Jump to content

சூரியனை நெருங்கும் பூமி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனை நெருங்கும் பூமி

தமிழகத்தில் குளிர் காலத்தில் குறிப்பாக சில இடங்களில் நல்ல குளிர் இருக்கும். அப்போது ஏழை மக்கள் திறந்த வெளிகளில் கட்டைகளை, சுள்ளிகளை எரித்து அதில் குளிர் காய்வர். இவ்விதம் எரியும் நெருப்பிலிருந்து மிக அப்பால் இருந்தால் சூடு உறைக்காது. சற்றே அருகில் இருந்தால் வெப்பம் இதமாக இருக்கும்.

பூமியைப் பொருத்தவரையில் சூரியன் தான் நமக்கு வெப்பத்தை அளிக்கிறது. சூரியன் இன்றேல் நாம் அனைவரும் குளிரில் விறைத்து மடிந்து விடுவோம். ஆனால் சூரியனிலிருந்து நாம் எப்போதும் ஒரே தூரத்தில் இருப்பது கிடையாது. சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையானது சற்றே நீள் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆகவே நாம் குறிப்பிட்ட சமயத்தில் சூரியனிலிருந்து சற்று விலகியபடி இருக்கிறோம். அப்போது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 15 கோடியே 21 லட்சம் கிலோ மீட்டராகும். வேறு சில சமயங்களில் பூமியானது தனது பாதையில் சற்றே சூரியனுக்கு அருகாமையில் உள்ளது. அப்போது சூரியனுக்கு உள்ள தூரம் 14 கோடியே 71 லட்சம் கிலோ மீட்டராகும்.

2007-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதியன்று பூமியானது சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும். ஆண்டு தோறும் ஜனவரியில் தான் பூமியானது சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளது என்றாலும் இத் தேதி ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். 2006-ஆம் ஆண்டில் ஜனவரி 5-ந் தேதி இந்த நிலை இருந்தது.

விஞ்ஞானி ஜோகன்னஸ் கெப்ளர் கண்டறிந்து கூறிய விதிகளின் படி சூரியனுக்கு அருகாமையில் இருக்கின்ற வேளையில் பூமி தனது பாதையில் செல்கின்ற வேகம் அதிகரிக்கும். சூரியனிலிருந்து அப்பால் இருக்கிற வேளையில் பூமியின் வேகம் குறைவாக இருக்கும். பூமியின் வேகம் அதிகரிப்பதும் குறைவதும் இயல்பாக நடைபெறுவதாகும். ஓடிப் பிடித்து விளையாடுகையில் பிடிக்கின்றவரின் அருகே இருக்க நேரிட்டால் ஒருவர் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓடுவார். சற்றே தள்ளி இருந்தால் அவர் அந்த அளவு வேகத்தில் இல்லாமல் நிதானமாக ஓடுவார். பூமி - சூரியன் சமாச்சாரமும் அப்படித்தான்.

சூரியனை சுற்றுகையில் பூமியின் சராசரி வேகம் மணிக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரம் கிலோ மீட்டராகும். சூரியனை நெருங்குகின்ற வேளையில் இந்த வேகம் ஒரு லட்சத்து 9 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கிறது. நாம் பூமியில் இதுவரை உருவாக்கியுள்ள எந்த வாகனமும் - விண்வெளி ராக்கெட் உட்பட - இந்த வேகத்தில் செல்வதில்லை. பூமியோ நம் அனவைரையும் - காடு, மலை, கடல்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு இவ்விதம் அனாயாசமாக மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் - அசுர வேகத்தில் பறந்து சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் நம்மால் இந்த வேகத்தை உணர முடிவதில்லை. நீங்கள் விமானத்தில் செல்லும்போது உங்களால் வேகத்தை உணர முடியாது என்பதைப் போலத்தான் இதுவும்.

பொதுவில் ஜூலை 4-ந் தேதி பூமியானது சூரியனிலிருந்து மிக அப்பால் இருக்கும். ஜூலை 4-ந் தேதி இருப்பதை விட ஜனவரி 4-ந் தேதி பூமி மொத்தத்துக்கும் கூடுதலாக 7 சதவிகித அளவுக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. ஆனால் வியப்பான வகையில் - வட கோளார்த்தத்தில் - அக் காலகட்டத்தில் தான் கடும் குளிர் வீசுகிறது. அதாவது சூரியனுக்கு அருகாமையில் இருக்கும்போது தான் நமக்கு குளிர்காலம் ஏற்படுகிறது.

இந்த விசித்திர நிலைமைக்குக் காரணம் உண்டு. பூமியில் குளிர்காலமும் கோடைக்காலமும் - பருவங்கள் - ஏற்படுவதற்கு பூமி தனது அச்சில் 23 டிகிரி சாய்ந்து இருப்பது தான் காரணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் காரணமல்ல. டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் சூரியனிலிருந்து வரும் கிரணங்கள் வட கோளார்த்தத்தின் மீது சாய்வாக விழுகின்றன. சாய்வாக விழும் கிரணங்கள் அவ்வளவாக உறைக்காது என்பதால் தான் வட கோளார்த்தத்தில் குளிர் நிலவுகிறது.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.