Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200921-123938.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

அணிமலர்ச் சோலையில் பண்பாடும் பூங்குயில்
அடிக்கடி அழைக்கும் மோகினி நீயே
நினைவை கனவை நிறவான வில்போல்
புனைந்தனன் உனக்கெ சித்ரீகன் நானே
சித்ரீகன் நானே விசித்திரம் நீதானே......(ஆடும்)

பொன்னொளியாய் பூத்திடும்
மாலைத் தென்றலின் காற்றிலே
சிறு மல்லிகை அரும்பே தரும் பரிமளம் நீதானே
சிரிக்கும் சிங்காரமான கன்னித் தாரகை விண்ணின்மீதே
செந்தமிழ்தனில் பண்போடு சொல்லிடும்
உயிர்க்கவியே நானே..உணர்ச்சியும் நீதானே......!

---ஆடும் மயிலே நீ வா ---

Link to comment
Share on other sites

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20200921-123938.jpg

வலையில் பிடிபடும் பறவை சிறகடித்துத் துடிதுடிக்கும் தப்பிச்செல்ல. உவமானம் பொருந்தவில்லை தேசிகரே! மன்னிக்கவும்!!.

Link to comment
Share on other sites

 

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, sky, twilight, nature and outdoor, text that says 'இதெல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்று காத்திருந்தேன்... ஆனால்... எதுவுமே கடந்து போகாது எல்லாம் பழகிப்போகும் என்று உணர்த்திவிட்டது காலம்.'

 

 

120039610_3321192394630795_2486632848644217096_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=NgaK6vJfCeAAX-gqLMl&_nc_ht=scontent-frt3-1.xx&oh=ef690dae947cc2a908e844b5e122749d&oe=5F8FE6FA

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2020 at 03:08, nunavilan said:

 

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்

வணக்கம் வாத்தியார்........!

ஆசிரியர் நிழலி :   சுவி நீ ஏன்  அந்த அறைக்கு செல்லவில்லை........!

மாணவன் சுவி:  ஐயா, உங்களது சக ஆசிரியர் நுணாவிலான் இப்படி ஏதாவது "குண்டக்க மண்டக்க செய்வார் என்று தெரியும் ஐயா......!  😢

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை…....!
 
--- யாரோ இவன் யாரோ இவன்---
Link to comment
Share on other sites

 

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’
-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்...
”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.
”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.
”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.
”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.
”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.
செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோட்டம்.
ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை… அவரவர் கண்ணோட்டம்.
இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : வாள் ஏந்தி வந்தாலும்
வாழாம செத்தாலும்
கம்பீரம் கொறைஞ்சிடாத
நெருப்பு நீ

பெண் : அய்யோன்னு போனாலும்
ஆகாசம் போனாலும்
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்
வரப்பு நீ

பெண் : உழைக்க எண்ணுற ஆள
உதைச்சி தள்ளுற ஊர
கைய கால வெட்டி வீசும்
கருப்பு நீ
காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ......!

---எள்ளு வய பூக்கலையே----

 

Link to comment
Share on other sites

 

விரைவில் முதுமை தோற்றத்தை தரும் உணவுகள்!

• சர்க்கரை (இலங்கையில் இதன் பெயர் சீனி) சாப்பிட சுவையாகத் தான் இருக்கும். ஆனால் இதனை எவ்வளவுக்கு எவ்வளவு எடுத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது உங்களை வயதானவராக வெளிக்காட்டும். எனவே நீங்கள் இளமையுடன் நீண்ட நாட்கள் காணப்பட வேண்டுமானால், சர்க்கரை கலந்த உணவை அளவாக உட்கொள்ளுங்கள். முடிந்தால், சர்க்கரையை தவிர்த்திடுங்கள்.

30 வயதிற்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.• உப்பை அதிகம் சேர்த்து வந்தால், அதுவும் முதுமைத் தோற்றத்தை வேகப்படுத்தும். எனவே உணவில் உப்பை முடிந்த அளவில் குறைத்துக் கொள்ளுங்கள்.

• தாகத்தில் இருக்கும் போது தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் பலரோ தண்ணீருக்கு பதிலாக கார்போனேட்டட் சோடாக்களை வாங்கிக் குடிப்பார்கள். இப்படி சோடா பானங்களை அதிகம் குடித்து வந்தால், அதுவும் முதுமைத் தோற்றத்தைத் தரும்.

• விரைவு உணவுகளை எப்போதாவது சாப்பிட்டு வந்தால், எவ்வித ஆபத்தும் இல்லை. ஆனால் அது அளவுக்கு அதிகமானால், அதுவே பெரும் ஆபத்தையும், முதுமைத் தோற்றத்தையும் ஏற்படுத்தும்.

• காப்ஃபைன் நிறைந்த பானங்களை அளவாக குடித்து வந்தால், இளமையுடன் காணப்படலாம். ஆனால் அதுவே அதிகமானால், முதுமைத் தோற்றத்தைத் தான் பெற வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 கள்ளுர பார்க்கும்
பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும்
உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே

 முந்தானை மூடும்
ராணி செல்வாக்கிலே என்
காதல் கண்கள் போகும்
பல்லாக்கிலே தேனோடை
ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி.....!

---ராஜராஜசோழன் நான்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்.......!
--- யாரோ இவன் யாரோ இவன்---
Link to comment
Share on other sites

 

120102438_2310429332435973_2707553971263
 
 
அமெரிக்காவில்
மிகப்பெரிய பணக்காரர் அவர். தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க, ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார்.
பிரபலமான பூக்கடை அது.
எவ்வளவு விலை சார் இது ?
250 டாலர்
இதைவிட அருமையான 'பூ' காண்பிக்க முடியுமா?
வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது.
இது "ஆர்கிட்" வகைப் பூ... மிக அருமையா இருக்கும். ஒரு வாரம் வரை வாடாது"
500 டாலர்
சரி, இதையே 'பேக்' செய்யுங்க.
"உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா?
கொரியர் சர்வீஸ்சும், செய்கிறோம் அதற்கு ஒரு 100 டாலராகும்.
வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ் பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்.
ஒன்று செய்யுங்க. ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து இந்த பூங்கொத்தை இன்றே என் தாயிடம் இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க.
ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும். அதற்கும் சேர்த்து 500 டாலர்.
நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின், வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல், பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக.
ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள். குழந்தை ஏன் அழறே?
அங்கிள் !! எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ?
ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?
நோ அங்கிள் இன்று எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள்.
நான் வருடா வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்.
என்னிடம் பணம் இல்லை...... நீங்க ஒரு டாலர் கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன்.
அம்மா எனக்காக வெயிட்டிங்.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?
"பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ...
"வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி.
ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.
ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார்.
மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி பூ வை எடுத்தபடி ஓட .... அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார்.
சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்..
பல வளைவுகளை, தெருக்களை கடந்து, ஓடும் அவள்...... போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி.... முத்தமிட ,.... பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது .
"சார், மீட்டிங்கிற்கு, நேரமாச்சு..." டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை, வீட்டிற்கு போக சொன்னார்.
"பெரிய கார், தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த..... 92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது? என பார்க்க ....
"அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என
காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்......
உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே !!
அம்மா!! அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்.
உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்..... நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?... அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன்.
உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து, பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது? மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.
தாய், தந்தை இருப்பவர்கள், அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள். அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.
உங்களின், உங்கள் பண்பின், அன்பை நினைத்து, மகிழ்ந்து, ஒரு சொட்டு ஆனந்த கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும்.
எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம்
சந்தோஷத்தில், மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும்
ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்.
முக்கியமாக, பெற்றோருக்கு செய்த அபாவாதங்கள் நீங்கும்.
பெற்றோர் இல்லாதவர்கள் மானசீகமாக, நீங்கள் அவர்கள் இருக்கும்போது அவமானப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்கும் நாள்.
பெற்றோர் இருப்பவர்கள், நீங்கள் நேரில் சென்று நமஸ்கரித்து வாழ்த்து பெறவும்.
வெளிநாடுகளில் இருப்பவர்கள், தொலைபேசியில் நமஸ்கரித்து, ஆசியை வாங்கிவிடுங்கள்.
விட்டுவிடாதீர்கள்.
வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது

ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்.......!

--- கண்கள் நீயே காற்றும் நீயே ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201001-124806.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாத்தியார்.....!
 
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
 
தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்......!
 
---என்னவென்று சொல்வதம்மா---
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.