-
Tell a friend
-
Topics
-
0
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
இலங்கை விவகாரம் :: சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு.! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறைகளை ஏற்க இலங்கை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்க மறுத்து அதிலிருந்து இலங்கை விலகியுள்ளதாகவும் எட் டேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூறச் செய்ய முடியும். இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கான ஒரு படியாகவும் இந்த விசாரணை அமையும் எனவும் டேவி கூறியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து தமிழ் சமூகங்கள் விடுத்துள்ள அழைப்பை அடுத்து டேவி இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார். டேவியின் அழைப்புக்கு சாம் டாரி மற்றும் சியோபைன் மெக்டோனாக் உள்ளி்ட்ட பல பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கையில் தமிழ் தரப்பைச் சோ்ந்த முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்த வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு பரிந்துரைத்துள்ளனர். இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்யுமாறும் அவா்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரிதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/01/16/21611/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
தரம் ஆறுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது.! கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் ஆறு கற்பதற்காக முன்னணிப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தரம் ஆறு மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு, ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் கொழும்பு ரோயல் கல்லூரி - 187 டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 179 பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி - 178 இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 174 யாழ். இந்துக் கல்லூரி - 166 யாழ். மத்திய கல்லூரி - 161 மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி - 160 ஓட்டமாவடி மத்திய கல்லூரி - 160 சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 160 திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -159 புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி - 157 பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி - 181 பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை - 174 யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை - 173 கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி - 170 யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி - 169 வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 169 கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் - 166 ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, - 166 பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 163 திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி - 160 கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள் ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி - 181 மூதுர், மத்திய கல்லூரி - 171 கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி - 168 கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி - 167 ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 166 சம்மாந்துறை, முஸ்லிம் மத்திய கல்லூரி - 165 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி - 165 கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை - 164 மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் - 164 கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி - 164 ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி - 164 விஷ்வமடு மகா வித்தியாலயம் - 164 கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி - 163 கம்பளை, ஷாஹிரா கல்லுரி - 162 கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி - 162 மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் - 162 அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி - 162 மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 161 அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி - 161 கொட்டகலை, தமிழ் மகா வித்தியாலயம் - 161 http://aruvi.com/article/tam/2021/01/16/21604/ -
நாங்க்ள் மனித சுதந்திரத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள். சிங்கள இனத்துடன் வாழ முடியாது என்ற காரணத்தால் தமிழர் தாயகத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களை கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில் வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா 50- ரூபாய் மட்டுமே கொடுத்த இனம்... நாங்கள் தொழிலாளர்களுக்காக போராடும் இனம்
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
அதென்ன "ரொச் லைற்" சின்னமே தான் வேணுமா.? அதுக்கும் அண்னை பெற்றர் மாஸ் லைற் இருக்கு .. ☺️..😊 அதுகும் இல்லை என்றா தீ-பந்தம் இருக்கு..! பிடிப்பது என்டு முடிவு செய்த பிறகு எதுவா இருந்தா என்ன.?👍 -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
திண்டுக்கல் :: மாட்டுப் பொங்கலை போல குதிரை பொங்கல்.! திண்டுக்கல் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம் இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர் புரம், தென்மலை, உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளது இந்த மலை கிராமங்களில் சாலைவசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றைப் பயிரிடப்படுகிறது. மலைப்பகுதியில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை நகர்ப் பகுதிக்கு எடுத்துவர இக்கிராம மக்கள் குதிரைகளைப் பயன்படுத்துகின்றனர். குதிரையின் முதுகில் மூட்டையாகக் கட்டி காய்கறிகளை எடுத்து வந்து விற்பனை செய்வது அவர்களது வழக்கம். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு குதிரையாவது உண்டு. பொங்கலுக்கு அடுத்த நாளான இன்று மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கிராமங்களில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டது. . அதேபோல் சிறுமலையில் மலைப்பகுதியில் குதிரை பொங்கல் கொண்டாடுவது வழக்கம். தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய குதிரைகளைத் தெய்வமாகக் கருதி அதனைக் குளிப்பாட்டி அதற்கு அலங்காரம் செய்து மாலை அணிவித்து வழிபாடு செய்து குதிரைக்கு உணவு ஊட்டி விட்டனர். பின்னர் அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த நாளில் குதிரைக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டு அதனைச் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படும். இன்று இந்த மலையோர கிராமங்களில் கிராம மக்கள் குதிரையைத் தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். https://tamil.thesubeditor.com/news/dindigul/28054-horse-pongal-like-cow-pongal-is-strange-near-dindigul.html
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.