Jump to content

தமிழர் வாழ்வில் சமணம்: - நக்கீரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
samanam-281215-380-seithy-article.jpg

தமிழர்களில் பலர் தாங்கள் ஆதிகாலம் தொட்டு சைவசமயிகளாக இருந்து வருவதாக நம்புகிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஆனால் முழு உண்மை அதுவல்ல என்பது வரலாற்றைப் படித்தால் தெரியும். ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் தமிழகத்தில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுருவர்களின் தொண்டு காரணமாக பக்தி இயக்கம் செல்வாக்குப் பெற்றது. அதுவரை காலமும் தமிழகத்தில் வேரூன்றி இருந்த சமணம், பவுத்தம் இரண்டும் காலப்போக்கில் செல்வாக்கிழந்தன. இதனால் இந்த இரண்டு மதங்களும் தமிழ்மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பணி மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன. கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 9 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கணம், யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்சி முதலான தமிழ்நாட்டுக் கலைகளெல்லாம் சமண சமயம் சார்ந்த தமிழ் மக்களால்தான் இயற்றப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் போற்றிப் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளன. எனவே சமணம் தமிழ்மொழியின் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை மிகப் பெரியதாகும்.


   

தமிழர்கள் வழிபாட்டில் நடுகல் வழிபாடு மிகப் பழமையானது. களத்தில் வீரச் சாவை தழுவிக் கொண்ட மறவர்களின் வழிபாடு சமய சார்பற்றது ஆகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் கபாலிகம், வைதீகம், ஆசிவகம் என மூன்று வகையான சமயங்கள் குறிப்பிடப் படுகின்றன. இதில் ஆசிவகம் எனப்படுவது தமிழர்கள் தழுவிய சமயங்களில் மிகத் தொன்மையான சமயமாகும். கடவுள் மறுப்பு, வருணாசிரம எதிர்ப்பு, வேத எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளைக் கொண்ட ஒன்றாகவே ஆசிவகம் விளங்கியிருக்கிறது. ‘அண்ணலம் பெருந்தவத்து ஆசிவகம்’ என சிலப்பதிகாரமும் கூறுகிறது. ஆசிவகம் அழிந்து போய்விட்டது.

சைவமும் தமிழும் என்றும் சைவம்தான் தமிழை வளர்த்தது என்ற படிமம் இப்போதும் இருக்கிறது. தமிழின் இனிமையை சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற அருளாளர்கள் போற்றிப் பாடியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் நோக்கம் சைவத்தை மேன்மைப் படுத்தும் பொருட்டு இருந்ததேயன்றி தமிழை உயர்த்தும் பொருட்டு அல்ல. உண்மையில் தமிழ் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியச் சிறப்பிற்கும் இலக்கணச் செழுமைக்கும் சமணத்துறவிகள் ஆற்றிய பங்கு அளப் பெரியது. சமணர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்பிற்குக் காரணம் அவைகள் சைவ இலக்கியங்கள் போன்று தனிப்பட்ட சமய உயர்வை வெளிக்காட்டமால் மொழி நலன், சமூக நலன் போன்றவற்றை வெளிக்காட்டி நிற்பதேயாகும்.

தமிழர்களின் சமயம் என்று நாம் எதனையும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்கள் வெவ்வேறு 'சமயங்களை' பின்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

தமிழர்கள் திருமால், முருகன், வருணன், வேந்தன், கொற்றவை ஆகிய தெய்வங்களை வழிபட்டனர் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சிவ வழிபாடு குறிப்பிடப்படவில்லை. வேதங்களிலும் சிவன் குறிப்பிடப் படவில்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் முதன் முதலாக கடைச் சங்ககாலத்து நூல்களில்தான் காணப் படுகிறது. இருப்பினும் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவம் என்ற பெயரில் ஒரு சமயம் அப்போது இயங்கவில்லை. தமிழர்களின் சமயமாக வருணிக்கப் படும் சைவம் கிபி ஏழாம் நூற்றாண்டில்தான் நிறுவன மயப் படுத்தப் படுகிறது. அதன் பின்னர்தான் பெரும்பான்மைத் தமிழர்கள் அதனைத் தழுவிக் கொண்டார்கள். ஆசிவகத்திற்குப் பின்னும் சைவத்திற்கு முன்னும் இருந்த இடைப்பட்ட காலத்தில் செல்வாக்குடன் வாழ்ந்த இரு பெரும் சமயங்கள் பவுத்தமும் சமணமும் ஆகும். பின்னாளில், பவுத்தமும் சமணமும் சமயமாக வரித்துக் கொண்டாலும் உண்மையில் அவை சமயங்கள் அல்ல. அவை கடவுளை அடிப்படையாகக் கொள்ளாமல் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. வன்முறைக்கு எதிரானவை.

சமணம் இந்தியாவில் தோன்றிய மதங்களில் பழமையானதாகும். தமிழ்நாட்டில் சமணம் கிமு மூன்றாம் நூற்றாண்டவில் பரவியது. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தை ஆண்ட களப்பிரர் சமண மதத்துக்கு ஆதரவளித்தார்கள். வைதீக (சனாதன தர்மம்) மதத்தைப் புறந்தள்ளினார்கள். சமண சமயத்தை வளர்க்க சமண முனிவர்கள் தமிழ்மொழியைப் படித்தார்கள். தமிழ்மொழியில் பேரிலக்கியங்களையும் காப்பியங்களையும் இலக்கண நூல்களையும் இயற்றினார்கள். ஐம் பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி இவை மூன்றும் சமண சமய சார்புடையவை. மணிமேகலையும்,குணடல கேசியும் பௌத்த சமய நூல்கள். ஐஞ்சிறுங் காப்பியங்களும் சமண சமய காப்பியங்கள்.

எட்டுத் தொகை நூல்களான நற்றினை, குறுந்தொகை, ஐங்குறு நூறு,பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,புற நானூறு ஆகிய எட்டும் சமண நூல்கள். பத்துப்பாட்டுகளில் திருமுருகாற்றுப் படை தவிர மீதி ஒன்பது பாடல்களும் சமண சாமய நூல்கள் ஆகும்.

பதிணென் கீழ்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை என்று 11 நூல்கள் அனைத்தும் சமணம். அதேபோல் பதிணென் மேற்கணக்கு நூல்கள் அனைத்தும் சமணம் தமிழ் இலக்கண நூல்களில் பழமையான தொல்காப்பியம் சமண நூல். இலக்கியங்களை தொகுக்க, நீக்க, பகுப்பாய்வு செய்ய பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் சமண சமய நூல்.

நீதிநூல்களில் பெரும்பகுதி ஏலாதி, சிறுபஞ்சமூலம், நாலடியார் பழமொழி நானூறு ஆகியவை சமண நூல்களாகும். சமண சமயத்தவர் தமிழுக்கு செய்துள்ள தொண்டுபோல வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பது ஆராய்சியாளர்களது துணிபாகும். புலவர்களால் பாடபட்ட 3000 பாடல்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கி முதலிடத்தில் இருப்பது சமணம்.

சமணம் என்னும் சொல் ‘ஸ்ரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதன் பொருள் துறவு நிலை என்பதாகும். ‘ஸ்ரமண’ மதத்தைப் பின்பற்றுபவர் தமிழில் சமணர் (ஸ்ரமணர்) என அழைக்கப்பட்டனர். சமணசமயத்தை முதல் தீர்த்தங்கராகிய விருஷப தேவரால் தோற்றுவிக்கப்பட்டு அவரைத் தொடர்ந்து 24 தீர்த்தங்கர்கள் சமண சமயத்தை வளர்த்து எடுத்தார்கள் என்பது நம்பிக்கை. இதில் 24 ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 25 ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆகிய இருவருமே வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறார்கள்.

மகாவீரர் கிமு 599 - 527 வரையில் 72 ஆண்டு காலம் வாழ்ந்தவர். பவுத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தரும் (கிமு 563 - கி.மு.483) ஆசிவக மதத்தைத் தோற்றுவித்த மற்கலியும் இவரது சம காலத்தவர்கள் ஆவர். மற்கலி மகாவீரருடன் சேர்ந்திருந்து பின்னர் கருத்து மாறுபட்டு ஆசிவக மதத்தைத் தொடக்கினார். சமண மதம் இந்த இரண்டு மதங்களையும் விட காலத்தால் முற்பட்டது.

பவுத்தம் பல்வேறு பிரிவாக பிரிந்தது போல் சமணத்திலும் சுவேதாம்பரர், திகம்பரர், ஸ்தானகவாசிகள் போன்ற பிரிவுகள் ஏற்பட்டன. சுவேதாம்பரர் வெண்ணிற ஆடைகளை அணிபவர்கள். திகம்பரர் (திக்+அம்பரம் = திகம்பரம்) என்றால் திசைகளை ஆடையாக உடுத்துபவர் என்று பொருள். இவர்கள் ஆடைகளை உடுத்தாத நிர்வாணிகள் அல்லது அமணர் என்றும் அழைக்கப்படுவர். தீர்த்தங்கரர் என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள்.

தெய்வங்களாகத் தொழப்படுகின்ற 24 தீர்த்தங்கரர்களும் பொதுவாக இறைவன் செயலாகக் கூறப்படுகின்ற முத்தொழில்களைச் செய்வதில்லை. அதாவது ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற தொழில்களில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் இவர்கள் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்கள். காய்தல் உவத்தல் அற்றவர்கள். தன்னையறிந்து, வீடுபேற்றிற்குத் தடையாக அமைந்த இரு வினைகளை முற்றுமாகப் போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையில் என்றென்றும் நிலைப்பவர்கள். அதனால் தம்மை வணங்குபவர்க்கு எதையும் தருவதோ, தவறு செய்தோரைத் தண்டிப்பதோ இவர்களிடம் இல்லை. பின் ஏன் இவர்களை வணங்கவேண்டும்?

அவர்கள் சென்ற பாதையில் அவர்கள் விளக்கும் நற்காட்சி, நல்ஞானம் இவற்றின் அடிப்படையில், நல்லொழுக்கத்தைப் போற்றி வாழவேண்டும் என்ற தூண்டுதலைப் பெறத்தானே தவிர, வேறு எதற்காகவும் அன்று! வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, அதன்பின் தெய்வநிலை அடைவதற்காகவே அவர்களை வணங்குகிறார்கள் சமணர்கள். ஏனென்றால் அதுவே மனிதப் பிறவியின் குறிக்கோள் எனப் போற்றுகிறது சமண சமயம். அதனாலேயே உருவ வணக்கமும் சாவகர்களுக்கு (சமண இல்லறத்தார்) மிக முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. சமண சமயத்தில் உருவ வணக்கம் இல்லை என்பாரும் உண்டு. இல்லறத்தார் கோவிலுக்குச் சென்று வணங்குதல் அவர்தம் அன்றாடக் கடமைகளில் ஒன்று என வலியுறுத்தப் படுகிறது. மனிதனுக்கான அறத்தை மனிதன் தான் உருவாக்கவேண்டுமே தவிர இயற்கையோ கடவுளோ மனிதனுக்கான அறத்தைத் தரமாட்டார்கள் என்பதே சமணக்கோட்பாடு. பதார்த்தசாரம் என்ற சமண தத்துவ நூல் உயிருள்ள பொருள் உயிரற்ற பொருள் அனைத்துமே அணுக்களால் கட்டமைக்கப்பட்டவை, அவை கடவுளின் துணையின்றியே தன் போக்கில் இயங்குகின்றன என்று சொல்கிறது.

துறவை வற்புறுத்தும் சமணம் துறவு பூண்டோரே வீடுபெறுவர் எனச் சாற்றுகிறது. பலன்களையும் கர்மங்களையும் வென்றவர் என்ற பொருளில் தீர்த்தங்கர்ருக்கு ஜினர் என்ற பெயரும் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர் என்றும் மதத்திற்கு ஆருகதமதம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

உயிர் (ஜீவன்); உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன, அநாதியாகவுள்ளன. அதாவது, உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. நல்வினை தீவினை என்னும் இருவினைகளை (புண்ணிய பாவங்களைச்) செய்து, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து உழன்று திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும். உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து நிற்கும்.

கொல்லாமை அல்லது அகிம்சைக் கோட்பாட்டை உயிர்நாடியாகக் கொண்ட சமயம் சமணம் ஆகும். இதனால் சமணத் துறவிகள் பல் தீட்டுவதில்லை. குளிப்பதில்லை. இரவில் உண்பதில்லை. திகம்பர சமண சமூகத்தினைச் சார்ந்த துறவிகள் தங்களுடன் எப்போதும் பிச்சி எனப்படும் ஒரு மயிலிறகினை வைத்திருப்பர். அது தானாக உதிர்ந்த இறகு. தாங்கள் செல்லும் வழியில் உள்ள புழு, பூச்சிகளைத் தெரியாமல் மிதித்து அவற்றுக்கு துன்பத்தினை அளித்து விடக்கூடாது என்று அந்த இறகினால் தரையை விசிறிக் கொண்டே நடந்து செல்வர். தண்ணீரையும் துணியில் வடித்தே குடிப்பர்.

வைதீக சமயம் போலல்லாது சமணம் சாதி வேற்றுமை பார்ப்பதில்லை. பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை சமணச் சமயத்தில் இல்லை. எக்குலத்தைச் சேர்ந்தவரானாலும், தங்களது சமயக் கொள்கையைப் பின்பற்றினால் அவரைச் சமணர்கள் போற்றி வந்தனர். அருங்கலச் செப்பு எனும் நூலில் "பறையன் மகனெனினும் காட்சி யுடையான் இறைவன் எனஉணரற் பாற்று" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி ஆகிய நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர்கள் எல்லா அறங்களிலும் உயர்ந்த அறமாகப் போற்றினர். இந்த நான்கும் அன்ன தானம், அபய தானம், ஔடத தானம், சாத்திர தானம் எனப்பட்டன. உணவு இல்லாத ஏழைகளுக்கு உணவு கொடுத்துப் பசியைப் போக்குவது தலை சிறந்த அறம். அதனால் அன்ன தானத்தைச் சமணர்கள் முதல் தானமாகக் கொண்டிருந்தனர். அடைக்கலத் தானத்தையும் அவர்கள் பெரிதாகக் கருதியுள்ளனர். மூன்றாவதான ஔடத தானத்தை (மருத்துவ உதவி) பவுத்தர்களைப் போலவே சமணப் பெரியார்களும் செய்து வந்துள்ளனர். இதற்காக மருத்துவம் கற்று, நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்திருக்கின்றனர். சமண மடங்களில் இலவசமாக மருந்து கொடுக்கப்பட்டது. இது மக்களின் நன்மதிப்பைப் பெற உதவியது. சமணத் துறவிகள் இயற்றிய நூல்களுக்குத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் என்று மருந்துகளின் பெயரைக் கொடுத்திருப்பதில் இருந்து இதனை அறியலாம்.

நான்காவதாகிய சாத்திர தானத்தை மற்ற எல்லாவற்றையும்விடப் பெரிதாகச் சமணர்கள் மதித்திருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியை பணம் வாங்காமல் சொல்லிக் கொடுத்தவர்கள் சமணப் பெரியோர்கள்தான். பள்ளி என்ற பெயரே பாளிமொழிச் சொல்லாகும்.

சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தில் சமயம் சார்ந்த சண்டைகள் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக திருமாலைப் போற்றும் மிக அழகிய பாடல்கள் சிலப்பதிகாரத்தில் இருக்கின்றன. அதே போன்று மணிமேகலையும் பவுத்த மதத்தைச் சாராத திருவள்ளுவரைப் ‘பொய்யிற் புலவர்’ என்று வாழ்த்துகிறது. அப்பர், சம்பந்தர் காலக்கட்டமான ஏழாம் நூற்றாண்டில்தான் சமணத்துக்கு எதிரான சமயச் சண்டை தொடங்கியது. சம்பந்தர், அப்பர் சமணர்களை மிகக் கடுமையாக தாங்கள் பாடிய தேவாரங்களில் சாடியிருக்கிறார்கள். இதனால் சமண மதம் தமிழகத்தில் செல்வாக்கு இழந்து போனது.

இன்று 83,339 (2011) சமணர்கள் மட்டும் தமிழகத்தில் வாழ்கிறார்கள். இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டின் குடித்தொகையில் (72,138,958) 0.12 விழுக்காடாகும். இவர்கள் வீட்டில் கன்னட மொழியையும் வெளியில் தமிழையும் பேசுகிறார்கள். சமணர்கள் இல்லாதிருந்திருந்தால் தமிழுக்கு இலக்கண இலக்கியங்கள் கிடைத்திருக்குமா? தொல்காப்பியம், அதன் உரையாசிரியர் இளம்பூரணவடிகள், நன்னூல், குறள், நாலடி, சிலம்பு, அதன் உரையாசிரியர் அடியார்க்குநல்லார், சீவக சிந்தாமணி நிகண்டுகள் போன்றவை சமணத்தின் பங்களிப்பு.

 

http://www.seithy.com/breifArticle.php?newsID=147985&category=Article&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படித்துச் சிந்திக்க வேண்டிய அருமையான பதிவு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.