• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை-இரா.சம்பந்தன் சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டிய காலம் விரைவில் வரும்.இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காகவும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாம் எப்போதும் உதவுவதற்கு தயாராகவே இருக்கிறோம்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம்.இந்தியாவுக்குச் சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களுக்குள்ளாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டுமெனவும் அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதியிடம் கூறியிருந்தார்.எனவே தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயல்லோம் அதனை எவராலும் தடுக்க முடியாது.சிங்கள மக்கள், தமிழ் மக்களின் தீர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. மேலும் அவர்களின் விரும்பமின்றி தமிழ் மக்களின் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.சிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால்தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்.அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகிலுள்ள அனைத்து மக்களும், சமமாகவும், சமாதானமாகவும் வாழ்கிறார்கள். இது இலங்கைக்கு புதுமையான விடயமல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இந்த-அரசாங்கத்தை-பகைக்க/
    • யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக ஒருமாத காலப்பகுதியில் 857 பேர் பயணம் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் நவம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் பயணிகள் விமான சேவையினை சென்னைக்கு ஆரம்பித்தது.இதன்படி திங்கள், புதன் , வெள்ளி ஆகிய நாட்களில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமானம் சேவையை நடத்தி வருகின்றது. ஒருமாத காலப்பகுதியில் 857 பேர் பயணித்துள்ளனர்.இதில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு 472 பேர் பயணித்துள்ளதுடன் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் 385 பேர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் ஆட்சிமாற்றத்தின் காரணமாக 2 ஆம் கட்டமான மேலதிக கட்டுமான பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் புதிதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பதிவியேற்ற பிரசன்ன ரணதுங்க யாழ்ப்பாணம் விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.இந்தியா 300 மில்லியனை வழங்கவுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் எனினும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடான பயணத்துக்கு அதிக வரி அறவிடப்படுதன் காரணமாக யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைக்கு பயணச்சீட்டின் விலை உயர்வாகவே உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் எதிர்பார்க்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணம்-சர்வதேச-விம-8/
    • தாயகத்தில் எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன-செல்வம் அடைக்கலநாதன் தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதை தடுத்து பாதுகாக்க முடியும்இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்கள் அங்கே குடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நிலங்கள் தொடர்ந்து களவாடப்படும். அவர்கள் அங்கேயே குடியுரிமையைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்தவர்கள் இங்குள்ள தமது நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து அந்த அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்தியாவின் குடியுரிமையச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அதேநேரம் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறுபட்ட கோரிக்கைகளை இந்த விடயத்தில் விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆகவே நிலத்தைக் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்கள் வரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதனைக் காப்பாற்றி பாதுகாக்கின்ற வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/தாயகத்தில்-எங்களுடைய-மக/  
    • அண்ணே,  நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.   மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும்.