Jump to content

கிழவரின் துணிவு ! – கம்பவாரிதி ஜெயராஜ்


Recommended Posts

.

Published on December 20, 2015-12:30 pm   ·   No Comments

arasiyal_low

 

ணர்ச்சிவயப்படாது நிதானமாக,
சம்பந்தன் பேசிய பேச்சொன்று,
சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது.
தனது அரசியல் அனுபவத்தை,
அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற,
தனது கட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம் ஒன்றிலேயே,
சம்பந்தன் இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார்.

 

✽♚✽

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும்,
வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,
பெரும் சர்ச்சையாய் வெடித்து,
அண்மைக்காலமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.
ஒரே கட்சியின் இரு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் வெடித்தபோது,
அக்கட்சியின் தலைவரே நடுவராயிருந்து,
அம்முரண்பாட்டிற்குத் தீர்வு கண்டிருக்கவேண்டும்.
ஆனால் உலகம் முழுவதும்,
இப்பிரச்சினை பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோதும்,
சம்பந்தனிடமிருந்து எதுவித அசைவையும் காணவில்லை.
அச்செயல் அவரது தலைமை ஆற்றலை ஐயுற வைத்தது உண்மை.
ஆயிரந்தான் சமாதானம் சொன்னாலும்,
பிரச்சினையின் போதான தலைவரின் மௌனம்,
அவரது தலைமை ஆற்றலுக்கு,
பெருமை சேர்க்கவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

 

✽♚✽

கட்சியே உடைந்துவிடுமோ எனும் அளவிற்கு,
இப் பிரச்சினை வளர்ந்த போதும் சம்பந்தன் மௌனம் காத்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது,
முதலமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்ட இப்பிரச்சினை,
தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நாளுக்கு நாள் வளர்ந்து,
தமிழ்ச்சமூகத்தின் ஒற்றுமையையே குலைக்கத் தலைப்பட்டது.

 

✽♚✽

முதலமைச்சர், தான் கட்சிக்கு அப்பாற்பட்டவர் என்று,
ஒரு புதுக்குண்டைத் தூக்கிப்போட,
அவரது உணர்ச்சிவயப்பட்ட,
இன எழுச்சி சார்ந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு,
தமிழ்மக்கள் பலரும் கூட,
இவரே பொருத்தமான இனத்தலைவர் என்று,
முடிவு செய்யும் அளவுக்காய் நிலைமை மோசமானது.
அப்போதும் சம்பந்தனிடமிருந்து,
உறுதிபட்ட ஒரு கருத்துத்தானும் வெளிவரவில்லை.
பிரேத அமைதிகாத்து எரிச்சலூட்டினார் அவர்.

 

✽♚✽

அவரது அமைதியை வாய்ப்பாகக் கொண்டு,
முதலமைச்சரை வெளியேற்றவேண்டுமென,
அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் அறிக்கைவிட,
உள்;ரில் குழப்பம் வெடித்தது.
தேர்தல் முடிவு வரும் வரை,
நான் ஊமையாய் இருக்கப்போகிறேன் என்று அறிக்கைவிட்டு,
தேர்தல் முடிவுகளில் தனது எதிர்பார்ப்புத் தோற்றுப்போக,
தொடர்ந்தும் ஊமையாகவே இருந்து வந்த முதலமைச்சர்,
சுமந்திரனின் அவுஸ்திரேலிய அறிக்கையால் ஆவேசமுற்று,
மௌனம் கலைத்து நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

 

✽♚✽

தன்னை இனப்பற்றாளனாகவும்,
கூட்டமைப்பினரை,
முக்கியமாகத் தமிழரசுக்கட்சியினரை,
இனப்பற்றில்லாதவர்களாகவும்,
தீர்க்கதரிசனமும், தெளிவும் இல்லாதவர்களாகவும்,
அவரது கட்டுரை அடையாளப்படுத்தியது.
யாருக்கும் கட்டுப்படாதவர் தாம் என்றும்,
கூட்டமைப்புத் தலைமை கூட,
தனக்குக் கட்டுப்படவேண்டுமென்றும்,
விருப்பம் தெரிவித்திருந்த அவரது கட்டுரையின் போக்கு,
அறிவார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

✽♚✽

 

அப்போதாவது சம்பந்தனின் மௌனம் கலையும் என்று,
தமிழ்மக்கள் எதிர்பார்த்தனர்.
மூக்கில் இடித்தால் ஞானிக்கே கோபம் வரும் என்பார்கள்.
முதலமைச்சரின் அறிக்கை மூக்கில் இடித்தும்,
சம்பந்தன் ஏதும் நடக்காதவர் போல்,
வானம் பார்த்து மோனம் காத்தார்.

 

✽♚✽

இந்நிலையில்,
முதலமைச்சர் தடுமாறுகிறார் என்பதை,
அவர் அறிக்கை வெளிப்படுத்த,
அவரைக் கூட்டமைப்பிலிருந்து பிரித்து,
புதிய தலைமையை உருவாக்க,
பலரும் வலைவீசத் தலைப்பட்டனர்.
முதல் வலையை கஜேந்திரகுமார் நாகரீகமாய் வீசினார்.
முதலமைச்சரின்,
உலகியலுக்கு ஒவ்வாத உணர்ச்சி மிகுவிக்கும் கருத்துக்களால்,
அப்பாவி மக்கள் ஈர்க்கப்படுவதைக் கண்டு,
கூட்டமைப்புக்குள்ளிருந்தும் சில தலைவர்கள்,
முதலமைச்சரை ஆதரித்து அறிக்கை விட்டு,
அவர் தலைமையின் பின் செல்லும் தம் விருப்பை வெளிப்படுத்தினர்.

 

✽♚✽

இந்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்போதைய தலைவரும்,
முதிர்ந்த முன்னாள் தமிழ்த்தலைவருமான ஆனந்தசங்கரி அவர்கள்,
மக்களால் புறந்தள்ளப்பட்டுத் தனித்துப்போன,
தனதும், தன் கட்சியினதும் நிலை மாற்ற,
முதலமைச்சரை ஈர்ப்பதுவே ஒரே வழி என முடிவு செய்தார்.

 

✽♚✽

போராட்டம் நடந்த காலத்தில் ஒதுங்கியிருந்து,
அரச சலுகைகளை அனுபவித்து,
போராட்டம் முடிந்தபின் எதிர்ப்பின்றி அரசியலில் நுழைந்து,
பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கழிகின்ற இன்றுவரை,
பொறுப்பேற்ற மாகாணசபையை வெற்றியாய் இயங்க வைக்காது,
வெறும் வெற்று உணர்ச்சி அறிக்கைகளால்,
மக்களை உசுப்பேத்தியதன்றி இனத்திற்காய் இதுவரை ஏதும் செய்யாது,
தன்னை அரசியலுக்குக் கொணர்ந்து பதவிபெற்றுத்தந்த கட்சிக்கே,
விசுவாசம் காட்ட முடியாது நடந்து கொள்ளும் முதலமைச்சரை,
உத்தமர், உண்மையாளர், திறமைசாலி, இனப்பற்றாளர் என்றெல்லாம் புகழ்ந்து,
அவர் வருகைக்காய் செங்கம்பளம் விரித்துக் காத்திருப்பதாய்,
பகிரங்க அறிக்கை விட்டார் சங்கரி.

 

✽♚✽

முதலமைச்சர் சம்மதித்தால்,
தனது கூட்டணித் தலைவர் பதவியைத் தருவதோடு,
அவரால் கைகாட்டப்படுபவருக்கே,
கட்சியின் செயலாளர் பதவியையும் தரச்சம்மதிப்பதாய்ச் சொல்லி,
தேர்தலில் கட்டுக்காசும் இல்லாமற்போன,
தனது கட்சியின் தலைமைப் பதவியை,
முதலமைச்சருக்காய் தியாகம் செய்யுமாப்போல்,
ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அவர் அறிக்கையில் மயங்கி,
தாமதத்தையே தம் மதமாய்க் கொண்ட முதலமைச்சரும்,
அவர் அறிக்கை வந்த மறுநாளே,
அவர் பாராட்டுக்கு நன்றி உரைத்து,
பதில் அறிக்கை விட்டு,
அனைவரையும் வியக்கவைத்தார்.

 

✽♚✽

ஆச்சரியம் இங்கேதான் நிகழ்ந்தது.
பிரச்சினை எங்கெங்கெல்லாமோ சென்ற போது மௌனித்திருந்த சம்பந்தனார்,
சங்கரியின் அறிக்கையால் சலிப்புற்று சதிராடியிருக்கிறார்.
ஒரு காலத்தில் ஓர் அணியில் நின்று ஒன்றாய் வாழ்ந்து பிரிந்து போனவரின்,
வஞ்சக வலைவிரிப்பு, சம்பந்தனாரை கொதிக்கச் செய்திருக்கிறது.
அக்கொதிப்பு அவரது பேச்சின் வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கிறது.

 

✽♚✽

ஒரு ஜனநாயக்கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகள்,
பேசித்தீர்க்கப்படவேண்டியவையேயன்றி,
ஊடகங்களில் உலாவரவேண்டியவை அல்ல என்று அத்திவாரமிட்டு,
சம்பந்தன் வெளியிட்டிருக்கும் அறிக்கை,
எதிராளிகளை வன்மையாய்த் தாக்குவதோடு,
அவர்களின் சார்புபட்டுக் காட்டும் முதலமைச்சரையும்,
கடுமையாய் விமர்சித்துள்ளது.

 

✽♚✽

சுமந்திரனுக்கும், முதலமைச்சருக்குமான முரண்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது.முரண்பாடுகள் உள்ளது. அது தற்போதும் இருக்கிறது. அம்முரண்பாடு ஏற்பட்டதற்குக் காரணம் பாராளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாய் ஆதரிக்காததே. முதலமைச்சர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினூடாக, இலங்கைத் தமிழரசுக்கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். எனவே அக்கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்குக் கடமையிருக்கிறது. அவரை முதலமைச்சராக்கியது நான். அவரை முதலில் போய்க் கேட்டது நான். முதலில் கட்சிக்குள் எவரும் அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை. மாவை சேனாதிராஜா மௌனம் சாதித்தார். இறுதி நேரத்தில் அவரின் பெருந்தன்மை, அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே, அவரை நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனிவழியில் போய்க்கொண்டிருக்கிறார்.
என்று தனது கோபத்தையெல்லாம்,
அக் கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார் சம்பந்தர்.

 

✽♚✽

அதுமட்டுமல்லாமல்,
முதலமைச்சருக்கு ஆதரவாக,
மக்களால் குப்பைத்தொட்டியில் போடப்பட்ட,
ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனா,;
அதுபற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை’  என்று கூறி,
அலட்சியம் செய்திருக்கிறார்.
அவரது கூற்றில்,
முதலமைச்சருக்கான எச்சரிக்கையும் கலந்திருப்பது வெளிப்படத் தெரிகிறது.
முதலமைச்சர் விரும்பினால் கட்சித்தலைவர் பொறுப்பினை ஏற்கலாம் ‘  என்று கூறி,
முதலமைச்சரின் அண்மைக்கால விருப்புக்கும் ஒரு குட்டு வைத்து,
அதைத் தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என்று அவருக்கு,
செக் வைத்திருக்கிறார்.

 

✽♚✽

அவரது இந்தக் கிண்டல் அறிக்கையை திரித்து,
சம்பந்தன், கட்சித்தலைவர் பதவியை,
முதலமைச்சருக்குத் தரத்தயார் என்று பேசியதாய்,
முதலமைச்சரின் ஆதரவுப் பத்திரிகைகள் சில,
தலைப்பிட்டு எழுதி மகிழ்ந்தது வேடிக்கை.

 

✽♚✽

முதலமைச்சருக்கு மட்டுமன்றி,
கட்சியை மீறி அவசரப்பட்டு அவுஸ்திரேலியாவில் அறிக்கை விட்ட,
சுமந்திரனுக்கும் தன் கண்டனத்தைத் தெரிவித்து,
சுமந்தரனின் வழிப்படுத்தலில்தான் சம்பந்தன் இயங்குகிறார் என்று,
உலாவி வந்த கருத்தை உடைத்து,
தனது ஆண்மையை நிரூபிக்கவும் அவர் தவறவில்லை.
இங்ஙனமாய் தனது வீரியமான உரையில்,
ஆளுமை காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் சம்பந்தன் ஐயா.

 

✽♚✽

அவரது அப்பேச்சில்,
நிதானமான பல செய்திகளும் பதிவாகியிருக்கின்றன.
 சிறைக்கைதிகளின் விடுவிப்பு,
 கிழக்கிலும், வடக்கிலும் காணிகள் மீட்பு,
 தமிழ்மக்களின் மீள்குடியேற்றம்,
அரசியல் தீர்வு விடயத்தில் உறுதி,
 தமிழ்பேசும் பிரதேசங்கள் ஒன்றாய் இருத்தல்,
என்பவைபற்றி தாம் மேற்கொண்டு வரும்,
உறுதியான செயற்பாடுகள் பற்றி எடுத்துரைத்து,
இப்பயணம் நீண்டது.
உள்நாட்டிலும் சர்வதேசத்திலும்,
தமிழர்க்குச் சார்பான நகர்வுகள் நிகழ்ந்துள்ளன.
இந்தநேரத்தில் நிதானமும், பொறுமையும், ஒற்றுமையும் அவசியம் என்று கூறி,
தற்போதைய அரசினது நல்ல சமிக்ஞைகளை வரவேற்று,
அவர்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்களை,
நாம் உணரவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி,
நிதானமாக தனது பேச்சை நிறைவு செய்திருக்கிறார் சம்பந்தன்.

 

✽♚✽

இதுநாள் வரை தனது மௌனத்தால் எரிச்சலூட்டிய சம்பந்தன் ஐயா,
தனது மௌனம் வெறும் பிணமௌனம் அல்ல,
ஞான மௌனம் என்பதைத் தெளிவுபட உரைத்திருக்கிறார்.
அவ் உரையில்,
புலிகள் கொண்டிருந்த கருத்துக்களின் அடிப்படையில்,
தமிழ்மக்கள் தற்போது செயல்படவில்லை.
நிதானமான போக்கினையே அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
அதனால் இன்று சர்வதேச சமூகத்தின் முழுமையான அனுதாபம்,
எங்கள் பக்கம் வந்துள்ளது என்று,
துணிந்து வெளிப்படப் பேசியிருக்கிறார்.

 

✽♚✽

நல்ல ஆற்றல் மிக்க நிதானமான ஒரு தலைவராய்,
தான் செயல்படுவதை தனது உரையினூடு,
சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கின்றமை மகிழ்ச்சி தருகிறது.
திரும்பத்திரும்ப மக்கள் உணர்ச்சியைக் கிளறும் பாதையில்,
பேரினவாதத் தலைவர்களில் ஒருசிலர் இயங்கி இடர் செய்ய,
அதேபோல் நம்மவரிலும் ஒருசிலர்.
மக்கள் ஆதரவைப் பெற்று,
பதவிச்சுகம் பெறுவதற்காய் மட்டும்,
தமிழ்மக்களின் உணர்ச்சியையும் கிளறி,
மீண்டும் பிழையான பாதையில்,
தமிழர்களை வழிநடத்த முயற்சிக்கும் இவ்வேளையில்,
அந்தப்பக்கம் நிதானமான ஜனாதிபதி மைத்திரியின் செயற்பாடும்,
இந்தப்பக்கம் நிதானமான சம்பந்தனின் செயற்பாடும்,
இந்நாட்டில் மீண்டும் பகையிருள் நீங்கி ஒளி பிறக்குமோ? என,
எண்ண வைத்திருக்கிறது.

 

✽♚✽

முதலமைச்சரின் அவசரக் கொள்கைகளையும், ஆத்திர அறிக்கைகளையும்,
இந்திய, அமெரிக்க ராஜதந்திரிகள் விரும்பவில்லை என்பது
அண்மையில் வெளிவந்துகொண்டிருக்கும்
அவர்களது அறிக்கைகளால் தெரியவருகிறது.
இதிலிருந்தே அவர் வகுக்கும் அரசியல் பாதை,
உலகுக்கு ஒவ்வாதது என்பதை,
உணர்ச்சியின் பாற்பட்டு நிற்கின்ற தமிழர்கள் உணரவேண்டும்.
ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும் என்பது பழமொழி.
உலகொடு பகைக்கினும் அதுவே கதியாம்.
தன்னைப் பிரபாகரனுக்கு ஒப்பான தேசியத்தலைவராய்
வார்த்தை ஜாலங்களால் மட்டும் காட்ட முனையும்,
முதலமைச்சரிடமிருந்து இனத்தை மீட்டெடுத்து,
நல்வழிப்படுத்த சம்பந்தனைப் போன்ற,
நிதானமான ஒரு தலைவர் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

 

✽♚✽

சம்பந்தனைப் பாராட்டி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைக்கு,
கிழவரின் துணிவு என,
அவரின் முதுமையை வைத்துத் தலைப்பிட்டிருப்பது பொருத்தமா?
கேள்வி பிறக்கும்.
தமிழில் கிழவன் என்ற சொல்லுக்குத் தலைவன் என்று பொருள்.
அதனாற்றான் குறிஞ்சிக்குத் தலைவனான முருகனை,
குறிஞ்சிக் கிழவோன் என்றது தமிழ்.
முதன்முதலாக தன்னை ஒரு துணிந்த தலைவராய் இனங்காட்டிய,
சம்பந்தனாரைப் பாராட்டவே,
உயர் தமிழில் இக்கட்டுரைக்கு,
கிழவரின் துணிவு என்று பெயரிட்டிருக்கிறேன்.

http://www.uharam.com/

__._,_.___
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப இவர் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் கொள்கை வகுப்பாளரா மாறினவர்..! இவர் எந்தக் குலாமிற்கு கிழவர்..?! :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று எழுத முயற்சித்து இருக்கிறார்...  
(அவருக்கு மீசையே இல்லை என்பது வேறு கதை) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

எல்லோரையும்விட தான் பெரியவர்

வல்லவர்

நாலும் தெரிஞ்சவர்

எல்லோருக்கும் வகுப்பெடுக்கலாம் என்று நினைப்பது தெரிகிறது..

ஆனால் அவர்கள் மேலுள்ள சுமைகளில்

மக்கள் நம்பிக்கையில் ஒரு வீதம் கூட இவரிடமில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

ஐயா

எல்லோரையும்விட தான் பெரியவர்

வல்லவர்

நாலும் தெரிஞ்சவர்

எல்லோருக்கும் வகுப்பெடுக்கலாம் என்று நினைப்பது தெரிகிறது..

ஆனால் அவர்கள் மேலுள்ள சுமைகளில்

மக்கள் நம்பிக்கையில் ஒரு வீதம் கூட இவரிடமில்லை

 

ஒரு சில அடக்க ஒடுக்கங்களின் பின்........ இப்போது கண்ட கண்ட மூஞ்சூறுகள் எல்லாம் வகுப்பெடுப்பதை காண கேட்க கண் காது குளிருகின்றது.

Link to comment
Share on other sites

இந்த கொசு தொல்லை தாங்க முடியுதில்லை!!!

பிரசங்கம் செய்தமா பிரசாதத்த வாங்கினமானு இருக்கணும் , அரசியல் அரசால் செய்யுமளவு துணிவா ? (கிழவரின் துணிவு!!!!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.