Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா டோய்

பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா டோய்
ஊத காத்து வீச
உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சு காயலாம்

தை பொறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி
வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா........!


---காட்டு குயிலு மனசுக்குள்ள---

 

Edited by suvy
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 05:16, Paanch said:

தாத்தா பாட்டி பற்றி 7வயதுச் சிறுவனின் கட்டுரை.

அவர்கள் எப்போதும் மற்றவர்களின் குழந்தைகளைப் போலவே இருப்பார்கள்.

அவர்கள் விமான நிலையத்தில் வசிக்கிறார்கள், அங்கு இருந்து நாங்கள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும், பின்னர் திரும்பிச் செல்லவும் வேண்டும்.

ஒரு தாத்தா ஒரு மனிதன், மற்றும் ஒரு பாட்டி ஒரு பெண்!

தாத்தா பெற்றோர் வால்மார்ட்டில் சாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

அவர்கள் எப்போதும் வயதானவர்கள்.

அவர்கள் லாலிபாப் மற்றும் பிரஞ்சு பொரியலை கொண்டு வரும்போது நல்லது.

எங்களை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது, அவர்கள் எப்போதும் மெதுவாக இருப்பார்கள்.

அவர்கள் கடவுளைப் பற்றி எங்களிடம் பேசுகிறார்கள்.

அவர்கள் என் சகோதரனைப் போல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை.

பொதுவாக அவர்கள் காலையில் காபி குடிப்பார்கள்.

அவர்கள் கண்ணாடி மற்றும் வேடிக்கையான உள்ளாடைகளை அணிவார்கள்.

தாத்தா பாட்டி புத்திசாலி.

அனைவரும் ஒரு பாட்டி மற்றும் தாத்தாவைப் பெற முயற்சிக்க வேண்டும்.

அவர்கள் எங்களுடன் பிரார்த்தனை செய்து எங்களை முத்தமிடுகிறார்கள்.

கிராண்ட்பா பூமியில் புத்திசாலி மனிதன்!

 

எனது ஐ போனுக்கு வந்தது.

பேரனைக் கொஞ்சி மகிழ்ந்து  ஹாப்பி தாத்தாவாக   இருங்கள். வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழை என் இதழாலும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேரமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கரைந்து விடும்

தீராமல் தூறுதே
காமத்தின் மேகங்கள்
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி


புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே

புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலை தனிலே
நிலவோடு பேசும் மழையில்......!


---புலராத காலை தனிலே  ---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்(ஏதோ சுகம்)
குழி விழும் கன்னத்தில்
குடி இரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்
 
ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில்
கனா காணும் நேரத்தில்
அவள் தானே வந்தாள்
அணைக்காமல் சென்றாள்
 
ஓ இமை ரெண்டும் மூடாது
உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால்
அவள் தானே தந்தாள்
நடந்தாலும் முன்னே
கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்
 
Let me pop my collar like I pop the killer
Let me follow me like a hard vannila
Lyrically gangster once upon a time
Take it easy show di now a policeman
 
Lady with a love with a lover
Show me the love 'cause I want that
Don't you ever wanna stop me for that much
Because I think I'ma love you so much.....!

---மழைவரப் போகுதே---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

விரலோடு, விரல் பேச,
அடடா வேறு என்ன பேச.
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே.
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே.
 
என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்.
ஒ. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்.

அழகான உன் கூந்தல் மாக்கோலம்.
அதை கேட்கும் எந்தன் வாசல்.
காலம் வந்து வந்து கோலமிடும்.
உன் கண்ணை பார்த்தாலே.
முன் ஜென்மம் போவேனே.
 
அங்கே நீயும் நானும் நாம்.
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது.....!

--- சாய்ந்து சாய்ந்து---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கடவுள் வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பாா்த்தேன் வேறு
என்ன வேண்டும் வாழ்வில்

குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும் என்னோடு
நீ நிற்கும் வேளையில் புழுதியும்
பளிங்காகும் புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

யாா் தீங்கு செய்தாலும்
மன்னிக்க தோன்றும் நீ தந்த
இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன்.....!

---தூவானம்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மனதுக்கு பிடித்த......

 யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு.....!

---யார் அந்த நிலவு.....

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......

ஆண் : {தலை சாயும் பெண்ணுக்கு
சந்தோஷம் என்ன
பெண் : தனியாக சந்தித்தால்
உண்டாவதென்ன} (2)

ஆண் : இது கன்னம் தொட்டு கையைத் தொட்டு
எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்

பெண் : கையிரண்டில் கட்டுப்பட்டு முத்தமிட்டு
கண்மூடி சொல்லும் பாடம்

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்
பெண் : யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் ம்.ம்.ம்.ம்….

பெண் : தடைபோடும் கண்ணுக்கு
கொண்டாட்டம் என்ன
ஆண் : தடைபோடும் நெஞ்சுக்கு
திண்டாட்டம் என்ன

பெண் : ஒரு கட்டிலிட்டு மெத்தையிட்டு
கட்டழகு வந்த பின்னும் வெட்கம் என்ன

ஆண் : இனி நள்ளிரவு பள்ளியறை உள்ளவரை
துள்ளி விழ அச்சம் என்ன

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்
யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்.....!

---அனுபவம் தானே வரவேண்டும்---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ

மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோ

குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது......!

---யார் அழைப்பது---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கல்யாண தேன்
நிலா காய்ச்சாத பால்
நிலா நீதானே வான்
நிலா என்னோடு வா நிலா

ஆண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா

பெண் : உன் தேகம்
தேக்கிலா தேன்
உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும்
வேர்ப்பல உன்
சொல்லிலா ஆஆ…...!

--- கல்யாண தேன்நிலா---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
 
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை......!

---அவள் அப்படி ஒன்றும் அழகில்லை---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
என் ஆசை தாவுது உன் மேலே
 

ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன்கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது
ஐந்து புலங்களின் அழகியே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே......!

---ஆருயிரே என்னை மன்னிப்பாயா--- 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கடலில் இறங்கிப் போராடிய தமிழ் அரசியல்வாதிகள்? நிலாந்தன்! மீனவர்களுக்காக போராடத்தான் வேண்டும். விவசாயிகளுக்காக போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டங்கள் திடீர் ரசங்கள் ஆகவோ அல்லது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்திக்கப்பட்டவைகளாகவோ இருக்கக்கூடாது. மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் நோக்கிலானாவைகளாக இருக்க வேண்டும். 2009க்கு பின்னர் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்று மீனவர் பிரச்சினை அது மீனவர்களின் பிரச்சினை தான் என்றாலும் அதை மீனவர்களால் தீர்த்துக் கொள்ள முடியாது. அதை மீனவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று இதுவரை காலமும் இழுபட விட்டதில் ஒரு தந்திரம் உண்டு. இருதரப்பு மீனவர்களையும் மோத விட விரும்பும் சக்திகள் அதனால் வெற்றி பெறுகின்றன. எனவே அதை மீனவர்களுக்கு இடையிலான மோதலாக உருப்பேருக்காமல் அதை எப்படி மீனவர்களைப் பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிரான போராட்டமாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும். ஆனால் மீனவர்களின் விவகாரத்தை கையில் எடுக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீனவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்தே முடிவெடுடுகின்றனர். அல்லது முடிவெடுக்காமல் ஒத்தி வைக்கின்றனர் என்பதே கடந்த 12ஆண்டுகால அனுபவம் ஆகும்.இந்த விவகாரத்தை மீனவர்களின் வாக்கு வங்கிகளை பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் சில தமிழ் கட்சிகள் சிந்திப்பதாக தெரிகிறது. ஒரு தேசத்தை நிர்மாணிப்பது என்ற அடிப்படையில் அதாவது மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டுவது என்ற அடிப்படையில் அவர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை.அப்படி சிந்தித்திருந்திருந்தால் அவர்கள் பின்வரும் விடயங்களை கவனத்திலெடுத்திருப்பார்கள். முதலாவதாக, இந்த விடயத்தை இந்திய-இலங்கை அரசுகள்தான் பேசித் தீர்க்க வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதிகள் முதலில் இரண்டு அரச பிரதிநிதிகளோடும் பேசவேண்டும். தமிழ்மக்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் அல்லது கொழும்பிலுள்ள தூதரகம் போன்றவற்றினூடாக இந்திய மத்தியஅரசோடு அதைக்குறித்துப் பேச வேண்டும். அதேசமயம் தமிழக மீனவர்கள் சம்பந்தப்படுவதால் தமிழக அரசோடும் சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சரோடும் பேசவேண்டும். இதுவிடயத்தில் ஈழத்துமக்கள் பிரதிநிதிகளும் தமிழக அரசும், மக்கள் பிரதிநிதிகளும் செயற்பாட்டாளர்களும் தங்களுக்கிடையே ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கட்சி பேதமின்றி ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள (பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று விரும்புகின்ற எல்லா தரப்புக்களும்) ஒன்றுபடவேண்டும். அதன்மூலம் இந்திய மத்திய அரசை நோக்கி அழுத்தத்தை பிரயோகிக்கலாம். அதேசமயம் இலங்கை அரசாங்கத்தை நோக்கியும் அழுத்தத்தை கொடுக்கலாம். இரண்டாவதாக,,எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொலை செய்வதை அல்லது அவர்களுடைய படகுகளை மூழ்கடித்து அவர்களை நீரில் மூழ்கி இறக்கவைப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுவிடயத்தில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால் கடற்படையால் கொல்லப்படும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்திய மீனவர்களின் பக்கமே ஈழத்தமிழர்கள் நிற்க வேண்டும். அதேசமயம் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் ஈழத்துக் கடலின் வளங்களைச் சுரண்டும்போதும் கடலின் கருவளத்தை அழிக்கும் போதும் ஈழத்து மீனவர்களின் பக்கமே ஈழத்தமிழர்கள் நிற்க வேண்டும். எனவே இது ஒரு நுட்பமான விடயம். கத்தியில் நடப்பது போன்றது. கவனமாக கையாள வேண்டும். அதாவது போராட்டத்தின் இலக்குகள் குறித்து பொருத்தமான அரசியல் தரிசனங்கள் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான தரிசனங்கள் எவையும் கடந்தகிழமை கடலில் இறங்கிப் போராடியவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் உட்கட்சிப் பூசல்களை இவ்வாறான போராட்டங்களின் மூலம் மேவிச்சென்று கட்சிக்குள் தமது நிலைகளை பலப்படுத்த முயல்கிறார்களா என்ற சந்தேகம் உண்டு. மீனவர்களுக்காக போராடுவது என்று சொன்னால் அதை அவர்கள் எப்பொழுதோ செய்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த அரசியல்வாதிகள் அந்தக்காலத்திலேயே அதை சட்ட ரீதியாக தீர்த்திருக்கலாம். அதில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைத்திருக்கலாம். ஆனால் அக்காலகட்டத்தில் அதை அவர்கள் செய்யவில்லை. மூன்றாவதாக, ஒரு தேசமாக சிந்தித்து ஈழத்து மீனவர்களின் பிரச்சினைக்காக போராடும் அதே சமயம் அந்தப் போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானதாக மாறாதபடிக்கு அதை பக்குவமாகத் திட்டமிட வேண்டும். அதை ஒரு தனிக்கட்சி செய்யமுடியாது. சம்பந்தப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளும் கூட்டாக முடிவு எடுக்க வேண்டும். நினைவு கூர்தல் பொறுத்து கடந்த ஆண்டில் அவ்வாறு கட்சிகள் முடிவெடுத்தன. அதுபோல மீனவர்களின் விடயத்திலும் ஆகக்குறைந்தது ஒரு விவகார மைய கூட்டுக்கு தமிழ் கட்சிகள் போகவில்லை. அதை முன்னெடுத்த கூட்டமைப்பும் ஐக்கியமாகப் போராடவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதில் பங்கு பற்றவில்லை. தவிர தமிழரசுக் கட்சிக்குள்ளும் மாவையின் அணி அதில் பங்கெடுக்கவில்லை. அந்தப் போராட்டம் கூட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை என்பதனை வெளிப்படுத்திய ஒரு போராட்டம். எனவே அது தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்துக்கட்சி போராட்டமாக வடிவமைக்கப்பட வேண்டும். நாலாவதாக, அந்த போராட்டத்தை இரண்டு அரசுகளையம் நோக்கி நீதி கேட்கும் போராட்டமாக வடிவமைத்திருக்க வேண்டும்.மாறாக அது இந்திய மீனவர்களுக்கு எதிரானது என்று வியாக்கியானம் செய்யத்தக்க விதத்தில் மாறாட்டம் செய்யப்படக் கூடிய விதத்தில் போராடி இருந்திருக்கக் கூடாது. அதாவது சம்பந்தப்பட்ட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று ஒரு திரளாக நின்று மீனவர்களுக்காக முதலில் சம்பந்தப்பட்ட அரசுகளோடு உரையாடி இருக்க வேண்டும். அது வெற்றி பெறவில்லை என்றால் போராடி இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதனால்தான் அப்போராட்டம் வாக்குவேட்டை அரசியல் நோக்கிலானதா? என்று கேட்க வேண்டியிருக்கிறது. அல்லது கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல்களைக் கடந்து தனது தலைமைத்துவத்தை நிலைநாட்ட விரும்பும் ஒரு பகுதியினர் அப்போராட்டத்தை முன்னெடுத்தார்களா? என்ற கேள்விக்கும் எழுகிறது. இரண்டு மீனவ சமூகங்களுக்கிடையிலான ஒரு விவகாரத்தை,  இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை, ஒரு சர்வதேசக் கடல் எல்லை சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு விவகாரத்தை, மிகக் குறிப்பாக தமிழக மீனவர்களின் உயிர்களும் ஈழத்து மீனவர்களின் சொத்துக்களும் வளங்களும் அழிக்கப்படும் ஒரு விவகாரத்தை, அதற்குரிய பக்குவத்தோடு அணுகியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சிந்திக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக கட்சிக்குள் தமது நிலைகளை பலப்படுத்தும் உள்நோக்கத்தோடு சில மக்கள் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்களா? ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வெற்றி பெறாத போராட்டங்கள் பல உண்டு.காணிக்கான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்றவற்றோடு மீனவர்களின் விவகாரமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைதான்.ஆனால் அது முன் கூறப்பட்ட விவகாரங்கள் போல ஒரு தொடரான போராட்டமாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனெனில் அது முன்பு கூறப்பட்ட விவகாரங்களில் இருந்து வேறுபட்டது. முன்கூறப்பட்ட போராட்டங்களில் யாருக்கு எதிராகப் போராடுவது என்பதிலும் யாரிடம் நீதி கேட்பது என்பதில் ஒரு தெளிவு இருந்தது. ஆனால் மீனவர்களின் விவகாரத்தில் யாருக்கு எதிராக போராடுவது என்பதில் ஒரு தெளிவின்மை ஒரு கலங்கலான நிலைமை காணப்படுகிறது. அது தமிழக மீனவர்களுக்கு எதிரானதா? அல்லது அப்பாவி மீனவர்களை தொழிலுக்கு அனுப்பிவிட்டு கரையிலிருந்து உழைக்கும் பெருமுதலாளிகளுக்கு எதிரானதா? அல்லது அப்பெருமுதலாளிகளுக்கு சாதகமாக சிந்திக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரானதா? அல்லது எல்லை தாண்டும் மீனவர்கள் தமிழர்கள் என்பதற்காக அவர்களின் உயிரைப் பொருட்படுத்தாத இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதா? அல்லது ஓர் அனைத்துலக கடல் எல்லைக்கு அப்பால் கொல்லப்படும் தனது பிரஜைகளைக் குறித்து உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காத தமிழக அரசுக்கு எதிரானதா? அல்லது தமிழக அரசு கேட்டுக் கொண்டாலும் இது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய இந்திய மத்திய அரசுக்கு எதிரானதா? அல்லது இரு தரப்பு மீனவர்களையும் பகைவர்களாக்க முயற்சிக்கும் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானதா ? அல்லது குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கு விரோதமான முறைமைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்கும் உலகளாவிய முறைகளுக்கு எதிராக வலிமையான சட்டங்களை உருவாக்கத் தவறிய இலங்கை அரசாங்கத்துக்கும் சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எதிரானதா? என்பதை குறித்து போராட முதல் தீர்க்கதரிசனத்தோடு முடிவெடுக்க வேண்டும். இதுவிடயத்தில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் தமிழர்கள் என்பதனால்தான் கொல்லப்படுகிறார்கள் என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். எல்லை தாண்டும் மீனவர்கள் தமிழர்கள் அல்லாத வேறு இந்திய இனங்களாக இருந்தால் அவர்களை இலங்கை கடற்படை எப்படி அணுகும்? என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும். எனவே நிதானமாகவும் ஒரு தேசமாக சிந்தித்தும் அணுகப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை கட்சிக் கண் கொண்டு அல்லது தேர்தல் கண் கொண்டு அல்லது கட்சிக்குள் காணப்படும் உட்பகைகளை முறியடித்து தனது தலைமைத்துவத்தை காப்பாற்ற முயலும் சில அரசியல்வாதிகளின் கண்கொண்டு அணுகக்கூடாது. கடந்த கிழமை நடந்த போராட்டமானது மக்கள் மயப்பட்டவில்லை. மிகவும் உணர்ச்சிகரமான, இரண்டு சமூகங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை நிதானமாக கையாள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையின்றி முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் அது. யார் எதிரி என்பதில் போதிய தெளிவின்றி முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம் அது. கடந்த 12ஆண்டுகளாக தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட வெற்றி பெறாத போராட்டங்களின் வரிசையில் அது சேர்த்துக்கொள்ளப்படும். அதேசமயம் தமிழ் அரசியல்வாதிகள் கட்சிகளையும் தலைமைத்துவத்தையும் வாக்கு வங்கியையும் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்கிறார்களே தவிர தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்கவில்லை என்பதனையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது. https://athavannews.com/2021/1246432
  • 13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் பங்கேற்கும் என்றும் ரெலோவின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார். மேலும் இந்த கூட்டத்திற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2021/1246500
  • வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம் மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்துடன் வடமத்திய மாகாண எல்லையில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு – வட மத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றி அமைத்து, தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்க திட்டம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும், இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இந்த நடவடிக்கை அமைவதாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆகவே இந்த் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த நடவடிக்கையை உணனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சமல் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2021/1246494
  • தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை! சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சி.என்.என். நடத்திய டவுன் ஹால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி பைடனிடம், சீனா தனது சொந்தம் என்று கூறிக்கொள்ளும் தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா முன்வருமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன், ‘ஆமாம், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு கட்டாயம் உள்ளது’ என பதிலளித்தார். மேலும், அவர் கூறுகையில், சீனா மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கப் போகிறார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை ஏனென்றால், சீனா, ரஷ்யா மற்றும் உலகின் மற்ற பகுதிகளுக்கு நாங்கள் உலக வரலாற்றில் மிக சக்திவாய்ந்த இராணுவம் என்று தெரியும். சீனாவுடனான பனிப்போர் எனக்கு வேண்டாம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை, எங்களது எந்தக் கருத்தையும் மாற்றப் போவதில்லை என்பதை சீனா புரிந்து கொள்ள வேண்டும்’ என கூறினார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின், கருத்துகளுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. தாய்வானுடன் அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லை. ஆனால், உறவுகள் சட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஆயுதங்களை விற்கிறது. இதனால், தாய்வானை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. தாய்வான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கும் என்று ஒகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதி கூறிய பிறகு, தாய்வான் மீதான அமெரிக்க கொள்கை மாறவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தாய்வானுடனான அமெரிக்க பாதுகாப்பு உறவு, தாய்வான் உறவுகள் சட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. சட்டத்தின் கீழ் எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் நிலைநிறுத்துவோம். தாய்வானின் தற்காப்புக்காக நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம், மேலும் தற்போதைய நிலையில் ஒருதலைப்பட்சமாக மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்’ என கூறினார். சீனா, ஜனநாயக தாய்வானை பிரிந்த மாகாணமாக பார்க்கிறது. ஆனால் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கிறது. தீவு அருகே சீனாவின் விமானப்படையின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக தாய்வான் புகார் அளித்து வருகிறது. சமீபத்தில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தாய்வான், அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படுமென கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246285
  • நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – 800 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டுகளை கொண்டு சிறைச் சுவர்களை தகர்த்து 800 கைதிகளை மர்ம கும்பல் தப்பிக்க வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியவர்களில் 262 பேரை மீண்டும் கைது செய்துள்ளதாகவும் ஏறத்தாழ 575 பேரை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் 3ஆவது முறையாக சிறையை தகர்த்து கைதிகள் தப்பிக்கும் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246465
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.