Jump to content

காந்தள் பூக்கும் காலம்


Recommended Posts

 

kanthalflower.jpg

 

நேற்றைய இரவு முழுதும்
அழுதபடியிருந்தவர்களை
கண்டு தாளாது போரிட சென்றவர்கள்
வெற்றியோடு திரும்பினர் மதியம்

நமது தோழனென நம்பியிருந்த பகல்
பெரும்பூதமென மீண்டுமொரு காரிருளை
வாரியிரைத்து போனது வடக்கே அமைதியாக

இரவும், பகலென வேடமிட்ட நிசியும்
பிணைந்த புணர்வில் பிறந்த
குழந்தை பதிமூன்று ஆணா? பெண்ணா?
என அறிவதில் கழிந்தது காலம்

இடையில் கீரிடத்தை பறிக்க
சிந்தனையில்லா கோமகனை கொன்று
நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள்

விதியென நொந்தும் வெயிலென
காய்ந்தும் புயலென வீழ்ந்திடாமலும்
பூத்தன கார்த்திகை பூக்கள்

சூல்கொண்ட மகவு தாயை பிரசவிக்கமுன்
விழித்துக்கொண்ட இருளின் பிள்ளைகள்
கைகுலுக்கிக் கொண்ட நாட்களில்
சிவப்பு கழுத்துப்பட்டையுடைய கொலைகார
மிருகத்தை போதிமரத்தடியில் வளர்த்தனர்

அதன்பின்பொரு கோடை காலத்தில்

நாம் தோற்றவராயிருந்தோம்

அம்மணமாயிருந்தோம்

பிணமாயிருந்தோம்

இன்று சங்ககராவின் சதத்தை நீயும்
கோலியின் சதத்தை நானும்
கொண்டாடும் நிர்பந்தத்திலிருக்கிறோம்...

நமது நாட்கள் நகர்வதேயில்லையென
கவலையுறாதே

"காந்தள் பூக்கள் கார்த்திகையில்
மலர்வது மாவீரர்களுக்கு மரியாதை
செய்யும் பொருட்டே"

~ ராஜன் விஷ்வா

நன்றி முகடு இதழ், பாரிஸ்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தள் பூக்கும் காலம் -- கண்

துஞ்சாது காப்போம் தீபம்...!

 

நன்றி ராஜன் விஷ்வா...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ராஜன் விஷ்வா!  உங்கள் ஈழ உணர்ச்சியை கண்டு மெச்சுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இடையில் கீரிடத்தை பறிக்க
சிந்தனையில்லா கோமகனை கொன்று
நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள் //

 

சிந்தனையில்லா கோமகன் யார்?

 பூதகணங்கள் யார்?  விளக்கவும்.

Link to comment
Share on other sites

ராஜீவ் - கோமகன்
அவரது சகாக்கள் - பூத கணங்கள்

 

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அருமை.  விளக்கம் தந்தமைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.