மேதினியில் பலருண்டு - தமிழின் 
மேன்மைகள் கூறிட இவனுண்டு 
விண்ணிலும் பாய்ந்து வென்றிடவே - இவன் 
தோன்றிய புது பிறப்பண்ணா

ஏற்றம் கண்டிட தன் னுறவாய் - தமிழ் 
தாயின் உறவினை கொண்டு நின்றான் 
பாட்டனின் சொர்ப்பனம் தாங்கி நின்று - சிங்கள
சிதைவை கண்டு வென்றான்

போற்றுவோம் எங்கள் தமிழ் மகனை - பாரில் 
ஏற்றுவோம் மனதில் புது நெருப்பை 
மாற்றுவோம் எங்கள் வலி வாழ்வை - அவன்
பெயரினை சொல்லி நின்றண்ணா

வாழ்த்துக்கள் சொல்ல வா அண்ணா 
சேர்ந்துமே சொல்வோம் வாழ்த்தண்ணா
வாழிய வாழிய வாழியவே எங்கள் 
பிரபா மாமா வாழியவே

வாழிய வாழிய வாழியவே எங்கள் 
பிரபா மாமா வாழியவே

 

கவிமகன்.இ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12299316_1203958822966520_69499029033712

ஈழத்தின் சூரியன்
•••••••••• •••••••••
காலை
மலர்வதற்கு
சூரியனின் 
வரவை
எதிர்பார்திருக்கும் 
நாட்கள் போல்
தமிழ் ஈழத்தின் 
மலர்வுக்காய்
தங்கத் தலைவனின் 
வரவை 
எதிர்பார்த்து
கார்த்திருக்கின்றது
தமிழ் இனம்
காலத்தின் சூட்சியால்
இண்று நீ
தொலை தூரத்தில் 
இருந்தாலும் 
எம் இதயம் என்னும்
கருவறையில்
நித்தமும் எம்முடனே
வாழ்கின்றாய்
இண்று 
அறுபத்தியோராவது அகவையில் 
கால்பதிக்கும் அண்ணனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
என்றும் அன்புடன் 
இரா.அகிந்த

12286107_947364495356343_1744650898_n.jp
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுநூறு கோடி மனிதர்கள்

இருப்பதாய் நம்பும்

கடவுள்

இருக்கிறாரா என்று

எப்படி சந்தேகிப்பதில்லையோ

அப்படியே

எட்டு கோடி தமிழர்கள்

நம்பும்

ஒரு தலைவன்

இருப்பதை நாங்கள்

சந்தேகிப்பதில்லை.

***

சேயோன் யாழ்வேந்தன்

 

தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.