Jump to content

உடைகிறது மதிமுக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடைகிறது மதிமுக http://thatstamil.oneindia.in/news/2006/12/20/mdmk.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் விஜயகாந்கூட கூட்டணி வைப்பதே வை.கோ விற்கு நல்லம் என்று தோன்றுகிறது...

***********************************************'

News:

உடைகிறது மதிமுக: எல்ஜிசெஞ்சி போர்க்கொடி!

டிசம்பர் 20, 2006

டெல்லி: மக்களின் நம்பிக்கையையும் தொண்டர்களின் நம்பிக்கையையும் வைகோ இழந்து விட்டார் என்று மதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களான எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் திடீரென குற்றம் சாட்டியுள்ளனர்.

இருவரும் மதிமுகவிலிருந்து விரைவில் விலகி திமுகவில் ஐக்கியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வைகோ நடை பயணத்தில் இருக்கும் நிலையில் இந்த இரு மூத்த தலைவர்களும் அவருக்கு எதிராக கொடி பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியபோது, அந்தக் கட்சியை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேருதவி புரிந்தவர் அவைத் தலைவரான எல்.கணேசன் தான். சசிகலாவின் உறவினரான எல்.ஜி மூலம் தான் வைகோவை இழுத்து அதிமுக கூட்டணியில் இணைத்தார் ஜெயலலிதா.

எந்தக் கட்சியால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடம் சிறைவாசம் அனுபவித்தாரோ, அந்தக் கட்சிக்காக சூறாவளிப் பிரசாரம் செய்தார் வைகோ. அரசியல் நோக்கர்களிடையே வைகோவின் இந்த அணி மாற்றம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதிலும், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பேசினார் வைகோ.

வைகோவின் விலகலால் அதிமுக அணிக்கு பெரிய அளவில் பலன் கிடைக்காவிட்டாலும் கூட திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு தங்களது விலகலே காரணம் என கூறி வந்தது மதிமுக.

இந் நிலையில் மதிமுகவில் தற்போது பெரிய விரிசல் ஏற்பட்டு கட்சி உடையக் கூடிய அபாயம் எழுந்துள்ளது. அவைத் தலைவர் எல்.கணேசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வைகோவை கடுமையாக விமர்சித்துப் பேட்டி கொடுத்துள்ளனர்.

தற்போது டெல்லி சென்றுள்ள எல்.கணேசன் அங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அடிக்கடி அரசியலில் அணி மாறுவது என்பது நம்பகத் தன்மையை பாதித்து விடக் கூடிய செயலாகும். இப்போது வைகோவும் நம்பகத் தன்மையை இழந்து விட்டார்.

நான் இப்படிச் சொல்வதால் அணி மாறப் போகிறேன் என்று அர்த்தம் இல்லை. இப்போது வரை நான் மதிமுகவில்தான் இருக்கிறேன். ஆனால் நாளை நடக்கப் போவதை யார் அறிவார் என்று சூசகமாக பேசியுள்ளார். மதிமுகவில்தான் இருக்கிறேன், அணி மாறவில்லை என்று எல்.ஜி. கூறினாலும் அவர் அணி மாற முடிவு செய்து விட்டார் என்றே பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் எல்.ஜி. சந்தித்துப் பேசினார். தனது அணி மாற்றம் குறித்து அவர் விவாதித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் நிவாரண உதவி தொடர்பாக சில மனுக்களை அளிக்க வந்ததாகவே எல்.ஜி. கூறியுள்ளார்.

எல்.ஜி. அணி மாறப் போகிறார், திமுகவில் சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க இன்னொரு முக்கிய காரணம், மக்களவையில் 27 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எல்.ஜி.பேசுகையில், முதல்வர் கருணாநிதியை சகட்டுமேனிக்குப் புகழ்ந்து பேசினார்.

மத்திய அரசுக்கு மறைமுகமாக பல வகையிலும் நெருக்கடி தந்து இட ஒதுக்கீட்டை அமலாக்கச் செய்தவர் கருணாநிதி தான் என்றும் அவர் கூறினார். வெளியில் தெரியாமல் காய் நகர்த்தி இட ஒதுக்கீட்டை கிடைக்கச் செய்த கருணாநிதியை பிற்பட்ட மக்கள் மறக்க மாட்டார்கள் என்றார்.

எல்.ஜி மக்களவையில் பேசிய பேச்சின் முழு உரையும் திமுகவின் நாளிதழான முரசொலியில் அப்படியே இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் எல்.ஜி. திமுகவுக்குத் தாவத் தயாராகி விட்டார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எல்.ஜி.பேட்டி கொடுத்த சில நிமிடங்களிலேயே முன்னாள் அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரனும் வைகோவை விமர்சித்துப் பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் இந்த நிமிடம் வரை மதிமுகவில்தான் இருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

எல்.ஜி.யாரின் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. வைகோவுக்கு எதிரான எங்களது விமர்சனம் ஆக்கப்பூர்வமான ஒன்றுதான். எல்.ஜியாரை கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, ஸ்ரீரங்கம் பெரியார் சிலை ஆகிய பிரச்சினைகளில் அதிமுகவின் கொள்கையிலிருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன். அதிமுக தலைவரின் கருத்தை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டியது இலங்கைத் தமிழர்கள்தான். ஒரு நாடு இணைவதும், பிரிவதும் சாதாரணமான விஷயம். தனி நாடு கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ளது.

அதேபோல பெரியாரை நாத்திகவாதி என்று பார்ப்பதை விட சீர்திருத்தவாதி என்றுதான் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோவில் முன்பு சிலை வைக்க முடிவு செய்ததில் எந்தத் தவறும் இல்லை. இதை எதிர்ப்பதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் கருத்து எனக்கு உடன்பாடானது அல்ல என்றார் செஞ்சியார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மதுரையில் வைகோ தனது நடைப்பயணத்தை மேற்கொண்டபோது எல்.ஜி.யும், செஞ்சியாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே இவர்கள் இருவரும் அணி மாற முடிவு செய்து விட்டார்கள் என்ற பேச்சு எழுந்து விட்டது.

தற்போது இருவரும் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது தாவல் உறுதியாகி விட்டதாக கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தற்போது மதிமுகவுக்கு நான்கு எம்.பிக்கள் உள்ளனர். எல்.ஜி, செஞ்சியார் தவிர பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர். இந்த இருவரும் வைகோவின் தீவிர விசுவாசிகள் என கருதப்படுவதால் அவர்கள் வெளியேறும் வாய்ப்பு இல்லை.

இதேபோல சட்டசபை மதிமுக கட்சியிலும் பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை மதிமுக தலைவர் கண்ணப்பனுக்கும், வைகோவுக்கும் இடையே சமீப காலமாக பூசல் அதிகரித்து வருகிறது. வைகோ மீது கடும் அதிருப்தியில் கண்ணப்பன் உள்ளார்.

எனவே கண்ணப்பன் தலைமையில் ஓரிரு எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் சாயக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிமுக மீதும் வைகோ மீதும் தலைவர்களும் தொண்டர்களும் நம்பிக்கை இழந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் காரணம், கட்சியை அதிமுகவிடம் அடகு வைத்துவிட்டார் வைகோ என்பது.

ஜெயலலிதாவை அதிமுக மாவட்டச் செயலாளர்களை விட அதிகமாக புகழ்ந்து வருவதை வைகோவின் தொண்டர்களே ரசிக்கவில்லை.

அடுத்த காரணம் விஜய்காந்தின் அசுர வளர்ச்சி. கட்சியை ஆரம்பித்தவுடன் மதிமுகவையும் தாண்டி அதிக வாக்குகள் பெற்று வைகோவை பின்னுக்கு தள்ளிவிட்டார் விஜய்காந்த்.

மேலும் இதுவரை வைகோவுக்கு முழு ஆதரவாக இருந்த தெலுங்கு பேசும் இன மக்களின் வாக்குகளும் விஜய்காந்த் வளைத்துவிட்டார். இதனால் மதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.

இந்த காரணங்களால் தான் இனியும் மதிமுகவில் நீடித்து பயனில்லை என மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் எல்.ஜி., செஞ்சியார், கண்ணப்பன் உள்ளிட்ட பழைய பிரமுகர்களை மீண்டும் வரவேற்க திமுக தரப்பும் தயாராக உள்ளதாக அக்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் தவிர சில மாவட்ட செயலாளர்களும் மதிமுகவிலிருந்து விலகக் கூடும் எனத் தெரிகிறது.

விரைவில் அனைவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மாலை போட்டு வாழ்த்துக்களைப் பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதிமுகவிலிருந்து முக்கிய தலைகள் வெளியேற முடிவு செய்திருப்பது திமுக தரப்பில் பெரும் உற்சாக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் தன்னை விட்டு விலகக் கூடும் என்று வைகோவும் எதிர்பார்த்துத் தான் வந்தார். மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உருக்கமாக பேசி வந்தார்.

வைகோ தற்போது நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ தனது ஆண்டிப்பட்டி பொதுக் கூட்டத்தில் எல்.ஜி, செஞ்சி ராமச்சந்திரனுக்கு பதிலளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவிலிருந்து வைகோ விலகி மதிமுகவை ஆரம்பித்தபோது அவருக்கு தோளோடு தோளாக நின்றவர் எல்.கணேசன். பல மாவட்ட திமுக செயலாளர்களை மதிமுகவுக்கு இழுத்து வந்தவர்களில் அவரும் முக்கியமானவர். வைகோவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த எல்.ஜியே கட்சியை விட்டு விலகப் போவது அரசியல் வட்டாரங்களில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

மேலும், மதிமுக தோன்றியதிலிருந்து இதுவரை எந்தவிதப் பிளவும் இல்லாமல் கட்சியை படு கட்டுக் கோப்பாக கொண்டு சென்று கொண்டிருந்தார் வைகோ. தற்போது முதல் முறையாக பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை வைகோ எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஏற்கனவே திருமாவளவனை திமுக கூட்டணி அதிமுக கூட்டணியிலிருந்து கவர்ந்தது. பின்னர் மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் திமுகவுக்கு ஆதரவாக மாறினார். தற்போது மதிமுகவே உடையும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

வைகோ வேண்டுமானால் பதவி வேண்டாமென்று சொல்லலாம். ஆனால் அவருடன் இருப்பவர்கள் அப்படியா? எத்தனை நாளுக்குத்தான் வயிற்றில் ஈரத்துணி போட்டுக்கொண்டிருப்பார்கள். வைகோ தமிழக அரசியலில் சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சினேகி கூறியதுபோல் விஜயகாந்துடன் கூட்டணி வைப்பது நல்லது. அம்மாவுடன் கூட்டணியெல்லாம் மிகவும் சந்தர்ப்பவாதமாகத் தெரிகிறது. அரசியலில் எல்லோரும் அப்படியே. ஆனால் வைகோவுக்கு ஆரம்பத்திலிருந்த மரியாதை அவரின் நேர்மையின்பால் மக்களுக்கு இருந்த அபிமானத்தால் வந்தது. அவரின் செயற்கையான கூட்டணி மாற்றங்கள் ஒரு சலிப்பை ஏற்படுத்திவிட்டன.

:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவுக்கு எதிராக 2 ம.தி.மு.க. எம்.பி.க்கள் பேட்டி

புதுடெல்லி, டிச.20-: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக, அந்த கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

ம.தி.மு.க.வில் தற்போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகிய 4 எம்.பி.க்கள் உள்ளனர்.

ம.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் அவைத்தலைவருமான எல்.கணேசன், சமீபத்தில் பாராளுமன்றத்தில் பேசியபோது, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான கருணாநிதியை பாராட்டி பேசினார்.

இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த ‘என்.டி.டி.வி.’ டெலிவிஷன் சேனலுக்கு எல்.கணேசன் அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

‘வைகோ அடிக்கடி அரசியலில் அணி மாறுவதால் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.’ என்று, அவர் கூறி இருந்தார். இந்த பேட்டி, ம.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்.கணேசன் கூறிய அதே கருத்தைத்தான் நானும் கொண்டுள்ளேன். ஆனால் அதற்காக நாங்கள் கட்சியை விட்டு விலகி தி.மு.க.வில் சேர முடிவு எடுத்து விட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் ம.தி.மு.க.வில்தான் இருக்கிறோம். தி.மு.க.வில் சேருகிறோம் என்ற பேச்சுக்கு இடமில்லை.

வைகோவுக்கு எதிரான எங்கள் விமர்சனம் ஆக்கப்பூர்வமான ஒன்றுதான். எல்.கணேசனோடு சேர்ந்து ஆலோசித்து விட்டு எனது எதிர்கால நடவடிக்கைகளை அறிவிப்பேன். முல்லைப்பெரியார் அணை பிரச்சினை தொடர்பாக மதுரையில் இருந்து வைகோ பாத யாத்திரை தொடங்கிய நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொள்ளாததற்கு எந்தவித முக்கியத்துவம் வாய்ந்த காரணமும் இருக்கவில்லை.

எங்கள் கட்சியின் கொள்கை, கூட்டணிக் கொள்கையில் இருந்து வேறுபட்டது. ஒரு கூட்டணியில் தொடர வேண்டும் என்பதற்காக ஒரு கட்சியின் கொள்கைகளையும் நோக்கங்களையும் விட்டுக் கொடுக்கக்கூடாது.

இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் பெரியார் சிலை விவகாரங்களில் நான் அ.தி.மு.க. தலைவரின் நிலையில் இருந்து எனது தனிப்பட்ட முறையில் வேறுபடுகிறேன்.

இலங்கைப் பிரச்சினையில் அ.தி.மு.க.வின் நிலையை நான் கண்டிக்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு ஒரு தனி நாடு கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது. நாடுகள் ஒன்றாக இணைவதும் பிரிவதும் வழக்கமான ஒன்றுதான். இந்த வகையில் இலங்கை வாழ் தமிழர்கள் தனிநாடு கேட்பதில் எந்தவிதமான தவறும் இல்லை.

இதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கக் கூடாது என்று அ.தி.மு.க. தெரிவித்த கருத்தில் இருந்தும் நான் வேறுபடுகிறேன். பகுத்தறிவுவாதியான பெரியாரை ஒரு நாத்திகவாதி என்று எடுப்பதை விட ஒரு சீர்திருத்தவாதியாக அவரை பார்க்க வேண்டும். அந்த வகையில் ஒரு கோயிலுக்கு எதிரில் அவரது சிலையை வைப்பதில் எந்தவித தவறும் இல்லை.

இவ்வாறு செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருந்த வைகோவை அதிமுகவில் கொண்டு போய்ச் சேர்த்தது எல்.கணேசன் தான்.அப்படி இருக்க இப்ப மட்டும் ஏன் குத்துக்கரணம் போடுகிறார்கள்

சரியாகச்சொன்னீர்கள்...

முதுகில் குத்தியது இந்த சந்தர்ப்பவாத எல்ஜியும் செஞ்சியுமே...

முடியாது என்றிருந்த வைகோவை அதிமுகவுடன் கூட்டணிவைப்பித்து வைகோவை படுகுளியில் தள்ளியதல்லாமல் இப்போது மதிமுகவிற்கு மண்போட்டு மூடும்படலம் தொடங்கிற்று...

பேட்டியிலேயே எல்ஜி கூறி இருக்கின்றார் தான்கேட்ட பதவி வேண்டிக்கொடுக்கப்படாததால் தான் இந்த அதிதிருப்தி என்று...

*****************************************************

News:

முதுகில் குத்தி விட்டார் வைகோ: எல்.ஜி ஆவேசம்

டிசம்பர் 21, 2006

சென்னை: மத்திய அமைச்சர் பதவியைக் கேட்ட என்னை அதை வாங்கித் தராமல் விட்டதோடு, கட்சியினர் மத்தியில் என்னைக் குறித்து அவமரியாதையாக பேசி முதுகில் குத்தி விட்டார் வைகோ என்று வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

மதிமுகவில் முதல் முறையாக பெரிய அளவில் பூசல் வெடித்துள்ளது. வைகோவுக்கு எதிராக எல்.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலகுவார்களா அல்லது நீக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று எல்.கணேசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருமாறு தான் கேட்டும் அதை வாங்கித் தராமல் அவமதித்து விட்டார் வைகோ என்று கூறினார் கணேசன்.

கணேசன் கூறுகையில், நான் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஏதும் இல்லை. அது ஒரு பாவச் செயலும் இல்லை. இதுகுறித்து வைகோவிடம் கேட்டபோது, உங்களை மந்திரியாக்கி எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வேன் என்றார்.

ஆனால் என்னிடம் இப்படிப் பேசி விட்டு கட்சியின் பிற தலைவர்களிடம் போய், இவரை மந்திரி ஆக்கினால் கட்சியை ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விடுவார் என்று கூறியுள்ளார்.

எனது முதுகில் குத்தி விட்டார் வைகோ. யூ டூ புரூட்டஸ் என்று வைகோவை கேட்பதை விட வேறு வார்த்தை எனக்குத் தெரியவில்லை. இந்தக் கட்சிக்காக எத்தனை பழிச் சொற்களை, துயரங்களை, சுமைகளை நான் தாங்கியிருப்பேன்?

வைகோவுடன் இணைந்து மதிமுக ஆரம்பித்து கடந்த 13 ஆண்டுகளாக நான் இணைந்து பணியாற்றி வருகிறேன். என்னையும், பிற நிர்வாகிகளையும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் வைகோ ஆலோசனை கேட்பதில்லை.

திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி அமைத்தபோதும், பின்னர் திமுக மற்றும் அதிமுகவுடன் வெவ்வேறு தேர்தல்களில் கூட்டணி அமைத்தபோதும், வைகோவுடன் இணைந்து செயல்பட்டு வந்தேன்.

மாறி மாறிக் கூட்டணி வைத்ததால், எனது மனதில் பட்டதை டெல்லி தொலைக்காட்சி பேட்டியின்போது தெரிவித்தேன். இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பரபரப்புக்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது.

வைகோ மதிமுகவின் பொதுச் செயலாளர். எல்லோரையும் விட மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். அவரை மையமாக வைத்து நாங்கள் எல்லோரும் செயல்பட்டு வருகிறோம். ஆகவே வைகோ குறித்து நான் வெளியிட்ட கருத்துக்கள், அவருடன் மோதுவதாக அர்த்தம் இல்லை. தலைமைக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை.

கட்சியின் அனைத்து மட்டத்திலும் இப்போது குழப்பம் நிலவுகிறது. எனக்குள்ளும் அந்தக் குழப்பம் இருக்கிறது. வைகோவின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.

மதிமுக தனது இறுதிக் காலத்தை எட்டியுள்ளது. இந்த நிலைமை தொண்டர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வு என்னிடமும் இருப்பதில் என்ன தவறு?

இப்போது வரை நான் மதிமுகவில்தான் நீடிக்கிறேன். நாளை என்ன நடக்கும், நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. 40 ஆண்டு காலம் என்னுடன் பணியாற்றியவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.

வைகோவும், நானும் 1962ம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகிறோம். செஞ்சி ராமச்சந்திரன் என்னுடன் 1963ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறார். செஞ்சியாரைப் போல மேலும் பலர் 40 ஆண்டு காலமாக என்னுடன் பணியாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பேசி, ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிப்பேன்.

நான் இவ்வாறு பேசி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டார். ஒரு வேளை எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அதை ஜனநாயகப்பூர்வமாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் கணேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘‘ம.தி.மு.க.வில் சலசலப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. நான் முன்பே சொன்னது மாதிரி இரண்டு எம்.பி.க்கள் உள்ளிட்ட ஒரு பெரும்படை, தி.மு.க.வில் இணைய எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாம். இவர்களோடு கணிசமான பொதுக்குழு உறுப்பினர்களையும் திரட்டி வந்தால்தான் ம.தி.மு.க.வை கொஞ்சம் அசைத்துப்பார்க்கும் வேலைகளைச் செய்யலாம் என்று முடிவாகி, உரிய நபர்களுக்கு வலை வீசி வருகிறது ஒரு குரூப். வைகோவால் ரொம்பவே சீண்டப்பட்ட ஒரு தி.மு.க. வி.ஐ.பி.தான் இதற்காக கணக்கு வழக்கின்றி பணத்தை வாரியிறைக்கிறாராம்.’’

‘‘அப்படி என்ன அவசியமாம்?’’

‘‘ம.தி.மு.க.வை அடையாளம் தெரியாமல் செய்ய வேண்டும் என்ற சிங்கிள் பாய்ண்ட் புரோக்ராம்தான் காரணம் என்கிறார்கள். இதை வைகோவும் உணர்ந்துதான் இருக்கிறார். தன்னால் முடிந்தவரை ஊசலாட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, நடந்து வரும் சதிவேலைகள் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி, யோசிக்க வைக்கிறாராம்.’’

‘‘பலன் உண்டா?’’

‘‘அதையும் மீறி எது நடந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்ட வைகோ, ஏற்கெனவே திட்டமிட்டபடி முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்காக, 18_ம் தேதி மதுரையிலிருந்து கூடலூர் நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

‘‘ஜெயலலிதாகூட இதற்கு வாழ்த்துச் சொல்லியிருந்தாரே...?’’

‘‘ஆமாம்... அந்த வாழ்த்துக் கடிதத்தை நடைப்பயணம் தொடங்கும் முன்பாக, வைகோவிடம் தந்தார் ஓ. பன்னீர்செல்வம். ‘நீங்களே இதை மேடையில் வாசித்துவிடுங்களேன்’ என்று வைகோ சொல்ல... அப்படியே செய்தார் ஓ.பி.எஸ். நடைப்பயண நிகழ்ச்சியில் கணிசமான கூட்டம் கூடிவிட... உற்சாகமாகவே நடக்க ஆரம்பித்திருக்கிறார் வைகோ. அதேசமயம், எல்.ஜி., செஞ்சி ராமச்சந்திரன், மல்லை சத்யா ஆகியோர் நடைப்பயணத்திற்கு வருவார்கள் என்று காத்திருந்த வைகோ, அவர்கள் வராததில் உற்சாகமிழந்துதான் போனார். இருந்தாலும் எதையும் தாங்கும் இதயத்தோடுதான் புறப்பட்டிருக்கிறார்!’’

‘‘நம்பிக்கைதானே வாழ்க்கை!’’

By: Kumudam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம.தி.மு.க. தனது இறுதி கட்ட காலத்தை எட்டி உள்ளது:

ம.தி.மு.க. எம்.பி. எல்.கணேசன் பேட்டி

புதுடெல்லி, டிச.21-: ம.தி.மு.க. தனது இறுதி கட்ட காலத்தை எட்டி உள்ளது என்று, ம.தி.மு.க. எம்.பி. எல்.கணேசன் கூறினார்.

டெல்லியில் ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து, கடந்த 13 ஆண்டுகளாக, ம.தி.மு.க. தொடங்கியது முதல் பணியாற்றி வருகிறேன். ஆனால் என்னையும் மற்ற நிர்வாகிகளையும் முக்கிய முடிவு எடுக்கும் போது, கலந்து ஆலோசிக்கவில்லை. தி.மு.க.வில் இருந்த வைகோ, அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி அமைத்தபோதும், மீண்டும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன், வெவ்வேறு தேர்தல்களில் கூட்டணி அமைத்த போதும், வைகோவுடன் செயல்பட்டு வந்தேன்.

மாறி மாறி தேர்தல் கூட்டணி வைகோ மேற்கொண்டதால், டெல்லி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், என் மனதில் பட்ட சில கருத்துக்களை வெளியிட்டேன். அதன் விளைவாக இப்போது ஏற்பட்டுள்ள பரபரப்புக்கு நான் மட்டும் பொறுப்பு ஏற்க முடியாது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் என்பவர் எல்லோரையும் விட மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவரை வைத்து நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். ஆகவே வைகோ பற்றி நான் வெளியிட்ட கருத்தால், அவருடன் நான் மோதுவதாக அர்த்தம் அல்ல. தலைமைக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை.

நடைபெற்று வரும் சம்பவங்கள், ம.தி.மு.க.வுக்கு பாதகத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அது குறித்து கட்சியின் அனைத்து மட்டத்திலும் குழப்பம் நிலவுகிறது. எனக்குள்ளும் அந்த குழப்பம் நீடிக்கிறது.

வைகோவின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 3 சட்டசபை தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் படிப்படியாக ம.தி.மு.க.வின் செல்வாக்கு குறைந்து வருகிறது. இது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்து வருகிறது.

தற்போது ம.தி.மு.க. தனது இறுதி கட்ட காலத்தை எட்டி உள்ளது. இந்த நிலைமை கட்சித்தொண்டர்களின் மனதில் சங்கடத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற உணர்வு என்னிடத்திலும் இருப்பதில் என்ன தவறு?

இன்று வரை நான் ம.தி.மு.க.வில் தான் நீடிக்கிறேன். நாளை பற்றியோ அல்லது நாளை மறுநாள் பற்றியோ எனக்குத்தெரியாது. 40 ஆண்டு காலம் என்னுடன் இணைந்து அரசியலில் பணியாற்றியவர்களுடன் கலந்து ஆலோசித்து, இன்னும் ஓரிரு நாட்களில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வேன்.

செஞ்சி ராமச்சந்திரன் என்னுடன் 1963 முதல் இணைந்து அரசியலில் பணியாற்றி வருபவர்.அதைப்போல வைகோ என்னுடன் 1962 முதல் செயல் பட்டு வருகிறார்.

நான் மத்திய மந்திரி ஆக வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. மந்திரி ஆவது பாவத்துக்கு உரியதும் அல்ல. இது குறித்து வைகோவிடம் கேட்டபோது, ‘உங்களை மந்திரியாக்கி எனது நன்றிக்கடனை தீர்த்துக்கொள்வேன்’ என்று கூறினார்.

ஆனால் அவர், கட்சியின் மற்ற தலைவர்களிடம் ‘இவரை நான் மந்திரி ஆக்கினால், கட்சியை ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விடுவார்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

என்னுடன் செஞ்சிராமச்சந்திரன் மற்றும் பலர் 40 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிப்பேன்.

இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவர் அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்.

எனக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொண்டால், ஜனநாயக முறைப்படி அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு எல். கணேசன் கூறினார்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு உதவி செய்வார்கள் என்று நினைத்தால் இவர்களுக்குள்ளேயே அடிபடுகிறார்களே :lol:

Link to comment
Share on other sites

இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த ‘என்.டி.டி.வி.’ டெலிவிஷன் சேனலுக்கு எல்.கணேசன் அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

வைகோ அடிக்கடி அரசியலில் அணி மாறுவதால் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். என்று, அவர் கூறி இருந்தார். இந்த பேட்டி, ம.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பிடியா?

மதிப்புக்குரிய -எல்.கணேசன் அவர்கள் .............

வைகோவின் - நம்பகதன்மையை சுட்டிக்காட்டியதன் மூலம் ........

தன் - நம்பகதன்மையை -உறுதிப்படுத்த...

சாகும்வரை - ஒரே கட்சியில் இருந்து - இனி-நிரூபிப்பார் - என்று நம்பலாம்- நாங்க எல்லாம்! :lol:

Link to comment
Share on other sites

கட்சியை உடைக்க எல்ஜி தீவிரம்

டெல்லி சென்னை: மத்திய அமைச்சர் பதவியைக் கேட்ட என்னை அதை வாங்கித் தராமல் விட்டதோடு, கட்சியினர் மத்தியில் என்னைக் குறித்து அவமரியாதையாக பேசி முதுகில் குத்தி விட்டார் வைகோ என்று வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

மதிமுகவில் முதல் முறையாக பெரிய அளவில் பூசல் வெடித்துள்ளது. வைகோவுக்கு எதிராக எல்.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து விலகுவார்களா அல்லது நீக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று எல்.கணேசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருமாறு தான் கேட்டும் அதை வாங்கித் தராமல் அவமதித்து விட்டார் வைகோ என்று கூறினார் கணேசன்.

கணேசன் கூறுகையில், நான் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஏதும் இல்லை. அது ஒரு பாவச் செயலும் இல்லை. இதுகுறித்து வைகோவிடம் கேட்டபோது, உங்களை மந்திரியாக்கி எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வேன் என்றார்.

ஆனால் என்னிடம் இப்படிப் பேசி விட்டு கட்சியின் பிற தலைவர்களிடம் போய், இவரை மந்திரி ஆக்கினால் கட்சியை ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விடுவார் என்று கூறியுள்ளார்.

எனது முதுகில் குத்தி விட்டார் வைகோ. யூ டூ புரூட்டஸ் என்று வைகோவை கேட்பதை விட வேறு வார்த்தை எனக்குத் தெரியவில்லை. இந்தக் கட்சிக்காக எத்தனை பழிச் சொற்களை, துயரங்களை, சுமைகளை நான் தாங்கியிருப்பேன்?

வைகோவுடன் இணைந்து மதிமுக ஆரம்பித்து கடந்த 13 ஆண்டுகளாக நான் இணைந்து பணியாற்றி வருகிறேன். என்னையும், பிற நிர்வாகிகளையும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் வைகோ ஆலோசனை கேட்பதில்லை.

திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி அமைத்தபோதும், பின்னர் திமுக மற்றும் அதிமுகவுடன் வெவ்வேறு தேர்தல்களில் கூட்டணி அமைத்தபோதும், வைகோவுடன் இணைந்து செயல்பட்டு வந்தேன்.

மாறி மாறிக் கூட்டணி வைத்ததால், எனது மனதில் பட்டதை டெல்லி தொலைக்காட்சி பேட்டியின்போது தெரிவித்தேன். இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பரபரப்புக்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது.

வைகோ மதிமுகவின் பொதுச் செயலாளர். எல்லோரையும் விட மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். அவரை மையமாக வைத்து நாங்கள் எல்லோரும் செயல்பட்டு வருகிறோம். ஆகவே வைகோ குறித்து நான் வெளியிட்ட கருத்துக்கள், அவருடன் மோதுவதாக அர்த்தம் இல்லை. தலைமைக்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை.

கட்சியின் அனைத்து மட்டத்திலும் இப்போது குழப்பம் நிலவுகிறது. எனக்குள்ளும் அந்தக் குழப்பம் இருக்கிறது. வைகோவின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.

மதிமுக தனது இறுதிக் காலத்தை எட்டியுள்ளது. இந்த நிலைமை தொண்டர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வு என்னிடமும் இருப்பதில் என்ன தவறு?

இப்போது வரை நான் மதிமுகவில்தான் நீடிக்கிறேன். நாளை என்ன நடக்கும், நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது. 40 ஆண்டு காலம் என்னுடன் பணியாற்றியவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.

வைகோவும், நானும் 1962ம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வருகிறோம். செஞ்சி ராமச்சந்திரன் என்னுடன் 1963ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறார். செஞ்சியாரைப் போல மேலும் பலர் 40 ஆண்டு காலமாக என்னுடன் பணியாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பேசி, ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிப்பேன்.

நான் இவ்வாறு பேசி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டார். ஒரு வேளை எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அதை ஜனநாயகப்பூர்வமாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் கணேசன்.

நாளை முதல் ஆலோசனை:

இதற்கிடையே டெல்லி சென்றுள்ள எல்.கணேசன் இன்று மாலை சென்னை திரும்புகிறார். அதன் பின்னர் நாளை முதல் சென்னை, திருச்சி, தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதுகுறித்து எல்.கணேசன் கூறுகையில், இன்று மாலை நான் சென்னை வருகிறேன். வந்த பின்னர் நாளை காலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி முன்னோடிகளுடன் கலந்து பேசவுள்ளேன்.

இரவு சென்னையிலிருந்து கிளம்பி திருச்சி போகிறேன். மறு நாள் காலை பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட முன்னோடிகளுடன் கலந்து பேசுகிறேன். அன்று மாலை தஞ்சை போகிறேன். அங்கு தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் முன்னோடிகளுடன் கலந்து பேசவுள்ளேன்.

இந்த கலந்தாலோசனைக்குப் பிறகு சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம் என்றார் கணேசன்.

மதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடப்பதற்கு முன்பே எல்.கணேசன் தரப்பு தங்களது முடிவை அறிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோவுக்கு நோட்டீஸா?. மா.செக்கள் மறுப்பு:

இதற்கிடையே, கணக்கு காட்டக் கோரியும், பொதுக்குழுவைக் கூட்டக் கோரியும் வைகோவுக்கு நோட்டீஸ் எதையும் அனுப்பவில்லை என்று மதிமுகவின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கூறுகையில், வைகோவுக்கு மாவட்டச் செயலாளர்கள் யாரும் நோட்டீஸ் அனுப்பவில்லை. இது 100 சதவீதம் கற்பனையான தகவல்.

எனது வாழ்நாள் முடியும் வரை நான் வைகோவுடன்தான் இருப்பேன். எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும் விலை பேசப்பட்டு விட்டார்கள். எனவே அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்றார் கோபமாக.

வட சென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் இதுகுறித்துக் கூறுகையில், தற்போது நான் வைகோவுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். மொத்தம் உள்ள 35 மாவட்டச் செயலாளர்களில் 25 பேர் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர். வைகோவுக்கு ஒரு மாவட்ட செயலாளர் கூட நோட்டீஸ் அனுப்பவில்லை என்பதுதான் உண்மை என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், எல்.கணேசன் கருத்துக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தருகிறார்கள் என்றால் தஞ்சை மாவட்ட (இது எல்.ஜியின் சொந்த மாவட்டம்) செயலாளர் துரை பாலகிருஷ்ணனைக் கேட்டால் தெளிவாகி விடும். அவர் கூட எல்.கணேசனுக்கு ஆதரவாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.

35 மாவட்ட செயலாளர்களும் வைகோ பக்கம்தான் உள்ளனர். எந்த முடிவையும் வைகோ தனிப்பட்ட முறையில் எடுத்ததில்லை. கட்சியின் பொதுக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவுகள் எடுப்பார் வைகோ.

திமுக செல்ல வேண்டும் என்று எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும் முடிவு செய்து விட்டார்கள் என்றால் அதை தெளிவாக சொல்லி விட வேண்டும். திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் இருவரும் இப்படிப் பேசி வருகிறார்கள் என்றார் ஜீவன்.

http://thatstamil.oneindia.in/news/2006/12/21/mdmk.html

Link to comment
Share on other sites

அவசரமாய் பொதுக்குழுவை கூட்டுகிறார் வைகோ

சென்னை: வரும் 25ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூட்டியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்கவும், காக்கவும் வலியுறுத்தி மதுரையிலிருந்து கூடலூர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் வைகோ. இந் நிலையில் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந் நிலையில் மதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் விவகாரக் குழு, ஆட்சி மன்றக் குழு உள்ளிட்ட முக்கியக் குழுக்களின் கூட்டம் 25ம் தேதி சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெறும் என வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அதிருப்தி அவைத் தலைவர் எல்.கணேசன் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக ஆண்டிப்பட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,

நான் மேற்கொள்ளும் 5வது நடைப்பயணம் இது. மதிமுக ஆரம்பித்தபோது 52 நாட்களில் 1,600 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன். பின்னர் நதிகள் இணைப்பை வலியுறுத்தி 42 நாட்களில் 1,200 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன்.

காவிரி நதிப் பிரச்சினைக்காக காவிரிப் பூம்பட்டணத்திலிருந்து கல்லணை வரை 200 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன்.

பின்னர் ஸ்டெரிலைட் பிரச்சினைக்காக ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி வரை 100 கி.மீ தூரத்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டேன்.

இந்த நடைப்பயணம் மூலம் மக்களை நேரடியாக தேடிச் செல்கிறேன். மக்களை சந்திக்கவே இந்த நடைப்பயணம். முல்லைப் பெரியாறு நடைப்பயணத்திற்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு உற்சாக வரவேற்பை பொதுமக்கள் தருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்து (எல்.ஜி. விவகாரம்) தெரிந்து கொள்ள பத்திரிக்கையாளர்களும், மற்றவர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். நான் ஏதாவது பேசுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் நான் பேச மாட்டேன். அப்படிப் பேசினால் எனது நடைப் பயணத்தின் நோக்கம் திசை திரும்பி விடும். எனது நோக்கம் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணத்தை திட்டமிட்டபடி முடிப்பதுதான்.

எனது நோக்கத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் என்னை திசை திருப்ப முடியாது. எனது கவனத்தை வேறு பக்கம் திரும்பவும் விட மாட்டேன்.

இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை 6 நாள் கழித்துப் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆவேசமாக கூறினார் வைகோ.

ஆனால், அதற்குள் எல்.ஜி. தனது மாவட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து தன் பக்கம் இழுத்துவிடுவார் என்ற அச்சம் நிலவுவதால், தான் விதித்துக் கொண்ட 6 நாள் கெடுவை தானாகவே விலக்கிக் கொண்டுவிட்டார் வைகோ.

25ம் தேதி சென்னைக்கு வந்து பொதுக் குழுக் கூட்டத்தை நடத்திவிட முடிவு செய்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/12/21/vaiko.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான செய்தி. துன்பங்கள் வைகோவிற்குப் புதிதல்ல. அவரது அரசியல் வாழிவில் நிறையச் சந்தித்தவர். ஆனால் எச்சவாலையும் வெற்றி கொள்ள அவரால் முடியும் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

வைகோவை அம்பலப்படுத்துவேன்: எல்.ஜி.

சென்னை: 10 விதமான பிரச்சினைகளுக்கு கருணாநிதியிடம் 10 முறை என்னை தூது அனுப்பினார் வைகோ. தேவைப்பட்டால் அதை வெளியிட்டு வைகோவை அம்பலப்படுத்துவேன் என்று மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.

வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள எல்.கணேசனும், அவருடன் சேர்ந்து 'துணைக் கொடி' உயர்த்தியுள்ள செஞ்சி ராமச்சந்திரனும் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது எல்.ஜி கூறுகையில், இதுவரை மதிமுகவின் அத்தனை பொதுக் குழுக் கூட்டங்களுக்கும் நான்தான் தலைமை தாங்கியுள்ளேன். இப்போதும் நான் அவைத் தலைவராகத்தான் இருக்கிறேன்.

எனவே 25ம் தேதி கூட்டப்பட்டிருக்கும் கூட்டத்திற்கும் நான்தான் தலைமை தாங்குவேன். அத்துமீறி கூட்டத்திற்குள் நுழையும் பேச்சுக்கே இடமில்லை. நான் இன்னும் அவைத் தலைவர்தான். கட்சியின் சட்ட திட்டத்தின்படி அவைத் தலைவர்தான் கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டும்.

வைகோவை ஜெயலலிதா 19 மாதங்கள் சிறையில் வைத்திருந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட சுமார் 10 வகையான பிரச்னைக்காக என்னை சுமார் 10 தடவை கருணாநிதியிடம் தூது அனுப்பினார் வைகோ. அப்போது அவருக்கிருந்த பிரச்னையில் இருந்து அவரை காப்பாற்றியதே கருணாநிதி தான். ஆனால் அவரை சிறையில் அடைத்து வைத்திருந்த ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தார் வைகோ.

வைகோ பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும். ஆனால் அவரை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன். ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் உண்மைகள் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன் என்றார் எல்.ஜி.

செஞ்சி ராமச்சந்திரன் கூறுகையில், இன்று காலை 3 மாவட்ட செயலாளர்களுடன் விவாதித்துள்ளோம். இன்னும் சிலரை தொலைபேசியில் கலந்து பேசி வருகிறோம். இன்னும் 2 பேர் பேசுவதற்காக வந்து கொண்டுள்ளனர். அனைவருடனும் பேசி முடித்த பிறகு நல்ல முடிவாக எடுப்போம் என்றார்.

கருணாநிதியை சந்திக்கிறார் எல்.ஜி.

முன்னதாக டெல்லி சென்றிருந்த எல்.ஜி. நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது விரிவாக எதையும் கூற முடியாது. 40 ஆண்டு காலம் என்னுடன் பழகியவர்களையும், 13 ஆண்டு காலம் என்னுடன் மதிமுகவில் இணைந்து பழகியவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளேன்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு இன்று நல்ல முடிவாக எடுத்து அதை உங்களுக்குச் சொல்கிறோம். முதல்வர் கருணாநிதியையும் சந்திப்பேன். அதில் எந்தத் தயக்கமும் இல்லை. சந்தேகம் வேண்டாம் என்றார் கணேசன்.

கண்டன போஸ்டர்கள்திருச்சியில் அடிதடி:

இதற்கிடையே, எல்.ஜி.யை கடுமையாக கண்டித்து திருச்சி முழுவதும் மதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். வைகோ தனித்தன்மையை இழக்கவில்லை. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே (எல்.ஜி) கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்று அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்.கணேசனின் எம்.பி. அலுவலகம் உள்ள பகுதியிலும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இவற்றை கணேசன் அலுவலக ஊழியர்கள் கிழித்து எறிந்தனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் மலர் மன்னன் தலைமையில் நடந்தது. இதில் வைகோவின் கரத்தை பலப்படுத்த, எந்தவிதமான விருப்பு வெறுப்புகளுக்கும் ஆட்படாமல், முன்பை விட தீவிரமாக செயல்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பேசிய அனைவருமே எல்.கணேசனை கடுமையாக விமர்சித்துப் பேசினர். ஆனால் ஒரே ஒரு பகுதி செயலாளர் மட்டும் எல்.ஜி.க்கு ஆதரவாக பேச முயன்றார். இதையடுத்து கூட்டத்தினர் அவரை நோக்கிப் பாய்ந்து சரமாரியாக அடிக்க முயன்றனர்.

பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை விலக்கி அந்த பகுதி செயலாளரை அங்கிருந்து வெளியேறுமாறு 'அன்புடன்' கேட்டுக் கொண்டனர். இதனால் பெரிய ரசாபாசம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2006/12/22/mdmk.html

Link to comment
Share on other sites

நாங்கள் தான் உண்மையான மதிமுக: செஞ்

சென்னை: வைகோவின் பிடியிலிருந்து மதிமுகவை மீட்போம், நாங்கள்தான் உண்மையான மதிமுக என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் பாலிசங்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடந்த கூட்டத்தில் செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி கலந்து கொண்டு பேசியதாவது,

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் ஈழத்துக்காக தான் தான் குரல் கொடுப்பதாக சிலர் (வைகோ) பேசுகிறார்கள். செயலாளருக்கு (கட்சியின் பொதுச் செயலாளருக்கு) பேச்சு முக்கியமல்ல, செயல்பாடுதான் முக்கியம். பேச்சாளர்தான் பேச வேண்டும். கொள்கைகளுக்காகத்தான் இயக்கம் இருக்க வேண்டும். கொள்கையை விட்டு விட்டுச் சென்றால் இயக்கத்தை பழுது பார்ப்போம்.

அப்படி இல்லையென்றால் அதை தூக்கி எறிவோம். இயக்கத்தில் கொள்கை சார்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டார்ல நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

பிரபாகரனை கொண்டு வந்து தூக்கில் போடு என்று சட்டசபையில் தீர்மானம் போட்டார் ஜெயலலிதா. அதை நீ (வைகோ) செய்வாயா? ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை வைக்கக் கூடாது என்று அந்த அம்மையார் சொன்னார். அப்படி நீ சொல்வாயா?

இந்த நேரத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் மனதை நெகிழ வைக்கிறது. இதை நான் பாராட்டுக்காக சொல்லவில்லை. இலங்கையில் இருந்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்கள்.

எம்பிக்கள் கூறியதை முதல்வர் பரிவோடு கேட்டுக் கொண்டார். அப்போதே பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இலங்கை நிலவரங்களை முதல்வர் எடுத்துக் கூறினார். உடனே பிரதமரும் அவர்களை அனுப்புங்கள், சந்திக்கிறேன் என்று பதில் கூறினார்.

இப்போது பிரதமரை சந்திப்பதற்காக அந்த எம்பிக்கள் டெல்லி சென்றிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? தான் ஆடா விட்டாலும் தன் சதையாடும் என்பார்களே, அதைப் போல முதல்வர் தன்னுடைய கடமை செய்திருக்கிறார்.

நான் தான் எல்லாம் செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. அரசியிலில் எதிரும் புதிருமானவர்கள் கூட்டணி சேர்வது சகஜம். அதே சமயம், எந்த நிலையிலும் அவரவர் கொள்கையை விட்டு விலகக் கூடாது என்றார் ராமச்சந்திரன்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள்தான் உண்மையான மதிமுக கட்சியை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கப் போகிறோம். நாங்கள் கட்சியிலிருந்து விலகவில்லை, விலகவும் மாட்டோம். வருகிற 25ம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் கண்டிப்பாக நாங்களும் கலந்து கொள்கிறோம்.

19 மாதங்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற்காக சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இன்று வரை அதில் உறுதியாக இருக்கும் ஜெயலலிதாவோடு;

திராவிடர் இயக்க கொள்கைக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதாவோடு, வைகோ கூட்டு சேர்ந்தது மக்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பகத் தன்மையை இழக்க நேரிட்டு விட்டது. இதனால் வைகோவின் உழைப்பும், தியாகமும் கூட வீணாகிப் போய் விட்டது.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவேன் என்று வைகோ பேசி வருவது மக்கள் மத்தியில் கோபக் கனலை உருவாக்கியுள்ளது. ஆகவே இந்த முடிவில் இருந்து, வைகோவின் பிடிலிருந்து மதிமுகவை மீட்பதுதான் எங்கள் கடமை என்றார் செஞ்சி ராமச்சந்திரன்.

இதற்கிடையில் எல்.கணேசன் இன்று சென்னையில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசினார். இதே போல செஞ்சி ராமச்சந்திரனும், மதிமுக நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசினார். அப்போது சிலர் எல்.கணேசனின் புதிய முயற்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2006/12/22/gingee.html

Link to comment
Share on other sites

தனித்தன்மையை இழக்கும் எந்த அரசியல்வாதிக்கும் நேரும் கதி தான் வைகோவுக்கு இப்போது நேர்ந்திருக்கிறது. 93ல் மதிமுக ஆரம்பித்தபோது இருந்த நம்பிக்கை வைகோவுக்கு இன்றும் இருக்குமா என்பது சந்தேகமே...

எனினும் நடப்பவை எல்லாம் என்னை தனிப்பட்ட முறையில் வேதனைப் படுத்தவே செய்கிறது.... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடு கடு எல்.ஜி.&யின் ‘கலக’ குரல்

‘‘வைகோவுக்கு வயசாகிப் போச்சு!’’

பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு வைகோ தி.மு.க&விலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ம.தி.மு.க. உதயமாக காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் எல்.கணேசன். மற்றொருவர் செஞ்சி ராமச்சந்திரன். எல்.ஜி., கட்சியின் அவைத்தலைவர். செஞ்சி ராமச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர். இருவருமே தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்த இரட்டையர்கள் இப்போது வைகோவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எந்த நேரத்தி லும் ம.தி.மு.க. உடைந்துவிடும் என்ற சூழல் உருவாகியிருக் கிறது. டென்ஷனான இந்தத் தருணத்தில் டெல்லியில் எல்.கணேசனை சந்தித்தோம்.

p5abd4.jpg

‘‘அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கலிங்கப் பட்டியில் போய் உட்கார போகிறேன் என்ற வைகோவை நீங்களும் செஞ்சி ராமச்சந்திரனும்தானே சமாதானப் படுத்தி, ம.தி.மு.க&வை ஆரம்பிக்க அவருக்குத் தூண்டுகோலாக இருந்தீர்கள். இப்போது அவரை எதிர்த்தே..?’’

‘‘நாங்கள்தான் அரும்பாடுபட்டு அவரோடு சேர்ந்து கட்சியை உருவாக்கினோம். ஆனால், ஒரு கட்சித்தலைவர் என்ற முறையில் வைகோ பலமுறை தவறான முடிவுகளை எடுத்தார். ம.திமு.க-வுக்கும் அவருடைய இமேஜுக்கும் இப்போது களங்கம் ஏற்பட்டு விட்டது. இப்போது வரை நாங்கள் ம.தி.மு.க&வில்தான் இருக்கின்றோம். அடுத்து செல்லவேண்டிய பாதை குறித்து என்ன முடிவு எடுத்தாலும் தோழர்களைக் கலந்து பேசியே முடிவெடுப்போம். கடந்த பத்து வருடங்களாகக் கட்சியில் நடைபெற்றுவரும் சம்பவங்களுக்கு என்னைப் பொறுப்பாக்கி பழிசுமத்தப்படுகிறது.

1996-ல் நாங்கள் முதன்முதலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோது சி.பி.எம்., ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டோம். ஆனால், தோல்வியே கிடைத்தது. அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எட்டு நகராட்சிகளிலும், பல ஒன்றியங்களிலும் வெற்றி பெற்று உற்சாகம் பெற்றோம். 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டியிட்டுத் தோற்றோம். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி. மக்கள் ம.தி.மு.க-வை ஏற்கிறார்கள், வைகோ&வை அங்கீகரிக்கிறார்கள். ஆனால், கூட்டணியில்லாமல் போட்டியிடும்போதெல்லாம் அடிவாங்குகிறோம் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுத்தோம்.

2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோ எப்படி நடந்து கொண்டார்? அப்போது பி.ஜே.பி. தலைமையில் அகில இந்திய அளவில் உள்ள கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் தி.மு.க-தான் கூட்டணியின் தலைமை. தேர்தலில் பி.ஜே.பி-க்கு இணையான இடங்களைக் கலைஞர் நமக்கும் தந்தால், அதை ஏற்றுக்கொள்ளுவது என்று வைகோ&வை அனுப்பிவைத்தோம். பி.ஜே.பி&க்கு இருபத்தி மூன்றும், ம.தி.மு.க&வுக்குப் பதினெட்டு இடங்களையும் தி.மு.க. கொடுத்தது. பின்னர் போராடி பி.ஜே.பி-க்கு சமமாக இடங்களைப் பெற்றோம். பின்னர் தொகுதி ஒதுக்கீடுகளில் தி.மு.க&வுடன் பிரச்னை வந்தது. சங்கரன்கோவில், சென்னை, தஞ்சை ஆகிய மூன்று தொகுதிகளை நாங்கள் கேட்டோம். இறுதியில் தி.மு.க. சங்கரன்கோவிலையும் சென்னையில் ஒரு இடத்தையும் கொடுக்க முன்வந்தது. இதையட்டி, நாங்கள் வைகோ&விடம் கிட்டதட்ட நான்கு மணி நேரம் விவாதித்தோம். கூட்டணியில்தான் போட்டியிட வேண்டும் என்றும் சொன்னேன். ஆனால் வைகோ என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கி, ‘இந்த சோதனையில் என்னோடு இருங்கள். நாம் தனித்துப் போட்டியிடுவோம்’ என்றார்.

நாம் தனித்துப் போட்டியிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என்று வைகோவிடம் தெளிவாக சொன்னோம். அவர் கேட்கவில்லை. அந்தத் தேர்தலிலும் தோற்றோம். நான் சொன்னதுதான் நடந்தது. 2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் இதே குழப்பங்களைச் செய்தார். அத னால் நடந்த கூத்தை நாடே வேடிக்கை பார்த்தது. முதல்நாள், ‘கலைஞரை முதலமைச்சராக்காமல் விடமாட் டோம்’ என்று உறுதியளித்தவர், மறு நாள் அ.தி.மு.க-வுடன் கூட்டணியை முடிவு செய்தார். இப்படி கூட்டணி யைக் குழப்பி அவருடைய நம்பகத் தன்மையையும் இழந்தார்.’’

‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேராவிட்டால் நீங்கள் கட்சியை உடைக்கத் தயாராக இருந்ததால்தான் வைகோ அப்படியரு முடிவை எடுத்ததாகச் சொல்லப்பட்டதே?’’

‘‘இல்லை. இது முழுக்க முழுக்க வைகோ எடுத்த முடிவு. இது போல் அவர் எடுத்த பல முடிவு களுக்கு நான் பழிசுமக்க வேண்டியிருந் தது என்பதுதான் உண்மை. 1998-ல் அ.தி.மு.க&வுடன் ம.தி.மு.க. கூட்டணி சேரும்போது அதற்கான காரணகர்த்தா நான்தான் என்று சொல்லப்பட்டது. ஆனால், உண்மையான காரணகர்த்தா வைகோதான். அதேபோல் 2006-ல் கூட்டணி முடிவெடுத்ததும் அவர்தான். கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி என எல்லோரும் வற்புறுத்தினார்கள். இதனை ஏற்றுக்கொண்ட வைகோ, அ.தி.மு.க&வோடு பேச என்னை அனுப்பினார். நான் பேசினேன். கூட்டணி மாறுவது தமிழகத்தில் விந்தை இல்லை. ஆனால் அப்படி மாறும்போது, தனித்தன்மையையும் நம்பகத் தன்மையையும் இழந்து விடக் கூடாது. அப்படி இழந்து கட்சியை சீர்குலைத்துக் குழப்புவதில் வைகோவுக்கு இணை வைகோதான். வைகோவின் செல்வாக்கு மங்கிப் போய்விட்டது. அவர்மீதான நம்பகத்தன்மையும் போய் விட்டது. ஆங்கிலத்தில் சொல்லுவதைப்போல் அவருடைய ‘கரீஷ்மா’... ஈர்ப்பாற்றல் குறைந்து விட்டது.

மொத்தத்தில், வைகோவுக்கு வயதாகிவிட்டது. இனிமேல் அவரால் பழைய துடிப்போடு செயல்பட முடியாது. கட்சியையையும் வழிநடத்திச் செல்ல முடியாது. வயதாகிவிட்ட அவரால் எதையும் துணிந்து செய்ய முடியவில்லை. இதுதான் கட்சிக்குப் பின்னடைவைத் தந்திருக்கிறது. இனி யாரைக் காட்டி கட்சியை வளர்ப்பது? 1996, 2001-ம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் கள் முடிவுகளையும் 2006-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டால்... கட்சி படிப்படியாக வெற்றிகளை இழந்து வருவதோடு, கடைசியாக நடந்த தேர்தலில் கிடைத்த தோல்விக்கு எந்த விளக்கத்தையும் கட்சித் தலைமையால் தரமுடியவில்லை. இது மிகக் கடுமையான தோல்வி. வைகோவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து விட்டதுதான் இதற்கெல்லாம் காரணம். அதனால், கட்சியும் வீழ்ச்சி அடைந்துவிட்டது.’’

‘‘உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தராததால்தான் இப்படியெல்லாம் நடந்து கொள் வதாக சொல்லப்படுகிறதே?’’

‘‘நான் பதவிகளுக்கு ஆசைப்படாதவன் என்று சொல்ல மாட்டேன். பி.ஜே.பி. அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களைப் பெறச் சொன்னவன் நான்தான். தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதும் வைகோவிடம்தான் அமைச்சர் பதவி பற்றிக் கேட்டோம். அதற்கு வைகோ, ‘உங்களை அமைச்சராக்கி நன்றிக்கடனைத் தீர்த்துக்கொள்வேன்’ என்றார். ‘பிரதமரிடமும் சோனியாவிடமும் சொல்லிவிட் டேன்’ என்றார். ஆனால் அவர் எங்களை அமைச்சராக்க வில்லை. இதனால் வருத்தமும் இல்லை. ஆனால் வைகோ, என் முதுகில் குத்திய துரோகி என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்றைச் சொல்கின்றேன்... முதல் முறையாக அதுவும் ஜூ.வி. மூலம் இதைச் சொல்கிறேன். என்பால் மிகுந்த பாசமும் பரிவும் உடைய திருவாரூர் மாவட்டச் செயலாளர் பாரி. என்னிடமே கூறாமல் அவர் வைகோவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் எல்.ஜி&யை அமைச்சராக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு வைகோ பாரியிடம், ‘நான் ஏன் அண்ணனை மந்திரி ஆக்கவில்லை, தெரியுமா? மந்திரியாக்கினால் அவர் கட்சியை ஜெயலலிதாவிடம் அடகு வைத்துவிடுவார். அண்ணனுக்கு நெருக்கமான நடராஜன்தான் அமைச்சராக செயல்படுவார்’ என்று சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க&வுடன் வைகோ கூட்டணி வைத்த சமயத்தில் இதைச் சொல்லி, பாரி வேதனைப்பட்டார். வைகோவும் கட்சியும் எப்படி அழிந்தது என்று சொல்லிவிட்டேன். இதற்கு நான் காரணமா இல்லையா என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். மற்றபடி கட்சியை விட்டு நான் போகிறேனா? கட்சி உடையுமா? என்னை நீக்குவார்களா? அடுத்து நான் என்ன செய்வேன்? இதுபற்றியெல்லாம் இப்போதைக்கு சொல்லமுடியாது.’’

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

எல் ஜி க்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆனதில் இருந்தே ஆசை தான் ஒரு அமைச்சர் ஆக வேண்டும் என்பதில் அதேபோல் செஞ்சியாருக்கும் அமைச்சர் ஆகி பணம் சம்பாதிப்பதே ஒரே குறி...பட் இன்று போவதும் நாளை இணைவதும் தமிழக அரசியலை பொறுத்த வரை சகஜம் வைகோவை தி.மு.க வில் இருந்து வெளியே கொண்டு வந்தவர் தான் எல்.ஜி தி.மு.க வில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்பதற்காக.அதே போல 1990 களில் ஜெவை சந்தித:த தன்னுடைய மகனுக்காக மருத்துவம் படிக்க நஷசீட் ஒதுக்கி தரும்படியும் கெஞ்சி இருந்தார் ஆக இவர் தன்னுடைய பதவிக்காகவும் தன்னுடைய இலாபத்திற்காகவும் எதையும் செய்ய கூடிய ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த ‘என்.டி.டி.வி.’ டெலிவிஷன் சேனலுக்கு எல்.கணேசன் அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

வைகோ அடிக்கடி அரசியலில் அணி மாறுவதால் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். என்று, அவர் கூறி இருந்தார். இந்த பேட்டி, ம.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பிடியா?

மதிப்புக்குரிய -எல்.கணேசன் அவர்கள் .............

வைகோவின் - நம்பகதன்மையை சுட்டிக்காட்டியதன் மூலம் ........

தன் - நம்பகதன்மையை -உறுதிப்படுத்த...

சாகும்வரை - ஒரே கட்சியில் இருந்து - இனி-நிரூபிப்பார் - என்று நம்பலாம்- நாங்க எல்லாம்! :)

சரியாகச்சொன்னீர்கள். இந்தக்கேள்வியை ஒரு பத்திரிகையாளன் "அவர்கள் இருவரையும்" பார்த்து கேட்டிருக்கவேண்டிய கேள்வி... கேள்விக்கு பஞ்சமோ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.