Jump to content

இனியெல்லாம் ருசியே!


Recommended Posts

இந்த திரியில் சமையல் தொடர்பான சந்தேகங்கள் தீர்வுகள் பற்றிய தகவல்களை இணைக்க உள்ளேன்.

மேலதிக சந்தேகங்கள் இருந்தால் சுவி அண்ணா..:) (சமையல் கலை விற்பன்னர்) இடம் கேளுங்கோ அவர் விளக்கம் தருவார் என நம்புகிறேன்.

இப்ப கடியன் இல்லை :grin: என்ற துணிவில் ரென்சன் ஆகிற கேள்விகள் கேட்க கூடாது.

 

 

இனியெல்லாம் ருசியே! - 1

 
 

புத்தம் புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல... கரை கண்டவர்களும்கூட, 'சமையல், நன்றாக வர வேண்டுமே... சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே...’ என்கிற அக்கறையுடன்தான் ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை வாரிவிடுவது உண்டு.

'அடடா... காரம் தூக்கலா இருக்கே?' என்பது போன்ற சங்கடங்களும்... 'ஹோட்டல்ல மட்டும் எப்படி முறுகலா, அழகா தோசை வார்த்தெடுக்கறாங்க?' என்பது போன்ற சந்தேகங்களும் அடிக்கடி எட்டிப் பார்க்கும். இதோ... உங்கள் சமையல் அற்புதமாக அமைவதற்கு உதவும் வகையில், உங்களின் சங்கடங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விடை கொடுத்து விரட்டியடிக்கத் தயாராகிறார்கள்... நமக்கு மிகவும் பரிச்சயமான சமையல் கலை நிபுணர்கள்!

 

dotsss.jpg ஓட்டலில் சுடுவதுபோல் கல்தோசை சுடுவது எப்படி?

பச்சரிசியையும், உளுந்தையும் மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் போட்டு ஒன்றாகவே 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றிய பிறகு எண்ணெயை விட்டு தோசையைத் திருப்பிப் போட்டதும் லேசாக தோசையின் மீது தண்ணீர் தெளித்து, உடனே மறுபடியும் திருப்பிப் போட்டு கல்லிலிருந்து எடுத்துவிடவும்.

dotsss.jpg இட்லி 'புஸ்புஸ்’ என்று, அதேசமயம் சாஃப்ட்டாக வர என்ன செய்ய வேண்டும்?

உளுந்து அரைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்ச மாக நீர் ஊற்றி பொங்க பொங்க அரைக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம், 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த£ல்... இட்லி சூப்பராக வரும்.

p38.jpg

dotsss.jpg ஆப்பம் மிருதுவாக வர, என்ன வழி?

புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து... அரைக்கும்போது தேங்காய் துருவல் ஒரு கப், வெந்த சாதம் ஒரு கரண்டி சேர்த்து அரைத்து சுட்டால்... ஆப்பம் சூப்பரப்பு!

dotsss.jpg சப்பாத்தி சுடுவதற்கும், தோசை சுடுவதற்கும் தனித்தனி தோசைக்கல்லை பயன்படுத்த வேண்டுமா?

ஆம்... அவ்வாறு செய்வது நல்லது. அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்..

dotsss.jpg பூரி உப்பி வர... யோசனை கூறுங்களேன்...

மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவை பூரியாக செய்தால்... உப்பலான பூரி சமர்த்தாக உங்கள் தட்டில் 'ஹாய்’ சொல்லும்.

p38a.jpg

dotsss.jpg பிள்ளைகளை பசலைக் கீரை சாப்பிட வைப்பது எப்படி?

வதக்கிய பசலைக் கீரையுடன் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவோடு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாக சுட்டு, சாஸ் உடன் பரிமாறினால்.. தட்டு 'சட்’டென்று காலியாகிவிடும்.

dotsss.jpg வடை மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

அரைத்த மாவை கொஞ்சம் கிள்ளி, ஒரு கிண்ணத்திலுள்ள தண்ணீரில் போடவும். மாவு தண்ணீரில் மிதந்தால்... சரியான பதம். மிகவும் தண்ணீராக அரைத் திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும். கெட்டியாக அரைத் திருந்தால்... தண்ணீரில் மூழ்கி விடும்!

dotsss.jpg தயிர் கெட்டியாக கிடைக்க, வழி என்ன?

பாலை சுண்டக் காய்ச்சுங்கள். ஆறவிடும்போது... வெதுவெதுப்பான சூட்டுக்கு வந்ததும், ஒரு துளி மோர்விட்டு, 4, 5 முறை நன்கு ஆற்றி (காபிக்கு ஆற்றுவதுபோல) மண்சட்டியில் தோய்க்க... நல்ல கெட்டித் தயிர் கிடைக்கும்.

p38b.jpg

dotsss.jpg கூட்டு நல்ல சுவையில் இருக்க என்ன செய்ய வேண்டும்?

எந்த வகை கூட்டு செய்தாலும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்துக் கலக்கினால், கூட்டு... செம டேஸ்ட்டு!

dotsss.jpg  மோர்க்குழம்பு திக்காக வர, உபாயம் சொல்லுங்கள்...

மோர்க்குழம்புக்கு அரைக்கும் பொருட்களோடு பச்சைக் கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டித் தயிரில் போட்டு, சின்ன வெங்காயம் 4, பூண்டு 2 பல் இரண்டையும் சற்று கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும். இதனுடன் கடுகு, மிளகு, கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து, 2 முறை நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி 2, 3 முறை ஆற்றவும் (காபிக்கு ஆற்றுவது போல). இப்படிச் செய்தால், மோர்க்குழம்பு திக்காக இருக்கும். அதிக நேரம் அடுப்பில் வைத்தால் நீர்த்துப் போய்விடும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

ம்ம்...பயனுள்ள தகவல்! நன்றி சகோதரம்! :) ம்..தயிர் செய்ய மண்சட்டி சுமேரியரிடம் வாங்கணும்....:cool:

 

 

சுவியண்ணா மட்டும் தானா சமையல் கலை விற்பன்னர்?? tw_dizzy:

:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமயல் கலை விற்பன்னர், ஆஹா விருது பெரிதாய் இருக்கு....!

நல்லவிடயம் நடத்துங்கள் நவீன், தெரிந்தவரை தோள் கொடுப்போம் ,தெரியாததையும் தெரிந்து கொண்டு, கொண்டுவந்து சேர்ப்போம்....!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுவியர்! இது கொஞ்சம் தமாசுக்கு.....:)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட் கொமடி கு. சா... ஐ லைக் இட்....! :)

 சமையலில் மையல் கொண்ட தையல்களும். நளன் , பீமன்களும் கொதித்திருக்கும்... சே.. கொலுவீற்றிருக்கும் இவ்அவையில்  எனக்கு விருது கொடுத்து விலங்கிட்ட ரகுவரனுக்கு...சே... நவீனனுக்கு என்ன ஒரு தைரியம்...! :grin:

நிசமா சமையல் பிட்சிங் ஒன்றும் நடக்கேல்ல நம்பணும்...!  :grin:

Link to comment
Share on other sites

டிப்ஸ்... டிப்ஸ்...

 

 

பொங்கலில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிதளவு ரவையை வறுத்து பொங்கலோடு சேர்த்து கிளறினால், பொங்கல் கெட்டியாகிவிடும். ருசி கூடுமே தவிர குறையாது!

p60a.jpg

p60d.jpg

 

ழை, பனிக்காலங் களில் பொரித்த அப்பளம், வற்றல், வடகம் விரைவில் நமர்த்துவிடும். இவற்றை டப்பாவில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், இரண்டு நாட்களானாலும் மொறுமொறுப்புடன் இருக்கும். இதே போன்று பிஸ்கட்டையும் அந்த கவருடனேயே ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சீக்கிரம் நமர்த்துப் போகாது.

http://www.vikatan.com

 

p60c.jpg

a%286%29.jpgழைக்காலத்தில் தயிர் தோய்வது சிரமம். குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி, வெளியே ஊற்றிவிடவும். பாலை சற்று மிதமான சூட்டில் பாத்திரத்தில் ஊற்றி, கொஞ்சம் தயிரை விட்டுக் கலக்கவும். காய்ந்த மிளகாயின் காம்பை அதில் போடவும். இந்தப் பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து மூடி வெயிட் போடவும். காலையில் புளிப்பில்லாத, கெட்டியான தயிர் கிடைக்கும்.

 

p60b.jpg

ரோட்டா அல்லது நாண் செய்ய மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக குடிக்கிற சோடாவை ஊற்றிப் பிசைந்தால்... பரோட்டா/நாண் மிருதுவாக, பஞ்சுபோல் மெத்து மெத்தென்று வரும் 

 

 

ப்பாத்திக்கு மாவு பிசையும்போது அத்துடன் சூடான பால், வாழைப்பழம் சேர்த்தால் மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

p82b.jpg

 

குக்கருக்குள் வைத்து சமைப்பதற் கென்று பிரத்யேக அலுமினிய பாத்திரங் கள், குக்கருடன் சேர்த்தே தரப் படுவதுண்டு. இவற்றை பெரும்பாலும் உபயோகப்படுத்துவதில்லை பலரும். இத்தகைய பாத்திரங்களை கடையில் கொடுத்தால் சீராக துளை போட்டுக் கொடுப்பார்கள் அதனை காய்கறி வடிதட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

p82c.jpg

Link to comment
Share on other sites

p36c.jpg

பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி அதில் பால் சிறிதளவு விட்டு அரைத்து, தேன் கலந்து சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொண்டால் சுவையாக இருக்கும்.

 

p36g.jpg

கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால், ஃப்ரெஷ் ஆகிவிடும்; நறுக்கவும் எளிதாக இருக்கும்.

 

p22a.jpg

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

 

p22f.jpg

 

றிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

 

p22c.jpg

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

Aval vikatan

Link to comment
Share on other sites

Aval Kitchens Foto.
 

சப்பாத்தி மாவு புதிய சுவையில் வர, வெள்ளரிக்காயைத் தோல் சீவி, துருவி அரை கப் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு 3 கப் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்க்காமல் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வையுங்கள். சப்பாத்தி இடத்துவங்கும் போது தேவையான உப்பு சேர்த்து பிசைந்து இட்டால் சத்தும் சுவையும் அருமையாக இருக்கும்.

 

12592419_478542735667719_814385149003854

பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி நமத்து போகாமல் நீண நேரம் இருக்கும்.

 

Aval Kitchens Foto.
 

தோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிது பழைய சாதம் சேர்த்து அரைத்தால் தோசை மொருமொருப்பாக இருக்கும்.

 

 

Aval Kitchens Foto.
 

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

 

Aval Kitchens Foto.
 

சப்பாத்தி மாவு பிசையும் போது மாவுடன் அரை வாழைப்பழம்.1 டீஸ்பூன் தயிர் ஊற்றி வெந்நீர் ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி நன்கு உப்பி வருவதுடன் மிகவும் மிருதுவாக இருக்கும்.#

அவள் விகடன்

 

 

Link to comment
Share on other sites

இனியெல்லாம் ருசியே! - 3

 
சந்தேகங்களும்.... தீர்வுகளும்

 

 

பிரமாதமாக சமையல் செய்து, சாப்பிடுகிறவர்களின் பாராட்டுகளை அள்ள வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் விருப்பங்களில் மிகமுக்கியமான ஒன்று. இதற்கு உதவும் வகையில் சமையல் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கொடுப்பதோடு, உங்கள் சமையல் மேலும் சிறப்பாக விளங்க ஆலோசனை கூறும் பகுதி இது.

இந்த இதழில் வழிநடத்த வருபவர் வசந்தா விஜயராகவன்.

எவ்வாறு தயாரித்தால் ரசம் நல்ல ருசியுடன் அமையும்?

முதலில், புளித் தண்ணீரை 2 நிமிடம் கொதிக்கவிடவும் (புளி வாசனை போவதற்காக). பின்பு, உப்பு, ரசப்பொடி சேர்த்து பொங்கி வரும்போது இறக்கிவிடவும். கடைசியாக கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.  

தோசை, இட்லி மாவு புளிக்காமல் இருக்க உபாயம் கூறுங்களேன்...

மாவை அரைத்தவுடன் நன்றாக கலந்து, உப்பு சேர்க்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இட்லி     செய்ய வேண்டும் என்றால், வேண்டிய அளவு மாவை மட்டும் முதல் நாள் இரவே வெளியில்      எடுத்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.  தோசைக்கு ஒரு மணி நேரம் முன்பு மாவை     வெளியில்  எடுத்து உப்பு சேர்க்கவும். இப்படி செய்தால் இட்லி, தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்கும்.

பிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்க... வற்றலில் நீண்ட நாள் பூச்சிகள் வராமல் பாதுகாக்க என்ன செய்யலாம்?

வற்றல் அல்லது பிஸ்கட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது உப்புத்தூளை ஒரு சிறு துணியில் மூட்டையாக கட்டி போடவும்.

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?

சாம்பாரில் எலுமிச்சை அளவு சாதத்தை உருண்டையாக்கி சேர்த்தால்... அதிகப்படியான உப்பை இழுத்துவிடும். சரியான ருசியுடன் அமையும்.

காய்ந்த ஜவ்வரிசி வற்றலில் உப்பு அதிகமாகிவிட்டால் சரிசெய்ய முடியுமா?

காய்ந்த ஜவ்வரிசி வற்றலை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வைத் திருந்து வடியுங்கள். மறுபடியும் வெயிலில் காய வைத்து எடுத்தால்... உப்பு போயே போச்!

பச்சைக் காய்கறிகளை பொரியல் செய்யும்போது நிறம் மாறாமல் சமைக்க வழி என்ன?

நறுக்கிய பச்சைக் காய்கறியை கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு, நீரை வடிய விடவும். அதன் பிறகு பொரியல் செய்தால்... பச்சை காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும். வடித்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரித்து பருகலாம்.

p58a.jpg

காபி டிகாஷன் 'திக்’காக இருக்க என்ன செய்வது?

ஃபில்டரில் காபி பொடி போடுவதற்கு முன், ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு அதன் மேல் காபி பொடி போட்டு டிகாஷன் இறக்கினால்... 'திக்’காக இருக்கும்.

எலுமிச்சை சாதம் ருசியாக வர ஐடியா சொல்லுங்கள்...

சாதம் கலக்கும்போது கடைசியில் சிறிதளவு வறுத்த வெந்தயத்தை பொடி செய்து தூவினால், எலுமிச்சை சாதம் நல்ல மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.

குழம்பில் புளி அதிகமாகிவிட்டால் எப்படி சரி செய்வது..?

சிறிது வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டால், புளிப்பு போன இடம் தெரியாது.

பாயசம் நீர்த்துவிட்டால் எப்படி சரியாக்குவது..?

சிறிதளவு சோள மாவு அல்லது கஸ்டர்ட் பவுடரை, நீரில் கரைத்து பாயசத்தில் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். பாயசம் சரியான பதத்துக்கு வந்துவிடும்.

ரசத்தில் புளிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்யலாம்?

ரசத்தில் கால் டீஸ்பூன் மாங்காய்த்தூள் (அம்சூர் பவுடர்) சேர்த்தால்... சரியாகிவிடும்.

அவள் விகடன்

Link to comment
Share on other sites

பிரெட்தூள் கிடைக்காதபோது கட்லெட் செய்ய எதை உபயோகிக்கலாம்?
ரவை, பொடித்த ஓட்ஸ், நொறுக்கிய சேமியா, கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்து கட்லெட் செய்யலாம்.

12647511_480851858770140_799984061440502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பானை மொரமொரப்பாகச் சூடுபண்ணிப் பின் பொடியாக்கியும் உபயோகிக்கலாம்...!

Link to comment
Share on other sites

இனியெல்லாம் ருசியே! - 4

 
சந்தேகங்களும்... தீர்வுகளும்

 

 

மையல் என்பது வேலை மட்டும் அல்ல... கலையும்கூட! இந்தக் கலையில் வல்லமை படைத்தவர்கள், சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதுடன், உங்கள் சமையல் மிகச் சிறப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு உதவ வருபவர் லஷ்மி ஸ்ரீநிவாசன்.

மாம்பழம் புளிப்பாக இருந்தால் என்ன செய்யலாம்?

சிறிதளவு சர்க்கரை சேர்த்து மில்க்ஷேக் செய்யலாம். அல்லது, சிறிதளவு வெல்லம் சேர்த்து மாம்பழ சாம்பார் செய்யலாம்.

வீட்டில் திராட்சை அதிகமாக இருந்தால், அதை வேறு வகையில் பயன்படுத்துவது எப்படி?

கடாயில் எண்ணெய் விட்டு சிறிது கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, திராட்சைப் பழத்தை விதை நீக்கி சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சுவையான திராட்சை தொக்கு தயாரிக் கலாம். சிறிதளவு வெந்தயப் பொடியும் சேர்க்க மறக்க வேண்டாம்.

p60a.jpgp60c.jpg

அவியல் மிகுதியாகிவிட்டால் அதை என்ன செய்யலாம்?

நீரை வடித்து, காய்கறிகளை அலசி எடுத்து, நறுக்கிய வெங்காயம் உப்பு, காரம் சேர்த்து பூரணம் செய்து, அதை வைத்து சமோசா/கட்லெட் செய்யலாம்.

அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சத்தான சாதம் ஊட்டுவது எப்படி?

2 டீஸ்பூன் அரிசி, ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான உப்பு, நெய், மஞ்சள்தூள் மற்றும் நறுக்கிய கேரட் சேர்த்து, குக்கரில் குழைய வேகவிட்டு மசித்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

p60b.jpgp60e.jpg

போளியின் ஓரங்களில் மைதா மாவு மிகுந்து, போளி கெட்டியாக வராமல் இருக்க ஆலோசனை கூறுங்களேன்...

பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, பூரணம் நிரப்பி, மீண்டும் மூடும்போது, அதில் குவியும் அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால்... போளி மிருதுவாக இருக்கும்.

காலைவேளையில் உடனடியாக பருப்பு உசிலி தயாரிக்க ஒரு சுலபமான வழி... ப்ளீஸ்!

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 200, சிவப்பு மிளகாய் - 10, பெருங்காயம் சிறிதளவு... இவற்றை ரவை போல் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு உசிலி தேவைப்படும்போது இதை வேண்டிய அளவு எடுத்து... தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது வெந்நீர் தெளித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காயை சேர்த்து, ஆவியில் வேகவைத்த பருப்பையும் உதிர்த்துக் கிளறினால்... அவசர பருப்பு உசிலி தயார்.

p60f.jpgp60j.jpg

சாதா சாம்பார், பிசிபேளா சாம்பார் போல் இருக்க ஐடியா சொல்லுங்கள்....

சாம்பார் பொடி செய்யும்போது வழக்கமாக போடும் தனியாவைவிட, சிறிதளவு அதிகமாக சேர்த்து, துருவி வறுத்த கொப்பரை, சிறிதளவு வறுத்த கசகசா சேர்த்துப் பொடிக்க... இனிமேல் தினமும் உங்கள் வீட்டில் பிசிபேளா சாம்பார்தான்.

காஞ்சிபுரம் இட்லி பிரமாதமான ருசியுடன் அமைய என்ன செய்வது?

காஞ்சிபுரம் இட்லிக்கான ஸ்பெஷல் மாவை அரைத்து புளிக்க வைத்த பின், மந்தார இலை / வாழை இலையை டம்ளர் சைஸுக்கு ஏற்ப கத்தரித்து, நெய் தடவி, பின் டம்ளரில் இறக்கி மாவை முக்கால் பங்கு விட்டு வார்க்க, காஞ்சிபுரம் இட்லி சூப்பர் சுவையில் கிடைக்கும். மேலும், அந்த இட்லியின் ஸ்பெஷல் வாசனை இலையில்தான் உள்ளது.

p60g.jpg p60d.jpgp60i.jpg

காராமணி, கொத்தவரங்காய், பீன்ஸை எளிதில் நறுக்க ஒரு உபாயம் கூறுங்கள்...

அந்தக் காய்களை காம்பு நீக்கி... 10, 15 சேர்த்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு நறுக்கினால்... எளிதாக இருக்கும்.

கட்டிப் பெருங்காயத்தை அவசரமாக உபயோகப்படுத்த ஐடியா கிடைக்குமா.?

வேண்டிய அளவு கட்டிப் பெருங்காயத்தில் வெந்நீர் விட்டு, அது ஊறி கரைந்த பின் ஒரு சிறிய பாட்டிலில் எடுத்து, ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். இந்த ரெடிமேட் பெருங்காய நீர்... அவசரத்துக்கு கை கொடுக்கும்.

VIKATAN

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இனியெல்லாம் ருசியே! - 5

 

சந்தேகங்களும்... தீர்வுகளும்

 

 

 

சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதற்கும், உங்கள் சமையல் மேலும் பிரமாதமாக அமைவதற்கும் உதவும் வகையில் சமையல் கலையில் சிறந்து விளங்குபவர்கள் ஆலோசனை கூறும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு  வழிகாட்ட வருபவர் ராஜேஸ்வரி கிட்டு.

 

முட்டை சேர்க்காமல் பான் கேக் மிருதுவாக வருமா?

கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சிறிது குலோப்ஜாமூன் மிக்ஸ் கலந்து, ஒரு வாழைப்பழம் சேர்த்து அடித்து, சர்க்கரை, தேங்காய்ப் பால் கலந்து செய்தால்... பான் கேக் மிகவும் சாஃப்ட்டாக வரும்.

குழம்பு, கூட்டு, பொரியல் செய்யும்போது தேங்காய்க்குப் பதில் என்ன சேர்க்கலாம்?

குழம்பு, கூட்டுக்கு கசகசாவை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துப் போட்டு இறக்கலாம். பொரியலுக்குப் பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை பொடித்துக் கலக்கலாம்.

வாழைப்பழம் மிகுந்துவிட்டால் எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு சென்ட்டி மீட்டர் கனமுள்ள வில்லைகளாக நறுக்கி, கொஞ்சமாக எலுமிச்சைச்சாறு தெளித்துக் கலந்து, வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் காய வைத்துக் கொள்ளவும். இதை, மிட்டாய் போல் வாயில் போட்டுச் சுவைக்கலாம். கேசரி பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றுக்கு இந்த வில்லைகளை உடைத்து நெய்யில் வறுத்தும் போடலாம்.

p54.jpg

ஆப்பம் சாஃப்ட்டாக வர என்ன செய்யலாம்?

ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீரை இரண்டு நாட்கள் மூடி வைத்துப் புளித்ததும், ஆப்பமாவு அரைக்கும்போது சேர்த்துவிடலாம். ஆப்பம் ஊற்றும்போது கொஞ்சமாக ஆப்பசோடா, ஒரு கப் தேங்காய்ப்பால் கலந்து செய்தால்... ஆப்பத்தின் மிருதுத்தன்மைக்கு, பஞ்சு வந்து கெஞ்சும்!

உடல் சூடு தணிய எளிமையான ஜூஸ்  ப்ளீஸ்...

சுத்தப்படுத்திய மல்லித்தழை, சிறிது பனங்கல்கண்டு, தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டிப் பருகலாம். விரும்பினால் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் அருந்தலாம்.

p54a.jpg

வற்றல் குழம்பை ருசிபார்க்கும்போது... சுவை, மணம், எதுவுமே இல்லாதது போல் தோன்றினால், சரிசெய்வது எப்படி?

ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவு புளிக்காய்ச்சல் எடுத்துக் குழம்பில் கலந்துவிட்டால், சுவையும் மணமும் ப்ளஸ் ப்ளஸ்தான்!

அவசரத்துக்குச் செய்ய ஒரு சாண்ட்விச் ரெசிபி தாருங்களேன்...

பிரெட் ஸ்லைஸில் குல்கந்து நிறைய தடவி, சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளுக்குப் பிடிக்கும். இது குளிர்ச்சியும் தரும். பெரியவர்களுக்குக் காரசாரமாக சாண்ட்விச் செய்ய... ஒரு பிரெட் ஸ்லைஸ் மேல் சிறிது புளிக்காய்ச்சல் பூசி, அதன் மேல் தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கேரட் வில்லைகள் வைத்து... மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து சுலபமாக வேலையை முடிக்கலாம்.

p54b.jpg

கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால் சில சமயம் ஒருவிதமான வாடை வருகிறதே..?

கொண்டைக்கடலையைக் கழுவி ஊற வைத்தபின், சுமார் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடி கழுவி தண்ணீரை மாற்ற வேண்டும். மறந்துபோய் மாற்றாமல் விட்டு, வாடை வந்தால்... சிறிது கரம் மசாலா சேர்த்துச் செய்தால் சரியாகிவிடும்.

வெயில் காலத்தில் சூடு தணிக்கும் ரசம் எப்படி செய்வது..?

கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிட்டு... ரசப்பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் கொஞ்சம் திக்கான தேங்காய்ப்பால், மல்லித்தழை சேர்த்து இறக்கிவிடவும். லேசாக ஆறியதும் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்... உஷ்ணத்தை தணிக்கும் சுவையான ரசம் தயார்.

vikatan

Link to comment
Share on other sites

இனியெல்லாம் ருசியே! - 6

 
சந்தேகங்களும்... தீர்வுகளும்

 

 

ன்னதான் சிரமம் எடுத்துக் கொண்டு, கவனமாக உணவைச் சமைத்து, நன்றாக வந்திருப்பதாக திருப்தி அடைந்தாலும்... அதைச் சாப்பிடுபவர்கள் 'சூப்பர்!’ என்று பாராட்டும்போதுதான் நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும். அந்த வகையில் உங்கள் சமையல் பாராட்டும்படியாக அமைவதற்கும், சமையல் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் உங்களுக்கு சமையல் கலை நிபுணர்கள் உதவிக்கரம் நீட்டும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார் செ.கலைவாணி.    

சப்பாத்தி சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும். அதைத் தடுக்க என்ன செய்யலாம்?

மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி மாவில் விட்டு பிசைந்து, சப்பாத்தி செய்தால் புளிப்பும், காரமும் சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும். இந்த சப்பாத்தி p52a.jpgஅஜீரணத்தைத் தடுக்கும்.

'புஸ்’ஸென்று உப்புகிற, சாஃப்ட்டான சப்பாத்தி செய்ய உதவுங்களேன்...

சப்பாத்தி மாவு பிசையும்போது கால் கப் பால் விட்டு பிசைய, எண்ணெய் விடாமலேயே... புஸ்ஸென்று மிருதுவான சப்பாத்தி ரெடி.

தொக்கு வகைகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த ஐடியா கொடுப்பீர்களா..?

p52bn.jpgவெங்காய தொக்கு, மாங்காய் தொக்கு, தக்காளி தொக்கு போன்றவை நீண்ட நாட்கள் கெடாமலிருக்க, எலுமிச்சைச் சாறு பிழிய வேண்டும்.

பொன்னிறமான, முறுகலான அடை செய்வது எப்படி?

இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மாவுடன் சேர்த்து அரைத்து அடை சுட்டால்... பொன்னிறமாக, முறுகலாக இருக்கும்.

p52c.jpgஅதிக எண்ணெய் சேர்க்காமல் வெங்காயத்தை வதக்க வழி கூறுங்கள்...

வெங்காயத்துடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்தால், அதிக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வதக்கலாம்.

சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க ஒரு ஆலோசனை ப்ளீஸ்...

சாம்பாருக்கு துவரம்பருப்பை வேக வைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவிடவும்.

p52d.jpgபாகற்காய் பொரியலில் கசப்பு தெரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பொரியலில் எலுமிச்சைச் சாறு அல்லது புளித்த தயிர் விட்டு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, நீர் தெளித்து வேகவிட்டால், பாகற்காயின் கசப்பு தெரியாது.

சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது, சிலசமயம் சீக்கிரம் வேகாமல் சலிப்பு தருகிறதே... இதை சரிசெய்வது எப்படி?

p52e.jpgp52f.jpgசேனைக்கிழங்கு சீக்கிரம் வேக ஒரு உபாயம்... வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது கல் உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்து, அதன் பின் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் சேனைக்கிழங்கைப் போட்டு வேகவிட்டால்... கிழங்கு விரைவில் வெந்துவிடும்.

உளுந்து வடை மாவு நெகிழ்ந்துவிட்டால் எப்படி சரியாக்குவது...

ஒரு பிடி மெது அவலைக் கலந்து வடை தட்டினால், தயாரிப்பதற்கு சுலபமாகவும், மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும்.

கேரட், பீட்ரூட் வாடிவிட்டால், அவற்றை பயன்படுத்துவது எப்படி? 

 கேரட், பீட்ரூட்டை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால், புதியது போல ஆகும்.

p52g.jpg

கரகர மொறுமொறு பூரி செய்ய உதவுங்களேன்... பூரி கரகரவென்றிருக்க, மாவு பிசையும்போது, பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்க்க வேண்டும்.

vikatan

Link to comment
Share on other sites

இனியெல்லாம் ருசியே! - 7

கட்லெட் செய்யும்போது ரஸ்க்தூள் எண்ணெயில் உதிராமல் இருக்க என்ன செய்யலாம்?

ரஸ்க் தூளில் ஒரு டீஸ்பூன் மைதா மாவைக் கலந்து, பின்னர் கட்லெட்டைப் புரட்டி எண்ணெயில் போட்டால், தூள் எண்ணெயில் உதிர்ந்து கருகாமல் இருக்கும்.

வித்தியாசமான பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிப்பது எப்படி?

கடைகளில் விற்கும் பக்கோடாக்களை வாங்கி, அதில் இருக்கும் பெரிய துண்டுகளை எடுத்து பருப்பு உருண்டைக் குழம்புக் கலவையில் போட்டுத் தயார் செய்தால், வித்தியாசமான பக்கோடா உருண்டைக் குழம்பு ரெடி!

சில்லி காலிஃப்ளவர், எண்ணெய் குடிக்காமல் இருக்க உபாயம் தாருங்களேன்...

பூக்களை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து (அரைவேக்காடாக), சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால்... எண்ணெய் குடிக்காத சில்லி காலி ஃப்ளவர் தயார்.

பாசிப்பருப்பு பாயசம் கூடுதலாகவும், ருசியாகவும் இருக்க என்ன வழி?

பாசிப்பருப்புடன் சிறிது பச்சரிசியையும் வாசம் வரும்வரை வறுத்து வேக வைக்கலாம். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலை சேர்த்தால், கூடுதல் ருசி தரும்.

பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து செய்யும்போது காய்கறி கலவையில் நிறம் இறங்காமல் இருக்க என்ன செய்வது?

வாணலியில் எண்ணெய் ஊற்றி பீட்ரூட்டை தனியாக சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு மற்ற காய்களுடன் சேர்த்து வேக வைத்தால் நிறம் இறங்காது.

p61.jpg

அழகர்கோவில் தோசை சூப்பராக செய்யும் முறை என்ன?

புழுங்கலரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரிக்கு சரியாக எடுத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாயை அரைத்து மாவில் கலந்து, தேவையான பச்சரிசி மாவு, உப்பு போட்டுக் கலந்து ஊறவிட்டு, மறுநாள் காலையில் நெய்       விட்டு தோசை வார்த்தெடுத்தால், சுவையான அழகர்கோவில் தோசை ரெடி.

பனீரை வீட்டிலேயே எப்படி செய் வது... எப்படி பயன்படுத்துவது?

தேவையான பாலைக் காய்ச்சி, நன்கு கொதித்தவுடன் அதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து திரிக்கவும். திரிந்த பாலை சுத்த மான பருத்தி துணியில் வடிகட்டினால் கொஞ்சம் கெட்டியான, மிருதுவான பனீர் கிடைக்கும். அதை சப்பாத்தி பலகையில் வைத்து சதுரங்களாக வெட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது எடுத்து எண்ணெயில் பொரித்தோ, அல்லது அப்படியே உதிர்த்தோ ரெசிபிகளில் சேர்க் கலாம். இதை 3 நாட்கள் வரை ஃப்ரீஸரில் வைத்து உபயோகிக்கலாம்.

 

சாதத்தில் போட்டு சாப்பிட திடீர் பொடி ரெசிபி..?

சிறிதளவு பொட்டுக்கடலையுடன், வறுத்த பாசிப்பயறு, பூண்டு 2 பல், காய்ந்த மிளகாய் ஒன்று, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... மணம் வீசும் பொடி தயார். சாதத்தில் நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்... சூப்பரோ சூப்பர்தான்!

மேக்ரோனி, சேமியா போன்றவை உதிரியாக வர என்ன செய்யலாம்?

அளவை விட, அதிக நீரில் உப்பு, சிறிது எண்ணெய் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் சேமியா (அ) மேக்ரோனியை போட்டு முக்கால் பதமாக வெந்தவுடன் எடுத்து வடிகட்டி, குளிர்நீரில் அலசினால் உதிரியாக, ஒட்டாமல் வரும்.

vikatan

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 5 months later...

இனியெல்லாம் ருசியே! 9

 

 

உடையாத போளி... உதிராத பஜ்ஜி!சந்தேகங்களும்... தீர்வுகளும் தீபா பாலசந்தர் ஃபுட்ஸ்

 

 

 பாராட்டுக்கு மயங்காத, அதை எதிர்பார்க்காத மனித உள்ளம் என்பது அபூர்வம். அதுவும் சமையலறை உஷ்ணத்தை தாங்கிக் கொண்டு, நீண்டநேரம் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு, 'சூப்பர்’ என்ற ஒரு வார்த்தை... எந்த களைப்பையும் நீக்கும் உற்சாக டானிக்! இந்த டானிக் தினந்தோறும் உங்களுக்கு கிடைக்கும் விதத்தில்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், அந்தக் கலையில் வித்தகர்களாக விளங்குபவர்கள் உதவிக்கு வரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு அளவற்ற அன்புடன் ஆலோசனை கூறுபவர்... சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.  

வாழைப்பூ ஆயும்போது, கையில் பிசுக்கு ஒட்டுவதை எப்படித் தவிர்ப்பது?

வாழைப்பூ ஆயும்போது உப்பை கையில் தடவிக் கொண்டு ஆய்ந்தால் பிசுக்கு ஒட்டாது.

 வெங்காய பஜ்ஜி உதிராமல் வர என்ன செய்யலாம்?

வெங்காயத்தை மெதுவாக எண்ணெயில் வதக்கி, அதன்பிறகு பஜ்ஜி செய்தால், வட்ட வட்டமாக பிரியாமல் பஜ்ஜி செய்யலாம்.

சப்பாத்தியை எடுத்துச் செல்லும்போது அதிக நேரம் சூடாக இருக்க என்ன வழி..?

 சப்பாத்தியை, ஃபாயில் பேப்பரில் (சில்வர் பேப்பர்) சுற்றி எடுத்துச் சென்றால்... அதிக நேரம் சூடாக இருக்கும்.

 காய்ந்த மிளகாயை வறுக்கும்போது ஏற்படும் நெடியை எப்படித் தவிர்ப்பது?

மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால், இருமலை உண்டாக்கும் நெடி வராது.

p54.jpg

 திடீர் விருந்தாளிக்கு கொடுக்க மிகவும் ஈஸியான ஸ்வீட் ப்ளீஸ்...

பிரெட்டை நீளமாக வெட்டி நெய்யில் பொரித்து, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்க... சுவையான திடீர் ஸ்வீட் ரெடி!

 வெல்லத்தை எளிதாக பொடிப்பது எப்படி?

வெல்லத்தை கேரட் துருவியின் பெரிய துளைகள் உள்ள பக்கம் துருவினால், பூப்பூவாக உதிர்ந்து வரும்.

 ரவா தோசை மொறுமொறுவென வருவதற்கு என்ன அளவு போட வேண்டும்?

ரவை 2 பங்கு, மைதா ஒரு பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு என்ற அளவில் சேர்த்து, மாவு தயாரித்து, தோசை வார்த்தால்... மொறுமொறுப்பாக வரும்.

 அல்வா கிளறும்போது, இறுகி பாறை போல் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்வது?

முழு தேங்காயை துருவி அரைத்து பாலெடுத்து, அல்வாவில் ஊற்றி, மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு கிளறினால், அல்வா நெகிழ்ந்து சுவை கூடுதலாகி வரும்.

 ஃப்ரிட்ஜில் வைத்தாலும், கரன்ட் பிரச்னையால் மாவு புளிப்பதை எப்படி தவிர்ப்பது?

இட்லி, தோசை மாவுடன் சிறிது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் போதும்... மாவு சீக்கிரம் புளிக்காது.

 p54a.jpgஏலக்காய் நமத்துப் போய்விட்டால் பொடிப்பது எவ்வாறு?

அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, நமத்துப் போய்விட்ட ஏலக்காய்களை அதில் போட்டு புரட்டி எடுத்து, பின்னர் பொடிக்க... நைஸாக பொடியும்.

 போளியை வேகவிட்டு எடுக்கும்போது உடைந்து போகாமல் மிருதுவாக வர வழிமுறை சொல்லுங்களேன்...

போளிக்கு பிசைந்த மைதா மாவை நன்கு உலர்ந்த ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து, பிறகு வழக்கம்போல் தயாரித்தால்... போளி விரிசல் விடாமல் மிருதுவாக வரும்.

 குக்கரின் உள்பாகம் 'பளிச்’சென இருக்க என்ன செய்யலாம்?

முதல் நாள் இரவே புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் எடுத்து தேய்க்க... பளபளவென ஆகிவிடும்!

vikatan

Link to comment
Share on other sites

  • 1 month later...

இனி எல்லாம் ருசியே! - 10

 

 

 

சாப்பிடுபவர்கள் முகம் மலர்ந்தால்தான், சமைப்பவர்களின் உள்ளம் நிறையும். இந்த நிறைவை உங்களுக்கு நிரந்தரமாக அளிக்கும் நோக்கத்துடன்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் செய்யும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்க¬ளை நிவர்த்தி செய்யவும் சமையல் கலையில் கைதேர்ந்தவர்கள் ஆலோசனை தரும் பகுதி இது. இந்த இதழில் உதவிக்கரம் நீட்டுபவர், கௌரி ஷர்மா.

சாம்பார் தயாரிக்கும்போது பல சமயங்களில் நீர்த்துப்போய் மேலே தெளிவாகத் தங்கிவிடுகிறதே! ருசி மாறாமல் சாம்பார் கெட்டியாவதற்கு என்ன செய்யலாம்?

சாம்பாரின் மேலே தெளிவாக நிற்கும் நீரை ஒரு பாத்திரத்தில் வடித்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு பொட்டுக்கடலை, இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் இரண்டையும் மிக்ஸியின் சிறிய ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் பொடியாக்குங்கள். வடித்து வைத்திருக்கும் தெளிவான சாம்பார் நீரில் இந்தப் பொடியைப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, பிறகு, இதை சாம்பாரில் சேர்த்து விடுங்கள். கவனிக்கவும்... மொத்த சாம்பாரையும் கொதிக்கவிட வேண்டாம். ஏற்கெனவே தேங்காய் அரைத்துவிட்ட சாம்பார் என்றால், தேங்காய் துருவலைக் குறைத்துக் கொள்ளலாம்.

ரசத்தின் தெளிவான பகுதியை சாப்பிட்ட பின் ரசத்தின் வண்டல் பாகம் மிஞ்சி விடுகிறது. அதை எப்படி உபயோகிக்கலாம்?

10 சின்ன வெங்காயம், அல்லது பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் சாம்பார் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் துருவிய தேங்காயையும் தூவி மேலும் ஒரு நிமிடம் வதக்கி ரச வண்டியில் சேர்த்துவிட்டால்... கமகம வெங்காய சாம்பார் ரெடி!

இஞ்சித் தேநீர் தயாரிக்கும்போது இஞ்சியை எப்போது சேர்ப்பது?

தேநீரில் இஞ்சியின் காரச்சுவை தூக்கலாக இருக்க வேண்டுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியை நசுக்கி, ஆரம்பத்திலேயே தண்ணீரில் போட்டுவிட வேண்டும். பிறகு, தேநீர் தூள், பால் என சேர்க்கலாம். ஜீரணக்கோளாறு, தொண்டை எரிச்சல் முதலியவற்றுக்கு இந்த டீ இதமாக இருக்கும். வெறும் இஞ்சியின் மணம் மட்டும் போதுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டுகளாக்கி, தேநீர் கொதித்ததும் கடைசியில் சேர்க்கலாம்.

p52.jpg

மெதுவடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்கும்போது, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தால், பிளேடு நகர மாட்டேன் என்கிறது. தண்ணீர் ஊற்றினால் மாவு இளகிவிடுகிறது.. மாவு சரியான பதத்தில் வர என்ன செய்யலாம்,?

உளுந்தை 2 முறை நன்கு கழுவுங்கள். பிறகு, அளவாகத் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊற வையுங்கள்.. மிக்ஸியில் முதலில் பாதியளவு உளுந்தை மட்டும் போட்டு கொஞ்சம்  தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். மாவு தளர்வாகத்தான் இருக்கும். இப்போது மீதி உள்ள உளுந்தைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். மாவு வடை பதத்துக்கு அரைபட்டுவிடும். இத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை கலந்து வடை சுடலாம்.

வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்காமலேயே ருசியான பருப்பு ரசம் தயாரிக்க முடியுமா?

ஓ... கால் மணி நேரத்திலேயே தயாரிக்கலாமே! மிக்ஸியின் சிறிய ஜாரில் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, தக்காளிப் பழத் துண்டுகள், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கைந்து மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்... இவற்றுடன் நெல்லிக்காய் அளவு புளியையும் உதிர்த்துப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து சில வினாடிகள் கிளறி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். ஏழெட்டு நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான, கமகம பருப்பு ரசம் ரெடி.

p52a.jpg

ரயில் பயணங்களில் இட்லியில் மிளகாய்ப்பொடி தடவி எடுத்துப் போகும்போது, மிளகாய்ப்பொடியின் சுவை இட்லியின் உள் பாகத்தில் உறைக்க மாட்டேன் என்கிறதே..!

இட்லிகளை நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அவற்றின் மேல் மிளகாய்ப் பொடியைப் பரவலாகத் தூவுங்கள். பிறகு, எண்ணெயை வட்டமாக ஊற்றுங்கள் (நல்லெண்ணெய் பயன்படுத்துவது கூடுதல் ருசி தரும்). பாத்திரத்தை எடுத்து நன்கு குலுக்கிவிட்டால் மிளகாய்ப்பொடி சீராகப் பரவிவிடும்.

சமையலில் எந்தெந்த உணவு வகைகளில் எண்ணெயை அப்படியே பச்சையாகச் சேர்க்கலாம்?

அவியல், மோர்க்குழம்பு, தேங்காய் சாதம் முதலியவற்றில் தேங்காயைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெயைக் கடைசியில் மேலே ஊற்றலாம். புளிக்காய்ச்சல், வத்தல் குழம்பு, தொக்கு வகைகளில் சாதம் செய்தால்... கடைசியில் நல்லெண்ணெயைக் கொஞ்சம் சேர்க்கலாம். பாஸ்தா, புரூக்கோலி, லெட்யூஸ், பேபி கார்ன், ஸ்வீட் கார்ன் முதலியவற்றை சேர்த்து செய்யும் சாலட் வகைகளில் மேலே ஆலிவ் எண்ணெயை பச்சையாகச் சேர்த்துக் கிளறிவிடலாம் (விரும்பினால் வினிகரும் சேர்க்கலாம்). இதனால் சாலட்டிலுள்ள காய்களின் நிறமும் மாறாமல் இருக்கும்.

vikatan

Link to comment
Share on other sites

  • 11 months later...

மொறு மொறுவென வடை தயாரிப்பது எப்படி?

 

 
crispy-vadai

நெல்லிக்காய்களை வேக வைத்து, கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை வடகம் மாவில் சேர்த்து வடகம் செய்தால் வித்தியாசமான சுவையில் சத்தான வடகம்  ரெடி.

கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் மாவு , ஒரு தேக்கரண்டி பாம்பே ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய்ச் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்காமல்  உடனே பூரி  செய்தால் பூரி உப்பலாக, மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது சீரகத்துடன் ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் சேர்த்து அரைத்துச் செய்தால் மோர்க் குழம்பு சூப்பராக இருக்கும்.

பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து, அதை மோர்க் குழம்பில் போட்டு மோர்க்குழம்பு செய்தால் அசத்தலாக இருக்கும்.

vada.gif

வடைக்கு அரைத்த மாவை சிறிது நேரம்  ஃப்ரிட்ஜில் வைத்து, பிறகு வடை செய்தால்  மொறு மொறு வடை கிடைக்கும்.

-  எம்.ஏ.நிவேதா

பால் திரிந்துவிட்டால்  கீழே கொட்டாமல் அப்படியே ஆற வைத்து, தயிரில் ஊற்றினால் உண்பதற்கு ருசியாக இருக்கும்.

தோசை மொறு மொறுப்பாக இருக்க சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

ரசம் மீந்துவிட்டால் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து ரசத்துடன் சேர்த்தால் சுவையான சாம்பாராக ஆகிவிடும். 
  -  எல்.நஞ்சன்

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டை வலி நீங்கும்.

ஐந்து சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் உண்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

வெங்காயச் சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்து வர நீர்க் கடுப்பு குணமாகும். 

வெங்காயத் துண்டுகளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுக் கோளாறுகள் நீங்கும்.

வெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.
(எளிய செலவில் வெங்காய வைத்தியம்' நூலிலிருந்து)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தோசை மாவை உடனே புளிக்க வைப்பது எப்படி?

 

 
tasty_dosai

அடைக்கு ஊற வைக்கும் போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுப்புடன் சுவையாகவும் இருக்கும்.

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டால், குழம்பில் கசப்பு தெரியாது. சுவையும் கூடுதலாக இருக்கும்.

கடுகை வாங்கியவுடன் லேசாக வறுத்து, ஆறிய பிறகு டப்பாவில் போட்டு மூடி வைத்து, தேவையான பிறகு எடுத்து தாளிதம் செய்யும்போது கடுகு வெடிக்காது.

சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் பொடியில் பூச்சி, வண்டுகள் அண்டாது.

முருங்கை பிஞ்சுகளை நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க விட்டால். ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.

கீரையைச் சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் அதன் மனம் மாறாமல் இருக்கும்.

முட்டைகோஸ் கூட்டு வைக்கும்போது அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். வாயுத் தொல்லையும் இருக்காது.

ரவை உப்புமா செய்யும்போது ஒரு முட்டை சேர்த்து செய்தால் மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

பாயசம் செய்யும்போது சேமியாவை பாலிலே வேகவைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

தோசை மாவை இரண்டே மணி நேரத்தில் புளிக்கச் செய்து தோசை வார்க்க, மாவில் மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு விட்டால் மாவு புளித்து , தோசையும் நன்றாக வரும்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டிக்குள் எண்ணெய் சூடாயிட்டுதா என்று கடுகை அனுப்பித்தான் கண்டு கொள்வோம். கடுகு வெடிக்காமல் கம் என்று இருந்தால் நமக்கு சரிவராது....!  tw_blush:

மறந்துவிட்ட பக்கத்தை கிளறி எடுத்திருக்கிறீர்கள் , அகழ்வாராய்ச்சி குழுவிற்கு உங்களை சிபாரிசு செய்யலாம் என்றிருக்கின்றேன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

உண்மைதான், பழைய ஒரு திரி. இதைவிட பழசு எல்லாம் போன வாரங்களில் தேடி எடுத்தேனே..tw_blush:

அவற்றில் சிலதை இங்கு இணைக்கிறேன்... அதில் எவ்வளவு விடயங்கள், கருத்துக்கள் இருக்கு.

2006 ம்  ஆண்டு தொடங்கப்பட்ட திரி..:rolleyes:

 

 

16 hours ago, suvy said:

சட்டிக்குள் எண்ணெய் சூடாயிட்டுதா என்று கடுகை அனுப்பித்தான் கண்டு கொள்வோம். கடுகு வெடிக்காமல் கம் என்று இருந்தால் நமக்கு சரிவராது....!  tw_blush:

மறந்துவிட்ட பக்கத்தை கிளறி எடுத்திருக்கிறீர்கள் , அகழ்வாராய்ச்சி குழுவிற்கு உங்களை சிபாரிசு செய்யலாம் என்றிருக்கின்றேன்.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

ருசியான ஊறுகாய் போடுவது எப்படி?

 

 
pickles

ஊறுகாய் தயாரிப்பது எளிமையானது ஆனால் அதைப் பராமரிப்பது சற்றுக் கடினம் தான். சீக்கிரம் கெட்டுப் போய்விடும். சின்னச் சின்ன விஷயங்களை கவனம் வைத்தால் அற்புத சுவையுள்ள ஊறுகாய்களை தயாரித்து, அதன் தன்மை மாறாமல் நீண்ட நாட்கள் வைத்துப் ருசிக்கலாம்.

ஊறுகாய்   தாளிக்கும் போது  அதற்குரிய  பொருட்களுடன் சிறிது  எள்ளையும் வறுத்துப் பொடி செய்து போட்டால் ஊறுகாய் வாசனை மிகுந்து இருக்கும்.  அதுமட்டுமல்லாமல் ஊறுகாய் சீக்கிரம் கெட்டும் போகாது.

வெயில் காலத்தில் ஊறுகாயைத் தயாரித்து வைத்துக் கொண்டால், அந்த வருடம் முழுவதும் அதைப் பயன்படுத்தலாம்.

உப்பும் உரைப்பும் தான் ஊறுகாயின் பிரதான காரணி. ஊறுகாய் தயாரிப்பதற்குப் பொடி உப்பை விட கல் உப்பே சிறந்தது. தேவைப்பட்டால் கல் உப்பை மிக்ஸியில் நன்றாகப் பொடித்தும் பயன்படுத்தலாம்.  

ஊறுகாய் விரைவில் கெட்டுப் போக முதல் காரணம் ஈரத்தன்மை தான். ஊறுகாயை நன்கு உலர்ந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும்.  ஒவ்வொருமுறை அதன் எடுக்கும்போதும் மரத்தாலான ஸ்பூன் உபயோகப்படுத்தவேண்டும். கைகளால் தொடக் கூடாது. அப்படியே கையால் எடுக்க நேர்ந்தால், ஈரக்கையில் தொடாமல் நன்றாக உலர்ந்த கைகளால் எடுக்க வேண்டும்.

ஊறுகாய் தயாரிக்கும் போது அதன் நிறம் முக்கியம். மிளகாய் மற்றும் புளி புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். கறுத்து நிறம் மாறி விடாது.

ஊறுகாயைத் தாளிப்பதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.

ஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின், மேலே சிறிதளவு எண்ணெய் நின்றால் ஊறுகாய் கெடாமல் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

ஜாடியில் அல்லது பாட்டிலில் ஊறுகாயை பத்திரப்படுத்தும் போது விளிம்பு வரை போட்டு நிரப்பக் கூடாது. ஒரு இஞ்ச் அளவேனும் வெற்றிடம் விட வேண்டும்.

எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் போது, மெல்லிய தோலுள்ள பழங்களைத் தேர்ந்தெடுத்துப் போடவும். காரணம் அவற்றில்தான் அதிகளவு சாறு இருக்கும்.

நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் போது அரி நெல்லிக்காயை நன்கு அலசி அதனுடைய மேற்பரப்பு உலர்ந்தவுடன் துணியில் லேசாக துடைத்து விட்டு உப்பில் ஊற விடவும்.

பூண்டு ஊறுகாய் தயாரிக்கும்போது, சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்துக் சேர்த்தால், நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஆவக்காய் ஊறுகாயை தயாரிக்கும் போது மாங்காய் புதியதாக இருந்தால், நன்றாக வரும்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.