• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Vasampu

உதாரண புருஷர்

Recommended Posts

உதாரண புருஷர்

01shivajioj0.jpg

அது 1993-ம் வருடம்! நமது குழும நாளேடான "தினமணி'யின் வைர விழாவை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே விழா நடத்திக் கொண்டாடினோம். அந்த வரிசையில் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவானது.

அந்நிகழ்ச்சியில் நடிகர் திலகம் கலந்துகொண்டு சிறப்பித்தால் நமக்குப் பெருமையாக இருக்குமெனத் தீர்மானித்தோம். விழாவுக்கு அழைப்பதற்காக "அன்னை இல்லம்' குறிப்பிட்ட நாளில் அங்குச் சென்றோம்.

அன்று காலை பத்து மணிக்கு நடிகர் திலகத்தை அவரது இல்லத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. மிகச் சரியாக 9.59-க்கு வரவேற்பறையில் பிரவேசித்தார் சிவாஜிகணேசன். எங்கள் அனைவரோடும் மகிழ்ச்சி பொங்க அளவளாவிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தந்தார்.

தஞ்சையில் விழா ஏற்பாடுகள் கோலகலமாய் நடந்தன. நிகழ்ச்சிக்கு முதல் நாளே சூரக்கோட்டையில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நடிகர் திலகத்தை மீண்டும் சந்திக்க விரும்பினோம். உடனே நேரம் ஒதுக்கித் தந்தார். காலை பதினோரு மணி!

நாங்கள் அவரது தோட்ட இல்லத்தின் உள்ளே நுழையும்போது எதிரே நின்று வரவேற்றார் நடிகர் திலகம். ஒரு நிமிடத் தாமதம் கூட இல்லை.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாடிய பின், ""நாளை எத்தனை மணிக்கு விழாவைத் தொடங்குவீர்கள்? துல்லியமாகச் சொல்லுங்கள்'' என்றார். ""மிகச் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டுவிடும்'' என்றோம்.

""சரி! 9.59க்கு நான் அங்கே இருப்பேன்! இல்லையென்றால் என் தலை இருக்கும்'' என்று கம்பீரமாகச் சொன்னார் அக்கலையுலக மேதை.

மறுநாள் சொல்லி வைத்தது போலவே 9.59க்கு விழா நடக்கும் அரங்கில் சிம்ம நடை போட்டு வந்தார்.

ஒரு மூத்த கலைஞர், நேரம் தவறாமையில் தொடர்ந்து காட்டிய பொறுப்புணர்வு எங்களை நெகிழ வைத்தது. எத்தனையோ கலைஞர்கள் இதுபற்றி நம்மிடம் சொல்லியிருந்தாலும் நாமே அதை அனுபவிக்கும்போது அது ஆனந்தமாக இருந்தது.

இதுபற்றி விழா முடிந்ததும் அவரிடம் பேசியபோது, ""நேரம் தவறாமை என்பது மிக முக்கியமான பண்பாடு. நாம் காலம் தாழ்த்துவதால் சுற்றியுள்ள பலருக்கு பற்பல நெருக்கடிகள் ஏற்படுவதை அனைவரும் உணர வேண்டும்'' என்றார்.

சென்ற வாரம்... மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலை விழாவுக்காகச் சென்ற பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், பேட்டிக்காக வந்த மலேசிய பத்திரிகையாளர்களையும் தொலைக்காட்சி நிருபர்களையும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காக்க வைத்துள்ளனர். அதற்குப் பின்னரும் அலட்சியமாகவே நடந்துள்ளனர். இதனால் மலேசிய பத்திரிகைகள் தங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

நமது நட்சத்திரங்கள், இவை போன்ற செயல்களால் நமது தேசத்தின் புகழையும் குலைக்கின்றோம் என்பதனை உணர வேண்டும்.

பத்மஸ்ரீ டாக்டர் சிவாஜி கணேசனை நடிப்புக்கு மட்டுமின்றி, நேரம் தவறாமைக்கும் நமது கலைஞர்கள் உதாரண புருஷராகக் கொள்ள வேண்டியது அவசியம்.

நன்றி சினிமாஎக்ஸ்பிரஸ்

Share this post


Link to post
Share on other sites

*****

நடிகனுக்கு காவடி தூக்கும் - *****

இதே நாட்களில் ..........

எங்க - நாட்டிலையும் - என்ன நடக்குது என்னு கவனிங்கப்பா.....!

கவனிதால் - என்ன நடக்குது என்னும் சொல்லுங்கப்பா!!

ஒரு இக்கட்டான - கால கட்டங்களில் -

ஒரு - கருத்தாளன் சொன்னதுபோல்.......

திசை திருப்பும் - முயற்சி - இது!

நீங்க செய்வது!

***** - சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites