Sign in to follow this  
nedukkalapoovan

விருந்துண்டு மகிழப் போன இடத்தில்...

Recommended Posts

3463_10153277762317944_23044303893722047

ஒரு கல்யாண வீட்டில் மொய் எழுதிட்டு ஒருவர் பந்தியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்..

இன்னுமொருவர் பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார்..

அந்த முன்னையமவர் பந்தி பரிமாறுபவரை அழைத்து.. கொஞ்சம் சாம்பார் ஊற்றுவீர்களா.. என்றார்..

அதற்கு அந்த இன்னுமொருவர்.....

உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.. என்னோடு சமையல் கட்டுக்கு வந்தாயா.. அங்கு புகைக்குடித்தாயா.. இல்லை.. வெங்காயம் தான் உரித்தாயா.. மிளகாய் தான் வெட்டினாயா.. ஏன் ஏன் உருளைக்கிழங்கு தான் சீவினாயா.. அங்கு மஞ்சள் அரைக்கும் எம் குலப் பெண்களோடு மல்லுத்தான் கட்டினாயா.. மானம் கெட்டவனே.. நீ என்ன மாமனா.. மச்சானா.. உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்....

முன்னையமவர்.. மனதுக்குள்.. ஒரு சாம்பாருக்கு இவ்வளவு வசனமாடா.. இதை மொய் எழுதும் போது பேசி இருந்தானுன்னா.. ஆயிரம் ரூபா மிச்சமாகி இருக்குமே.!!

(நன்றி முகநூல்)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கொரோனா அச்சத்தின் மத்தியிலும் மனிதத்துவத்துடன் செயற்படும் ஈழத்து இளைஞர்கள்! கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் உலகளாவிய ரீதியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போதுவரை கொரோனாவால் 85000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 76 நாட்கள் ஊரடங்கின் பின்னர் நேற்றைய தினமே அங்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளது. இந்த கொரோனாவின் தாக்கத்திற்கு ஸ்ரீலங்காவும் முகம்கொடுத்துள்ளது. ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 189 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். மெல்ல மெல்ல அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்கமும் இளைஞர்களும் நிவாரணம் செய்து வருகின்றனர். ஆனால் வீதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்கள் உணவின்றி தவிக்கின்றன. இதனால் தமிழர் பகுதியில் உள்ள இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வீதிகளில் உணவின்றி தவிக்கும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர்.     https://www.ibctamil.com/srilanka/80/140883
    • வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்!         by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் முடிவில் பெர்னி சாண்டர்ஸ் ஏழு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் பிடன் 19 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் தனது பரப்புரையை இரத்து செய்த பெர்னி சாண்டர்ஸ், ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜோ பிடனுக்கு வழிவிட்டு 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ். இதனால் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கும்- ஜோ பிடனுக்கும் போட்டி உறுதியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/வேட்பாளரை-தேர்ந்தெடுப்ப/
    • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரித்தானியாவில் மட்டும் நேற்றுவரை இலங்கையர்கள் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் இரண்டு மருத்துவர்களும், இரண்டு தமிழர்களும் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் லண்டனில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகன் ஆனந்தவர்ணன் என்ற இளைஞனே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் தனியார் ஊடகம் ஒன்றில் செய்தியாசிரியராகவும் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   https://www.ibctamil.com/uk/80/140859?ref=rightsidebar
    • மருந்தகங்களை திறக்க அனுமதி Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 07:01 - 0      - 2 நாட்டிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மருந்தகங்களை-திறக்க-அனுமதி/175-248279