Jump to content

கொழும்பின் சதியா? யாழின் விதியா


Recommended Posts

?

 
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
22_arasiyal_low.jpg
ண்மை வெளிவந்துவிட்டது.
கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து,
மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை,
தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான்.


கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு,
கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும்,
முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட,
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்,
தேர்தல் தோல்வியின் பின்,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து,
கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த,
ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும்,
தனது மூத்த உறுப்புரிமையை வைத்து,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன,
பேராசிரியர் சிற்றம்பலமும் என,
கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து,
இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி,
இரட்டைவேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில்,
இரகசியக் கூட்டம் போட்டு,
மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை,
உருவாக்கியிருக்கிறார்கள்.


 
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள்.
முதலமைச்சருக்கும் குறுகுறுத்திருக்கிறது.
அதனாற்றான் ‘தமிழ்மக்கள் பேரவை’ அரசியல் கட்சியல்ல,
மாற்றுத்தலைமைக்கான ஆரம்பமுமல்ல என்று,
‘அப்பா குதிருக்குள் இல்லை’ என்றாற்போல்,
அறிக்கை விட்டிருக்கிறார் அவர்.
 
குறுகுறுக்காமல் எப்படி இருக்கமுடியும்?
கடந்த மாகாணசபைத் தேர்தலில்,
கட்சிகளைக் கடந்த,
சமூக அந்தஸ்துடைய,
தக்க ஒருவரை, தம் சார்பாகத் தேர்தலில் நிறுத்துவதன் மூலம்,
கூட்டமைப்புக்குள் எழ ஆரம்பித்திருந்த,
சிறு சிறு வெடிப்புக்களை நீக்கலாம் என்றும்,
மக்கள் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பதாய்க் காட்டலாம் என்றும்,
ஒரு உயர்ந்தவரை வைத்து உலகுக்கு உண்மை உரைக்கலாம் என்றும்,
சமூகப் பிரமுகர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில்,
சம்பந்தனும் சுமந்திரனும் கணக்குப்போட,
விடையாய் வந்தவர்தான் நம் விக்னேஸ்வரன்.
 
முதலில் மாட்டேன் என்று ‘பிகு’பண்ணி,
பிறகு எல்லோரும் சேர்ந்து அழைத்தால்,
‘மாட்டுவேன்’ என்று அறிக்கைவிட்டு,
இனமானத்தைக் காக்க,
தன்மானத்தை உறுதி செய்துகொண்டு,
அரசியலுள் நுழைந்தார் விக்னேஸ்வரன்.


இவர் வருகையின் போது,
கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட அதிர்வுகள்,
கட்சியைப் பொறுத்தவரை ‘சுனாமி’க்கு ஒப்பானவை.
தமிழ்மக்களுக்குத் ‘தொண்டு’(?) செய்வதற்காய்,
முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த,
கூட்டமைப்புக்குள் இருந்த பெருந்தலைகள் பல,
இவருக்குப் பதவி என்றதும்,
ஆடி, அசைந்து பின் சம்பந்தனின் ஆற்றுகையில் அடங்கிப்போயின.
வஞ்சகம் இல்லாமல் வழிவிட்ட, மாவை போன்றோரைப் போற்றி,
‘அவர்கள் ஆலோசனையைப் பெற்றே இயங்குவேன்’ என்று,
அப்போது விக்னேஸ்வரன் விட்ட அறிக்கை,
இப்போதும் நினைவில் இருக்கிறது.
அவ் அறிக்கை சத்தியத்தால் விளைந்தது என நினைந்தோம்.
அது சாமர்த்தியத்தால் விளைந்தது என இப்போதுதான் புரிகிறது.


கூட்டமைப்புத் தலைவர்கள் விக்னேஸ்வரனை,
சந்தி, சந்தை, சத்திரம் என,
பல இடங்களிற்கும் அழைத்துச் சென்று,
நடத்திய வாக்கு வேட்டைப் புகைப்படங்கள்,
பல பத்திரிகைகளிலும் அப்போது வெளியாகின.
அவரது தேர்தல் செலவுக்கென சம்பந்தனும் சுமந்திரனும்,
வெளிநாட்டுத் தமிழர்களைச் சந்தித்துத் திரும்பினர்.
கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் நீக்கி,
தமது வாக்காலும், வளத்தாலும்,
விக்னேஸ்வரனது வெற்றியை உறுதி செய்து,
அவரைப் பெருமளவு வாக்குகள் பெறவைத்து,
முதலமைச்சராக்கிய பெருமை,
கூட்டமைப்புக்கே உரியது என்பதை,
எவரும் மறுக்கத் துணியார்.
இவரும் மறுக்கத் துணியார்.


பதவியும், பவுசும் வந்ததும்,
முதலமைச்சர் மெல்ல  மெல்ல மாறத்தொடங்கினார்.
தனது இயல்பான சண்டைக் குணத்தாலும்,
நிர்வாகத்திறமையின்மையாலும்,
மாகாணசபைத் தேரை,
அங்குலக் கணக்கிலும் அசைக்க முடியாமல் போக,
அதிமானம் கொண்டவரான முதலமைச்சர்,
தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் துணிவின்றி,
அனைவர் கவனத்தையும் திசைதிருப்ப,
தமிழ்மக்களது உணர்ச்சியைக் கிளப்பி,
அரசியல் செய்யும் புதுவழியைக் கண்டுபிடித்தார்.
அதற்கு எழுந்த ஆதரவு அலையில்,
அற்புதமாய்த் தனது பலயீனங்களை மூடி மறைத்தார்.


கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால்,
நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும்
சிந்தனை வேறாகிவிடும் என்றான் கம்பன்.
அறம் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்
பெறல் அரும் திரு பெற்றபின் சிந்தனை பிறிதாம்

கம்பனின் இக்கருத்திற்கு ஏற்ப,
முன்னாள் நீதியரசரின் சிந்தையும்
சில கூனிகளின் ஆலோசனையால்,
கைகேயியின் மனம்போல் திரிந்தது.
அது தூய சிந்தையா? என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம்.



குறுக்கு வழியில் நடக்கத்தலைப்பட்ட முதலமைச்சர்,
அதன் உச்சக்கட்டமாக,
கடந்த தேர்தலில்,
கூட்டமைப்பின் எதிரிகளுடன் மறைமுகமாய்க் கைகோர்த்து,
கூட்டமைப்பிற்கு எதிராய்ச் செயற்படத் தலைப்பட்டார்.
அக் கள்ளத்தொடர்பு ஓரளவு பகிரங்கமாக,
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் உரைக்க முடியாமல்,
தான் ஊமையாவதாய்ச் சொல்லி,
உறைந்து போனார் முதலமைச்சர்.
அது அப்போது நடந்த செய்தி.


தேர்தல் முடிவில் அவர் மறைமுகமாய் ஆதரித்த கட்சி அடி அறுந்து போக,
‘ஆப்பிழுத்த குரங்கின் கதையாய்’ ஆனது முதலமைச்சரின் கதை.
தான் சோரம் போன கதையை வெளிப்படுத்தத் தயங்கி,
தனது ஊமைத்தனத்தைத் தொடர்ந்த முதலமைச்சர்,
மாகாணசபையில் இன அழிப்புப் பிரேரணையை நிறைவேற்றியும்,
ஐ.நா.சபைத் தீர்வில் முரண்பட்டும்,
மக்கள் மத்தியில் தன் கற்பினை நிரூபிக்க முனைந்தார்.


ஐ.நா.சபைத்தீர்வில் உலகத்தோடு ஒத்து,
யதார்த்த நிலையைக் கடைப்பிடிக்க முனைந்த,
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மேல்,
வெற்றுணர்ச்சியாளர்களால் பகை பரப்பப்பட,
அப்பகைத்தீயில் தன்னை மெருகேற்றி வெளிவந்தார் முதலமைச்சர்.
தேர்தலின் போது குழப்பம் ஏற்படுத்திய தன்மேல்,
நடவடிக்கை எடுக்காத கட்சித்தலைவரின் தயக்கம்,
முதலமைச்சருக்கு மேலும் பலம்தர,
அந்நேரம் பார்த்து,
முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென கோரியிருப்பதாய்,
சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட அறிக்கை,
முதலமைச்சரை மேலும் பலப்படுத்திற்று.
அப்போது சுமந்திரனுக்குப் பதிலுரைத்து,
முதலமைச்சர் வெளியிட்ட நீண்ட அறிக்கை,
அவர், கூட்டமைப்பிலிருந்து விலகி,
தமிழ்மக்களின் தனித்தலைவராய் உருவாக விரும்புகிறார் என்பதை,
வெளிச்சம் போட்டுக் காட்டிற்று.


அப்போதும் முதலமைச்சர்,
தான் சோரம் போகவில்லை என்று கூறியபடியே இருந்தார்.
ஆனால் அவரது அப்பொய்ப் புலம்பல்,
நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’க் கூட்டத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
கூட்டமைப்பின் எதிராளிகளுடன் கைகோர்த்து,
கூட்டம் நடத்திவிட்டு வெளி வந்த முதலமைச்சர்,
குற்றம் செய்த குறுகுறுப்பில் மீண்டும் தான் ஊமையாவதாய் உரைத்து,
ஊடகவியலாளரிடமிருந்து ஒதுங்கி ஓடியிருக்கிறார்.


எவர் தூண்டினார்களோ தெரியவில்லை.
மறுநாளே அவரது ஊமைத்தனம் உடைந்திருக்கிறது.
இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும்,
போருக்குப் பிந்திய தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான,
சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான,
ஓர் உறுதியான செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்குமான செயற்பாடாகும் என,
நேற்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நகைப்பைத் தருகிறது.

 
peravai.jpg
சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பவர்கள் யார்?
தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை,
சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாய்க் கொள்ளமுடியாதா?
அத்தகையோரைப் புறந்தள்ளி,
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து,
இக்கூட்டம் நடத்தப்பட்டதன் மர்மம் என்ன?
நடந்துமுடிந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று,
முதன்மை உறுப்பினராய் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்,
பிரச்சினையின்போதேல்லாம் முதலமைச்சருக்கு ஆதரவளித்தவருமான,
சிறீதரன் (பா.உ.) போன்றோர்கூட,
இச்சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பட்டியலில் வரமாட்டார்களா?
அவர்கள் எல்லாம் இவர்தம் செயலால் மனம்நொந்துபோய் இருக்கிறார்கள்.


போருக்குப் பின்னராக,
தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகத்தான்,
அரசியல் அனுபவமே இல்லாத முதலமைச்சர் கையில்,
வடமாகாணசபை தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இன்று வரை அதை வைத்து,
உருப்படியாய் அவர் ஏதும் செய்ததாய்த் தெரியவில்லை.
அதுபோலவே அரசியல் தீர்வு சம்பந்தமாக,
இதுவரை தன் கட்சித்தலைமைக்கு,
இவர் ஏதும் ஆலோசனை வழங்கியதாயும் தெரியவில்லை.
இந்நிலையில் சிவில் சமூகத்துடன் சேர்ந்து,
இவ்விரண்டையும் செய்யப்போவதாய்,
அவர் வெளியிட்டிருக்கும் செய்தி,
நகைப்புத்தராமல் வேறு என்ன செய்யும்?


பொதுவாக அவரது அறிக்கைகள் பெரும்பாலும் நகைப்புக்குரியவைதான்.
வடமாகாணசபைக்கென 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்,
அறுபது சதவீதமான தொகையை பாவிக்காமல் திரும்பச் செல்ல விட்டுவிட்டு,
2016 ஆம் ஆண்டு செலவுக்கு தாம் கேட்ட தொகையில்,
நாற்பது சதவீதத்தையே அரசு ஒதுக்கியிருக்கிறது என்று ஒப்பாரிவைத்து,
சில தினங்களுக்கு முன் வந்த அவரது அறிக்கை,
யாருக்குத் தான் நகைப்பை ஏற்படுத்தாது?


தமிழர் பிரச்சினைபற்றி,
வடக்கிலிருந்து பார்ப்பதற்கும்,
தெற்கில் இருந்து பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற,
அவரது மற்றொரு அறிக்கை சிரிப்பின் அடுத்த அத்தியாயம்.
துன்பக் காலத்தில் வடக்கோடு எந்தத் தொடர்புமின்றி சுகித்து வாழ்ந்த,
தனது சுயநலத்தை மறைக்க அவர் இட்ட புதிய திரை இது என்பதும்,
கொழும்பில் வாழும் தலைவர்களைத் தமிழ்மக்களிடம் இருந்து பிரிக்க,
அவரது சட்டமூளை செய்த சதி இது என்பதும்,
அறிவுள்ள எவர்க்கும் புரியக் கூடிய ஒன்றே.


தமிழர் பிரச்சினையை வடக்கிலிருந்து பார்ப்பது,
தெற்கிலிருந்து பார்ப்பது என்று தொடங்கினால்,
அடுத்து மட்டக்களப்பிலிருந்து பார்ப்பது,
திருகோணமலையிலிருந்து பார்ப்பது என்றும்,
கிளிநொச்சியிலிருந்து பார்ப்பது,
வவுனியாவிலிருந்து பார்ப்பது என்றும்,
கனடாவிலிருந்து பார்ப்பது,
லண்டனிலிருந்து பார்ப்பது என்றும்,
பிரிவுகள் பெருகி நீளும்.
உலகறிந்த ஒட்டுமொத்த தேசிய இனப்பிரச்சினையை,
எங்கிருந்து எவர் பார்த்தால் என்ன?
விடயம் ஒன்றுதான்.
அதனை,
பிராந்தியப்பார்வைகளாய்ப் பிரிக்கும் இவரது புதிய கண்டுபிடிப்பு,
உணர்ச்சியாளர்களுக்கு உவப்பாய் இருக்குமேயன்றி,
உண்மையாளர்களுக்கு நிச்சயம் உவப்பாய் இருக்க வாய்ப்பில்லை.


மொத்தத்தில்,
நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’ கூட்ட நிகழ்வோடு,
‘சத்தியவித்தகர்’, சத்தியம் வித்தவராய்,
தமிழர் மத்தியில் பதிவாகிவிட்டார் என்பது உண்மை.
சீசரின் மனைவி,
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கவேண்டும்’ என்பது,
மேலைத்தேயத்து அரசியலார் போற்றும் ஒரு தொடர்.
இது நம்மவர்க்கும் பொருந்துமாம்.
முதலமைச்சர் ஐயத்திற்குரியவராகி விட்டார்.
தமிழின அழிப்பை விரிவாய்ச் செய்த,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன்,
இன்றும் கைகோர்த்து நின்று,
இலங்கை தனிச் சிங்களநாடாக இருக்கவேண்டும் என்று,
பிடிவாதம் பிடித்து நிற்கின்ற,
சம்பந்தி வாசுதேவநாணயக்காரவுடனான அவரது நெருக்கமான உறவு,
குடும்ப உறுப்பினர்களின் பேரின திருமண உறவுத்தொடர்புகள் என்பவையும்,
அவ்வுறவுகள் புடைசூழவே முன்னாள் ஜனாதிபதியின்முன்
பதவிப்பிரமாணம் எடுத்த அவரது செய்கையும்
முதலமைச்சரின் தனிவாழ்வுப் பின்புலத்தை,
ஐயத்திற்கு அப்பாற்பட்டதாய்க் காண இடமளிக்கவில்லை.
c-v-vigneswaran-takes-oath-before-presid


தமிழர்தம் உரிமை விடயத்தில்,
உலகம் தரும் அழுத்தத்தை நிராகரிக்க முடியாது,
முழுமனதுடன் அதனை ஏற்கவும் முடியாது,
அந்தரிக்கும் பேரினத்தலைவர்கள்,
தமிழ்த் தலைமைகளின் உடைவை எதிர்நோக்கி,
‘சப்புக்கொட்டிக்’ காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அதற்குப் பாதை திறக்க முயலும்,
முதலமைச்சரின் முன் முயற்சிகள்,
சீசரின் மனைவியை,
சந்தேகத்திற்கு ஆளாக்கவே செய்கின்றன.


முதலமைச்சர் தலைமையில் நடாத்தப்பட்ட,
மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ க்கூட்டம்,
தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கும் கேள்விகள் பலப்பல.
அவற்றைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

☛   முதலமைச்சர் சொன்னது போன்ற நோக்கங்களுக்காகத்தான் மேற்படி கூட்டம் நடாத்தப்பட்டதெனின் அதனை இவ்வளவு ரகசியமாக பூட்டிய அறைக்குள் ஊடகவியலாளர்கள் இன்றி நடத்தியதன் மர்மம் என்ன?

☛   கூட்டம்முடிந்து வெளிவந்த முதலமைச்சரும் மற்றவர்களும் ஏதோ குற்றம் செய்தவர்கள்போல் ஊடகவியலாளர்களைத்தவிர்த்து ஓட நினைந்ததன் காரணம் என்ன?

☛   கூட்டத்திலிருந்து வெளிவந்த முதலமைச்சர் தான் மீண்டும் ஊமையாவதாய் ஏன் சொன்னார்?

☛   வெளிவந்த அனைவரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ‘ஏற்பாட்டாளர்களைக் கேளுங்கள்’ என்றே பதிலளித்தனர். கடைசிவரை சொல்லப்படாத அவ் ஏற்பாட்டாளர்கள் யார்?

☛   நடந்த கூட்டத்தில் பதவி முதலியவை தெளிவாய் தீர்மானிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அங்ஙனமாயின் அதற்கான முன்னாயத்தங்கள் எங்கு எவரால் செய்யப்பட்டன?

☛   இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் எதிராளிகளாய்க் கருதப்பட்ட முக்கியஸ்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

☛   தேர்தல் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புத் தலைமை தன்னோடு ஆலோசிக்கவில்லை என்று குறைசொன்ன முதலமைச்சர் இக்கூட்டம் பற்றி கூட்டமைப்புத் தலைமையோடு ஆலோசித்தாரா? இக் கூட்டத்தினை முன்னின்று ஒழுங்கு செய்தது யார்?

☛   தேர்தலில் மக்களால் முற்றுமுழுதாய் நிராகரிக்கப்பட்டவர்களே இக்கூட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். அங்ஙனமாயின், ஜனநாயக ரீதியான மக்கள் கருத்துக்கு மதிப்பில்லை என்று முதலமைச்சரும், அவரைச் சார்ந்தோரும் கருதுகின்றனரா?

☛   முதலமைச்சர் பதவிக்கு விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதனைக் கடுமையாய் எதிர்த்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின்னர் மாகாண அமைச்சர்கள் தேர்வின் போது தனது தம்பிக்குப் பதவி வழங்கப்படாமையைக் கடுமையாய்க் கண்டித்து பத்திரிகை மாநாடு நடத்தியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஜனாதிபதியின் முன்பாக முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்ததைக் கடுமையாய் விமர்சித்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இன்று அவரே முதலமைச்சரை ஆதரித்து அறிக்கை விட்டும், அவரோடு ஒன்றிணைந்து கூட்டம் நடத்தியும் உறவு காட்டுகிறார். முதலமைச்சரும் ‘ஆயுதக்குழுக்களோடு தன்னால் ஒன்றிணைந்து இயங்க முடியாது’ என்று முன்பு சொல்லிவிட்டு இன்று அவர்களுடனேயே இணைந்து நிற்கிறார். இந்த உறவுகளின் அடிப்படை சுயநலமன்றி வேறு எதுவாய் இருக்கமுடியும்?

☛   கஜேந்திரகுமாருடனான உறவை முதலமைச்சர் மறுத்து வந்தார். இப்போது அவர்கள் உறவு வெளிப்பட்டிருக்கிறது. இந்த உறவு உண்டானது எப்போது? சென்ற தேர்தலின் முன்னரே இவ்உறவு ஏற்பட்டதா? அதனாற்றான் சென்ற தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்க முதலமைச்சர் மறுத்தாரா? ‘வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’ என்ற முதலமைச்சரின் அப்போதைய அறிக்கைக்குப் பின்னால் சுமந்திரன் சொன்னது போல, இவ் உறவால் விளைந்த வஞ்சகம் இருந்ததா? இருந்தது உண்மையென்று இப்போது தெரிந்திருக்கிறது. அப்படியானால் இல்லை என்று முதலமைச்சர் முன்பு சொன்னது தமிழ்மக்களை ஏமாற்றவா?

☛   உலக வல்லரசான அமெரிக்கா, பிராந்திய வல்லரசான இந்தியா, பேரின அரசான தற்போதைய இலங்கை அரசு என்பவை இன்று கூட்டமைப்பை அங்கீகரித்து இனப்பிரச்சினைத்தீர்வில் அதனோடு இணைந்து செயற்படவே தயாராயிருக்கின்றன. இவற்றை எதிர்த்து அல்லது இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் உரிமை பற்றிய நகர்வுகளில் தமிழ்மக்கள் பேரவையால் எதனை முன்னெடுக்க முடியும்?


ஒரு கட்சியிடம் மட்டுமே தமிழர் தலைமையினை முடக்கிவிட்டால்,
கேட்பாரின்றி அக்கட்சி நடக்கத்தொடங்கிவிடும் என்பதால்,
மாற்றுத்தலைமைகளும் உருவாகவேண்டுமென,
நடந்து முடிந்த  தேர்தலின்போது நானே எழுதியிருக்கிறேன்.
ஆனால் நான் சொன்னது,
மக்களால் தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படவேண்டிய தலைமைகளையே.
இன்று மக்கள் கருத்தை மறுத்து,
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களோடு கூட்டுச்சேர்ந்து,
சதிகள் மூலம் உருவாக்க நினைக்கின்ற மாற்றுத்தலைமையை அன்றாம்.


கடந்த காலங்களில் தமிழ்மக்கள் மத்தியில்,
புலிகள் பெற்றிருந்த எழுச்சியை உலகம் அறியும்.
அவர்கள் காட்டும் ஒரு புல்லுக்கும் வாக்களிக்க,
தமிழ்மக்கள் தயாராய் இருந்த நிலையிலும்,
இடைக்காலத்தில் அவசியம் கருதி,
அரசியல் தலைமையையும் உருவாக்க நினைந்த புலிகள்,
தாம் வெறுத்த கூட்டணித்தலைவர்களின் அரசியல் அனுபவத்தை,
முற்றாய் நிராகரிக்க நினைக்காமல் தாம் வகுத்த அரசியல் வட்டத்திற்குள்,
அவர்களையும் ஈர்த்துக் கொண்டனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.
அஃது அவர்தம் அனுபவச் செறிவின் அடையாளம்.
ஆனால் இன்று தமிழ்மக்கள் பேரவை அமைத்தவர்கள்,
அனுபவசாலிகளை முற்றாய் நிராகரித்து,
தொழிற்தொடர்பின்றி சமூகத்துடன் வேறெந்த தொடர்புமில்லாத,
டாக்டர்கள் போன்ற புதியவர்களையும்,
மக்களால் நிராகரிக்கப்பட்ட சில தலைவர்களையும் உள்வாங்கி,
புதிய வழி சமைக்க முயல்கின்றனர்.
இவர்தம் அறியாமையை என் சொல்வது?


எல்லாம் முடிந்துவிட்டது.
கூட்டமைப்பிற்குள் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் கிளம்பும் என்று பார்த்தால்,
எந்த ‘அசுமாத்தத்தையும்’ காணவில்லை.
சம்பந்தன் பழையபடி தூங்கத் தொடங்கிவிட்டார்.
ஆனந்த சங்கரி ஏதாவது பேசினாற்றான்,
அவருக்கு உணர்ச்சி வரும்போல,
இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை.
இனம் பிரிவதற்குமுன்னர் ஏதாவது செய்தாகவேண்டும்.
ஒன்று முதலமைச்சரை அழைத்து விசாரித்து,
தவறுகள் திருத்தப்பட்டு அவரைத்தம்மோடு இணைக்க வேண்டும்,
அல்லது அவரை கட்சியிலிருந்து விலக்கி,
அவர் விரும்பும் பாதையில் செல்ல அவரை அனுமதிக்கவேண்டும்.
‘வாசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை’ என்றாள் ஒளவை.
அன்பில்லாத உறவை விட,
பகை நல்லது என்பது அத்தொடருக்காம் அர்த்தம்.
உறவா? பகையா? என்று உறுதி செய்யும் நாள்,
வந்துவிட்டது என்றே உலகம் கருதுகிறது.
உரியவர்கள் உணருவார்களா?


தமிழ்மக்கள் தெளிவானவர்கள்.
தமது உண்மைத் தலைவர்களை அவர்களால் இனம் காணமுடியும் என்று,
இன்றும் உலகம் நம்புகிறது.
முதலில் தந்தை செல்வா.
பின்னர் அமிர்தலிங்கம்.
பின்னர் பிரபாகரன் என,
தம் தலைவர்களை ஒருமித்து அங்கீகரித்தவர்கள் நம் தமிழர்கள்.
மேற்சொன்ன தலைவர்கள்,
தம் வாழ்நாள் முழுவதையும் இனத்திற்காக அர்ப்பணித்தவர்கள்.
அவர்கள் பற்றிய சில மாற்று விமர்சனங்கள் இருந்தாலும்,
அவர்களது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும்,
இனவிடுதலை ஈடுபாட்டினையும் எவரும் ஐயுற மாட்டார்கள்.


ஆனால் திடீரென முளைத்து,
காகம் கஷ்டப்பட்டுக் கட்டிய கூட்டில்,
களவாய் முட்டையிட்டு,
குஞ்சு பொரித்துப் பயன்பெறும் குயிலின் கதையாய்,
தமிழ்த்தலைமையை,
இதுவரை எந்தத் தியாகமோ, அர்ப்பணிப்போ செய்யாமல்,
வெறும் பதவிப் பவுசையும்,தோற்றப்பொலிவையும் முதலாய் வைத்து,
வஞ்சனை வலைவீசி அபகரிக்க நினைக்கும் ஒருவரை,
முன்னைத்தமிழ்த் தலைவர்கள் வரிசையில்,
தமிழினம் தலைவராய் ஏற்றுக்கொள்ளுமா?
விதியின் விளையாட்டை யார் அறிவார்?
அத்தவறு நிகழ்ந்தால்,
அது நம் இனத்தின் தவக்குறைவாகவே அமையும்.


என்னவோ தெரியவில்லை.
தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகளின் அவதானிப்பால்,
சில உண்மைகளை நாம் எதிர்வு கூறவேண்டியிருக்கிறது.
காலாகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக் காலங்களில்,
தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை உடைக்கப்பட்டிருக்கின்றது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில்,
தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவராய் இருந்து,
கிழக்கில் அக்கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரை,
கட்சியிலிருந்து விலகி அரசில் அமைச்சுப் பொறுப்பேற்றார்.
பின்னர் இடையில் சிலகாலம் ரணில் ஆட்சிப்பொறுப்பேற்ற பொழுது,
தமது பலத்தால் உலகையே வியக்க வைத்திருந்த புலிகளின்,
முக்கியத் தலைவர்களில் ஒருவரான,
கருணா பிரிக்கப்பட்டு,
பின்னர் அவரும் அரசுடன் இணைந்து அமைச்சரானார்.
இன்று மீண்டும் ரணிலின் ஆட்சி?


வேறு வேறு கொள்கை, வேறு வேறு பாதை என்றிருந்தாலும்,
இன எழுச்சிக்காய் ஒன்றுபட்டு,
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி,
ஆயிரம் பிரச்சினைகளைத் தாண்டி ஒன்றுபட்டிருந்து,
தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று,
ஏகத்தலைமையாய் நிமிர்ந்து நின்ற கூட்டமைப்பை,
இன்று ஒரு தனிமனிதர் உடைக்கத் தலைப்படுகிறார்.
சென்ற ரணிலின் ஆட்சியில் புலிகளை உடைக்க ஒரு கருணா.
இந்த ரணிலின் ஆட்சியில் கூட்டமைப்பை உடைக்க ?,
இது கொழும்பின் சதியா? யாழின்  விதியா?
யார் அறிவார்?
 
Link to comment
Share on other sites

இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இவரது தேர்தல் பரப்புரைக்கு ஏனைய உறுப்பினர்களால் திரட்டப்பட்ட நிதியை இவர் கணக்கு கேட்டு செலவளித்தாரா? 

அப்போது மேட்டுக்குடி காட்டுக்குடி என்று இவரை வசைபாடி ஒருகூட்டம் இவரைஒதுக்கும் பொதும் இவரை முன்னிறுத்தி வெற்றிபெற வைத்தது கூட்டமைபுத்தான். (அந்த கூட்டத்தின் கணிப்பு எல்லாத் தேர்தல்களிலும் நிராகரிக்கபட்டது என்பது வரலாறு).

அனால் இவரோ கூட்டமைப்பின் பணத்தை செலவழிப்பாராம் அனால் நிதி செகரிக்கமாட்டாராம்.

இவரை வரவேற்றதில் நானும் ஒருவன் அனாலும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

Link to comment
Share on other sites

உடனடியாக சம்பந்தா போற்றி என்று துதி பாட ஆரம்பிபதன் மூலம் இவ்வாறான கட்டுரைகள் என்ற பெயரிலான வகையறாக்கள் வெளிவருவதையும் சம்பந்த சுமந்திர துதி பாடி வாலுகளின் தாக்குதலில் இருந்து கெளரவ விக்கினேஸ்வரன் தப்ப முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.