Jump to content

அமெரிக்க இந்திய அரசுக்களையும் கவலைக்குள்ளாக்கும் வடக்கு முதல்வரின் நிலைப்பாடு- சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜாஜி ஸ்ரீதரன்


Recommended Posts

.

Published on December 15, 2015-2:03 pm   ·   No Comments

vicki and sampanth 1நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பகிரங்க மடல்…..

ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கான தீர்;வானது தமிழ்த்தலைமையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டி காரணமாக இந்த தடவையும் கிட்டாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரன் ….. சுமந்திரனுக்கு இடையோன உச்ச கட்ட முறுகல் நிலையும் இது விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் காட்டும் தொடர் மௌனமும் இந்த அச்சத்தை அதிகரிக்கின்றன.

ஈழத்தமிழினத்தின் தற்போதைய தலைமையான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்க முற்படுவதன் மூலம் நீண்ட கால அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினமாகலாம் என்று உலக தலைமை நாடான அமெரிக்காவும் பிராந்திய தலைமை நாடான இந்தியாவும் கவலை கொண்டிருப்பதாக இந்தியாவின் நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியே இன்று மிகுந்த கவனம் பெறுகிறது.

தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டங்களை வகுத்ததை விட தமது அதிகாரத்தையும் தலைமைத்துவத்தையும் தக்கவைப்பதற்கான முனைப்புகளிலேயே மூத்த தலைவர்கள் அதிக கவனம் செலுத்துவதை வேதனையுடன் அவதானிக்கிறோம்.

இன்றைய குழப்பமான சூழ்நிலைக்கு உகந்த பதிலளித்து உடனடித்தீர்வை காண வேண்டிய பொறுப்பு முதல்வர் விக்னேஸ்வரன் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் உள்ளது.

ஈழத்தமிழினத்துக்கு ஒரு கூடுதல் பலமாக அரசியலுக்கு இழுத்துவரப்பட்ட நீதியரசர் விக்னேஸ்வரனின் அண்மைக்கால நகர்வுகள் தமிழினத்தின் அரசியல் திடத்தை பலவீனப்படுத்தும் வகையில் அமைவதாக பல்வேறு மட்டங்களில் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது கூட்டமைப்பின் முரண்பாடுகள் அனைத்துலக முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இவ்வாறான திறந்த மடலை எழுத வேண்டும் என்ற தேவை எழுந்திருக்கிறது.

முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களே தமிழினத்தின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் தங்களது நகர்வுகளினால் புதிய நெருக்கடிகள் ஏற்பட்டு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் இழுபறிகளுக்கு காரணமாகாது தவிர்த்துக் கொள்ளும் பொறுப்பும் முதலில் உங்களுடையதாகிறது.

ஏனெனில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் உங்களுக்கும் இடையோன இடைவெளியை முதன்முதலில் காண்பித்தது தாங்களே

தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் வேளையில் தமிழ் தலைமையை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் இந்திய அரசும் அமெரிக்காவும் தங்களிடம் நேரடியாக கோரிக்கை முன்வைக்குமளவுக்கு உட்தரப்பு விடயங்களை தாங்கள் உலக மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவிடமும் உலக வல்லரசான நாடான அமெரிக்காவுடனும் பேச்சு நடத்த வேண்டிய பொறுப்பான பதவியி;ல் உள்ள தங்களிடம் உங்கள் மக்களின் உரிமைக்காக பொறுப்புடன் செயற்படுங்கள் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு தாங்கள் தாழ்ந்து சென்றிருப்பதை உணருகிறீர்களா?

இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு காரணமான தங்களுக்கு தமிழினத்தை தலைமை தாங்கும் தகுதி உள்ளதென்று மானசீகமாக கருதுகிறீர்களா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமந்திரனுக்கு பதில் கடிதம் என்ற அறிக்கையை வெளியிட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு உங்களால் கட்டுப்பட முடியாது என்று கூறி அதற்கு பல்வேறு காரணங்களை காண்பித்திருந்த தங்களால் இன்று எவ்வாறு கூட்டமைப்பின் உள் நெருக்கடியை பேசித்தீர்க்க முடியும் என்று இந்திய அமெரிக்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி வழங்க முடிந்து என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்துவீர்களா?

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கும் விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் எவராலும் எதிர்வு கூற முடியாத நிலையில் இருந்த போது ஒரேயொரு நம்பிக்கை ஓளியாக தென்பட்டது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்னும் அரசியல் தலைமை மட்டுமே. என்பதை தாங்கள் அறிவீர்கள்..

இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த தமிழர் தாயகப்பகுதிகளை போரின் பின்னர் நிர்வாக ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்ததும் வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அதை வழிநடத்துவதற்கு தகுந்த தலையாளியை தேட வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இருந்ததும் உங்களுக்கு தெரியும்.

ஆற்றல்.. ஆளுமை…… நேர்மை……….. ஆகியவற்றை மட்டுமே மதித்து பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தங்களை நியமித்து அரசியல் வாழ்வுக்கு இழுத்து வந்ததை அனைவரும் அறிவோம்……

முதல்வரே……….

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக பொது வேட்பாளராக உங்களை நிறுத்துவதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எவ்வாறான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டது என்பதை தாங்களும் அறீவர்கள்.

கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திடீர் தலைவர் என்று ஒரு சாராhர் ஏளனம் செய்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார்கள்.

தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கு நெருக்கமானர் தமிழமக்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்குவதற்கு தென்னிலங்கை சக்திகளுக்கு துணை போகக்கூடியவர் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் அறிமுகத்தை மதித்து தங்களுக்கு வெற்றி தந்தார்கள்.

ஆனால் ஏமாற்றம் தரும் வகையில் தாங்கள் தங்களை ஒரு தமிழ்த்தேசிய பிதாவாகவும் ஒப்புவமை இல்லாத தேசியத்தலைவரின் இடத்தை பிரதீயீடு செய்ய எத்தனிப்பது போன்றும் தங்களது அண்மைக்கால நடவடிக்கைகள் அமைகின்றன.

தாங்கள் ஒரு சாதாரண மலினத்தனமான சுயநலம் கொண்ட அரசியல்வாதியாக மாறயிருப்பதையே தங்கள் பேச்சுக்களும் அறிக்கைளும் காண்பிக்கின்றன.

அரசியலுக்கு புதியவராக இருந்த போதிலும் தங்கள் புத்திசாலித்தனம் மேலும் கூர்மையாக்கப்பட்டு புதிய நகர்வுகளை மேற்கொள்ள முற்படுவதையும் சக உறுப்பினரான சுமந்திரனுக்கு பதிலாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையும் தொடர்ந்து நீங்கள் நிகழ்த்தும் உரைகளும் வெளியிடும் கருத்துக்களும் காண்பிக்கின்றன.

உங்களை அரசியலுக்கு இழுத்து வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு மட்டுமின்றி உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி எமது நெருக்கடிக்கு தீர்வு காண முன்வரும் பலம் வாய்ந்த நாடுகளையும் ஏமாற்றும் வகையில் உங்களால் சாதுர்யமாக நடந்து கொள்ள முடியும் என்பதையே அண்மையில் உங்களை சந்தித்த இந்திய அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் நிரூபிக்கின்றன.

தங்கள் தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு தடங்களில் நகர்வுகள் மேற்கொண்ட தாங்கள் தமிழ்ததேசியக்கூட்டமைப்புக்கு எதிராக அல்லது மாற்றாக புதியதொரு அணியை ஏற்படுத்தி அதற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் தயாராகி உள்ள நிலையில் கட்சியின் உள் முரண்பாடுகள் பேசித்தீர்க்கப்படும் என்று வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு வாக்குறுதி வழங்கி இருக்கிறீர்கள்.

இதற்கு அமைவாக தங்களது அடுத்த நகர்வை வெளியிட முடியுமா?.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராகத் தங்களைத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் அந்;த அமைப்புக்கு ஆதரவாக இயங்குவதை மறுத்ததோடு கூட்டமைப்பு தலைமை தன்னிச்சையாக இயங்குவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய தாங்கள் அவர்களுடன் இதய சுத்தியாக பேசி கூட்டமைப்பின் ஒருமைப்பாட்டை தக்க வைக்க உதவுவீர்கள் என்பதை எவ்வாறு நம்பமுடியும்.

ஏனெனில் அண்மைக்காலமாக தாங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கூட்டமைப்பின் தலைமையை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் முதலமைச்சர் பதவியை அடைவதற்காக மட்டுமே கூட்டமைப்பு தலைமையை அனுசரித்து நடந்து கொண்டதாகவே பலர் கருதுகிறார்கள்.

தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தியும் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள் என்றும் தற்போது கூறும் தாங்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலிலும் வட்டுக்கோட்டையிலும் பதவிப்பிரமாணம் செய்திருந்த வேளையில் தாங்கள் அலரிமாளிகையில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டீர்கள்.

வடக்குமாகாணசபையை இயக்க வேண்டிய பொறுப்பு தங்களுடையது என்றும் தென்னிலங்கை தலைமையுடன் நிர்வாக ரீதியாக மோதி வட மாகாண சபை மூலமாக தமிழ் மக்களுக்கு சேவையாற்ற இந்த அணுகுமுறை அவசியம் போலும் என்று நம்பியிருந்த மக்களுக்கு எஞ்சியது வெறும் ஏமாற்றமே..

வட மாகாணசபையை உரிய முறையில் இயக்குவதற்கு தாங்கள் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

வட மாகாண சபை அதிகாரமற்ற மாகாணசபை என்றும் அரசாங்கம் அதற்கான ஒத்துழைப்பை முழுமையாகத் தரவில்லை என்பதும் தங்கள் தரப்பிலிருந்து வெளிவரும் காரணம்.

அதிகாரமற்ற ஒரு அமைப்பை எதற்காகப் பொறுப்பேற்க வேண்டும் என்று தங்கள் பின்னால் தற்போது செயற்படும் கஜேந்திரகுமார் அப்போதே கேட்டிருந்தார்.

எனினும் வட மாகாணசபையின் அதிகாரங்களை மற்றவர்களை விட அதிகம் தெரிந்திருந்த தாங்கள் தங்கள் சாணக்கியத்தாலும் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்துவதாலும் அரசுக்கு பாரிய சட்ட நிர்வாக நெருக்கடியையும் அழுத்தங்களையும் கொடுத்து அதிகாரங்களை பறித்தெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடுமே தமிழ் மக்களால் முதல்வராக நியமிக்கப்பட்டீர்கள்.

ஆனால் தங்களது மகத்தான நேரமும் அனுபவமும் ஆற்றலும் தங்களை அரசியலுக்கு இழுத்துவந்த தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சீர்குலைப்பதிலும் அதன் மற்றொரு இளந்தலைவரை அப்புறப்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதிலுமே செலவிடப்படுவதை நாம் வேதனையுடன் அவதானிக்கிறோம்.

வடக்கு மாகாணசபையானது ஏற்கனவே கொண்டிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி செய்யவேண்டிய அவசியப்பணிகளைக்கூட தகுந்த முறையில் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு இது வரை தங்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

ஒற்றையாட்சிக்குட்பட்ட மாகாண சபையின் அனைத்து சலுகைகளையும் முதல்வராக அனுபவித்து வரும் தாங்கள் அதனை சரிவர நிர்வகிக்காது மக்களை வசப்படுத்தும் வகையில் அதிதீவிர அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பாராக காண்பிப்பதும் முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பதும் கவலைக்குரியது.

வடக்கு மாகாணசபையின் முதல்வராக தங்களை தெரிவு செய்;தால் நீதியரசர் என்ற நாட்டின் உயர் பதவிநிலையை வகித்த பெருமையோடு தென்னிலங்கை தலைவர்களுடன் நெருக்கமான உறவையும் கொண்டிருக்கும் தாங்கள் தங்களது திறமையினால் மத்திய அரசுப்பொறிமுறையோடு மோதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடு;த்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதற்;கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார் என்று எதிர்பார்த்த கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் கைவிட்டுவிட்டு புதிய இலக்கொன்றில் பயணிக்க தலைப்படுகிறீர்கள் என்று கூறுவதில் தவறில்லை என்றே கருதுகிறோம்.

வடக்குக்கு பயணிக்கும் சர்வதேச தலைவர்கள் பிரதிநிதிகள் ஆகியோரோடு சந்திப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளும் தாங்கள் அதனை பயன்படுத்தி மக்களுக்கான உதவிகளை பெறுவதற்கு முயற்சித்ததாக இல்லை.

மாறாக தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைத்து விடாதீர்கள் என்று இந்திய அமெரிக்க பிரதிநிதிகள் தங்களிடம் கோரிக்கை முன்வைக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான வன்னி மண்ணின் அவலத்தை உணர்ந்து அதற்கான புதிய அபிவிருத்தி திட்டங்களையும் ஒதுக்கீடுகளை மேற்கொண்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தாங்கள் இது விடயத்தில் செயலற்று இருப்பதையே அவதானிக்கிறோம்.

வன்னியின் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக வட மாகாணசபையின் முழு அமைச்சுக்களின் பலத்தையும் பயன்படுத்துவதோடு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முதல்வராகிய தாங்கள் அறிக்கை போரை நடத்துவதற்கே முன்னுரிமை வழங்குகிறீர்கள் என்றே கருதமுடிகிறது.

பிரதமர் மோடியுடனான தங்கள் சந்திப்பை தொடர்ந்து , இந்திய அரசு வடக்கில் ஆரம்பிப்பதற்கு முன்மொழிந்த தொழிற்துறைத்திட்டத்துக்கு தங்கள் நிர்வாகம் பதிலளிக்க தவறியதால் அந்த திட்டம் தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டமைக்கு தாங்கள் கூறப்போகும் பதில் தான் என்ன?

தங்களை அரசியலுக்கு இழுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்து புதியதொரு தடத்தில் அல்லது அணியில் பயணிக்க தாங்கள் முடிவு செய்திருப்பதையும் அனைவரும் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் கூட்டமைப்பின் உள் நெருக்கடிகளை பேசித்தீர்க்கலாம் என்று கூறுவது தான் வியப்பூட்டுகிறது.. அவ்வாறு உங்களால் தீர்வுகாண முடிந்தால் உண்மையில் தமிழினம் அதற்காக உங்களுக்கு நிச்சயம் நன்றி பாராட்டும்.

முதல்வர் அவர்களே …………..தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தங்களுக்கு மக்கள் வழங்கிய மகத்தான ஆதரவையும் தங்களுக்கு பதிலான 1,33,000க்கும் அதிகமான வாக்குகளும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வாக்குகள் என்று எண்ணுவதும் கூட்டமைப்பு அல்ல……. தங்களை மக்களே வடமாகாண முதல்வராக தெரிவு செய்ததாகவும் சிறந்த கல்விமானும் தர்க்கவியல் கற்றவருமான தாங்கள் கூறவது சற்று நெருடலாக உள்ளது.

வடமாகாண மக்களே. பெருமளவில் வாக்களித்தவர்கள்……….. அவர்களே உங்களது கட்சி…………… அவர்களின் நன்மையே தங்களது கட்சிக் குறிக்கோள்…………. என்றும் கூட்டமைப்பு பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும்……………. என்பது போன்ற வார்த்தைகள் உணர்பூர்வமானவை.

தென்னிந்திய தமிழக அரசியலில் இவ்வாறான வார்த்தை ஜாலங்கள் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான வாக்குகளை வாரி வழங்க உதவலாம்.

ஆனால் எமது மண்ணில் இவ்வாறான பசப்பு வார்த்தைகள் ஒரு போதும் பயன்தராது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

எனினும் தமிழ்;த்தேசியக்கூட்டமைப்பு தங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்று தாங்கள் கூற முற்படுவதையும் அதன் உள் அர்த்தத்தையும் புரிந்து கொண்டுள்ளோம்.

மேற்குறிப்பிட்ட தங்;களது நிலைப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் தேர்தலின் போது கட்சிக்கு ஆதரவு வழங்காது தவிர்த்தமைக்கான காரணங்களை ஆராய வேண்டிய அவசியம் சிந்தனைத்திறனும் அரசியல் அனுபவமும் கொண்ட எவருக்கும் ஏற்படாது.

உள் ஜனநாயகமே கட்சியொன்றை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதும் உறுப்பினர்களின் கருத்துக்களை கட்சி பிரதிபலிக்க வேண்டும் என்பது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ள வேண்டியது உண்மையோ அது போன்றே ஆளுமைமிக்க தலைமையொன்றின் முடிவோடு உறுப்பினர்கள் உடன்பட முடியாதுவிடின் அதனை தலைமைத்துவத்தின் தான் தோன்றித்தனமான முடிவு என்று விமர்சித்து பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதும் தாங்கள் அறியாததல்ல.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள், அதன் ஜனநாயகத்தன்மை, அதனுடைய அரசியற்கோட்பாடு,அதற்கான நடைமுறைப் பண்பு அல்லது செயல் ஒழுக்கம் போன்றவை பகிரங்கமான விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ள வேளையில் தான் தாங்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வந்தீர்கள்.

கூட்டமைப்பின் தலைமை தான் தோன்றித்தனமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டும் தாங்கள் அதனை தகுந்த முறையில் சரியான வழியில் நடத்திச் செல்லுவதற்கு ஆக்கபூர்வமான திட்டங்கள் எதனையும் முன்வைத்தாக எந்த தகவலும் இல்லை.

கூட்டமைப்பை சரியான திசையில் பயணிக்க வைப்பதற்கு தாங்கள் எந்த முயற்சியும் மேற்கொண்டதாகவும் நாம் அறியவில்லை.

மாறாக கூட்டமைப்பை முறியடிக்கும் வகையில் மாற்றுத்தலைமையை உருவாக்கும் முயற்சியிலேயே தாங்கள் குறியாக உள்ளீர்கள்.

தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இன்னமும் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாது தலைமையை மதித்து செயற்படுவீர்கள் என்றே நம்புகிறோம்.

இல்லையெனின் தாங்கள் எவருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செய்ற்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவதுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு தென்னிலங்கை மேற்கொள்ளும் சதித்திட்டங்களுக்கு துணை போகக்கூடியவர் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை சரியானதே என்றும் நிரூபணமாகிவிடும்..

மறுபுறத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு மாற்று அணியொன்றை உருவாக்கி அதற்கு தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயாராவதற்கு முன்பதாக அவ்வாறானதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்துள்ள கட்சிகளோ அல்லது தனிநபர்களோ தங்கள் பின்னால் விசுவாசத்துடனும் நேர்மையுடனும் அணிதிரளுவார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமைப்பாடும் தங்களுக்குண்டு.

இவை தவிர மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களையும் இரகசிய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுபவர்கள் என்று சந்தேகிக்கப்படுவர்களையும் இணைத்துக்கொண்டு அவர்கள் தயவில் தனிவழி தேடுவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானது என்பதை தாங்கள் அறியாதிருக்கிறீர்களா? .

அவ்வாறெனின் தங்களுக்கு சிலவற்றை நினைவூட்டுவது பொருத்தமானது.

இன்று உங்களின் புதிய அணிக்கு பக்க பலமாக இருப்பவரகளில் முதன்மையானவர்கள் என்று கருதப்படும் கஜேந்திஜரகுமார் பொன்னம்பலம் சுரேஷ் பிரேமச்சந்திரன் அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய அனைவரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் என்ற போர்வையில் தமிழினத்தின் நலன்களுக்கு எதிராக இயங்குபவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள்.

இவர்களில் ஒருவரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சசிதரன் என்பவரின் துணைவி அனந்தியின் அரசியல் பின்புலம் தொடர்பான சில குறிப்புகளை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். . .

எழிலனின் மனைவியான அனந்தி, கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் அறிவிக்கப்படும் வரை எவராலும் அறியப்படாத புது முகமாகவே இருந்தார்.

எழிலன் என்கிற போராளியின் மனைவியான அனந்தி திடீரென்று தேர்தல் களத்தில் இறக்கப்பட்டார்

விடுதலைப்புலிகளின் அனுதாப வாக்குகளை சுவீகரித்துக் கொள்ளும் கூட்டமைப்பின் நகர்வு அது.

ஆனால் வாக்களிப்பு நெருங்கிய வேளையில் அனந்தியின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவத்தினர், அனந்திக்கு பிரபல்யம் தேடிக்கொடுத்தார்கள்.

ஊடகங்களில் அவரது செய்திகள் முதன்மை வகிக்கவும் எங்கும் அனந்தியின் பெயர் பேசப்பட்டது.

எண்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக அள்ளிக் குவித்து அனந்தி முதன்மை அரசியல்வாதியானார்.

இத்தனை பெரிய வெற்றியை இலங்கை இராணுவமே அவருக்கு தேடிக்கொடுத்தது.

தமிழர் ஒற்றுமையை சிதைக்கும் தென்னிலங்கை தந்திரோபாய நகர்வுகளே அவை என்பதை பின் தொடர்ந்த சம்பவங்கள் துல்லியமாக காட்டுகின்றன.

அனந்தி மீது தாக்குதல் நடாத்தினால் அது அவருக்கு சாதகமாகவே போகும் என்பதை அறிந்திருந்தும் அவரது வெற்றிக்கு அப்போதைய மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவம் துணை புரிந்தது.

அனந்தி வெற்றி பெற்று மாகாண சபைக்கு உறுப்பினரானதும் தனக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த போதிலும் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட தமிழரசுக்கட்சித் தலைமை பின்னர் சுதாகரித்து அவதானமாக நடந்து கொண்டது.

எதிர்பார்த்தது போன்றே கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மதிக்காது செயற்பட்டார்.

சுயமாக ஜெனீவா சென்றார். ஊடகங்களில் சுயமாக அறிக்கைகளை வெளியிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே அனந்தி கோரிக்கையை முன்வைத்தார்.

தான் சார்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த போதிலும் அதற்கு எதிராக முடிவெடுத்தது தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு பரப்புரைகளை மேற்கொண்டார்.

தமிழ் மக்கள் தேர்தல் பகிஷ்கரிப்பை மேற்கொண்டால் மஹிந்த ராஜபக்சவே பலனடைவார் என்று அனந்தி அறியாமல் இருந்திருக்க முடியாது என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள்.

இன்னும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருக்கமானவரும் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சி நடத்துனருமான ரங்காவின் நிகழ்ச்சியில் தோன்றி கூட்டமைப்புக்கு எதிராக கருத்துகளை கூறியவர் என்பதை விட அவருடைய நிகழ்ச்சி நிரலுக்கு பின்புலமாக உள்ள சக்திகள் பற்றி மேலதிக விளக்கம் அவசியமற்றது.

தங்களுடைய அணிக்கு பக்கபலமாக கருதப்படுபவரும் அனந்தி எழிலனின் செயற்பாடுகளுக்கும் அவருக்கு துணையாக இருப்பவருமான மற்றொருவர் சிவாஜிலிங்கம்.

அதிதீவிர தேசியப் பற்றாளராகவும், விடுதலைப்புலி ஆதரவாளராகவும் காட்டிக் கொள்ளும் சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பதாலும் இயக்கத்தலைமைக்கு நெருக்கமானவராக பலரால் நோக்கப்பட்டவர்.

போர் முடிவடைந்த பின்னர் கடுமையாக சுகவீனமடைந்த பிரபாகரனின் பெற்றோரின் நலன்களைக் கவனித்த சிவாஜிலிங்கம், அதற்காக அரசாங்கத்துடன், குறிப்பாக அப்போதைய பாதுகாப்பு செயலாளருடன் நெருக்கமாகவே செயற்பட வேண்டியிருந்ததை அனைவரும் அறிவார்கள்.

அதி உச்ச அதிகாரங்கள் கொண்டிருந்த அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் எந்த நேரத்திலும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அவரின் நெருங்கிய நட்பு வட்டாரத்திலிருந்தவர் சிவாஜிலிங்கம்.

விடுதலைப்புலிகளுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவாகவும் எவ்வாறான கருத்தையும் துணிந்து சொல்லக்கூடிய துணிச்சலானவர் என்று தமிழ்மக்கள் இவர் குறித்து பெருமிதம் கொண்டிருந்தாலும் இந்தத் துணிச்சல் சிவாஜிலிங்கத்துக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை பழுத்த நீதியரசரான தாங்கள் சிந்தித்து பார்க்காதிருப்பது வியப்பை தருகிறது.

(தாங்களும் அதே அணியை சேர்ந்தவர் என்பதால் அதனை அறிந்திருப்பீர்கள் என்று இப்போது உணருகிறோம்)

போர் முடிவடைந்ததை தொடர்ந்து நடைபெற்ற நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஸபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்த வேளையில் அதற்கு எதிராக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

சிவாஜிலிங்கம் அந்தத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு கிடைக்க இருந்த தமிழ் வாக்குகளை தடுத்தார் என்று கூறுவதை விட சிவாஜிலிங்கம் தன்னை எதிர்த்து போட்டியிடுவதை காரணம் காட்டி மஹிந்த ராஜபக்ஸ கூடுதலான வாக்குகளை சிங்கள மக்களிடம் பெறுவதற்கு உதவினார்.

இதே போலவே சிவாஜிலிங்கம் கடந்த பொதுத் தேர்தலிலும் நடந்து கொண்டார்.
மஹிந்தவை எதிர்த்து போட்டியிடுவதாகக் கூறி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார்.

இங்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கே சிவாஜிலிங்கம் பயன்பட்டார்.

சிவாஜிலிங்கம் தம்மை எதிர்த்து போட்டியிடுவதை பிரச்சாரம் செய்த மஹிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களின் வாக்குகளை அதிகமாகப் பெற்றுக் கொண்டார்

உங்களுக்கு மிகுந்த பக்கபலமாகவும் பின்புலமாகவும் செயற்படும் மிக முக்கியமான மற்றொருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

மிகவும் தீவிரமான தேசியப் பற்றாளராக தன்னை நிலைநிறுத்த முயன்று வரும் கஜேந்திரகுமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வலுவான மாற்றுத்தலைமை தானே என்ற மாயையை உருவாக்கி அதற்கான ஆதரவையும் கூட்டமைப்புடன் முரண்படுவோரிடமிருந்து திரட்டி வருகிறார்.

சிவாஜிலிங்கம் போலவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே பலரும் தயங்கிய காலத்திலேயே,விடுதலைப்புலி ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டு மக்களை மெய்சிலிர்க்க வைத்தவர்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒவ்வொரு தடவையும் ஐக்கிய நாடுகள் சபையால் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்பதையே பதிவு செய்து கொள்வார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது அனைத்து தமிழ் தரப்பும் அதற்கு ஆதரவளித்த வேளையில் கஜேந்திரகுமார் அதனை எதிர்த்தவர்.

இருந்தும் கடந்த பொதுத் தேர்தலின் போது கஜேந்திரகுமார் அணியினரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக தாங்கள் திரைமறைவில் செயற்பட்டீர்கள்.

தேர்தலில் நடுநிலைமை வகிக்கப் போவதாக முதலில் அறிக்கை விட்டீர்கள் பின்னர் அவர்களின் வெற்றிக்காக ஆதரவாகவும் கூட்டமைப்பின் ஒற்றுமையை மீறியும் அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.

இருந்தும் மக்கள் மிகத் தெளிவாக அவர்களை நிராகரித்தார்கள்.

இன்னொரு வகையில் கூறுவதானால் உங்கள் பரப்புரையை மக்கள் செவிமடுக்கத்தயாராக இல்லை என்ற துல்லியமான செய்தி உங்களுக்கு தரப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலின் போது அனந்தி சசிதரன் சிவாஜிலிங்கம் போலவே கஜேந்திரகுமாரும் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியையே விரும்பினார் என்று தமிழ் மக்கள் உணர்ந்து அவரை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழினத்துக்கு தலைமை தாங்கும் வேட்கை கொண்டிருக்கும் தாங்கள் இந்த உண்மையை உணராதிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியை உருவாக்கும் திட்டத்துக்கு உங்களுக்கு மற்றொரு தூணாக செயற்படுபவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

2001ம் ஆண்டு காலப்பகுதியில் எந்த நிபந்தனையும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்;.எல்.எவ் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தி புதிய தலைமையை உருவாக்க முற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர்.

2001ம் ஆண்டு தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருந்தது.

இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் 1989ம் ஆண்டு தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் அதற்கு பின்னர் நடந்த தேர்தல்களில் அவரது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் 2001ம் ஆண்டு போட்டியிட்ட போது வன்னி மாவட்டத்தில் ; ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒரு இடத்தை மட்டும் பெற்றுக்கொண்டது.

2004ல் தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் மக்கள் அவரை நிராகரித்த இருந்த போதிலும் தேசியப்பட்டியல் ஊடாக அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க தலைமை மறுத்ததை தொடர்ந்து அவர் மாற்று அணி உருவாக்கும் நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து முற்றாக ஓதுக்கப்பட்டிருக்கும் நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புதிய அணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதில் வியப்பேதும் இல்லை.

ஆனால் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாதவர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கு வகுக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு தாங்கள் துணை போவது தான் இங்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதுவும் தங்களது நகர்வு ஒரு இனத்தின் நலன்களை பாதிக்கும் பாரதூரமான நடவடிக்கையாக இருப்பதால் இது குறித்து அக்கறை கொள்ளாதோ உங்களிடம் விளக்கம கோராமலோ இருக்க முடியாதுள்ளது. .
;
தென்னிலங்கையுடன் முரண்படுபவர் போல காண்பித்து மேற்குலகத்துடனும் அனுசரித்து போகாது இந்தியாவுடனும் இணைய மறுத்து தான் அங்கம் வகிக்கும் கூட்டமைப்புடன் தலைமையையும் எதிர்த்து மக்கள் நலனுக்காக மட்டுமே செயற்படுபவர் என்ற ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தி தேசியத்தலைவராக மாற முடியும் என்று தாங்கள் தவறாக கணக்கிடுகிறீர்கள் என்று நாம் கருதகிறோம்.

மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசியல் அப்பழுக்கற்ற  இதயசுத்தியான  மக்களுக்கே தன்னை அர்ப்பணிக்க வல்ல ஒரு ஒப்பற்ற தலைவனுக்குரிய இடம் 2009ம் ஆண்டின் பின்னர் தொடர்ந்தும் வெற்றிடமாகவே இருப்பதால் அந்த இடத்தை நீங்கள் இலக்கு வைப்பதும் அதற்கு கூட்டமைப்பின் தலைமையோடு முரண்படுவோரும் தமிழரின் தலைமையை தகர்ப்பதற்கு திட்டமிடுவோரும் தங்களுக்கு துணைபோவதையும் நாம் அவதானிக்கிறோம்.

அரசியல் அனுபவமோ பின்புலமோ கிடையாது வெறும் திறமையான நிர்வாகி சிறந்த கல்விமான் என்ற தகுதிகளோடு மட்டும் கூட்டமைப்புக்குள் இழுத்துவரப்பட்ட தங்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவத்தோடு முரண்படும் அணியினரின் சுயநல அடிப்படையினாலான ஆதரவும் உங்களை அரசியல் செய்யவேண்டும் என்ற ஆபத்திலும் தலைமைத்துவ ஆசைக்குள்ளும் மெதுவாக தள்ளி வீழ்த்தியிருக்கிறது.

இதுபோலவே, மாற்று சக்தி, மாற்றுத் தலைமை என்று பலத்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் களமிறங்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழ் மக்கள் மத்தியில் உரிய இடத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது வரலாற்றுக் கற்பிதம்.
அண்மைக்கால நிகழ்வுப்பதிவு.

எனவே மக்களின் ஏகோபித்த ஆணையை பிரதிபலிக்கின்ற கூட்டமைப்பின் உறுதியை குலைக்காது முரண்பாடுகளை கட்சிக்குள் பேசித்தீர்த்து வைக்க உறுதிபூணுங்கள்.

தமிழர் நிலைமையை கருத்தில்கொண்டு இந்திய அமெரிக்க பிரதிநிதிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற உதவுவீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் எம்மிடம் எஞ்சியிருக்கிறது.

மஹிந்த ராஜாபக்ஸவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அவரது கட்சியில் இருந்தே மைத்திரிபால சிறிசேனா என்பவரை அவருக்கு எதிராக பயன்படுத்தியது போன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சீர்குலைப்பதற்கு தங்களை பயன்படுத்த திட்டமிடுவோரிடம் பகடைக்காயாக மாறி விடாது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பாதுகாத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு தங்களுக்கு உண்டு.

இன்னும் மேலாக தன்னிச்சையாக செயற்படுவதாக தாங்கள் குற்றஞ்சாட்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் தனது தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாவிடின் அதனை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியும் பழுத்த அனுபவம் கொண்ட இரா சம்பந்தரும் நீதித்துறை அனுபவமும் பன்முக ஆற்றலும் கொண்ட தாங்களும் இளந்தலைவரும் தாங்கள் குறிப்பிடுவது போல தங்களது சட்டக்கல்லூரி மாணவருமான சுமந்திரனும் வெளிப்படையான இதய சுத்தியான பேச்சை முன்னெடுத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை புதிய உத்வேகத்துடன் பயணிக்க வைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களினது மட்டுமின்றி சர்வதேசத்தினதும் எதிர்பார்ப்பு……

ராஜாஜி ஸ்ரீதரன

 

From my  Email

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.