Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
 
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
 
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே

குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே.......!
 
---தென்றல் வந்து தீண்டும் போது---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : சொல்லத்தான்
நினைக்கிறேன் சொல்லாமல்
தவிக்கிறேன் காதல் சுகமானது

பெண் : வாசப்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும் தேடல்
சுகமானது அந்தி வெயில்
குழைத்து செய்த மருதாணி
போல வெட்கங்கள் வர
வைக்கிறாய்

பெண் : வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது காதல்
சுகமானது

பெண் : சின்ன பூவொன்று
பாறையை தாங்குமா
உன்னை சேராமல் என்
விழி தூங்குமா தனிமை
உயிரை வதைக்கின்றது

பெண் : கண்ணில் தீ வைத்து
போனது நியாயமா என்னை
சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது

பெண் : தூண்டிலினை தேடும்
ஒரு மீன் போலே ஆனேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும்
ரொம்ப ருசிக்கின்றது காதல் சுகமானது

பெண் : ஒரு ஆணுக்குள்
இத்தனை காந்தமா நீயும்
ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே

பெண் : ஒரு சந்தன பௌர்ணமி
ஓரத்தில் வந்து மோதிய இரும்பு
மேகமே தேகம் தேயும் நிலவானதே

பெண் : காற்று மலை சேர்ந்து
வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே
நெஞ்சு அசையாதது
சுண்டு விரலாய் தொட்டு
இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது
காதல் சுகமானது......!

--- சொல்லத்தான் நினைக்கிறேன்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : நள்ளிரவில் நான் கண் விழிக்க
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

பெண் : ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்

பெண் : தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

ஆண் : எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

ஆண் : காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும்
நான் தொழும் ஆலயம் நீயல்லவா.....!

--- தாலாட்டும் பூங்காற்று நானல்லவா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை
சுற்றிப் போனேன் ஆஹா
அவனே வள்ளலடி மின்னலைப்
பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த
பெண்ணில் நீதான் நீதான்
அழகியடி இத்தனை அழகும்
மொத்தம் சேர்ந்து என்னை
வதைப்பது கொடுமையடி
 

பெண் : கொடுத்து வைத்த
பூவே பூவே அவள் கூந்தல்
மணம் சொல்வாயா கொடுத்து
வைத்த நதியே நதியே அவள்
குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கால்கொலுசே
கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

ஆண் : அழகிய நிலவில்
ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே
உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர்
கொண்டு உயிருக்கு உயிரால்
உனையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள்
அமைத்து மெல்லிய பூ உன்னைத்
தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாா்பில்
வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு
நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை
குளிப்பதற்காக பனித்துளி எல்லாம்
சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை
அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்......!

--- அன்பே அன்பே கொல்லாதே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ.
அன்பே என் அன்பே.
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே...
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
 
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன...
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன. சொல்
 
மேடையை போலே வாழ்க்கையல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வார்ண நிலாவும்
என்னோடு நீவந்தால் என்ன... வா.....!
 
---மன்றம் வந்த தென்றலுக்கு---
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ.
அன்பே என் அன்பே.

கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளையே இணைக்கிறீர்கள்.நன் சுவி.

எனது பங்கிற்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 

 

ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : { இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)

பெண் : மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு

பெண் : { வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)

ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்......!
 

--- ரோஜாவை தாலாட்டும் தென்றல்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரியன்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : { அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும்
செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த
கூட பத்தல அட இப்போ
இப்போ எனக்கு வேணும்
அஞ்சல அவ இல்ல இல்ல
நெருப்பு தானே நெஞ்சில } (2)

ஆண் : ஓ ஒண்ணுக்குள்ள
ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள
நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ
ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும்
மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி
என்னா அவ மக்கி போனா மண்ணா
ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா

ஆண் : அடங்காக் குதிரைய
போல அட அலஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல
மாத்திவிட்டாளே படுத்தா
தூக்கமும் இல்ல என் கனவுல
தொல்ல அந்த சோழிப்போல
சோழிப்போல புன்னகையால

ஆண் : எதுவோ எங்கள சோ்க்க
இருக்கே கயித்துல கோா்க்க
ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம்
ஒண்ணு ஆடிபாா்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காத்துல நீட்டி இன்னும்
தேடுறன் அவள தனியா எங்கே
போனாளோ ........!

--- அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!


காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித் தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின்
எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்
தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி


சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று
செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி

அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி......!

---அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஹே, மதுர வீர அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே
வாடி என் கருப்பட்டி

பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே
மாருல ஏறிட இடந்தா
மீசைய நீவுற வரந்தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா (ம் வர போறேன்டா)
உன் கூட வரேன்டா (உன் கூட வரேன்டா)
 
தேனி மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா
 
ஊரே கண்ணு போடத்தான்
மாமன் உண்ண கூடித்தான்
புள்ள நூறுதான்
நான் பெத்து போடவா
 
கொடை சாஞ்சேனே
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி.இ
ஒன் கூட வரேண்டி (ஒன் கூட வரேண்டி)
ஒன் கூட வரேன்டி (ஒன் கூட வரேண்டி).....!
 
--- மதுர வீரன் அழகுல---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு
குத்தந்கொர ஏது நீ நந்தவனத் தேறு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ naan புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

மூணாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பாத்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்.....!

---பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மகாராணி அவனை ஆளுவாள்
அதில் மகாராஜன் மயங்கியாடுவான்…ஆ…ஆ…
மகாராணி அவனை ஆளுவாள்

ஆண் : புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழுவார்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணுவார்
பெண் : நான்கு பக்கம் திரைகளாடும்
பாமலர் மஞ்சம்
அதன் நடுவினிலே குடை பிடிக்கும்
காதலர் நெஞ்சம்

ஆண் : மான் கொடுத்த சாயலங்கே
மயங்கிடும் கொஞ்சம்
அந்த மயக்கத்திலே
தலைவியிடம் தலைவனே தஞ்சம்

பெண் : பாதத்தில் முகமிருக்கும்
ஆண் : பார்வை இறங்கி வரும்
பெண் : மேகத்தில் லயித்திருக்கும்
ஆண் : வீரமும் களைத்திருக்கும்

ஆண் : கண்ணனையும் அந்த
இடம் கலக்கவில்லையா
இந்த கர்ணனுக்கு மட்டும்
என்ன இதயமில்லையா

பெண் : வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா
எந்த மன்னவர்க்கும் வழங்குவது
மனைவியில்லையா

ஆண் : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்
பெண் : அந்தி பகல் துணையிருக்கும்
ஆண் : உண்ண உண்ண வளர்ந்திருக்கும்
பெண் : உலகமே மறந்திருக்கும்.....!

--- மகாராஜன் உலகை ஆளலாம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க

பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளியெடுக்க

ஆண் : ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்
 

ஆண் : மந்திரத்தை நான் பாட
அந்தரத்தில் நீயாட
சொர்க்கந்தான் மிகப் பக்கந்தான்

பெண் : முத்தளந்து நான் போட
முக்கனியை நீ தேட
மெல்லத்தான் இடை துள்ளத்தான்

ஆண் : வெப்பங்களும் தாளாமல்
தெப்பக்குளம் நீந்த
செங்கமலம் தானாக என்னை நெருங்க

பெண் : செங்கமலம் நோகாமல்
அன்புக்கரம் ஏந்த
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க

ஆண் : இன்பக் கதை நீ பாதி நான் பாதி
நாள்தோறும் சொல்லத்தான்

பெண் : இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி
ஊர்கோலம் செல்லத்தான்
பெண் : கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளியெடுக்க.......!

 

--- புன்னகையில் மின்சாரம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சுந்தரி கண்ணால்
ஒரு சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே சுந்தரி
கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெண் : வாய் மொழிந்த
வார்த்தை யாவும் காற்றில்
போனால் நியாயமா பாய்
விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆஆ வாள் பிடித்து
நின்றால் கூட நெஞ்சில்
உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால்
கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான்
வாழ ஏன் இந்த சோதனை

ஆண் : வான் நிலவை
நீ கேளு கூறும் என் வேதனை

பெண் : என்னைத்தான்
அன்பே மறந்தாயோ
ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக......!

--- சுந்தரி கண்ணால் ஒரு சேதி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்
பார்த்த ஒடனே பஞ்சர் ஆனேன்
ஆமாம்பா
ஆண் : அது கண்ணா இல்ல கரண்டா
குழு : கன்ஃப்யூஷன்
ஆண் : அவ அழக பத்தி பாட இல்ல
குழு : இல்ல எஜுகேஷன்
ஆண் : என் மனசு இனி உனக்கு
குழு : ஒரு பிளே ஸ்டேஷன்
ஆண் : நீ இருக்கும் எடம் எனக்கு
குழு : ஒரு ஹில் ஸ்டேஷன்

குழு : குட் வைப்ரேஷன்
ஒரே சென்சேஷன்
நீ வேணுமுன்னு பண்ண போறேன்
மெடிடேஷன்

ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

ஆண் : வந்தா நின்னா பாத்தா
குழு : ரிப்பீட்டு
ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள
குழு : அப்பீட்டு
ஆண் : கதீஜா வந்தா நின்னா பாத்தா
குழு : ரிப்பீட்டு
ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள
அப்பீட்டு

ஆண் : எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல
குழு : வெறும் அட்ரேக்ஷன்
ஆண் : கிட்ட போயி போயி பேச
குழு : ஓரே டெம்டேஷன்

ஆண் : அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்
குழு : ஓரே காம்பிளிகேஷன்
ஆண் : அத மீறி அவ பாத்தா
குழு : ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன்

குழு : வாட் ஏ சிட்டுவேஷன்
வேணும் சொலூஷன்
அவ கிளப்புக்குள்ள வந்தா போதும் செலுப்ரேஷன்........!

---அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பிரம்மா உன் படைப்பினிலே...
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
இவளைக் கண்டு
அழகினிலே... இவளைக்கண்டு
 
ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
 
என் இராத்திரியின் novel
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக் கோவில்
நீ ஆடைக்கட்டும் apple
என் ஆசைகளின் sample
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீப்போடுப்போடு சக்கப்போடு
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா rascal நேரத்தோடு
 
அடி உன்னைப் பார்க்கும் போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே
ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே
 
புள்ளிவைக்காமலே புதுக்கோளமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ(say what?)
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கல்லி நான்
அடி சீனிபேச்சுக்காரி என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டிப்பாக்கும் ஞானி
நாம் வெடிப்போமா காதல் வெடி
அட season வந்த வேடந்தாங்கல் நான்தானடா
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா......!
 
---ஏ வாடா வாடாப் பையா---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஏன் டி உன்னை
நான் லவ் பண்ணுறேன்
ஏன் டி உன் பின்னால்
நாயா சுத்துறேன் ஏன் டி
உன்னை நான் நாளும்
நினைக்குறேன் அடி ஏன்டி
அடி ஏன்டி அடி ஏன்

ஆண் : உன் போலே
பொண்ண இந்த உலகத்துல
பார்த்தது இல்ல எந்தன்
மனசை கொள்ளை கொண்ட
பொண்ணு வேற யாரும்
இல்லை

ஆண் : கனவில் வந்த
பெண்ணே நீயே நீதானோ
உன்னை சேரும் முன்னே
உயிர் பிரிவேனா

ஆண் : நெஞ்சாங்குழி
ஓரத்துல நீ இருந்தா
போதும் புள்ள நீ மட்டும்
போதும் புள்ள வேற
யாரும் தேவை இல்ல

ஆண் : நீ போகும்
பாதை அதுல நான்
வருவேன் நிழலை
போல ஒரு வார்த்தை
நீயும் கூறடி

பெண் : அழகே
உன்னை பிரிய
மாட்டேன் உன்னை
பிரிஞ்சு வாழ மாட்டேன்
அது சொர்கம் என்றாலும்
நரகம் என்றாலும் கூடவே
வருவேன் உன்னோடு சேர
கூடி வாழ உசுரை கூட விடுவேன்......!

--- அழகே அழகே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : முழுமதி அவளது
முகமாகும் மல்லிகை
அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது
விழியாகும் மௌனங்கள்
அவளது மொழியாகும்

ஆண் : மார்கழி மாதத்து
பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி
அவளது நடையாகும்

ஆண் : அவளை ஒரு
நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம்
கேட்டேன் அதை கொடுத்தாள்
உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஆண் : கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடி ஆக நினைத்தேன்

ஆண் : கேட்டதுமே
மறக்காத மெல்லிசையும்
அவள்தானே அதன் பல்லவி
சரணம் புரிந்தும் மௌனத்தில்
இருந்தேன்

ஆண் : ஒரு கரையாக
அவளிருக்க மறுகரையாக
நான் இருக்க இடையில்
தனிமை தளும்புதே நதியாய்

ஆண் : கானல் நீரில்
மீன் பிடிக்க கைகள்
நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே......!

--- ஓஹோ முழுமதி அவளது முகமாகும்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : {பெண் பார்த்துக் கொண்டபோது
தலை மண் பார்க்க நின்ற மாது
தென்பாங்குச் சேலை குலுங்க
என்னைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க} (2)

பெண் : கருங்கூந்தல் மலர்கள் உதிர
இரு கண் கொண்ட மையும் கரைய
கருங்கூந்தல் மலர்கள் உதிர
இரு கண் கொண்ட மையும் கரைய
உறவாட வந்த மனமே
இது உன்னால் விளைந்த சுகமே

ஆண் : மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

பெண் : கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக

பெண் : {கேட்டாலும் காதல் கிடைக்கும்
மனம் கேளாமல் அள்ளிக் கொடுக்கும்
கொத்தோடு மேனி கலங்கும்
அது குளிர்காலம் போல விளங்கும்} (2)

ஆண் : முத்தான கன்னி நகையும்
இன்னும் முதிராத காதல் கனியும்
முத்தான கன்னி நகையும்
இன்னும் முதிராத காதல் கனியும்
அத்தான் என்றழைக்கும் அழகும்
நான் அறியாத இன்பம் இன்பம்

--- மஞ்சள் முகமே வருக---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : உயிர் தீட்டும்
உயிலே வா குளிர்
நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

ஆண் : { காதல் காதல் ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும் ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை தொடர்கதை
அடங்கியதில்லையே } (2)

ஆண் : ஜப்பானை விழித்து
எப்போது நடந்தாய் கை
கால்கள் முளைத்த ஹைகூவே

பெண் : ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே

ஆண் : விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்
பெண் : பிரியாத வண்ணம்
புறாக்கள் தோல் சேரும்

ஆண் : ஈச்சம் பூவே தொடு
தொடு கூச்சம் யாவும் விடு
விடு ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு
இளமயில் தவிப்பது தகுமோ......!

--- ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!   

ஆண் : காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய் நேற்று நீ எங்கு
இருந்தாய் காற்றே நீ சொல்வாய்
என்றேன் சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்

பெண் : துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு துள்ளி
வரும் காற்றே துள்ளி
வரும் காற்றே தாய்
மொழி பேசு காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்.......!

---காற்றே என் வாசல் வந்தாய்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்
 
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்
 
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்.......!
 
---வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : ஆசை அதிகம்
வெச்சு மனச அடக்கி
வைக்கலாமா என் மாமா

பெண் : ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

பெண் : புது ரோசா
நான் என்னோடு என்
ராசாவே வந்தாடு
என் செல்லக்குட்டி

பெண் : சின்னப்பொண்ணு
நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத்
தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் புது
வெள்ளிரதம் நான்
கன்னுக்குட்டி நான் நல்ல
கார்காலம் நான்

பெண் : ஒரு பொன்
தோில் உல்லாச ஊர்
போகலாம் நீ என்னோடு
சல்லாபத் தேர் ஏறலாம்
அடி அம்மாடி அம்புட்டும்
நீ காணலாம் இது பூ சூடும்
பொன் மாலை தான் என்
செல்லகுட்டி.......!

--- ஆசை அதிகம் வெச்சு---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.