Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மணியோசையென்ன இடியோசையென்ன
எது வந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம்
பூர்வஜென்ம பந்தம்.....!

--- இலக்கணம் மாறுதோ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மங்கையரைப் பார்த்ததுண்டு
மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு
மாலையாய்த் தொடுத்ததில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ.......!

--- பொல்லாத புன்சிரிப்பு---

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பாத்திரத்தின் நிறம் போலே
பாலின் நிறம் மாறுவதோ
நேத்திரத்தை மறந்து விட்டு
நீ எங்கே வாடுவதோ
கோடையிலே மர நிழலும்
கோபத்திலே காதலியும்
ஆறுதலைத் தரவில்லையேல்
யார் தருவார் என்னுயிரே

விளக்கினிலே நெருப்பு வைத்தால்
வீடெல்லாம் ஒளியிருக்கும்
மனதினிலே நெருப்பு வைத்தால்
வைத்தவரை எரிக்காதோ
சத்தியத்தை மறந்து விட்டால்
தனி வழியே போக வரும்
தனி வழியே போனாலும்
தலைவிதிதான் கூட வரும்.....!

---ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்----

 • Like 1
Link to comment
Share on other sites

இது கவிதை.

கோடையிலே மர நிழலும்
கோபத்திலே காதலியும்
ஆறுதலைத் தரவில்லையேல்
யார் தருவார் என்னுயிரே

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்கள் சொல்கின்ற கவிதை 

இளம் வயதில் எத்தனை கோடி --- என்றும்

காதலை கொண்டாடும் காவியமே 

புதுமை மலரும் இனிமை 

அந்த மயக்கத்தில் இணைவது 

உறவுக்கு பெருமை.....!   

--- சின்ன கண்ணன் அழைக்கிறான்----

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்......!

ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி.....!

காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே......!

---அழகாம் கொடி சிறிது---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன் 

நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன் 

அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும் 

எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திருக்கும் 

தங்க ஆபரணம் தேவையில்லை இந்த நாணயம் போதாதா 

தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா

செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லறை சிதறி விழும் 

செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறி விடும்......! 

--- பல்லாங்குழியின்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை 

பாவை பார்வை மொழி பேசுமே

நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை 

இன்று இந்த நொடி போதுமே 

வேரின்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி 

இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே 

வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி 

இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே 

இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம் 

எங்கு கொண்டு நிறுத்தும் 

இதையறிய எங்கு கிடைக்கும் விளக்கம் 

அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே .......!

---பூக்கள் பூக்கும் தருணம்-----

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் 

                 பள்ளியறை வர நேரமில்லையா 

ஆண் :   ஓ....ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி 

                   உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா 

பெண் : ஆசை பூவை தவிக்க விட்டு 

                    அமைச்சரோடு நகர்வலமோ 

ஆண் : உனது கண்ணில் நீர் துடைத்தால் 

                 ஊர் குழாயில் நீர் வருமோ 

பெண்: வேந்தனே ....வேந்தனே  உந்தன் வரம் வருமோ ........!

---முதல்வனே.... வனே.....வனே...---

Link to comment
Share on other sites

 

No photo description available.

 

பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது. அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கு தெரியாது.

அந்த பெண் யோசிக்கின்றாள்:- “நான் கீழே விழப்போகின்றேன், என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது.

ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான். அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று
ஆனால் அந்த ஆண் யோசிக்கின்றான்:- “மிகுந்த வலியோடு கூட வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன்.ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை?”

இந்த படம் சொல்லும் நீதி:- எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது. அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது.

இது வாழ்க்கை, வேலை, குடும்பம், நண்பர்கள், உணர்வுகள் எப்படியாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும். இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது.

மக்களிடம் கருணை காட்டுங்கள். நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.