Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே.......!

---இன்னிசை பாடிவரும்----

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்.... உங்களது, இணைப்பு மிக அற்புதம்.  
குரல், இல்லாமல் சொல்லும்.. வார்த்தைகளுக்கு,
பலம்... அதிகம், என்று சொல்வார்கள்.  ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மண்வெட்டி கையில் எடுப்பார் ?
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம் மனதுக்குப்
பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்

பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?.....!

---அறிவுக்கு வேலை கொடு---

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text that says 'முதியோர் இல்லத்திற்கு ற்கு பணம் கொடு பொருள் கொடு உணவு கொடு உடை கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே!!!'

வணக்கம் வாத்தியார்..........!

முதியோர் இல்லத்துக்கு முதியவர்களை மட்டும் கொடு .....!

பணம், பொருள், உணவு, உடை எல்லாம் மற்றவர்கள் கொடுத்து விடுவார்கள்......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பெண்ணே பெண்ணே உன் வளையல் எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ

காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ

தன்மானத்தின் தலையை விற்று காதலின் வாழ் வாங்கவோ

கண் மூடி நான் வாழவோ

உன்னை என்னி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன்

என்னில் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேன்

என் சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்.....!

---- நெஞ்செ நெஞ்செ மறந்துவிடு-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது.......!

---காற்றின் மொழி  ஒலியா ....இசையா ---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது

பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..
வார்த்தை வந்து சேரவில்லை

வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு
பூக்கடைக்கு வாராது...

கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...
மனம் தாங்காது..... ஓஓஒ......!

---அடி ஆத்தாடி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அகம் தானாய் அறிகிறதே

  அறிமுகம் இனி எதற்கு

தடம் ஏதோ தெரிகிறதே 

அன்பினை உணர்வதற்கு 

விரிந்த நம் வாழ்விலே 

நீ ஓர் பாதையோ 

சிறு உலா  சிறு மொழி

நாம் பேசலாம் தினம் தினம் .....!

கதிர் நீக்குமா இருளை  தளிர் துளிர்க்குமா உறவில் 

என் கனா பலிக்குமோ பகலில்  புதிர் அவிழுமோ முடிவில் 

விளைநிலம் நம் காதலில்  மழை வர மறுக்குமோ 

இரு மனம் இசைந்ததே  இனி யாவுமே நிறைக்குமா....!

---அகம் தானாய்  அறிகிறதே ----

 

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
    • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
    • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
    • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.