Jump to content

முத்துக் குளிக்க வாரீகளா...கவிக்கோ அப்துல் ரகுமான்


Recommended Posts

முத்துக் குளிக்க வாரீகளா...1

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
nat_2477954f.jpg
 

கடவுள் துகள்!

இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது?

ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கிரேக்க ஞானி டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்தே அணுதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் என்று விஞ்ஞான உலகம் நம்பி வந்தது.

1964-ம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி இந்த அணுக்கொள்கை மீதே ஓர் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டார். 40 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அணுவுக்கும் மூலமாக ஒரு பொருள் உண்டு என்று அவர் கூறினார். அந்த மூலத் துகள் அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்பட்டது.

ஹிக்ஸ் சரி, அது என்ன போஸான்?

அணுவுக்கு உப அணு உண்டு என்று 1924-ம் ஆண்டே கண்டறிந்து கூறியவர் கொல்கத்தா வைச் சேர்ந்த சத்தியேந்திரநாத் போஸ்.

அதனை அங்கீகரித்து, அவர் பெயரையும் இணைத்துத்தான் மூலத் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர்.

‘துகள் இயற்பிய’லில் இது மிக அற்புதமான கண்டுபிடிப்பு என்பதால் பீட்டர் ஹிக்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லியோன் லெடர்மான் என்ற இயற்பியல் விஞ் ஞானி 1993-ல் ஹிக்ஸ் போஸானுக்குக் ‘கடவுள் துகள்’ (God particle) என்று பெயர் சூட்டினார்.

இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக் கினார் என்று ஆத்திகர்கள் கூறுகிறார்கள் அல்லவா? அவர்களைக் கேலி செய்வதற்காகவே அவர் அப்படி பெயர் சூட்டினார்.

‘இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக் கினார் என்று கூறுகிறீர்களே... இதோ இந்தத் துகள்தான் பிரபஞ்சத்தை உண்டாக் கியது. எனவே, இதுதான் கடவுள்’ என்று கூறுவதன் மூலம் ஆத்திகர்களைக் கேலி செய்வது அவர் நோக்கம். இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் உண்டாக்க வில்லை, இந்தத் துகள்தான் உண்டாக்கியது என்று ஆத்திகரைக் குத்துவது அவருடைய உள் நோக்கம்.

பீட்டர் ஹிக்ஸும் நாத்திகரே. அவருக்கே கூட லெடர்மான் இப்படிப் பெயர் சூட்டியது பிடிக்கவில்லை.

எப்படியோ, லெடர்மான் கேலியாகப் பெயர் வைத்தாலும் அவரே அறியாமல் ஆதிமூலத் துகளில் கடவுளுக்கு இடம் கொடுத்துவிட்டார். அதாவது கடவுளின் பொருளை அவர் பேருக்கே பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்.

இது கடவுளின் திருவிளையாடல்.

ஹிக்ஸ் போஸான் பற்றி ஆராய்ச்சி செய்வதற் காக சுவிட்சர்லாந்தில் செர்ன் என்ற இடத்தில் விஞ்ஞான ஆய்வுக் கூடம் அமைத்திருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் 2004 ஜூன் 18 அன்று ஆறடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலையை நிர்மாணித்திருக்கிறார்கள்.

‘கடவுள் துக’ளில் மறுபடியும் கடவுள்!

விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் நடராஜர் சிலையா?

சிவபக்தர் யாராவது வம்படியாகக் கொண்டு வந்து வைத்துவிட்டாரா? இல்லை, இதற்குக் காரணமாக இருந்தவர் பிரபல அமெரிக்க இயற் பியல் விஞ்ஞானி ப்ரிட்ஜாப் காப்ரா (Fritjof Capra).

இந்தப் பிரபஞ்சத்தில் உப அணுக்கள் இடை விடாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன (Cosmic Dance). இந்த ‘ஆட்ட’த்தின் ஆட்டத்தைத்தான் நடராஜரின் நடனம் குறியீட்டு வடிவத்தில் உணர்த்து கிறது என்பதை காப்ரா அறிந்து கொண்டார்.

செர்ன் ஆய்வுக் கூடத்தில் நடராஜர் சிலை நிர்மாணிக்க இவரே காரணகர்த்தாவாக இருந் தார். இந்தச் சிலையை இந்திய அரசுதான் அனுப்பிவைத்தது.

நடராஜர் சிலையின் பீடத்தில், ‘இயற்பியலின் தாவோ’ என்ற காப்ராவின் பிரபலமான புத்தகத் தில் இருந்து எடுத்த சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

அதில், ‘பிரபஞ்ஞத்தில் உப அணுக்களின் நடனத்தையே சிவபெருமானுடைய நடனம் உணர்த்துகிறது’ என்ற கருத்து காணப்படுகிறது.

நடராஜர் சிலை தமிழர்களுடை கலைவண்ணம்!

அணுவே பிரபஞ்சத்தின் அடிப்படை. அதைப் பிளக்க முடியாது என்று விஞ்ஞான உலகம் உறுதியாக நம்பிய காலத்திலேயே அணுவைப் பிளக்கலாம், அணுவுக்கும் மூலமான ஒரு பொருள் உண்டு என்று இந்திய ஞானியர் நெடுங்காலத்துக்கு முன்பே அறிவித்தனர்.

‘அணுவின் அணுவினை ஆதிப் பிரானை

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவின் அணுவினை அணுக வில்லார்க்கு

அணுவின் அணுவினை அணுகலு மாமே!’

இது திருமூலரின் திருமந்திரப் பாடல்.

அணுவுக்கும் அணுவாக இருப்பவன் இறை வன். அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் ஆதிமூலம். அணுவின் அணுவான உப அணு என்று கூறப்படுவதைக் கூட பிளக்கலாம். அதை ஆயிரம் கூறாகப் பிரித்துப் பார்த்தால் வரும் அணுவை யார் அணுகுகிறார்களோ, அவர்கள் மூல அணுவுக்கும் அணுவான இறைவனை அணுக முடியும் என்பது பாடலின் கருத்து.

விஞ்ஞானம் எங்கே நின்றுவிடுகிறதோ, அதற் கும் அப்பால் செல்லக்கூடியது மெய்ஞ்ஞானம்.

விஞ்ஞானம் எதை ஆதிமூலம் என்று கண்டுபிடித்தாலும் அது பவுதீக ஆதிமூலமே. அணுவுக்கும் அணுவாக இருப்பவனே இறைவன் என்று கூறுகிறார் திருமூலர்.

‘பரத்திற்கெல்லாம் பரம் நீ’

என்கிறார் கம்பர்.

‘நீயாதி பரம்பரமும்’

ஹிக்ஸ் போஸான் எப்படி உருவாயிற்று என்று விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை; சொல்ல முடியாது. அவர்கள் பார்வை பவுதீக எல்லைக்குள் மட்டுமே.

‘‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’’ என்ற இரணியனின் கேள்விக்கு அவன் மகன் பிரகலாதன், ‘‘அவன் எங்கும் இருப்பான்!’’ என்கிறான்.

‘‘இந்தத் தூணில் இருக்கிறானா?’’ என்று இரணியன் கேட்கிறான். அதற்குப் பிரகலாதன்,

‘சாணிலும் ஊன்ஓர் தன்மை

அணுவினைச் சதகூ றிட்ட

கோணினும் உளன்’

என்கிறான்.

கம்பன் அணுவை நூறாகப் பிளக்கலாம் என்று கூறுவதோடு அப்படிப் பிளந்து வரும் உப அணுவிலும் இறைவன் இருப்பான் என்கிறான். அதோடு இந்த மூல அணுவுக் குக் ‘கோண்’ என்று ஒரு புதிய கலைச் சொல்லால் பெயர் சூட்டவும் செய்கிறான்.

அணுவினும் சிறிய உப அணுவுக்குப் பரமாணு என்று பெயர் சூட்டியவர்கள் சமணர்கள்.

சமணர் நாத்திகர். ‘பரம்’ என்ற சொல் இறைவனையும் குறிக்கும். இங்கும் அவர் கள் அறியாமலே மூல அணுவில் இறைவன் பரமன் வந்து அமர்ந்துவிட்டான்.

‘God Particle’-ன் மொழிபெயர்ப்பே ‘பரமாணு’.

கி.மு.600-ம் ஆண்டுக் காலகட்டத்தி லேயே காஸ்யபர் முனிவர், ‘பிளக்கப்பட முடியாத இறுதி உப அணுவே பராமாணு’ என்றார்.

மத் பாகவத மகாபுராணத்தில், முனிவர் மைத்ரேயர், சடப் பொருளின் மிக மிகச் சிறிய துகள் பரமாணு என்று கூறிய கருத்து இடம்பெற்றுள்ளது.

வைசேஷிகர் ‘பரமாணுக்களே சடப் பொருளின் மிகச் சிறிய பகுதி. அதற்குள் வேறு எந்தப் பகுதிகளும் இல்லை. அவை படைக்கப்பட்டவை அல்ல. அவற்றை அழிக்கவும் முடியாது. ஆகவே நிரந்தரமானவை. இக்காரணங்களாலேயே அவை பரிமாணமற்றவை. இடத்தைப் பிடிக்காதவை. உள்ளும் புறமும் அற்றவை என்று கூடுதல் தகவல் தருகின்றனர். பரமாணுக்கள் பல வகையானவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இவை எல்லாம் விஞ்ஞானிகளுக்கு இதுவரை தெரியாத விஷயங்கள்.

இந்த மெய்ஞ்ஞானியர்களின் கருத்துகள் வியப்பை ஊட்டுகின்றன.

பன்னெடுங்காலம் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மைகளை, மெய்ஞ்ஞானிகள் பன்னெடுங்காலத்துக்கு முன்பே எப்படிக் கூற முடிகிறது?

பிரபஞ்ச ரகசியங்களை மெய்ஞ்ஞானியர்க்கு இறைவன் உணர்த்துகிறான். அதனால்தான் விஞ்ஞானம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கும் உண்மைகளை நெடுங்காலத்துக்கு முன்பே மெய்ஞ்ஞானியர் கூறிவிடுகின்றனர்.

விஞ்ஞானம் மலையுச்சியை அடையக் கஷ்டப்பட்டுப் படியேறிச் செல்கிறது. மெய்ஞ்ஞானமோ ஒளிக் கிரணம் போல் பாய்ந்து மலையுச்சியை அடைந்துவிடுகிறது.

மெய்ஞ்ஞானம் பரமாணுவைக் கண்டால் அதில் பரமனைக் கண்டு பரமானந்தம் அடையும்.

விஞ்ஞானம் பரமாணுவைக் கண்டுபிடித்திருக் கிறது. இனி, அதை வைத்து உலகத்தை எப்படி அழிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யும்.

இதுதான் மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம்.

- சந்திப்போம்…

kaviko_2477980a.jpg தொடரும்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/article7437537.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புதுத்தி குறுகத் தறித்த குறள்" ... ஔவையார்....!! 

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 2: மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
ஓவியம்: இளஞ்செழியன்
ஓவியம்: இளஞ்செழியன்

(சென்ற வாரக் கட்டுரையின் தொடர்ச்சி)

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுக் கொன்று எதிரானவை என்றே பலர் கருதுகின்றனர். அது தவறு.

உண்மையில் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று உதவுபவை.

மெய்ஞ்ஞானம் அகத்தை விளக்குகிறது. விஞ்ஞானம் புறத்தை ஆராய்கிறது.

மெய்ஞ்ஞானம் படைத்தவனை விளக்குகிறது. விஞ்ஞானம் படைப்புகளை விளக்குகிறது.

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் கணவனும் மனைவியும் போன்றவை.

ஒரு காலத்தில் விஞ்ஞானிகள், மெய்ஞ் ஞானத்தை வெறுங்கற்பனை என்று ஏளனம் செய்து வந்தனர்.

இப்போது மெய்ஞ்ஞானம் ‘நாம் அறியாத, அறிய முடியாத பிரபஞ்ச ரகசியங்களை விளக்கு கிறது. நாம் அதனிடமிருந்து கற்க வேண்டியிருக் கிறது’ என்று கூறுகிறார்கள். நடராஜர் வடிவத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நடராஜர் வடிவம் குறியீடாக அமைக்கப் பட்டிருக்கிறது. அக்குறியீடு ஆழ்ந்த பிரபஞ்ச ரகசியங்களை உணர்த்துகிறது.

கலைகளில் முதலாவதாகத் தோன்றிய கலை தான் நடனம். அது மந்திர வித்தையின் பழமை யான வடிவம். நடனம் பரவசத்தை உண்டாக்கு கிறது. அது தன்னை அறியவும், தெய்வீகத்தை அனுபவிக்கவும் உதவுகிறது. இறுதியில் தெய்வீக சாரத்தில் கலக்கச் செய்கிறது.

இந்தியாவில் அது வழிபாட்டு முறைகளில் ஒன்றாகவும் மதிக்கப்படுகிறது.

நடராஜரின் பிரபஞ்ச நடனம் (Cosmic Dance) இயக்கம், இயக்கமின்மை என்ற இரு தெய்வீக சக்தி கள் கலந்து ஆடுவதைக் குறிக்கும் குறியீடாகும்.

நடராஜர் ஒளிவட்டத்துக்குள் ஆடுகிறார். இந்த ஒளிவட்டம் படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய நெருப்பைக் குறிக்கும். இது பிரபஞ்சத்தையும் குறிக்கும்.

நடராஜர் மேல் வலக்கரத்தில் டமருகத்தை (உடுக்கை) ஏந்தியிருக்கிறார். டமருகம் ஓசையின் குறியீடு. இது ஓசையில் இருந்து பிரபஞ்சம் தோன் றியது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. இது கால ஓட்டத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

நடராஜரின் மேல் இடக்கரம் நெருப்பை ஏந்தியிருக்கிறது. இது அழிவின் குறியீடு.

இரண்டாவது வலக்கரம் அபய முத்திரை யைக் காட்டுகிறது. இது தர்மத்தைப் பின்பற்று கிறவர்களை தீமையில் இருந்தும், அஞ்ஞானத்தில் இருந்தும் இறைவன் காப்பாற்றுவான் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் இடக்கரம் தூக்கிய காலைச் சுட்டுகிறது. இது மோட்சத்தைக் குறிக்கிறது. மேலும், இக்கரம் யானையின் தும்பிக்கையைப் போல் அமைந்திருக்கிறது. இது காட்டில் யானை வழிநடத்திச் செல்வது போல் இறைவன் அறியாமைக் காட்டில் வழிநடத்திச் செல்வதை உணர்த்துகிறது.

நடராஜர் முயலகன் என்ற குள்ளனை மிதித்துக் கொண்டிருக்கிறார். முயலகன் அறியாமையின் குறீயீடு. இது இறைவன் அறியாமையை வெற்றி கொண்டதைக் குறிக்கும். முயலகனைத் தீமையின் குறியீடாகவும் கொள்ளலாம்.

நடராஜர் உடலைச் சுற்றியிருக்கும் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கிறது.

நடராஜரின் அவிழ்ந்து நாலா பக்கமும் ஆடும் சடை பால்வீதியை, நாள்களைக் கோள்களை அடித்துச் சிதற வைப்பதைக் குறிக்கும். ஊழிக் காலத்தில் இவையெல்லாம் அழிக்கப்படும் என்பது பொருள்.

நடராஜரின் நடனம் இரு வகைப்படும். ஒன்று, ஆனந்தத் தாண்டவம். இது, படைப்புச் செயல். மற் றொன்று ருத்ர தாண்டவம். இது, அழிவுச் செயல்.

நடராஜ நடனம் இறைவனின் ஐம்பெருஞ் செயல்களை (பஞ்ச கிரியா) குறிக்கிறது. அவை 1. ஆக்கல் 2. காத்தல் 3. அழித்தல், 4. மறைத்தல் 5. அருளல்.

இந்நடனம் காலச் சுழற்சியையும் குறிக்கிறது. பிரபஞ்ச உருவாக்கத்துக்குக் காரணமான ஹிக்ஸ் போஸானே, அதன் அழிவுக்கும் காரணமாக இருக்கும் என்று பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார். இதை மெய்ஞ்ஞானம் என்றோ சொல்லிவிட்டது.

சிதம்பரத்தில் நடராஜர் சிலை அமைக்கப் பட்டிருப்பதிலும் பொருள் உண்டு. ‘சித்’ என்றால் மனம். அம்பரம் என்றால் ஆகாயம்.

இறைவன் மனம் என்ற ஆகாயத்தில் ஆடிக் கொண்டிருக்கிறான் என்று பொருள்.

யாருடைய மனம் ஆகாயம் போல் விரிந்து பரந் திருக்கிறதோ, அங்கே இறைவனுடைய நடனம் நிகழும்.

இறைவனுடைய நடனம் ஒரே நேரத்தில் மனத் திலும் நடக்கிறது, ஆகாயத்திலும் நடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

நடராஜர் சிற்றம்பலத்தில் ஆடுகிறார், பேரம் பலத்திலும் ஆடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

மனம்தான் சிற்றம்பலம். ஆகாயம்தான் பேரம்பலம் என்று நான் கருதுகிறேன்.

நடராஜர் நடனத்தில் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், கலை மூன்றும் அற்புதமாக, அழகாகச் சங்கமம் ஆகியிருக்கிறது.

இந்தச் சிலையை ஒரு சாதாரணச் சிற்பி உரு வாக்கியிருக்க முடியாது. மெய்ஞ்ஞானத்திலும், கலையிலும், குறியீட்டிலும் வல்லவரான யாரோ ஒரு ஞானிதான் இதை உருவாக்கியிருக்க வேண்டும்.

சிவபெருமான் சுடுகாட்டில் ஆடுவதாகக் கூறப்படுகிறது. அவர் சாம்பல் மீது ஆடுகிறார் என்பதே இங்கே குறிக்கப்படும் பொருள்.

ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்த பிறகு, எது எஞ்சுகிறதோ அதைக் குறிப்பது சாம்பல்.

படைப்புக்குக் காரணமாக, ஆதிமூலமாக இருந்த பரமாணுவே பிரபஞ்சம் அழிந்த பிறகும் எஞ்சியிருக்கும். அதில், இறைவன் இயங்கிக் கொண்டிருப்பான் என்பதையே சாம்பல் குறிப்பிடுகிறது என்பது என் கருத்து.

இதே கருத்தை வைணவமும் சொல்கிறது.

விஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று வைணவம் கூறுகிறது.

சமஸ்கிருதத்தில் ‘சிஸ்’ என்றால் ‘எது எஞ்சுகிறதோ அது’ என்று பொருள்.

இதிலிருந்து உருவான சொல்தான் ‘சேஷம்’.

பிரளயத்தில் எல்லாம் அழிந்த பின் எது எஞ்சுகிறதோ, அதில் இறைவன் உறங்கிக் கொண்டிருப்பான் என்பது பொருள்.

இங்கே ‘உறங்கிக் கொண்டிருப் பான்’ என்றால் மனிதர் மாதிரி உறங்கிக் கொண்டிருப்பான் என்று பொருள் அல்ல.

இதை ‘அறிதுயில்’ என்று வைண வம் கூறுகிறது. அதாவது, இறை வன் எல்லாம் அறிந்தபடியே உறங்குகிறான் என்று பொருள்.

பிரளயத்தில் எல்லாம் அழிந்து விடும். எனவே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற வேலைகள் இல்லாத தால் இறைவன் இயங்காமல் இருக்கிறான் என்பதையே உறக்கம் குறிப்பிடுகிறது.

அணுவுக்குள் எலெக்ட்ரான் இடை விடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது. நியூட்ரான் அசைவற்று அமைதியாக இருக்கிறது.

நடராஜரை எலெக்ட்ரானின் குறியீடாகவும், விஷ்ணுவை நீயூட்ரானின் குறியீடாகவும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

பிரபஞ்சத்தை உருவாக்கியது ஹிக்ஸ் போஸான் பரமாணு என்று விஞ்ஞானம் கூறு கிறது. அந்தப் பரமாணுவையே உருவாக்கியது பரம்பொருள். அதாவது, இறைவன் என்று மெய்ஞ்ஞானம் கூறுகிறது.

‘பூமியில் உள்ள யாவும் அழிந்தே

போகும். மிகுந்த கண்ணியமும்

பெருமையும் உடைய உமது

இறைவனின் திருமுகமே என்

றென்றும் நிலைத்திருக்கும்.’

(55.26,27)

என்று திருக்குரான் கூறுகிறது.

இங்கு திருமுகம் என்பது இறைவனுடைய மூலச் சத்தைக் (தாத்) குறிக்கும்.

சைவமும், வைணவமும் கூறும் அதே கருத் தையே இஸ்லாமும் கூறுகிறது. இதில் வியப்பேதும் இல்லை.

உண்மை ஒன்றே! அதை வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு குறியீட்டு மொழியில் சொல்கின்றன.

‘ஏகம் ஸத்; விப்ரா பஹூதா வதந்தி’ என்று ரிக் வேதம் கூறுகிறது.

‘உண்மை ஒன்றே; அதை ஞானியர் பல்வேறு விதமாகச் சொல்கிறார்கள்’ என்பது இதன் பொருள்.

சுய அறிவற்ற பரமாணு இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைத்தது என்று விஞ்ஞானம் கூறுகிறது.

சகல அறிவும், சகல வல்லமையும் உடைய பரம் பொருள்தான் (இறைவன்) இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று மெய்ஞ்ஞானம் கூறுகிறது.

இதுதான் விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத் துக்கும் உள்ள வேறுபாடு.

- இன்னும் முத்துக் குளிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-2-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7463882.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 3: குரு தட்சணை!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
ஓவியம்: இளஞ்செழியன்
ஓவியம்: இளஞ்செழியன்

முகலாயப் பேரரசர் அக்பரும் அவருடைய அரசவைக் கவிஞர் ஷைகு பைஸியும் (Faizi) அரண்மனைப் பூவனத்தில் உலவிக் கொண்டிருந்தனர்.

அக்பர்: பைஸி! இதோ, இந்தப் பூக்களைப் பாருங்கள். வடிவம், வண்ணம், வாசம் வேறுபட்டா லும் இவை சுரக்கும் தேன் ஒன்றுதான். இதைப் போலவே பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றின் சாரம் ஒன்றுதான்.

பைஸி: நன்றாகச் சொன்னீர்கள்!

அக்பர்: ஆனால், இந்த மதவாதிகள் தங்கள் பூவில்தான் தேன் இருக்கிறது. மற்றப் பூக்களில் தேன் இல்லை என்கிறார்கள்.

பைஸி: எல்லாப் பூக்களிலும் தேன் இருக்கிறது என்பது தேனீக்களுக்குத்தான் தெரியும். அதைப் போல் எல்லா மதங்களின் சாரமும் ஒன்றுதான் என்பது ஞானிக்குத்தான் தெரியும்.

அக்பர்: அருமையாகச் சொன்னீர்கள். ‘மாலிக்குஷ் ஷூரா’ (கவிக்கோ) ஆயிற்றே.

பைஸி: மாமன்னரே! அந்தப் பட்டத்தை எனக்கு வழங்கி என்னைக் கவுரவித்ததே தாங்கள்தானே!

அக்பர்: நான் வெளியிட்ட தங்க நாணயத்துக்கு, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தீர்கள்.

பைஸி: ஆமாம், அதில் ‘குகைகளில் தங்கம் விளைவது சூரிய நோக்கால். அந்தத் தங்கம் கண்ணியம் பெறுவது அக்பரின் முத்திரையால்’ என்று எழுதியிருந்தேன்.

அக்பர்: உண்மையில் என் முத்திரையால் அல்ல; உங்கள் கவிதையால்தான் அந்த நாணயம் மதிப்பைப் பெற்றது.

பைஸி: மாமன்னரே! நானோர் இந்தியத் தந்தை, பாரஸீகப் புல்புலோடு சேர்ந்து பாடுகிறேன். என்னை உங்கள் தோளில் ஏற்றி, அளவுக்கு அதிகமாகப் புகழ்கிறீர்கள்.

அக்பர்: உங்களுடைய இந்தப் பணிவுதான் உங்களை உயர்த்தியிருக்கிறது. ‘வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டுமென்றால் பணிவுடையவனாக இரு. கரும்பில் மண்ணை ஒட்டிய பாகமே, அதிக மதுரமானது’ என்று எழுதிய கவிஞரல்லவா நீங்கள்.

பைஸி: நன்றி, மாமன்னரே!

அக்பர்: பைஸி! எல்லாப் பூக்களிலும் திரட்டிய தேனை, தேனீ ஒரே கூட்டில் நிரப்புவது போல, எல்லா மதங்களின் சாரத்தையும் திரட்டி ஒரு புதிய சமயத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன். அதற்கு ‘தீனே இலாஹி’ (இறைவனுடைய மார்க்கம்) என்று பெயர் சூட்ட விரும்புகிறேன்.

பைஸி: அற்புதமான யோசனை. தேன் பல நோய்களை நீக்கும் மருந்து. உங்கள் மார்க்கம் மதவாதிகளின் சர்ச்சைகள், சண்டைகளை நீக்கிவிடும். தேனை எல்லோரும் விரும்புவர். அதைப் போலவே உங்கள் மார்க்கத்தையும் எல்லோரும் விரும்புவர்.

அக்பர்: ஆனால், அதில் ஒரு சிக்கல்.

பைஸி: என்ன மன்னரே?

அக்பர்: எல்லா மதங்களின் கொள்கைகளையும் திரட்டிவிட்டேன். இந்து மத வேத ரகசியங்களை மட்டும் அறியமுடியவில்லை.

பைஸி: ஏன் மன்னரே?

அக்பர்: மறை மறையென்று மறைக்கிறார்கள். அதுவும் எனக்குச் சொல்லக்கூடாதாம்.

பைஸி: வேதம் இறைவனுடைய வார்த்தை என்றால் அது மனிதகுலம் முழுமைக் கும் சொந்தமல்லவா? சூரிய ஒளியையும், காற்றையும் யாராவது தனியாக அடைத்து வைப்பார்களா?

அக்பர்: எல்லாத் தோட்டத்துப் பூக்களில் இருந்தும் தேன் திரட்டிவிட்டேன். ஒரு தோட்டம் மட்டும் முள் வேலியால் என்னைத் தடுக்கிறது. அந்த முள் வேலியைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்து தேன் எடுக்கத் தேனீயால்தான் முடியும். அந்தத் தேனீ நீங்கள்தான்.

பைஸி: நானா?

அக்பர்: ஆமாம். நீங்கள்தான்! உங்களுக்கு ஏற்கெனவே சமஸ்கிருதம் தெரியும். சமஸ்கிருதத் தில் புகழ்பெற்ற கணித நூலான ‘லீலாவதி’யைப் பாரஸீகத்தில் மொழிபெயர்த்தவர் நீங்கள். மாபெரும் இதிகாசமாகிய மகாபாரதத்தையும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.

பைஸி: அது வேறு விஷயம். வேத ரகசியங் களை உங்களாலேயே அறிய முடியாதபோது நான் மட்டும் எப்படி அறிய முடியும்?

அக்பர்: நீங்கள் பிராமணராகிறீர்கள்!

பைஸி: என்ன சொல்கிறீர்கள் மாமன்னரே? அது எப்படி சாத்தியம்?

அக்பர்: நீங்கள் பிராமணக் கோலம் தரிக்கிறீர் கள். உங்களை அறியாத சற்றுத் தொலைவான ஊருக்குச் செல்கிறீர்கள். அங்கே இருக்கும் வேத விற்பன்னரிடம் சீடராகச் சேர்கிறீர்கள். வேத ரகசியங்களைக் கற்று வருகிறீர்கள்.

பைஸி: இது திருட்டில்லையா?

அக்பர்: நீங்கள் மருத்துவம் கற்றவர். ஏழை களுக்கு இலவசமாக மருத்துவம் செய்பவர். இதுவும் மருத்துவம்தான். அறிவில் ஏழையாக இருப்பவர்களுக்கு, மருந்துக்காகச் செடியில் இருந்து இலை பறிப்பது திருட்டா? பைஸி… எனக்கு உதவுங்கள்!

பைஸி: நீங்கள் ஆணையிட வேண்டிய மாமன்னர். வேண்டுகோள் விடுக்கின்றீர்களே… இலை பறிக்கச் செல்கிறேன் மன்னரே!

பைஸி குடுமி வைத்தார். பூணூல் தரித்தார். வேத விற்பன்னரைத் தேடிப் புறப்பட்டார்.

தில்லியில்

இருந்து நெடுந்தொலைவில் ஓர் அழகான சிற்றூர். அங்கே அவர் தேடிய குரு கிடைத்தார். அவரிடம் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டினார்.

பைஸியின் தோற்றப் பொலிவையும், கண் களில் பிரகாசித்த தீட்சண்யத்தையும், பணிவையும் பார்த்து, ‘இவருக்கு வேதப் பொக்கிஷத்தைக் கற்றுக் கொடுப்பது தகும்’ என்று எண்ணி அவரைச் சீடராக ஏற்றுக்கொண்டார் பண்டிதர்.

கடுந்தாகம் கொண்டவன் நீர் பருகுவதுபோல் பைஸி கல்வி கற்றார்.

அங்கே ஒரு பிரச்சினை உண்டாயிற்று. குருவுக்கு ஓர் அழகான புதல்வி.

அவள் பைஸியின் அழகையும் அறிவையும் பார்த்து அவரைக் காதலிக்கத் தொடங்கினாள்.

பக்கத்தில் நல்ல கொழுகொம்பு கிடைத்தால் பருவக் கொடி படராமல் இருக்குமா?

பைஸியும் அவளைக் காதலித்தார்.

காந்தம் ஈர்த்தால் இரும்பு ஈர்க்கப்படாமல் இருக்குமா?

குருவுக்கும் இந்தக் காதல் தெரியாமல் இல்லை.

என்னதான் புதர்களுக்குள் ரகசியமாக மலர்ந்தாலும் பூவின் வாசம் வெளியில் வராமல் இருக்குமா?

‘என்னைப் போல் மகா பண்டிதனாகி வரு கிறான். அகமும் புறமும் அழகாக இருக்கிறான். என் மகளுக்கு இவனை விடச் சிறந்த கணவன் கிடைக்கப் போவதில்லை’ என்று நினைத்த குரு, பைஸியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

பைஸிக்கோ மகிழ்ச்சியும் துயரமும் சேர்ந்து உண்டாயிற்று. அவர் இந்த விஷயத்தில் குருவை ஏமாற்ற விரும்பவில்லை.

அவர் தம்மைப் பற்றிய ரகசியத்தைக் குருவிடம் வெளிப்படுத்தினார்.

பண்டிதர் பரம வைதீகர்; சிற்றூரில் வசிப்பவர். அவரால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

ஒரு கத்தியை எடுத்துத் தம்மைக் குத்திக்கொள்ள முயன்றார்.

பைஸி அவரைத் தடுத்தார். தம்மை மன்னிக்கும்படி மன்றாடினார். தம் குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

அழுது புலம்பி அடங்கிய பண்டிதர், “வேதங் களை நீ எந்த மொழியிலும் பெயர்க்கக்கூடாது. இந்து தர்மத்தின் ரகசியங்களை உன் வாயாலும் வெளியிடக் கூடாது. இதுதான் நீ எனக்குத் தர வேண்டிய குருதட்சணை’’ என்றார்.

பைஸி கட்டை விரலைக் காணிக்கையாக்கிய ஏகலைவன் போலானார். குருவின் ஆணைப்படி நடப்பதாக வாக்குறுதியளித்தார்.

பண்டிதரின் மகள் அவரைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள். அந்தக் கண்ணீர் அவளுடைய துயரத்தைச் சொல்லும் வார்த்தைகளாக இருந்தன.

இரண்டு பெரும் இழப்புகள். பைஸியின் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது.

பைஸி தில்லி திரும்பினார். அக்பரிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்.

அவர் குருவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இறுதிவரை மீறவே இல்லை.

- இன்னும் முத்துக் குளிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88/article7488728.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 4: பூக்களைப் பறியுங்கள்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
om_2502861f.jpg
 

மறைந்த மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரு டைய மாளிகையில் அவரைச் சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்புக் கிடைத்தது.

நான் அவரைப் பாராட்ட வாய் திறக்குமுன் ‘‘ஒரு பெரிய கவிஞரைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

நான் வாயடைத்துப் போனேன். எவ்வளவு பெரிய மனிதர்! பேசிக்கொண்டேயிருந்தோம். திடீரென்று ‘‘நீங்கர் கவிஞர். உங்களுக்கு முகல் பூந்தோட்டம் பார்க்கப் பிடிக்கும். வாருங்கள், காட்டுகிறேன்’’ என்று கூறி எழுந்தார்.

தோட்டத்துக்குப் போகும் பெரிய வாசற் கதவை அவரே தள்ளித் திறந்தார்.

நிலா ஒளியில் அந்த வண்ண மலர்த் தோட்டம் மண அலங்காரத்தோடு சாந்தி முகூர்த்த அறையில் படுத்திருக்கும் மணப்பெண் போல் இருந்தது. பேசிக்கொண்டே நடந்தோம். ஓரிடம் வந்ததும் நின்றார்.

‘‘இந்த இடத்தில் ஒரு மல்லிகைச் செடி நட்டு வளர்த்தேன். ஒருநாள் நடைப் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த இடத்துக்கு வந்தேன். மல்லிகைச் செடி சாய்ந்து தரையில் கிடந்தது. நல்லவேளை மிதிக்கத் தெரிந்தேன். மனம் உடைந்துபோனது. வேறு பாதையில் நடைப் பயிற்சி மேற்கொண்டேன்’’ என்றார்.

‘‘முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி இந்தக் குடியரசுத் தலைவர் மாளிகையில் மீண்டும் பிறந்திருக்கிறான்’’ என்றேன்.

‘‘நான் பூக்களைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்’’ என்றார்.

‘‘கேட்க ஆவலாக இருக்கிறேன்’’ என்றேன்.

அவர் கூறினார்:

பிள்ளைப் பூ அம்மாப் பூவிடம் கேட்டது:

‘அம்மா! நாம் ஏன் மலர்கிறோம்?’

அம்மாப் பூ சொன்னது:

‘அதோ பார், மான் துள்ளுகிறது, மயில் ஆடுகிறது

அதுபோலவே நாம் மலர்கிறோம்.

பிரபஞ்ச இயக்கத்திற்கு இவை தேவை.

மனிதர்கள் நம்மைப் பார்த்து

மென்மையடைய வேண்டும் என்பதற்காகவே

நாம் மலர்கிறோம்’

அடடா! எத்தனை அற்புதமான கவிதை!

ஒரு விஞ்ஞானிக்குள் ஒரு மெய்ஞ்ஞானக் கவிஞனும் ஒளிந்திருக்கிறான்.

இயற்கைப் படைப்பு ஒவ்வொன்றும் மனிதனுக்குப் பாடம் போதிக்கும் புத்தகங்கள்.

பூக்களோ வேதங்கள். இறைவன் ஆன்மாக் களுக்கு எழுதி அனுப்பும் காதல் கடிதங்கள்.

மலர் மங்கலமானது; மகத்துவம் மிக்கது; தெய்வீகமானது. அதனால்தான் எல்லாச் சமயங்களிலும் அதற்கு முக்கியமான இடம் தரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஹிந்து மதத்தில் அதற்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.

‘பூசை’ என்பதே ‘பூவால் செய்யப்படுவது’ என்ற பொருளுடையது. இது தமிழர் வழிபாட்டு முறை.

ஹிந்து மதம் தாமரையைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. அதைப் புனித மலர் என்கிறது.

தாமரை அழகு, வளம், விளைச்சல், நிரந்தரம், தூய்மை, தெய்வீகம் ஆகியவற்றுக்குக் குறியீடா கத் திகழ்கிறது.

சேற்றில் பிறந்த செந்தாமரை, அஞ்ஞானச் சேற்றில் புரளும் ஆன்மா உயர்ந்து கறையிலா தெய்வீக அழகை அடைவதற்கான ஆன்மிக உருவகமாகவே கருதப்படுகிறது.

‘எவன் அனைத்துக் கர்மங்களையும் பரமாத்மா விடம் அர்ப்பணம் செய்து, உலகியல் பற்றைத் துறந்து, கர்மங்களைச் செய்கிறானோ, அவன் தண்ணீரில் தாமரை இலை ஒட்டாமல் இருப்பது போல், பாவத்தினால் பாதிக்கப்படுவதில்லை. (5.10)’ - என்கிறது பகவத் கீதை.

தன்னுணர்வில் உயர்ந்த நிலையை அடைய முயல்பவர்கள் ஹடயோகத்தில் பத்மாசனத்தில் அமர்கிறார்கள். (பத்மம்: தாமரை)

மனிதனுடைய நுண்ணுடம்பில் அமைந்திருக் கும் ஏழு சக்கரங்களில் உச்சியில் இருக்கும் சஹஸ்ரஹாரம் தாமரைப் பூ வடிவில் காட்டப்படுகிறது.

தாமரையைப் பிரபஞ்ச மையத்தின் குறியீடாகச் காண்கிறது ஹிந்து மதம்.

விஷ்ணுவின் உந்தியில் ஒரு கமலம் மலர்ந்தது. அதன் நடுவே பிரம்மன் வீற்றிருக்கிறார் என்ற தொன்மம், தாமரையைப் படைப்புக் குறியீடாகச் சித்திரிக்கிறது.

ஒரு பொற்றாமரையில் உலகம் பிறந்ததாகப் பத்ம புராணம் கூறுகிறது. கமலயுகம் (பத்ம கல்பம்) என்ற பெயரில் ஒரு யுகமே இருந்தது என்றும் அது குறிப்பிடுகிறது.

பிரஜாபதி (மனித உற்பத்தியின் ஆதிமூலம்) பிரபஞ்சத்தைப் படைக்க விரும்பினார். அப்போது அது நீர்ம நிலையில் இருந்தது. ஜீவசத்து பிரபஞ்சத்தை வெளிப்படுத்தும் நேரத்தில் பிரபஞ்ச நீர் ஓர் ஆயிரம் இதழ்த் தங்கத் தாமரையை உண்டாக்கியது. இத்தாமரை பிரபஞ்சத்தின் கர்ப்ப வாசலாகக் கருதப்படுகிறது.

ஹிந்து மத நூல்கள் அந்த நீர்மம் ஆதி மெய்ம் மையையும் (பரம் பொருள்) பிரபஞ்ச கமலம் உற்பத்தியையும் குறிப்பதாகக் கூறுகின்றன.

ஹிந்து மதத் தெய்வங்களில் திருமகள், செந் தாமரை மலரில் வீற்றிருப்பதாகவும், கலைமகள் வெண்டாமரை மலரில் வீற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரம்மன், விஷ்ணு, சிவன், பார்வதி, துர்கா, அக்கினி, கணேசர், ராமர், சூரியன் ஆகியோரும் தாமரையை இருப்பிடமாகக் கொண்டவர்களாகத் தொன்மங்கள் வருணிக்கின்றன.

இயத்தில் இருக்கும் கமலத்தில் ஆன்மா ஒளி வடிவில் காட்சி தருகிறது என்று மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பெளத்த மதமும் தாமரைக்கு முக்கிய இடம் தருகிறது. மகாயான பெளத்தம் எல்லா ஆன்மாக்களும் ஒரு தாமரையில் இருந்து தோன்றின என்று கூறுகிறது.

கெளதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஒரு பழைய நூல் ‘‘சேற்றில் பிறந்தாலும் அதனோடு ஒட்டாமல் கறையற்று நிற்கும் தாமரையைப் போன்றது சிறந்த மனிதர்களின் ஆன்மா’’ என்று விளக்குகிறது.

‘ஓம் மணி பத்மே ஹும்’ என்ற பெளத்த மந்திரத்துக்குத் ‘தாமரைப் பூவில் இருக்கும் ஆபரணமே’ என்று பொருள். இது பிரபஞ்சம் என்ற தாமரையில் வாழும் மனிதனுடைய தெய்வீகத்தைக் குறிக்கும்.

இதனுடைய உட்பொருள் ‘உன்னில் நான், என்னில் நீ’ என்பதாகும். இது ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது.

தாமரை இதழ்கள் இரவில் குவிகின்றன. நீருக் குள் மூழ்குகின்றன. காலையில் எழுந்து இதழ்களைத் திறக்கின்றன. எனவே தாமரைச் சூரியனைக் குறிக்கிறது. அதனால் படைப்பையும், மறுபிறப்பையும் குறிக்கிறது என்று புராதன எகிப்திய ஆன்ம போதனைகள் விவரிக்கின்றன.

மனித இதயம் இதழ் விரிக்காத தாமரையைப் போன்றது என்றும் புத்தத் தன்மை (ஆன்மத் தன்மை) வளர்ச்சி அடையும்போது இதயத் தாமரை மலர்கிறது என்றும் பெளத்த ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. அதனால்தான் புத்தர் தாமரை மலரில் அமர்ந்திருப்பதுபோல் சித்திரிக்கப்படுகிறார்.

சமண மதம், ‘‘கடுந்தவம் செய்து தீர்த்தங்கர ராக உயர்ந்த அருகருக்கு இந்திரன் சமவசரணம் என்ற புஷ்பக விமானத்தை அளிப்பான்; அவருடைய காலடியில் ஒரு தாமரைப் பூவை வைப்பான்’’ என்று கூறுகிறது.

இதனையே திருவள்ளுவர் ‘மலர்மிசை ஏகினான்’ என்று குறிப்பிடுகிறார்.

தாயுமானவர் ஒருநாள் பூசைக்குப் பூப்பறிக்கப் பூங்காவுக்குச் சென்றார். அங்கே அவர் பூவில் இறைவனைத் தரிசித்தார். ஞானம் பிறந்தது.

‘‘பரம்பொருளே! நீ பூவில் இருப்பது தெரியாமல் உன்னையே பறித்து உன் சிலை மீது போட்டேனே. நீ எல்லா இடங்களிலும் இருப்பதை உணராமல் ஒரு வடிவத்தில் உன்னை வணங்கினேன். இனி, இத்தகைய பூசையைச் செய்ய மாட்டேன். (‘பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே, பாவித்து இறைஞ்ச ஆங்கே, பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப் பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்’.)

மன்மதனின் அம்புகள் மலர்கள். அவன் இளையவர்களின் இதயங்களில் மலர்களாலேயே காயம் செய்கிறான்.

பெண், ஆண்கள் பலரோடு உறவுகொண்டால் அவளை விலைமகள் என்கிறார்கள். பூவோ பல வண்டுகளோடு உறவுகொள்கிறது. ஆனால், அது தவறானது அல்ல. அதுதான் பூவின் கற்பு.

பெண்ணைப் பூ என்கிறார்கள். பெண்ணையும் பூவையும் புரிந்துகொள்ள முடியாது; அனுபவிக் கத்தான் முடியும்.

‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ என்கிறார்கள். ஆனால், பூக்கள் நம்மைப் பறித்துவிடுகின்றன.

அன்பர்களே! நீங்கள் பூவைத் தியானம் செய்யுங்கள். ஞானியாகிவிடுவீர்கள்!

- இன்னும் முத்துக் குளிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7515642.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 5: தமிழினமே ஆதியினம்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
ஓவியம்: இளஞ்செழியன்
ஓவியம்: இளஞ்செழியன்

பூமியின் நிலப் பரப்பு தொடக்கத்தில் நாம் இப்போது காண்பது போல் இருக்கவில்லை.

ஏறத்தாழ 60 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் தெற்கிலும் வடக்கிலும் இரண்டு மிகப் பெரிய நிலப் பரப்புகள் இருந்தன. எடுவர்ட் சூயஸ் என்பவர் தெற்கில் இருந்த பெரிய நிலப்பரப்புக்குக் ‘கோண்டுவானா’ என்று பெயரிட்டார். இப் பெரிய நிலப் பரப்பில் இன்றைய தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் னிந்தியா அண்டார்டிகா ஆகிய கண்டங்கள் அடங்கியிருந்தன.

அலெக்ஸாண்டர் டு டாயிட் என்ற தென்னாப்பிரிக்க நிலநூல் அறிஞர் வடக்கில் இருந்த பெரிய நிலப் பரப்புக்கு ‘லாரேஷியா’ என்று பெயரிட்டார். இந்நிலப் பரப்பில் இன்றைய வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா தவிர்ந்த ஆசியா ஆகிய கண்டங்கள் அடங்கியிருந்தன. கோண்டுவானாவில் ‘லெமூர்’ என்ற ஓர் உயிரினம் வாழ்ந்தது. அதனால் உயிர் நூலார் கோண்டுவானாவை ‘லெமூரியா’ என்று அழைத்தனர்.

‘லெமூர்’ என்பது விலங்கினத்துக்கும் மனித இனத்துக்கும் இடைப்பட்ட ஓர் உயிரினம் என்று உயிர்நூலார் கருதுகின்றனர். இந்த ‘லெமூர்’ இனமே பரிணாமம் அடைந்து மனித இனமாயிற்று என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ‘லெமூரி’யாவில்தான் மனித இனம் தோன்றியது என்று ஏனஸ்ட் ஹெக்கல் போன்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

லெமூரியா 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது என்றும், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருங் கடற்கோளால் (சுனாமி) அழிந்தது என்றும், அதில் தப்பிய பகுதி இன்றைய தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த குமரி நாடாக இருக்கவேண்டும் என்றும் கா. அப்பாத்துரையார் கருதுகிறார். (குமரிக் கண்டம், பக். 56-57).

‘குமரி’ என்ற பெயர் எப்படி வந்தது?

‘லெமூரியாவில்’ ஒரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ‘இளை’ என்று மகளொருத்தியும் ‘யமன்’ என்று மகனொருவனும் இருந்தனர். அரசன் தன் நாட்டை இரண்டாகப் பிரித்துத் தென் பகுதியை யமனுக்கும் வட பகுதியை இளைக்கும் கொடுத்தான்.

இளை மணம் புரிந்துகொள்ளாமல் குமரியாகவே இருந்து நாட்டை ஆண்டாள். அதனால் அவள் ஆண்ட பகுதி ‘குமரி நாடு’ என வழங்கப்பட்டது என்று தொன்மங்கள் (புராணங்கள்) கூறுகின்றன. (Tamil Antiquary no.1) இக்குமரி நாட்டில் ‘பஃறுளி’ என்ற நீண்டநெடிய ஆறும், குமரிக் கோடு என்ற மலையும் இருந்தன. இப்பகுதியை மற்றுமொரு பெருங் கடற்கோள் அழித்தது. இதனை இளங்கோவடிகள் ‘சிலப்பதிகார’த்தில் குறிப்பிடுகிறார்.

(பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக் கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள – சிலப்பதிகாரம், 2.11. 19, 20)

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’ - (குறள் 43)

என்ற திருக்குறளில் வரும் ‘தென்புலத் தார்’ என்பதற்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர் அதற்குப் ‘பிதிரர்’ என்று பொருளுரைத்து, பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் (பிரம்மன்) படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி, அவர்க்கிடம் தென் திசையாதலின் ‘தென்புலத்தா’ரென்றார் என்று விரித்துரைக்கிறார்.

கடற்கோளால் குமரிக் கண்டத்தின் பெரும் பகுதி அழிந்தபோது தப்பித்தவர் கள் வடதிசையில் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர். அவர்கள் தென்திசையில் அழிந்து போன தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்து வந்தனர். இதையே பரிமேலழகர் பதிவு செய்திருக்கிறார்.

இதில் இருந்து குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்களின் முன்னோர்கள் என்று தெரிகிறது.

‘வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று’

- என்ற திருக்குறளின் உரையில் பரிமேலழகர் ‘பழங்குடி தொன்றுதொட்டு வருகின்ற குடி; தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொட்டு மேம்பட்டு வருதல்’ என்று பொருள் கூறுகிறார்.

இதில் இருந்து சேர, சோழ, பாண்டியர் படைப்புக் காலத்தில் இருந்தே இருந்து வரும் பழங்குடியினர் என்று தெரிகிறது. இதற்கு அவர்களுடைய குலமரபுச் சின்னங்களே (Totem) சான்றாகத் திகழ்கின்றன. பழங்குடியினர் தொடக்கத்தில் வேட்டையாடி வாழ்ந்தனர். அதற்காக அவர்கள் வில்லைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வந்தனர் என்று மனித இன (Anthropology) நூலார் கூறுகின்றனர்.

சேரர்களுடைய குலமரபுச் சின்னம் வில். இந்தச் சின்னமே அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த பழங்குடியினரின் வழி வந்தவர்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. தொடக்கத்தில் மலையில் - குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மனித இனம் வேட்டையாடி வாழும் வாழ்க்கையின் சிரமங் களை உணர்ந்து, காட்டுக்கு முல்லை நிலத்துக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தது.

சோழர்களுடைய குலமரபுச் சின்னம் புலி. புலி காட்டு விலங்கு. இதில் இருந்து சோழர்கள் முல்லை நிலத்தில் வாழ்ந்த பழங்குடியினரின் வழிவந்தவர்கள் என்பது தெரிகிறது. தொடக்க காலத்தில் இருந்தே கடற்கரையில் - நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்தவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வந்தனர். பாண்டியர்களுடைய குலமரபுச் சின்னம் மீன். எனவே பாண்டியர்கள் மீன் பிடித்து வாழ்ந்த மீனவப் பழங்குடியினரின் வழி வந்தவர்கள் என்று தெரிகிறது.

குமரிக் கண்டத்தில்தான் பாண்டியர் கள் ‘முச்சங்கம்’வைத்துத் தமிழ் வளர்த்த னர் என்று அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில் கூறுகிறார்.

குமரிக் கண்டத்தில் முதலில் மதுரை யில் பாண்டியர்கள் தமிழ்ச் சங்கம் வைத்தனர். அப்பகுதி கடற்கோளால் அழியவே, அவர்கள் வடக்கே குடிபெயர்ந்து கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் வைத்தனர். அப்பகுதியும் கடற்கோளால் அழியவே வடக்கே குடிபெயர்ந்து இரண்டாம் மதுரையில் சங்கம் வைத்தனர் என்று ‘களவியல்’ உரையில் நக்கீரனார் கூறுகிறார்.

சங்கம், மதுரை, கபாடபுரம் என்ற சொற்கள் சமஸ்கிருதச் சொற்களாக இருக்கின்றன. மறைக்காடு என்பது வேதாரண்யம் என்று மொழிபெயர்க்கப்பட்டது போல் இச்சொல் பிற்கால மொழி பெயர்ப்பு களாக இருக்கலாம். இக்கால மதுரைக்குக் ‘கூடல்’ என்று ஒரு பெயர் உள்ளது. இது சங்கத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச் சொல். இப்பெயரே முற்கால மதுரைகளுக்கும் இருந்திருக்க வேண்டும்.

அதுபோலவே ‘கபாடபுரம்’ என்ற பெயர் ‘வாயில்’ என்றோ ‘வாயிலூர்’ என்றோ இருந்திருக்கலாம். இது பின்னர் சமஸ்கிருதத்தில் ‘கபாடபுரம்’ ஆகியிருக்கலாம். இவையெல்லாம் குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித இனம் பேசிய முதல் மொழி தமிழின் மூல மொழியாக இருக்கலாம் என்பதற்கான சான்றுகள்.

-இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article7541961.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 6: ஆதிப் பெற்றோர் தமிழர்களே!

 
 
ஓவியம்: இளஞ்செழியன்
ஓவியம்: இளஞ்செழியன்

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப் பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மை யில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவை யும் ஆராய்ந்திருக்கிறார்.

இந்த ஆய்வில் மனிதகுலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின்முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோருக்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மையை பைபிளும், குர்ஆனும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டன. மனித இனத்தின் ஆதிப் பெற்றோர் ஆதாம், ஏவாள் என்றும் இவ்வேதங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாம், ஏவாளைப் படைத்த இறை வன் அவர்களைக் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு சுவனம் அமைத்து அங்கே குடியமர்த்தினார் என்று பைபிள் (ஆதி.2.8) கூறுகிறது.

ஆதத்தையும் ஹவ்வாவையும் (ஏவாள்) படைத்த இறைவன், ‘ஆதமே! நீரும் உம்முடைய துணைவியும் சுவனத்தில் குடியிருங்கள்’என்று கூறியதாகக் குர்ஆன் (2.35) குறிப்பிடுகிறது.

குர்ஆன் சுவனத்தைக் குறிக்க ‘ஜன்னத்’ என்ற சொல்லை ஆள்கிறது. அரபியில் ‘ஜன்னத்’ என்றால் ‘சொர்க்கம்’ என்றும் ‘சோலை’ என்றும் இரு பொருளுண்டு.

ஆதம், ஹவ்வா சொர்க்கத்தில் வசித்ததாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால், இப்படிப் பொருள் பண்ணுவதற்குப் பல தடைகள் இருக் கின்றன. ஆதம், ஹவ்வா பூமியில்தான் இருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன.

இறைவன் குர்ஆனில், ‘நான் பூமியில் பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்' என்று (2.30) கூறுவதே முக்கியமான சான்றாகும்.

இப்னு யஹ்யா, பைழாவி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஆதாம், ஹவ்வா இருந்த இடம் பூமியே என்று சான்றுகள் காட்டி நிறுவியுள்ளனர்.

பூமியில் ஆதாம், ஏவாள் வாழ்ந்த இடம் இலங்கை என்று அலெக்ஸாந்திரியா வைச் சார்ந்த கிறித்துவக் குரு யூட்டீஷியஸ் கூறுகிறார்.

‘சொர்க்க’த்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதாம் குடியமர்த்தப்பட்ட இடம் ‘செரந்தீப்’ என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். ‘செரந்தீப்’ என்பது இலங்கையைக் குறிக்கும்.

அலீ(ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் ஆதாம், ஏவாள் வாழ்ந்த இடம் இந்தியா என்று கூறுகின்றனர்.

ஆதம் இலங்கையில் குடியமர்த்தப்பட்டபோது அது இந்தியாவுடன் இணைந்திருந்தது. அவர் குடியேறிய இடம் ஒரு மலை உச்சி. அது பழங்காலத்தில் இருந்தே ‘ஆதத்தின் சிகரம்’ (Adams’s Peak) என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. இது ஆதத்தின் பாதச் சுவடு எனப்படுகிறது.

மார்க்கபோலோ (சுமார் கி.பி. 1293) ஆதம் மலையில் ‘நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது’என்று குறிப்பிடுகிறார்.

இந்த மலையின் அடிப் பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ‘மனித குலத்தின் தந்தை’என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது.

வெளிநாட்டு வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இம்மலைச் சிகரத்தை ‘ஆதாமின் சிகரம்’ என்றே குறிப்பிடுகின்ற னர். அங்கே இருப்பது ஆதித் தந்தையின் பாதம் என்று நம்பியதாலேயே, பழங் காலத்தில் இருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து யூதர்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் அதைத் தரிசிப்பதற்காகவே வந்தனர். அதை அவர்கள் புனிதப் பயணமாகவும் கருதினர்.

‘அவ்வை’ என்ற தமிழ்ச் சொல்லே ஹீப்ரு மொழியில் ‘ஈவ் என்றும், அரபியில் ‘ஹவ்வா’என்றும் திரிந்திருக்கிறது.

குமரி மாவட்டத்தில் மூன்று அவ்வைச் கோயில்கள் இருக்கின்றன. தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் அவ்வையாரம்மன் கோயிலும், குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் அவ்வையாரம்மன் கோயிலும், முப்பந்தலில் ஓர் அவ்வையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.

இக்கோயில்கள் ‘அவ்வையார்’ என்ற புலவருக்காக எழுப்பப்பட்ட கோயில்கள் என்றே பலரும் கருதுகின்றனர்.

தமிழ் இலக்கிய வரலாற்றின்படி சங்க காலத்து அவ்வையார், ‘ஆத்திச்சூடி’ பாடிய அவ்வையார், ‘ஞானக் குறள்’பாடிய அவ்வையார் என்று மூன்று அவ்வையார்கள் இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.

இந்த அவ்வையார்கள் மூவருக்கும் குமரி மாவட்டத்துக்கும் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் இவர்கள் யாரும் மக்கள் கோயில் கட்டிக் கும்பிடும் அளவுக்குச் சமய முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் தெரியவில்லை.

அப்படியென்றால் ‘இந்த அவ்வை யார்?’ என்று கேட்கலாம். மனித குலத்தின் ஆதித் தாய் அவ்வையே (ஏவாள்) இந்த அவ்வை. தொடக்க காலத்தில் தாயை வழிபடும் வழக்கம் இருந்தது என்பதை மனித இன வரலாறு கூறுகிறது. அவ்வையாரம்மன் கோயில்கள் அந்தத் தாய் வழிபாட்டின் தொடர்ச்சியே ஆகும். அவ்வையாரம்மன் என்ற பெயரும் இதை உறுதி செய்கிறது.

மேலும் குமரி மாவட்டத்துத் தோவாளை வட்டத்தில் ஆண்கள் அவ்வையார் பிள்ளை என்றும், பெண்கள் அவ்வையாரம்மை என்றும் பெயர் சூடும் வழக்கம் இருக்கிறது. இதுவும் அவ்வையாரம்மன் கோயில்கள் ‘அவ்வை என்ற ஆதித் தாயின் வழிபாட்டுத் தலங்களே’ என்பதை நிரூபிக்கின்றன.

‘தாய்’ என்ற பொருளில் ‘அவ்வை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ‘ஈன்ற அவ்வையும் அத்தனும்’ என்ற கந்த புராண வரி (தெய்வ.238) விளக்குகிறது.

குமரி மாவட்டத்து முஸ்லிம்கள், ‘ஆதம் பாவா’ என்ற பெயரை விருப்பத்தோடு சூடிக்கொள்கின்றனர். ‘பாவா’என்றால் தந்தை என்று பொருள். வேறிடங்களில் ‘ஆதம் பாவா’வைக் காண்பது அரிது.

முஸ்லிம்கள் மட்டுமின்றி, இம்மாவட்டத்துக் கிறித்துவர்களும் ‘ஆடம்’(Adam) என்ற பெயரை வைத்துக்கொள்கின்றனர். வேறிடத்துக் கிறித்து வர்களிடம் இப்பெயர் காண்பது அரிது.

இவையெல்லாம் ஆதம், ஏவாள் இருவரும் குமரிக் கண்டத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கின்றன.

‘அவ்வை’ என்பது தமிழ்ச் சொல் என்பதைக் கண்டோம். ‘ஆதம்’ என்ற பெயரும் ‘ஆதன்’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே.

‘ஆதன்’என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று. ஆதன், அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆரன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’என்ற சொற்கள் ‘ஆதன்’என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.

மேலே காட்டிய கந்த புராண மேற்கோளில் (ஈன்ற அவ்வையும் அத்தனும்) ‘அத்தன்’ என்ற சொல் ‘தந்தை’ என்ற பொருளில் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த மேற்கோளில் ‘அவ்வை, அத்தன்’என்ற சொற்கள் ஒருங்கே கையாளப்பட்டுள்ளன. இவை ஆதாம், ஏவாளைக் குறிப்பன என்பதை எளிதாக அறிந்துக்கொள்ளலாம்.

இதுவரை காட்டிய சான்றுகளில் இருந்து ஆதாம், ஏவாள் என்ற ஆதிப் பெற்றோருக் குப் பிறந்த இனம் தமிழினம் என்பதை அறியலாம்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-6-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/article7568915.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 8: ஐந்திணையின் அம்சங்கள்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
abdul_2536606f.jpg
 

பைபிளும் குர்ஆனும் கூறும் ஹாபீல், காபீல் இரண்டும் தொன்மத்தில் கவனிக்கப்பட வேண்டிய பெயர்கள்.

பைபிள் ஹாபீலை ‘ஆபேல்’ (Abel) என்றும் காபீலை ‘கெய்ன்’ (cain) என்றும் குறிப்பிடுகிறது.

மனித இன வரலாற்றுத் தொடக்கத்தில் மனிதன் முதலில் வேட்டையாடி வாழ்ந்தான். பிறகு ஆடு, மாடுகளை வளர்த்து வாழ்ந்தான். அதன் பின்பு விவசாயத்தை அறிந்துகொண்டு, ஆற்றங்கரைச் சமதளங்களில் விவசாயம் செய்தான். அப்போதுதான் ஊரும், நகரும், நாடும் உண்டாயின. அரசும் உண்டாயிற்று.

ஆ, கோ என்பவை தமிழில் மாட்டைக் குறிக்கும்.

ஆடு, மாடு வளர்த்து வாழ்ந்த காலத்தில் தலைவர்கள் ‘கோ’ என்றும் ‘கோன்’ என்றும் அழைக்கப்பட்டார்கள்.

நாடும் நகரமும் உண்டாகி அரசும் ஏற்பட்ட போது அரசனும் ‘கோ’என்றும் ‘கோன்’என்றும் அழைக்கப்பட்டான்.

‘ஆபேல் (ஹாபீல்) ‘ஆவலன்’ (கோவலன் என்பது போல) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபுதான். தமிழில் ‘வ’ என்ற ஒலி பிற மொழி களில் ‘ப’ வாகும். எடுத்துக்காட்டு: வங்காளம் - பங்காள்; ரவீந்திரநாத் – ரபீந்திரநாத். ‘வலன்’ என்றால் வளர்ப்பதில், பராமரிப்பதில் வல்லவன் என்று பொருள்.

‘ஆபேல்’ஆடு, மாடு மேய்க்கும் இடையராக இருந்தார் என்று பைபிள் கூறுகிறது.

காபீல் என்பது காவலன் என்ற சொல்லின் திரிபே. பைபிள் காபீலைக் ‘கெய்ன்’ என்று அழைக்கிறது. இது ‘கோன்’ என்பதன் திரிபே.

பழங்காலத்தில் அரசர்கள் ‘காவலன்’ என்றும் ‘கோன்’என்றும் அழைக்கப்பட்டனர்.

ஹாபீலைப் புதைத்துவிட்டு ஓடிய ‘கெய்ன்’ ஒரு நகரை உண்டாக்கினான் என்று பைபிள் கூறுகிறது. அங்கே அரசை உண்டாக்கி அதை அவன் ஆண்டான். அவன்தான் மனித இனத்தில் முதல் ‘கோன்’(கெய்ன்).

‘கெய்ன்’ விவசாயி என்று பைபிள் கூறுகிறது. மனிதன் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்த காலத்தில் அரசோ, அரசனோ இல்லை. அவன் விவசாயம் செய்து குடியானவனாக மாறிய பிறகுதான் அரசும், அரசன் என்ற பதவியும் உண்டாயின.

தமிழ் இலக்கண நூலார் மனித வாழ்க்கையை அகம் என்றும், புறம் என்றும் இரு பகுதிகளாகப் பாகுபடுத்துகின்றனர். பொதுவாக அகம் என்பது காதலையும், புறம் என்பது வீரத்தையும் குறிக்கும்.

அகப்பொருள் இலக்கணம் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரிக்கிறது. மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை; வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம்; கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல்.

தமிழ் அகப்பொருள் கூறும் பாலை சஹாரா பாலைவனம் போன்றதல்ல. குறிஞ்சி, முல்லை நிலங்கள் கடுங்கோடையில் வளம் இழந்து வறண்டு போகும்போது அவை பாலை எனப்படும்.

தொல்காப்பியர் முல்லையை முதலாவதாகக் கூறினாலும், நம்பியகப் பொருள் போன்ற நூற்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றே நிலங்களை வரிசைப்படுத்துகின்றன.

இவ்வரிசை மனித இன வரலாற்றின்படி மனிதன் தோன்றி வாழ்ந்த இடங்களைச் சுட்டுவதாக அமைந்திருக்கிறது.

மனிதன் முதலில் மலையில் தோன்றி வாழ்ந்தான். அந்த வாழ்க்கை கடினமாக இருக்கவே காட்டுக்கு வந்து ஆடு, மாடு வளர்த்து வாழ்ந்தான். அந்த வாழ்க்கையும் கடினமாக இருக்கவே அவன் சமதளத்துக்கு வந்தான். அங்கே விவசாயத்தைக் கண்டுபிடித்து அதைச் செய்து வாழ்ந்தான் என்று மனித இன வரலாறு கூறுகிறது.

மனிதன் கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன்பு மலையில் வேட்டையாடி வாழ்ந்தான் என்றும் கி.மு.7000 ஆண்டு அளவில் கால்நடை மேய்த்து வாழ்ந்தான் என்றும் அதன் பின்பு கி.மு.3000 ஆண்டு அளவில் அவன் வேளாண்மை செய்து வாழ்ந்தான் என்றும் மனித இன நூலார் கூறுகின்றனர்.

ஆதாம், ஹாபீல், காபீல் பற்றிய தொன்மங்கள் மனித இன வரலாற்றின் தொடக்க காலத்தைத் தொகுத்துக் கூறுகின்றன.

ஆதாம் ‘ஆதத்தின் சிகரம்’என்ற மலையின் மீதே குடியேறி வாழ்ந்தார் என்பதை முன்னர்க் கண்டோம்.

பைபிள் ஆதாம், ஏவாளின் மூத்த மகனாக காயீனையும், இளைய மகனாக ஆபேலையும் கூறினாலும், அவர்கள் தொழில்களைக் கூறும் போது முதலில், ஆபேலைக் கூறி அவன் ஆடுகளை மேய்க்கிறவன் ஆனான் என்றும் பின்பு காயீனைக் கூறி அவன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆனான் என்றும் கூறுகிறது. (ஆதி யாகமம், 4.1 - 2). இது மனித இன வரலாற்றின்படி அமைந்திருப்பதைக் கவனிக் கலாம்.

தொன்மைக் கால மனித இன வரலாற்றுப்படியே மனிதன் தொடக்கத்தில் மலையில் வேட்டையாடி வாழ்ந்தான் என்றும், பின்பு காட்டில் கால்நடை வளர்த்து வாழ்ந்தான் என்றும், பின்பு வயலில் விவசாயம் செய்து வாழ்ந்தான் என்றும் தமிழ் அகப்பொருள் வரிசைப்படுத்திக் கூறுவது வியக்க வைக்கிறது. இதுவும் தமிழினத்தின் தொன்மையை உணர்த்துகிறது.

ஆதன், அவ்வை என்ற பெயர்கள் மட்டுமின்றி ஆவலன், காவலன், கோன் என்ற தமிழ் பெயர்களே ஆதம், ஈவ், ஆபேல், காபீல், கெய்ன் என்று திரிந்து வழங்குவதும் தொடக்க கால மனித இனம் தமிழினமே என்பதற்கான அரிய சான்றுகளாகும்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-8-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7616546.ece?ref=relatedNews

 

இந்த தொடரின் 7 ம் பாகம் இணையத்தில் இல்லை. எங்காவது கிடைத்தால் இணைப்பேன்.

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 9: மிதக்கும் வீடு!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
abdul__2545055f.jpg
 

ஆதாமுக்கு 146 ஆண்டு களுக்குப் பின்னர் (பைபிள் 126 ஆண்டுகள் என்கிறது) அவருடைய 8-வது தலைமுறை யில் நோவா (குர்ஆனின் படி நூஹ்) என்பவர் தோன்றினார்.

அவர் காலத்து மக்கள் மிகவும் கெட்டுப் போயிருந்தனர். பஞ்சமா பாதகங்களையும் தயங்காமல் செய்தனர். பொதுவாகக் கூறுவ தாக இருந்தால் மனித வடிவில் மிருகங்களாக இருந்தனர்.

இறைவன் நோவாவைத் தூத ராக்கி, அவருடைய சமூக மக்களை அச்சுறுத்தி எச்சரிக்குமாறும், இறைவனுடைய நேர் நெறிக்கு அழைக்குமாறும் ஆணையிட்டான்.

அவரும் அவ்வாறே தம் மக் களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார். ஆனால், அவர் களோ அவரைத் தூற்றியதோடு துன்புறுத்தவும் தொடங்கினர்.

நோவா எவ்வளவோ எடுத் துரைத்தும் அவர்கள் திருந்துவ தாக இல்லை. எனவே, அவர் மனம் நொந்து ‘‘என் அதிபதியே! இந்தப் பாவிகளில் எவரையும் பூமியில் விட்டுவைக்காதே. நீ இவர்களை விட்டுவைத்தால் இவர்கள் உன்னுடைய நல்லடி யார்களையும் கெடுத்துவிடுவார் கள். மேலும், இவர்கள் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவர்களாகவே இருப்பார்கள்’’ என்று இறைவ னிடம் முறையிட்டார்.

இறைவன், ‘‘இந்த மனித அழுக்குகளை நான் நீரால் கழுவுவேன். நீரில் பிறப்பித்தேன் நீரால் அழிப்பேன்” என்றான்.

இறைவன் நோவாவை ஒரு கப்பல் கட்டச் சொன்னான். நோவா தச்சர். இறைவனின் அறிவுரைப் படி, தம் புதல்வர்களின் ஒத்துழைப் போடு அவர் ஒரு பெரிய கப்பல் கட்டத் தொடங்கினார்.

அதைப் பார்த்த மக்கள், ‘‘இது என்ன?’’ என்று கேட்டார்கள். ஏனென்றால், அதற்கு முன்பு யாரும் கப்பலைப் பார்த்தது இல்லை. அதுதான் பூமியில் கட்டப்பட்ட முதல் கப்பல்.

நோவா, “இது மிதக்கும் வீடு” என்றார்.

மக்கள், “மிதக்கும் வீடா? இங்கேதான் நீரே இல்லையே” என்றனர்.

நோவா, ‘‘வரும்’’ என்றார்.

கப்பல் கட்டி முடிந் தது.

நோவா இறையாணையின்படி நல்லவர்களையும், எல்லா உயிரினத்தின் இணைகளையும் கப்பலில் ஏற்றிக்கொண்டார்.

அந்தப் பயங்கர நாள் வந்தது. கடல் நீர் கொந்தளித்துப் பூமியின் மேல் பாய்ந்தது. வானம் அசுர மழை பெய்தது. பூமி தன் வயிற்றில் உள்ள நீரையெல்லாம் வாந்தியெடுத்தது.

பூமி பிரளய வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. உரக்க ஒலித்த மனிதக் கூக்குரல்கள் அடங்கிவிட்டன.

நோவாவின் கப்பல் நீரின் மேல் மிதக்கத் தொடங்கியது.

பூமிப் பிணத்துக்கு நீர் சவக்கோடி உடுத்தியது.

நோவாவுக்கு சாம், ஹாம், யாபூத், யாம் என்ற நான்கு புதல் வர்கள் இருந்தனர். அவர்களுள் யாம் தீயவனாக இருந்ததால், அவன் நீரில் மூழ்கி இறந்தான்.

வெள்ளம் மெதுவாக வடியத் தொடங்கியது. நோவாவின் கப்பல் ஒரு மலை மீதிருந்தது.

கப்பலில் இருந்து இறங்கிய நோவாவும் அவருடைய குடும் பமும் அந்த மலை மீதே வாழத் தொடங்கின.

தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய சான்றுகள், நோவா குமரிக் கண்டத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று காட்டுகின்றன.

உலகத்தின் பழைய நாகரிகங் கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.

‘கில்கமெஷ்’ என்ற புரா தனப் பாபிலோனியக் காவியத் தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.

சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.

நோவானின் இயற்பெயர் ‘ஸாகுப்’ என்றோ ‘ஸகுன்’ என்றோ இருந்ததாக அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.

ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது. இப்பெயர் ‘நூஹ்’ என்பதோடு ஒன்றுபட்டிருப்பது வெளிப்படை.

கப்பலில் ஏறித் தப்பித்தவர் பெயரில் வேறுபாடு இருப்பினும், பிரளயத்தில் கப்பலில் தப்பித்த தொன்மம் ஒன்றாயிருக்கிறது.

பல இடங்களில் வழங்கும் பிரள யத் தொன்மங்களுக்கு மூலம் ஒன்றே என்று ஆய்வறிஞர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிரளயத்தில் தப்பித்தவர்கள் பல்கிப் பெருகிப் பல நாகரிகங் களை உருவாக்கினர். அப்போது பிரளயத் தொன்மத்தையும் தங்க ளோடு எடுத்துச் சென்றனர். பெயர் வேறுபாடு அவ்வந்நாகரிகத்தின் மொழி மரபு காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.

பிரளயத் தொன்மம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்து கிறது. கப்பல் ஏறித் தப்பித்த நோவாவின் சந்ததியினரே மிகப் புராதனமான நாகரிகங்களாகக் கருதப்படும் சுமேரிய, பாபி லோனிய நாகரிங்களை ஏற்படுத் தியவர் என்பதே அந்த உண்மை.

கார்வே என்ற அறிஞர் லெமூ ரியாவில் இருந்து தப்பியவரே ‘நைல்’ பள்ளத்தாக்கிலும், செங் கடற்கரையிலும் தங்கி நாகரிகம் வளர்த்தனர். அவர்களிடம் இருந்து உருவானதே எகிப்திய நாகரிகம். பிற்காலத்தில்அவர்களே மெசப டோமியா, அஸீரியா, பாபிலோ னியா ஆகிய இடங்களில் தங்கி நாகரிகம் வளர்த்தனர் என்று கூறு கிறார். (N.Mahalingam, ‘Forgotten lemuria’ pp. 55-57).

கடல் கோளால் லெமூரியா (குமரிக் கண்டம்) அழிந்தபோது அங்கிருந்து தப்பித்தவர்கள் பல்வேறு இடங்களில் குடியேறி வாழ்ந்தனர்.

காலப்போக்கில் பிரளயத் தொன்மம் வாழ்ந்த இடத்தின் வண்ணம் பெற்றதோடு, சிற்சில மாற்றங்களையும் அடைந்தது. இது இயல்பே.

குமரிக் கண்டத்தைக் கடல் கொண்டது பற்றிய குறிப்புகள் தமிழில் ஏராளமாகக் காணப்படு கின்றன.

குமரிக் கண்டத்தில் ஓடிய பஃறுளி ஆறும், குமரி மலையும் கடல் கோளால்அழிந்ததை இளங் கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள...’

(சிலப் பதிகாரம்- காடுகாண். 18.22)

‘குமரி ஆற்றின் தெற்கு நாற்பத் தொன்பது நாடு sகடல் கொண்டது’ என்று நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியப் பாயிர உரையில் கூறுகிறார்.

அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில்,

‘அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும் இவற்றின் நீர் மலிவா னென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி, கொல்லம் முதலிய பன்பலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் கானும் கடல் கொண் டொழிதலாற் குமரியாகிய பெளவ மென்றார்.’

(சிலப்பதிகாரம் - வேனிற்காதை, 1-2 உரை) என்று கடல் கோளால் குமரிக் கண்டத்தில் அழிந்த பகுதிகளை விவரமாகக் கூறுகிறார்.

இறையனார் அகப்பொருள் உரையில் நக்கீரரும், ‘செங்கோன் தரைச் செலவு’ ஆசிரி யரும் கடல்கோள் பற்றிக் கூறுகின்றனர்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/article7644955.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 10: மீன் தோணி

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
fish_2553210f.jpg
 

தமிழ்நாட்டில் உள்ள தலபுராணங்கள் பெரும்பாலும் கடல்கோள் பற்றிக் குறிப்பிடுகின்றன. கடல்கோள் குமரிக் கண்டத்தில்தான் நடந்தது என்பதற்கு இது ஒரு முக்கியமான சான்றாகும்.

தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப் படுகிறது. அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.

சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.

தோணி வந்தடைந்த இடம் என்பதால் ‘தோணிபுரம்’ என்று அழைக்கப்பட்டதாகச் ‘சீர்காழித் தலபுராணம்’ கூறுகிறது.

தமிழ்நாட்டுத் தலபுராணங்கள் பெரும்பாலும் தோணி தங்கள் ஊரையே வந்தடைந்தது என்று கூறுகின்றன.

கடல்கோளிலிருந்து தப்பித்தவர்கள் பல்வேறு இடங்களில் குடியேறினர். பிற்காலத்தில் குடியேறிய ஊரைப் பெருமைப்படுத்தத் தோணி வந்தடைந்த இடம் தம் ஊரே என்றனர். இது மனித இயல்பே.

இந்த அடிப்படையில் திருப்புறம்பயத்தின் கணேசர், ‘பிரளயம் காத்த விநாயகர்’ எனப்படுகிறார். (ஜகதீச ஐயர், South Indian Shrines, P.75)

பிரளயத்திலிருந்து மனிதர்களைக் காத்தது நந்தி என்கிறது ‘திருப்பெண்ணாகட வரலாறு’ (ப.12).

பிரளயத்தில் அழியாமல் இருந்தது நாககிரி என்கிறது ‘திருச் செங்கோட்டுப் புராணம்’ (1.2.6) நாககிரி திருச்செங்கோட்டில் இருக்கிறது.

சதபதப் பிரமாணத்தில் (1.8.1-10) பிரளயத் தொன்மம் இடம்பெற்றிருக் கிறது. மனு, வைகறை வழிபாட்டிற்காக ஆற்று நீரில் அங்கசுத்தி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய கையில் ஒரு மீன் அகப்பட்டது. அந்த மீன் மனுவிடம், ‘‘ஒரு பெரிய பிரளயம் வரப் போகிறது. அதில் உயிர்களெல்லாம் அழிந்துவிடும். இப்போது நீ என்னைக் காப்பாற்றினால் அப்போது நான் உன்னைக் காப்பாற்றுவேன்’’ என்றது.

மீனை ஒரு கலயத்தில் விட்டார் மனு. அது பெரிதாயிற்று. மனு அதைக் குளத்தில் விட்டார். அது குளத்தளவு பெரிதாயிற்று. எனவே அவர் அதைக் கடலில் விட்டார்.

‘‘நீ ஒரு தோணியைச் செய். நான் தக்க நேரத்தில் வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்’’ என்று அந்த மீன் கூறியது.

குறிப்பிட்ட நாளில் பிரளயம் உண்டாயிற்று. வாக்களித்தபடியே அந்த மீன் வந்தது. அது பிரமாண்டமாக இருந்தது. அதன் தலையில் ஒற்றைக் கொம்பு இருந்தது.

தோணியைக் கொம்பில் கட்டச் சொன்னது மீன். மனு அவ்வாறே செய்தார் தோணியை மீன் இழுத்துக்கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம் கூறுகிறது.

மகாபாரதத்தில் இக்கதை சிறிது மாற்றத்துடன் காணப்படுகிறது. அதில் வைவசுத மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.

பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் அக்கதையில் சொல்லப்படுகிறது.

கப்பலில் நூஹ் (நோவா) அவர்களோடு அவருடைய மூன்று ஆண் மக்களும் மூன்று பெண் மக்களும் ஆக ஏழு பேர்களே ஏறினர் என்று அக்முஸ் என்பவர் கூறியிருக்கிறார். (அப்துற் றஹீம், நபிமார்கள் வரலாறு, முதல் பாகம், ப.230)

நோவா தம் புதல்வர்கள் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகிய ஏழு பேருடன் பேழைக்குள் நுழைந்ததாக பைபிளும் கூறுகிறது (தொடக்க நூல் 7.13)

பாகவத புராணம் பிரளய காலத்தில் மனு தோணி ஏறிய இடம் தென்னிந்தியா என்றும் அந்த மனுவின் பெயர் சத்திய விரதன் என்றும், அவன் திராவிட வேந்தன் என்றும், மனுவின் கையில் மீன் சிக்கிய இடம் மலையமலையில் ஊற்றெடுத்து வரும் கிருதமாலை என்னும் நதி என்றும் கூறுகிறது. (8.24.13) வைகை நதிக்குக் கிருத மாலை என்ற பெயரும் உண்டு.

இச்சான்று பிரளயத் தொன்மத்தைத் தமிழர்களோடு மிக நெருக்கமாக்கி வைக்கிறது. மச்ச புராணத்திலும் இத்தொன்மம் சிறு வேறுபாடுகளுடன் காணப்படுகிறது.

சத்திய விரதன் என்ற ராஜரிஷி கிருதமாலா நதியில் வழிபட்டபோது மீன் அகப்பட்டதாக இப்புராணமும் கூறுகிறது.

இதில் வரும் மீன், ‘‘பிரளயம் உண்டாகும்போது நம் ஆக்கினையால் ஓர் இடம் வரும். அதில் நீ சத்த இருடிகளுடனும் (ஏழு முனிவர்கள்) ஓஷதிகளுடனும் (மருந்துக்குரிய பூண்டுகள்) ஏறுக’’ என்று கூறுகிறது.

இந்த அரசனே வைவச்சுத மனு என்னும் திருமால் இந்த அவதாரத்தில் மநு, பூதேவி, ஓஷதிகளை இரட்சித்தார் என்றும், மநு தவம் செய்த இடம் ‘மலையம்’ என்றும் மச்ச புராணம் கூறுகிறது. ‘மலையம்’ என்பது பொதிகை மலையைக் குறிக்கும்.

மனுக் குலத்தின் தந்தையை மனு என்று கூறுவது இந்திய மரபு. இஸ்லாமியத் தொன்மத்தின்படி ஆதம் மனுக் குலத்தின் முதல் மனு ஆவார். ஆதம் வழி வந்தவர்களில் நோவா அவர்களுடன் தப்பித்தவர்கள் தவிர மற்ற அனைவரும் பிரளயத்தில் அழிந்துவிட்டனர்.

இப்போதிருக்கும் மனுக் குலம் நோவா அவர்கள் வழிவந்ததாகும். எனவே நோவா இரண்டாம் ஆதம் என்று அழைக்கப்படுகிறார். அதாவது நோவாவும் ஒரு மனுவே.

மேலே காட்டிய சான்றுகளிலிருந்து குமரிக் கண்டத்தை அழித்த பிரளயமே தொன்மமாகிப் பல்வேறிடங்களில் பல்வேறு மாற்றங்கள் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.

தொன்மம் கப்பலை மீனாக்கிவிட்டது. தொன்மத்தின் இயல்பு இது.நோவா கட்டிய கப்பல் மீன் வடிவத்தில் அமைந்திருக்கலாம்.

தொன்மத்தின்படி மீனால் தப்பித்தவர்கள் என்பதால் அவர்கள் மீனைக் குலக்குறி (Totem) ஆகக் கொண்டிருக்கலாம். மீனைக் குலக்குறியாகக் கொண்ட பாண்டியர்கள் அவர்கள் வழிவந்தவர்களாக இருக்கலாம். இதனாலேயே சேர, சோழ, பாண்டியர் மூவரிலும் பாண்டியர்களே பழமையானவர்கள் என்று சிலர் கருதுகின்றனர்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-10-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF/article7667668.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி.
எனக்குப் பிடித்த கவிஞர்களில் அப்துல் ரஹ்மானும் ஒருவர். இங்கு அவரது கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் பல விடயங்கள் புதிதாக உள்ளது.

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 11: நாவாய் மொழி!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
 
kaviko_2561790f.jpg
 

பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவரு டைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.

'பொய்யகல நாளும்

புகழ்விளைத்தல் என்வியப்பாம்

வையகம் போர்த்த

வயங்கொலிநீர் - கையகலகக்

கல்தோன்றி மண்தோன்றாக்

காலத்தே, வாளோடு

முன்தோன்றி மூத்த குடி.’

‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது, கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப் பட்டு, மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்பது இதன் பொருள்.

நோவா செய்த பேழை (கப்பல்) ‘கோபர்’ (Gopher) மரத்தாலானது என்று பைபிள் கூறுகிறது.

ஹீப்ரு பைபிளில் ‘கோபர்’ என்ற சொல் எழுதப் பட்டிருந்தாலும் இச்சொல் ஹீப்ரு மொழியிலோ அதனோடு தொடர்புடைய மொழிகளிலோ காணப்படாததாகும்.

நோவாவின் பேழை இந்தியப் ‘ப்ளேன்’ (Plane) மரத்தால் செய்யப்பட்டது என்று குர்ஆன் விரிவுரையாளர் பைளாவி கூறுகிறார். (Dictionary of Islam, p. 436).

ப்ளேன் மரத்தின் தாவர இயல் பெயர் ‘Platanus Orientalis’ என்பதாகும். ’ஓரியண்டாலிஸ்’ என்ற சொல்லே இம்மரம் கீழை நாடுகளைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.

திராவிட இந்தியாவில் பழங்குடியினரே முதன்முதலாக மரக்கலம் செலுத்தியவர்கள் என்று கடலாய்வு செய்த ரஷ்ய அறிஞர் அலெக்ஸாந்தர் கோந்தரதோவ் கூறுகிறார். (The Riddles of Three Oceans, p.151).

தொல் திராவிடர்களின் இன்றைய வாரிசுகளாகக் கருதப்படும் தோதர்கள் பாடும் நாட்டுப் பாடல்கள் அவர்களுடைய முன்னோர்கள் கடல்வழியாக வந்தவர் என்று கூறுகின்றன. (மேற்காட்டிய நூல், ப.151).

நோவாதான் முதலில் கப்பலைக் கட்டியவர். மனிதர்கள் அதற்கு முன் கப்பலைக் கண்டதில்லை. எனவே நோவா கட்டிய கப்பலுக்கு 'நோவா' என்றே பெயர் சூட்டிவிட்டனர். அது தமிழில் ‘நாவாய்’ ஆயிற்று.

உலக மொழிகளிலெல்லாம் இந்த ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லே சிற்சில மாற்றங்களுடன் கப்பலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, கன்னடம்- நாவுகே; சமஸ்கிருதம், பாரசீகம், உருது, ஹிந்தி - நாவ்; ஹீப்ரு - ஓனிய்யாஹ்; இலத்தீன் - நாவீஸ்; பிரெஞ்சு - நாவிர் ; ஜெர்மன்- போர்ட் நெஹ்மன்; இத்தாலி- நாவ்; ருமேனியா- நாவா; ஸ்பானிஷ்- நாவியோ; அர்மேனியா -நாவ்.

இச்சொல்லாட்சி பல உண்மைகளை உணர்த்துகிறது. பிறமொழி அகராதிகளில் இச்சொல் பிறமொழிச் சொல் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், தமிழ் அகராதி ‘நாவாய்’ என்பதைப் பிறமொழிச் சொல் என்று குறிப்பிடவில்லை. எனவே, இச்சொல் தமிழில் இருந்தே பிறமொழிகளுக்குச் சென்றிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

பிரளயத்தில் தப்பித்த நோவாவின் சந்ததியினரே பல்கிப் பெருகிப் பல இடங்களில் குடியேறி வாழ்ந்தனர். அவர்கள் காலப்போக்கில் பல புதிய மொழிகளை உண்டாக்கிக் கொண்ட போதும் தங்கள் தாய்மொழிச் சொற்கள் பலவற்றை அப்படியே வைத்துக்கொண்டனர் என்று தெரிகிறது.

பைபிளின்படி நோவாவின் புதல்வர்கள் மூவர் ஷெம், ஹெம், எஃபத். தமிழ் பைபிள் ஷெம்மை சேம் என்றும் ஹெம்மை காம் என்றும் கூறுகிறது. இஸ்லாமியத் தொன்மத்தின்படி நான்காவது புதல்வனாக ‘யம்’ என்பவன் இருந்ததாகத் தெரிகிறது.

‘யம்’ இறைவனை ஏற்காதவன். தீயவன். பிரளயத்தில் அவன் மூழ்கி இறந்துவிட்டான்.

யமன் பற்றித் தமிழ்த் தொன்மம் ஒன்று இருக்கிறது. மனு என்னும் தமிழ் வேந்தனுக்கு இழை என்னும் ஒரு பெண் மகவும் இயமன் என்னும் ஓர் ஆண் மகவும் இருந்தனர். மனு தான் ஆண்டு வந்த நாட்டின் தென் பாகத்தை இயமனுக்கும் வட பாகத்தை இழைக்கும் அளித்தான்.

இயமன் ஆண்ட தென்னாடு கடல்வாய்ப் பட்டது. இது பற்றியே இயமனுடைய உலகம் தெற்கில் உள்ளது என்னும் ஐதீகம் இன்று வரையும் உள்ளது. கூற்றுவனாகிய யமனும், இவனும் ஒருவனாகப் பிற்காலத்தில் கருதப்பட்ட மையாற் போலும், இறந்தவர்கள் எமன் நாட்டில் (தெற்கில்) வாழ்கின்றார்கள் என்று கருதப்பட்டு அவர் ‘தென்புலத்தார்’ என வழங்கப்படலாயினர். வடக்கே இருந்த நாடு குமரிப் பெண்ணால் ஆளப்பட்டமையின் ‘குமரி நாடு’ என்று வழங்கப்பட்டது என்று டி. சவரிராயன் கூறுகிறார். (Tamil Antiquary. PP. 62-63)

லெமூரியாவில் மூழ்கி இறந்தவர்களே ‘தென்புலத்தார்’எனப்பட்டனர் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார். (The Primary Classical Language, PP. 37-38)

நோவா தொன்மத்தில் வரும் ‘யெம்’மும் டி.சவரிராயன் கூறும் தொன் மத்தில் வரும் இயமனும் ஒருவனே எனக் கொள்ள இடமுண்டு.

இன்றைய மனிதயினம் நோவாவின் புதல்வர்களா கிய ‘ஷெம்’, ‘ஹாம்’ என்பவர் களுடைய வழிவந்தவர் களே. அதனாலேயே மனித யின வரலாற்றறிஞர்கள் மனித யினத்தை இரண்டாகப் பிரித்து ‘ஷெம்’ வழி வந்த வர்களை ‘செமித்தியர்’ (Semite) என்றும் ‘ஹாம்’ வழி வந்தவர்களை ‘ஹெமித்தியர்’ (Hamite) என்றும் அழைக்கின்றனர்.

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கப் பேழையில் ஏறிய போது நோவா தம் புதல் வர்களிடம் இறைவன் தம் மைக் காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் வகை யில், ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டார். ஆனால் காமன் (ஹாம்) அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான். அதனால் கோபம் கொண்ட நோவா, காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய சாமனின் (ஷெம்) சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.

இந்தியத் தொன்மத்தில் காமன் (மன்மதன்) கருநிறம் உடையவனாகச் சித்திரிக்கப்படுகிறான். அவன் காமத்தின் தெய்வமாகவும் கருதப்படுகிறான். இது நோவா தொன்மத்தோடு தொடர்புடையதாகவே தெரிகிறது.

திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும்போது அவை ‘காமனும் சாமனும்’ போல இருந்ததாகக் கூறுகிறார். இது நோவாவின் தொன்மம் தமிழில் வழக்காற்றில் இருந்ததைக் காட்டுகிறது.

இத்தொன்ம ஒற்றுமைகள் வியப்பை அளிப்ப தோடு, நோவாவின் தொன்மம் உண்மை என்பதையும், அது நிகழ்ந்த இடம் குமரிக் கண்டம் என்பதையும் நிரூபிக்கின்றன.

இதுவரை காட்டிய சான்றுகளில் இருந்து குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனித யினத்தின் சந்ததியினரே இன்றைய தமிழினத் தவர் என்பதும் முதல் மனிதயினம் பேசிய மொழியின் பிற்கால வடிவமே தமிழ் என்பதும் உறுதியாகிறது.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-11-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/article7691915.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 12: தீமையும் நன்மைக்கே!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
globe_2570415f.jpg
 

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் நல்லதை மட்டும் படைத்திருக்கலாமே, தீயதை ஏன் படைக்க வேண்டும்?

நல்ல மனிதர்களை மட்டும் படைத்திருக் கலாமே, தீய மனிதர்களை ஏன் படைக்க வேண்டும்?

இன்பத்தை மட்டுமே படைத்திருக்கலாமே, துன்பத்தை ஏன் படைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகள் நம் இதயங்களில் எழாமல் இருப்பதில்லை.

நல்லதற்காகத்தான் தீயது படைக்கப் பட்டிருக்கிறது.

நல்ல மனிதர்களின் நன்மைக்காகவே தீய மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்பத்துக்காகவே துன்பம் படைக்கப்பட்டிருக்கிறது.

இப்படிச் சொன்னால் ஏற்பீர்களா?

ஆனால், இதுதான் உண்மை!

இதுதான் படைப்பின் மர்மம். இதுதான் வாழ்க்கையின் ரகசியம்.

இதற்கு இயற்கை விதி (Law of Nature) என்று பெயர்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் அது சிறப்பாக இயங்குவதற்காக விதி ஒன்றை உண்டாக்கினான். அந்த விதிப்படியே அண்ட சராசரமும் இயங்குகின்றன.

இந்த விதிதான் ‘இயற்கை விதி’ எனப்படுகிறது. வேதங்களும் வேத சம்ஹிதைகளும் இதை ‘ரித’ என்கின்றன.

இமானுவேல் கான்ட் (Immanuel Kant) தம் அரசுக் கொள்கையை விளக்கும்போது, இயற்கை விதியில் அடங்கியுள்ள நுட்பமானதொரு செயற்பாட்டை உணர்த்துகிறார்.

மனிதன் இயல்பாகவே சமூகத்தோடு இசைந்து வாழும் பண்பும், சமூக எதிர்ப்புப் பண்பும் ஒருங்கே கொண்டவன் என்பது அவர் கண்டறிந்த உண்மை.

சமூக எதிர்ப்புப் பண்பும் ஒரு வகையில் நன்மைக்கே பயன்படுகிறது. இப்பண்பு இல்லை யென்றால் மனிதனுடைய ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இத்தகைய இரு வகையான முரண்பட்ட பண்புகளினால் விளையும் போராட்டமே மனித வாழ்வின் எல்லா வகையான முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது என்று அவர் கூறுகிறார்.

பொறாமை, வீண் பெருமை, அதிகார வேட்கை, உடைமைப் பற்று போன்ற சமூக எதிர்ப்புப் பண்புகளை நன்மையைக் கருதியே இறைவன் அமைத்திருக்கிறான். இதனால் நிகழும் போராட்டத்தின் விளைவாக மனிதனின் உள்ளே அடங்கிக் கிடக்கும் ஆற்றல்கள் வெளிப்பட்டு அவனுடைய இயற்கைத் திறன்கள் மேலும் வளர்ச்சி அடைகின்றன என்பது அவர் கருத்து.

‘ஒவ்வோர் ஊரிலும் தீயவர் சிலரை நானே உண்டாக்கி வைத்திருக்கிறேன்’ என்று இறைவன் கூறியதை குர் ஆன் எடுத்துரைக்கிறது.

தத்துவஞானி கான்ட் கண்டறிந்த ‘இயற்கை விதி’ தொடர்பான இந்த நுட்பமான செயற் பாட்டைக் கம்பர் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே (ஒன்பதாம் நூற்றாண்டு) அறிந்திருந்தார் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

‘சமூக எதிர்ப்பான தீய சக்திகளும் நன்மைக் காகவே தோன்றுகின்றன’ என்ற கருத்தைக் கம்பர் தம் காப்பியத்தில் பல இடங்களில் உணர்த்துகிறார்.

அமைதியான அயோத்தியில் தங்கள் அன்பிற்குரிய இராமன் முடிசூடப் போகிறான் என்ற மிகழ்ச்சியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது கூனி தோன்றுகிறாள். அக்கொடியவளை அறிமுகப்படுத்தும்போதே,

‘இன்னல் செய் இராவணன்

இழைத்த தீமைபோல்

துன்னருங் கொடுமனக்

கூனி தோன்றினாள்’ (1445)

என்றே கம்பர் அவளை வருணிக்கிறார். இதன் வாயிலாக அக்கொடியவளும் ‘இராவண வதம்’ என்ற ஒரு நன்மைக்காகவே தோன்றினாள் என்று கம்பர் உணர்த்துகிறார்.

கூனியின் தீய சொற்களைக் கேட்டு தூயவளாகிய கைகேயியின் மனமும் மாறுகிறது. அவள் இவ்வாறு சிந்தை திரிந்ததும் ஒரு நன்மைக்கே என்று கம்பர் கூறுகிறார்.

‘தீய மந்தரை

இவ்வுரை செப்பலும், தேவி

தூய சிந்தையும்

திரிந்தது, சூழ்ச்சியின் இமையோர்

மாயையும், அவர் பெற்ற

நல்வரம் உண்மையாலும்

ஆய அந்தணர்

இயற்றிய அருந்தவத்தாலும்’ (1483)

இராவணன் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறத் தேவர்கள் பெற்ற வரமும் அந்தணர் இயற்றிய அருந்தவமும்தாம் கைகேயியின் தூய சிந்தை திரியக் காரணமாயின என்று இங்கே கம்பர் உணர்த்துவதைக் காணலாம். ‘இமையோர் மாயை’ என்பதன் மூலம் இயற்கை விதியே இவ்வாறு அவளைத் தூண்டியது என்றும் தெரிவிக்கிறார். மேலும்

‘அரக்கர் பாவமும்

அல்லவர் இயற்றிய அறமும்

துரக்க நல்லருள்

துறந்தனள் தூமொழி மடமான்’ (1484)

என்று இதை விளக்கமாகவே அவர் உணர்த்துகிறார்.

அதே பாடலில்,

‘இரக்கம் இன்மையன்றோ இன்று

இவ்வுலகங்கள் இராமன்

பரக்கும் தொல்புகழ்

அமுதினைப் பருகுகின்றதுவே’

என்று கூறுகிறார். இதன்மூலம் கைகேயியின் இரக்கமின்மை என்ற தீய பண்பினாலேயே இராமன் அளப்பரிய வீரமும் உன்னதமான பண்புகளும் வெளிப்பட்டுப் பெரும்புகழ் பெற்றான். மக்களும் அவனைப் பாராட்டி மகிழ்ந்தனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.

கொடுமனக் கூனி சூழ்ச்சி செய்யாதிருந்தால், தூய கைகேயியின் மனம் திரிந்திருக்காது. அவள் மனம் திரிந்திராவிட்டால் இராமன் காடு சென்றிருக்க மாட்டான். வனவாசம் காரணமாக வெளிப்பட்ட அவனுடைய அளப்பரிய ஆற்றலும் உன்னதமான பண்புகளும் உள்ளேயே அடங்கிக் கிடந்திருக்கும். இராவண வதமும் நிகழ்ந்திராது.

தீயையே எரித்த சீதையின் கற்பின் ஆற்றலும் வெளியுலகுக்குப் புலப்பட்டிராது. பரதனின் மகோன்னதமான பண்பு தெரியாமலே போயிருக்கும். கிட்கிந்தையிலும் இலங்கையிலும் நல்லரசுகள் ஏற்பட வழியில்லாமல் போயிருக்கும். இலக்குவன், அனுமன் ஆகியோருடைய ஒப்பற்ற ஆற்றல்கள் வெளிப்படாது வீணாகியிருக்கும். இராமன் கிட்கிந்தை, இலங்கை அடங்கிய ஒரு பேர ரசுக்குத் தலைவனாக ஆகியிருக்க மாட்டான். இவ்வளவு நன்மைகளும் கூனி, கைகேயி ஆகிய இரு தீய சக்திகளின் தோற்றத்தின் காரணமாகவே ஏற்பட்டன என்பதையே கம்பர் இங்கே காட்ட விரும்புகிறார்.

நல்லவளாயிருந்த கைகேயியே தீயவளாக மாறினாள் என்று காட்டியதன் வாயிலாக ஒரே இடத்திலேயே இவ்விரு வகை முரண்பட்ட பண்புகளும் அமைந்திருந்து, ஒரு பெரிய நண்மைக்காகத் தக்க நேரத்தில் தீய பண்பு செயற்படத் தொடங்கும் என்ற நுட்பத்தையும் கம்பர் உணர்த்துகிறார்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-12-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/article7718723.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 13: நதி மூலம்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kavi_2579299f.jpg
 

‘மதம்' என்பது இப்போது கெட்ட வார்த்தை ஆகிவிட்டது. அதை அப்படி ஆக்கியவர்கள் வேறு யாருமல்லர், மதவாதிகளே.

மதங்களுக்கு நதிகளை உவமையாகச் சொல்லுவார்கள்.

எங்கே உதித்தாலும், எந்தத் திசை நோக்கி ஓடினாலும் எல்லா நதிகளும் இறுதியில் கடலையே அடைகின்றன.

அது போன்றே மதங்களும் இறுதியில் ஒரே இலட்சியத்தையே அடைகின்றன.

உதிக்கும் இடத்தில் எல்லா நதிகளும் தூய்மை யாகவே இருக்கின்றன. தோன்றிய காலத்தில் எல்லா மதங்களும் தூய்மையாகவே இருந்தன.

ஆனால் ஓடும் வழியில் வந்து கலந்த சாக்கடை களால் நதிகள் தூய்மை இழந்ததைப் போன்றே இடையில் வந்து கலந்த இருண்ட கருத்துகளால் மதங்களும் தூய்மை இழந்துவிட்டன.

அழுக்கு நீரை அருந்தி, அதிலேயே குளிக்கும் மக்கள் நோய்களுக்கு ஆளாவதைப் போன்றே கெட்டுப்போன மதங்களைப் பின்பற்றுவோர் இருண்ட கருத்துகளால் மன நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மதம் என்பது இப்போது வெறும் ‘லேபி’ளாக மட்டுமே இருக்கிறது. புட்டிகளின் மேலே ‘மருந்து’ என்ற லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறது. உள்ளேயோ நஞ்சு நிரப்பப்பட்டிருக்கிறது.

மதம் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் போதைப் பொருள் என்றார் காரல் மார்க்ஸ். இந்தக் கருத்தை மதங்களின் இன்றைய நிலை யைப் பற்றிய விமர்சனமாகத்தான் கருத முடியும்.

உண்மையில் மதங்கள் அறியாமை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களைத் தட்டி எழுப்பவே தோன்றின.

புத்தரும், மகாவீரரும், இயேசு பெருமானும், வேத முனிவர்களும், முஹம்மது நபியும் மக்களுக்கு உதவுவதற்காகவே மதங்களை உண்டாக்கினர். அவர்களை ஏமாற்றுவதற்கல்ல.

பிற்காலத்தில் ஆதிக்க சக்திகளும், மதத் தலைவர்களும் தங்கள் சுயநலத்திற்காக மதங் களைப் போதைப் பொருளாக்கி மக்களைச் சுரண்டினர்.

பாலம் கட்டப் பயன்பட வேண்டிய கற்களால் சுவர்கள் எழுப்பப்பட்டன.

வெளிச்சம் தருவதற்காக ஏற்றப்பட்ட விளக்குகளால் வீடுகள் எரிக்கப்பட்டன.

ஆலிவ் இலையை அலகில் ஏந்தி வந்த வெள்ளைப் புறா வல்லூறு ஆகிவிட்டது. அதன் அலகில் மனிதச் சதை.

பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதம் காலப்போக்கில் ஆலகாலமாகிவிட்டது.

எல்லா மதங்களுக்கும் எது அடிப்படையோ அது மறக்கப்பட்டது.

எல்லா மதங்களையும் எது இணைக்கிறதோ அது மறைக்கப்பட்டது.

உயிர் நேயம் என்ற உயர்ந்த போதம் கற்பிக்க வந்த மதங்கள் பேதம் கற்பித்தன.

எல்லா மதங்களின் கைகளிலும் இரத்தக் கறை!

யூதன் ஒருவன் யூத குரு ஒருவரிடம் சென் றான். ‘‘ஐயா! நான் பாமரன். நம் வேதம் ‘தோரா’வோ மிகப் பெரியதாய் இருக்கிறது. அதை முழுதும் படிக்க என்னால் முடியாது. நான் ஒரு காலைத் தூக்கிக் கொண்டு நிற்பேன். வலியெடுத்து நான் கால் மாற்றுவதற்குள் நம் வேதத்தின் கருத்துகளைச் சுருக்கமாகக் கூற முடியுமா?” என்று கேட்டான்.

குருவுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘எனக்கு வயது 84. நான் 15 வயதிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கே தோரா புரிய வில்லை. நீ கால் மாற்றுவதற்குள் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமோ? போடா மூடா!’’ என்று திட்டி அனுப்பிவிட்டார்.

பாவம் அவன். பல குருமார்களைச் சந்தித்துக் கேட்டான். எல்லோரும் திட்டி அனுப்பி விட்டனர்.

இறுதியில் ஞானி ஒருவரிடம் சென்று கேட்டான். அவர் ‘‘நீ கால் மாற்றும் வரை காத்திருக்க வேண்டாம். நீ காலைத் தூக்கும் நேரத்தில் சொல்லிவிட முடியும்” என்றார்.

அவன் வியப்புடன், ‘‘சொல்லுங்கள்’’ என்றான்.

‘‘உனக்கு எது வெறுப்பானதோ, அதை நீ உன் சக மனிதருக்குச் செய்யாதே’’

(தால்முத் சப்பாத் 3/ஏ) என்றார் அந்த ஞானி.

‘‘இவ்வளவுதானா? வண்டி வண்டியாய் எழுதப்பட்டிருக்கிறதே. அவையெல்லாம் என்ன?’’ என்று அவன் கேட்டான்.

‘‘நான் சொன்னதுதான் வேதத்தின் சாரம். மற்றவையெல்லாம் அதன் விளக்கவுரைகள்’’ என்றார் அந்த ஞானி.

இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென் றால் அந்த ஞானி சொன்னது யூத மதத்தின் சாரம் மட்டுமல்ல; எல்லா மதங்களின் சாரமும் அதுதான்.

இந்த வாசகம் இடம்பெறாத சமய நூல்களே இல்லை. அதில் சொல் வேறுபாடு இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்து ஒன்றே.

தாவோயிஸத்தின் தாய் ஷாங்கான் இங்பியன் கூறுகிறது:

‘உன் அண்டை வீட்டானின் லாபத்தை உன் லாபமாக நினை.

அவனுடைய நஷ்டத்தை உன் நஷ்டமாக நினை’.

கன்ஃபுஷிய மத நூலான அனபெட்ஸ் (15.33) கூறுகிறது:

‘பிறர் உனக்குச் செய்யக்கூடாது என்று நினைப்பவற்றை நீ பிறருக்குச் செய்யாதே’.

ஹிந்து மத தர்மங்களையெல்லாம் தொகுத்துத் தரும் மஹாபாரதம் (5.1317) கூறுகிறது:

‘பிறர் உனக்கு எதைச் செய்தால் வேதனை என்று நினைக்கிறாயோ, அதை நீ பிறருக்குச் செய்யாதே’.

புத்த மதத்தின் ‘உடன் ஸ்வர்க்’ (5.18) கூறுகிறது:

‘எது உன்னைப் புண்படுத்தும் என்று நினைக் கிறாயோ, அதை நீ பிறருக்குச் செய்யாதே’.

கிறித்துவ மத நூலான புதிய ஏற்பாட்டில் (மத்தேயு 7.12) இயேசு பெருமான் கூறுகிறார்:

மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறார்களோ, அவை களை நீங்களும் அவர் களுக்குச் செய்யுங்கள்’.

இஸ்லாமியச் சமய நூலான ஹதீஸில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) கூறுகிறார்:

‘உங்களில் எவரும் தாம் விரும்புவதைத் தமது சகோ தரனுக்கும் விரும்பாதவரை அவர் இறை நம்பிக்கையாள ராக மாட்டார்’.

திருவள்ளுவர் (குறள் 326) கூறுகிறார்:

‘இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.’

மதவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர், தத்தம் மத நூல்களில் கூறப் பட்டிருக்கும் இந்த ஓர் அறத்தை மட்டும் கடைப்பிடித்திருந்தால் உலகில் போரும் பூசலும் ஏற்பட்டிருக்குமா?

மதவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோராலேயே பெரும்பாலும் போரும் பூசலும் ஏற்படுகின்றன. இதிலிருந்தே இவர்கள் தத்தம் மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் இந்த அறிவுரையை அறியாதிருக்கின்றனர் என்பது விளங்குகிறது. எனவே இவர்கள் மதவாதிகள் அல்லர்; இவர்கள் சமூக விரோதிகள்.

இங்கே மதம் படித்தவர்கள் மிகக் குறைவு. மதம் பிடித்தவர்களே அதிகம்.

மதத் தலைவர்களும் மனித நேயத்தை வற்புறுத் தும் இத்தகைய உயர்ந்த அறத்தைத் தம் மத மக்களுக்குப் போதிக்காமல் பேத உணர்வை உண்டாக்கும் புறச் சின்னங்களுக்கும் போலிச் சடங்குகளுக்குமே முக்கியத்துவம் தருகின்றனர்.

சக மனிதனை நேசிக்காத எவனும் தன்னை மதவாதி என்று கூறிக் கொள்ள முடியாது.

இவர்கள் உண்மையில் மத விரோதிகள்; மானுட விரோதிகள்; எனவே மகேசனுக்கும் விரோதிகள்.

இவர்களை நாத்திகர்கள் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் நாத்திகரான பெரியாரும் எல்லா மதங்களும் கூறிய அதே அறத்தையே மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ‘உயர்ந்த ஒழுக்கம்’ என்கிறார்.

‘ஒருவன் மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ, அதைப் போன்றே அவனும் மற்றவனிடம் நடந்துகொள்வதுதான் ஒழுக்கமாகும்.’

(பெரியாரின் சிந்தனைகள், தொகுதி 2, பக். 1084).

சரி, நாத்திகர்களாவது இதைக் கடைப் பிடிக்கிறார்களா என்றால் இல்லை; அவர்கள் ஆத்திகர்களை இழிவாக ஏசுவதே அவர்கள் ஒழுக்கமாக இருக்கிறது.

ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் ஒன்றில் மட்டும் ஒற்றுமை இருக்கிறது. தங்கள் தலைவர்கள் சொன்னதைக் கடைப்பிடிக்காமல் இருப்பதில்.

பிறகென்ன ஆத்திகம், நாத்திகம்? வெங்காயம்.

- இன்னும் முத்துக் குளிப்போம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-13-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article7746473.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 14: கண்ணுக்கு மை எதற்கு?

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kaviko_2588166f.jpg
 

காதலுக்குக் கண்ணில்லை என்கிறார்கள்; தவறு.

கண்ணில்லை என்றால் காதல் இல்லை.

கண்தான் காதலை உண்டாக்குகிறது.

கண்தான் காதலின் வாசல்.

கண் வழியாகத்தான் நுழைந்து இதயத்தில் இடம்பிடிக்கிறார்கள்.

சீதை இராமனைப் பார்த்தாள். காதல் உண்டாகி விட்டது. அவன் அவள் இயத்திற்குள் போய் விட்டான்.

அவன் எப்படி உள்ளே போனான்?

‘‘கண் வழியாகத்தான் நுழைந்திருக்கிறான், திருட்டுப் பயல்!’’

‘கண்வழி நுழையுமோர்

கள்வனே கொலாம்.’

அந்தக் காலத்திலிருந்தே பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிகலன் களால் தங்களை அலங்கரித்துக் கொள் வார்கள்.

எல்லாம் ஆண்களைக் கவர்வதற்காகத்தான்.

வெண்ணிலாவுக்கு வெள்ளையடிப்பதுபோல் இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண் களும் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். வயதானவர்களும் அலங்கரித்துக் கொள் கிறார்கள்.

நெடுங்காலமாகச் செய்து செய்து பெண்களின் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பழக்கம் இது.

‘பெடைமான் போன்ற மட நோக்கம், நாணம் இவற்றால் இவள் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். இவை போதாவோ. இவுளுக்கெதற்கு வேறு அணிகலன்கள்?’ என்று கேட்கிறார் வள்ளுவர்.

‘பிணையேர் மட நோக்கம் நாணும் உடையாட்கு

அணி எவனோ ஏதிலதந்து.’

நகைகள் அணிந்த அழகியை வருணிக்க வந்த காளிதாசன் ‘நகைகள் இவளை அணிந்திருக்கின்றன’ என்கிறார்.

பெண்கள் இரண்டே இரண்டு அங்கங்களில்தான் நகைகள் அணிவதில்லை. ஒன்று உதடு, மற்றொன்று கண்.

இவற்றில் நகைகள்தாம் அணிவதில்லையே தவிர, இவற்றிலும் அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

உதட்டில் சிவப்பு வண்ணம் ஏற்றிக்கொள்கிறார் கள். கண்ணில் கறுப்பு மை தீட்டிக்கொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில் புலவர்கள் பெண்களின் கண்களை வருணிக்கும்போது ‘உண்கண்’ என்பார்கள். அதாவது ‘உண்ணும் கண்’.

இது ‘மை உண்ணும் கண்’ என்று விரியும். ஆனால் ‘உண்கண்’ என்று மட்டுமே எழுதுவார்கள்.

அதாவது மற்றதையும் உண்ணும் என்பது குறிப்பு. எதை?

இராமனும் சீதையும் முதன்முறையாகச் சந்திக்கிறார்கள்.

அவனுடைய கண்களும் அவளுடைய கண்களும் ஒன்றையொன்று கவ்வி உண்கின்றன.

‘கண்ணொடு கண்ணினைக்

கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும்’

- என்கிறார் கம்பர்.

அதாவது ‘கண்களை உண்ணும் கண்கள்’ என்கிறார் கம்பர்.

‘கண்ணிரண்டும்

ஆளை விழுங்கும்

அதிசயத்தைக் கூறுவனோ?’

- என்கிறார் பாரதியார்

‘ஆளையே உண்ணும் கண்’ என்பது பாரதியின் பார்வை.

‘கண்டார் உயிருண்ணும்

தோற்றத்தாள் பெண்தகைப்

பேதைக்கு அமர்த்தன கண்’

அதாவது பெண்ணின் கண் உயிரையே உண்ணும் என்பது வள்ளுவரின் வாக்குமூலம்.

ஷாஜஹானும் மும்தாஜும் அரண்மனைப் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘கண்ணே! உலகில் வெண்முத்து உண்டு, கருமுத்து உண்டா?’’ என்று ஷாஜஹான் கேட்டான்.

‘‘உண்டே! பெண்கள் அழும்போது அவர்களு டைய கண் மையைக் கரைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு கண்ணீ்ர்த் துளியும் கருமுத்து தான்’’என்றார் மும்தாஜ்.

‘பெண்ணே!

உன் கண்ணை

இரக்கக் கண்ணீரால்

அலங்கரி

மையால்

அலங்கரிக்காதே

ஏனெனில்

மை கரைந்துவிடும்’

- என்று நான் எழுதியிருக்கிறேன்.

இதோ கண் மை பற்றி என் மை எழுதிய மற்றொரு கவிதை:

‘அவள் மை தீட்டக்

கையில்

கோலெடுத்துவிட்டாள்

யாருடைய விதி

எழுதப்படப் போகிறதோ?’

திருக்குறளில் ஒரு சுவையான குறள்.

வழக்கமாகக் கண்ணுக்கு மை தீட்டும் தலைவி அன்று தீட்டவில்லை.

‘‘ஏனடி, நீ இன்று கண்ணுக்கு மை தீட்டவில்லை?’’ என்று தோழி கேட்கிறாள்.

தலைவி கூறுகிறாள்: ‘‘என் காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார். நான் மை தீட்டும் போது கண்ணை மூட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். அந்தக் கண நேரப் பிரிவைக் கூட என்னால் தாங்க முடியாது.

‘கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து’

எந்தக் கவிதை வீணையை மீட்டும் விரல்களைப் போல் கவிஞனை மீட்டிப் புதுப் புதுப் பண்களை எழுப்புகிறதோ, அது உயர்ந்த கவிதை.

இந்தக் கவிதை உயர்ந்த கவிதை. இதனால் நான் மீட்டப்பட்டேன். இதோ எனக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த ராகங்கள்:

l

‘கண்ணில் ஏன்

மை தீட்டவில்லை

என்கிறாயா, தோழி!

சொல்கிறேன்

l

மை போட்டு

மயக்கினேன்

மயங்கிவிட்டார்

இன்னும் எதற்கு மை?

l

கண்ணுக்குள்

என் காதலர்

அவர் முகத்தில்

கரி பூசலாமா?

l

என் சூரியனை

இருட்டடிப்புச்

செய்யலாமா?

l

வீட்டிற்குள்ளே அவர்

வாசலில் எதற்கு

வரவேற்புக் கோலம்?

l

அவரையே தீட்டி

அழகு பெற்ற கண்ணுக்கு

மையலங்காரம் வேண்டுமா?

l

கண்ணை விட

மென்மையானவர்

காதலர்

கோல் பட்டால்

வலிக்காதோ?

l

அவர்தான்

சிக்கிவிட்டாரே

பிறகு எதற்கு வலை?

l

அவரை வைத்த இடத்தில்

வேறொன்றை வைப்பது

கற்புக்கு இழுக்கல்லவா?’

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-14-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article7773234.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு  அது

காவியம் ஆயிரம் கூறும்...!

யான் நோக்குங்கால் நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்...!

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 15: இல்லையென்பது இல்லை!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kaviko_2588166f.jpg
 

இம்ரவுல் கைஸ் புகழ்பெற்ற அரபுக் கவிஞன்; கொடை வள்ளல். ஒருநாள் வழியில் அவன் நெடுநாட்களாகத் தேடி வந்த பகைவன் எதிர்ப்பட்டான். உடனே அவன் வாளை உருவி அவனைக் கொல்லப் போனான்.

பகைவன் உடனே அவன் முன் மண்டியிட்டு, ‘‘நீ யார் எதைக் கேட்டாலும் தருகின்ற வள்ளல். நான் இப்போது ஒன்று உன்னைக் கேட்கப் போகிறேன். கொடுப்பாயா?’’ என்று கேட்டான்.

இம்ரவுல் கைஸ் ‘‘கொடுப்பேன்’’ என்றான்.

பகைவன் ‘‘உன் வாளைக் கொடு’’ என்று கேட்டான்.

இம்ரவுல் கைஸ், கொஞ்சம் கூடத் தயங்காமல் அவன் வாளைப் பகைவனிடம் கொடுத்தான்.

வாளைப் பெற்ற பகைவன் உடனே இம்ரவுல் கைஸைக் கொல்ல வாளை ஓங்கினான்.

இம்ரவுல் கைஸ் உயிர் தப்ப ஓடினான்.

யாரைக் கொடை வள்ளல் என்று சொல்ல வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இம்ரவுல் கைஸ்.

மாவீரன் கர்ணனைப் போர்க் களத்தில் அதர்மப் போரால் கொல்ல முயன்றனர். உடலெங்கும் ஆயுதங்கள் துளைத்திருந்தும் அவன் உயிர் போகவில்லை.

அவன் செய்த தர்மங்கள் அவன் உயிரைக் காத்து நின்றன.

கண்ணன் அந்தணர் கோலத்தில் வந்து “கர்ணா! உன் தர்மங்களின் புண்ணியத்தை எனக்குத் தானமாகக் கொடு” என்றான். கர்ணன் தயங்காமல் கொடுத்தான்.

தர்மத்தையே தர்மமாகக் கொடுத் தவன் கர்ணன் ஒருவனே!

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.

அடைக்கலம் தேடி வந்த புறாவுக்காக தன் உடலையே அரிந்து கொடுத்தான் சிபி.

ஏழை புலவனுக்கு உதவத் தன் தலையையே கொடுக்கத் துணிந்தவன் குமணன்.

தமிழுக்காகத் தன் உயிரையே கொடுத்தான் நந்திவர்மன்.

எத்தனையோ அரசர்கள் இருந்திருக் கிறார்கள். செல்வர்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால் ஏழு பேர்களைத்தான் வள்ளல்கள் என்று வரலாறு போற்று கிறது.

பாரி, எழினி, நள்ளி, மலையன், பேகன், ஓரி, காரி இவர்கள் கடையெழு வள்ளல்கள். இதிலிருந்தே முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

முதலெழு வள்ளல்கள்: செம்பியன், குமணன், விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன்.

இடையெழு வள்ளல்கள்: அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கர்ணன், அரிச்சந்திரன்.

தமிழில் ‘ஈகை’ ஓர் அற்புதமான சொல். ‘ஈவதற்குத்தான் கை’, ‘ஈவதுதான் கை’ என்று அது உணர்த்துகிறது.

கேட்டுக் கொடுத்தால் பிச்சை; கேளாமல் கொடுத்தால் ஈகை.

சில்லறை கொடுத்தால் பிச்சை; பெருந்தொகை கொடுத்தால் ஈகை.

எப்படிக் கொடுத்தால் ஈகை என்பதை விளக்கும் வகையில் திருவள்ளுவர் ஒரு குறள் இயற்றியிருக்கிறார்.

’இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள’

அற்புதமான குறள் இது. தோண்டத் தோண்டச் சுரக்கும் மணற்கேணி போல் சிந்திக்க, சிந்திக்கப் பொருள் சுரக்கும் குறள் இது.

இனி உரைகளைக் காண்போம்.

மணக்குடவர்: இல்லை என்று கேட்டு வந்தவரிடம் இல்லை என்று கூறாமல் ஈவது குடிப்பிறந்தார் குணமாம்.

பரிதியார்: தன்னிடத்தில் வந்து ‘இல்லை’என்று சொல்லிப் பெற்றவன் வேறு ஒருவனிடத்தில் சென்று இல்லை என்று சொல்லாதபடி, அவன் வறுமை தீரக் கொடுப்பது குடிப் பிறந்தார்க்கு வர வித்தை.

பரிப்பெருமாள்: ஒருவன் தன்னிடம் வந்து இல்லை என்று சொல்வதன் முன் அவனுடைய வறுமையைக் குறிப்பால் அறிந்து கொடுத்தல்.

நாமக்கல் இராமலிங்கம்: தன்னை வந்து இரந்தவர்க்குத் தான், ‘நான் தரித் திரன் ஆனேன்’ என்ற துன்ப மொழிகளைச் சொல்லாமல் இயன்றதைக் கொடு.

கவிராசர்: ஞான தியானம், பொருள், பந்துக்கள் இல்லையே எனத் துன்பத் தோடு மொழியாத தன்மை ஈகையினால் வரும்.

பரிமேலழகர்: ஒருவன் உன்னிடம் ‘இல்லை’என்று கேட்டுவந்தால், இப்படி ஒருவன் கேட்டு வந்தான் என்று வேறு யாரிடமும் கூறி அவனை அவ மதிக்காமல் இரந்தவனுக்கு மறுக்காமல் கொடுக்க வேண்டும்.

ச.தண்டபாணி தேசிகர் கூறும் உரைகள்: இல்லை என்பவன் இனி எனக்கு எத்துன்பமும் இல்லை என்று கூறும் வண்ணம் ஈதல்.

செல்வம் பெற்று வறியவரைக் காத்தல் இல்லாதவன், தருமம் முதலான புகழ் இல்லாதவன் எனப் பிறர் இழிந்துரைக்க அதனைக் கேட்க அஞ்சியாவது ஈதல்

கா.சுப்பிரமணிய பிள்ளை:கொடுப்பவனை வறியன் என்று இரப்பவன் பிறரிடம் சொல்லாதபடி ஈதல்.

இதுவரை ஒன்பது விதமான உரை களைக் கண்டோம். இனி வருவன என் உரைகள்:

உன்னிடம் இல்லை என்று கேட்டு வந்தவன் மறுபடியும் உன்னிடம் வந்து இல்லை என்று கூறாதபடி கொடு.

‘நான் கேட்டேன், அவன் இல்லை யென்று சொல்லிவிட்டான்’ என்று அவன் பிறரிடம் சொல்லாதபடி கொடு.

உன்னிடம் ஒருவன் ‘இல்லை’ என்று கேட்டு வருகிறான். கொடுப்பதற்கு உன்னிடமும் ஒன்றும் இல்லை. இதை நீ அவனிடம் சொன்னால் அவன் வருத்தப்படுவான். எனவே, நீ அவ்வாறு கூறாமல் மவுனமாக இருந்துவிடு. கேட்டு வந்தவன் உன் நிலை அறிந்து போய்விடுவான். இவ்வாறு நீ பேசாமல் இருத்தலே உரையாமை - ஈதலாகும்.

கொடுக்கிற அளவுக்கு உன்னிடம் வசதி இல்லையென்றாலும் உன்னால் முடிந்த அளவுக்குக் கொடு.

‘எனக்குத் தாய் தந்தை இல்லை; ஆதரிப்பவர் யாருமில்லை. நான் அனாதை’ என்று கூறிக் கேட்டு வருவோனிடம் இனி நீ அவ்வாறு கூற வேண்டாம். ‘உன்னை ஆதரிக்க நான் இருக்கிறேன்’ என்று கூறிக் கொடு.

நற்குடியில் பிறந்தவர்கள் வறியவராக இருந்தால் பொருளீட்டியாவது ஈகை புரிவார்களே தவிர, இல்லை என்று கேட்டு வருவோர்க்கு இல்லை என்று கூற மாட்டார்கள்.

இல்லையென்று கேட்டு வந்தவர்க்கு இல்லையென்று கூறாமல் கொடுக் கும் குணம் எல்லாருக்கும் இருக் காது; நற்குடியில் பிறந்தவரிடமே இருக்கும்.

வட ஆர்க்காடு வேலூரில் திருக்குறள் தொடர் சொற்பொழிவாற்றி வந்தேன். அப்போது இக்குறளுக்கு மேலே கூறிய உரைகள் எல்லாவற்றையும் கூறினேன்.

ஒருவர் எழுந்தார், ‘‘ஐயா! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருக்கிற எல்லாவற்றையும் கொடுத்துவிட வேண் டும் என்றாகிறது. அப்படிக் கொடுத்து விட்டால் நம்முடைய கதி என்ன?’’ என்று கேட்டார்.

நான் திடுக்கிட்டேன். ஒரு கணம்தான். உடனே நான் சொன்னேன்:

‘‘நீங்கள் கேட்ட கேள்விக்கும் இந்தக் குறளில் பதிலிருக்கிறது. ‘இல்லை’ என்னும் துன்பமான சொல்லை நீ பிறரிடம் சென்று சொல்லாதவாறு, உனக்கென்று வைத்துக் கொண்டு கொடு என்ற பொருளும் இக்குறளில் இருக்கிறது’’ என்றேன்.

இப்பொருள் நான் சிந்திக்காதது. ஒருவர் கேள்வி கேட்பதால் தோன்றியது. இக்குறளை நினைத்து வியந்தேன்.

நீங்களும் கூடச் சிந்திக்கலாமே.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-15-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article7826259.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 16: விதியை விதியால்தான் வெல்ல முடியும்

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
muthu_2620160f.jpg
 

நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். பாதையில் கிடந்த கல்லில் காலிடறிக் காயம் ஏற்பட்டு விட்டது. இரத்தம் சிந்தியது.

உடனே நாம், ’எல்லாம் தலைவிதி. எனக்கு இப்படி நடக்க வேண்டும் என்று இறைவன் என் தலையில் எழுதிவைத்துவிட்டான்’ என்கிறோம்.

இதைவிடப் பெரிய மூடநம்பிக்கை வேறொன்றில்லை.

எவன் தலையிலும் இறைவன் எதையும் எழுதுவதில்லை.

அப்படியென்றால் விதி என்று ஒன்று இல்லையா?

இருக்கிறது. மேலே காட்டிய எடுத்துக் காட்டிலேயே விதி இருக்கிறது.

கல் கடினமானது; கால் மென்மையானது. கடின மானதின் மேல் மென்மையானது மோதினால் மென்மையானது சேதமடையும் என்பது விதி.

இது இயற்கை விதி (Law of Nature). இதைத்தான் இறைவன் எழுதி வைத்திருக்கிறான்.

இது பொதுவிதி. யாருக்கும் பொருந்தும். கல்லில் யார் கால் மோதினாலும் காயம் உண்டாகத்தான் செய்யும்.

பார்த்து நடந்தால் கல்லில் இடறாமல் சென்றிருக்கலாம்.

எனவே இடறுவதும் இடறாமல் இருப்பதும் நம் கையில் இருக்கிறது. நம் நெற்றியில் இல்லை.

எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

காரணமின்றிக் காரியமில்லை.

துவரம் பருப்பு விலையேறியிருக்கிறதென் றால், விளைச்சல் இல்லை அல்லது பதுக்கி விட்டார்கள் அல்லது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன என்பவை காரணங்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்விளைவு உண்டு.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிட்டதா? தவறான உணவை உண்டிருக்கிறோம் என்று பொருள்.

இவை எல்லாமே இயற்கை விதிகளே. இறைவன் சும்மா இஷ்டத்துக்கு எழுதுவதில்லை.

கலீஃபா உமர் காலத்தில் அரசுப் படை ஒரு சிற்றூரில் முகாமிட்டிருந்தது. அந்த ஊரில் கொள்ளை நோய் பரவிக் கொண்டிருந்தது.

படைத் தளபதி படையைப் பாதுகாப்பதற்கு நோயில்லா இடத்திற்குக் கொண்டு செல்ல கலீஃபாவிடம் அனுமதி கேட்டார். கலீஃபா அனுமதித்தார்.

அவையில் இருந்த ஒரு பெரியவர், ‘கலீஃபா! நீங்கள் இறைவன் விதிக்கு (கதர்) எதிராக நடக்கிறீர்கள்’ என்று குற்றம் சுமத்தினார்.

கலீஃபா உமர், ‘‘இல்லை பெரியவரே! நான் இறைவனுடைய விதியிலிருந்து தப்பி ஓட வில்லை. ஆனால் நான் வேறெங்கும் செல்ல வில்லை. இறைவனுடைய மற்றொரு விதியிடமே செல்கிறேன்” என்றார்.

அதாவது ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவுகிறதென்றால் அவ்வூரின் சுகாதார மற்ற சூழலே காரணம். சூழல் அசுத்தமாக இருந்தால் நோய்கள் உண்டாகும் என்பது விதி. சுத்தமான சூழல் இருந்தால் நோய் உண்டாகாது என்பதும் விதி.

ஆபத்தான சூழலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்வது நம் பொறுப்பு. அதாவது நமக்கு நடப்பதை விதியென்று நொந்து உட்காரக்கூடாது அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும்.

நாமிருக்கும் இடத்தில் தீப்பற்றிக் கொண்டால், ‘சரி, இது நம் விதி’ என்று நினைத்து அங்கேயே நாம் இருப்போமா?

நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடுவோமல்லவா?

நோய் வந்துவிட்டால் விதியென்று சும்மா இருக்கிறோமா? மருத்துவரைத் தேடி ஓடுகிறோமல்லவா?

நோய் எப்படி விதியோ; அப்படியே மருந்து என்பதும் விதியே.

உங்களுக்குத் துன்பம் நேர்ந்தால் விதியே என்று நொந்து கொண்டு சும்மா இருக்காதீர்கள். அதிலிருந்து வெளியேறுவதற்கென்று ஒரு விதி இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.

அதாவது விதியை விதியால்தான் வெல்ல முடியும்.

முற்பிறவியில் செய்த வினைகளே இப்பிறவியில் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்று சில மதங்கள் கூறுகின்றன.

இதன்படியும் நம் இன்ப துன்பங்களுக்கு நாம் செய்த வினைகளே காரணமன்றி இறைவனுடைய எழுத்தல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நாம் பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகளே நம் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். சுற்றுப்புறச் சூழலும் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறார்கள்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறந்த இருவரில் ஒருவர் நச்சுப் புகை கக்கும் ஆலைகள் இருக்கும் ஊரில் வசிக்கிறார். மற்றொருவர் சுவிட்ஸர்லாந்து போன்ற ஆரோக்கியமான சூழலில் வசிக்கிறார். இவர்கள் இருவருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது.

ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிடுகின்ற னர். அத்தனை பேருடைய ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் அவை ஒரே மாதிரி இரா.

இங்கே விபத்துக்குக் காரணமான விதி அத்தனை பேருடைய தனி விதிகளையும் அழித்துவிடுகிறது.

பொறியியல் அறிஞர் ஒருவர் ஒரு கட்டிடம் கட்டுகிறார். இந்தக் கட்டிடம் நூறாண்டுக் காலம் இருக்கும் என்கிறார். அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட இடம், அதைக் கட்டுவதற்காகப் பயன் படுத்தப்பட்ட இரும்பு, சிமெண்ட், மணல் இவற்றின் தரம், கலவைச் சதவீதம் இவற்றையெல்லாம் கணக்கிட்டே அப்பொறியியல் அறிஞர் கட்டிடத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறார்.

இதன் பொருள் நூறாவது ஆண்டில் அந்தக் கட்டிடம் அப்படியே சட்டென்று உடைந்து விழுந்துவிடும் என்பதல்ல.

அதை நன்கு பராமரித்து வந்தால் அது நூறாண்டுக்கும் மேல் இருக்கும். சரியாகப் பராமரிக்காவிட்டால் நூறாண்டுக்குள்ளேயே சிதிலமாகிவிடும்.

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அடுத்த நாளே ஒருவன் கட்டிடத்திற்கு அடியில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கட்டிடம் அந்தக் கணமே உடைந்து பொடிப் பொடியாய் சிதறிவிடும்.

நாம் அதைக் கட்டிய பொறியியல் அறிஞனிடம் போய், ‘‘இந்தக் கட்டிடத்தின் ஆயுள் நூறாண்டு என்றாயே, இப்போது என்ன சொல்கிறாய்?’’ என்று கேட்க முடியாது.

இங்கு வெடிகுண்டு என்ற சக்திவாய்ந்த விதி நூறாண்டு இருந்திருக்க வேண்டிய கட்டிடத்தைத் தகர்த்துவிட்டது. நம்முடைய ஆயுளின் நிலையும் இப்படித்தான்.

பாரம்பரிய உடல்வலிமை, பெற்றோர் உடல் வலிமை, பெற்றோர் புணர்ந்த நேரம், கருப்பை யில் இருந்தபோது தாய் உண்ட உணவு இவையெல்லாம் சேர்ந்து நம் உடலின் வலிமையையும் ஆயுளையும் நிர்ணயிக்கின்றனர். உடலை நன்கு பராமரித்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளை விட நீண்ட நாள் நாம் வாழலாம்.

புகைத்தல், குடித்தல் போன்ற தீய பழக்கங்களால் உடலைக் கெடுத்துக் கொண்டால் சீக்கிரம் போய்ச் சேர வேண்டியதுதான்.

தற்கொலை செய்துகொள்வது, விபத்தில் இறப்பது போன்றவை கட்டிடத்திற்கு வெடி குண்டு வைத்ததைப் போன்றதுதான்.

விதியென்றாலே கெட்டது, துன்பம் தருவது என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு.

நெருப்புக்குச் சுடுவதும் ஒளி தருவதும் விதி.

நெருப்பினால் பயனடைந்துகொள்வதும், பாதிப்பை அடைவதும் நம் பொறுப்பு.

குயிலின் பாடல், மயிலின் ஆடல், ஆண் பெண் கூடல், பெளர்ணமி நிலா, இளவேனிற்காலப் பூங்கா, அறுசுவை உணவு, இதமான தென்றல் இவையும் விதியின் விளைவுகளே. இவையெல்லாம் துன்பம் தருபவையா?

இறைவன் வகுத்த இயற்கை விதி நம் நன்மைக்கே அன்றி, தீமைக்கல்ல.

சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். முடியாது.

நெருப்பு சுடும். அதை எவன் மதியாலும் வெல்ல முடியாது.

‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்’

என்பார் வள்ளுவர்.

மேலும், நெருப்பைச் சுடாமல் செய்ய வேண்டிய அவசியமென்ன?

சமைப்பது எப்படி? குளிர் காய்வது எப்படி? விளக்கேற்றுவது எப்படி?

விதியைப் பற்றிய தவறான கருத்துதான் நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-16-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7876142.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 17: கவிதைக்கு மதம் கிடையாது!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kaviko_2629309f.jpg
 

மும்பை சியோன் மாதர் சங்கக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

‘‘இந்தக் கூட்டம் எதற்காகக் கூட்டப் பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நம் சங்கத்திற்காக ஒரு சொந்தக் கட்டிடம் தேவைப்படுகிறது. அதுவும் விரைவாக. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்கிறேன்’’ என்றார் சங்கத் தலைவி.

ஆளாளுக்கு ஒரு யோசனை கூறினார்கள். தலைவிக்கு எதிலும் திருப்தி இல்லை.

இறுதியாக ஒரு பெண்மணி எழுந்தார். ‘‘பைஸ் அஹ்மத் பைஸை வரவழைத்தால் நிதி திரட்டுவது மிக எளிதாகிவிடும்’’ என்றார்.

‘‘அதெப்படி சாத்தியம்? அவர் பாகிஸ்தான் கவிஞர். அவரை எப்படி இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும்? அதுவும் இரு நாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவுகிறது.’’

‘‘பைஸ் இருப்பதுதான் பாகிஸ்தான். அவருடைய கவிதைகளுக்கு இந்தியாவில்தான் ரசிகர்கள் அதிகம்.’’

‘‘உண்மைதான். குயிலின் பாட்டு அது தங்கியிருக்கும் தோட்டத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. அதை எல்லோரும் ரசிக்கலாம்!’’

‘‘ஆம்! கவிஞர்கள், கலைஞர்கள் பொதுவானவர்கள். மனிதர்கள் கிழித்த நாட்டு எல்லைக் கோடுகள் அவர்களைத் தடுப்பதில்லை. ஏனெனில் அவர்கள் பறவைகள்.’’

‘‘உண்மைதான். வேறோரு நாட்டிலிருந்து வருகிறது என்பதற்காக நதியை நாம் தடுக்கிறோமா? காற்று, ஒளி போன்று கவிஞர்களும் கலைஞர்களும் எல்லோருக்கும் சொந்தம்.

‘‘சரிதான், பைஸ் பாகிஸ்தானில் வசிப்பவராக இருக்கலாம். ஆனால், அவர் கவிதை இந்தியாவுக்கும் சொந்தம். அவர் மதத்தால் முஸ்லிமாக இருக்கலாம். ஆனால் அவர் கவிதைக்கு மதம் கிடையாது.’’

‘‘ஆம். கவிஞர்களும் கலைஞர்களும் மனிதனின் மூல அடையாளத்தைத் தொடுபவர்கள். அதன் மூலம் மனித சமுதாயத்தை ஒன்றிணைப்பவர்கள். அவர்களை நம்முடைய அரசியல், மதம் என்ற குறுகிய கூடுகளுக்குள் அடைப்பது மடத்தனம்.

இறுதியில் பைஸை அழைப்பது என்று ஏக மனதோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த பிரச்சினை, அவரை எப்படி அழைப்பது?

‘‘இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைத் தவிர வேறு யாராலும் பைஸைக் கொண்டு வர முடியாது. எனவே அவரிடமே போவோம்.’’

மாதர் சங்கக் குழு ஒன்று இந்திரா காந்தியைச் சந்தித்துத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.

அவர் கொஞ்சம் கூடத் தயங்கவில்லை. உடனே பாகிஸ்தான் பிரதமர் அய்யூப்கானிடம் தொலைபேசியில் பேசினார்.

‘‘எங்கள் மக்கள் பைஸைக் கேட்க விரும்புகிறார்கள். அவரை அனுப்பி வையுங்கள்’’ என்று கூறித் தொலைபேசியை வைத்துவிட்டார்.

அய்யூப்கான் ஒருகணம் திடுக்கிட்டார். உடனே அதிகாரிகளை அழைத்து, ‘‘பைஸ் எங்கிருந்தாலும் அவரை அழைத்து வந்து டெல்லிக்கு அனுப்பி வையுங்கள். ராணுவ விமான தளத்தில் என் தனி விமானம் நிற்கிறது. அதில் அனுப்பி வையுங்கள்’’ என்றார்.

அதிகாரிகள் ‘வீஸா’ என்றார்கள்.

‘‘அவர் கவிஞரய்யா! அவருக்கு எதற்கு ‘வீஸா’? நம்மை வெறுப்பவர்கள் நம் கவிஞனையாவது விரும்புகிறார்களே! அது பெரிய விஷயம். பைஸை அனுப்பி வையுங்கள்.’’

பைஸ் இந்தியா வந்து சேர்ந்தார். பல இடங்களில் அவருடைய கவிதை வாசிப்பு. ஏராளமான கூட்டம். மக்கள் வெறிபிடித்துப் போய் ரசித்தார்கள்.

வேண்டிய நிதி திரண்டுவிட்டது.

இந்த அற்புதமான நிகழ்வின் நிரூபணமாக இன்றும் நின்றுகொண்டிருக்கிறது, மும்பை சியோன் மாதர் சங்கக் கட்டிடம்.

நஸ்ருல் இஸ்லாம் என்ற கவிஞர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு நூற்றாண்டு விழா. வங்காள தேச மக்கள் அதை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

இந்தியப் பகுதியில் இருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள், ‘நஸ்ருல் இஸ்லாம் வங்காள தேசத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். முஸ்லிமாக இருக்கலாம். அவர் வங்காள மொழிக் கவிஞர். அந்த வகையில் அவர் எங்களுக்கும் கவிஞர்’ என்று கூறி அவர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்.

அதைப் போலவே ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழாவை மேற்கு வங்காளத்தவர் மிகச் சிறப்பாகக் கொண்டாடியபோது, வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களும் அவ்விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

இதுதான் இந்தியக் கலாச்சாரம்.

பாடகர் பாகிஸ்தானி என்பதற்காக அவர் நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்தவிடாமல் எதிர்ப்பதல்ல.

கவிஞர்களும், கலைஞர்களும் எதிர்முகச் சிந்தனைகளான வெறுப்பு, பகைமை ஆகியவற்றை நீக்கி அன்பையும் மனித நேயத்தையும் பரப்புபவர்கள். எனவே அவர்களை அரசியல், மதப் பார்வையால் எதிர்ப்பவர்கள், அன்பையும், மனித நேயத்தையும் மறுப்பவர்கள் ஆவர்.

இசையை ரசிக்காதவன் ஆபத்தானவன் என்று ஷேக்ஸ்பியர் கூறுகிறார்.

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் பாதுகாப்புக்காக நிலவறையில் தங்கியிருந்தார்கள்.

மேலே ஜெர்மானியர்கள் குண்டுமாரி பொழிந்துகொண்டிருந்தனர்.

கீழே அந்த ஆபத்தான நிலையிலும் ஆங்கிலேயர்கள் ஒரு கவிஞனின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

எந்தக் கவிஞனைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்?

மேலே எந்த நாட்டுக்காரன் குண்டுமாரி பொழிந்துகொண்டிருந்தானோ, அந்த ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த கெதே என்ற கவிஞனைத்தான் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இதுதான் கவிதையின் வெற்றி.

ஜெர்மானியப் படைகள் செய்ய முடியாததை ஒரு ஜெர்மானியக் கவிஞன் சாதித்துவிட்டான்.

இடத்தைப் பிடிப்பது அற்ப வெற்றி. இதயத்தைப் பிடிப்பதுதான் பெரிய வெற்றி.

தங்கள் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்த ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்தவராயிற்றே கெதே, அவரைக் கொண்டாடுவதா என்று ஆங்கிலேயர்கள் நினைக்கவில்லை.

அவர் உலகக் கவிஞர்; அவரைக் கொண்டாடுவது நம் கடமை என்று அவர்கள் நினைத்தனர்.

அதுதான் ஆங்கிலேயர்களுடைய பண்பாடு.

ஒரு மனிதனின் பண்பாடு!

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-17-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article7903541.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக் குளிக்க வாரீகளா 16 ல் வரும் விதிக்குச் சமமான ஒரு கதை சமீபத்தில் படித்திருந்தேன்:

  1)--- ஒருவன் ஒரு பழமரத்துக்கு கல் எறிந்தான். அது ஒரு வழிப்போக்கனுடைய தலையில் பட்டு ரத்தம் வருகின்றது. அதைப் பார்த்துவிட்டும் கல் எறிந்தவன் பாராமல் போய் விடுகின்றான். எறி வாங்கியவன் வேதனைப் படுகின்றான். இச் செயலால் எறிந்த  அவனுக்கும் அந்தக் கல்லுக்கும் துன்பத்துக்கும் ஒரு சம்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது.

ஒருநாள் இவன் வீதியில் போகும்போது வேகமாய் வந்த வாகனத்துக்கு ஒதுங்கும் போது தடுமாறி விழுந்து கீழே கிடந்த கல்லில் மோதுண்டு துன்பப் படுகின்றான். அவனுக்கும் கல்லுக்கும் துன்பத்துக்குமான சம்பந்தம் இவ்வகையில் முடிகின்றது...!

 

2)--- அவன் அந்தக் காயம் பட்ட வழிப்போக்கனிடம் உடனே ஓடிச் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவருக்குத் தேவையான உதவிகள் செய்துவிட்டு திரும்புகின்றான். இதனால் அவனுக்கும் கல்லுக்கும் அவரது மிகக் குறைவான துன்பத்துக்கும் சம்பந்தம் ஏற்படுகின்றது. ஆனால் முதலாவதுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. இது எப்படித் தீருகின்றது?...!

ஒருநாள் ஒரு விஷேசத்துக்கு இவன் நன்றாக உடைஉடுத்திக் கொண்டு செல்கின்றான். அப்பொழுது பாதையில் கிடந்த சாணியில் அழுத்தமாக மிதித்து விடுகின்றான். பக்கத்தில் தண்ணி இல்லை. கவலையுடன் சற்றுத் தூரம் நடக்கின்றான், வேலியோரத்தில் ஒரு கல் தென்படுகின்றது. உடனே அக் கல்லில் தனது காலை நன்றாக உரசித் துடைத்துவிட்டு திருப்பதியுடன் செல்கின்றான்....!

இப்படியாகத்தானே விதி தனது ஆற்றலை முடித்துக் கொள்கின்றது...!

நான் படித்ததின் சாராம்சம் இதுதான்,...!  :)

உங்களின் தொடருக்குள் நுழைந்ததற்கு மன்னிக்கவும்  நவீன்....!

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 18: பொம்மலாட்டம்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
shiva_2637888f.jpg
 

இறைவன் ஒருவனே. ஆக்கல், காத்தல், நீக்கல் ஆகிய முத்தொழிலையும் அவனே செய்கிறான்.

இறைவன் இந்த முத்தொழிலைச் செய்ய மூன்று பேரை நியமித்தான். பிரம்மன், திருமால், ருத்திரன் ஆகியோரே அம்மூவர் என்று பிற்காலத்துப் புராணம் கதை புனைந்தது.

இது ஓரிறைக் கொள்கை என்ற உண்மையைக் குழப்பியதோடு பல பிரச்சினைகளை உண்டாக்கி விட்டது.

பாமர மனத்தினர் பிரம்மன், திருமால், ருத்திரன் ஆகியோரை மூன்று இறைவர்களாகக் கருதத் தொடங்கினர். அப்படிக் கருதுவதோடு நின்றுவிடா மல், இந்த மூவருள் யார் பெரியவர் என்று விவாதங்கள் செய்தனர். கதைகள் கட்டினர்.

சிவபெருமானே பெரியவர் என்பதைக் காட்டச் சைவர்கள் ஒரு கதை கட்டினர். சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக அக்கினித் தூணாய் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பிரம்மன் அன்னமாகி அவருடைய முடியையும், திருமால் பன்றி அவதாரம் எடுத்து அவருடைய அடியையும் தேடிச் சென்றனர். சிவபெருமான் முடியைக் கண்டேன் என்று பிரம்மன் பொய்யுரைத்தார். மண்ணை எவ்வளவு தோண்டியும் சிவபெருமா னுடைய அடியைக் காண முடியாமல் திருமால் தோல்வியோடு திரும்பினார் என்பது அந்தக் கதை.

திருமாலே ஆதிமூலம் எனக் காட்ட வைணவர் கள் ஒரு கதை புனைந்தனர். முதலையிடம் அகப் பட்ட யானை ஒன்று எவ்வளவு முயன்றும் முதலை யிடமிருந்து தன்னை விடுவிக்க முடியாத நிலைகண்டு, ‘ஆதிமூலா’என்று அழைத்தது. பிரம்மனும், சிவபெருமானும் இவ்வோசையைக் கேட்டனர். ‘நான்’ஆதிமூலம் ‘இல்லை’ என்று பேசா மல் இருந்துவிட்டனர். திருமால் அவ்வோசையைக் கேட்டவுடன் ‘ஆகா, தன்னையல்லவா ஒரு பக்தன் அழைக்கிறான்’ என்று சங்கு, சக்கர சமேதராய் கருட வாகனத்தில் ஏறி வந்து முதலையின் தலையை சக்கரத்தால் துண்டாடி யானையைக் காத்தார்.

இந்தக் கதைகளைக் கட்டியவர்களுக்குச் சிவபெருமானும் திருமாலும் வேறு வேறல்லர்; ஒருவரே. இவை ஒரே இறைவனுக்கான இரண்டு பெயர்கள் என்பது தெரியவில்லை.

‘அரியும் சிவனும் ஒண்ணு. இதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்பது பழமொழி. இது பாமரர் உருவாக்கியது. பாமரர் பெற்றிருந்த ஞானத்தைப் படித்தவர்கள் பெறவில்லை.

இதில் வியப்பேதும் இல்லை. அறிவு ஞானம் பெறத் தடையாக இருக்கும் திரை.

சரியான முகவரி இருந்தால்தான் கடிதம் உரியவரிடம் சென்று சேரும்.

நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். வேண்டுகிறோம். ஆனால் இறைவனைப் பற்றிய சரியான பார்வை நமக்கு இல்லையென்றால், நம் பிரார்த்தனை இறைவனிடம் சென்று சேராது.

இராமாயண காவியத்தைப் பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்தாக,

‘உலகம் யாவையும்

தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும்

நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை

யாட்டுடை யாரவர்

தலைவர் அன்னவர்க்கே

சரண் நாங்களே’

- என்று பாடுகிறார். இது ஞானப் பாடல். கம்பரால் மட்டுமே இப்படிப் பாட முடியும்.

கம்பர் யாரிடம் பிரார்த்தனை செய்கிறார்? சிவ பெருமானிடமா? திருமாலிடமா? முருகனிடமா? விநாயகரிடமா? இல்லை அருகனிடமா?

யாரிடத்திலும் இல்லை. ஏக இறைவன் எவனோ அவனிடம் பிரார்த்தனை செய்கிறார். இதன் மூலம் அவர் சமயச் சார்பற்ற ஞானி; பொதுவானவர் என்று நிரூபிக்கிறார்.

உலகங்கள் யாவற்றையும் யார் படைத்தாரோ, அவரை வணங்குகிறார்.

உலகம் என்பது வெறும் கோளத்தை மட்டுமல்ல; அவற்றில உள்ள தாவர ஸங்கமப் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும்.

‘தாம் உளவாக்கல்’- புதிதாகப் படைத்தல் அல்ல. தன்னிடத்தில் இருந்ததை வெளிப் படுத்துதல்.

ஈஸ்வரனின் கல்யாண குணங்களே படைப்பு களாக வெளிப்பட்டன என்று வைணவம் கூறும்.

இறைவனுடைய சிபத்துகளே (பண்புகள்) படைப்புகளாக வெளிப்பட்டன என்று சூபித்துவம் கூறுகிறது.

எல்லாப் பொருள்களும் இறைவனுக்குள் மறைந்து இருந்தன (தாமுள). அவற்றையே இறைவன் வெளிப்படுத்தினானே அன்றிப் பொதுவாகக் கருதப்படுவதுபோல் இறைவன் உலகங்களைப் புதிதாகப் படைக்கவில்லை.

‘உ’ பிள்ளையார் சுழி. அதைக் கொண்டு தொடங்குவது மரபு. எனவே உலகம் என்று தொடங்குகிறார். மேலும் உலகம் மங்கலச் சொல். அதனால் அதைக் கொண்டு தொடங்குகிறார்.

‘நிலைபெறுத்தல்’- ஒவ்வொரு பொருளையும் படைத்து அதனை அதன் விதிப்படி நிலை நிறுத்துதல்.

‘நீக்கல்’- எதற்கும் அழிவில்லை. ஒருபொருள் நீக்கப்படும். அது வேறொரு வடிவில் இருக்கும்.

நாம் விதைக்கும் விதை அழிவதில்லை. அதுதான் மரமாக மாறுகிறது. அதுபோலவே முட்டை குஞ்சாகிறது; குஞ்சு கோழியாகிறது.

எனவே மரணத்திற்கு அஞ்ச வேண்டியதில்லை.

காப்பது இறைவனுடைய கடன் - ‘மரம் வைத்தவன் நீரூற்றுவான்.’

காப்பவனையே வணங்க வேண்டும். இறைவனைத் தவிர வேறு யாரும் காக்கும் சக்தி பெற்றவரில்லை. எனவே மற்றவர்களை வணங்கக் கூடாது.

உலகத்தைப் படைத்துக் காத்து அழிப்பவனே தலைவனாக இருக்க முடியும்.

‘நீங்கலா’ - முத்தொழிலையும் அவன் செய்து கொண்டேயிருக்கிறான். இவற்றில் எத்தொழிலும் அவனை விட்டு நீங்குவதில்லை.

‘நீங்கலா’ படைப்பை ஒருவரும், காத்தலை ஒருவரும், நீக்கலை ஒருவரும் செய்கிறார்கள் என்பதைக் கம்பர் இதன் மூலம் மறுக்கிறார்.

‘அலகிலா விளையாட்டு - முத்தொழிலையும் இறைவன் விளையாட்டாய்ச் செய்கிறான். அதுவும் அளவிட முடியா விளையாட்டு.

விளையாட்டு என்றாலும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உண்டு. அதைப் போலவே முத்தொழில்களிலும் ஊழ் போன்ற விதிகள் உண்டு. அதை மீறி ஆட மாட்டான்.

முத்தொழிலும் பொம்மலாட்டம் போன்றது. அவன் ஆட்டுகிறான். நாம் ஆடுகிறோம்.

முத்தொழில் ஒரு வகையில் கண்ணாமூச்சி ஒளித்தல் கண்டுபிடித்தல்.

எல்லா விளையாட்டுகளையும் ஈரணிகள், முரண்பட்ட இரண்டு சக்திகள் ஆடுகின்றன,

‘அவர் தலைவர்’ பொதுவாகப் புலவர்கள் கடவுள் வாழ்த்தில் அவர்கள் வணங்கும் இறைவனையே வாழ்த்துவர்.

கம்பர் அப்படிப் பாடவில்லை. அவர் சமயச் சார்பற்றவர் என்பதைக் காட்டவே, சிவனையோ, திருமாலையோ அழைக்காமல் தலைவர் என்ற பொதுச் சொல்லால் அழைக்கிறார்.

தம் காவியம் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்ததல்ல என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்திருக்கிறார். இது தமிழில் அபூர்வம்.

திருவள்ளுவரும் இளங்கோவும் கூடச் சமயம் சாராதவர்களாகவே காட்டிக் கொண்டுள்ளனர்.

‘ஒரு நாமம் ஓர் உருவம்

ஒன்றுமிலார்க் காயிரம்

திருநாமம் பாடித்

தெள்ளேணம் கொட்டாமோ’

என்பார் மாணிக்கவாசகர். அந்த ஆயிரம் பேர்களில் பல சமயச் சார்புடையவை. எனவே கம்பர் எல்லோருக்கும் பொதுவான எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ‘தலைவர்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

முத்தொழிலைச் செய்பவர், அதை விளை யாட்டாய்ச் செய்பவர் எவரோ அவரே தலைவர் என்கிறார் கம்பர். எனவே ஒரு தொழிலை மட்டும் செய்பவர் தலைவர் அல்லர் என்று மறுக்கிறார்.

வழக்கமாக இறைவனை ‘அன்’ விகுதியிட்டு அழைப்பதுதான் மரபு. இறைவன், சிவன், முருகன், விநாயகன். ஆனால், இப்படி அழைப்பதன் மூலம் இறைவனை ஆணாக்கிவிடுகிறோம்.

இறைவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை.

எனவே கம்பர் அந்தத் தவற்றையும் நீக்கித் ‘தலைவர்’ என்கிறார். இது ஒரு ஞானப் புரட்சி.

‘சராணாங்களே’ அத்தகைய தலைவரிடமே நாம் சரணடைவோம்.

‘என்னாலாவது யாதொன்றுமில்லை. எல்லாம் நீயே. உன் கையில் நானோர் கருவி. என்னை உன் பணியில் எப்படியும் பயன்படுத்திக் கொள்’ என்று கூறி இறைவனிடம் சரணடைதல் சரணாகதித் தத்துவம். அப்படிச் சரணடைந்தவர்களை இறைவன் காப்பாற்றுவான்.

(என்னைச் சரணடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிலிருந்தும் நான் அபயமளிக்கிறேன். இது என் விரதம்.

- இராமன், வால்மீகி இராமாயணம், யுத்.கா. 18.34

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-18-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7926988.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 19: தண்ணீர் மூழ்கிவிட்டது!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
mazhai_2654541f.jpg
 

தண்ணீர் மூழ்கிவிட்டது

வானத்துக்கு

வாந்தி பேதியா?

வருணனுக்குப்

பைத்தியம் பிடித்துவிட்டதா?

 

மேகக் கூந்தலை

அவிழ்த்துப் போட்டு

வானம்

பேயாடியதோ?

சூரியனுக்கே

புவி வெப்பமானதால்

 

வானத்திற்கு உடலெல்லாம்

அபரிமித வேர்வையோ?

வானம்

பாக்கி வைத்திருந்ததை எல்லாம்

வட்டியோடு

சேர்த்துக் கொடுத்துவிட்டதோ?

வானத்தின்

சல்லடை

என்னவாயிற்று?

அப்படியே

ராட்சஸ அண்டாக்களைக்

கவிழ்த்துக்

கொட்டிவிட்டதே.

மேகங்கள்

பயங்கரவாதிகளாகிவிட்டனவோ

சரமாரியாக

நீர்க் குண்டுகளை

வீசுகின்றனவே?

தண்ணீர்

‘தண்ணி’ அடித்ததோ?

கடலுக்குத்

தலயாத்திரை செய்யும்

ஆசை வந்துவிட்டதோ?

இந்த யாத்திரை

அதிசயமானது

தீர்த்தமே செய்யும்

யாத்திரை

வழக்கமாக

மேகப் பஞ்சிலிருந்து

தாரைகள்

நூலைப் போல் இறங்கும்

இப்போதோ

தூண்கள் இறங்குகின்றன

கடமுட கடவென இடியிடிக்கச்

சடச் சடச் சடவென மழையடிக்கத்

தடதடதடவெனப் பெருவெள்ளம்

மடமடமடவென ஏறியதே

மேக விமானங்களிலிருந்து

குண்டு மழையா?

வழக்கமாக

வானம் அழுதால்

மனிதன் சிரிப்பான்

இப்போதோ

மனிதனும் அழுகிறான்

வானம்

பூமிக்கு

ஆரத்தி எடுத்தது

சூரியக் கற்பூரம்

எரிக்காமல்

பொறாமையால்

மின்னல்

மின்சாரத்தைத் தடுத்தது

வெள்ளம்

விளக்குகளனைத்தையும்

அணைத்துவிட்டது

நீர்

பஞ்ச பூதங்களில் ஒன்று

என்று

நினைத்திருந்தோம்

அது உண்மையிலேயே

பூதமாகிவிட்டது

நீர் மென்மையானது என்று

நினைத்திருந்தவர்களுக்கு

அது

தன் சக்தியைக்

காட்டிவிட்டது

‘நான்தான் பெரியவன்’

என்று பீற்றும்

மனிதனின் அகங்காரத்தை

அடக்கப் பெய்ததோ?

பயிர்கள் மூழ்கிவிட்டன

உயிர்கள் மூழ்கிவிட்டன

ஏரி குளம் மூழ்கிவிட்டன

ஆறுகள் மூழ்கிவிட்டன

வீடுகள் மூழ்கிவிட்டன

தண்ணீர் மூழ்கிவிட்டது

மயிலின் நடனம் மூழ்கிவிட்டது

மேக மல்ஹார் ராகம்

மூழ்கிவிட்டது

கண்ணீர் மூழ்கிவிட்டது

எங்கும் தண்ணீர்

எதிலும் தண்ணீர்

ஆனால் மக்களோ

தண்ணீருக்கு அலைகிறார்கள்

இறைவன் இறுதியில்

இந்த உலகத்தை

இருட்டடிப்பா?

நீரால் அழிப்பான்

என்கிறார்கள்

அவன்

ஒத்திகை பார்க்கிறானோ?

கூவம் கூடக்

குளித்துக் கொண்டது

கடலூர்

தன் பெயரைக்

காப்பாற்றிக்கொண்டது

வெள்ளம்

எல்லாக் காலத்து

நோவா காலத்து

வெள்ளம்தான்

ஆனால்

நல்லவர்களைக் காப்பாற்ற

நோவாவும் இல்லை

அவர் கப்பலும் இல்லை

ஏதேனும் அழுக்கானால்

தண்ணீரால் கழுவுவோம்

தண்ணீரே அழுக்காகிவிட்டது

எதனால் கழுவுவது?

எல்லாப் பெண்களின்

பால் விலை உயர்ந்தது

தண்ணீர் விலை உயர்ந்தது

ஆனால்

மனித உயிரின்

விலை மட்டும்

குறைந்துபோய்விட்டது

துஷ்ட நிக்கிரகம் செய்ய

இறைவன்

மழையாக

அவதாரம் எடுத்தானோ?

கண்ணீரெல்லாம்

ஆனால்

சிஷ்ட பரிபாலனத்தைக்

காணோமே

இது தண்ணீரின்

சுதந்திரப் போராட்டம்

தன்னைப் பிடித்து

அடைத்து வைத்த

சிறைகளை எல்லாம் தகர்த்து

விடுதலையைக்

கொண்டாடுகிறது

ஒன்றாகச் சேர்ந்து

மக்கள் வசிக்கும்

இடங்களை எல்லாம்

வெள்ளம் பிடித்துக்கொண்டது

என்று சொல்லாதீர்கள்

நீரின் வசிப்பிடங்களையெல்லாம்

அநியாயமாய் ஆக்கிரமித்துக்

கட்டிடங்கள் கட்டியவன்

மனிதன்

பொறுத்துப் பொறுத்துப்

பார்த்த நீர்

கொட்டியதோ?

படையெடுத்து வந்து

தன் சொத்துக்களை

மீட்டுக்கொண்டது

செல் கோபுரங்கள்

சிட்டுக் குருவிகளைத்

துரத்தின

சிட்டுக் குருவிகளின் சாபம்

செல்கள்

செத்துப்போய்விட்டன

ஆடு செத்தது

மின்னல் தந்தங்கள் ஒளிர

மாடு செத்தது

மனிதன் செத்தான்

அரசும் செத்துப்போனது

வீடுகளுக்குள்

வெள்ளம் வந்தது

சாக்கடை வந்தது

ஆனால்

எந்த அதிகாரியும்

வரவில்லை

‘கட் அவுட்’ தெய்வங்களுக்குப்

இடி முரசு முழங்க

பாலாபிஷேகம் செய்யும்

பக்தர்களே!

உங்களிடமிருந்து

கோடி கோடியாகச்

சம்பாதித்தவர்கள்

உங்களுக்காக

என்ன செய்தார்கள் என்று

இப்போதாவது யோசிப்பீர்களா?

இந்த அரசு

மக்களுக்கு

மேக யானைப் படைகள்

எதுவுமே செய்யவில்லை

என்கிறார்கள்

செத்தவர்களுக்குப்

பணம் கொடுப்பதாய்

அறிவித்தார்களே

இந்நாட்டில்

சகிப்புத் தன்மை

இல்லையென்று

யார் சொன்னது?

அது இந்தியர்களின்

மோதினவோ?

தேசிய குணம்

அவர்களுக்கு

எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும்

சகித்துக் கொள்வார்கள்

ஒருவேளை

யாரேனும் முணுமுணுத்தால்

இதெல்லாம்

விதியின் விளைவு

என்று சொல்ல

இங்கே உபதேசிகள்

அவற்றின் ரத்தம்

இருக்கிறார்கள்

இவ்வளவு பயங்கரப்

பேரழிவு நடந்திருக்கிறது

யாரும் உதவவில்லையென்று

மக்கள் மனதில்

கோபம் இருக்கிறது

இது அரசியல் மாற்றத்தை

ஏற்படுத்தலாம் என்கிறார்கள்

அப்படியெல்லாம் நடக்காது

நம் மக்களுக்கு

சொரிகிறதோ?

மறதி அதிகம்

இதையும் மறந்துவிடுவார்கள்

அதுமட்டுமல்ல

அவர்கள் வழக்கம்போல்

சாதிக்காக

மதத்துக்காக

அல்லது கட்சிக்காக

ஓட்டுப் போடுவார்கள்

இல்லையென்றால்

காசுக்காகப் போடுவார்கள்.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-19-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/article7979808.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 20: தராசு ஏந்தி வந்த குரங்கு!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
monk___2663277f.jpg
 

ஒரு சின்னஞ்சிறு தீவிலிருந்து புறப்பட்டு வந்த ஆங்கிலேயர் பெரிய துணைக் கண்டமான இந்தியாவை எப்படிப் பிடித்து ஆண்டார்கள்?

பிரித்தாளும் சூழ்ச்சி!

இந்தியாவில் வாழும் இந்துக் களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்துவிட்டால் ஆங்கிலேயர் ஆள முடியாது.

ஆகவே, அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம் களையும் ஒன்றுசேரவிடாமல் சூழ்ச்சிகள் செய்த னர். அவர்கள் இருவருக்கிடையே பகைமையை உண்டாக்கினர்; மோதலை ஏற்படுத்தினர்.

இரண்டு பூனைகளுக்குரிய அப்பத்தை தராசு ஏந்தி வந்த குரங்கு இப்படித்தான் தானே உண்டு ஏப்பம்விட்டது.

இந்தியாவின் பன்முகத் தன்மை ஒரு வரப்பிரசாதம். இந்து மதமும் இஸ்லாமும் ஒன்றையொன்று பாதித்தன. அதன் விளைவாக இந்து மதத்தில் ‘பக்தி இயக்கமும்’ இஸ்லாத்தில் பிற சமயவாதிகளையும் நேசிக்கும் புதிய தத்துவப் பார்வையும் தோன்றின.

இரு மதங்களின் திருமணத்தில் சீக்கிய மதம் என்றதோர் புதிய மதமே பிறந்தது. கலை இலக்கியங்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன.

அனைத்தையும் விடப் பிற சமய சகிப்புத் தன்மை என்ற உயர்ந்த பண்பாடு மலர்ந்து மணம் வீசி வந்தது.

அவ்வளவும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய்ச் சிதைக்கப்பட்டன.

ஆங்கிலேயர்கள் தங்கள் சுயநலத்தால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பயங்கர ஆயுதம் வரலாற்று ஏடுகளைத் திரித்து எழுதுதல்.

இதை நிரூபிக்கப் பல ஆவணங்கள் கிடைக்கின்றன.

வைஸ்ராயாக இருந்த எல்கின் பிரபுவுக்குப் பிரித்தானிய அரசுச் செயலர் வுட் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், ‘ஒரு பிரிவினருக்கு எதிராக அடுத்த பிரிவினரைத் தூண்டிவிடும் உத்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் போலவே வைஸ்ராய் கர்ஸன் பிரபுவுக்கு அரசுச் செயலர் ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் அவர், ‘இந்தியா மீது நமது ஆளுமைக்கு உண்மையான ஆபத்து இப்போது இருப்பதாக நான் நினைக்கவில்லை. இன்னும் 50 ஆண்டுகள் கழித்து, படிப்படியாக மேற்கத்தியக் கிளர்ச்சி உத்திகள் அங்கே பரவி, அவற்றை அவர்கள் கையாளுகிற நேரத்தில்தான் உண்மையான ஆபத்து உண்டாகும் என எண்ணுகிறேன். படித்த இந்தியர்களை இரு கூறுகளாகப் பிரித்தால், பரவி வரும் கல்வி அறிவு காரணமாக நமது அரசுமுறை மீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, இனங்களுக்கிடையே பிளவை அதிகப்படுத்தும் வகையில் பாடப் புத்தகங்கள் அமையும்படி நாம் திட்டமிட வேண்டும்’ என்று எழுதியிருக்கிறார்.

கவர்னர் ஜெனரல் டஃப்ரினுக்கு அரசு அதிகாரி கிராஸ் எழுதிய கடிதத்தில், ‘மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறை பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக் குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன.

முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களைக் கட்டாய மதமாற்றம் செய்தார்கள். அவர்களைக் கொன்றார்கள். அவர்களுடைய கோயில்கள் இடிக்கப்பட்டன என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதினார்கள். முஸ்லிம் அரசர்கள் இந்த நாட்டுக்குச் செய்த நன்மைகள் மறைக்கப்பட்டன.

வரலாற்றறிஞர் பேராசிரியர் ஹபீப், ‘இந்திய அரியணையில் வீற்றிருந்த முஸ்லிம் மன்னர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே. அவர்கள் ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தார்கள் என்றால் அவர்களது ஆட்சி, மத ஆட்சியாக இல்லாமலிருந்ததுதான் காரணம். இல்லாவிடில் அவர்களுடைய ஆட்சி இரு தலைமுறையைக் கூடத் தாண்டியிருக்காது’ என்று எழுதுகிறார்.

ஜியாவுத்தீன் பர்னி என்ற வரலாற்று ஆசிரியர் தமது, ‘ஃபதாவா ஃபண்டாரி’யில் ‘முஸ்லிம் அரசர்கள் இஸ்லாமிய ஷரீயத் முறைப்படி ஆட்சி செய்யவில்லை. ஈரானிய மன்னர்களின் குறிப்பாக நவ்ஷேர்வானே ஆதில் என்று அழைக்கப்பட்ட குஸ்ரோ பர்வேஸின் ஆட்சிமுறைகளைப் பின்பற்றியே ஆண்டார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

இந்த ஆட்சிமுறை இஸ்லாமிய ஷரீயத் ஆட்சி முறைக்கு முரணானது.

மிகவும் அநியாயமாகத் திரித்துக் கூறப்பட்ட வரலாற்றிற்குத் திப்பு சுல்தானை உதாரணமாகக் காட்டலாம்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் திப்பு சுல்தானுக்கு மிக முக்கிய இடம் உண்டு. தங்களை எதிர்த்துப் போராடியவர்களில் திப்பு சுல்தானுக்குத்தான் ஆங்கிலேயர்கள் அதிகமாக அஞ்சினர்.

வில், அம்பு, வாள் இவைதாம் இந்திய மன்னர்களின் பெரிய ஆயுதங்கள் என்று எண்ணியிருந்த ஆங்கிலேயர்களை ராக்கெட் குண்டுகளால் தாக்கி அதிர்ச்சி ஏற்படுத்தியவர் திப்பு சுல்தான்.

‘‘ஆட்டைப் போல் 100 ஆண்டுகள் வாழ்வதை விடப் புலியைப் போல் சில நாட்கள் வாழ்வதே பெருமை’’ என்று முழங்கியவர்.

அக்காலத்தில் பெண்கள் மேலாடை அணியாதிருந்தனர். திப்புதான் அதைத் தடுத்து பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்று சட்டம் இயற்றினார். மதுவிலக்கை செயல்படுத்தினார். அனைத்துச் சமயத்தினரும் தங்கள் வழிபாடு மற்றும் வாழ்வுரிமைகளைப் பெறச் சட்டம் இயற்றினார்.

செங்கோலாட்சி செய்த இந்த மாவீரரைத்தான் வரலாற்றுப் புரட்டர்கள் மதத் தீவிரவாதியாகச் சித்திரித்து வைத்துள்ளனர்.

திப்பு சுல்தான் இஸ்லாத்தைத் தழுவும்படி 3 ஆயிரம் பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார்; அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தற்கொலை செய்துகொண்டனர் என்று வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைத்தனர்.

இந்த நூல் வங்காளம், அசாம், பிஹார், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரலாற்றுப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாகப் பிஞ்சு நெஞ்சுகளிலேயே நஞ்சு ஊட்டப்பட்டது.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-20-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article8008077.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 21: விஷ விதைகள்

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
tippu_2671799f.jpg
 

வரலாற்றுப் புரட்டர்கள் திப்பு சுல்தானை மதத் தீவிரவாதியாகச் சித்திரித்து, ‘அவர் இஸ்லாத்தைத் தழுவும்படி 3 ஆயிரம் பிராமணர்களைக் கட்டாயப்படுத்தினார். அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தற்கொலை செய்துகொண்டனர்’ என்றெல்லாம் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைத்தனர். இந்த நூல் பல மாநிலங்களில் வரலாற்றுப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.

ஒடிஷா ஆளுநராக இருந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய வரலாற்று அறிஞர் பி.என்.பாண்டே இதைப் படிக்க நேர்ந்தது. அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அந்தப் புத்தகத்தை எழுதியவர் மகாபாத்தி யாய டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர்.

சாஸ்திரிக்கு பி.என்.பாண்டே கடிதம் எழுதி இந்தத் தகவலுக்கான ஆதாரம் எங்கே இருக்கிறது என்று கேட்டார்.

சாஸ்திரி பதில் எழுதவில்லை. பல கடிதங்கள் எழுதிய பிறகு மைசூர் கெஜட்டிலிருந்து அந்தத் தகவலைப் பெற்றதாகப் பதில் எழுதினார்.

மைசூர் கெஜட் பாண்டேவுக்கும் கிடைக்க வில்லை. அவர் மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் பிரஜேந்திரநாத் சீலுக்கு எழுதினார். அவர் அந்தக் கடிதத்தை மைசூர் கெஜட்டின் புதிய பதிப்பைத் தயாரித்துக் கொண்டிருந்த பேராசிரியர் ஸ்ரீ கண்டய்யாவுக்கு அனுப்பிவைத்தார்.

3 ஆயிரம் பிராமணர்கள் தற்கொலை செய்துகொண்டது பற்றிய தகவல் மைசூர் கெஜட்டில் எந்த இடத்திலும் இல்லை என்று அவர் பதில் தெரிவித்தார்.

மேலும் தாம் மைசூர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பிரிவு மாணவராக இருந்தவர் என்ற முறையில் அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை என்றும் உறுதி செய்தார்.

ஸ்ரீ கண்டய்யா மேலும் பல தகவல்களைத் தெரிவித்திருந்தார்.

திப்பு சுல்தானின் பிரதம அமைச்சர் பூர்ணய்யா. அவர் பிராமணர். அவருடைய தலைமைத் தளபதி கிருஷ்ணாராவும் பிராமணரே. இது தவிர, திப்பு சுல்தான் ஆண்டு மானியம் வழங்கி வந்த 156 இந்துக் கோயில்களின் பட்டியலையும் அவர் பாண்டேவுக்கு அனுப்பி வைத்தார்.

திப்பு சுல்தான் 3 ஆயிரம் பிராமணர்களைத் தற்கொலை செய்ய வைத்தார் என்ற அண்டப் புளுகு கர்னல் மைல்ஸ் எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் மைசூர்’ என்ற நூலில் இருக்கிறது. சாஸ்திரி அங்கிருந்து அந்தத் தகவலை எடுத்திருக்கலாம் என்று பாண்டேவுக்கு ஸ்ரீகண்டய்யா எழுதினார்.

கர்னல் மைல்ஸ் தமது ‘ஹிஸ்டரி ஆஃப் திப்பு சுல்தான்’ என்ற நூல் விக்டோரியா மகாராணியின் தனி நூலகத்தில் உள்ள பாரசீகக் கையெழுத்துப் பிரதியின் மொழிபெயர்ப்பு என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ஸ்ரீகண்டய்யா கூறினார்.

ஆனால், விசாரித்துப் பார்த்ததில் விக்டோரியா மகாராணியின் நூலகத்தில் அப்படி ஒரு கையெழுத்துப் பிரதியே கிடையாது என்று தெரிந்தது. இதன் வாயிலாக கர்னல் மைல்ஸின் நூலில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் புனைந்துரைத்த பொய்கள் என்று தெரியவந்தது.

இப்பொய்கள் திப்பு சுல்தான் மீது இந்துக்களின் இதயத்தில் வெறுப்பையும் பகைமையையும் உண்டாக்கத் திட்டமிட்டுப் புனைந்துரைக்கப்பட்டவை என்பது வெளிப்படை.

ஆங்கிலேயர் விதைத்த இத்தகைய நச்சு விதைகள் வளர்ந்து இன்று மரங்களாக வேரூன்றி நிற்கின்றன.

டாக்டர் சாஸ்திரியின் பொய்யோடு வங்காளம், அஸாம், பிஹார், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர்நிலைப் பள்ளிகளில் வரலாற்றுப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.

பாண்டே இது தொடர்பாகக் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் செளத்ரியை அணுகி, தாம் திரட்டிய தகவல்களைத் தெரிவித்தார். அந்நூல் பாடத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டது.

காந்தியடிகளை ஆசிரியராகக் கொண்ட ‘யங் இந்தியா’ என்ற இதழில் 23.01.1930) 31-ஆம் பக்கத்தில் இந்த சம்பவம் பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

திப்பு சுல்தான் ஒரு மத வெறியர் என்றும், அவர் தன் ஆட்சிக்குட்பட்ட இந்துக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்கள் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார் என்றும் வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சித்திரிக்கின்றனர். ஆனால், உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் அல்லர். மாறாக அவர் இந்துக் குடிமக்களிடம் சுமுகமான நல்லுறவு கொண்டிருந்தார்.

திப்பு சுல்தான் சிருங்கேரி மடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியாருடன் சுமுக உறவு கொண்டிருந்தார்.

பரசுராம் பாவ் என்ற மராத்தியன் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த கோயிலுக்கும் சேதம் ஏற்படுத்தினான். சிருங்கேரி யிலிருந்த பிராமணர்களையும் மற்றவர்களையும் அடித்துத் துன்புறுத்தினான். பலரைக் கொன்றான். ஸ்ரீசாரதாதேவியின் விக்கிரகத்தையும் அகற்றி னான். மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு மடத்திற்கு வேண்டிய பொருட்களை அனுப்பி வைத்தார். இடிந்த கோயிலையும் புதுப்பித்தார். ஸ்ரீ சாரதாதேவியின் சிலை அமைக்கவும் உதவினார்.

‘இத்தகைய புனிதத் தலங்களில் அக்கிரமம் செய்யும் பாவிகள் விரைவில் அதன் பலனை அனுபவிப்பர். குருக்களுக்கு எதிராகச் சதி செய்வோர் குடும்பத்தோடு அழிந்துபோவர்’’ என்று திப்பு இதைப் பற்றிய தம் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

சிருங்கேரி மடாதிபதி காஞ்சி வந்தபோது திப்பு அங்கே இருக்கும் கோயில்களுக்கு அளித்த மானியங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

சிருங்கேரி மடாதிபதிக்குத் திப்பு சுல்தான் எழுதிய 30 கடிதங்கள் மைசூர் தொல்பொருள் மையத்தில் உள்ளன.

அவற்றுள் ஒரு கடிதத்தில், தமது நலனுக்கும் பிரபஞ்சத்தின் நலனுக்கும் தவம் செய்யுமாறு சங்கராச்சாரியாரை வேண்டியுள்ளார்.

ஸ்ரீவெங்கட்ரமணா, ஸ்ரீநிவாஸ், ஸ்ரீ ரங்க நாதர் பெயர்களில் உள்ள கோயில்கள், மேலும் திப்பு அரண்மனையின் மேற்பார்வையிலுள்ள கோயில்கள், மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களுக்குத் திப்பு சுல்தான் ஏராளமான நிலங்களை, ஆடம்பரமான காணிக்கைகளை வாரி வழங்கியுள்ளான். இவற்றிற்கான ஆவணங் கள் இன்றும் உள்ளன.

திப்பு சுல்தான் 1786, 1790-ஆம் ஆண்டுகளில் மதுரை வந்தபோது அப்போது எழுந்தருளியிருந்த 282-ஆம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பாம்பணி நாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளைத் தரிசித்து உரையாடியதோடு, ஆதீன பூசைக்குரிய வெள்ளித் தாம்பாளங்கள், தோல் முரசு, வெள்ளித் திருச்சின்னம், புனுகு, ஜவ்வாது, உயர்ந்த வகை அரபு நாட்டு அத்தர் வகைகள், வெள்ளி வாள் ஆகியவற்றைச் சமர்பித்தார். ஓர் ஆண் யானையையும் தனது அன்புப் பரிசாக அளித்து மகிழ்ந்தார்: இது மதுரை ஆதீன வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. (மதுரை ஆதீன வரலாறு, பக்கம்:75)

திப்பு சுல்தான் இந்துக்களோடு நேச பாவத் தோடு பழகியவர். சிருங்கேரி மடாதிபதியை மதித்ததோடு, அந்த மடத்திற்குத் தேவைப்பட்ட உதவிகளையும் செய்தவர். பல இந்துக் கோயில்களுக்கு மானியம் அளித்தவர். பிராமணர்களைப் பிரதம அமைச்சராகவும், தளபதியாகவும் வைத்து அழகு பார்த்தவர்.

அத்தகைய மாமனிதரைத்தான் ஆங்கிலேயப் புரட்டு வரலாற்றாசிரியர்கள் மதவெறியர், பிரா மணர்களைக் கொன்றவர், கோயில்களை இடித் தவர் என்று பொய்களால் புனைந்துரைத்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் இந்துக்களையும், முஸ்லிம் களையும் பிரிப்பதற்காகப் புனைந்துரைத்த பொய் நூல்களைக் கண்டறிந்து அவற்றைக் களைந்தெறிவதில் இந்தியர் இன்னும் வெற்றி பெறவில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை ஆள்வதற் காகப் பிரித்தார்கள். இன்றும் மதவெறியர்கள் அதே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். அதற்காக ஆங்கிலேயர்கள் இட்டுக்கட்டிய பொய் நூல்களையே தங்களுக்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.

இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக இரண்டு கரங்களைப் போல இணைந்து உழைக்க வேண்டிய இரண்டு சமுதாயங்களை விஷக் கருத்துகளால் பகைமைகொள்ளச் செய்வது மிகப் பெரிய தீங்கையே விளைவிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்வது நல்லது!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-21-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8031361.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

முத்துக் குளிக்க வாரீகளா 22: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
kavikko_2680347f.jpg
 

பெய்யாதிருந்து கெடுப்பதும் கெட்டுப் போனவர்களைக் கைகொடுத்து எடுப்பதும் இவையிரண்டும் செய்ய வல்லது மழை என்று மழையின் ஆற்றலை விளக்குகிறார் திருவள்ளுவர்.

‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை’

அண்மையில் பெய்த மழை இக்குறளுக்குப் புதிய பொருளைக் கொடுத்திருக்கிறது!

அண்மையில் பெய்த மழை மனிதர்களுக்குப் பல தீமைகளைச் செய்திருந்தாலும் ஒரு பெரிய நன்மையைச் செய்திருக்கிறது.

மக்களிடையே இருந்த சாதி, மத, இன, மொழி, கட்சி பேதம் என்ற அருவருப்பான அழுக்கைக் கழுவிவிட்டது. வறண்ட பாலையாகக் கிடந்த இதயங்களில் அன்பு என்னும் தெய்வீக நீரூற்றைப் பீறிடச் செய்துவிட்டது.

எவ்வளவோ சமூகச் சீர்திருத்தவாதிகளும், மத குருமார்களும் செய்ய முடியாததை மழை செய்துவிட்டது.

இந்துக் கோயில்களில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம்! முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் இந்துக்களுக்கு ஆதரவு!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த அதிசயத்தை மழைதான் சாதித்தது. வெறும் வழிபாடு மட்டும்தான் மதம் என்று நினைத்திருந்த மதவாதிகளுக்கு ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற மாபெரும் தத்துவத்தை மழை உணர்த்திவிட்டது.

மதவாதிகள் அனைவரும் மக்கள் சேவை என்ற உயர்ந்த - உண்மையான மதத்திற்கு மத மாறிவிட்டார்கள். வாங்குவதுதான் இன்பம் என்று நினைத்தவர்கள், கொடுப்பதில்தான் இன்பம் என்பதை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டார்கள்.

மனித மனங்களில் புழுதி மூடிக் கிடந்த மனிதாபிமானம் என்ற மாபெரும் வைரத்தை வெளியே கொண்டுவந்துவிட்டது மழை.

பணக்காரன் பசிக்குப் பணத்தைச் சாப்பிட முடியவில்லை. அவன் உணவுக்காகக் கையேந்தி னான். பதவியில் இருந்தவர்கள் தாகத்திற்கு தங்கள் அதிகாரத்தை அருந்த முடியவில்லை. அவர்கள் தண்ணீருக்காகக் கையேந்தினார்கள்.

இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டிய கதை:

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங் கள் உள்ள ஒரு பெரிய தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து, ‘‘இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா’’ என்றார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணைக்காரன் கனவில் தோன் றிய இறைவன், ‘‘நீ அனுப்பிய ஒரு வாழைப்பழம் கிடைத்தது’’ என்றான்.

திடுக்கிட்ட பண்ணையார், ‘‘இறைவா! நான் நூறு பழங்களையல்லவா அனுப்பினேன்’’ என்றான்.

இறைவன், ‘‘இல்லை ஒரு பழம்தான் எனக்கு வந்து சேர்ந்தது’’ என்றான்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து, ‘‘நான் கொடுத்த வாழைத் தாற்றை முழுமையாகக் கொண்டுபோய் கோயிலில் கொடுத்தாயா?’’ என்று கேட்டார்.

அவன், ‘‘ஆம்’’ என்றான்.

பண்ணையாருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார். ‘‘உண்மையைச் சொல். இல்லையென்றால் அடித்தே கொன்றுவிடுவேன்’’ என்றார்.

அவன் ‘‘உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நான் தாறு எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான். நான் பரிதாபப் பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன். மீதமுள்ள எல்லாப் பழங்களையும் கோயிலில் கொடுத்துவிட்டேன்’’ என்றான்.

பண்ணையாருக்குப் புரிந்துவிட்டது. ஏழைக் குக் கொடுத்த பழமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை.

இதே கருத்தைச் திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.

‘படமாடக் கோயில்/ பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடும் கோயில்/ நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடும் கோயில்/நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில்/பகவற்கு அது ஆமே’

கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால் அது ஏழைகளுக்கு போய்ச் சேராது. ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால் அது இறைவனிடம் போய்ச் சேர்ந்துவிடும்.

கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்குப் பதில் சொல்வதுபோல ஏழை களை ‘நடமாடும் கோயில்’ என்கிறார் திருமூலர்.

நடமாடும் ஆலயம்! உயிராலயம்! இதை உணர்பவன் ஞானியாகிவிடுவான்.

ஏழையின் வயிறு அஞ்சல்பெட்டி இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் அவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

மனித சேவையின் மகத்துவத்தைப் பைபிளும் கொண்டாடுகிறது.

திருச் சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசு பெருமானைச் சோதிக்கும் நோக்குடன், ‘‘போத கரே! நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்’’ என்று கேட்டார். அதற்கு இயேசு “திருச் சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? நீர் என்ன வாசிக்கிறீர்? ” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழி யாக, “உன் முழு ஆன்மாவோடும், முழு உள்ளத் தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வா யாக. உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’’ என்று எழுதியுள்ளது என்றார்.

இயேசு, ‘‘சரியாய் சொன்னீர். அப்படியே செய்யும். அப்பொழுது வாழ்வீர்’’ என்றார்.

அவர் தம்மை நேர்மையாளராகக் காட்ட விரும்பி, ‘‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’’ என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமைக் கதை:

ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர்கள் கையில் அகப்பட்டார். அவர்கள் அவரது ஆடைகளை உரிந்து, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுச் சென்றார்கள்.

குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறு லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரை கண்டபோது, அவர் மீது பரிவு கொண்டார். அவர், அவரை அணுகி காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கொண்டு போய் அவரைப் பராமரித்தார்.

மறுநாள் இரண்டு பொற்காசுகளை எடுத்து சத்திரப் பொறுப்பாளரிடம் கொடுத்து இவரைக் கவனித்துக்கொள்ளும். இதற்கு மேல் செல வானால் நான் திரும்பி வரும்போது உமக்கு தருவேன் என்றார்.

‘‘கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவ ருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?’’ என்று இயேசு கேட்டார். அதற் குத் திருச்சட்ட அறிஞர், ‘‘அவருக்கு இரக்கம் காட்டியவரே’’ என்றார். இயேசு, ‘‘நீரும் போய் அப்படியே செய்யும்’’ என்று கூறினார்.

குருவும் லேவியரும் மதவாதிகள். அடிபட்ட வனுக்கு உதவி செய்தால் இரத்தம் தங்கள் மேல் பட்டுத் தீட்டாகிவிடுவோம் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

அவர்கள் தங்கள் மதத்தைக் காப்பாற்ற நினைத்தார்களே தவிர, காயம்பட்டுக் கிடந்த மனிதனைக் காப்பாற்ற நினைக்கவில்லை.

இஸ்லாமும் மனித சேவைக்கு முக்கியத்துவம் தருகிறது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர் களுடைய ஒரு வாக்கில் இவ்வாறு காணப்படு கிறது: இறைவன் மறுமையில் மனிதனை நோக்கி, ‘‘மனிதனே! நான் நோயாளியாய் இருந்தேன். நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே?’’ என்று கேட்பான்.

மனிதன், ‘‘இறைவா! நீயோ அகிலத்தை ஆளும் அதிபதி. உனக்கு எப்படி நோய் வரும்? உன்னை நலம் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏது?’’ என்று மனிதன் சொல்வான்.

இறைவன், ‘‘உனக்குத் தெரியாது. இன்ன மனிதன் நோயாளியாக இருந்தான். நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அங்கே என்னை தரிசித்திருப்பாய்’’ என்பான்.

இறைவன் மீண்டும், ‘‘மனிதனே! நான் உனக்கு உணவளித்தேன். நீ எனக்கு உணவளிக்க வில்லையே?’’ என்று கேட்பான்.

மனிதன், ‘‘இறைவா! நீயோ அகிலத்தின் அதிபதி உனக்கு நான் எப்படி உணவளிக்க முடியும்?’’ என்று கேட்பான்.

இறைவன், ‘‘உனக்குத் தெரியாது. என் அடி யான் ஒருவன் உன்னிடம் உணவு கேட்டு வந்தான். நீ அவனுக்கு உணவளிக்கவில்லை. நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அங்கே என்னை தரிசித் திருப்பாய்’’ என்பான்.

இறைவன் மீண்டும், ‘‘மனிதனே! நான் பருகத் தண்ணீர் கொடுத்தேன். நீ எனக்குப் பருகத் தண் ணீர் கொடுக்கவில்லையே?’’ என்று கேட்பான்.

மனிதன், ‘‘இறைவா! நீயோ அகிலத்தின் அதிபதி. உனக்குப் பருக தண்ணீர் நான் எப்படிக் கொடுக்க முடியும்?’’ என்று கேட்பான்.

இறைவன், ‘‘உனக்குத் தெரியாது. என் அடி யான் உன்னிடம் பருகத் தண்ணீர் கேட்டான். நீ தரவில்லை. நீ அவனுக்குத் தண்ணீர் கொடுத்திருந் தால் அங்கே என்னை தரிசித்திருப்பாய்’’ என்று கூறுவான். (முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹமது)

இதையே, ‘‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’’ என்றார் அறிஞர் அண்ணா.

ஆயிரம் ஆண்டு வழிபாடு செய்தாலும் காண முடியாத இறைவனை, காட்டுக்குப் போய்க் கடுந் தவம் புரிந்தாலும் காண முடியாத இறைவனை, தேவையுள்ளவனுக்கு உதவுவதன் மூலம் தரிசிக்கலாம்.

ஏனென்றால் அதுதான் உயர்ந்த வழிபாடு. இறைவனே விரும்பும் வழிபாடு!

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-22-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article8057785.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.