Jump to content

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலமாகி விட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

EELAM VIDIYUM NERAM

ENGAL

EELATHAIYIN MOOTHAPILLAI

ELLAIYE!

KANKALIL THULIKKUM KANNEERAI

UNGAL

KADAMAI VAARTHAIKAL KATHTHIDUME!!

ENI

OLIKKUMO

ENKAL

'DESATHIN KURAL'

THALAIVAR VALIYIL

OLI KONDU

VIDIYAL ADAIOM

VINAI PILANTHU

BALA ENRA THAI PALAI

EM THESATHIN PILLAIKKU

OOTTUYOM!!

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

எமது தேசத்தின் குரல் பாலா அண்ணாவிற்கு எனது அஞ்சலிகள். எங்களுடைய மிக முக்கியமான அரசியல் சக்தியை அதுவும் மிக அவசியமான தருணத்தில் இழந்து நிற்கின்றோம். இந்த நேரத்தில் நாம் எமது சக்திகளை தேவையற்ற விதங்களில் வீணடிக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர்களின் போராட்டத்திற்கு மேலும் உரம் சேர்த்து அதனை வென்றெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவர்: "தேசத்தின் குரல்" மறைவுக்கு கருணாநிதி அனுதாபம்

தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் கூறியிருப்பதாவது:

தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவரும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும், இலங்கையில் அமைதி தழைத்திட விரும்பிச் செயற்பட்ட நம் போன்றாரிடமும், நோர்வே நாட்டினரிடமும் நட்புணர்வு கொண்டு, நாளும் உழைத்தவரும், அறிவிற் சிறந்தவரும், ஆற்றலாளரும், அன்பின் உருவமாகத் திகழ்ந்தவரும், இறுதியாக இமைக் கதவுகள் மூடும் வரையில் ஈழத்தின் சுயமரியாதை சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவருமான என்னரும் நண்பர் பாலசிங்கம்.

அவரது மறைவுச் செய்தியைப் பலகாலம் அவருடன் பழகிய என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்து தவிக்கும் நண்பர்களுக்கும் அவரது அன்புத் துணைவியாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

எம் தேசத்தின் வழிகாட்டி

கடவுளுக்கும் வழிகாட்ட

வென்றெடுப்போம் தமிழீழம்

பாலா ஐயாவுக்கு

எமது கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தை உயிராய் காதலித்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கு

எமது ஆழ்ந்த கண்ணீரஞ்சலியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் உயிர் மூச்சின் முக்காலை நோய் பறித்தும்,

தேசத்தொண்டை தோள் விலக்காது காலன் வீடுவரைக்கும்,

உங்கள் காலம் பணிசெய்தது தேசத்துக்கு.

வெளி ஆதரவுகள் வாங்கித்தருவீர்கள் என்றுதானே எம்துன்பங்களை ஆறவைத்தோம் இதுவரைக்கும்,

உலக உறவு அனாதரவாக்கப்பட்ட எங்களுக்கு இனி ஆறுதல்க் கரத்துக்கு எங்கே போவோம்.

உங்கள் பிரிவால் கண்வழி ஓடும் துன்பத்தை அடக்க முடியவில்லையே!!!!

Link to comment
Share on other sites

எங்கள் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

என்ன கொடுமை இது?

Link to comment
Share on other sites

அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் <_<<_<:blink::(

Link to comment
Share on other sites

தமிழீழத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அனைத்து தேசாபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்

தமிழீழ விடுதலைப் போரினை சர்வதேச அரங்குகளில் விவாதித்தும் - பேசியும் வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகரும், பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான திரு.பாலசிங்கம் அவர்கள் இன்று - 14.12.06 லண்டனில் காலமாகியுள்ளார். அவரது இறப்பு புலத்தமிழ் மக்களை ஆழந்த கவலைக்குள்ளும், வேதனைக்குள்ளும் தள்ளியுள்ளது. சிங்கள பெருந்தேசியவாதத்தின் கொடிய இனஅழிப்பு நோக்குக் கொண்ட அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போரில் தன்னை 30 வருடங்களாக இணைத்துப் பணியாற்றிய திரு.பாலசிங்கம் இன்றைய முக்கிய காலச்சந்தியில் எங்களை விட்டுச் சென்றது தாங்கொணா அதிர்ச்சியினைத் தந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராகவும் - பேச்சுவார்த்தைக் குழுத்தலைவராகவும் பாலசிங்கம் அவர்கள் இறுதிவரைப் பணியாற்றினார். 1985ல் இந்திய ஏற்பாட்டில் இடம்பெற்ற திம்புப் பேச்சுக்களின் வழிகாட்டியாக, 1989 - 1994 களில் சிறீலங்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்களில் பங்கேற்றவராக, 2002ற்குப் பிற்பட்ட நோர்வே மத்தியத்துவத்துடனான பேச்சுக்களிற்கான தமிழர் குழுவின் தலைவராக திரு.பாலசிங்கம் திகழ்ந்தார். சிங்கள அரசுகள் எவ்வாறு தமிழ் மக்களை திட்டமிட்ட முறையில் ஏமாற்றுகின்றது என்பதை தெளிவுபட அறிந்த - அனுபவம் வாய்ந்த அரசியல் - இராஐதந்திர நிபுணராக திகழ்ந்த பாலசிங்கம் அவர்கள் தமிழீழ மக்கள் சிங்கள அரசின் கொடிய இராணுவ முன்னெடுப்புக்களால் சொல்லாணா துன்புறும் இன்றைய வேளையில் எம்மை விட்டுப் பிரிந்தமை ஒரு துன்பகரமான நிகழ்வாகும்..

தமிழீழ விடுதலைப் போரின் நியாயமான தேவைகளுக்கும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்குமிடை

Link to comment
Share on other sites

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்களின் அனுதாபச் செய்திகள்:

தமிழர் தாயகம் துயரில் மூழ்கியது. புலம் பெயர் நாடுகளிலும் துக்கம்.

-சுடர் ஒளி

இலங்கை சமாதானத முயற்சிகளுக்கு பாலாவின் மறைவு ஒரு பின்னடைவு.

-ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றார் சொலஹெய்ம்.

பாலாண்ணா விடுதலைப் போரட்டத்தின் வரலாறு –கா.வே. பாலகுமாரன்

தமிழர் விடுதலைப் போராட்டததில் பாலாசிங்கத்தின் பங்கு அளப்பரியது!

-இரா.சம்பந்தன் எம்.பி

ஒடுக்கு முறைகளுக்கு எதிரான புரட்சிப் போராளி அன்டன் பாலா

-இடதுசாரி முன்னணி

தமிழரின் வரலாற்றில் பாலாவின் நாமம் அசைக்க முடியாமல் நிலைத்திருக்கும்!

-பெ.சந்திரசேகரன்

தமிழர்களின் சுதந்திர தாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் பங்பகளிப்பு செய்வது மூலமாக அவர் ஆத்தமா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

-தொழிலாளர் விடுதலை முன்னனி தலைவர்; டி.அய்யாத்துரை.

முஸ்லிம்களின் குரலை ஆர்வத்துடன் செவிமடுத்த தமிழ்த் தேசத்தின் காதுகள் மறைந்துவிட்டன.

-மு.கா. தலைவர் ஹக்கீம்

நன்றி : சுடர் ஒளி 16டிசம்2006

Link to comment
Share on other sites

தாயகக் கனவை

தாங்கிய உள்ளம்

நோயினைக் கண்டு

நொந்து போன வேளையில்

உறங்கி விட்ட சோகத்தில்

நாம் இங்கே சோகத்தில்

தீபங்கள் எரிகின்ற ஒளியில்

உங்கள் ஆத்மா சாந்தியடைய

கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.