யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
அஞ்சரன்

டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் .

Recommended Posts

 

இன்று ஒரு முக்கியமான நினைவு கூட்டம் ஒன்றுக்கு போன திருப்தி .

டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் .

டேவிட் ஐயா அவர்களின் காந்தீயம் ஊடாக தமிழர் நிலங்களை எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தும் குடியேற்றங்களிலும் இருந்து பாதுகாத்தார் ,அவரின் தூர நோக்கு செயல் எழுபதுகளில் தொடங்கியது எப்படி எவ்வாறு ,நாம் தொண்ணூறுக்கு பின்னரே விடுதலை போராட்டங்களை அறிந்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேணும் அதற்க்கு முன்னுள்ள வரலாறுகள் மறைக்கப்பட்டதா அல்லது எழுதாமல் விடப்பட்டதா என்றுதான் தெரியவில்லை .

அங்கு உரையாற்றிய சிலரின் கருத்துக்கள் 

எத்தினை போராட்ட இயக்கங்கள் இருந்தது அதன் தலைவர்கள் மரணங்கள் கூட நினைவு கூறப்படுவதில்லை, ஆனால் ஒரு காந்தீய போராளி மக்களுடன் வாழ்த்த ஒருவருக்கு உலகெல்லாம் நினைவு நிகழ்வு நடைபெறுகிறது என்றால் அது டேவிட் ஐயா ஒருவருக்கு தான் .

பீ .ஏ. காதர் 

.....................................................
ஆனையிறவுக்கு அங்கால தான் தமிழீழம் இருக்கு என்றுதான் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் , ஈழம் என்றாலே நான் யாழ்ப்பாணம் என்று சொல்வதுதான் பெருமையாக கொள்கிறார்கள் ,முதலில் அவைகள் மாறனும் ஈழம் என்பதன் எல்லையை அவர்கள் எது என புரிந்து கொண்டு பேச வேணும் .

...............................................
காந்தீய வழி வந்த இளையவர்கள் ஆயுத வழிக்கு போனது எதற்காக என்பதற்கு ஜெனி அக்கா கொடுத்த விளக்கம், அவர் காந்தீயத்தில் ஆரம்ப கால உறுப்பினர் என்பதால் சொல்லும் போது அட இவ்வளவு தூர நோக்கோடு டேவிட் ஐயா போன்றவர்கள் இருந்திருக்கிறார் என வியக்க வைக்கிறது .

பண்ணை திட்டம் ,முன்பள்ளி என விளிம்புநிலை மக்களை எவ்வாறு விழிப்பு நிலைக்கு கொண்டுவாறது என்பதற்கு எழுபதுகளில் ஒருவர் திட்டம் இட்டு நகர்த்து இருக்கிறார் என்றால் ஆச்சரியம் தான் .

.......................................................
டேவிட் ஐயா நினைத்து இருந்தால் அரச பதவியில் இருந்தவர் அவரும் ஒய்வு வரை அப்பதவியில் இருந்து விட்டு ஒய்வு பெற்றபின் ஒரு இரவில் தமிழ்தேசியம் பேசி தலைவர் ஆகி இருக்கலாம் .

ரஞ்சித் 
............................................................

உண்மையில் நாம் வரலாறுகளை, வழிகாட்டிகளை தொலைத்து விட்டு ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது மிக மிக வேதனையான ஒரு விடயம்தான் ,மீண்டும் காந்தீயங்கள் போன்ற அமைப்புக்கள் உருவாக வேண்டும் அவற்றின் ஊடாக மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் .

மண்டபம் நிறைந்த ஒரு நிகழ்வு நடந்தது என்றால் இன்றுதான் எல்லோரும் வந்திருந்தார்கள் கட்சி இயக்க வேறுபாடுகள் இன்றி ஒரு நல்லிணக்க செயல்பாடு போல் இருந்தது .

 

12316423_10204041417755573_5720236388572

12347710_917080014995435_576080855152228

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, அஞ்சரன் said:

உண்மையில் நாம் வரலாறுகளை, வழிகாட்டிகளை தொலைத்து விட்டு ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது மிக மிக வேதனையான ஒரு விடயம்தான் ,மீண்டும் காந்தீயங்கள் போன்ற அமைப்புக்கள் உருவாக வேண்டும் அவற்றின் ஊடாக மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் .

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்.

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...யாரது ரஞ்சித் கேள்விப்படாத பெயராய் இருக்குது

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...யாரது ரஞ்சித் கேள்விப்படாத பெயராய் இருக்குது

இவர் தமிழீழ காவல்துறையின்  ஒரு பொறுப்பில் இருந்தவர்  உடையார்கட்டு  பகுதி  என  நினைக்கிறேன்  நீண்டகாலம் அவருக்கும்  பேசுவதற்கு  சந்தர்ப்பம்  கொடுக்கபட்டது .இறுதியாக  வந்தவர்களில்  ஒருவர்  எனவும் சொல்லலாம் .

17 hours ago, ஜீவன் சிவா said:

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்.

நன்றி  வருகைக்கு  ஜீவன்  சிவா 

Share this post


Link to post
Share on other sites

நன்றி அஞ்சரன்

Share this post


Link to post
Share on other sites

காந்தீயம் டேவிட் ஐயா நிகழ்வு பற்றிய பதிவு

meet phoகாந்தீயம் டேவிட் ஐயாவின் நினைவுப் பகிர்வும் , கலந்துரையாடலும், நூல் வெளியீடும் சென்ற ஞாயிற்றுக்கிழமை (06.12.2015) பிரான்சின் தலைநகர் பாரீஸ் லாச்சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் நம்பிக்கை கொண்டவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் பொது மக்கள் என மிகத் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்கு காந்திய சமூக செயற்பாட்டாளர் இ. பூபாலசிங்கம் அவர்கள் தலைமை தாங்கினர். ‘இலங்கை தேசிய இனப்பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையை பி.ஏ.காதர் அவர்கள் நிகழ்த்தினார்கள்.டேவிட் ஐயாவைப் பற்றி தொகுக்கப்பட்ட ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந்த மனிதன்’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.

மிகவும் நட்புணர்வுடனும் தோழமையுடனும் நடைபெற்ற கூட்டத்தில் இறுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பார்வையாளர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய நண்பர்களின் பேச்சின் சிறுகுறிப்புக்கள் பின் இணைப்பாக இங்கு தரப்பட்டுள்ளது

இ. பூபாலசிங்கம்

POOBALAPILLAI இ. பூபாலசிங்கம்

டேவிட் ஐயா இராஜசுந்தரம் ஆகியோர் காந்தீய அமைப்பை உருவாக்கி பாதிக்கப்பட்ட மலையக மக்களை எமது வடகிழக்கு பிரதேசங்களில் குடியேற்றி அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்து, எமது தமிழ் பிரதேசங்களை காப்பாற்றிய மனிதர்கள்.அதுபோல் வடகிழக்கு பிரதேசங்களிலுள்ள எல்லைக் கிராமங்களுக்கு அரணாக பண்ணைகள் குடியேற்றத் திட்டங்களை திட்டமிட்ட தன்னிறைவு பொருளாதாரத்துடன் சிறப்புற செய்தார்கள். சில காலப் பகுதியில் ரி.ஆர்.ஆர் ஓ மற்றும் செடெக் என்னும் ஸ்தாபனங்களையும் இணைத்துக்கொண்டு கூடுதல் உதவிகளை செய்தார்கள்.

ஜென்னி

ஜென்னி ஜென்னி

காந்தீயம் என்பது இதன் ஸ்தாபகர்களான தலைவர் டேவிட் ஐயா செயலாளர் வைத்தியர் ராஜசுந்தரம் ஆகியோர் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பாகும்.

இவர்களின் நோக்கம் குறிக்கோள் என்பன ,கிராமிய மட்டத்திலான ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவதும் இதற்கான தொண்டர் ஆசிரியர்களாக அந்தந்த கிராம மட்டத்திலுள்ள இளம் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கான விழிப்புணர்வு- ஆளுமை-கிராமியத்தின் தலைமை மற்றும் சமூக அக்கறையுடனான கல்வி முறைமைகளை பயிற்றுவித்து அந்தந்த கிராமத்தின் சமூக பிரதிநிதியாக்குவதும், அந்தக் கிராமத்தை மையப்படுத்தி கிராமிய கூட்டுத்தலைமையை உருவாக்குவதாகும்.. அடுத்ததாக கிராம மக்களிடையே தன்னிறைவு பொருளாதாரமும் மற்றும் வடகிழக்கில் குடியேற்றத்தின் மூலம் தமிழ் பேசும் மக்களின் விகிதாசார பரம்பலை அதி கரிப்பதாகும் .

இவ்வாறாக வடகிழக்கில் மொத்தமாக 500 மேற்பட்ட பாலர் பாடசாலைகளும் 12ற்கு மேற்பட்ட பெரிய பண்ணைகள் மற்றும் நியாயவிலைக்கடைகளும் 25000 ற்கு மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றியதுமான வேலைத்திட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொண்டர் ஆசிரியர்களும் ஏனைய வேலைத்திட்டங்களுக்கு பல இளைஞர்களும் இணைக்கப்பட்டனர் நானும் திருமலை தொண்டராசிரியராக 1979லிருந்து 1983 வரை செயற்பட்டதால் இந்த மறைந்த டேவிட் ஐயா -டொக்டர் ராஜசுந்தரம் மற்றும் சந்ததியார் அனைவருடனும் பயணித்த காலங்களும் அவர்கள் எங்களைப் போன்றோரை உருவாக்கிய விதமும் மொத்தத்தில் ஒரு மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி வாழ்வியல் பணிகளை முதன்மை படுத்தி எம்மை போன்றோரையும் வழிநடத்தி தினார்கள். எம் சமூகத்தின் பால் இவர்களுக்கு இருந்த அக்கறைகளும் அர்பணிப்புக்களும் அதன் செயற்பாடுகளும் எம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வரலாற்று பாடமே.

எம். பௌசர்

எம். பௌசர் எம். பௌசர்

காந்தீயம், டேவிட் ஐயாவை வரலாற்றில் நாம் கண்டைய முற்படும்போது, டொக்டர் இராசசுந்தரம், சந்ததியார், போன்ற சமூக அரசியல் பங்களிப்பாளர்களையும், காந்தீயம் கொண்டிருந்த சமூக அரசியல் பொருளாதாரத் திட்டங்களையும், அதை தன்னலம் கருதாது பங்களித்த ஆயிரக்கணக்கான மனிதர்களையும் சந்திக்க முடியும். அத்துடன் வடக்கில் நடந்த சிங்களக் குடியேற்றம் , புளொட் அமைப்புக்கும் காந்தீயத்திற்குமான உறவு, 1983 ஜுலை இனப்படுகொலை, 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையின் பதிவுகள், காந்தீயத்தால் அமைக்கப்பட்ட பண்ணைகளில் தொண்டர்களாக பணியாற்ற வந்த கிராமப்புற இளைஞர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு , அக்காலத்தில் இயங்கிய அமைப்புகள், மட்டக்களப்பு சிறை உடைப்பு, புளொட்டுக்குள் நடந்த உட்கட்சிப் போராட்டம், தமிழகத்தின் அகதி வாழ்வு போன்ற பல்வேறு முக்கிய வரலாற்றின் கட்டங்களை சந்திக்க முடியும்.

தமது அனுபவங்கள், பாடங்கள், பாடுகளை எழுத வரலாற்றில் சம்பந்தப்பட்ட அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் சமகாலத்தினை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கு முழு வரலாறும். ஈழப் போராட்டத்தின் தொடக்கம் பற்றிய அறிதல் கொண்டு சென்று சேர்க்கப்படவில்லை. இதற்கு சுயேற்சையான ஆய்வு நிறுவனங்களும் காய்தல் உவத்தல் அற்ற ஆய்வாளர்களும் தேவைப்படுகின்றனர். அதற்கான சிந்தனையை கிளர்த்துவதற்காகவே, காந்தீயம் , டேவிட் ஐயா பற்றிய எம்மால் வெளியிடப்பட்ட நூல் அமைகிறது

மணி நாகேஷ்

மணி நாகேஷ் மணி நாகேஷ்

ஈழப்போராட்ட வரலாற்றில் பல அற்புதமான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்.களத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து போராடிய போராளிகள் ஒரு புறமும் அறவழியில் கருத்தியல் ஜனநாய தளத்தில் தமது இனத்தின் வாழ்விற்காய் போராடிய மனிதர்கள் இன்னொரு புறமுமாக போராட்ட அசைவியக்கம் நகர்வதை நாம் அறிவோம் .இந்நிலையில் 1970களில் காந்தீயம் என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் வழி தமிழினத்தின் வாழ் வுரிமைக்காக போராடிய மகத்துவமான மனிதராக டேவிட் ஐயாவை நாம் காண்கின்றோம்.

அண்மையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற்றம் என்பது -எமது இனத்தை எவ்வாறு வேரறுத்து செல்கின்றதென்பதை, புள்ளிவிபரங்களை விரிவாக அறிக்கையிட்டிருந்தார். பேரினவாதிகளின் இனஅழிப்பின் இன்னொரு வடிவமே திட்டமிட்ட குடியேற்றம் என்பதனை முன்னுணர்ந்து 70களிலேயே தமிழர் குடியேற்றங்களை நிறுவி ஏராளமான மலையகத் தமிழரின் வாழ்வாதாரத்திற்கு வழியமைத்ததுடன் சிங்கள பேரினவாதிகளுக்கும் சவாலாக அமைந்தார். 1983 ஜீலை இனக்கலவரத்தின் பின் தமிழகத்தில் புலம்பெயர்ந்த போதே டேவிட் ஐயாவை 1987ல் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அவர் வசித்த அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று உரையாடிய பொழுதுகள் என்றும் மறக்க முடியாதவை.

கிருபன்

கிருபன் கிருபன்

டேவிட் ஐயா உருவாக்கிய காந்தீயத்தை முன்மாதிரியாக கொண்ட பண்ணைகளின் உருவாக்கம் மக்களின் சமகால வாழ்வாதார நெருக்கடிகளுக்கான மாற்றீடாகவும் தொலை நோக்காக- சமூக முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்களை கொண்டதாகவும் இருந்ததை நாம் அறியக்கூடியதாக உள்ளது.பண்ணை அமைப்பில் காணப்படும் கூட்டு உழைப்பு முறை வாழ்க்கையும் உயிரியல் சுழற்சி முறையிலான உற்பத்தியும் தரமான உற்பத்திகளின் மக்களிற்கான நுகர்வுக்கப்பால் மாதிரி பண்ணைகளை உருவாக்கத்தினூடாக சமூக சுற்றுச் சூழலையும் பாதுகாத்து அடிப்படை சமூக மாற்றத்தையும் கட்டியெழுப்ப முடியும் என நிருபித்துள்ளார்.

இந்த பண்ணை உழைப்பு உற்பத்திகளையும் தாண்டி கல்வி -சுகாதாரம்- விளையாட்டு- கலை என அனைத்து சமூக காரணிகளிலும் காந்தீயம் கவனம் செலுத்தி செயற்பட்டிருக்கின்றதென்பதை பல தரவுகள் நிறுபித்துள்ளன.

எனவே இவற்றை படிப்பினையாக கொண்டு நாமும் எமது நாட்டில் வாழ்வாதார பணிகளை செய்ய முயற்சிக்க வேண்டும்

பாலகிருஸ்ணன்

BALAKIRUSNAN பாலகிருஸ்ணன்

நான் அறிந்தளவில் டேவிட் ஐயாவின் மூலம் உருவாக்கப்பட்ட காந்தீயம் என்னும் பரந்து பட்ட சமூக அமைப்பானது முழுமையாக தனது பணிகளை செய்ய முடியாது போனமையே எமது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்பதை உணர முடிகின்றதுடேவிட் ஐயா தனது அர்ப்பண வாழ்வில் நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார கட்டுமாணங்களை நிறுவுவதற்கான அடிப்படை வேலைத்திட்டங்களை படிப்படியாக முன்னெடுத்துள்ளார்
அதன் வரைபாக பாலர் பாடசாலைகள்- அதன் தொண்டர் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாந்தரங்கள் மற்றும் கூட்டுப்பண்ணை முறைமைகள் என கிராம நிர்மாணப் பணிகளை சிறப்புற மேற்கொண்டார் இதனால் அனைத்து கிராமங்களிலும் உழைப்பாளி மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள்- சமூக விழிப்புணர்வு -இளைஞர்களின் தலைமைத்துவம் என ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அயராது செயற்பட்டார்

ரஞ்சித்

ரஞ்சித் ரஞ்சித்

டேவிட் ஜயாவின் நிகழ்வு பற்றிய சுவரொட்டியை லாச்சப்பல் கடைத்தெருவில் ஒட்டச்சென்ற போது பலர் கேட்டார்கள் யார் இந்த ஐயா என்று இது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. யார் இந்த டேவிட் ஐயா தமிழ்மக்களுக்கான சுதந்திர வாழ்வுக்காக தனது பதவி, பட்டம், சுகபோக வாழ்வைத்துறந்து மேற்கு நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர். இவரை மட்டுமல்ல இதே கொள்கையுடன் தமது வீடுகளை விட்டு புறப்பட்டு உயிருடன் திரும்பி வராத அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த ஐம்பதினாயிரம் உடன்பிறப்புக்களையும் நாம் மறக்கக்கூடாது. டேவிட் ஐயாவின் கனவான காந்தீய கிராமங்களின் இன்றைய நிலை என்ன? பல அழிக்கப்பட்டு விட்டன. பல அரைவாசிக்கும் குறைவான மக்களுடன் இருக்கின்றன. தாயகம் செல்லத் தடையற்றவர்கள் அங்கு சென்று இக்காந்தீய கிராமங்களை மீளமைப்பதே டேவிட்ஐயாவிற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.

கிரிஸ்டி

KIRIST கிரிஸ்டி

நான் மாணவர் அமைப்பிலிருந்து பின் புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் கொள்கையால் கவரப்பட்டு புளொட்டில் இணைந்தேன்.எமது செயலதிபர் மூலம் டேவிட்ஐயாவிற்கு அறிமுகமானேன்.இந்நிலையில் வவுனியாவின் எல்லை பறிபோகும் நிலைவந்த போது டேவிட் ஐயா டொக்டர் இராஜசுந்தரம் ஆகியோர் போராடி நின்றது. காரணம் இவர்கள் எமது மக்களை மூன்றுமுறிப்பு தச்சன் குளம் போன்ற பதகுதிகளில்குடியேற்றி இடைநிறுத்தம் செய்தனர்.இதற்கு முன் வவுனியா எம்பி அடங்காத்தமிழன் திரு சுந்தரலிங்கம் தனது காணிகளை கொடுத்து உதவி செய்தனர் இதற்கு காரணம்ஆனையிறவுக்கு அப்பால்(வெளியே)வராமல் உள்ளே இருந்தபடி பிரதேசவாதத்தை பேசி நாம் நம்மண்ணை இழந்ததுதான்
இதன் பின் காந்தீயத்தின் செயற்பாடு தடைப்பட சர்வோதயத்தில் இணைந்து எமது செயற்பாட்டைத் தொடர்ந்தோம்.இந்நிலையில் டொலர் பாம், கென் பாம் பறிபோன நிலையில் கொக்குளாயும் அதன் தொடர்ந்த பிரதேசங்களும் பறிபோகமுல்லைத்தீவு நோக்கி வந்த மக்களை பராமகரிக்கவேண்டியேற்பட்டது.இது தான் எமது கடந்த கால வரலாறு.இது இங்கு அமர்ந்திருக்கும் தலைவர் புபாலசிங்கம் அவர்கட்கும் தெரியும்.

பி.ஏ.காதர்

பி.ஏ.காதர் பி.ஏ.காதர்

டேவிட் ஐயாவை நினைவு கூர்வது எதற்காக?அவர் தனது சமூகத்தை நேசித்த ஒரு நேர்மையான எளிமையான உண்மையான மனிதர் என்பதனால் எமது நன்றிக் கடனை செலுத்துவதற்காகவா?விடுதலைப் போராட்டத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு மேற்கத்தைய நாடுகளில் அடைக்கலம் கோரி சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்காக அரசியல் பேசும் நபர்களைப் போலல்லாது தனக்கு முன்னால் இருந்த சுகவாழ்வை தூக்கியெறிந்து விட்டு ஒரு வேலைத்திட்டத்துடன் நாடு திரும்பி அதற்காக வாழ எத்தனித்து அப்பயணம் தடைப்பட்டு போன பின்னரும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்தபடி எஞ்சிய காலத்தை கழித்த அவரது அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துவதற்கு மாத்திரம் தானா? நல்லதொரு வெகுஜன அமைப்பை கட்டியெழுப்பி அதனை புளொட் அமைப்பிற்கு தாரைவார்த்து கொடுத்து அதனால் காந்தீய அமைப்பே அழிவதற்கு காரணமாயமைந்தவர் என குற்றஞ்சாட்டுவதன் மூலம் தம்மை தத்துவார்த்த மேதைகளாக காட்டிக் கொள்ள முயல்கின்ற சிலரது வக்கிரத்தை ஓதுக்கி விட்டு நோக்கினால் அவரை நினைவு கூறுவதென்பது நாம் பார்க்கத் தவறிய அல்ல புரிந்து கொள்ளத் தவறிய அவரது பார்வையை அதன் இலட்சியத்தின் தாற்பரியத்தை அல்லது இலட்சிய நோக்கை சமூக விஞ்ஞான வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்து கொண்டு அவர் தொடக்கி வைத்த பயணத்தை தொடர வேண்டிய வரலாற்று கடமையை நினைவுட்டிக் கொள்வதற்காகத்தான்.

அசோக்

அசோக் அசோக்

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காககவும் தன் வாழ்வை அர்பணித்த டேவிட் ஐயா நம்மைப்போல் சுயநலமிக்க வாழ்வொன்றை தேர்வு செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராக மாறியிருப்பார்.ஆனால் அவர் எமது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக மேன்மைக்காக தனது பதவியையும் பட்டத்தையும் துறந்து தனது சொந்த உழைப்பை தியாகம் செய்தார்.இதற்காக அவர் காந்தியத்தை தேர்வு செய்தார்.

காந்திய கோட்பாடுகளில் காணப்பட்ட எளிமை சிக்கனம் கிராமிய சுயபொருளாதார திட்டம் உள்ளுர் வளங்களை பயன்படுத்தல் சுயஅபிவிருத்தி தன்னிறைவு என்பன போன்ற நடைமுறை சார்ந்த திட்டங்களை சுவீகரித்து அவற்றை செயல்வடிவத்தில் நடைமுறைப்படுத்தினார்.டேவிட் ஐயா தொலை நோக்கு சிந்தனை கொண்டவராக செயல்படுத்திய அரசியல் சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டு திட்டங்களை நாம் தொடர்ச்சியாக செயல்படுத்தி இருப்போமானால் தமிழ் பிரதேசங்களில் பல்வேறு மாற்றங்களை நாம் உருவாக்கியிருக்க முடியும்.

 

http://inioru.com/memories-of-ghnadeyam-david-iya-event-held-in-pais/

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புலவர் said:

நம்ம யாழ் கிருபனா அது?

இப்படி ஒரு கேள்வி வரலாம் என்று நினைத்திருந்தேன்.!

2007 இல் சாத்திரியும் இவரை நான் என்று நினைத்துக் கேட்டிருந்தார். 

நான் அவரில்லை!

மேடையில் எல்லாம் பேசிப் பழக்கமும் இல்லை. முடி இல்லாத மண்டையுமில்லை!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • அதுவல்ல காரணம்; அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்பதே
  • இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள் இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இந்து ஆலயங்கள் மற்றும் இந்து வரலாற்றை கொண்ட சில பகுதிகளில் பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்ட சில அசம்பாவித சம்பவங்களை அடுத்து தமிழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள நந்தி கொடிகள் சேதமாக்கப்பட்டது, திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பௌத்த மயமாக்கல், கண்ணியாவின் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மற்றும் நுவரெலியா - கோட்லோஜ் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பௌத்த கொடியொன்றை பிக்குவொருவர் வலுக்கட்டாயமாக ஏற்றியது உள்ளிட்ட பல சம்பவங்கள் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. https://www.bbc.com/tamil/sri-lanka-49042532  
  • ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை? - சுமந்திரன் விளக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுக் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு அமைச்சர் மனோ கணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை. கூட்டமைப்பினர் பங்கேற்காமை தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். “அமைச்சர் மனோ கணேசன் நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதியுடனான சந்திப்பு பற்றிக் கூறினார். ஜனாதிபதியுடன் யார் சந்திப்பை ஒழுங்குபடுத்தினாலும், சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும். இந்தச் சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தாலோ, ஜனாதிபதியிடமிருந்தோ கிடைக்கவில்லை. கிண்ணியா விவகாரம் தொடர்பில் பேசப்பட இருந்ததால், அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொள்ள வேண்டும். அவரைத் தொடர்புகொண்டு, கூட்டத்துக்கான அழைப்பு கிடைத்ததா என்று கேட்டேன். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் தனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும், ஜனாதிபதியை இந்த விவகாரங்கள் தொடர்பில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நாங்கள் கோரியிருந்தோம். எனவே, அவரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவோம். http://thinakkural.lk/article/31976
  • நாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும், அதனை மேம்படுத்துவத்றகும் அரசாங்கம் உறுதிக்கொண்டுள்ளதாக  அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்திருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வோஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சர்களுக்கான இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தூதுவர் ரொட்னி பெரேரா இவ்வாறு கூறியிருக்கிறார்.  அத்தோடு இலங்கைக்கு வழங்கும் ஆதரவு மற்றும் இலங்கை மக்களுடனான ஒருமைப்பாடு என்பவற்றுக்காகத் தனது நன்றியையும் அங்கு வெளிப்படுத்தினார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/60780
  • ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்றையதினம்(19) குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .   கடந்த 16.07.2019 அன்று தென்கயிலை ஆதினத்தால் கன்னியா பிள்ளையார் கோயிலை மையப்படுத்தி அங்கு சென்று சமய வழிபாடுகள் செய்யும் நோக்குடனும் கன்னியா தமிழரின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாகவும் வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. அந்த கவனயீர்ப்புக்குச் சென்ற பல பேர் குறிப்பாக  வெளியிடங்களிலிருந்து சென்றவர்கள் இராணுவ, பொலிஸார் சோதனைச் சாவடிகளைக் கடந்து மிரட்டல்களுக்கும் இராணுவ கண்காணிப்புகளுக்கும் மத்தியில் சென்றடைந்ததையும் களத்தில் நடந்த சம்பவங்களையும் பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும். பல நூற்றாண்டுகளாக சைவ சமயத்தோரும் அதன் இதிகாச வரலாற்றோடும் தொடர்புடைய கன்னியா வெந்நீரூற்றையும் அதை அண்டி இருந்த கன்னியா பிள்ளையார் கோவிலையும் தொல்லியல் திணைக்களம் அபகரித்ததை யாவரும் அறிந்தது.     கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் பௌத்த விகாரையின் வரலாறு ஒரு தசாப்ததிற்குட்பட்டது. தமிழரின் பூர்வீகம் அதன் வரலாறு வரலாற்றில் திரிவுபடுத்தப்படுகின்றது. சிங்கள பௌத்த மையம் கூர்ந்து இதனூடு சிங்கள பௌத்த தேசியம் தன்னை ஒரு பூர்வீக தூய்மையான கலப்பற்ற இனமாக சித்தரிக்க முற்படுகின்றது. இவ் அரசியல் நிகழ்ச்சி ஏனைய இனங்களின் பூர்வீகத்தையும் அதன் வரலாற்றையும் கேள்விக்குட்படுத்தி மாற்றியமைக்க முற்படுகின்றது. ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும்.  கன்னியாவின் பூர்வீகம் தமிழின இருப்பின் பூர்வீகம். பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்யச் சென்ற சமயக் குருக்களையும் பக்தர்களையும் பொலிஸார் தடை செய்தது என்பது ஒரு சமயத்திற்குரிய வழிபடுகின்ற உரிமையை மறுத்தலாகும். நீதிமன்ற தடையுத்தரவு கண்பிக்கப்பட்டு அம்முயற்சி தடை செய்யப்பட்டபோது மக்கள் தங்கள் எதிர்ப்பை மிக அமைதியான முறையில் காட்ட முற்பட்ட போது இராணுவத்தினர் விசேட  அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை காட்டுவதற்கான வெளி முற்றாகவே குறைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணி அவர்களின் இருப்புசார் கோரிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்பதே அதன் உள் நோக்கமாக இருந்தது. ஒரு சமய மதத் தலைவரை அங்கிருந்தவர்கள் அநாகரிகமாக அவதரித்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. இதே அவமதிப்பு ஒரு பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால்  அது அரசியல் மயமாக்கப்பட்டு வன்முறைச்சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனால் தமிழர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் அகிம்சைவாதிகள் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றார்கள்.  அதிகார ஆயுத அரசியல் பலத்தோடு பெரும்பான்மையினர் தாங்கள் விரும்பியதை ஏனையவர்களின் உரிமையை பறிப்பதாக கூட இருக்கலாம் செய்யலாம் என்ற தோற்றப்பாடு வரலாற்றில் நடந்தேறியுள்ளது மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.   மத வழிபாடு செய்வது நாட்டின் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது அப்பட்டமான பொய். அவ்வாறெனில் வடக்கு கிழக்கில் பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றில் காளான்களாக முளைத்த பௌத்த விகாரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அது சிங்கள பௌத்தர்களுக்குரியது. ஏன்பதை சுட்டி நிற்கின்றது. அவ்வாறெனில் இலங்கையின் பல்லினத்தன்மைக்கான வெளி மறைக்கப்பட்டு விட்டதா ?? பெரும்பான்மை சனநாயக வெளியில் ஒற்றையாட்சித் தன்மையில் ஏனைய இனக் குழுமங்கள் நாளடைவில் இன அழிப்பை சந்திக்கும் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வாறான பாதையை இலங்கை அரசு தெரிந்தெடுத்திருப்பது என்பது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிருபணமாகின்றது. மேற்குலக நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் தன்னை ஒரு சனநாயக நாடு நல்லிணக்க சமாதான விரும்பி என காட்டிக்கொண்டு அதன் இன்னொரு கோர முகத்தை பெரும்பான்மை தவிர்ந்த இனத்தவர் மேல் காட்டுவது என்பது உண்மையில் இலங்கை அரசின் அரசியல் இருப்பில் ஐயம் கொள்ளச் செய்கின்றது. அண்மைய காலங்களில் பௌத்த பிக்குகளின் இலங்கை சனநாயகத்தை சிதைக்கின்ற முயற்சிகளும் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தண்டனை விலக்கீட்டு நிலையில் இறைமை ஆட்சி நோக்கிப் பயணிக்கின்றதா என்று சந்தேகக் கொள்ளச் செய்கின்றது. மேற்கூறப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பில் தங்களை மக்கள் பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் மௌனம் காப்பது இந்நிகழ்சியில் இவர்களும் பங்காளிகள் என சந்தேகம் கொள்ளச் செய்கின்றது. இதுவரைக்காலம் இது பற்றி தமிழ் அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். தமிழின இனப்படுகொலையின் தமிழ் அரசியல் கட்சிகளதும் அரசியல்வாதிகளதும் வகிபங்கை வரலாறு பதிவு செய்யும். https://www.virakesari.lk/article/60753