நவீனன்

சமையல் செய்முறைகள் சில

Recommended Posts

 
 
 
Aval Kitchens Foto.
 

கோதுமை அப்பம்


தேவையானவை:
கோதுமை மாவு - 250 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய்- 5
தே.துருவல் - 1 மூடி
தண்ணீர் - 100 மில்லி
எண்ணெய் - 250 மில்லி
செய்முறை:
கோதுமை மாவுடன் பொடித்த நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், தே.துருவல் சேர்த்து நன்கு கரைக்கவும். அந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். க்டாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் விட்டு சேர்த்து பொரித்தெடுக்கவும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

பீர்க்கங்ககாய் பச்சடி

12472386_478609075661085_437934326180008

தேவையானவை:


பீர்க்கங்காய் - 150 கிராம்
புளி - சிறிது
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
உப்பு - தே.அளவு
அரைக்க:
தே.துருவல் - 25 கிராம்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - 1 தேக்கரண்டி


தாளிக்க:


எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
உ.பருப்பு - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் நறுக்கியது - 4
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் பீர்க்கங்காயை சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். அரைக்க வேண்டியதை அரைத்து சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிட மூடி வைத்து இறக்கினால் பச்சடி ரெடி.

Share this post


Link to post
Share on other sites

கமகம கொத்தமல்லி ரைஸ்

p44a.jpg

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், கொத்தமல்லித் தழை - 2 கட்டு, காய்ந்த மிளகாய் - 8, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சிறு எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி - 6, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லித்தழையை நன்கு  அலசி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே கொத்தமல்லித்தழையை வதக்கி எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து... அதனுடன் புளி, சிறிதளவு உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.வாணலியில் சிறிதளவு நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளிக்கவும். அரைத்த கொத்தமல்லித்தழை விழுது, தாளிதக் கலவையை சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலந்து, வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

உருளைக்கிழங்கை தோல்சீவி 4 துண்டுகளாக்கி, அதை மெல்லியதாக கட் செய்து மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வறுத்து இதற்குத் தொட்டுக்கொள்ளலாம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, நவீனன் said:

கமகம கொத்தமல்லி ரைஸ்

p44a.jpg

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், கொத்தமல்லித் தழை - 2 கட்டு, காய்ந்த மிளகாய் - 8, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சிறு எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி - 6, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லித்தழையை நன்கு  அலசி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே கொத்தமல்லித்தழையை வதக்கி எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து... அதனுடன் புளி, சிறிதளவு உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.வாணலியில் சிறிதளவு நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளிக்கவும். அரைத்த கொத்தமல்லித்தழை விழுது, தாளிதக் கலவையை சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலந்து, வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

உருளைக்கிழங்கை தோல்சீவி 4 துண்டுகளாக்கி, அதை மெல்லியதாக கட் செய்து மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வறுத்து இதற்குத் தொட்டுக்கொள்ளலாம்.

இதற்குக கத்தரிக்காய் பொரித்தகறி. உருளைக் கிழங்குக் குழம்பு  சுவையாக இருக்கும்.. நன்றி சகோதரம் இணைப்பிறகு

Share this post


Link to post
Share on other sites

கலர்ஃபுல் லெமன் ரைஸ்

p44e.jpg

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், கேரட் - ஒன்று, இளசான பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - கால் கப், எலுமிச்சைச் சாறு - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு  - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி - சிறிதளவு. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கேரட், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியை சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துவைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து...  நறுக்கிய கேரட், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வேகவைத்த பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தேங்காய்த் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் பாதியளவு எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, ஒரு கொதி கொதிக்கவிட்டு உடனே அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, மீதம் இருக்கும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரிச் முந்திரி புலாவ்

p44f.jpg

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், முந்திரி - 50 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்),  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு,  - தேவையான அளவு,

செய்முறை: பாசுமதி அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உதிராக வடித்த சாதம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

இதற்கு உருளைக்கிழங்கு - பட்டாணி குருமா சூப்பர் காம்பினேஷன்.

ஸ்பைஸி புதினா ரைஸ்

p44g.jpg

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், புதினா - 2 கட்டு, கொத்தமல்லித்தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 2 (மெல்லியதாக, நீளமாக நறுக்கவும்), பட்டை - சிறு துண்டு, ஏலக்காய், லவங்கம் - தலா 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்த மல்லித்தழையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்யவும். இவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து மையாக  அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக நறுக்கவும். பிரஷர் பேன் (pressure pan) அல்லது சின்ன குக்கரில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்த மசாலாவை அதனுடன் சேர்த்துக் கிளறி, 3 கப் நீர் சேர்த்து, அரிசி, உப்பு,

எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி மூடவும். 2 விசில் வந்ததும், அடுப்பை `சிம்'மில் வைத்து, மேலும் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சொக்கவைக்கும் சோயா சங்க்ஸ் ரைஸ்

p44b.jpg

தேவையானவை: பச்சரிசி - 2 கப், சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 12 முதல் 15 வரை, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தயிர் - அரை கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கவும். சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, பிறகு பிழிந்து குளிர்ந்த நீரில் 2,3 முறை அலசி  நீரை ஒட்டப் பிழியவும். பிரஷர் பேன் (pressure pan) அல்லது சின்ன குக்கரில் எண்ணெய், நெய் விட்டு... காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் உப்பு, தயிர், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், பிழிந்து வைத்த சோயா சேர்த்து நன்கு வதக்கி... அரிசி,

4 கப் தண்ணீர் சேர்த்து பேனை (அல்லது குக்கரை) மூடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும். ஆவி பறக்க ஆனியன் ராய்த்தாவோடு பரிமாறவும்.

விறுவிறு வெஜிடபிள் ரைஸ்

p44c.jpg

தேவையானவை: பச்சரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் -  2 கப், பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 3, வாசனையான சாம்பார் பொடி - ஒன்றரை டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் - அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி - 6, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு (நெய்யில் வறுக்கவும்), எண்ணெய், நெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயத்தை உரித்துக்கொள்ளவும்; தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசி, துவரம்பருப்புடன் கேரட், பீன்ஸ், கோஸ், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், பச்சைப் பட்டாணி, 6 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 3 விசில் வந்ததும், அடுப்பை  3 நிமிடம் `சிம்'மில் வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்கி... புளிக்கரைசல், உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி பருப்பு - சாத கலவையோடு சேர்த்துக் கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி, கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள சிப்ஸ்  மற்றும் ராய்த்தா மிகவும் ஏற்றது.

நைஸ் வேர்க்கடலை ரைஸ்

p44d.jpg

தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப், வறுத்த வேர்க்கடலை - அரை கப் (பொடிக்கவும்), கொப்பரைத் துருவல் - கால் கப், முழு உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொப்பரைத் துருவலை வாணலியில் நன்கு வறுத்து,  மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து தனியே எடுத்து வைக்கவும். உதிராக வடித்த சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும். அதில் வேர்க்கடலைப் பொடி, உளுத்தம்பருப்பு பொடி, கொப்பரைத் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக, தாளித்து வைத்திருக்கும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

இதற்கு  கேரட் ராய்த்தா நல்ல காம்பினேஷன்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Aval Kitchens Foto.
 

விரால் மீன் ரோஸ்ட்


தேவையானவை:
விரால் மீன் - 1 கிலோ
பூண்டு - 30 கிராம்
இஞ்சி - 10 கிராம்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 15 கிராம்
கொத்தமல்லித்தழை - 5 கிராம்
மஞ்சள்தூள் - 5 கிராம்
சோம்பு - 3
சீரகம் - 2
மிளகு - 15 கிராம்
உப்பு - தே.அளவு
மிளகாய்த்தூள் - 20 கிராம்
எலுமிச்சைப்பழம் - அரை பழம்
கடலை எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
செய்முறை:
மீன், எலுமிச்சைப்பழம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் எலுமிச்சைசாறு பிழியவும். நன்கு சுத்தம் செய்த மீனை மசாலாவில் தோய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடனாதும் மீன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்தெடுத்துப் பரிமாறவும்.

 

 

Aval Kitchens Foto.
 

ஃபிரட் சாண்ட்விச்:


தேவையானவை :

ப்ரெட் - 4
வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - பாதி
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - கால் கப்
உப்பு - கால் டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 1
தக்காளி - 2
செய்முறை :
வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழைகளை ஆய்ந்து அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.ஒரு ப்ரெட்டை எடுத்து அதில் இரண்டு பக்கமும் வெண்ணெயை தடவிக் கொள்ளவும். இதுப் போல் மற்றொரு ப்ரெட்டிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.வெண்ணெய் தடவிய ப்ரெட்டில்நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் குடைமிளகாய் கலவையை வைக்கவும்.குடைமிளகாய் கலவை வைத்து அதன் மீது நறுக்கிய தக்காளி வைத்து அதன் மீது மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும்.பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் இந்த ப்ரெட் சாண்விச்சை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் ஊற்றி பொன்னிறமாக வந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
 
 
 
Aval Kitchens Foto.
·

புதினா மல்லி பக்கோடா


தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
சிறிய வெங்காயம் - 20
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
புதினா இலை- 25 கிராம்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
வெண்ணெய் - 25 கிராம்
மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை :
வெங்காயத்தையும்,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானவற்றிலுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துப்பரிமாறவும்.

Aval Kitchens Foto.
 

மிக்ஸ்ட் தக்காளி சட்னி


தேவையானவை:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு - 2 பல்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மிளகாய் துளையும் அத்துடன் சேர்த்து, ஒரு முறை அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை அத்துடன் சேர்த்து, சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி இறக்க வேண்டும். இப்போது சுவையான கார சட்னி ரெடி!!! இதனை தோசை, இட்லி போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

 
 
 
Aval Kitchens Foto.
 

.கறிவேப்பிலை இட்லி

தேவையானவை:

மினி இட்லிகள் - 40
நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

அரைக்க:
கறிவேப்பிலை - 3 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 4
உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்

தாளிக்க :-
கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2

செய்முறை :
ஒரு வாணலியில், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து , ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பி வைத்து, சூடேரியதும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு , உளுந்து, காய்ந்தமிளகாய் எனப் படிப்படியாக போட்டு தாளித்து அதனுடன் மினி இட்லி, கறிவேப்பிலைபொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றி கிளறி இறக்கிப் பரிமாறவும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Aval Kitchens Foto.
 

கொத்தமல்லி சாதம்


தேவையானவை


பச்சரிசி - அரை கிலோ ( வேக வைத்து உதிடியாக வைத்துக்கொள்ளவும் )
சிறிய வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
தக்காளி - 2 பெரியது
வரமிளகாய் - 2
பச்சைமிளகாய் - 4
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
புதினா - 25 கிராம்
கொத்தமல்லித்தழை - 100 கிராம்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை :
அடுப்பில் காடயை வைத்து எண்ணெய் ஊற்றி புதினா , கொத்தமல்லித்தழையினை லேசாக வதக்கி ஆறியதும் மிக்ஸ்யில் மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி,வர மிளகாய்,பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி நாம் அரைத்து வைத்துள்ள விழுதினை இத்துடன் சேர்த்து எண்ணெய் சுருண்டு வரும் வரை வதக்கி சூடான பச்சரிசி சாதத்தில் சேர்த்து சாதம் உடையாமல் கிளறி பரிமாறவும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

12748037_487000391488620_767269508103092

 

ஸ்பினாச் கெனலோனி

பான் கேக் செய்ய:
மைதா மாவு - 2 கப்
பால் - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை

ஸ்டஃபிங் செய்ய:
பாலக்கீரை - ஒரு கட்டு
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 50 கிராம்
ஸ்வீட்கார்ன் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு

வொயிட் சாஸ் செய்ய:
வெண்ணெய் - 100 கிராம்
மைதாமாவு - அரை கப்
பால் - ஒரு கப்
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க:
ஓரிகானோ - ஒரு டீஸ்பூன்
புதினா இலைகள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
பான் கேக் செய்யக் கொடுத்த மைதா மாவுடன் உப்பு, பால் சேர்த்து ரவா தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைத்துக் கொள்ளவும். இங்கே கொடுக்கப்பட்ட பால் அளவு, உங்களுக்குப் போதுமானதாகத் தோன்றவில்லை என்றால் மட்டும், தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை சின்னதாக ஊற்றி இருபுறமும் வேக வைத்தெடுக்கவும். இனி ஸ்டஃபிங் செய்யக் கொடுத்த ஸ்வீட்கார்னை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பாலக் கீரையைச் சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். இதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். வாணலியைச் சூடாக்கி, வெண்ணெயைச் சேர்த்து உருகியதும் இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் அரைத்த கீரை, வேகவைத்த ஸ்வீட்கார்ன், உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைக்கும் முன் சீஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு மைதா மாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கருகாமல் வறுக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். அதன் மேல் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், துருவிய சீஸ் சேர்த்துக் கிளறி இறக்கினால் வொயிட் சாஸ் ரெடி. பரிமாறும் தட்டில் ஒரு தோசையை வைத்து, இதன் உள்ளே அரைத்த கீரைக் கலவையை வைத்து ரோல் செய்யவும்.
இதன் மேல் வொயிட் சாஸ் ஊற்றி அலங்கரிக்கக் கொடுத்தவற்றைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

 

 

 

 

12715725_486964811492178_873816619552570

 

கேரட் சாதம் :
தேவையானவை:
கேரட்- 6
பாஸ்மதி அரிசி - 300 கிராம்
வறுத்த நிலக்கடலை - ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

வறுத்துத் அரைக்க
உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- அரை டீஸ்பூன்
மிளகு- கால் டீஸ்பூன்
சீரகம்- கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
தாளிக்க:

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை:
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சூடு அறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பாசுமதி அரிசியை கழுவி உதிர் உதிராக வேக வைத்துக்கொள்ளவும்.கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும்,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து துருவிய கேரட்டை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.எண்ணெயின் சூட்டிலே கேரட் வெந்ததும் .வறுத்து வைத்துள்ள பொடி சேர்த்து வதக்கவும்.பின் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்துக்கிளறி இறக்கிப்பரிமாறவும்.

Edited by நவீனன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அமர்க்களமான சுவையில்... ஆல் இண்டியா மேரேஜ் ரெசிப்பி!

 

சமையல்

 

`சுவையில் சிறந்தது..?’ என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர்கள்  ‘கல்யாண விருந்து’ என்று பதில் அளிப்பார்கள். அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் விசேஷ கல்யாண விருந்து உணவுகள் பல உண்டு. அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, சமைத்துக்காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்... சமையல் கலையில் அளவற்ற ஆர்வமும், அசரவைக்கும் திறமையும் கொண்ட ர.கிருஷ்ணவேணி. கொஞ்சம் பொறுமையும், அக்கறையும், விருப்பமும் இருந்தால் போதும்... இவற்றை உங்கள் வீட்டிலேயே செய்து பரிமாறி, உறவு, நட்பு வட்டத்தில் கிச்சன் குயினாக வலம் வரலாம்.

அறுசுவை களத்தில் இறங்குங்கள்... பாராட்டுப் பதக்கத்தை சூடுங்கள்!

பதிர்பேணி (தமிழ்நாடு)

p44a.jpg

தேவையானவை: மைதா - 2 கப், அரிசி மாவு - கால் கப், வெண்ணெய் அல்லது வனஸ்பதி - கால் கப், பொடித்த சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால் - அரை லிட்டர், பொடித்த பாதாம் - கால் கப், குங்குமப்பூ - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, சமையல் சோடா, உப்பு - தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதாவுடன் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். சமையல் சோடாவுடன் வெண்ணெய் அல்லது வனஸ்பதியைச் சேர்த்து ஒரு தட்டில் போட்டு, கையால் அழுத்தி தேய்க்கவும் (குறைந்தது 5 நிமிடங்கள் தேய்க்க வேண்டும்). இதனுடன் அரிசி மாவு சேர்த்து  கலக்கவும். இதுதான் பதிர்.

கடாயில் எண் ணெயை ஊற்றி, அடுப்பை  மிதமான சூட்டில் வைக்கவும். பிசைந்த மைதாவை அப்பளம் போல திரட்டவும். ஒரு ஸ்பூன் பதிர் எடுத்து, அப்பளத்தின் மேல் பரவலாக பூசவும். இதன்மேல் மற்றொரு அப்பளம், சிறிதளவு பதிர், இன்னொரு அப்பளம் வைக்கவும். இதை இறுக்கி பாய் போல சுருட்டவும். பிறகு, சம அளவு துண்டுகள் போடவும். அவற்றை மீண்டும் ஒருமுறை அப்பளமாக திரட்டி, சூடான எண்ணெயில் போட்டு, மொறுமொறுவென பொரித்து எடுக்கவும். இதை தட்டில் நிமிர்த்தி வைத்தால், அதிகப்படி எண்ணெய் வடிந்துவிடும். ஏலக்காய்த்தூளுடன், கொஞ்சம் சர்க்கரைத்தூள் கலந்து பொரித்த அப்பளத்தின் மேல் தூவிவிடவும். பாலை கொதிக்கவைத்து குறுக்கி, பொடித்த பாதாம், மீதமுள்ள சர்க்கரை, குங்குமப்பூ கலந்து அப்பளத்தின் மேல் ஊற்றிப் பரிமாறவும்.

தேங்காய் அல்வா (கேரளா)

p44b.jpg

தேவையானவை: கெட்டியான தேங்காய்ப்பால் - 2 கப், அரிசி - 4 டீஸ்பூன்,

சர்க்கரை - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை,

சிவப்பு ஃபுட் கலர் - 2 சிட்டிகை.

செய்முறை: அரிசியை ஊறவைத்து சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் கெட்டியான தேங்காய்ப்பால், சர்க்கரை, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து (அரிசியை ஊறவைத்து அரைப்பதால் விரிவடைந்து பால் மற்றும் சர்க் கரையை இழுத்துக்கொள்ளும்) நன்கு கலந்து... அடிகனமான கடாயில் சேர்த்து, கைவிடாமல் கிளறவும். கலவை இறுகி, கடாயில் ஒட்டாமல் வரும்போது, தட் டில் கொட்டி வில்லைகள் போடவும்.

ஃபிர்ணி (டெல்லி)

p44c.jpg

தேவையானவை: பால் - 2 லிட்டர், பாதாம் - 10, பாசுமதி அரிசி - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - அரை கப், குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, பாசுமதி அரிசியை சேர்த்து, சிவக்க வறுக்கவும். இதைக் கொஞ்சம் பாலில் ஊறவைத்து அரைக்கவும். பாதாமை சூடான நீரில்  ஊறவைத்து தோல் நீக்கி, சிறிதளவு பால் சேர்த்து அரைக் கவும். மீதமுள்ள பாலை அடுப்பில் வைத்து சூடாக்கி, கைவிடாமல் கிளறவும். அரைத்த பாசுமதி அரிசி, பாதாம் விழுது சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்து கொதிக்கும்போது, சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பைனாப்பிள் கொத்சு (கர்நாடகா)

p44d.jpg

தேவையானவை: நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப், துருவிய வெல்லம், கொப்பரைத் துருவல் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, பொடித்த வேர்க்கடலை,  கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய்  - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை: பைனாப்பிள் துண்டுகளை வேகவைத்து, மசிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி,  கடுகு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை,  துருவிய வெல்லம், உப்பு, பொடித்த வேர்க்கடலை, மசித்த பைனாப்பிள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை நன்கு சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.

பலவகை சுவைகள் நிறைந்த இந்த கொத்சு,  கர்நாடக மாநில கல்யாணங் களில் தவறாது இடம் பெறும்.

காட்டியா (குஜராத்)

p44e.jpg

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 3 டீஸ்பூன் எண்ணெய், சமையல் சோடா, ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நுரைவர அடிக்கவும். இதை கடலை மாவில் சேர்த்து... மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவையானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இந்த மாவை கைகளால் நீள வடிவில் உருட்டி, தேவையான அளவு துண்டுகளாக்கி... சூடான எண்ணெயில் போட்டு கரகரவென பொரித்து எடுக்கவும்.

குஜராத் திருமணங்களில், அப்பளம், சிப்ஸ் எதுவும் பரிமாற மாட்டார்கள். வாயில் போட்டால் கரையும் `காட்டியா'தான் பரிமாறப் படும்.

சார்வாரி புலாவ் (காஷ்மீர்)

p44f.jpg

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பால் - 2 கப், கறுப்பு கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து (இரண்டும் சேர்த்து) - கால் கப், நெய் - கால் கப், ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய் - தலா 2, சீரகம் - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கறுப்பு உளுந்து, கறுப்பு கொண்டைக்கடலையை 3 மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். பாசுமதி அரிசியுடன் பால் சேர்த்து உதிர் உதிரான சாதமாக வடித்து, தட்டில் ஆறவைக்கவும். கடாயில் நெய் விட்டு, சீரகம் சேர்த்து பொரிக்கவும். ஏலக்காய், கிராம்பு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து புரட்டவும். வேகவைத்த கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, வேகவைத்த பாசுமதி அரிசி சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி குங்குமப்பூவால் அலங்கரித்துப் பரிமாறவும்.

கட்டா சப்ஜி  (ராஜஸ்தான்)

p44g.jpg

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயத்தூள், சுக்குப்பொடி - தலா கால் ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கடலை மாவு, ஓமம், உப்பு, தேவையான நீர், சிறிதளவு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்து கெட்டியாகப் பிசைந்து... நீள குழல்களாக செய்யவும். அரை கப் தண்ணீரை சூடாக்கவும். தளதளவென கொதிக்கும்போது, செய்து வைத்துள்ள குழல்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும். வெந்து கெட்டியானதும், அடுப்பை அணைத்து, நீரை வடித்து, ஆறியதும்  சிறு  துண்டுகளாக்கவும்.  இதுதான் கட்டா.

கடாயில் கொஞ்சம் நெய் ஊற்றி கட்டா துண்டுகளைச் சேர்த்து வதக்கி, தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யில் சீரகம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மீதமுள்ள மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். இதனுடன் வெந்தயத்தூள், சுக்குப்பொடி, தேவையான உப்பு, கொத்தமல்லி, சேர்த்து வதக்கவும். வதக்கிய கட்டா துண்டுகள், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். எல்லாமாக சேர்ந்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை  தூவி அலங்கரித்து பரிமாறவும்.

ராஜஸ்தான் விருந்துகளில், கட்டா சப்ஜி கட்டாயம் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites
Aval Kitchens Foto.
 

அவல் தோசை


தேவையானவை:


கெட்டி அவல் - ஒரு கப்,
அரிசிமாவு - சிறிதளவு
உப்பு -சுவைக்கேற்ப
எண்ணெய் _ தேவையான அளவு.
செய்முறை:
அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைகல்லை வைத்து சூடானதும் தோசைகளாக வார்த்து எடுத்துப் பரிமாறவும்.இனிப்பு தோசை வேண்டும் என்பவர்கள் சர்க்கரை கலந்து ஊற்றவும்.

 

Aval Kitchens Foto.
 

மிக்ஸ்டு வெஜ்டபிள் சட்னி


தேவையானவை :


புடலங்காய் - ஒன்றில் பாதி
சவ்சவ் - ஒன்றில் பாதி
குட மிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
புதினா இலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தாளிக்க :
கடுகு , உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறீவேப்பிலை சிறிதளவு
எண்ணெய் - 50 மி.லி
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேவயானவற்றிள், புளி தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து,அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி பரிமாறவும்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
 
 
 
Aval Kitchens Foto.
 
 

கோழி ரசம்

தேவையானவை:


எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 250 கிராம் (சிறிய சைஸ்)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் -
தலா அரை டீஸ்பூன்
பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 7 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 10 இலைகள்
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, மல்லி (தனியா) மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து, ஆறவைத்து அரைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டுபல்லைத் தட்டி வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். நான்கு பேருக்கு ரசம் தயார் செய்ய தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிக்கனை வேகவைக்கவும்.
வெந்த சிக்கனை மட்டும் எடுத்து நான்கு பவுல்களில் சமமாகப் பிரித்து வைக்கவும். சிக்கன் வெந்த தண்ணீரை சிறிது நேரம் அதே வாணலியில் கொதிக்கவிடவும். அதோடு அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். இந்த ரசத்தை, ஒவ்வொரு சிக்கன் பவுலிலும் சமமாக ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவவும். கோழி ரசத்தை சூடாகப் பரிமாறவும்.

 

 
 
 
Aval Kitchens Foto.
 
 

ப்ரான் ஃப்ரைட் ரைஸ்


தேவையானவை :


வேக வைத்த பாஸ்மதி அரிசி - 200 கிராம்
இறால் - 6
ப்ரான் பேஸ்ட் - 30 கிராம்
பூண்டு - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 10 கிராம்
காரட் - 10 கிராம்
பச்சை பட்டானி - 5 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - காரத்திற்கேற்ப
அஜினமோட்டோ - - சுவைக்கு ஏற்ப
முட்டை - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - 10 கிராம்
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக பூண்டு, ஜூலியன் (நீளமாக நறுக்கிய) பெரிய வெங்காயம் ,காரட்,பச்சை பட்டானி சேர்த்து வதக்கி இத்துடன் சுத்தம் செய்த இறால் சேர்த்து நன்கு வதக்கவும்.இறால் எண்ணெய் சூட்டிலே வெந்த பிறகு இத்துடன் மிளகு,உப்பு,அஜினமோட்டோ சேர்த்து வதக்கி ,வேகவைத்த அரிசி சேர்த்து மெதுவாகக் கிளறி பிரான் பேஸ்ட் சேர்த்துக் கிளறவும்.அதன் மீது பொரித்த முட்டையை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Share this post


Link to post
Share on other sites

நாரத்தை இலை துவையல்

p56a.jpg

தேவையானவை: நாரத்தை இலைகள் - 20, கறிவேப்பிலை இலைகள் - 10,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - ஒன்று, புளி - கோலிகுண்டு அளவு, உளுத்தம்பருப்பு - ஒரு கரண்டி, சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்துவிட்டு, கட் செய்யவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நாரத்தை இலைகளை நன்றாக வதக்கி எடுக்கவும். பின்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாயை வதக்கி எடுத்து வைக்கவும். வாணலியில் மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து... பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். வறுத்த பொருட்கள், வதக்கிய நாரத்தை இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாயுடன் உப்பு, புளி, தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும்.  சுவையான துவையல் ரெடி.

இது... பித்த வாந்தி, வாய் கசப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். சில நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். 

 

ஜவ்வரிசி ஊத்தப்பம்!

p56c.jpg

தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - ஒரு கப், வெங்காயம் - 2, கேரட் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதல் நாள் இரவே புழுங்கல் அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து, தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். மறுநாள் ஜவ்வரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து மாவுடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவல் கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்க்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பமாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 

 

காளான் - துளசி மசாலா

p56b.jpg

தேவையானவை: காளான் - 10, மைதா மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், துளசி இலை - 10, நசுக்கிய பூண்டு, சில்லி பேஸ்ட், மிளகுத்தூள், சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காளானை நான்கு துண்டுகளாக வெட்டவும். மைதா மாவு, சோள மாவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு ஆகியவற்றுடன் கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவும். அதில் காளானைப் போட்டு எடுத்து, அதை எண்ணெயில் பொரித்து வைக்கவும்.

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு... வெங்காயம், பூண்டு, சில்லி பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ் போட்டு சேர்த்து கிளறி, கால் கப் அளவு நீர் விட்டு,  துளசி இலையைப் போட்டு கொதிக்கவிடவும். சுண்டி வரும்போது ஒரு டீஸ்பூன் சோள மாவைக் கரைத்து சேர்த்து... கெட்டியானதும்  பொரித்த காளானை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
41 minutes ago, நவீனன் said:

நாரத்தை இலை துவையல்

அடபாவிகளா இதையும் விட்டுவைக்கவில்லையா?

எமது வீட்டில் ஏன், எப்படி முளைத்ததென்றே தெரியாமல் ஒருவகை தோடை முளைத்தது. நாங்களும் தண்ணி விட்டோம். காய்க்கத் தொடங்கியபின் அம்மா சொன்னா அது நாரத்தங்காய் என்று. ஆனால் பழம் இனிப்பானது. இந்த யூரோப்புக்கு வந்தபின்தான் புரிந்தது அது clementine/Mandarine என்று. 

இந்த ரெசிப்பி அம்மா கண்ணில் பட்டிருந்தால் நாரத்தை இலை துவையல் எண்டு அப்ப இதையும் முழுங்கியிருப்போம்.

Edited by ஜீவன் சிவா

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, ஜீவன் சிவா said:

அடபாவிகளா இதையும் விட்டுவைக்கவில்லையா?

எமது வீட்டில் ஏன், எப்படி முளைத்ததென்றே தெரியாமல் ஒருவகை தோடை முளைத்தது. நாங்களும் தண்ணி விட்டோம். காய்க்கத் தொடங்கியபின் அம்மா சொன்னா அது நாரத்தங்காய் என்று. ஆனால் பழம் இனிப்பானது. இந்த யூரோப்புக்கு வந்தபின்தான் புரிந்தது அது clementine/Mandarine என்று. 

இந்த ரெசிப்பி அம்மா கண்ணில் பட்டிருந்தால் நாரத்தை இலை துவையல் எண்டு அப்ப இதையும் முழுங்கியிருப்போம்.

ஜீவன் நீங்கள் குழம்புகிறீர்கள்..

http://www.tamilserialtoday.org/wp-content/uploads/2015/11/%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D-.jpg

http://4.bp.blogspot.com/-opS7beYkhJA/Uy8rlK5F4rI/AAAAAAAABMM/xz52-8wWEcc/s1600/13.jpgநாரத்தங்காய்

நீங்கள் சொல்லும்  clementine/Mandarine இது கூட இரண்டும் ஓன்று அல்ல.

http://img.21food.com/20110609/product/1306772390632.jpg

இரண்டுக்கும் இடையியல் சிறிய வித்தியாசம் இருக்கு

Share this post


Link to post
Share on other sites

 

2 minutes ago, நவீனன் said:

ஜீவன் நீங்கள் குழம்புகிறீர்கள்..

குழம்பவில்லை

எனது அம்மாதான் clementine/Mandarineஐ நாரத்தங்காய் எண்டு எங்களை குழப்பினவா என்று சொல்ல வந்தேன்

10 minutes ago, நவீனன் said:

இரண்டுக்கும் இடையியல் சிறிய வித்தியாசம் இருக்கு

புதிய விடயமாக எனக்கிருக்கு 
என்ன வித்தியாசமென்று பகிருங்களேன்

Share this post


Link to post
Share on other sites

ஜீவன் ஜேர்மன் மொழியில் கூடிய விபரங்களோடு இருக்கு. அதை மொழி பெயர்த்து தமிழில் எழுத நேரம் இல்லை.

ஆங்கில இணைப்புகள் சில

http://blog.fooducate.com/2013/12/04/whats-the-difference-between-tangerines-clementines-and-mandarins/

http://www.homefamily.net/what-is-the-difference-between-clementines-manadarins-and-tangerines-if-any00000/

 

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, நவீனன் said:

 

 

4 minutes ago, நவீனன் said:

ஜீவன் ஜேர்மன் மொழியில் கூடிய விபரங்களோடு இருக்கு. அதை மொழி பெயர்த்து தமிழில் எழுத நேரம் இல்லை.

ஆங்கில இணைப்புகள் சில

http://blog.fooducate.com/2013/12/04/whats-the-difference-between-tangerines-clementines-and-mandarins/

நன்றி

Share this post


Link to post
Share on other sites

மீன் வடை

அயிரை மீன் – 3
வெங்காயம் – கிலோ.
பச்சை மிளகாய் – 7
முட்டை – 2
கருவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு

எப்படி செய்வது?

மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்.............

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அயிரைமீன் ரொம்பப் பொடிசாய் இருக்கும். அது பொரியல் சொதிக்கு நல்லது. லைட்டா குழம்பும் வைக்கலாம். இதில என்னத்த வடை சுட்டு தொன்டயில் முள்ளு சிக்குப் பட்டு.... எதுக்கும் கவனம்.

Tamil_Daily_News_8593364953995.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

அயிரைமீன் ரொம்பப் பொடிசாய் இருக்கும். அது பொரியல் சொதிக்கு நல்லது. லைட்டா குழம்பும் வைக்கலாம். இதில என்னத்த வடை சுட்டு தொன்டயில் முள்ளு சிக்குப் பட்டு.... எதுக்கும் கவனம்.

Tamil_Daily_News_8593364953995.jpg

ம்ம் விளக்திற்கு நன்றி..:)

 

Share this post


Link to post
Share on other sites

சிக்கன் கிரீன் கிரேவி:

12715434_487024601486199_543939259935030


தேவையானவை:


சிக்கன் - 130 கிராம்
கிரீன் கறி பேஸ்ட் - 30 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு நறுக்கியது - 10 கிராம்
மிளகு - காரத்திற்கு ஏற்ப
அஜினமோட்டோ - சுவைக்கு ஏற்ப
அடர்த்தியான தேங்காய் பால் - 60 மி.லி
துளசி இலை - 3 இலைகள்
எண்ணெய் - 10 மி.லி
உப்பு - தேவையான அளவு

க்ரீன் கறி பேஸ்ட் தயாரிக்க:
கலங்கல் (galangal) - 15 கிராம் (இது இந்தொனேசியா இஞ்சி)
பச்சைமிளகாய் - 30 கிராம்
சின்ன வெங்காயம் - 15 கிராம்
லெமென் கிராஸ் - 5 கிராம்
ப்ரான் பேஸ்ட் - 15 கிராம் (ஷ்ரிம்ப் சாஸ் என்று எல்லா டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும் )
பூண்டு - 15 கிராம்
எலுமிச்சை சாறு - ஒன்றில் பாதி
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும்.அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும் . அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் மிளகு ,,பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ,அரைத்த கீரின் கறி பேஸ்ட், பூண்டு, சிக்கன் துண்டுகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.இத்துடன் உப்பு,மிளகு,அஜினமோட்டோ சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி 2 நிமிடம் கொதிக்கவிட்டு, துளசி இலைகளை தூவிப் பரிமாறவும்

 

 

சைனீஸ் சாப்ஸீ

921387_487020118153314_68132675641181808
தேவையானவை:
பேபி கார்ன் - 50 கிராம்
மஷ்ரூம் - 50 கிராம்
முட்டை கோஸ் - 50 கிராம்
காரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
ஸ்பிரிங் ஆனியன் - 10 கிராம்
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகு - காரத்திற்கேற்ப ஏற்ப
அஜினமோட்டோ - சுவைக்கு ஏற்ப
சோளமாவு - தேவையான அளவு / 50 கிராம்
நூடுல்ஸ் - 200 கிராம்
தண்ணீர் - அரை லிட்டர்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:காய்கறிகள்,பூண்டு,ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளவும்.மஷ்ரூமை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.நூடுல்ஸை எண்ணெய்யில் டீப் ஃப்ரை செய்து தனியாக வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு,காய்கறிகள்,மற்றும் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு.மிளகுத்தூள்,அஜினமோட்டோ,சேர்த்து நன்கு கலக்கவும்.அத்துடன் சோள மாவை பஜ்ஜி மாவு பததிற்கு சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி ஃப்ரை செய்த நூடுல்ஸின் மீது ஊற்றிப் பரிமாறவும் .

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now