Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சித்திரமும் கை பழக்கம் 

செந்தமிழும் நா பழக்கம் 

வைத்ததொரு கல்வி அது மனப்பழக்கம் 

நித்தம் நடையும்  நடைப்பழக்கம் 

கொடையும்  தயையும்  பிறவிக்குணம்.....!

--- ஓளவையார் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கோடைகாலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் ஆடல்
விளையாடல் கூடல்..
வானம் தாலாட்டுபாட
மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு, துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு.......!

----காதல் வைபோகமே-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இன்பத்தையே பங்கு வைத்தால் 

புன்னகை சொல்வது நன்றி 

துன்பத்திலே துணை வந்தால் 

கண்ணீர் சொல்வது நன்றி 

வாழும்போது வருவோர்க்கெல்லாம் 

வார்த்தையாலே  நன்றி சொல்வோம் 

வார்த்தை இன்றி போகும்போது 

மௌனத்தாலே நன்றி சொல்வோம்......!

---நாலு பேருக்கு நன்றி----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள்  அரைக்கையில 

மஞ்சலை அரைக்குமுன்னே மனசை அரைச்சவளே 

கரிசக்காட்டு ஓடையில  கண்டாங்கி துவைக்கையில 

துணியை நனையவிட்டு மனசை பிழிஞ்சவளே 

நெல்லு கலத்து மேட்டு மேலே என்னை இழுத்து முடிஞ்சிட்டு போறவளே 

போனவை போனவதான்  புத்திகெட்டு போனவதான் 

புது கல்யாண சேலையில கண்ணீரை துடைச்சுக்கிட்டு போறவளே 

போனவ போனவதான் பெஞ்சாதியா போனவதான் 

நா தந்த மல்லிகையை நட்டாத்தில் போட்டு விட்டு 

அரளிப் பூச்சூடி  அழுதபடி போறவளே 

கடலைக்காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள 

காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல.....!

----ராசாத்தி என் உசுரு என்னுதுல்ல----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வேல்விழி போடும் தூண்டிலே 

நான் விழலானேன் தோளிலே 

நூலிடை தோயும் நோயிலே 

நான் வரம் கேட்கும் கோயிலே 

அன்னமே எந்தன் சொர்ணமே -- உந்தன்

எண்ணமே வானவில் வர்ணமே 

கண்ணமே மது கிண்ணமே - அதில் 

பொன்மணி வைரங்கள் மின்னுமே 

என்னையே தொல்லை பண்ணுமே 

பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே.......!

---இந்த மான் உந்தன் சொந்த மான்----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பழனப்  பாகல்  முயிறு  மூசுகுடம்பை 

கழனி  எருமை  கதிரொடு மயக்கும் 

பூக்கஞல்  ஊரன்  மகள்  இவள் 

நோய்க்கு  மருந்தாகிய  பணைத்தோளோளே ........!

 

பழனத்து பாகலில் உள்ள எறும்புகள் மொய்த்து உறையும் கூடுகளை கழனிகளில் மேயும் எருமைகள் நெற்கதிரோடு சேர்த்து சிதைக்கும் தன்மையில், பூக்கள் நிறைந்த மருதநிலத் தலைவன் மகளான இவள் யான் கொண்ட காமநோய்க்கு மருந்தாகி அதனைத் தீர்த்த பருத்த தோளையுடையவள்.....!

---ஐங்குறுநூறு ....99....---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆசைக்கு தாள் போட்டு அடைத்ததென்ன லாபம் 

அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம் 

மனதோடு திரை போட்டு  மறைக்கின்ற  மோகம் 

மழை நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம் 

சிலருக்கு சிலநேரம் துணிச்சல்கள் பிறக்காது 

துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது 

காட்டாத காதல் எல்லாம் மீட்டாத வீணையைப்போல் ......!

--- பூங்கொடிதான் பூத்ததம்மா-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!  

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் 

சாராய கங்கை காயாதடா 

ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் எல்லாம் 

காசுள்ள பக்கம் பாயாதுடா 

குடிச்சவன் போதையில் நிற்பான் 

குடும்பத்தை வீதியில் வைப்பான் 

தடுப்பது யார் என்று நீ கேளடா 

கள்ளுக்கடை காசிலே தாண்டா 

கட்சிக் கொடி  ஏறுது போடா 

மண்ணோடு போகாமல் 

நம் நாடு திருந்தச் செய்யோணும்.....!

---உன்னால் முடியும் தம்பி தம்பி----

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.