Jump to content

யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம்.
அன்பர்களே! பக்த அடியார்களே! இன்றிலிருந்து யாழ்களத்திலும் சைவ ஆலயம் திறக்கப்படுகின்றது.
 

ga-pi_zps5fc7563e.gif

 

 

மேலதிக விபரங்கள் பின்னர் அறித்தரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுயற்சி! கள உறவுகள் ஆன்மீகத்தில் நாட்டம்கொள்வது வரவேற்கத் தக்கது!

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம்.

யாழ்களத்தில் முருகன் கோவில்தான் வேண்டும் பிள்ளையார் வேண்டாமெண்டு நாலுபேர் கிளம்ப போறாங்கள் - கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண்
கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் சித்தி விநாயகருக்கும் இடையில்.. ஒரு பிரச்சனை போய்க்கிட்டு இருக்குது. ஆளை கனநாளா தேடிக்கிட்டு இருக்கிறம். ஒன்னுமில்ல எல்லாம் பிகர் மாட்டர் தான்.

யாழ் நல்லூர் அன்னசத்திர லேன் சித்தி விநாயகர் கோவில் தான் எங்கட சாமி கும்பிடுற இடம் ஒரு காலத்தில. அன்னசத்திர லேன் ஒரு காலத்தில் அழகான பிகருகளுக்கு பெயர் போன இடம். உந்த சித்தி விநாயகர் எங்களுக்கு முயற்சியில் சித்தி அளிப்பார் என்று பார்த்தால்... அந்தாள்.. பெயில் பண்ணிப்போட்டுது. "என்னைப் போல நீயும் இருக்கக் கடவ" என்று சபிச்சும் விட்டுது. அதுக்கு பரிகாரம் தேடி..பல காலமா ஆளைத் தேடுக்கிட்டு இருந்தம்.. இப்ப யாழில வந்து வசமா மாட்டிக்கிட்டார்..! tw_blush:

Link to comment
Share on other sites

வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

Bilderesultat for மோதகம்

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது. 



கரும்பு:  கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும்  இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

 Bilderesultat for பொரி  

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

http://aanmeegam.our24x7i.com/TAMIL_NOOLGAL/AANMEEGAM/AANMEEGAM/GANESHA_WORSHIP_../364/1.jws

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மாலைப்பூசை ஆறு மணி
பூசை முடிந்ததும் பொங்கல் மற்றும் சுண்டல் வழங்கப்படும்tw_blush:
உபயம் வாத்தியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  நடக்குது இங்க...

 

பிள்ளையாரில தான் எல்லாம் தொடங்கிறது

முடிக்கிறது.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை 
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இங்கே ஒரு ஆஸ்ரமத்தை திறந்து விட வேண்டியது  தான் :unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பிள்ளையார் உருவான கதை

 

கைபிகோ 302

 
விவரங்கள்
எழுத்தாளர்: எஸ்.இலட்சுமணப்பெருமாள்
தாய்ப் பிரிவு: செம்மலர்
பிரிவு: நவம்பர்09
 வெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2009

 

அழிக்கும் கடவுளான சிவபெருமான் பொது தர்மத்திற்குத்தான் தன்னோட அழிவு சக்தியை பயன்படுத்தலாமே தவிர சொந்த காரண காரியங்களுக்கு பயன்படுத்தினால் அது கொலை வழக்ககாத்தான் கருதப்படும்ங்கிறது கைலேங்கிரி பீனல்கோடிலுள்ள ஷரத்து.

அப்படியொரு கொலை வழக்கு விஷயமா கைலேங்கிரி ஹைகோர்ட் போயிட்டு அலுப்பா மலைக்கு வந்து சேர்ந்த புருசனை பார்வதியம்மா எதிர்கொண்டு என்னங்க. என்னாச்சுன்னு கேட்ட மட்டுல அவர் கையிலிருந்த திரிசூலத்தை வாங்கி மூலையில சாத்தி வச்சு கழுத்தில கிடந்த பாம்பை எடுத்து அசையில தொங்கவிட்டு ஆசுவாசப்படுத்துனா.

"உஸ்.... சும்மாயிரு. பையன்க காதுல விழுகப்போகுது அப்படீன்னார்." மூத்தவன் இல்லே இளையவன் முருகந்தான் இருக்கான் சும்மா சொல்லுங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே முருகன் விறுவிறுன்னு பக்கத்திலே வந்து "என்னப்பா ஆச்சு வாய்தா. அப்படி. என்ன கேசு ஒம்மேலே' அப்படீன்னான்.

சரி பய பெரிய பிள்ளையாயிட்டான். என்னைக்கிருந்தாலும் தெரியத்தான் போகுது. நானே சொல்லிர்றேன் அப்படீன்னு ஆரம்பிச்சா பார்வதி.

"அது வந்துப்பா முருகா! முன்னாடி ஒருநா நான் குளிக்கணும்னு கொல்லைப்பக்கமா போனேன். அந்நேரம் உங்கப்பா வெளியே போயிட்டாரு. குளிக்கும் போது காவலுக்கு யாருமில்லேயேன்னு ரோசனை பண்ணுனேன்."

"காவலுக்கா அதுசரி கைலேங்கிரியிலேயே எட்டிப் பாத்துர்றானா பொம்பளை குளிக்கிறதை,அதுவும் பரமசிவர் பெண்ஜாதி குளிக்கிறதை. உலகம் விளங்கிப்போகும். சரி பிறகு?"

"பிறகென்ன உடம்புல இருக்கிற அழுக்கை திரட்டி ஒரு உருவம் செஞ்சேன்."

"க்கும் அதென்ன அவ்வளவு அழுக்கு, இங்கே உனக்கு என்ன வேலை. என்னம்மா கரிசக் காட்டுல களையெடுக்கிற பொம்பளை மாதிரி. வெடி ஆபீஸிலெ தீப்பெட்டி கம்பெனியில வேலை செய்திட்டு குளிக்கிறதுக்கே தீரலைங்கிற மாதிரி அலைஞ்சிருக்கே! அப்பவும் அழுக்கு ஒரு உருவம். செய்யுற அளவுக்கா? பாம்பு சட்டை உரிச்ச மாதிரி."

"சொல்றதை கேளுப்பா"

"இல்லே இல்லே அதுதான் உனக்கு சக்தின்னு இங்கே. எவனோ உங்கிட்டே புளுகி இருக்கான். குளிச்சா பலம் போயிரும்ன்னு பயமுறுத்திருப்பான்".

"சும்மாயிரு அம்மாவை கேலிபண்ண இதுவா நேரம். கொறக்கதையை கேளு. அப்படி அந்த உருவத்தை வாசலுக்கு வெளியே காவல் வச்சிட்டு உள்ளே குளிக்கப்போனேன்."

"யாரை? அந்த அழுக்குருண்டையை காவல் வச்சிட்டு!"

"ஆமாமா உள்ளே குளிச்சிட்டு இருந்தனா..."

இப்பொ பரமசிவனாகிய சிவபெருமாள் கதையை தொடங்குனார்.

"அப்பொ நான் லாத்தலா வெளியே போயிட்டு உள்ளே நொழஞ்சேன். திடீர்ன்னு கைய ரெண்டையும் விரிச்சி மறிச்சி உள்ளே போகக் கூடாது. அப்படீன்னு குறுக்கே நின்னான்".

"யாரு? அந்த அழுக்குருண்டையா!"

"ஆமா... டேய் நீ யார்ரா அதச்சொல்ல நா யார்ன்னு தெரியுமா அப்படீன்னு நாக்கை துருத்தி முறுக்கிக்கிட்டு போடா போன்னுட்டு ஒரு எட்டு எடுத்து வச்சேன்".

"நீ யாரா இருந்தா எனகென்ன போயா அந்தப் பக்கம் எங்க அம்மா குளிச்சிட்டு இருக்குங்கிறேன். அப்படீன்னு என்ன நெட்டி தள்ளிவிட்டான். அவ்வளதான் எனக்குக் கோபம் அண்டகடாரம் முட்டிப்போச்சி. இடுப்பிலிருந்த வாளை எடுத்து தலையை ஒரே சீவு!"

முருகன் அப்பனைப் பார்த்து இகழ்ச்சியா கையை நீட்டி நீயெல்லாம்  ஒரு மனுசன்ங்கிற மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு சொன்னான்.

"இங்கெ பாருப்பா ஒரு பொம்பளை குளிச்சிட்டு வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆயிரும். அதுவரைக்கு பொறுக்கலையா. ஒரு படுகொலையை பண்ணிட்டு போற அளவுக்கு அங்கே என்ன இருக்கு. இல்லே இதுக்கு முன்னாடி பாராததை பாக்கப்போறியா".

சிவபெருமாள் தலைய கவிழ்ந்த மட்டுல இருந்தார். அன்றைக்கிருந்த சோகம் போலவே இப்பொ இருந்து கொண்டு பார்வதி தொடர்ந்து சொன்னாள்.

"வெளியே வந்து பாக்குறேன். எம்பிள்ளை தலைவேற முண்டம் வேறயா கிடக்கான். அடப்பாவி மனுசா நீ விளங்குவியா துலங்குவியான்னு அழுதேன். நான் அழுகிறதை பார்க்கப் பொறாத இந்த மனுசன் சரி சரி நடந்தது நடந்து போச்சி. இதுக்கு வேற ஏற்பாடு பண்ணுதேம்முன்னு அந்தப் பக்கமா ஒரு யானை போயிட்டு இருந்தது. அதோட தலையை வெட்டி இந்த உடம்புல பொருத்தி உங்க அண்ணன் பிள்ளையார் பொறந்தான்."

"நல்ல வேளை அந்த நேரம் யானை தட்டுப்பட்டது. நாய்நரி வராம. இந்த லட்சணத்துல என்னைப் பாத்து நீ அம்மா வயித்துலயா பெறந்தே அப்படீன்னு கேக்கான். நான் அப்பா நெத்திக்கண்ணுல பொறந்ததை தெரிஞ்சுக்கிட்டு இவன் பிறவிக் கூறு தெரியாம. மடையன். எனக்கு முன்னாடியே சந்தேகம். இவன் எப்படி அம்மா வயித்துல பிறந்திருக்க முடியும். அப்படியே பிறந்திருந்தாலும் என்ன லட்சணத்திலே பால் குடிச்சிருப்பான்."

"சரி சரி அண்ணன்கிட்டெ அது இதெச்சொல்லி பழையபடி சண்டையைப் போடாதீங்க. விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்".

"அது கிடக்கட்டும் இப்பொ கோர்ட்டுல ஒம்மேல கொலைக்கேஸ்தானே நடக்கு".

"ரெட்டைக்கொலை. வாட்ச்மேனை கொன்னேன்னு ஒரு கேஸ். யானையை கொன்னேன்னு வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி ஒரு கேஸ்."

"அதான் ஒரு உசிரை உண்டாக்கி விட்டாச்சுல்லே. பிள்ளையாருங்கிற பேர்ல!"

"கொன்னது வாஸ்தவமா இல்லையா. ஆமா இல்லை ரெண்டுல ஒரு பதில் சொல்லுங்கிறான். சர்க்கார் வக்கீல். உற்பத்தி பண்ணுறது உன் வேலை இல்லைனுட்டான்."

"அடுத்த வாய்தா எப்பவாம்?".

"இன்னும் ஜட்ஜ்மெண்ட்தான். கலியுகத்திலே."

"அதென்ன வருசம் மாசம் கணக்கு இல்லாம யுகக்கணக்கு."

அடேய் இந்த மனுசர்களுக்கு நூறு வருசம்ன்னா நமக்கு ஒரு மணி நேரம்தான் கணக்கு. மனுசப்பதர்களுக்கு உண்டான கால அளவு நம்ம மாதிரி தேவாதி தேவர்களுக்கு கிடையாது. அதாவது இப்படிச் சொல்றேன் தெரிஞ்சுக்கோ.

"பிரம்மாவுடைய பேரன் ராவணன். பிரம்மா ஒருநாள் காலையில 'வெளிக்கி' கிளம்பிப் போனாராம். அப்பொ இடையில ஒரு ஆள் வந்து உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் அப்படீன்டிருக்கார். சந்தோசம் சந்தோசம்ன்னு சிரிச்சுக்கிட்டே போயிட்டாராம்.

திரும்ப வந்து கால் கழுவ செம்புல தண்ணி மொண்டாராம். உங்க பேரன் ராவணன் செத்துப்போனான்னு தகவல் வந்திருக்குன்னு சரஸ்வதி வந்து சொன்னாளாம். தெரியும் தெரியும் இந்தா தலையில தண்ணி விடப்போறேன்னாராம்.

அதாவது பிரம்மா வெளியே இருந்துட்டு வந்து கால்கழுவும் முன்னால ராமன் - ராவணன் பிறந்து வளர்ந்து வனவாசமாகி ராம-ராவண யுத்தம் முடிஞ்சு போச்சாம். எல்லாம் கதைதானே. ஏற்கெனவே பிரம்மாவோட நாலாவது மண்டையப் பிச்சு எடுத்திட்டேன்ன ஒரு கேஸ்பெண்டிங்ல இருக்கு. இப்போ தேவர்களுக்கு ஆயுள்காலம் எவ்வளவு?

- எஸ்.இலட்சுமணப்பெருமாள்

 

http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/09-sp-260606644/1622--302

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலை ஞானம்,

கற்கும் சரக்கன்று காண்!

 

- திருவருட் பயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஆரம்பித்தையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன்.

மதங்கள் சிரித்து நையாண்டி பண்ணி மகிழ்வதற்கல்ல. இந்த திரியை சிரிப்போம் பகுதிக்கு நகர்த்தி நிர்வாகி ஒருவர் என்மீதிருக்கும் வக்கிர புத்தியை காட்டியுள்ளார்.

பலமுறை இது சம்பந்தமாக கேட்டும் இதுவரை பதிலில்லை.தயவு செய்து இந்த திரியை நீக்கிவிடவும்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இந்த திரியை ஆரம்பித்தையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன்.

மதங்கள் சிரித்து நையாண்டி பண்ணி மகிழ்வதற்கல்ல. இந்த திரியை சிரிப்போம் பகுதிக்கு நகர்த்தி நிர்வாகி ஒருவர் என்மீதிருக்கும் வக்கிர புத்தியை காட்டியுள்ளார்.

பலமுறை இது சம்பந்தமாக கேட்டும் இதுவரை பதிலில்லை.தயவு செய்து இந்த திரியை நீக்கிவிடவும்.

அண்ணை இதற்கு நானும் காரணமாக இருப்பதால் முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

உங்கள் பதிவுகள் எப்போதுமே நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் இருப்பதால் நானும் இத்திரி சிரிப்பதற்கென்றே நினைத்துவிட்டேன். அதனால்தான் "பிள்ளையார பிறந்த கதை"  பதிவை இணைத்தேன்.
 

மறுபடியும் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

அண்ணை இதற்கு நானும் காரணமாக இருப்பதால் முதலில் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

உங்கள் பதிவுகள் எப்போதுமே நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் இருப்பதால் நானும் இத்திரி சிரிப்பதற்கென்றே நினைத்துவிட்டேன். அதனால்தான் "பிள்ளையார பிறந்த கதை"  பதிவை இணைத்தேன்.
 

மறுபடியும் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

அட போங்க ஜீவன்! சிரிப்போம் பகுதியில்  நான் இணைத்திருந்தால் உங்களை விடவும் மேலே கருத்திட்டவர்களை விடவும் இன்னும் கலாய்த்திருப்பேன்.

நான் இணைத்தது வேறொரு பகுதியில்......அதை நிர்வாகம் இங்கே நகர்த்தியிருக்கின்றது. காரணம் கேட்டேன் இதுவரை பதிலில்லை.நான் நினைத்தது வேறு. நடந்தது வேறு. இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for hundi

ஆரோஹரா, ஆரோஹரா

அப்பனே பிள்ளையார், அப்பா...

உனக்கு உண்டியலில காசு போடுற ஆக்களுக்கு, கேட்டதை எல்லாம் கொடப்பா..

எல்லாரும் நல்லா உண்டியலுக்க போடுங்கோ. எவ்வளவு போடலாம் எண்டது உங்களைப் பொறுத்தது. யோசித்து வையுங்கோ.

நாளைக்கு paypal இணைக்கப் படும் (பகிடிகில்ல, உண்மையாகவே தான்). பிள்ளையாரோட பகிடி விடக்கூடாது.

ஆரோஹரா, ஆரோஹரா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.