Jump to content

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் செய்திகள்


Recommended Posts

ஆஸ்திரேலிய ஒபன்: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

வீனஸ் வில்லியம்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ்.
வீனஸ் வில்லியம்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ்.

முதன் முதலாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதான அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸின் கனவை பிரிட்டன் வீராங்கனை ஜொஹானா கொன்ட்டா முறியடித்தார்.

முதல் சுற்றிலேயே ஒற்றையர் ஆட்டத்தில் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ், இவருக்கு வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது.

7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ், 2015-ல் 3 டபிள்யூ.டி.ஏ ஒற்றையர் பட்டங்களை வென்றதன் மூலம் மீண்டும் டாப்-10-ற்குள் வந்ததோடு, 2015-ன் சிறந்த மீண்டெழுந்த வீராங்கனை என்ற புகழையும் பெற்றார். இவர் வெல்லாத பட்டம் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டமாகும்.

இந்நிலையில் ராட் லேவர் அரங்கில் நடைபெற்ற இந்த முதல் சுற்றுப் போட்டியில் 79 நிமிடங்களில் தோற்று வெளியேறினார் வீனஸ்.

2-வது செட்டில் ஒரு கணத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் வீனஸ். அதாவது 5-0 என்பதிலிருந்து 5-2 என்பது வரை வந்தார். ஆனால் இது தோல்வியை தாமதப்படுத்தியதே தவிர தவிக்க முடியவில்லை. ஒரு ஷாட்டை வலையில் வீனஸ் அடிக்க, ஜொஹன்னா வெற்றி பெற்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8123462.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் செரீனா, ஷரபோவா ஜோகோவிக், பெடரர் வெற்றி

 
 
ஆக்ரோஷமாக பந்தை திருப்பும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா - படம்: கெயிட்டி இமேஜஸ். | வெற்றி மகிழ்ச்சியில் செரீனா வில்லியம்ஸ் - படம்: ஏஎப்ஃபி.
ஆக்ரோஷமாக பந்தை திருப்பும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா - படம்: கெயிட்டி இமேஜஸ். | வெற்றி மகிழ்ச்சியில் செரீனா வில்லியம்ஸ் - படம்: ஏஎப்ஃபி.

ஆஸ்திரேலிய ஓபனில் நம்பர் ஓன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடர், பிரான்ஸின் ஸோங்கா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 5 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பியுள்ள நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் நேர்செட்டில் வெற்றி பெற்றார். 16ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி, 76ம் நிலை வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக் 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 52வது இடத்தில் உள்ள கொரியாவின் ஹெயான் ஷங்கை எளிதாக வீழ்த்தினார்.

பெடரர் வெற்றி

3ம் நிலை வீரரான ஸ்விட்சர் லாந்தின் ரோஜர் பெடரர், ஜார்ஜியாவின் பாஸில்லாஷிவ் லியை எதிர்த்து ஆடினார். இதில் தரவரிசையில் 118வது இடத்தில் உள்ள பாஸில்லாஷிவ்லியை 6-2, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பெடரர் தோற்கடித்தார். 7ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி 6-4, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் பிலிப் ஹோல்ஸ்ஷெரைபரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறி னார்.

9ம் நிலை வீரரான பிரான்ஸின் ஸோங்கா, சைப்ரஸின் மார்கோஸ் பஹாதிஸை 6-4, 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். சென்னை ஓபனில் 2வது இடம் பிடித்த குரோஷியாவின் போர்னா கோரிக் தனது முதல் சுற்றில் 2-6, 2-6, 3-6 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் அல்பர்ட் ரமோஸ் வினோலஸிடம் தோல்வியடைந்தார்.

யூகிபாம்ப்ரி தோல்வி

இந்தியாவின் யூகிபாம்ப்ரி முதல் சுற்றில் 6ம் நிலை வீரரான செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்தித்தார். இதில் 96வது இடத்தில் உள்ள பாம்ப்ரி முதல் செட்டில் சற்று நெருக்கடி கொடுத்தார். எனினும் அந்த செட்டை 7-5 என பெர்டிச் கைப்பற்றினார். அடுத்த இரு செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய பெர்டிச் முடிவில் 7-5, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

மெயின் டிராவில் விளையாட முதன்முறையாக தகுதி பெற்றிருந்த பாம்ப்ரி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். கடந்த முறை அவர் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரேவிடம் முதல் சுற்றில் தோல்வியை சந்தித்திருந்தார்.

செரீனா அசத்தல்

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 37வது இடத்தில் உள்ள கமிலா ஜியார்ஜியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 4ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹலேவை தோற்கடித்தார்.

5ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, தரவரிசையில் 56வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹிபினோவை 6-1, 6-3 என்ற நேர்செட்டிலும், தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பெட்ரா விட்டேவா 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 158வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் லுக் ஷிகா ஹூம்ஹூமையும் வீழ்த்தினர்.

வோஸ்னியாக்கி தோல்வி

தரவரிசையில் 16வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் முன்னணி வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி 6-1 6-7, 4-6 என்ற செட் கணக்கில் போராடி 76வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் யூலியா புட்டின்ஷெவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்ற ஆட்டங்களில் ஸ்பெயினின் கார்லா சுராஸ் நவரோ, ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா, இத்தாலியின் ரோபர்ட்டா வின்ஸி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8123397.ece

Link to comment
Share on other sites

ஆஸி.ஓபன்: வெர்டாஸ்கோவின் அபார ஆட்டத்தில் நடால் தோல்வியடைந்து வெளியேற்றம்

 
5 செட்கள் போராடி தோல்வி தழுவிய நடால் சக ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோவுக்கு கை கொடுக்கிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.
5 செட்கள் போராடி தோல்வி தழுவிய நடால் சக ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோவுக்கு கை கொடுக்கிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஸ்பெயினைச் சேர்ந்த மற்றொரு இடது கை வீரர் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ, நடாலை 7-6, 4-6, 3-6, 7-6, 6-2 என்ற செட்களில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு அடியெடுத்து வைத்தார். ராட் லேவர் அரங்கில் இத்தகைய பவர் டென்னிஸை கண்டதில்லை என்றே டென்னிஸ் நிபுணர்கள் இந்தப் போட்டியைப் பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றில் நடால் வெளியேறுவது இதுவே முதல் முறை. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் இது நடாலுக்கு 2-ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

4 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் வெர்டாஸ்கோ 90 வின்னர்களை அடித்தார். கடைசி 6 கேம்களை வென்று நடாலை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

வெர்டாஸ்கோவுக்கு எதிராக நடால் 14-2 என்ற வெற்றி விகிதத்தை வைத்துள்ளார். ஆனால் இன்று குறிப்பாக 5-வது செட்டில் வெர்டாஸ்கோவுக்கு தொட்டதெல்லம் துலங்கியது என்றே கூற வேண்டும், ஏனெனில் 5-வது செட்டில் நடால் 2-0 என்று முன்னிலை வகித்தார், ஆனால் அதன் பிறகு வெர்டாஸ்கோவின் தொடர் வின்னர்களுக்கு முன்னால் நடால் ஒன்றும் செய்ய முடியாமல் திணறினார்.

மேலும் வெர்டாஸ்கோ 20 ஏஸ் சர்வ்களை அடித்தார். சர்வ்களை திருப்பி அடிப்பதில் 10 வின்னர்களையும், இருவரும் மாறி மாறி அடிக்கும் ரேலியில் 57 வின்னர்களையும் வெர்டாஸ்கோ பெற்றார். நடாலை 54 முறை தவறிழைக்கச் செய்தார் வெர்டாஸ்கோ. குறிப்பாக நடாலின் ஃபோர்ஹேண்டை குறிவைத்து சக்தி வாய்ந்த ஷாட்களை ஆடினார் வெர்டாஸ்கோ. இதில் ஃபோர்ஹேண்ட் ஷாட்களில் மட்டும் 37 தவறுகளை நடால் செய்ததாக ஆட்ட விவரம் கூறுகிறது.

முதல் செட்டில் 6-6 என்று சமநிலை வகித்த போது நடால் தன் சர்வில் இரட்டைத் தவறுகளைச் செய்தார் இதனால் முதல்செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றினார் வெர்டாஸ்கோ. அடுத்த 2 செட்களில் நடால் எழுச்சியுற்றார். இதில் பல சுவாரசியமான ராலியில் நடால் அபாரமாக ஆடி எழுச்சியுற்றார். இதனால் நடால் தோற்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. ஆனால் 4-வது செட் மீண்டும் டைபிரேக்கருக்குச் சென்ற போது தனது சக்தி வாய்ந்த ஃபோர்ஹேண்ட் ஷாட்களினால் நடாலை நிலைகுலையச் செய்து 7-4 என்ற சர்வ் கணக்கில் 4-வது செட்டை 7-6 என்று கைப்பற்றினார் வெர்டாஸ்கோ.

5-வது செட்டில் வெர்டாஸ்கோவின் சர்வை முறியடித்து 2-0 என்று முன்னிலை வகித்தார் நடால். ஆனால் அதன் பிறகு நடாலின் 2 சர்வ்களை பிரேக் செய்த வெர்டாஸ்கோ தன் சர்வை விட்டுக் கொடுக்காமல் நடாலை திணறச் செய்து அபார வெற்றி பெற்றார். 5-வது செட்டில் வெர்டாஸ்கோவின் ஆட்டம் வேறு ஒரு நிலைக்கு உயர்ந்தது.

இந்த வெற்றி மூலம் 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார் வெர்டாஸ்கோ.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8123822.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடாலும், வீனஸும் லொஸ்ற் ஆனது ஒரே வேதனைதான்..., :mellow:

மரியாவும், செரீனாவும்  வின்னியது ஒரே மகிழ்ச்சிதான்...!  :)

 

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் நடால் - மகளிர் பிரிவில் சிமோனா, வீனஸ் அதிர்ச்சி தோல்வி

 
 
ஆஸ்திரேலிய ஒபன் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிய ஸ்பெயினின் ரபேல் நடால். | தோல்வி அதிர்ச்சியில் சிமோனா ஹெல்ப். | சிமோனா ஹெல்பை வீழ்த்திய மகிழ்ச்சியில் சீனாவின் ஸூவாய் ஜங். | நடாலை வீழ்த்திய பெர்னாண்டோ வெர்டஸ்கோ.
ஆஸ்திரேலிய ஒபன் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிய ஸ்பெயினின் ரபேல் நடால். | தோல்வி அதிர்ச்சியில் சிமோனா ஹெல்ப். | சிமோனா ஹெல்பை வீழ்த்திய மகிழ்ச்சியில் சீனாவின் ஸூவாய் ஜங். | நடாலை வீழ்த்திய பெர்னாண்டோ வெர்டஸ்கோ.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மகளிர் பிரிவில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹல்ப், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்து வெளியேறினர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெர்போர்னில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால் சகநாட்டை சேர்ந்த பெர்ணான்டோ வெர்டஸ்கோவை எதிர்த்து ஆடினார்.

நடால் தோல்வி

ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் செட்டை 7-6 என வெர்டஸ்கோ கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என நடால் தனதாக்கினர். மூன்றாவது செட்டை நடால் எளிதாக கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெர்டஸ்கோ கடும் நெருக்கடி கொடுத்து அந்த செட்டை 7-6 என வென்றார்.

இருவரும் தலா இரு செட்கள் வென்றதால் ஆட்டம் 5வது செட்டுக்கு சென்றது. இந்த செட்டில் நடாலால் தகுந்த பதிலடி கொடுக்க முடியவில்லை. வெற்றியை தீர்மானித்த இந்த கடைசி செட்டை 2-6 என நடால் இழந்தார்.

முடிவில் வெர்டஸ்கோ 7-6(6), 4-6, 3-6, 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் நடாலை தோற்கடித்தார். நடாலின் போர்ஹேண்டை குறிவைத்து வெர்டஸ்கோ ஆடியதால் அவரால் வெற்றி பெற முடிந்தது. 45வது இடத்தில் உள்ள வெர்டஸ்கோவிடம் நடால் வீழ்ந்தது டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்றது. ஆஸ்திரேலிய ஓபனில் 11 முறை பங்கேற்றுள்ள நடால் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும்.

ஆன்டி முர்ரே வெற்றி

தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தனது முதல் சுற்றில் 83வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸிவிரெவை 6-1, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினின் டேவிட் பெரர் 6-4, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பீட்டர் கோஜோவ்ஸியை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் லைடன் ஹூவிட்7-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டை சேர்ந்த ஜேம்ஸ் டக்வொர்த்தை தோற்கடித்தார். 4ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ரஷ்யாவின் டிமிட்ரி டர்ஸ்னவை முதல் சுற்றில் சந்தித்தார். இதில் வாவ்ரிங்கா 7-6(2), 6-3 என முன்னிலை வகித்த போது டிமிட்ரி காயம் காரணமாக விலகினார். இதனால் வாவ்ரிங்கா இரண்டாவது சுற்றில் நுழைந்தார்.

சிமோனா ஹல்ப் வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹெல்ப் 4-6,3-6 என்ற நேர் செட்டில் சீனாவின் ஸூவாய் ஜங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 133வது இடத்தில் உள்ள 26 வயதான ஸூவாய் ஜங் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி தொடர்பாக ஸூவாய் ஜங் கூறும்போது, 2ம் நிலை வீராங்கனையை தோற்கடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தை எனது வாழ்க்கையில் மறக்க முடியாது என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

இதேபோல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 23 வயதான இங்கிலாந்தின் ஜோஹன்னாவிடம் தோல்வி கண்டார்.

சுமார் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள வீனஸ், அறிமுக வீராங்கனையும் தரவரிசையில் 47வது இடத்தில் உள்ள ஜோஹன்னாவிடம் சரண்டராகி தொடரில் இருந்து வெளியேறினார்.

2வது சுற்றில் முகுருஸா

தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள கார்பைன் முகுருஸா 6-0, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக 85வது இடத்தில் உள்ள எஸ்டோனியாவின் அநெட்ஹோன்டவேயிட்டை வீழ்த்தி 2வது முற்றுக்கு முன்னேறினார். செர்பியாவின் முன்னணி வீராங்கனையான அனா இவானோவிக் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் தம்மி பேட்டர்ஸனை வென்றார்.

மற்றொரு செர்பிய வீராங்கனை ஜெலீனா ஜன்கோவிக் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஸ்லோவேனியாவின் போலோனா ஹார்கை வீழ்த்தினார். தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் ஹெர்பர் 6-7, 7-6, 6-3 என்ற செட்கணக்கில் போராடி ஜப்பானின் மிஸாகியை தோற்கடித்து 2வது சுற்றில் நுழைந்தார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8128189.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் செரீனா, ஜோகோவிக், பெட்ரா விட்டோவா அதிர்ச்சி தோல்வி: பயஸ் ஜோடி வெளியேற்றம்

 
 
தோல்வி அதிர்ச்சியில் பெட்ரோ விட்டோவா.
தோல்வி அதிர்ச்சியில் பெட்ரோ விட்டோவா.

ஆஸ்திரேலிய ஓபனில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோ விக், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளிட்டோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. 3ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 187வது இடத்தில் உள்ள பிரான்ஸின் குயின்டன் ஹலிஸை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிக் 6-1, 6-2, 7-6(3) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார்.

பெடரர் வெற்றி

3ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 7-5, 6-1 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 35வது இடத்தில் உள்ள உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 90 நிமிடங்களில் முடிவடைந்தது. 6ம் நிலை வீரரான செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-4, 6-0, 6-3 என்ற நேர்செட்டில் 138வது இடத்தில் உள்ள போஸ்னியாவின் மிர்சா பாஸிக்கை தோற்கடித்தார்.

7ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரி 6-3, 7-6(5), 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜெக்கையும், 9வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஸோங்கா 7-5 6-1 6-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஓமர் ஜஸிகாவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

விட்டோவா வெளியேறினார்

மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் 90வது இடத்தில் உள்ள சீனதைபேவின் சுவேயை எளிதாக தோற்கடித்தார். 5வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 105ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் ஷஸ்னோவிக்கை வீழ்த்தினார்.

4ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன் ஸ்கா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 37வது இடத்தில் உள்ள யுஜினி பவுட்சார்டை வென்றார். 6ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரோ விட்டோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் தரவரிசையில் 39வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் கவ்ரிலோவாவிடம் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் வீழ்ந்தார்.

பயஸ் ஜோடி தோல்வி

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, லக்ஸர்பர்க்கின் கில்ஸ் முல்லர் ஜோடி 7-6(4), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய ஜோடியான அலெக்ஸ் போல்ட், ஆண்ட்ரூ விட்டிங்டனை தோற்கடித்தது. அதேவேளையில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்டில் கொலம்பியாவின் ஜூவான் செபஸ்டியன், ராபர்ட் பராஹ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

சானியா இன்று மோதல்

மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தனது முதல் சுற்றில் இன்று கொலம்பியாவின் மரியனா, பிரேஸிலின் டெலியனா ஜோடியை எதிர்கொள்கிறது.

அதேவேளையில் ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போப்பண்ணா, ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஓமர் ஜஸிகா, நிக் கிர்கியோஸ் ஜோடியுடன் மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8133243.ece

Link to comment
Share on other sites

வீனஸ் வில்லியம்ஸிற்கு அபாதம்

January 22, 2016

தோல்வியின் பின்னர் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தமையால் வீனஸ் வில்லியம்ஸிற்கு 5ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய ரென்னிஸ் தொடர் மெல்பேர்ண் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரப்படுத்தலில் பத்தாவது இடத்திலுள்ள வீனஸ் வில்லியம்ஸ் குறித்த தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

 

 3

இதனையடுத்து, மேற்படி ஆட்டத்துக்கு பின்னரான கட்டாய ஊடகவியலாளர் சந்திப்பைத் தவிர்த்தமை காரணமாக அவருக்கு 5ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் பிரான்ஸின் ரென்னிஸ் தொடரில் தோல்வியடைந்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பை புறக்கணித்தமை காரணமாக, வீனஸூக்கு, 3ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

http://www.onlineuthayan.com/sports/?p=8249&cat=2

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- 3வது சுற்றுக்கு ஆண்டி முர்ரே, முகுருஸா முன்னேற்றம்: சானியா-ஹிங்கிஸ் ஜோடியின் வெற்றி தொடர்கிறது

 
பெல்ஜியத்தின் கிர்ஸ்டென் பிலிப்கென்ஸூக்கு எதிராக பந்தை ஆவேசமாக திருப்பும் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா. படம்:ராய்ட்டர்ஸ்.
பெல்ஜியத்தின் கிர்ஸ்டென் பிலிப்கென்ஸூக்கு எதிராக பந்தை ஆவேசமாக திருப்பும் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா. படம்:ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்டி முர்ரே, வாவ்ரிங்கா, அனா இவாநோவிக், கார்பைன் முகுருஸா, விக்டோரியா அஸரன்கா உள்ளிட்டோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, ஹிங்கிஸ் ஜோடி தொடர்ச்சியாக 31வது வெற்றியை பதிவு செய்து 2வது சுற்றுக்கு முன்னேறியது. ரோகன் போப்பண்ணா ஜோடியும் அடுத்த சுற்றில் நுழைந்தது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. 4ம் நாளான நேற்று ஆடவர் ஓற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.

தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 6-0, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக 67வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சாம் கிராத்தை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். 8ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெர்ரர் 6-2, 6-4, 6-4 என்ற கணக்கில் 308வது இடத்தில் உள்ள ஆஸி.யின் லைடன் ஹூவிட்டை தோற்கடித்தார்.

4ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-2, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 188வது இடத்தில் உள்ள செக்குடியரசின் ரடெக் ஸ்டெபனேக்கை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பிரான்ஸின் மோன்பில்ஸ், கனடாவின் மிலோஸ், அமெரிக்காவின் ஜாண் இஸ்நர் ஆகியோர் வெற்றி பெற்று 3வது சுற்றில் நுழைந்தனர்.

அனாஇவாநோவிக் வெற்றி

மகளிர் பிரிவில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 80வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் கிர்ஸ்டென் பிலிப்ஹென்ஸை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். 7ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் ஹெர்பர் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 61வது இடத்தில் உள்ள ருமேனியாவின் அலெக்ஸாண்ட்ரா டல்ஹூருவை தோற்கடித்தார்.

பெல்லாரஸின் முன்னணி வீராங்கனையான விக்டோரியா அஸரன்கா 6-1, 6-2 என்ற கணக்கில் 54ம் நிலை வீராங்கனையான மொண்டெனேகுரோவின் டன்கா கோவிநிக்கையும், செர்பியாவின் அனா இவாநோவிக் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் லத்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவையும் வீழ்த்தினர்.

2வது சுற்றில் சானியா ஜோடி

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் கொலம்பியாவின் மரியானா, பிரேஸிலின் டெலியானா ஜோடியை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டம் 70 நிமிடங்களில் முடிவடைந்தது. சானியா ஜோடி தொடர்ச்சியாக பெறும் 31வது வெற்றி இதுவாகும். இந்த ஜோடி தனது அடுத்த சுற்றில் உக்ரைன் சகோதரிகளான நடியா கிஷெநோக், லைடுமைலா கிஷெநோக் ஜோடியை சந்திக்கிறது.

போப்பண்ணா ஜோடி வெற்றி

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரோகன்போப்பண்ணா, ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஓமர் ஜஸிகா, நிக் கிர்கியோஸ் ஜோடியை வென்றது.

இரண்டாவது சுற்றில் போப்பண்ணா ஜோடி லூக்காஸ் லூஹி, ஜிரி வெஸ்லி ஜோடியுடன் இன்று மோதுகிறது. இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதி, லக்ஸம்பர்க்கின் கில்ஸ் முல்லர் ஜோடி தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் ஜோயை எதிர்கொள்கிறது.

கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி தனது முதல் சுற்றில் ரஷ்யாவின் அனஸ்டஸியா பாவ்லிஷென்கோவா, இங்கிலாந்தின் டொமினிக் இங்லாட் ஜோடியுடன் இன்று மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article8138752.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கிராண்ட்ஸ்லாமில் 300வது வெற்றியை பெற்றார் பெடரர், 4வது சுற்றுக்கு ஜோகோவிக், செரீனா, ஷரபோவா முன்னேற்றம்

 
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300வது வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். | செரீனா வில்லியம்ஸ் படம்:கெயிட்டி இமேஜஸ்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300வது வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். | செரீனா வில்லியம்ஸ் படம்:கெயிட்டி இமேஜஸ்.

ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிக், ஸோங்கா, நிஷி கோரி செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் 4வது சுற்றுக்கு முன்னேறினர். ரோஜர் பெடரர் கிராண்ட்ஸ்லாமில் 300வது வெற்றியை பெற்றார். ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் மகேஷ்பூபதி ஜோடி தோல்வியடைந்தது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் 5ம் நாளான நேற்று ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 28வது இடத்தில் உள்ள இத்தாலியின் அன்ட்ரியாஸ் செபியை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிக் 6-1, 7-5, 7-6(6) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெடரர் 300வது வெற்றி

3ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 27வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்து 4வது சுற்றில் நுழைந்தார். 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 34 வயதான பெடரருக்கு இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் 300வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 300 வெற்றிகளை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகள் குவித்த சாதனை மார்ட்டினா நவ்ரத்திலோவா வசம் உள்ளது. அவர் 306 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2005ம் ஆண்டுக்கு பிறகு அதிக வயதான வீரர் ஒருவர் 4வது சுற்றுக்கு முன்னேறுவது தற்போதுதான் நடைபெற்றுள்ளது. நான்காவது சுற்றில் பெடரர் பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர்கொள்கிறார்.

4வது சுற்றில் செரீனா

9ம் நிலை வீரரான பிரான்ஸின் ஸோங்கா சகநாட்டை சேர்ந்தவரும் தரவரிசையில் 167 வது இடத்தில் உள்ளவருமான ஹியூஸ் ஹெர்பர்ட்டை 6-4, 7-6(7), 7-6(4) என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். 7ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி 7-5, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 26வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்ஸியா லோபஸை தோற்கடித்து 4வது சுற்றில் நுழைந்தார்.

மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் எளிதாக 18 வயதான ரஷ்யாவின் தரியா ஹஸட்ஹினாவை தோற்கடித்து 4வது சுற்றில் நுழைந்தார். 69வது இடத்தில் உள்ள தரியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தை வெறும் 44 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார் செரீனா. இந்த தொடரில் குறைந்த நிமிடங்களில் முடிவடைந்த ஆட்டமாகவும் இது அமைந்தது.

ஷரபோவா 600

5ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-1, 6-7(5), 6-0 என்ற செட் கணக்கில் 103வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் லாரன் டேவிஸை வீழ்த்தினார். ஷரபோவாவுக்கு இது சர்வதேச போட்டிகளில் 600வது வெற்றியாக அமைந்தது. 4ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-4, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக 52வது இடத்தில் உள்ள புயிர்டோ ரிகோவின் மோனிகாவை வென்றார்.

13வது இடத்தில் உள்ளவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபனில் செரீனா வில்லியம்ஸை அரையிறுதியில் வீழ்த்தியவருமான இத்தாலியின் ரோபர்ட்டா வின்ஸி 6-0, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அனா லினாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அனா தரவரிசையில் 82வது இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூபதி ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மகேஷ்பூபதி, லக்ஸம்பர்க்கின் கில்ஸ் முல்லர் ஜோடி 3-6, 2-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அமெரிக்க சகோதரர்களான பாப் பிரையன், மைக் பிரையன் ஜோடியிடம் வீழ்ந்தது.

அதேவேளையில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரியன் மெர்ஜியா ஜோடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் லூக்காஸ் லோஹி, ஜிரி வெஸ்லி ஜோடியை தோற்கடித்து 3வது சுற்றுக்கு முன்னேறியது.

சானியா இன்று மோதல்

மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெறும் இரண்டாவது சுற்றில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, உக்ரைன் சகோதரிகளான நடியா கிஷெநோக், லைடுமைலா கிஷெநோக் ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அஸ்லா டாம் ஜனோவிக், நிக் கிர்ஜியோஸ் ஜோடியுடன் மோதுகிறது.

ஜூனியர் பிரிவில் நடைபெறும் முதல் சுற்று ஆட்டங்களில் இன்று இந்திய வீராங்கனைகளான பிரன்ஜலா, ஜப்பானின் மயூகா ஐஹவாவையும், ஹர்மன் தான்டி, ஆஸி.யின் பிரிஸிலாவையும் எதிர்கொள்கின்றனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8143553.ece

Link to comment
Share on other sites

 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஸ்பெயினின் முகுருஸா அதிர்ச்சி தோல்வி: சானியா ஜோடி இரு பிரிவுகளில் வெற்றி

தோல்வி அதிர்ச்சியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா. படம்: ராய்ட்டர்ஸ்.

தோல்வி அதிர்ச்சியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா. படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா அதிர்ச்சி தோல்வியடைந்தார். சானியா மிர்சா இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னி ஸில் 6ம் நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. ஆடவர் பிரிவில் 4ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6-2, 6-3, 7-6(3) என்ற நேர்செட்டில் செக்குடியரசின் லூகாஸ் ரஸோலை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். 2ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-2, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 32வது இடத்தில் உள்ள போர்ச்சுகலின் ஜோவாவை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் 3-6, 2-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 48வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவிடம் வீழ்ந்தார். இதேபோல் செர்பியாவின் முன்னனி வீராங்கனையான அனா இவாநோவிக் 6-4, 4-6, 4 -6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிஸனிடம் தோல்வியடைந்தார்.

தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள பெல்லாரஸின் விக்டோரியா அஸரன்கா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் எளிதாக ஜப்பானின் நவோமி ஓஸாகாவையும், 7வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் ஹர்பர் 6-1, 6-3 என்ற கணக்கில் மேடிஸன் பிரிங்ஹலையும் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

சானியா ஜோடி வெற்றி

மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-2, 6-3 என்ற நேர்செட்டில் உக்ரைன் சகோதரிகளான நடியா கிஷெநோக், லைடுமைலா கிஷெநோக் ஜோடியை வீழ்த்தி 3வது சுற்றில் நுழைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 7-5, 6-1 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் அஸ்லா டாம் ஜனோவிக், நிக் கிர்ஜியோஸ் ஜோடியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8147758.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதிச் சுற்றில் ஜோகோவிக், செரினா

 

  • கில்ஸ் சைமனுக்கு எதிரான டென்னிஸ் போட்டியில் பந்தை திருப்பியடிக்கும் ஜோகோவிக். படம்:ஏஎப்பி
    கில்ஸ் சைமனுக்கு எதிரான டென்னிஸ் போட்டியில் பந்தை திருப்பியடிக்கும் ஜோகோவிக். படம்:ஏஎப்பி
  • கால் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த மகிழ்ச்சியில் செரினா வில்லியம்ஸ். படம்:ஏபி
    கால் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த மகிழ்ச்சியில் செரினா வில்லியம்ஸ். படம்:ஏபி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிக், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான 4-வது சுற்று போட்டியில் நேற்று டென்னிஸ் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிக், பிரான்ஸ் வீரர் கில்ஸ் சைமனை எதிர்த்து ஆடி னார். இப்போட்டியில் ஜோகோவிக் எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் மைதானத்தில் ஜோகோவிக்குக்கு சைமன் கடும் சவாலாக விளங்கினார். இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றவண்ணம் இருந்தனர். 4 மணிநேரம் 32 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் ஜோகோவிக், 6-3, 6-7, 6-4, 4-6, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிக் தகுதி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிக் தகுதி பெறுவது இது 27-வது முறை யாகும். கால் இறுதிச் சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்த்து அவர் ஆடுவார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு 4-வது சுற்று போட்டியில் பிரான்ஸ் வீரர் ஸோங்காவை 6-4, 6-2,6-4 என்ற நேர் செட்டுகளில் நிஷிகோரி வீழ்த்தினார்.

ஷரபோவா வெற்றி

பெண்களுக்கான பிரிவில் நடந்த 4-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் மார்கரிடா காஸ்பர்யானை வீழ்த்தினார். கால் இறுதிச் சுற்றில் இவர் மற்றொரு ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவாவை எதிர்த்து ஆடவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு போட்டியில் மரியா ஷரபோவா, 7-5, 7-5 என்ற நேர் செட் களில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தினார்.

வீனஸ் வில்லியம்ஸ் இதுவரை மரியா ஷரபோவாவை எதிர்த்து 20 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 18 போட்டிகளில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயஸ், போபண்ணா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் லியாண்டர் பயஸ்- மார்டினா ஹிங்கிஸ் ஜோடி நேற்று 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அனஸ்டாசியா - டோமினிக் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு கலப்பு இரட்டையர் போட்டியில் ரோஹன் போபண்ணா - யங் ஜான் சான் ஜோடி 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலி யாவின் ஜான் மில்மேன் - கிமர்லி பிரல் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றாலும் ஆடவருக்கான இரட்டையர் போட்டியில் ரோஹன் போபண்ணா தோல்வியடைந்தார். மெர்ஜியாவுடன் சேர்ந்து ஆடிய அவர் 4-6, 3-6 என்ற செட்டுகளில் டிரீட் ஹுயி - மாக்ஸ் மிர்னி ஜோடி யிடம் தோற்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/article8150609.ece

Link to comment
Share on other sites

ஜோகோவிச், ஷரபோவாவுக்கு சிரமம் மிகு வெற்றி நடப்பு சம்பியன் செரீனாவுக்கு இலகுவான வெற்றி
2016-01-25 11:20:12

14406702083-01-02.jpgமெல்­பேர்னில் நடை­பெற்­று­வரும் அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் நடப்பு சம்­பியன் நொவாக் ஜோகோவிச் கடும் சவா­லுக்கு மத்­தியில் கால் இறு­திக்கு முன்­னே­றிய அதே­வேளை மகளிர் ஒற்­றையர் நடப்பு சம்­பியன் இல­கு­வாக கால் இறு­தியில் விளை­யாட தகு­தி­ பெற்றார்.

 

மெல்பேர்ன், ரொட் லேவர் எரினா டென்னிஸ் அரங்கில் நேற்று நடை­பெற்ற ஆடவர் ஒற்­றையர் நான்காம் சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜில்லெஸ் சைம­னிடம் கடும் சவாலை எதிர்­கொண்ட ஜொக்­கோவிச், ஐந்து செட்கள் வரை நீடித்த போட்­டியில் 3 – 2 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

 

முதல் செட்டில் 6 க – 3 என வெற்­றி­பெற்ற ஜோகோவிச் இரண்­டா­வது செட்டில் 6 – 7 என தோல்வி அடைந்தார்.

 

அடுத்த செட்டில் 6 – 4 என அவர் மீண்டும் வெற்­றி­பெற்றார். ஆனால், நான்­கா­வது செட்டில் சைமன் இதே புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

 

தீர்­மா­ன­மிக்க கடைசி செட்டில் சிறந்த வியூ­கங்­க­ளுடன் விளை­யா­டிய ஜோகோவிச் 6 – 3 என வெற்­றி­பெற்று கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்­து­கொண்டார்.

 

கால் இறு­தியில் ஜப்பான் வீரர் கெய் நிஷி­கோ­ரியை ஜொக்­கோவிச் சந்­திக்­க­வுள்ளார்.

 

நான்காம் சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்ப்ரட் சொங்­காவை 3 நெர் செட்­களில் (6 – 4, 6 – 2, 6 – 4) நிஷி­கோரி வெற்­றி­கொண்டார்.

 

இவர்­களை விட ஆடவர் ஒற்­றையர் பிரிவில் செக் குடி­ய­ரசின் தோமஸ் பெர்­டிச்சும் கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்­து­கொண்­டுள்ளார். இவர் ஸ்பெய்ன் வீரர் ரொபர்ட்டோ பௌட்­டிஸ்டா ஏகட்டை 3 – 2 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வீழ்த்­தினார்.

 

14406702505-01-02.jpgசெரீனா, ஷர­போவா
கால் இறு­தியில் மோதல்

மகளிர் ஒற்­றையர் நான்காம் சுற்றில் வெற்­றி­யீட்­டிய நடப்பு சம்­பியன் செரீனா வில்­லி­யம்ஸும் முன்னாள் சம்­பியன் மரியா ஷர­போ­வாவும் ஒரு­வரை கால் இறு­தியில் சந்­திக்­க­வுள்­ளனர்.

 

ரஷ்­யாவின் மார்­க­ரிட்டா கஸ்­ப­ரி­யானை 6 – 2, 6 – 1 என்ற புள்­ளி­களைக் கொண்ட இரண்டு நேர் செட்­களில் செரீனா இல­கு­வாக வெற்­றி­கொண்டார்.
ஆனால், சுவிட்­ஸர்­லாந்தின் பெலிண்டா பென்­சிக்­கிடம் கடும் சவாலை எதிர்­கொண்ட ஷர­போவா தலா 7 – 5 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 நேர் செட்­களில் வெற்­றி­யீட்­டினார்.

 

மற்­றொரு போட்­டியில் ஜேர்­ம­னியின் அனா லெனா ஃப்றைட்­சாமை 2 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட பொலந்தின் அக்­னி­யெஸ்கா ரட்­வான்ஸ்­காவும் கால் இறு­தியில் விளை­யாட தகு­தி­பெற்­றுக்­கொண்டார்.

 

14406_METRO-24.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14406#sthash.qRpsLAd4.dpuf
Link to comment
Share on other sites

கலப்பு இரட்டையர் போட்டியில் போட்டி நிர்ணயம்?
 
26-01-2016 04:35 AM
Comments - 0       Views - 18

article_1453716994-LEADConPoddiNirmana.jஇடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், கலப்பு இரட்டையர் போட்டியொன்றில், போட்டி நிர்ணயம் இடம்பெற்றதா என்பது குறித்துச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

முதற்சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெய்னைச் சேர்ந்த டேவிட் மரேரோ, லாரா அருவாபரென்ன ஜோடி, செக் குடியரசைச் சேர்ந்த அன்ட்ரியா லாவஸ்கோ - போலந்தைச் சேர்ந்த லூகாஸ் குபொட் ஜோடியுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதிய போட்டியே, சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில், டேவிட் - லாரா ஜோடி தோல்வியடையுமென, சூதாட்டக்காரர்களால் அதிகளவு பணம், போட்டிக்கு முதல்நாளில் திடீரென முதலிடப்பட்டமையே, சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. அப்போட்டியில் அந்த ஜோடி, 0-6, 3-6 என்ற செட் கணக்கில் படுதோல்வியடைந்திருந்தது.

சந்தேகத்துக்கிடமான குறித்த சூதாட்ட முதலீடுகள் காரணமாக, அப்போட்டிக்கான சூதாட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்ததாகவும், அதை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது, முதற்சுற்றுப் போட்டி என்பதோடு, கலப்பு இரட்டையர் போட்டி என்பதால், அதிகளவு பணத்தை ஈர்ப்பதில்லை என்ற போதிலும், பெட்பெயார் என்ற சூதாட்ட இணையத்தளத்தில், 25,000 அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இவ்வகையான போட்டிகள், 1,000 டொலர்களுக்குக் குறைவான பணத்தை ஈர்ப்பதே வழக்கமாகும்.

எனினும், போட்டி நிர்ணயம் குறித்தான முயற்சிகள் குறித்துத் தங்களுக்குத் தெரியாது என, டேவிட் - லாரா ஜோடி தெரிவித்துள்ளது. அத்தோடு, டேவிட்டின் முழங்காலில் உபாதை காணப்பட்டதாகவும், அதனால், சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்த முடியாது போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பான நேரடியான பதிலெதனையும், எந்தவொரு நிர்வாகச் சபையும் வெளியிடவில்லை. ஆனால், எந்தவிதமான மோசடிகளுக்கும் எதிராகத் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுமென, அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/164633/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE-#sthash.6xGb0rXT.dpuf
Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி - சானியா, போபண்ணா ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

 
வாவ்ரிங்கா
வாவ்ரிங்கா

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென் னிஸ் போட்டியின் 8வது நாளான நேற்று ஓற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. ஆடவர் பிரிவில் 13வது இடத் தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிக்கிடம் 6-4, 6-3, 5-7, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் வாவ் ரிங்காவை தோற்கடித்து காலி றுதிக்கு முன்னேறினார்.

2014ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்காவை வீழ்த்த ரயோனிக் சுமார் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் போராடினார். தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இங்கி லாந்தின் ஆன்டி முர்ரே 6-4, 6-4, 7-6(4) என்ற நேர்செட்டில் 17வது இடத்தில் உள்ள ஆஸ்தி ரேலியாவின் பெர்னார்டு டாமிக்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தார்.

பிரான்ஸின் முன்னணி வீர ரான மோன்பில்ஸ் 7-5, 3-6, 6-3, 7-6(4) என்ற கணக்கில் ரஷ்யா வின் அந்த்ரே குஸ்நெட்சோவை யும், தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் டேவிட் பெர்ரர் 6-4, 6-4, 7-5 என்ற நேர்செட்டில் 10வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜாண் இஸ்னரையும் வென்று காலிறு திக்கு முன்னேறினர்.

மகளிர் பிரிவில் 7வது இடத் தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ச லிக் ஹெர்பர் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் எளிதாக 55வது இடத்தில் உள்ள சகநாட்டை சேர்ந்த அனிகா பெக்கையும்; பெல்லாரஸின் முன்னணி வீராங் கனையான விக்டோரியா அஸ ரன்கா 6-2, 6-4 என்ற கணக்கில் செக்குடியரஸின் பார்போரா ஸ்டிரைகோவாவையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

சானியா ஜோடி வெற்றி

இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் தரவரிசையில் முதலி டத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர் லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவா, இத்தாலியின் ரோபர்ட்டா வின்ஸி ஜோடியை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் சீன தைபேவின் யங் ஜன் ஷான், இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி 4-6, 6-3 (10-6) என்ற கணக்கில் செக்குடியரசின் அன்ட்ரியா லவஹோவா, போலந்தின் லூகாஸ் ஹூபோட் ஜோடியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article8154505.ece

Link to comment
Share on other sites

ஆஸி. ஓபன் அரையிறுதியில் செரீனா, ஜோகோவிக்; சானியா ஜோடியின் வெற்றி தொடர்கிறது

 
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். படம்: ஏஎப்ஃபி.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். படம்: ஏஎப்ஃபி.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ், அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, ஜோகோவிக், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 9ம் நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக் 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 7ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரியை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 3ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6(4), 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 6ம் நிலை வீரரான செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தினார். அரையிறுதியில் ஜோகோவிக்-பெடரர் மோத உள்ளனர்.

செரீனா அசத்தல்

மகளிர் பிரிவில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-1 என்ற நேர்செட்டில் எளிதாக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை தோற்கடித்து அரைறுயிறுதிக்கு முன்னேறினார்.

கடந்த 12 ஆண்டுகளில் ஷரபோவாவை செரீனா வீழ்த்துவது இது 12வது முறையாகும். செரீனா அரையிறுதியில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை எதிர்கொள்கிறார். 4ம் நிலை வீராங்கனையான ரத்வன்ஸ்கா காலிறுதியில் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் 10வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கர்லா சுராஸ் நவரோவை வீழ்த்தினார். 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, ஸ்டெபி கிராபின் (22 பட்டங்கள்) சாதனையை நெருங்குகிறார்.

சானியா ஜோடி வெற்றி

மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனைகளான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-2, 4-6, 6-1 என்ற செட்டில் 12வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அனா லினா, அமெரிக்காவின் கோ கோ வேன்ட்வேஹி ஜோடியை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது. அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 13வது இடத்தில் உள்ள செக்குடியரசின் ஜூலியா ஜார்ஜ், கரோலினா பிளிஸ்கோவா ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் கஜகஸ்தானின் யரோஸ்லவா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடியை தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்விட்சர் லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி 6-1, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், நெதர்லாந்தின் ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தி காலிறுக்கு முன்னேறியது. காலிறுதியில் சானியா ஜோடி, பயஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article8156930.ece

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: ஆடவர் அரையிறுதியில் அன்டி மறே; சானியா - ஹிங்கிஸ் இறுதிப்போட்டிக்குத் தகுதி
2016-01-28 10:14:01

1448636.jpgமெல்­ேபர்னில் நடை­பெற்­று­வரும் அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் ஆட­வ­ருக்­கான ஒற்­றையர் பிரிவில் நான்கு தட­வைகள் இறுதி ஆட்­டத்தில் விளை­யா­டியும் வெற்­றி­பெறத் தவ­றி­வந்­துள்ள பிரித்­தா­னிய வீரர் அண்டி மறே, இவ்வருடம் அரை இறு­தியில் விளை­யாட தகு­தி­ பெற்­றுள்ளார்.

 

இம்முறை சம்­பி­ய­னா­கக்­ கூ­டி­ய­வர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் அண்டி மறே, நேற்­று ­முன்­தினம் நடை­பெற்ற மூன்­றா­வது கால் இறுதிப் போட்­டியில் ஸ்பானிய வீரர் டேவிட் ஃபெரரை 3–1 என்ற செட்கள் (6–3, 6–7, 6–2, 6–3) அடிப்­ப­டையில் அண்டி மறே வெற்­றி­கொண்டார்.

 

கடைசி கால் இறுதிப் போட்­டியில் பிரான்ஸ் வீரர் காயல் மோஃபில்ஸை சந்­தித்த கன­டாவின் மிலோஸ் ராஓனிக் 3–1 என்ற செட்கள் (6–3, 3–6, 6–3, 6–4)கணக்கில் வெற்­றி ­பெற்றார். ஆடவர் ஒற்­றையர் பிரிவில் அரை இறு­தியில் விளை­யாடும் ஐரோப்­பி­ய­ரல்­லாத ஒரே ஒருவர் ராஓனிக் ஆவார்.

 

 ஜேர்­ம­னி­யர்கள் மோதும் அரை இறுதி
மகளிர் ஒற்­றையர் பிரி­வுக்­கான இரண்­டா­வது அரை இறு­தியில் ஜேர்மன் பெண்­க­ளான ஜொஹானா கொன்­டாவும் ஏஞ்­சலிக் கேர்­பரும் மோத­வுள்­ளனர். 

 

நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற மூன்­றா­வது கால் இறு­தியில் சீன வீராங்­கனை ஷுஆய் ஸாங்கை எதிர்த்­தா­டிய ஜொஹானா கொன்டா இரண்டு நேர் செட்­களில் (6–4, 6–1) இல­கு­வாக வெற்­றி­பெற்றார்.

 

கடைசி கால் இறு­தியில் பெலா­ரஸின் விக்­டோ­ரியா அஸ­ரென்­காவை எதிர்த்­தா­டிய ஏஞ்­சலிக் கேர்பர் 2 நேர் செட்­களில் (6–3, 7–5) வெற்­றி­பெற்றார்.

 

1448637.jpg

 

 

மகளிர் இரட்­டையர் இறு­தியில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி

மகளிர் இரட்­டையர் பிரி­வுக்­கான இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் சானியா மிர்­ஸாவும் மார்ட்­டினா ஹிங்­கிஸும் ஜோடி சேர்ந்து ஜூலியா (ஜெர்­மனி), கரோ­லினா லிஸ்­கோவா (செக் குடி­ய­ரசு) ஜோடியை மிக இல­கு­வாக வெற்­றி­கொண்­டனர்.

 

ரொட் லேவர் டென்னிஸ் அரங்கில் நேற்று நடை­பெற்ற இப் போட்­டியின் முத­லா­வது செட்டில் 6–1 என வெற்­றி­பெற்ற சானியா, மார்ட்­டினா ஜோடி­யினர், இரண்­டா­வது செட்டில் 6–0 என வெற்­றி­பெற்று இறுதிப் போட்­டியில் விளை­யாட தகுதிபெற்றனர்.

 

 

இறுதிப் போட்டியில் செக் குடியரசின் அண்ட்றியா லவாக்கோவா, லூசி ராடெக்கா ஜோடியினரை சானியா, மார்ட்டினா ஜோடியினர் சந்திக்கவுள்ளனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14486#sthash.z7RMyi7Z.dpuf
Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா, ஜோகோவிக்

 
 
ss_2715495f.jpg
 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ், ஜோகோவிக் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தி யாவின் சானியா மிர்சா, குரோஷியா வின் இவான் டு டிக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலிய ஓபன் டென் னிஸில் 11வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை யான செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-4 என்ற நேர்செட்டில் எளிதாக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 64 நிமிடங்களில் முடிவடைந்தது.

ஆஸி. ஓபனில் 6 முறை பட்டம் வென்றுள்ள செரீனா கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இறுதிச்சுற் றுக்கு முன்னேறுவது இது 26வது முறையாகும். 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவர் ஸ்டெபி கிராபின் (22 பட்டங்கள்) சாதனையை சமன் செய்யும் முனைப்பில் உள்ளார்.

மற்றொரு அரையிறுதியில் 7ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் ஹெர்பர் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் ஜோஹன்னா ஹோன்டாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார். பட்டம் வெல்வதற்கான இறுதிப்போட்டி யில் செரீனா வில்லியம்ஸூடன், ஏஞ்சலிக் ஹெர்பர் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 3ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிக் 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்றது.

ஜோகோவிக் ஆஸி. ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 6வது முறையாகும். இதன் மூலம் 6வது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். பெடரருடன் 45 முறை மோதியுள்ள ஜோகோவிக் 23வது வெற்றியை பதிவு செய்தார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரே அல்லது கனடாவின் ரயோனிக்கை ஜோகோவிக் சந்திக்க உள்ளார்.

சானியா ஜோடி அசத்தல்

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டு டிக் ஜோடி 1 மணி நேரம் 10 நிமிடங்கள் போராடி ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடியை 7-6(1), 6-3 என்ற நேர்செட்டில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சானியா-இவான் ஜோடி அரையிறுதியில் 5வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, பிரேஸிலின் புருனோ சோரஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article8167180.ece

 

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன்: சானியா - ஹிங்கிஸ் இணை சாம்பியன்!

 
 
வெற்றி வீராங்கனைகள் ஹிங்கிஸ், சானியா | படம்: ஏபி
வெற்றி வீராங்கனைகள் ஹிங்கிஸ், சானியா | படம்: ஏபி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனின் மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்று ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில், நம்பர் ஒன் வீராங்கனைகளான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள செக். குடியரசின் அன்ட்ரியா, லூஸி ஹரடெக்கா ஜோடியுடன் மோதியது.

பரபரப்பாக நடந்த முதல் செட் ஆட்டத்தில், சானியா - ஹிங்கிஸ் இணை 7-6 என்ற கணக்கில் டை பிரேக்கரில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு, தன் வழக்கமான உத்வேக ஆட்டத்தை இந்த ஜோடி வெளிப்படுத்தி, இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

கடந்த ஆண்டில் இருந்தே மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா - ஹிங்கிஸ் இணையின் அட்டகாசமான வெற்றிகள் தொடர்வது இங்கே கவனிக்கத்தக்கது.

வெற்றி வீராங்கனைகளில் சிறப்புகள்...

ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றிய நிலையில், இது சானியா - ஹிங்கிஸ் இணையின் 36-வது தொடர்ச்சியான ஆட்ட வெற்றியாகும். அத்துடன், தொடர்ச்சியான மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டில் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனை வென்ற நிலையில், இப்போது ஹாட்ரிக் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் ஆகியிருக்கிறது இந்த இணை.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article8167670.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன் : சானியா, ஹிங்கிஸ் இணை சாம்பியன்!

 

ஸ்திரேலிய ஓபனில் மகளிர் இரட்டையரில் சானியா மிர்ஷா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றுள்ளது.

sania%20.jpg

மெல்போர்னில் நடந்து வரும் இந்த தொடரில் மகளில் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஷா ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை செக் குடியரசுவை சேர்ந்த அன்ட்ரியா, லூஸி ஹரடெக்கா இணையுடன் மோதியது.

முதல் செட்டை சானியா இணை  7-6 என்ற கணக்கில் டை பிரேக்கரில் கைப்பற்றியது. அடுத்த செட்டை 6-3 என்று அதிரடியாக வென்று பட்டத்தை வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா - ஹிங்கிஸ் இணை பெற்ற 36வது வெற்றி இது. 

ஏற்கனவே விம்பிள்டன், அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம்  பட்டங்களை வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி 3வதாக ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளது.

http://www.vikatan.com/news/sports/58276-sania-mirza-and-martina-hingis-win-australian-open.art

Link to comment
Share on other sites

Breaking Now ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

Read more at: http://tamil.oneindia.com/
Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஓபன்: செரினா வில்லியம்சுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்து பட்டம் வென்றார் கெர்பர்
Angelique Kerber stuns Serena Williams in Australian Open final
 
 
 மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரின் இறுதி போட்டியில், உலகின் நம்பர்-1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான, செரினா வில்லியம்ஸ், ஜெர்மனியின் 28 வயதாகும், இளம் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டி மெர்போர்னில் இன்று நடைபெற்றது. பெரிய போட்டித்தொடர் ஒன்றில் இதுவரை பட்டம் வெல்லாதவர் கெர்பர் என்பதால், தொடர்ச்சியாக 6 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்று, நடப்பு சாம்பியனாக விளங்கும் செரினா எளிதாக வெற்றிக்கொடி நாட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
 
ஆனால், கெர்பர் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அசத்தியபோது, அவர் மீது நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால், இரண்டாவது செட்டை 3-6 என்ற கணக்கில் செரினா வென்றபோது, அந்த நம்பிக்கை குறைந்தது. இதையடுத்து 3வது செட் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இதில் 6-4 என்ற கணக்கில், கெர்பர் வெற்றி பெற்று பட்டத்தை வென்று அசத்தினார்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செரினாவின் தோல்வியால் வந்த கவலையால் செய்ய வேண்டியதெல்லாம் செய்யப்படாமல் உள்ளது tw_angry:

 

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

செரினாவின் தோல்வியால் வந்த கவலையால் செய்ய வேண்டியதெல்லாம் செய்யப்படாமல் உள்ளது tw_angry:

 

ஹாஹா  ஜெர்மனியருக்கு சந்தோசமானநாள் ..:)

17 வருடங்களுக்கு பின் ஒருவர் Grand slam போட்டியில் வென்று இருக்கிறார்.

இதற்கு முதல் கடைசியாக ஸ்டெபி கிராப் வென்று இருந்தார்.

Link to comment
Share on other sites

செரீனா வில்லியம்சை வீழ்த்தி ஆஸி.ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்

 
ஆஸி.ஓபன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கெர்பர் கோப்பையை முத்தமிடுகிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.
ஆஸி.ஓபன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கெர்பர் கோப்பையை முத்தமிடுகிறார். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதியில் உலகின் நம்பர் 1 அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சிற்கு அதிர்ச்சி அளித்து ஜெர்மன் வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று (சனிக்கிழமை) மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அபாரமான, தரத்தின் உச்சகட்டமான டென்னிஸ் ஆட்டத்தை இருவருமே வெளிப்படுத்தினாலும் கடைசியில் கெர்பர் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனையடுத்து டென்னிஸ் ரசிகர்களிடையே அவரது காலத்தில் உற்சாகத்தை ஏற்படுத்திய ஸ்டெபி கிராஃபுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் வீராங்கனையானார் ஏஞ்செலிக் கெர்பர்.

தனது 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் 7-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் எதிர்நோக்கி ஆடிய செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றிருந்தால் அதிக கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்திற்கான ஸ்டெபி கிராஃப் சாதனையை சமன் செய்திருப்பார். ஒருவிதத்தில் தன் நாட்டு வீராங்கனையின் சாதனையை சமன் செய்ய விடாமல் தடுத்துள்ளார் அதே ஜெர்மனியைச் சேர்ந்த கெர்பர் என்றே கூற வேண்டும்.

முதல் செட்டில் செரீனா வில்லியம்ஸின் ஆட்டம் தவறுகள் நிரம்பியதாக அமைந்தது. ஆட்டத்தின் போக்கில் கருதிச்செய்யாத தவறுகளாக (unforced errors) செரீனா 20 முறை தவறு செய்தார். இதனால் முதல் செட்டில் இருமுறை செரீனா சர்வை முறியடித்து வென்ற கெர்பர் முதல் செட்டை 6-4 என்று

கைப்பற்றினார். கருதிச்செய்யாத தவறுகள் அதிகமானதால் செரீனா ஷாட்களை சக்தி வாய்ந்த வகையில் அடிக்க முடியாது தயங்கினார். இதனை கெர்பர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு சில அபாரமான ஃபோர்ஹேண்ட் பாஸிங் ஷாட்களை அடித்தார். குறிப்பாக செரீனா நெட்டிற்கு அருகில் வராமலும் பேஸ்லைனிலும் முழுதும் இல்லாமல், அரைகுறையாக நடுவில் வரும்போது.

ஆனால் 2-வது செட்டில் செரீனா வில்லியம்ஸ் எழுச்சியுற்றார். முதல் சர்வை வலுவாக வீசி 1-0 என்று முன்னிலை பெற்றார். ஆனால் கெர்பர் சர்வும் வலுவாக அமைய ஒரு ஏஸ் சர்வுடன் 1-1 என்று சமன் செய்தார். அடுத்த சர்வும் செரீனாவுக்கு சரியாக அமைய 2-1 என்று பாதுகாப்பாகச் சென்றார். அடுத்த சர்வில் கெர்பர் 2-வது முறையாக சர்வில் டபுள் ஃபால்ட் செய்ய 0-15 என்று முன்னிலை பெற்ற செரீனா, இதனையடுத்து கெர்பரின் தவறுகளால் 0-40 என்று ஒரு பிரேக் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் 30-40 என்று கெர்பர் மீண்டெழுந்தார், காரணம் செரீனாவின் ரிடர்ன் ஒன்று வலையைத் தாக்கியது. அதன் பிறகு ஒரு சர்வ் எடுக்கப்பட்டு நீண்ட ராலி நடைபெற்றது இதில் கெர்பர் ஒரு ஷாட்டை வெளியில் அடிக்க செரீனா பிரேக் செய்தார். 3-1 என்று முன்னிலை பெற்றார்.

அதன் பிறகு தனது சர்வில் முதல் முறையாக இந்த ஆட்டத்தில் ஏஸ் அடித்த செரீனா அடுத்தடுத்து நல்ல சர்வ்களை போட்டு 4-1 என்று முன்னிலையை ஸ்திரப்படுத்தினார். அதன் பிறகு கெர்பர் சர்வில் 30-30 என்ற நிலையில் வில்லியம்சின் பேக் ஹேண்ட் ஷாட் மீண்டும் நெட்டைத் தாக்க அதன் பிறகு கெர்பர் ஃபோர்ஹேண்ட் ஷாட் ஒன்றை அபாரமாக ஆட 4-2 என்று ஆனது. அதன் பிறகு தனது சர்வில் செரீனா ஒரு டபுள் பால்ட் மற்றும் ஒரு ஷாட்டை வெளியில் அடிக்க 40-30 என்று தடுமாறினார். அதன் பிறகு வலைக்கு அருகில் வந்து ஒரு அருமையான டிராப் ஷாட்டை செரீனா ஆடி 5-2 என்று முன்னிலை பெற்றார்.

அடுத்ததாக கெர்பர் சர்வில் செரீனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30-0 என்று முன்னிலை பெற்றார். ஆனால் கெர்பர் சர்வை எடுப்பதில் நெட்டில் ஒரு பந்தை அடிக்க கெர்பர் 30-30 என்று மீண்டார். பிறகு ஒரு அபாரமான ஏஸ் சர்வை கெர்பர் வீச 40-30 என்றும் பிறகு அபாரமான ஃபோர்ஹேண்ட் ஷாட் ஒன்று துல்லியமாக அமைய 3-5 என்று கெர்பர் பின் தங்கியிருந்தார். 2-வது செட்டைக் கைப்பற்றுவதற்கான சர்வை வில்லியம்ஸ் வீச மீண்டும் ஒரு டபுள் பால்ட் செய்ய 15-15 என்று ஆனது. ஆனால் அடுத்த சர்வ் அருமையான ஏஸ் சர்வாக அமைய 30-15 என்று சென்ற செரீனா, கெர்பரின் ஷாட் ஒன்று வெளியே செல்ல 40-15 என்று ஆனார். கடைசியில் செரீனா சர்வை எடுத்த கெர்பரினால் ஆட்டம் நீண்டது கடைசியில் கெர்பர் நெட்டில் அடிக்க செரீனா 2-வது செட்டை 6-3 என்று 33 நிமிடங்களில் கைப்பற்றினார். ஆட்டம் 3-வது செட்டுக்கு நகர்ந்தது.

விறுவிறுப்பான 3-வது செட்:

3-வது செட்டில் இருவரது ஆட்டமும் சூடுபிடித்ததைப் பார்க்க முடிந்தது. 40-15 என்று முன்னிலை பெற்ற கெர்பர் பிறகு 13 ஷாட்கள் கொண்ட ரேலியில் அபாரமான ஃபோர்ஹேண்ட் வின்னரை அடித்து 1-0 என்று முன்னிலை பெற்றார். அடுத்த செரீனா சர்வ்தான் திருப்பு முனையை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு 14 ஷாட் ரேலியில் கெர்பரின் ஃபோர்ஹேண்ட் ஷாட்டில் 0-40 என்று பின் தங்கினார் செரீனா. மீண்டும் அடுத்த சர்வை செரீனா வீச கெர்பர் அதனை எடுத்துவிட மீண்டும் ஒரு 10 ஷாட் ரேலியில் செரீனாவை தவறான கால் நகர்த்தலுக்கு வழிவகுத்து கெர்பர் ஒரு அபாரமான போர்ஹேண்டைத் தாக்க செரீனா சர்வை உடைத்து கேர்பர் 2-0 என்று முன்னிலை பெற்றார்.

ஆனால் அடுத்த கெர்பர் சர்வை செரீனா மீண்டெழுந்து முறிட்யடிக்க கடைசி செட்டில் கெர்பர்-செரீனா ஸ்கோர் லைன் 2-1 என்று இருந்தது. பிறகு அடுத்ததாக செரீனா ஒரு 195 கிமீ வேக ஏஸ் சர்வை அடித்து தன் சர்வை தக்கவைக்க 2-2 என்று சமன் ஆனது.

அடுத்த கெர்பர் சர்வில் 0-30 என்று பின் தங்கிய செரீனா அபாரமான 2 ஷாட்களினால் 30-30 என்று சமன் செய்தார். ஆனால் கெர்பர் விட்டுக் கொடுக்காமல், மனம் தளராமல் அடுத்து 2 வின்னர்களை அடித்து அந்த சர்வைக் கைப்பற்றி 3-2 என்று முன்னிலை பெற்றார்.

அடுத்ததாக செரீனா சர்வ். இதில் 15-30 என்ற நிலையில் செரீனாவின் பேஸ்லைன் போர்ஹேண்ட் ஷாட் நெட்டைத் தாக்க கெர்பர் 40-15 என்று பிரேக் வாய்ப்பை பெற்றார். ஆனால் அதன் பிறகு டென்னிஸ் தரம் உச்சத்திற்குச் செல்ல செரீனாவின் சர்வை கெர்பர் எடுக்க 19 ஷாட் ரேலி தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் செரினா ஒரு போர்ஹேண்டை அருமையாக ஆட 30-40 என்று நெருங்கினார். பிறகு 190 கிமீ வேக ஏஸ் சர்வை செரீனா அடிக்க 40-40 என்று மேலும் சர்வ்களுக்கான டியூஸுக்கு சென்றது இந்த சர்வ். இதில் கெர்பர் போர்ஹேண்ட் வின்னர் ஒன்றை முதலில் அடித்தார். அட்வாண்டேஜ் நிலைக்கு வந்தார். ஆனால் செரீனா விடவில்லை அடுத்து ஒரு அபாரமான ஷாட்டை ஆடி மீண்டும் டியூஸுக்கு இட்டுச் சென்றார்.

பிறகு மீண்டும் ஒரு 192 கிமீ ஏஸை அடித்தார் செரீனா. இப்போது செரீனா அட்வாண்டேஜ் வந்தாலும் அடுத்ததாக கெர்பர் ஒரு அருமையான டிராப் ஷாட்டை ஆட செரீனாவுக்கு அதை திருப்பி அடிக்க வாய்ப்பே ஏற்படாமல் 3-வது முறையாக டியூஸுக்கு சென்றது செரீனாவின் சர்வ். இந்நிலையில் முக்கியமான கட்டத்தில் செரீனா தனது சர்வில் டபுள் பால்ட் செய்ய கெர்பர் சார்பாக ஆட்டம் சென்றது. ஆனால் கெர்பரின் ஷாட் ஒன்று மீண்டும் நெட்டைத் தாக்க 4-வது டியூஸ்.

இப்படியே செல்ல கடைசியில் செரீனா மீண்டும் ஒரு டபுள் பால்ட்டை செய்து, பிறகு ஷாட் ஒன்றை வெளியே அடிக்க கெர்பருக்கு முக்கியமான பிரேக் வெற்றி கிடைத்தது. 4-2 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு தனது சர்வில் தவறு செய்யாமல் ஒரு ஏஸுடன் கெர்பர் கைப்பற்ற 5-2 என்று முன்னிலை பெற்றார்.

இதற்கு அடுத்த சர்வை செரீனா வீசி கடும் போராட்டத்துக்கிடையே செரீனா 3-5 என்று நெருங்கினார்.

சாம்பியன்ஷிப் பாயிண்டுக்கான சர்வ் கேமை கெர்பர் வீச டென்ஷனாக ஆட்டம் நகர்ந்தது. இதில் வில்லியம்ஸ் 40-15 என்று முன்னிலை பெற்றார். பிறகு ஒரு பந்தை வில்லியன்ஸ் நெட்டில் அடிக்க 40-30 என்று ஆனது. கடைசியில் கெர்பரின் போர்ஹேண்ட் ஷாட் வெளியே செல்ல செரீனா மீண்டும் பிரேக் செய்து 3-வது செட் 5-4 என்று பரபரப்பான கட்டத்தை எட்டியது.

அடுத்ததாக வில்லியம்சின் சர்வ். பேஸ்லைனிலிருந்து செரீனா ஒரு ஷாட்டை வலையில் அடிக்க 0-15. பிறகு மீண்டும் நெட்டை வில்லியம்ஸ் தாக்க 0-30. ஆனால் தளராத வில்லியம்ஸ் 194 கிமீ வேகத்தில் மீண்டும் ஒரு ஏஸை அடிக்க 15-30 ஆனது. அதன் பிறகான சர்வ் 17 ஷாட் ரேலிக்களை உள்ளடக்கிய அபாரமான டென்னிஸின் உச்சகட்டமாக அமைந்தது, கடைசியில் போர்ஹேண்ட் ஷாட் வின்னரை செரீனா அடிக்க 30-30. பிறகும் செரீனா, கெர்பர் விட்டுக் கொடுக்கவில்லை அடுத்த சர்வும் 15 ஷாட் ரேலியானது. இதில் ஒரு பேக்ஹேண்ட் ஷாட்டை வின்னராக செரீனா அடிக்க 40-30 என்று முன்னிலை பெற்றார்.

ஆனால் இந்நிலையில் கெர்பர் ஒரு சக்தி வாய்ந்த போர்ஹேண்டை அடிக்க செரீனா திருப்பி அடித்த போது பந்து வலையைத் தாக்கியது ஆட்டம் டியூஸுக்கு சென்றது. மீண்டும் ஒரு 10 ஷாட் ரேலியில் வில்லியம்ஸ் நெட்டில் அடிக்க சாம்பியன்ஷிப் பாயிண்டுக்கு அருகில் வந்தார். இதில் 4 ஷாட்கள் அடங்கிய ரேலியில் கடைசியில் வில்லியம்ஸ் வெளியில் அடிக்க கெர்பர் அபார வெற்றி பெற்றார். முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். செரீனா அதிர்ச்சியடைந்தார்.

6-4, 6-3, 6-4 என்று கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். மிக அருமையான ஒரு டென்னிஸ் இறுதி ஆட்டமாக இது அமைந்தது.

முதல் சர்வை சரியாக உள்ளே அடித்ததில் கெர்பர் 55% என்று முன்னிலை வகித்தார். இதில் முதல் சர்விலேயே புள்ளிகள் பெற்ற வகையில் கெர்பர் 73% என்று ஆதிக்கம் செலுத்தினார். இரண்டாவது சர்வில் வின்னர்களிலும் கெர்பர் 47% என்று செரீனாவைக் காட்டிலும் அதிக வெற்றி கண்டார்.

செரீனா 6 முறை டபுள் பால்ட் செய்தது, குறிப்பாக 3வது செட்டில் அடுத்தடுத்து 2 டபுள் பால்ட்கள் செரீனாவின் சரிவுக்குக் காரணமாயின. மொத்தம் 6 முறை டபுள் பால்ட் செய்தார் செரீனா. கருதிச் செய்யாத தவறுகள் வகையில் செரீனா வில்லியம்ஸ் 46 முறையும், மாறாக கெர்பர் 13 முறையும் தவறிழைத்தனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/article8172415.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.