Sign in to follow this  
நவீனன்

இனியெல்லாம் ருசியே!

Recommended Posts

கம கமவென்று சாம்பார் மணக்க இதை செய்து பாருங்கள்!

 

 
super_sambar

உங்களிடம் உள்ள அரிசியில்  சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா, அரிசி வேக வைக்கும் போது தண்ணீருடன் சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள் சாதம் வெள்ளையாக இருக்கும்.

நெய் ஜாடியில் ஒரு சிறிய வெல்லக்கட்டியை போட்டு மூடி வைத்துவிட்டால் மூன்று மாதங்கள் ஆனாலும் நெய் கெட்டுப்போகாது.

சோயா பீன்ஸ் பருப்புகளை  உளுந்துக்குப் பதிலாக  போட்டு ஆட்டி இட்லி சுட்டால்,  இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

எப்போதும் சாம்பாரில் பெருங்காயத்தைப் பொரித்துத்தான் சேர்ப்போம். மாறுதலாக கொத்துமல்லி விதைகளை  சிறிது நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாம்பாரில்  சேர்த்துப் பாருங்கள். அதன் மணமே அலாதிதான்.

http://www.dinamani.com

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சப்பாத்தி….சப்பாத்திதான்…சுவையான சப்பாத்திக்கு 7 டிப்ஸ்

 

 
tasty_chapthi

1

குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை தவாவில் மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் சப்பாத்தி மிருதுவாகவும் இருப்பதுடன் பூரி போல உப்பும்.

2

மாவு பிசையும் போது தளரப் பிசைந்து கொண்டாலே சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். போலவே பூரிக்கு மாவை இறுகப் பிசைந்து கொண்டால் அதிகம் எண்ணெய் உறிஞ்சாது. 

3

சப்பாத்தி மாவில் நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

4

ச‌ப்பா‌‌த்‌தி‌க்கு ‌திர‌ட்டு‌ம் போது மாவை தொ‌ட்டு‌ ‌‌ச‌ப்பா‌த்‌தி ‌திர‌ட்டுவா‌ர்க‌ள். மேலு‌ம் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி ‌திர‌ட்டினா‌ல் ச‌ப்பா‌த்‌தி சுடு‌ம்போது அ‌திக எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்ற‌த் தேவை‌யி‌ல்லை.

5

ச‌ப்பா‌த்‌தியை ந‌ன்கு பே‌ப்ப‌ர் போ‌‌ல் ‌திர‌ட்டி அத‌ன் மே‌ல் எ‌ண்ணெ‌ய் உ‌ற்‌றி அதனை நா‌ன்காக மூடி ‌‌மீ‌ண்டு‌ம் ஒரு முறை ‌திர‌ட்டி எடு‌த்து தோசை‌க் க‌ல்‌லி‌ல் போடு‌ங்க‌ள். ச‌ப்பா‌த்‌தி எ‌ப்படி உ‌ப்பு‌கிறது எ‌ன்று தெ‌ரி‌‌யு‌ம். 

6

சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள். கருப்பாக காய்ந்து போகும் தன்மை ஏற்படாது.

7

சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிது தண்ணீர் தெளித்து பத்து விநாடி மைக்ரோவேவ் அவனில் வைத்துச் சூடாக்கினால் சப்பாத்தி சாஃப்ட்டாகி விடும்.

http://www.dinamani.com

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்படியெல்லாம் சமைத்தால் உங்கள் உணவு விஷமாகிவிடும்!

 

 
Woman-cooking-pasta-sauce

ஆரோக்கியத்துக்கான முதல்படி நாம் உண்ணும் உணவுதான். ஆனால் இதில் முக்கியமானது நீங்கள் எந்த உணவை உட்கொள்கிறீர்கள் என்பது அல்ல, அது எப்படி சமைக்கப்படுகிறது என்கிற தயாரிப்பு முறையாகும். இந்திய பாரம்பரியத்தில், உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஒரு உணவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும் என்ற முறை உண்டு. ஒரு உணவை சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்த்துகளை இழந்து விடாமல் சமைக்க வேண்டும். ஆனால் ருசிக்காக நன்கு பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு அல்லது  ப்ரோக்கோலியால் உங்கள் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. அது டாக்ஸின் எனப்படும் நச்சுக்களை உற்பத்து செய்து நாளாவட்டத்தில் கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கிக் விடக் கூடும். பின்வரும் சமையல் முறைகளைத் தவிர்த்துவிடுவது உடல் நலத்துக்கு நல்லது.

டீப் ஃப்ரை (Deep Fry)

image172.jpg

எத்தனையோ புத்தகங்களில் படித்திருந்தும், மருத்துவர்கள் அறிவுரை கேட்டிருந்தும், பொறிக்கப்பட்ட உணவு வகைகளை பெரும்பாலானோர் அடிக்கடி சமைத்து சாப்பிடுகிறார்கள். அது தவறு. காரணம் அதிக நேரம் காய்கறிகளை எண்ணெயில் பொறிப்பதால், அக்காய்கறியில் இயற்கையில் உள்ள சத்துக்கள் இழக்கப்பட்டு கூடுதலாக கொழுப்புச் சத்தும் அதிகரிக்கும். இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை வரவழைத்துக் கொள்ள இத்தகைய சமையல் வழி வகுத்துவிடும்.

பேன் ஃப்ரை (Pan Fry)  

Article-panfry2.jpg

பேன்  பயன்படுத்தி காய்கறிகளை பொறிப்பதால் உணவின் சத்துக்கள் மொத்தமாக இழக்கப்படுவதுடன், நச்சுக்களையும் ஏற்படுத்திவிடும். பேனில் நீங்கள் ஃப்ரை செய்யும் போது உருவாகும் சில வேதியல் பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது. அக்ரலமைட் (Acrylamide) எனும் இந்த வேதிப்பொருள், உணவுப் பொருள் அதிகபட்ச வெப்பத்தில் சமைக்கப்படும் போது தானே உருவாகும். இது கேன்சர் உள்ளிட்ட சில நோய்களுக்கான காரணியாகும். எந்த அளவுக்கு பொறித்த உணவுகளின் நிறம் அடர்த்தியாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமான அக்ரலமைட் உருவாகியுள்ளது என்று அர்த்தம்.

க்ரில்லிங் 

grill.jpg

க்ரில்லிங் முறையில் சமைப்பது ஆரோக்கியம் என்று சிலர் நம்புவார்கள். ஆனால் எந்தந்த உணவை அம்முறையில் சமைக்கலாம் என்பதை அறிந்து சமைக்க வேண்டும். இறைச்சியை க்ரில்லிங் முறையில் தயாரிப்பது அவ்வுணவின் ஊட்டச்சத்தைக் கெடுப்பதுடன், கேன்சர் வருவதற்கான காரணியாகிவிடும். இறைச்சியில் சர்க்கரை, கிரியாடைன் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் அதிகமான வெப்பத்தில் சமைக்கும் போது ஹெடிரியோசைக்ளிக் அமைன்ஸ் (heterocyclic amines) எனும் வேதிப்பொருள் உருவாகும். இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய தன்மையை உடையது. எனவே க்ரில்லிங் முறை அதிக கேடுகளை உடலுக்கு ஏற்படுத்தும்.

புகையவிடுதல் (ஸ்மோகிங்)

smokingPorkBelly.jpg

புகைப் பிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். சில உணவை புகைய விட்டுச் சமைப்பது அதன் ருசியை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் புகைபிடித்த உணவை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. புற்றுநோயை உருவாக்கும் கலவைகளான HCAs மற்றும்   polycyclic aromatic hydrocarbons (PAHs) போன்றவற்றை புகைத்த உணவு உருவாக்க காரணமாக உள்ளது

மைக்ரோவேவ்

 

Microwave-side-effects.jpg

மைக்ரோவேவில் சமைக்கும் போது அதிக அளவு நுண்ணலை கதிர்வீச்சு (ரேடியேஷன்) வெளிப்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அதில் சமைக்கப்படும் உணவு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். 2011-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி, சமைப்பதற்கு அல்லது சூடுபடுத்துவதற்காக தொடர்ந்து மைக்ரோவேவ் ஓவன்களைப் பயன்படுத்தும் போது அதன் கதிர்வீச்சுத் தாக்கத்தால் மூளைப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

age_rf_photo_of_veggie_stir-fry.jpg

மேற்சொன்ன வகைகளில் உணவை சமைக்கும் போது நேரம் மிச்சப்படலாம், அல்லது ருசி கூடலாம். ஆனால் உடல் நலத்துக்கும் அதைத் தொடர்ந்து உயிருக்கும் பேராபத்தை சிறுக சிறுக விளைத்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே நம் பாரம்பரிய முறைப்படி சமைப்பதே நல்லது. அதற்காக விறகு அடுப்பில் சமைக்க வேண்டும் என்பதில்லை. நவீன கருவிகளை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் சமையல் செய்வதை ஒரு வேலையாகச் செய்யாமல் விருப்பத்துடன் செய்ய வேண்டும்.

cooking-healthy-food.jpg

ஆவியில், மிதமான வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கான சிறந்த வழியாகும்.

நன்றி - டெய்லி மிரர்

http://www.dinamani.com/

Share this post


Link to post
Share on other sites

இனி எல்லாம் ருசியே! - 11

 

எண்ணெய் சேர்க்காமல் எளிய சைட் டிஷ்!சந்தேகங்களும்... தீர்வுகளும் விஜயலட்சுமி ராமாமிர்தம்ஃபுட்ஸ்

 

 

 மையல் செய்து முடித்த பின்னர், சிறிதளவு எடுத்து நாக்கில் வைத்துப் பார்த்து, சுவை சரியாக இருந்தால், 'அப்பாடா’ என்று ஒரு பெருமூச்சு வரும். ஆம்... தினந்தோறுமே எக்ஸாம் டைம்தான் இல்லத்தரசிகளுக்கு! இந்தப் பரீட்சையில் நீங்கள் நூற்றுக்கு நூறு வாங்கும் வகையில்... உங்கள் சமையல் சிறப்பாக அமைய உறுதுணை புரியவும், சமையல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் சமையல் கலை வித்தகர்கள் களம் இறங்கும் பகுதி இது.

இந்த இதழில் உங்களுக்கு உற்ற தோழியாக, உளமார்ந்த அன்புடன் உதவிக்கு வருபவர் விஜயலட்சுமி ராமாமிர்தம்.

முழுசாக வேக வைத்த  உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற காய்களைத் துண்டுகளாக்கும் போது, சீராக வராமல் உடைந்து போகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

ஒரு தட்டில் ஒரு டீஸ்பூன் எண் ணெய் ஊற்றி அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெந்த காய்களைத் துண்டுகளாக்கும் முன், கத்தியின் இருபுறமும் விரலால் எண்ணெயைத் தடவி நறுக்கினால், பிரச்னை தீர்ந்தது. இடையிடையே கத்தியில் இப்படி எண்ணெய் தடவிக்கொண்டால் சீராக துண்டுகள் போடலாம்.

p46a.jpgஇட்லி, வடை ஆகியவற்றைத் தயாரித்த பின் உப்பு குறைவாக இருப்பது தெரிந்தால் என்ன செய்யலாம்?

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளியுங்கள்.  அதில் இட்லிகளை உதிர்த்துப் போட்டு கொஞ்சம் உப்பும் சேர்த்து, ஒரு கிளறு கிளறினால், ஐந்து நிமிடங்களில்  உப்பில்லா இட்லிகளை உப்புமாவாக மாற்றிவிடலாம். விரும்பினால் வெங்காயமும் சேர்க்கலாம். வடை யாக இருந்தால், ஒரு ஃபோர்க்கினால் ஓரிரு முறை குத்திவிட்டு, உப்பு கலந்த வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு விட்டு, பின் தயிரில் ஊற வைத்தால் அருமையான தயிர் வடை ரெடி!

 

எண்ணெய் சேர்க்காமல் ஒரு எளிய சைட் டிஷ் சொல்ல முடியுமா?

ஒரு பிரஷர் பேன் அல்லது கடாயில் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு, அரை ஆழாக்கு பயத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய 2 தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி கறிவேப் பிலை இவற்றைச் சேர்த்து, அடுப்பில் குறைந்த தீயில் வேகவிடுங்கள். நடுவில் ஓரிரு முறை தண் ணீர் வற்றிவிடாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வெந்ததும், உப்பு சேர்த் துக் கலக்கினால்... இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றுக்கு ஏற்ற எண்ணெயில்லாத சைட் டிஷ் ரெடியாக இருக்கும்

இட்லி, தோசை மாவுகளில் வெந்தயம் கண்டிப்பாக சேர்த்து அரைக்க வேண்டுமா?

இட்லியை ஆவியில் வேக வைப்பதால் உளுந்தினால் வரும் வாயுத் தொல்லையோ, எண்ணெயினால் வரும் கொலஸ்ட்ராலோ இருக் காது. அதனால், இட்லி மாவு அரைக்கும்போது வெந்தயம் சேர்க்க வேண்டியது கட்டாயமில்லை. ஆனால், தோசைக்கு மணத்தைக் கொடுப்ப தோடு, உளுந்தினாலும் எண்ணெயினாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தோசை மாவில் வெந்தயம் சேர்ப்பது நல்லது. வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டால், தோசை வார்க்கும் முன் மாவில் ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளலாம்.

உப்பு, காரம் சேர்த்து செய்யும் உணவுப் பதார்த்தங்களில்கூட சர்க்கரை அல்லது வெல்லம்  சேர்க்கிறார்கள். எந்தப் பதார்த்தத்தில் இவற்றைச் சேர்க்கலாம்?

புளி சேர்த்து செய்யும் குழம்பு வகைகள், சாம்பார், பிட்ளை, ரசம் போன்ற திரவ வடிவிலுள்ள உணவு வகைகளிலும், புளிக்காய்ச்சல், தோசை மிளகாய்ப்பொடி போன்றவற்றிலும் சின்ன நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும். கீரை, கத்திரிக் காய், கொத்தவரங்காய், அவரைக்காய், பாகற்காய் போன்ற காய்களில் பச்சை நிறம் மாறாமல் இருக்கவும், கசப்பு - துவர்ப்பு சுவைகள் தெரியாமல் இருக்கவும் சிறிது சர்க்கரையைத் தூவலாம்.

p46b.jpg

தினமும் ஒரு சத்தான துவையல் சாப்பிட சுலபமான வழி சொல்லுங்களேன்..!

உளுத்தம்பருப்பு - ஒரு ஆழாக்கு, மிளகாய் வற்றல் - 15, பெருங்காயத்தூள் - சிறிதளவு ஆகியவற்றை எண்ணெ யில் வறுத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். துவையல் தேவைப்படும்போது இதிலிருந்து இரண்டு ஸ்பூன் பருப்பு, மிளகாய் - 2 எடுத்து மிக்ஸி ஜாரில் p46.jpgபோட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் இவற்றில் ஏதாவது ஒன் றையும் (பச்சையாகவே) சேர்த்து, சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பையும் சேர்த்து அரைத்தால், தினமும் வெரைட்டியாக துவையல் ரெடியாகிவிடும்!

கைவசம் தோசை மாவு குறைவாக இருக்கிறது. அதன் அளவை அதிகரிக்க, என்ன மாவு சேர்க்கலாம்?

மாவு வகைகளைச் சேர்ப்பதைவிட இப்படி செய்து பாருங்களேன். ஒரு பாத்திரத்தில் கையில் உள்ள தோசை மாவை ஊற்றுங்கள். அதில் இரண்டு மடங்கு தண்ணீரையும் ஊற்றுங்கள். தோசை மாவு எவ்வளவு இருந்ததோ... அதில் பாதி அளவு சம்பா கோதுமை ரவையை சேர்த்து, கொஞ்சம் உப்பும் சேர்த்து நன்கு கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடுங் கள். இதை மெல்லிய தோசைகளாக வார்த்தால், பேப்பர் ரோஸ்ட் போல முறுகலாக, அருமையாக இருக்கும்.

http://www.vikatan.com

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
 

 

p96a.jpg

காய்கறி குருமாவில், கசகசாவை லேசாக வறுத்து அத்துடன் பூண்டு, தேங்காய் சேர்த்து அரைத்து ஊற்ற குருமா ருசியாகவும் நீர்க்காமலும் இருக்கும்.
 

p96b.jpg

வேர்க்கடலையை வறுத்துப் பொடியாக்கி, சப்பாத்தி செய்யும் மாவுடன் கலந்து  சப்பாத்தி செய்யும்போது வாசமும் சுவையும் அதிகரிக்கும்.

p96c.jpg

கையில் நல்லெண்ணெயைத் தடவிக் கொண்டு சேனைக் கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு உண்டாகாது.

p96d.jpg

கொள்ளு, கம்பு இரண்டையும்  சம அளவில் மாவாக அரைத்து வைத்துக்கொண்டால் டயட்டில் இருப்பவர்களுக்குப் பசிக்கும் நேரங்களில் கருப்பட்டி சேர்த்து, கஞ்சி செய்து கொடுக்கலாம். இதனால் பசி அடங்குவதுடன் உடல் எடையும் குறையும்.

p108a.jpg

வெந்தயத்தை முதல்நாள் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் காலை எழுந்தவுடன் தினமும் குடித்துவர உடல் குளிர்ச்சி பெறும்.

p108b.jpg

வெங்காயப் பச்சடியில் சிறிது தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவை கூடுதலாகும்.

p108c.jpg

த்தியில் சிறிது எலுமிச்சைச் சாற்றைத் தடவிக் கொண்டு ஆப்பிள், வாழைக்காயை நறுக்கினால் பழமும் காயும் கறுப்பாகாது.

p108d.jpg

பீட்ரூட்டை வேக வைத்த நீரைப் பருகினால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து முடி உதிர்வது குறையும்.

- ஜெ.கலைவாணி


p96e.jpg

த்திரி, வாழை, உருளைக்கிழங்கு கறி செய்யும்போது ஒரு டீஸ்பூன் பாலைச் சேர்த்தால் பொன்னிறமாக வறுபடும்.

p96f.jpg

காய்கறிகள், கீரை வேகும்போது அரை டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால், காய்கறிகளின் சத்தும் நிறமும் மாறாது.

p96g.jpg

கேரட்டை பூப்போலத் துருவி, சிறிது உப்பு சேர்த்து அரை கப் தயிருடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி கலந்து சாப்பிட, சுவை பிரமாதமாக இருக்கும்.

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

 
 • கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

 

கிழங்கு நன்றாக ருசிக்க... எண்ணெய் கத்திரிக்காய் அபாரமாக சுவைக்க... டிப்ஸ் டிப்ஸ்..! #VikatanPhotoCards

Share this post


Link to post
Share on other sites

இனி எல்லாம் ருசியே! - 12

 
 

சுண்டல், ஸ்வீட், காரம்... மிச்சமாகிப் போனால்... வித்தியாசமான டிஷ்!சந்தேகங்களும்... தீர்வுகளும்ஃபுட்ஸ்பத்மா

 

 

ஷ்டப்படுவதற்கு பலன் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். பல மணி நேரம் புழுக்கமான சமையலறையில் உழன்று, சோர்வடையும் இல்லத்தரசிகளுக்கு 'சமையல்ல உன்னை மிஞ்ச ஆள் இல்லை’ என்ற பாராட்டுதான் மல்டி வைட்டமின் டானிக். இந்தப் பாராட்டை உங்களுக்கு பெற்றுத்தரும் நோக்கத்துடன்...  நீங்கள் சிறப்பாக உணவு தயாரிக்க உதவவும், சமையல் தொடர்பான உங்கள் சந்தேகங்களைக் களையவும் சமையல் கலை நிபுணர்கள் உதவிக்கரம் நீட்டும் பகுதி இது. இந்த இதழில் அளவற்ற பரிவுடன் ஆலோசனை கூறுபவர் நங்கநல்லூர் பத்மா.

dot3.jpgநவராத்திரி சமயத்தில்... நாம் செய்தது, அக்கம்பக்கத்தில் கொடுத்தது என்று பலவிதமான சுண்டல்கள் மிகுந்துவிடும். அவற்றை வைத்து என்ன செய்யலாம்?

இனிப்பு இல்லாத சுண்டல் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பொட்டுக்கடலை மாவு அல்லது ரஸ்க்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு பிசையவும். இந்தக் கலவையை சிறு வடைகள் வடிவத்தில் தட்டி, நான்ஸ்டிக் தவாவில் பரவலாக வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுக்கவும். வித்தியாசமான, சுவையான, சுண்டல் கட்லெட் ரெடி!

dot3.jpgதீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் வீட்டில் செய்யும்... உறவினர், நண்பர்கள் வாங்கி வரும் ஸ்வீட், கார வகைகள் தேவைக்கு அதிகமாகி விடும்போது அவற்றை வேறு வகையில் பயன்படுத்த முடியுமா?

காராசேவு, மிக்ஸர், நாடா பக்கோடா, தேன் குழல் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்த கலவையை குணுக்கு போல் கிள்ளி போட்டு பொரிக்கவும். வழக்கமாக செய்யும் குணுக்கைவிட இது மேலும் பிரமாதமான ருசியுடன் இருக்கும்.

p36.jpg

ஸ்வீட் வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 100 கிராம் கடலைப்பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கிளறி, பொடித்த ஸ்வீட் சேர்த்துக் கலந்து பூரணம் தயாரிக்கலாம். மைதா மாவை தேவையான நீர் விட்டு பிசைந்து, ஸ்வீட் பூரணம் வைத்து மூடி, போளி தயாரிக்கலாம். இந்த மல்டி ஸ்வீட் போளி ஆளை அசத்தும்.

dot3.jpgஇஞ்சி அதிகமாக கிடைக்கும் சீஸனில், அதை வாங்கி பக்குவப் படுத்தி வைப்பது எப்படி?

இஞ்சியை இளசாக (நார் இல்லாதது) வாங்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, சிறிதளவு சர்க்கரை, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால்... சமையலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இஞ்சி சாறை கெட்டியாக காய்ச்ச வேண்டியது அவசியம்.

dot3.jpgசுகரை கன்ட்ரோலில் வைக்கவும், உடலுக்கு வைட்டமின் சத்து கிடைக்கவும் எளிய உணவு முறை... ப்ளீஸ்!

வெந்தயத்தை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் மோரில் இந்தப் பொடியை கொஞ்சம் சேர்த்து பருகி வந்தால்... சுகர் கட்டுப்படும்.

நெல்லிக்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியை சேர்த்துக் கலந்து அருந்தினால், வைட்டமின் 'சி’ சத்து கிடைக்கும். இது, வயிற்றுக் கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். நெல்லிப் பொடியை தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், கூந்தல் நன்கு வளரும்.

dot3.jpgடீ தயாரிக்கும்போது டீத்தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினாலும் பொடி தங்குகிறதே... என்ன செய்வது?

தேவையான அளவு டீத்தூள், ஏலக்காய்... இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும். இதை சூடான பாலில் கலந்தால்... அருமையான  ஏலக்காய் டீ ரெடி. டீத்தூளும் தங்காது.

p36a.jpg

dot3.jpgபாட்டிலில் போட்டு வைத்த ஊறுகாய்கள் எல்லாம் பழையதாகி கொஞ்சம் கொஞ்சம் தங்கிவிட்டது... இதை என்ன செய்வது?

சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாய் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து, வாணலியில் போட்டு கிளறி ஜாம் போல தயாரிக்கலாம். இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

dot3.jpgவீட்டுக்கு வரும் உறவினர், விருந்தாளிகளுக்கு வாசனையான மோர் கொடுக்க... ஒரு ஐடியா தருவீர்களா...?

புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து, ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைக்கவும். ஒரு டம்ளர் மோரில் 2 ஐஸ் க்யூப், சிறிதளவு உப்பு போட்டுக் கலக்கினால்... அருமையான, கமகம மோர் தயார்

dot3.jpgமுருங்கை மரம் பூத்து குலுங்குகிறது அவ்வளவு பூவும் காயாகாது. முருங்கைப்பூவை சமையலில் பயன்படுத்தலாமா?

முருங்கைப் பூவை நெய்யில் வதக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து சட்னியாக அரைக்கலாம்.

dot3.jpgபொரித்த அப்பளம் நமுத்துவிட்டால், என்ன செய்யலாம்?

அதை வைத்து பச்சடி தயாரிக்கலாம். அப்பளத்தை மிக்ஸியில் கிள்ளிப் போட்டு ஒரு சுற்று சுற்றி, ஒரு கப் தயிருடன் சேர்த்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்தால்... சுவையான அப்பளப் பச்சடி ரெடி. இதை வெங்காயம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் கலந்தும் தயாரிக்கலாம்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா?

 

 
poori

பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா, ஓமவல்லி இலை அல்லது வெற்றிலை சேர்க்கலாம் - நல்ல வாசனையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.

புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால். இரவில் நல்ல உறக்கம் வரும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

இருமல், கபம் முதலியவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பாதுஷா செய்யும் போது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, சிறிதளவு வனஸ்பதியையும், நெய்யும் சேர்த்தால் பாதுஷா மிருதுவாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.

peanut_pooris.jpg

ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? கோதுமை மாவைப் பிசையும் போதே ஒரு தேக்கரண்டி சோயாமாவு, அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் போதும். பூரிஉப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமர்த்தும் போகாது.
வேக வைத்த உருளைக் கிழங்குடன் அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப் பொடி பிழிந்தால் பிரமாதமான சுவையுடன் இருக்கும்.

நாலு டம்ளர் கோதுமை மாவுக்கு அரை டம்பளர் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து கோதுமையுடன் கலந்து உப்பு போட்டு கரைத்து தோசை வார்த்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

பாதாம் அல்வா கிளறும் போது ஊறிய பாதாம் பருப்புடன் குங்குமப் பூவையும் போட்டு அரைத்தால் நிறமும் மணமும் தூக்கலாக இருக்கும்.

வெண்பொங்கல் செய்து பக்குவம் ஆனதும் குக்கரை திறந்து காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி விட்டுக் கிளறி மூடினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி மிளகாய் பொடியில் எண்ணெய் ஊற்றிக்கொள்வதற்குப் பதிலாக தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ருசியாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/apr/13/tips-tips-tips-2899475.html

Share this post


Link to post
Share on other sites

பந்தியில் வாழை இலை போட்டுச் சாப்பிடும் போது இலையைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன்?

 

 
ilai_sappadu

 

பந்தியில் அமர்ந்து சாப்பிடும் போது கண்டிருப்பீர்கள், இப்போதும் கூட பலரும் ஒரு கை நீரள்ளி இலையைச் சுற்றியும், இலைக்கு உள்ளேயும் தெளித்து இலையைச் சுத்தம் செய்த பிறகே உணவுப் பொருட்களை பரிமாற அனுமதித்துப் பிறகு சாப்பிடத் தொடங்குகிறார்கள். இலைக்கு உள்ளே நீர் தெளிப்பதை வேண்டுமானால் இலையைக் கழுவுவதற்காக நீர் தெளிக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்ளலாம். இலைக்கு வெளியேயும் ஏன் நீர் தெளிக்க வேண்டும்? என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

சிம்பிள்... இந்தப் பழக்கத்தைத் தொடங்கியவர்கள் நமது ஆதி ரிஷிகளும், முனிவர்களும் தான். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் காட்டுக்குள், கட்டாந்தரையில் இலை போட்டுத்தான் சாப்பிட வேண்டியதாக இருந்திருக்கும். அப்போது உணவு பரிமாறப்பட்டிருக்கும் இலையைச் சுற்றி தூசு எழும்பிப் பறக்காமல் இருப்பதற்காக இலையைச் சுற்றி தண்ணீர் தெளிக்கும் பழக்கம் வந்திருக்கலாம். சரி அப்போது அப்படிச் செய்வதில் அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், இன்று கான்கிரீட் கட்டிடங்களில் வசித்துக் கொண்டிருக்கும் நாம் ஏன் அந்தப் பழக்கத்தை இன்னும் விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? அதற்கும் சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

சிலர் சொல்கிறார்கள் இந்திய உணவுகளில் பொதுவாகவே காரமும், மணமும், அமிலத்தன்மையும் அதிகமிருக்கக் கூடும். அப்படியான தன்மைகளைக் குறைத்து அமில, காரத்தன்மையை சமநிலைப்படுத்துவதற்காகக் கூட இப்படி ஒரு பழக்கம் தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். இலைக்கு உள்ளும், புறமும் ஒரு கை நீரள்ளித் தெளிப்பதால் உணவுப் பொருட்களின் காரம் மற்றும் அமிலத்தன்மை நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது என்கிறார்கள். இது ஒரு விதமான விளக்கம்.

இன்னொரு சாரர் என்ன சொல்கிறார்கள் எனில், இந்திய உணவுகளில் பெரும்பகுதி அரிசியும், ஸ்டார்ச்சும் (மாவுப்பொருள்) நிறைந்தவையாகவே இருக்கும். ஆகவே இலையில் பரிமாறப்பட்டுள்ள உணவைச் சுற்றி ஒரு கை நீரள்ளித் தெளித்த பின் உண்பதால் உணவிலுள்ள மாவுச்சத்து கரைந்து உணவு எளிதில் ஜீரணமாகக் கூடிய வகையில் மாறும் என்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களுமே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படாதவையே! தொன்று தொட்டுச் செய்து வரும் ஒரு பழக்கத்திற்கான காரணங்களாக இவை இருக்கலாம் என மனிதர்கள் தாங்களே கற்பிதம் செய்து கொள்ளும் காரணங்களே இவை. இப்படியுமிருக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதே தவிர உண்மையில் உணவைச் சுற்றி தண்ணீர் தெளிப்பதன் பின்னிருக்கும் ரகஷியம் அறியப்படாததாகவே இருக்கிறது. 

சமஸ்கிருதத்தில் இப்படிச் செய்வதை சித்ராகுதி (chitrahuti) என்கிறார்கள். பிராமணர்களில் பெரும்பாலானோர் இன்றும் உணவுண்பதற்கு முன்பு இந்தப் பழக்கத்தைத் தவறாது கடைபிடித்து வருகின்றனர். அவர்களளவில் இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, நமக்கு உணவளித்த தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை அவர்கள் தங்களது உணவு நேரத்தின் போது பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது. 

சிலரோ, இலையில் உணவுண்ணும் பழக்கம் இருந்த அக்காலத்தில், இலையில் பரிமாறப்பட்டு உணவைச் சுற்றி எறும்புகள், வண்டுகள் உள்ளிட்ட சிறுபூச்சிகள் அணுகாவண்ணம் தடுப்பதற்காக இலையைச் சுற்றி நீர் தெளிக்கும் பழக்கம் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

மேற்கண்ட காரணங்களில் எது வேண்டுமானாலும் நிஜமாக இருக்கலாம். ஆனால், இனிமேல் சாப்பிடும் போது இலையைச் சுற்று ஏன் தண்ணீர் தெளிக்கிறார்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் இனி தலையைச் சொறிந்து கொண்டு அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று சொல்லாமல் இந்தக் காரணங்களில் எதையாவது ஒன்றைச் சொல்லி வைக்கலாம் சரி தானே?!

http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/mar/24/why-we-sprinkle-water-around-food-2886681.html

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் வாங்கியுள்ள தேன் சுத்தமானதுதானா?

 

 
jars_of_honey

 

நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை மானே தேனே என்று அழைப்போம். காரணம் தேன் அத்தனை மகத்தானது. அவ்வளவு சுத்தமானது. ஆனால் மனிதன் தான் எல்லாவற்றையும் கலப்படம் செய்து விடுகிறானே! கொம்புத் தேன், மலைத்தேன், கடைத்தேன், தேனடை என்று தேன்களை விதவிதமாக வாங்கினாலும் நாம் வாங்கியுள்ளோமா அல்லது வெல்லக் கரைசலா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது. பொதுவாக தேன் பார்ப்பதற்கு அடர் செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாவினால் நக்கினால் அதன் இனிப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்த நிறமும் நாக்கில் ஒட்டியிருக்காது. இப்படி விஷயம் அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். தேன் தானே என்று அலட்சியமாக எண்ணாமல் கவனமாக வாங்கிப் பயன்பெறுங்கள்.

ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றியபின், ஒரு சொட்டு தேனை விடுங்கள். தேன் கரையாமல் கலங்காமல் அப்படியே டம்பளரின் அடியில் சென்று படிந்தால் சுத்தமான தேன் என்றறிக.

ஒரு ப்ளாட்டிங் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனை விடுங்கள். அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேன் என்கிறார்கள் செய்து பார்த்தவர்கள்.

சுத்தமான தேனுக்கு எறும்பு வராது என்கிறார்கள். வெல்லத்துக்குதான் எரிம்பு மொய்க்கும். தேனை எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் எறும்பு அண்டாது.

இந்த மூன்று முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும் டிப்ஸ். இவை சரிப்படாது என்று நினைத்தால் நான்காவதாக ஒரு டிப்ஸ் உள்ளது.

ஆற்று மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும். நன்றாக குனிந்து உங்கள் வாயால் அதனை ஊதவும். தேன் மட்டும் உருண்டு ஓடினால் அது தூய்மையான தேன். மணலோடு மணலாக கலந்துவிட்டால் ஊதினால் திரண்டு வராவிட்டால் அது போலியானது. 

honey.jpg

சுத்தமான தேனை கண்டு பிடித்து அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் அதனால் ஏற்படும் பலன்கள் கணக்கிலடங்காதது. தேனின் மருத்துவ பலன்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

 • கடுமையான வயிற்றுவலி குணமாக ஒரு தேக்கரண்டி தேனை கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தி வந்தால் கடுமையான வயிற்று வலி உடனே நின்றுவிடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.
 • வயிறு மற்றும் குடற்புண் ஆற தினமும் இரண்டு தேக்கரண்டி தேனை உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு  குடித்து வந்தால் வயிறு மற்றும் குடற்புண்கள் ஆறி விடும்.
 • உடல் சோர்வு, சளி, வயிற்றுப் பிரச்சனைகள் தீர ஒரு தேக்கரண்டி தேனை ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.
 • வறட்டு இருமல் குணமாக தேனுடன்  நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி அதனுடன் சிறிதளவு ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
 • மூட்டுத் தேய்மானம், வலி நீங்க மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேனை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாகத தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு தேக்கரண்டி தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.
 • தேனின் மற்ற பயன்கள் தினந்தோறும் இரவு படுக்க போகும்முன் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வுற்ற நிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், ரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான ரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவகளுக்குச் மிகச் சிறந்த தீர்வு .

http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/apr/13/how-to-find-pure-honey-few-tips-to-get-the-best-2899484.html

Share this post


Link to post
Share on other sites

சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்!

 

 

கோடையில் புதிதாக வற்றல், வடாம் போட ஆரம்பித்துவிடுவோம். சென்ற ஆண்டில் மீந்த, தூளான, நொறுங்கிய வடாம்களை என்ன செய்வது?

தூளான, நொறுங்கிய வடாம்களைத் தேவையான அளவு எடுத்து ஒரு தட்டில் போட்டு அது மூழ்கும் அளவு கைபொறுக்கும் சூட்டில் வெந்நீரை ஊற்றிவைக்கவும். இடையிடையே நன்கு கிளறிவிடவும். அரை மணி நேரம் கழிந்த பின் வடாம் நீரில் ஊறி மென்மையாகிவிடும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, இதனுடன் ஒரு தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன் போட்டு வதக்கவும்.

பிறகு, ஊறிய வடாம்களைச் சேர்த்து வதக்கி, ஈரம் வற்றியதும் 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான தூள் வடகப் பொரியல் தயார். இது சாம்பார், ரசம், மோர் சாதங்களுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

p113_1527768480.jpg

தூள் வடாம்களை எண்ணெய் ஊற்றி வறுத்து எண்ணெயை வடியவிட்டு தனியே வைக்கவும். கால் கப் தேங்காய்த் துருவல், சிறிதளவு புளி, 3 வறுத்த காய்ந்த மிளகாய், கால் கப் கொத்தமல்லித்தழை சேர்த்து, முதலில் வறுத்த வடகங்களை ஒரு சுற்று மிக்ஸியில் சுற்றி, பிறகு மற்ற பொருள்களைச் சேர்த்து, தேவையான அளவு நீர்விட்டு அரைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சட்னி தயார். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டில் நாம் தயாரிக்கும் பிஸ்கட், கேக், சிப்ஸ் போன்றவை நமுத்துப் போகாமல் எப்படிப் பாதுகாப்பது? நமுத்துவிட்டால் என்ன செய்வது?

பிஸ்கட் நமுத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் முதலில் ஃபிளாட்டிங் பேப்பரைப் போட்டுவிட்டு அதன்மேல் பிஸ்கட்டுகளை வைத் தால் பிஸ்கட்டுகள் பல நாள்கள் மொறுமொறுவென்று இருக்கும்.

 சிப்ஸ், பிஸ்கட் நமுத்துப் போய் இருந்தால் அதை ஒரு தட்டில் கொட்டி நாம் சமைக்கும்போது அடுப்பின் அடியில் வைத்தால் அந்த அனலிலேயே மொறுமொறுப்பு மீண்டும் வந்துவிடும்.

p113c_1527768511.jpg

கேக், பிஸ்கட் செய்து முடித்தபின் அவன் (oven) நீண்ட நேரம் சூடாக இருக்கும். அப்போது அந்தச் சூட்டிலேயே நமுத்துப் போயிருக்கும் பிஸ்கட், அப்பளம் போன்றவற்றை அவனில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் புதிது போல மொறுமொறுவென்று இருக்கும்.

  சிப்ஸ்,  பிஸ்கட் போன்ற அயிட்டங் களை டப்பாவில் போட்டுவைப்பதைவிட ஹாட்பேக்கில் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் நமுத்துப் போகாமல் இருக்கும்.

p113e_1527768668.jpg

தோசைக்கல்லில் தோசை மாவு ஒட்டிக்கொண்டு தோசையை எடுக்க முடியாமல் போவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு சின்ன துணியில் கல் உப்பைக் கட்டித் தோசைக்கல்லைத் துடைக்கவும். வெட்டின வெங்காயத்தால் துடைத்தாலும் போதும். தோசைக்கல்லை உபயோகம் முடிந்தவுடன் கழுவக் கூடாது. எண்ணெய் தடவி வைத்திருந்து உபயோகப்படுத்தும் போது கழுவினால் போதும். சூடான கல்லில் குளிர்ந்த தண்ணீர் தெளித்து பிறகு எண்ணெய் தடவி தோசை மாவு விட வேண்டும்.

உணவை வாழை இலையில் பொட்டலம் கட்டும்போது இலை பிரிந்து உணவு வெளியே வராமல் எப்படி கட்டுவது?

உணவைப் பொட்டலம் கட்டும்போது வாழை இலையை வெந்நீரில்  நனைத்துவிட்டுக் கட்டலாம்.  வாழை இலையைச் சிறிது நேரம் வெயில் வைத்திருந்து லேசாக வதங்கியதும் எடுத்துக் கட்டலாம். அல்லது வாழை இலையைத் தணலில் காட்டி லேசாக வதங்கியதும் எடுத்து உணவைப் பொட்டலமாகக் கட்டினால் இலை பிரிந்து உணவு வெளியே வராமல் இருக்கும்.

p113a_1527768540.jpg

சம்மரில் டூர் செல்லும்போது எடுத்துச் செல்லும் அயிட்டங்கள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமலிருக்க சின்னச் சின்ன டிப்ஸ் ஃப்ளீஸ்...

சட்னிக்குப் பொட்டுக்கடலை வைத்து அரைப்பதற்குப் பதிலாக கடலைப்பருப்பை வறுத்து அரைத்துத் தேங்காயுடன் சட்னி அரைத்தால் விரைவில் கெட்டுப்போகாது. அல்லது உளுத்தம்பருப்பை வறுத்து, தேங்காயுடன் சேர்த்துக் கெட்டியான துவையலாக அரைக்கலாம். துவையல் அரைக்கும்போது சிறிதளவு வெல்லமும் சேர்த்து அரைக்கவும். இது நீண்ட நேரம் கெடாமலிருக்க உதவும்.

 மிளகாய்ப்பொடியுடன் எண்ணெய் சேர்த்து இட்லிக்குத் தொட்டுக்கொள்ள எடுத்துச் செல்லும்போது எண்ணெய்க்குப் பதிலாக நெய்யை உருக்கி மிளகாய்ப் பொடியில்விட்டு எடுத்துச் சென்றாலும் நீண்ட நேரம் கெடாது. 

ர்க்கரை போடாமல்தான் ஃபிளாஸ்கில் காபி, டீயை ஊற்ற வேண்டும். சர்க்கரையைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு குடிக்கும் போது ஃபிளாஸ்கில் இருந்து குவளைகளில் ஊற்றும்போதுதான் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் காபி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

 மாங்காய்த் தொக்கு, தக்காளி ஊறுகாய் எடுத்துச் செல்வதைவிட எலுமிச்சை ஊறுகாய் எடுத்துச் சென்றால் நீண்ட நாள்கள் கெடாது.

 வற்றல்குழம்பு செய்தால் மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல்கள் மட்டும் சேர்க்க வேண்டும்.

p113b_1527768568.jpg

  தோசை எடுத்துச் சென்றால் கனமாக  வார்த்து எடுத்துச் செல்ல வேண்டும். மெலிதாக வார்த்து எடுத்துச் சென்றால் தோசை காய்ந்து தொண்டையைவிட்டு இறங்காது.

 சப்பாத்தி எடுத்துச் சென்றால் ஓரங்களில் எண்ணெய்விடாமல் தணலில் மேல் வலையைப் போட்டுச் சுட்டு எடுத்துச் செல்லலாம். தயிர் சாதம் எடுத்துச் சென்றால் பாலை நிறைய ஊற்றி (ஒரு பங்கு பால் என்றால் கால் பங்குக்கும் குறைவாகத் தயிர் ஊற்றி) எடுத்துச் செல்ல வேண்டும். பால் தயிரில் உறைந்து நாம் சாப்பிடும்போது புளிக்காமல் சரியான பதத்தில் இருக்கும்.

 புளி சாதம் செய்து எடுத்துச் சென்றால் புளிக்கரைசலுக்குப் பதில் புளிப்பேஸ்ட்டில் செய்து எடுத்துச் சென்றால் விரைவில் கெடாது.

 இனிப்புக் குழிப்பணியாரம் எடுத்துச் செல்லும்போது வெல்லத்தைப் பாகு காய்ச்சி பிறகு மாவில் கலந்து, குழிப்பணியாரம் செய்யும்போது ஓரங்களில் லேசாக நெய் விட்டு (எண்ணெய்க்குப் பதில்) செய்யலாம். இது விரைவில் கெடாது.

p113f_1527768608.jpg

சாலட்கள் பக்குவமாகச் செய்வது எப்படி?

காய்கறிகள் நறுக்கி சாலட் செய்யும் போது நறுக்கியவுடன் எலுமிச்சைச்சாறும் உப்பும் அதில் சேர்க்கக் கூடாது. அவற்றைச் சாப்பிடும்போதுதான் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் சாலட் தண்ணீர் விட்டுக்கொள்ளும். அப்படியும் தண்ணீர் விட்டுவிட்டால் பிரெட் துண்டுகளைப் போட்டுவிட்டால் தண்ணீரை உறிஞ்சிவிடும். அந்த பிரெட் துண்டுகளைக் காய்கறிகளில் இருந்து தனியே எடுத்தும் சுவைக்கலாம்.

p113d_1527768636.jpg

ரவா தோசை மொறுமொறு என்று இருக்க என்ன செய்ய வேண்டும்?

ரவா தோசை செய்யும்போது ஒரு கப் ரவைக்கு ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்துக் கலந்து செய்தால், தோசை நன்கு மொறுமொறுவென்று இருக்கும்.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

வெங்காயம் நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

 

 
Onion-Paste

நீண்ட நேரப்பயணத்திற்குப் பின் களைப்பு ஏற்பட்டால், அந்தக் களைப்பைப் போக்க, உப்பு பெருமளவு உதவுகிறது. ஒரு பெரிய பேசினில் வெதுவெதுப்பான நீர் எடுத்து, அதில் சிறிதளவு உப்பு கலந்து, ஒரு பதினைந்து நிமிடங்கள் கால்கள் நனையும்படி உட்கார்ந்தால், கால்வலி, களைப்பு எல்லாம் பறந்து போகும்.

வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, குழந்தைகளைக் குளிப்பாட்டினால் குழந்தைகளின் தோலின் மென்மையை ஆலிவ் ஆயில் பராமரிக்கும்.

திராட்சைப்பழம் கிட்னிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பழம், மலமிளக்கியாகவும் பயன்படும். இதை, பழமாகவோ, பழரசமாகவோ உண்டால், நேரடி பலன் கிடைக்கும்.

இரவு மீந்துபோன சாதத்தை ஹாட்பேக்கில் வைத்திருந்து, காலையில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் செய்யலாம் அல்லது. சிறிது நீர்விட்டு மசித்து, ஸாலட் அல்லது உருளைக்கிழங்கு மசியலோடு கலக்கலாம்.

குழந்தையைக் குளிப்பாட்டும்போது, தண்ணீரில் சிறிதளவு டெட்டாலையும், சிறிதளவு உப்பையும் கலந்து குளிப்பாட்டினால் குழந்தையின் மென்மையான தோல் மேலும் மென்மையாக ஆவதுடன், எந்தவித தோல் வியாதிகளும் வராது. தண்ணீரை விளாவியபின்பு தான் டெட்டாலையும், உப்பையும் சேர்க்க வேண்டும்.

தர்பூசணித் தோல், பரங்கிக்காய் தோல், பீர்க்கங்காய்த் தோல், வெந்த உருளைக்கிழங்கு அல்லது பச்சை உருளைக்கிழங்கு தோல், சுரைக்காய் தோல் போன்றவற்றிலிருந்து, வங்காளிகள் விதவிதமான துவையல்கள் செய்கின்றனர்.

தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

கருவுற்ற தாய்மார்கள் ஆறாம் மாதத்திற்குப் பின், அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி பார்லி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, கொதிக்கவைத்து எடுத்து, ஆறியபின் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறும், உப்பும் சேர்த்து காலை, மாலை அருந்தி வர, நீர் சுருக்கு நீங்கி, கால் வீக்கம் வடியும். மேற்படி பார்லி நீரை காலையிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டு, தேவையானபோது, சூடு செய்து, எலுமிச்சைச் சாறும், உப்பும் கலக்கலாம். எலுமிச்சைச் சாறும், உப்பும் கலந்து வைத்துவிட்டோமானால், வெகு சீக்கிரம் புளிப்பு ஏறி, அசிடிடி உருவாகும்.

தக்காளி சூப் தயாரிக்கும்போது, சிறிது கசகசாவை நெய்யில் வறுத்து, பொடித்துப்போட்டால், சூப் மணமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

எள், கசகசா இரண்டும் ஒவ்வொரு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி ஓமம், கால் தேக்கரண்டி மிளகு ஆகியவற்றை சிறிது நெய் அல்லது எண்ணெய்யில் மணம் வரும்வரை வறுத்து, உப்பு சேர்த்து, கரகரப்பாக பொடித்து, சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், புதுவிதமான சுவையும், மணமும் கிடைக்கும். வயிற்றுப்புண் ஆறும். கபம் நீங்கும். வெயிலில் அலைந்த களைப்பும் நீங்கும்.

தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய
தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

தலைப்புக்கு வரலாமா? வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.

http://www.dinamani.com

 

 

டிப்ஸ்... டிப்ஸ்...

 

p57a_1532082353.jpg

லெமன் ஜூஸ் போடும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தால் தனிச்சுவையைத் தரும். ஆரோக்கியமானதும்கூட.

- பா.கார்த்திகா, பாபநாசம்


p57b_1532082365.jpg

பாகற்காய் சமைக்கும்போது கொஞ்சம் இஞ்சித்துருவல் சேர்த்துக்கொண்டால், பாகற்காயின் கசப்பு குறைவதுடன் இஞ்சி மணத்துடன் இருக்கும்.

- கீதா ரவி, சென்னை-41


p66c_1532164820.jpg

பூரி, சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்பு கையில் சிறிதளவு உப்புத்தூளைத் தடவிக்கொண்டால் கையில் மாவு ஒட்டாது.

- அ.சித்ரா, காஞ்சிபுரம்


p66d_1532164832.jpg

வெண்டைக்காய், கத்திரிக்காய் பொரியல் மீந்துவிட்டால், அதில் தயிர் சேர்த்து, பச்சடி செய்துவிடலாம்.

https://www.vikatan.com

ப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய்த்தூளும் சிறிதளவு சுக்குத்தூளும் கலந்தால் சப்பாத்தியின் சுவை அதிகரிக்கும்; எளிதாக ஜீரணமும் ஆகும்.

பொரித்தெடுத்த ஜாமூன்களைச் சூடான சர்க்கரைப் பாகில் சேர்க்காமல், நன்கு ஆறிய பிறகு சேருங்கள். ஜாமூன்கள் விரியாமல் கரையாமல் சுவையாக இருக்கும்.

p30a_1530255767.jpg

வா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து நெய்யில் வறுத்துச்சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து டேஸ்ட்டியான ரவா லட்டு பிடிக்கலாம்.

ப்பத்துக்கு மாவு கலக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு சேருங்கள். ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.

- ஜெ.சந்திரா


p103a_1530269199.jpg

கொத்தமல்லித் துவையல் அரைக்கும் போது புளிக்கு மாற்றாக மாங்காயைச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் அசத்தும்.

- முத்தூஸ், ராமநாதபுரம்

p103b_1530269215.jpg

வா இட்லி செய்யும்போது சிறிது சேமியாவை வறுத்து, தயிரில் ஊறவைத்துச் சேர்த்தால் கூடுதல் ருசி தரும்.

- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி

p103c_1530269227.jpg

களாபாத் தயாரிக்க ஒரு கப் அரிசிக்கு ஒரு டீஸ்பூன் அவல் சேர்த்து வேக வைத்தால் சாதம் நன்றாகக் குழைந்து சுவையும் பிரமாதமாக இருக்கும்.

- ஆர்.அஜிதா, கம்பம்

p103d_1530269241.jpg

கீரையுடன் பயத்தம்பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்யும்போது ஒரு கப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

https://www.vikatan.com

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நேத்து வச்ச மீன் குழம்பை சாப்பிடுவது நல்லதா?

 
அ-அ+

`நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.

 
நேத்து வச்ச மீன் குழம்பை சாப்பிடுவது நல்லதா?
 
`நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.

எந்த வகை உணவாக இருந்தாலும் அதிலிருக்கும் மினரல்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் சமைத்த உடன் வெளிவரும் என்பதால், சமைத்த சூடு அடங்குவதற்குள் சாப்பிட்டால் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உணவு ஆறிய பின்னர் சாப்பிடுவதால் அது வெறும் சக்கைதான். அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது அதைவிட வேஸ்ட்! சுவையும் இருக்காது.

பிரியாணி, மீன், கோழி, மட்டன் குழம்பு மற்றும் பிற அசைவ உணவுகளை நாள்விட்டு சாப்பிட்டால் சில நேரங்களில் `புட் பாய்ஷன்’ ஆகவும் மாறலாம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக அலர்ஜி மற்றும் தோல் நிறம் மாறும். அதேபோல், காய்கறிகளை நறுக்கி பிரிஜ்ஜில் வைத்து அப்புறம் சமைப்பது, குழம்பை பிரிஜ்ஜில் வைத்து, அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது என்பதெல்லாம் நோய்களை நாமே தேடிக்கொள்வதற்கு சமம்!

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/28131321/1179827/old-fish-curry-not-good-for-health.vpf

Share this post


Link to post
Share on other sites

பூப்போல... பூப்போல சப்பாத்தி! - குறிப்புகள் பலவிதம்


 

 

chappathi

  

 

# மைசூர்பாகு, தேங்காய் பர்பி ஆகியவற்றைச் செய்யும் போது சமையல் சோடாவைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் துண்டு போட வராமல் தூள் தூளாக உடையும்.

# மிக்சருக்காக அவல் பொரிக்கும்போது சிதறிப் போகும். இதைத் தவிர்க்க கைப்பிடியோடு கூடிய வடிகட்டியில் அவலைப் போட்டு, கொதிக்கும் எண்ணெயில் முக்கிப் பொரிக்க வேண்டும்.

 

# ரவை உருண்டை, பயத்த மாவு உருண்டை செய்யும் போது பொடித்த சர்க்கரையையும் நெய்யையும் நன்றாகக் குழைத்து ஒரு தட்டில் தடவுங்கள். பின் மாவை அதில் போட்டுக் கலந்து உருண்டை பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்..

# பட்சணம் செய்யும் போது எண்ணெய் பொங்காமல் இருக்க ஒரு சொட்டு வினிகர் விட வேண்டும்..

# அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதைத் தயிரில் கலக்காமல் வேகவைத்த கறிகாய்களுடன் சேர்த்துப் பிறகு தயிர் சேர்த்தால் அவியல் நீர்த்துப் போகாது.

# வாணலியை லேசாக சூடாக்கி அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் புரட்டிய பிறகு தோல் உரித்தால் சுலபமாக உரிக்க முடியும்.

# தேங்காய்த் துவையல் அரைக்கும்போது சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

# சப்பாத்தி மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்துக் கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி பூப்போல் இருக்கும்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

# சூடான பாலில் வாழைப்பட்டையைப் போட்டு ஒரு டீஸ்பூன் தயிர் ஊற்றினால் விரைவாக தயிராகிவிடும்.

# தயிர் புளிக்காமல் இருக்க அதில் சிறு துண்டு தேங்காயைப் போட்டுவைக்கலாம்.

# தண்ணீரில் ஒரு டீஸ்பூன் புளித்த தயிர் அல்லது மோரை தண்ணீரில் கலந்து அதில் வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கிப் போட்டால் நிறம் மாறாது.

# வெண்டைக்காய் சீக்கிரம் வதங்கவும் கொழகொழப்புத் தன்மை குறையவும் அதில் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்கலாம்.

# அவரைக்காய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய், மிளகாய் ஆகியவற்றில் வற்றல் போடும் போது காய்ந்த பிறகு புளித்த தயிரில் ஊற வைத்து மீண்டும் காயவைத்தால் ருசி கூடும்.

# வெண்ணெயை உருக்கும்போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

# நன்கு புளித்த தயிரைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி வளர்வதுடன் பளபளப்பாகவும் இருக்கும். பொடுகு குறையும்.

# கருணைக் கிழங்கைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சமைத்தால் சாப்பிடும்போது அரிப்பு இருக்காது.

# வெள்ளிப் பொருட்களைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சுத்தம் செய்தால் பளீரென இருக்கும்.

https://www.kamadenu.in/news/cooking/4381-chappathi.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

நறுமணமூட்டிகளில் தங்கம் மஞ்சள்

 

 

`ஏழைகளின் குங்குமப்பூ’ என்று அழைக்கப்படுகிறது மஞ்சள். இதன் நிறமும் குணமுமே இத்தகைய பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. பிரத்யேகமான நெடியும் மற்ற நறுமணமூட்டிகளிலிருந்து மாறுபட்ட சுவையும் கொண்டது மஞ்சள். `நறுமணமூட்டிகளில் தங்கம்’ எனப் பெயர் சூட்டுமளவுக்கு மஞ்சளுக்கு மகத்துவம் அதிகம். `காய்க்கமுகின் கமழ் மஞ்சள்…’ எனும் பட்டினப்பாலை வரிகள், சோழ நாட்டில் மஞ்சள் விளைச்சல் பற்றிப் பெருமை பேசுகிறது.

திருவிழாக்கள், சடங்குகள், அழகியல், மருத்துவம், சமையல் என நமது உணர் வோடும் உணவோடும் நெருக்கமான உறவுகொண்டிருக்கும் மஞ்சள், நோய்களைத் தடுப்பதில் மிகச்சிறந்த `இயற்கைக் காவலன்’. ஜப்பான் மற்றும் சீன மருத்துவ நூல்களில் மஞ்சளின் சிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சளை `மஞ்சள் இஞ்சி’ என்றே சீனர்கள் அழைக்கின்றனர்.

26p1_1534499309.jpg

மஞ்சளும் குங்குமப்பூவும் கலந்து செய்யப்படும் `ஹரிரா’ (Harira) எனும் `சூப்' ரகத்தை மொராக்கோ நாட்டினர் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் மஞ்சள் நிற கேக் லெபனான் நாட்டில் பிரசித்திபெற்ற சிற்றுண்டியாகும். மத்தியக் கிழக்கு நாடுகளில் அசைவ உணவுகளுக்குச் சுவையூட்டப் பயன்படும் `செர்மவுலா’ (Chermoula) எனப்படும் மசாலா வகையில் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. தேநீருடன் மஞ்சள் கலந்து பருகும் வழக்கம் ஜப்பானியர்களிடம் இருக்கிறது.

நிசி, பீதம், அரிசனம், கான்சனி ஆகிய பெயர்களைக்கொண்ட மஞ்சளுக்கு வாய்வகற்றி, மணமூட்டி, ஈரல்தேற்றி, கிருமிநாசினி போன்ற செய்கைகள் இருக்கின்றன. கலப்படமில்லாத மஞ்சளை நீர்விட்டு அரைத்துக் குளித்தால், தேகம் பொலிவுபெறுவதுடன் வியர்வை நாற்றம் மற்றும் கபநோய்கள் நீங்கும். கடந்த தலைமுறையில், மேல்நாடுகளைவிட நமது நாட்டில் தொற்றா நோய்களும் நாள்பட்ட நோய்களும் மிகவும் குறைவாக இருந்ததற்கு, சமையலில் அதிக அளவில் சேர்க்கப்பட்ட மஞ்சளும் ஒரு முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 26p3_1534499483.jpg

செரிமானத்தின்போது தானியங்கள், பருப்பு வகைகளில் உள்ள புரதங்களை எளிதாகக் கிரகிக்க மஞ்சள் உதவுகிறது. மஞ்சள் சேர்த்துத் தாளிப்பது, மற்ற நறுமணமூட்டிகளின் மருத்துவக் குணங்களை வெளிக்கொண்டுவரப் பயன்படுகிறது. இறைச்சிகளை மஞ்சள் நீரில் ஊறவைத்தே சமைத்ததாக 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த நூல்களில் பதிவிடப்பட்டுள்ளன.

புற்றுநோய், நீரிழிவு, இதயநோய் எனப் பல நோய்கள் வராமல் தடுக்க உதவும் மஞ்சளின் மருத்துவச் செயல்பாட்டுக்கு இதிலுள்ள ‘குர்குமின்’ (Curcumin) எனும் வேதிப்பொருள்தான் காரணம். உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகளைக் கட்டுப்படுத்துவதால், மூட்டுவலி உண்டாகாமல் பார்த்துக்கொள்ளும். ரத்தக்குழாய்களில் ஏற்படும் காயத்தைக் குணப்படுத்துவதில் தொடங்கி மருந்துகளின் செயல்திறனை அதிகரிப்பது, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பது என மஞ்சளின் தன்மை தனித்துவமானது. பித்த நீரை முறையாகச் சுரக்கச் செய்து, செரிமானப் பிரச்னைகளைச் சீர்செய்யக்கூடியது.

புற்றுநோய் சார்ந்த மரபணுக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஆரோக்கியமான செல்கள் புற்றுச் செல்களாக மாற்றமடைவதைத் தடுப்பது, புற்றுச் செல்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது, பிற உறுப்புகளுக்குப் புற்றுநோய் பரவுவதை நிறுத்துவது எனப் புற்றுநோயின் தீமை தரும் பரிமாணங்களைத் தடுக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு இருக்கிறது.

26p2_1534499321.jpg

மஞ்சளின் நோய் தீர்க்கும் குணத்தை அதிகரிக்க, மஞ்சளுடன் அதிக அளவில் மிளகு சேர்த்துச் சமைக்கலாம். மஞ்சளின் `குர்குமின்’ மிளகில் உள்ள `பைப்பெரின்’ என்ற ஆல்கலாய்டுடன் கூட்டுச் சேர்ந்து நோய்களை எதிர்த்துப் போராடும். குடல்பகுதியில் `குர்குமின்’ உறிஞ்சப்படும் வேகத்தை அதிகரிக்க `பைப்பெரின்’ உதவுகிறது. சளி, இருமல் இருக்கும்போது பாலுடன் மஞ்சள், மிளகுத்தூள் சேர்த்து அருந்தும் அறிவியல் பின்னணி இதுதான். வெங்காயத்தில் உள்ள தாவர வேதிப்பொருள்களும் மஞ்சளின் குர்குமினும் வினைபுரிந்து, நோய்களின் வீரியத்தைத் தடுக்கின்றன.

`மஞ்சள் வளையம்’ என அழைக்கப்படும் தமிழகத்தின் கொங்கு மண்டலம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா எனப் பல பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அதிகம். ஆனாலும் கேரளத்தின் ஆலப்புழா மஞ்சளில் `குர்குமின்’ அளவீடு அதிகம் என்பதால், நிறத்
திலும் மருத்துவக் குணத்திலும் மற்ற பகுதி மஞ்சளைவிட உயர்தரமாகக் கருதப்படுகிறது.

உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க மஞ்சள், குப்பைமேனி, வேப்பிலை சேர்த்து அரைத்துப் பூசலாம். மஞ்சள், பால், பச்சைப்பயறு மாவு, அரைத்த சந்தனம் சேர்ந்த கலவை சிறந்த முகப்பூச்சுக் கலவையாகும். குழந்தைகளைக் குளிப்பாட்ட மஞ்சள் பயன்பட்டதாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுண்ணாம்புத்தூள், மரத்தூள், மாவுப் பொருள் ஆகியவை மஞ்சளில் சேர்க்கப்படும் கலப்படப் பொருள்களாகும். முற்காலத்தில் இயற்கைச் சாயம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மஞ்சளில், இப்போது தீமை விளைவிக்கும் `லெட்-குரோமேட்’, `மெடானில் யெல்லோ’ போன்ற செயற்கைச் சாயங்கள் கலக்கப்படுகின்றன. நேரடியாக மஞ்சள் கிழங்குகளை வாங்கி உலரவைத்துப் பயன்படுத்துவதே சிறந்தது.

கிருமிநாசினிச் செய்கை உடையதால், புண்களுக்கான முதலுதவி மருந்தாக மஞ்சள் இருந்திருக்கிறது. மலைவாழ் மக்கள், உடலில் அட்டைப்பூச்சிகள் கடித்தால், அது தன் பிடியைத் தளர்த்த மஞ்சள் தூளைத் தூவு கின்றனர். மஞ்சளை நெருப்பிலிட்டு, அதன் புகையைச் சுவாசித்தால் தலைபாரம், தலைநீரேற்றம் குறையும்.  

மஞ்சள், நமது கலாசாரத்தின் பசுமையான சின்னம்!


மஞ்சள் ரெசிப்பிகள்

விண்டலூ (Vindaloo) கறி மசாலா

நான்கு டீஸ்பூன் பொடித்த சீரகம், தலா இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, கடுகுத்தூளுடன் உப்பு சேர்க்க வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு அரை கப் வினிகர் ஊற்றி வெண்ணெய்ப் பதம் வரும் வரை கலக்க வேண்டும். ஒரு சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, மேலே சொன்ன கலவையைச் சேர்த்து, 10 நிமிடங்கள் சிறு தீயில் எரியூட்டினால் மணமும் நெடியும் சேர்ந்த மசாலா தயார். காரமும் விறுவிறுப்பும் கலந்த அசைவ உணவுகள் தயாரிக்க இதைப் பயன்படுத்தலாம். ஆந்திரா மற்றும் கோவாவில் இந்த மசாலா வகை புழக்கத்தில் இருக்கிறது.

பதோயோ (Pathoyo/Patoleo)

மஞ்சள்கிழங்கு மட்டுமல்ல; இலைகளும் உணவாகப் பயன்படுகின்றன. அரிசி மாவை நீரில் கரைத்து மஞ்சள் இலையில் தடவ வேண்டும். அதன்மீது கருப்பட்டிக் கரைசல், தேங்காய்த் துருவல், சிறிது ஏலக்காய்த்தூள், லவங்கப்பட்டைத்தூள் தடவி மஞ்சள் இலையால் மூட வேண்டும். பிறகு ஆவியில் வேக வைத்தால், `பதோயோ’ தயார். மஞ்சள் இலைகளின் மணம் கமழும் இந்த உணவு, கோவா பகுதியின் தனிச்சிறப்பு.

மஞ்சள் ஊறுகாய்

250 கிராம் பசுமையான மஞ்சள்கிழங்கை மையாக அரைத்து, அதனுடன் நான்கு எலுமிச்சைப் பழங்களிலிருந்து எடுத்த சாறு, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மஞ்சள் கிழங்கு அதிக அளவில் உற்பத்தியாகும் மார்கழி, தை மாதங்களில் மஞ்சள் ஊறுகாயைத் தயாரித்து, அப்போதைய பனிக்காலத்தில் பயன்படுத்தினால் சளி, இருமல் எட்டிப்பார்க்காது.

மஞ்சள் மிட்டாய்

பசுமையான மஞ்சள்கிழங்கை கத்தியால் மெல்லியதாகச் சீவ வேண்டும். ஒரு பானையில் நீர் ஊற்றி, அதில் மஞ்சளைப் போட்டு, சிறுதீயில் 10 நிமி டங்கள் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு கருப்பட்டி கரைத்த தண்ணீரைத் தனிப்பானையில் ஊற்றி, மேலே சொன்ன வெந்த மஞ்சள் சீவல்களையும் அதில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, சூடு ஆறியதும் சுவைக்கலாம்.

 `விடலபாகா’ (Vidalapaka)

பயத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மசூர் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு மாவுகளுடன் மஞ்சள், பெருங்காயம், உப்பு சேர்த்துச் சமைக்கப்படும் சிற்றுண்டி வகையான `விடலபாகா’, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரசித்தமானது.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள்

 

 

அ-அ+

உணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் அது சரியான முறையில் சமைக்கப்படாவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து பார்ப்போம்!

 
 
 
 
உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள்
 
 
சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை அவைகளை சமைக்கும் பக்குவத்திலும் வெளிப்படுத்த வேண்டும். சமைக்கும் உணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் அது சரியான முறையில் சமைக்கப்படாவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து பார்ப்போம்!
 
 
* உணவை சமைக்கும் பாத்திரங்கள் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதில் டெப்லான், பெர்பிளுரோ ஆக்டனோயிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தி சமைக்கும்போது கல்லீரல் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இரும்பு, பீங்கான், கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவது உடலுக்கு நலம் சேர்க்கும்.
 
* காய்கறிகளை வேக வைப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துகொள்ளக்கூடாது. அதிலிருக்கும் நீர்ச்சத்து விரயமாகி ஊட்டச்சத்துக்கள் வீணாகிபோய்விடும். காய்கறிகளை மிதமான சூட்டில் சூப்பாக தயாரித்து குடிப்பது நல்லது.
 
* ஒருசில காய்கறிகளின் தோல் பகுதியில்அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும். குறிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், வெள்ளரிக்காய், ஆப்பிள் ஆகியவற்றின் தோல் பகுதியில் நிறைய வைட்டமின்கள், கூடுதல் கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் தோல் பகுதியில் இருக்கும் நார்சத்து, செரிமானம் சீராக நடைபெற உதவி புரியும்.
 
201809091148073176_1_mistakescookinginside._L_styvpf.jpg
 
* தேன் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதை சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. சூடுபடுத்தினால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் வீணாகிவிடும். எதிர்மறையான ரசாயன மாற்றமும், கசப்பு தன்மையும் தோன்றும்.
 
* சமையல் எண்ணெய் வகைகளை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்திவிடக்கூடாது. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளை புகை வெளியேறும் அளவுக்கு சூடாக்கினால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துபோய்விடும்.
 
* வறுத்து சாப்பிடும் உணவுகள் ருசியாக இருக்கலாம். ஆனால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவைகளில் கொழுப்பு அழையா விருந்தாளியாக சேர்ந்திருக்கும். இதன் மூலம் நீரிழிவு மற்றும் இதயநோய் பாதிப்புகள் உருவாகும்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/09114807/1190103/Making-mistakes-in-cooking-food.vpf

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this