• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • யாழ்கள நண்பர்களே இந்த பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியா? சுற்றுப்புற சூழல் மாசடைதலை தடுத்தலா? தயவு செய்து பின்னணி தகவல் அறிய உதவுங்கள்
    • Image caption தாஹிர் ஹுசேன் (இடது) மற்றும் கொலை செய்யப்பட்ட அங்கித் சர்மா (வலது) டெல்லி மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹிர் ஹுசேன் என்பவர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாஹிர் ஹுசேன் கிழக்கு டெல்லி மாநகராட்சி உறுப்பினராக உள்ளார். உளவுத் துறையில் பணியாற்றிய அங்கித் சர்மா என்பவர் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜாஃப்ராபாத் எனும் இடத்தில் உள்ள சாக்கடை ஒன்றில் செவ்வாய் இரவு பிணமாக மீட்கப்பட்டார். அவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது கும்பல் ஒன்றால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தாஹிர் ஹுசேன் தலைமையிலான கும்பல் ஒன்று கற்கள், தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கியதால்தான் அங்கித் சர்மா உயிரிழந்தார் என்று பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா குற்றம் சாட்டியிருந்தார் அங்கித் சர்மாவின் தந்தை ரவீந்தர் சர்மாவும் உளவுத் துறையில் பணியாற்றுகிறார். அவரும் தாஹிர் ஹுசேன் ஆதரவாளர்களே தனது மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். ரவீந்தர் சர்மா அளித்த புகாரின் அடிப்படையிலேயே டெல்லி காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தாம் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் தாமே தாக்குதலுக்கு உள்ளதாகவும் தாஹிர் ஹுசேன் கூறியிருந்தார். அவர் தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் கும்பல் ஒன்றுடன் செல்வதாக கூறப்படும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சாந்த் பாக், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் போராடுபவர்கள் அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கடந்த ஞாயிறன்று பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா பேசியது கலவரத்தின் தொடக்கமாக இருந்தது என்று குற்றச்சாட்டு நிலவுகிறது. ஞாயிறு மாலை ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதல் வடகிழக்கு டெல்லியின் பிற பகுதிகளுக்கும் பரவியதால் மதக் கலவரம் உண்டானது. இதுவரை இந்த மதக் கலவரத்தால் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/india-51659279  
    • என் பிள்ளைகள் இருவரும் மிக சரளமாக தமிழ் கதைப்பார்கள். கனடாவில் இருக்கும் யாழ் கள உறவுகளுக்கும் இது தெரியும். ஊருக்கு போயிருக்கும் போதும் மகள் எல்லாரிடமும் தமிழில் கதைத்தமையால் பல உறவுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. நிற்க, ஆனால் அவர்களை நாம் தமிழ் படிக்க அனுப்பும் போது ஏற்பட்ட அனுபவங்களின் பின் அவர்கள் போக மாட்டேன் என கூறியபோது கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்க எண்ணவில்லை. அப்படி கட்டாயப்படுத்தி வைக்க வேண்டிய அளவுக்கு தமிழ் படிப்பது கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் அளவுக்கு முக்கியமான விடயமாக நான் கருதாமையும் முக்கிய காரணம். அத்துடன் தமிழ் கலாச்சாரங்களை ஒட்டிய நடனம், கலை, இசை போன்வற்றையும் பிள்ளைகளுக்கு கற்பிக்க விரும்பவில்லை. சாதியத்தையும், வர்க்க வேறுபாடுகளையும், மத நம்பிக்கைகளையும் வலிந்து ஊட்டும் இவற்றை என் பிள்ளைகள் கற்காமல் இருப்பதே உத்தமம்.
    • இளங்கன்று பயமறியாது.
    • நடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று அக்ஷன்  காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா படத்தில் கேங்க்ஸ்டார்  கேரக்டரில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அந்த அனுபவங்கள் குறித்து  அவர் மனம் திறந்ததாவது... 'மாபியா' கதையை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய போது எப்படி இருந்தது? கதை  கூறிய போது படத்தோட டிசைன் இப்படித்தான் இருக்கும்னு சில ரெபரன்ஸ்  காட்டினார். கதை புதுசா, போதை பொருள் கடத்தும் தலைவன் கேரக்டர் எனக்கு  ஸ்டைலிஷா இருந்தது. ' அருண் விஜய்க்கும் உங்களுக்குமான காட்சி அமைப்பு ? எனக்கும்  அருண் விஜய்க்கும் காம்பினே ஷன் காட்சிகள் குறைவு. அருண் விஜய்யை வில்லனாக  மக்கள் பார்த்து இருக்காங்க. அவருக்கு வில்லனா நான் நடிக்கும் போது பெரிய  போட்டி இருந்தது. * மாபியா படத்தில் உங்களுக்கு ஜோடி இருக்காங்களா? வில்லனுக்கு யாருங்க ஜோடி தராங்க. பிரியா பவானி சங்கர் மாதிரி ஒரு ஹீரோயின் கொடுத்தால் வேணாம்னா சொல்லப் போறேன். ' வில்லனாக நடிக்க விரும்புவது ஏன்? 'அஞ்சாதே'க்கு  பின் 'முரண்', 'துப்பறிவாளன்', 'திருட்டு பயலே 2', 'மாபியா', தெலுங்கில்  'ஜவான்' மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் ஒரு படம் என வில்லனாக  நடிக்கிறேன். ஹீரோவா நடிக்கும் போது இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற  கட்டுப்பாடு இருக்கும். வில்லனாக நடிக்கும் போது சுதந்திரம் கிடைக்கும். ' அருண்விஜய் ஒரு 'ஜிம் ேபாய்' நீங்க எப்படி ? அருண்விஜய்யை  முதல்ல பார்த்ததே ஜிம்மில் தான். அவர் அப்பாவுடன் தான் ஜிம்க்கு வருவார்.  நானும் உடற்பயிற்சி மீது ஆர்வம் செலுத்துவதற்கு இவர்கள் ஒரு காரணம். ' சினேகா நடித்த 'பட்டாசு' படம் பார்த்தீங்களா ? ஒரு  கணவரா அவங்கள அந்த கேரக்டரில் பாக்கும் போது பெருமையா இருந்துச்சு. ஒரு  சினிமா ரசிகனாக பார்க்கும் போது அவங்க முயற்சி பாராட்டும்படி இருந்துச்சு.  'பட்டாசு' எனக்கும், குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் திருப்தியான படம். 'தனுஷ் இயக்கத்தில் நீங்க நடித்தது குறித்து? அவர்  குறித்து நான் என்னவெல்லாம் நினைச்சுட்டு வந்தேனோ அதை எல்லாம் பிரேக்  பண்ணிட்டே வந்துட்டு இருக்காரு. எவ்வளவு திறமையான நடிகரோ அந்த அளவு  திறமையான இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர். இதை எல்லாம்  சாதாரணமாக செஞ்சிட்டு இருக்காரு. ' தற்போது வரும் புது இயக்குனர்கள் ? 'மாபியா'  கார்த்திக் நரேனுக்கு 2வது படம். இவர் எந்த இயக்குனரிடமும் வேலை  பார்க்கலை, அனுபவமும் இல்லை. ஆனால் ஒரு இயக்குனராக ஜெயிச்சிருக்கார்.  கார்த்திக் சுப்புராஜ் இன்னொரு உதாரணமாக சொல்லலாம். புது இயக்குனர்கள்  வரும்போதே அவர்களுக்கான திறமைகளை வளர்த்துட்டு வர்ற மாதிரி தெரியுது. * விஷால் கூட நடிக்கிற 'துப்பறிவாளன்' குறித்து கூறுங்கள்? 'துப்பறிவாளன்1'ல் நடிச்சதை விட 'துப்பறிவாளன் 2' நடிக்கும் போது ரொம்ப நெருக்கமா ரெண்டு பேரும் ஆகிட்டோம்ணு சொல்லலாம். * உங்க திரை அனுபவத்துல 18வருஷத்துல 35படங்கள் ? எந்தப்  படத்தை பார்த்தாலும் நல்லா பண்ணி இருக்கலாமேனு தோணும். இந்த 18வருஷம்  மேடு பள்ளங்கள் தாண்டி வந்திருக்கேன். என் எதிர்காலம் உறுதியாக இருக்கும்னு  நம்புறேன். * உங்களுக்கு படம் இயக்க, தயாரிக்க ஆர்வம் இருக்கா ? நிறைய கதை மனசுல ஓடிகிட்டே இருக்கு. படம் தயாரிப்பதில் ஆர்வம் இருக்கு. கண்டிப்பா விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். * சினேகாவும் நீங்களும் 'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு ? 'அச்சமுண்டு அச்சமுண்டு'க்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். http://www.thinakaran.lk/2020/02/21/சினிமா/48680/smart-வில்லன்