நவீனன்

சமையல் செய்முறைகள் சில

Recommended Posts

பனீர் மஞ்சூரியன்

தேவையானவை:
 பனீர் - 200 கிராம்
 மரவள்ளிக் கிழங்கு மாவு -
2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 நெய் - 2  டேபிள்ஸ்பூன்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 குடமிளகாய் - ஒன்று
 இஞ்சி - அரை அங்குலம்
 பூண்டு - 10 பல்
 தக்காளி சாஸ் - சிறிதளவு
 பச்சைமிளகாய் - 3

p109j.jpg

செய்முறை:
வெங்காயம், குடமிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீருடன் மரவள்ளிக் கிழங்கு மாவு, உப்பு, மிளகுத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு தோசைக் கல்லில் சிறிது நெய் விட்டு, இதில் ஊற வைத்த பனீர் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். வறுத்த பனீரை சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பேலியோ பனீர் மஞ்சூரியன் தயார்.

குறிப்பு:
பனீருக்கு தேவையான அளவு உப்பை முதலிலேயே சேர்த்து உள்ளதால் காய்களுக்கு தேவையான உப்பு மட்டும் சேர்க்கவும்.

Share this post


Link to post
Share on other sites

ராகி சேவை-வெஜ் சாலட்

13322167_527089554146370_469957093613605

 

தேவையானவை:
ராகி சேவை - ஒரு பாக்கெட்
நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் - ஒரு கப்
புராக்கோலி - 10 பூக்கள்
வெள்ளரித் துண்டுகள் - கால் கப்
வேக வைத்த முளைக்கட்டிய பயறு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு, சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 4 டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:
ராகி சேவையை சுடுநீரீல் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை வைத்திருந்து எடுத்து விடவும். நீரை வடித்து விட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தனியே வைக்கவும். புரோக்கோலி பூக்களைப் பிரித்து உப்பு நீரில் போட்டு எடுக்கவும். காய்கறிகளை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிய பாட்டிலில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு, சீரகத்தூள், எண்ணெய் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ளவும். இனி பெரிய பாத்திரத்தில் காய்கறிகள், பயறு, புதினா மற்றும் எலுமிச்சைச் சாறு, கலவையை ஊற்றிக் குலுக்கவும். 10 நிமிடம் கழித்து சாப்பிடவும். விருப்பப்பட்டால், மிக்ஸ்டு ஹெர்பஸ் சேர்க்கலாம். டயட்டில் இருப்பவர்கள், மதிய உணவுக்கு இப்படி செய்து சாப்பிடலாம்.

Share this post


Link to post
Share on other sites

சிக்கன் ரோல்

 

13319722_527072787481380_185706450954965


மைதா மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - முக்கால் கப்
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஆப்பத்துக்கு மாவு பக்குவத்துக்கு ஒன்றாக கலக்கி வைக்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி லேசாக எண்ணெய் தெளித்து உள்ளே மாவை ஊற்றி, மெல்லிய ஆப்பங்களாக வேக வைத்து எடுக்கவும்.

ரோலின் உள்ளே வைக்கும் பூரணத்துக்கு:
கோழி கைமா - 250 கிராம்
பீன்ஸ் - 6
முட்டைகோஸ் - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
குடமிளகாய் - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது -
ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:
காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கழுவிய கோழி கைமாவுடன் மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக அவித்துக் கொள்ளவும். பிறகு வெளியே எடுத்து வாணலியில் சேர்த்து ஈரம் போக நன்கு வதக்கி எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், பச்சைமிளகாய் சேர்த்து, காய்கறிகள் அரைவேக்காடு வேகும் வரை வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

ரோல் செய்ய தேவையானவை:
முட்டையின் வெள்ளைக் கரு - 2
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
பிரெட் கிரம்ப்ஸ் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
மைதா பேஸ்ட் - சிறிதளவு

செய்முறை:
வேக வைத்து எடுத்த ஒரு ஆப்பத்தின் உள்ளே கோழி பூரணத்தை நீள வடிவில் வைக்கவும். இனி ஆப்பத்தின் வலது, இடது ஓரங்களை உள்நோக்கி மடிக்கவும். பிறகு ஆப்பத்தின் மேல் பகுதியை உள் நோக்கி மடக்கி, இறுதி ஓரங்களை மைதா பேஸ்ட் தொட்டு ஒட்டி விடவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு, மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்துக் கலக்கி வைக்கவும். இதில் தயார் செய்த சிக்கன் ரோல்களை முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். இனி, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சிக்கன் ரோல்களைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Share this post


Link to post
Share on other sites
வாழைப்பூ பொரியல்: செய்முறைகளுடன்...!

 

valaipoooo.jpg

தேவையானப் பொருட்கள் 

 • வாழைப்பூ - கால் கிலோ (மொட்டில் இருந்தே எடுத்துக்கலாம்)
 • சின்ன வெங்காயம்-10
 • காய்ந்த மிளகாய்-2
 • கடலைபருப்பு-ஒரு தேக்கரண்டி
 • தேங்காய் பூ-கொஞ்சம்
 • உப்பு
 • தாளிக்க :
 • எண்ணெய் -ஒரு தேக்கரண்டி
 • கடுகு
 • கருவேப்பிலை

செய்முறை :

 • வாழைப்பூ ,கடலை பருப்பு இரண்டையும் உப்பு சேர்த்து வேக             வைக்கவும்..
   
 • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,காய்ந்த மிளகாய் தாளிக்கவும்..
 • அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்..
 • வதங்கியதும் வேகவைத்த வாழைப்பூவை இதில் சேர்த்து கிளறிவிடவும்...
 • கடைசியில் தேங்காய் பூ சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்..
 • சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

வாழைப்பூ பிரியாணி

தேவையானவை:
 வாழைப்பூ - ஒன்று (சிறியது)
 சீரகசம்பா அரிசி - அரை கிலோ
 பட்டை - 5 (சிறியது)
 கிராம்பு - 5
 ஏலக்காய் - 2
 பிரிஞ்சி இலை - ஒன்று
 நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
 நீளமாக நறுக்கிய தக்காளி - 3
 கீறிய பச்சைமிளகாய் - 3
 இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)
 கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
 ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு -  தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 புதினா இலை - 5 டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
 நெய் - 4 டீஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி
 தயிர் - 3 டீஸ்பூன்
 உப்பு -  தேவையான அளவு

அரைக்கத் தேவையானவை:
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 முந்திரி - 7
 கசகசா - ஒன்றரை டீஸ்பூன்
 சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 புதினா - 2 டீஸ்பூன்

p9d.jpg

செய்முறை :
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சீரகசம்பா அரிசியை ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த பேஸ்ட், தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி, வாழைப்பூ சேர்த்து வதக்கவும். இத்துடன் அரிசி சேர்த்து ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும். இடையில் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறி, எலுமிச்சைச் சாறு, ஊற்றி குக்கருக்கான மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Share this post


Link to post
Share on other sites
மெது அடை : செய்முறைகளுடன்...!

 

June 02, 2016

adaiiiii.jpg


தேவையானப் பொருட்கள் 

 • பச்சரிசி - அரை கப்
 • புழுங்கலரிசி (இட்லி அரிசி) - அரை கப்
 • துவரம் பருப்பு - கால் கப்
 • கடலைப்பருப்பு - கால் கப்
 • உளுத்தம் பருப்பு - கால் கப்
 • பெரிய வெங்காயம் - 2
 • இஞ்சி - ஒரு பெரிய துண்டு
 • பூண்டு - 4 (அ) 6
 • தேங்காய் - ஒரு மூடி
 • சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் - 15
 • உப்பு - ஒரு மேசைக்கரண்டி
 • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
 • தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு


செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

அரிசி வகைகளைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். (பருப்பு வகைகளை ஹாட் பாக்ஸில் ஊற வைத்தால் நன்றாக ஊறிவிடும்).

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிதளவு தேங்காயைப் பொடியாக (பல் பல்லாக) நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காயைத் துருவி வைக்கவும்.

அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஊறியதும் நன்றாகக் களைந்துவிட்டு அரிசியைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். (பருப்பை மிகவும் மசிய (நைசாக) அரைக்க வேண்டாம்). சிவப்பு மிளகாயுடன் உப்பு, தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.

அத்துடன் சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் பருப்பு மாவு, மிளகாய் விழுது சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

அதனுடன் துருவிய தேங்காய், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். (உப்பு, உறைப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பும், சிவப்பு மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொள்ளலாம்). மீதமிருக்கும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக் கல்லை நன்றாகக் காயவிட்டு, கலந்து வைத்துள்ள அடை மாவை எடுத்து ஊற்றவும். அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, சிறு பற்களாக நறுக்கி வைத்துள்ள தேங்காயைத் தூவி, இரண்டு பக்கமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான அடை தயார். தொட்டுக் கொள்ள அவியல், சர்க்கரை, மிளகாய்ப் பொடி போன்றவை பொருத்தமாக இருக்கும். விரும்பினால் சூடான அடையின் மீது சிறிது வெண்ணெய் அல்லது சீஸ் தடவி பரிமாறலாம்.

Share this post


Link to post
Share on other sites

வெஜிடபிள் ஓட்ஸ் சூப்

13413791_530627233792602_121398688403711

தேவையானவை:
பால் - 2 கப்
பொடியாக நறுக்கிய
காய்கறிக்கலவை - 1/2 கப்
(காராமணி, கேரட், பீன்ஸ்,காலி ஃப்ளவர், பட்டாணி, அவரைக்காய்)
வறுத்த ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கியப் பூண்டை சேர்த்து சிறிதளவு வதக்கிக் கொள்ளவும். பிறகு, காய்கறிக்கலவையைச் சேர்த்து உப்பு போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் பாலைச் சேர்க்கவும். பிறகு ஓட்ஸ், மிளகுத்தூள் சேர்த்து மிதமான தீயில்
2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அன்றைய நாளை புத்துணர்வுடனும் நிறைவாகவும் வைத்திருக்க உதவும்.

Share this post


Link to post
Share on other sites

பேபி பொட்டேட்டோ ஃப்ரை

13450027_531861413669184_138333555336736
தேவையானவை:
பேபி பொட்டேட்டோ - 5
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - தே.அளவு
செய்முறை:
உருளைகிழங்கை கழுவி அப்படியே முழுதாக எழுத்து ஒரு பவுலில் தேவையானவற்றில் உள்ள அனைத்தையும் சேர்த்து கலந்து மைக்ரோவேவ் அவனில் ஹை பவர் மோடில் நனகு நிமிடங்கள் வைத்து மூடி வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Share this post


Link to post
Share on other sites

கேரட் சட்னி

13494854_532246676963991_212711419386886


தேவையானவை:
கேரட் - 1 அல்லது ஒன்றில் பாதி
தேங்காய் - அரை கப் அல்லது சின்ன வெங்காயம்
தக்காளி - 2 அல்லது புளி சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப கூட்டி கொள்ளவும்)
கடலைப்பருப்பு, கடுகு - தாளிக்க தலா 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - சிறிது
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
செய்முறை:
கேரட் சட்னியை பொறுத்தவரை லேசாக இனிக்கும் என்பதால் பச்சை மிளகாயை சற்று கூடுதலாக வைத்து அரைத்து கொள்ளலாம். உங்களுக்கு காரம் பிடிக்காது என்றால் குறைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயடஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து கேரட்டை சேர்த்து வதக்கவும். பிறகு சின்ன வெங்காயம், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி நன்கு வதக்கவும். கேரட்டை துருவி சேர்த்தால் எளிதாக வதக்க வரும்.
பிறகு ஆறியதும் மிக்ஸியில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து பரிமாறவும்.
பச்சை மிளகாய் சேர்ப்பதால் இஞ்சியின் அளவை பார்த்து சேர்க்கவும். இரண்டும் சேரும் போது அதிகமாக காரமாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

 


 
 • NUTS-RICE.jpg

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கிண்ணம், வறுத்த வேர்க்கடலை, கடலைப் பருப்பு - தலா 50 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, உலர்ந்த திராட்சை - 20, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் ரிச்சாக உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
சிக்கன் மக்ரோனி : செய்முறைகளுடன்...!

 

macaroni.jpg

தேவையான பொருட்கள் : 
 

 • மக்ரோனி- 150 கிராம்
 • எழும்பில்லாத சிக்கன் -1/2 கிலோ
 • வெங்காயம்- 2
 • தக்காளி-1
 • கறிவேப்பிலை-1 கொத்து
 • பச்சைமிளகாய்-2
 • இஞ்சி,பூடு விழுது-3 ஸ்பூன்
 • தயிர்- 2 மேசை கரண்டி
 • மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
 • மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
 • சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
 • பட்டை,ஏலக்காய்,கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 ஸ்பூன்
 • பட்டை-1 சிறு துண்டு
 • கிராம்பு-2
 • ஏலக்காய்-3
 • அன்னாசி பூ-2
 • பிரிஞ்சி-1
 • சிக்கன் மசாலா தூள்- 1 ஸ்பூன்
 • தனியா தூள்- 1/2 ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • எண்ணெய்- 3 மேசை கரண்டி
 • நெய்- 4 ஸ்பூன்

செய்முறை: 
 

 • மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும்.
 • வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.
 • பின்னர் மிளகாய்,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 • பின் அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.
 • அதில் தக்காளி பின்னர் எல்லாத்தூள்களையும், தயிர் சேர்த்து வதக்கவும்.
 • எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.
 • சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்...!

fry.jpg

தேவையான பொருட்கள் : 

 • இறால் - அரை கிலோ
 • பூண்டு - 8 பல்
 • பச்சை மிளகாய் - 6
 • மிளகு தூள் - 2 தேக்கரண்டி
 • வெங்காயம் - 100 கிராம்
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 

 • வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 • பூண்டு சேர்த்து வாசம் அடங்கும் வரை வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 • பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.

Share this post


Link to post
Share on other sites
மீன் பிரியாணி

 

fish.jpg

மீன் பிரியாணி சமைக்க எளிதானதாக இருப்பதுடன் சுவையும்  அதிகமாக இருக்கும்


தேவையான பொருட்கள்
மீன் - 1/4 கிலோ

அரிசி - 2 சுண்டு

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 150 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி்

புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

மசள்தூள் - 1/4தேக்கரண்டி

 தயிர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி


செய்முறை :
* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.


* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
 அடுத்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்.


* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை சேர்த்து உடையாமல் வதக்கவும்.பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.


* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.


* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

 

Share this post


Link to post
Share on other sites

வெஜிடபிள் சாலட்

 


 

தேவையானபொருட்கள்

1. வெள்ளரிக்காய் - 1/2 கிலோ

2. கேரட் பெரியது  - 1

3. தக்காளி பெரியது - 2

4. பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது – தேவையான அளவு

5. எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு

6. வறுத்து தோலுரித்த நிலக்கடலை - 2 கப்

7. உப்பு - தேவைக்கேற்ப

8. மிளகுதூள் - தேவையானஅளவு

9. கொத்தமல்லித ்தழை - தேவையானஅளவு

10. பட்டாணி - தேவையான அளவு

(மக்காச்சோளம் கொண்டு தயார் செய்த மிக்சர் பொட்டலம் சிறிதளவு).

 

fresh-vegetable-salad-recipe.jpg  

 

செய்முறை

வெள்ளரிக்காயையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

கேரட்டை சீவல் கொண்டு மெல்லியதாக சீவிக்கொள்ளவும்

நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரி, தக்காளி கேரட், பச்சைமிளகாய் மற்றும் வறுத்த நிலக்கடலை ஆகியவற்றை பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கிளரவும்.

தேவைக்கேற்ற அளவு உப்பு, மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மறுபடியும் கிளரவும்.

பாத்திரத்தில் கிளரி வைத்திருப்பதை அள்ளி காற்று புகாத பாத்திரத்தில் (டப்பர்வேர்) போட்டு அதன் மீது சிறிதளவு மிக்சர் மற்றும் கொத்து மல்லிதழையை தூவி அழுத்தி மூடி வைக்கவும்.

அரைமணி நேரம் கழித்து எடுத்து உண்ணவும்.

பயன்கள்

உடல் எடை குறைப்பவர்களுக்கு நல்லது. குறிப்பாக தொப்பையைக் குறைக்க உதவும். பார்வைக் கோளாறுகள் நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. உடல் சூடு தனியும். வயிற்றுப் பிரச்சனை, மலச்சிக்கல் நீங்கும். வெயில் காலத்திற்கு சிறந்ததாகும்

Share this post


Link to post
Share on other sites

இறைச்சி மிருதுவாக வேக வேண்டுமானால் சிறிது நேரம் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் ஊற வைத்து பிறகு வேக அல்லது பொரித்தெடுங்கள். பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

13495210_534518930070099_558077426991441

13458630_533296363525689_225834044966362

Share this post


Link to post
Share on other sites
மீன் சூப் : செய்முறைகளுடன்...!

 

fishsoupppp.jpg


தேவையான பொருட்கள் : 

 • வஞ்சிர மீன் - 4 துண்டுகள்
 • பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது)
 • மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்
 • மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை: 
 

 • வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், மிளகாய்தூள் மற்றும் 5அல்லது 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் ஹை பவரில் 8 - 10 நிமிடங்கள் வைக்கவும்.
 • இரண்டு நிமிடம் ஸ்டாண்டிங் டைம் விட்டு இறக்கவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.
 • விரும்பினால் சிறிதளவு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Share this post


Link to post
Share on other sites
முட்டை மிளகு மசாலா : செய்முறைகளுடன்...!

 

EggMasala.jpg

முட்டை  மிளகு மசாலா

தேவையானவை:

 • வேகவைத்த முட்டை-12
 • நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
 • தக்காளி-3
 • பூண்டு-  6 முதல் 7 (நறுக்கப்பட்டது)
 • மிளகு-2டீஸ்பூன்
 • உப்பு-தேவையான அளவு
 • பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
 • இஞ்சி- சிறிதளவு
 • தக்காளி சோஸ்-1/4 கப்

செய்முறை:
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.

பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி,  தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து  கிளறவும்.

கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும்.

முட்டையில் கிரேவி  படும்படி கிளறவும்.

சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி!

Share this post


Link to post
Share on other sites

p24b.jpg

சால்மன் ஃபிஷ் ஃபிரை

தேவையானவை:

  மீன் - 8 துண்டு

 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - முக்கால் டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மீனைக்கழுவி சுத்தம் செய்து மிருதுவான காட்டன் துணியால் மீன் மீது தண்ணீர் இல்லாமல் துடைத்து விடவும். ஒரு பவுலில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு ஊற்றி பேஸ்ட் போன்று கலக்கவும். இந்த பேஸ்ட்டை மீனின் இருபுறமுமும் தடவி ஒரு மணிநேரம் ஊறவிடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், ஊறவைத்த மீனைச் சேர்த்து இருபுறமும் வேகவைத்து நிறம் மாறியதும் எடுக்கவும். அதனை டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். (அதிகப்படியான எண்ணெய் இருந்தால், உறிஞ்சு எடுத்துவிடும்.)

Edited by நவீனன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நவீனன் said:

சால்மன் ஃபிஷ் ஃபிரை

தேவையானவை:

  மீன் - 8 துண்டு

 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - முக்கால் டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மீனைக்கழுவி சுத்தம் செய்து மிருதுவான காட்டன் துணியால் மீன் மீது தண்ணீர் இல்லாமல் துடைத்து விடவும்.

இப்ப மிகுதி நம்ம செய்முறை.

அப்படியே இஞ்சி, உள்ளி, வெங்காயம், கருவேப்பிலையை சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இவற்றுடன் ஒரு பவுலில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு ஊற்றி பேஸ்ட் போன்று கலக்கவும்.

நான் எலும்பிச்சை சாறு விடுவதில்லை - பதிலாக லெமன் தோலை ஸ்க்ரேபரில் உராய்ந்து சிறு துகள்களாக்கி கலவையுடன் கலந்து விடுவேன்.

இதனுள் மீனை போட்டு நன்றாக கலந்து ஒவ்வொரு  துண்டாக அவற்றுடன் ஒட்டிய துகள்களுடன் கவனமாக எடுத்து அலுமினிய பேப்பரில் சுற்றி 1 மணிநேரம் குளிரூட்டியில் வைக்கவும். 

பின்னர் எடுத்து 45 நிமிடம் 200 பாகை செல்ஷியஸில் அவனினுள் நடுவில் வைத்து எடுக்கவும்.

அவித்த உருளை கிழங்கு + குக்கும்பர் சலாட் + மீன் சாஸுடன் பரிமாறவும்.

Edited by ஜீவன் சிவா

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.