Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

மகா 'வலி'.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2018 at 7:51 AM, nunavilan said:

39813906_2038554819527944_64635640497443

எங்களின் சிங்கங்கள்.........

39887034_2038555079527918_42254236622845

 

39998596_2038555136194579_60534670302904

39875616_2038555236194569_23963125396390

 

ஆக்களின்ரை.... திறத்தில, குடை பிடிக்க ஆள்  தேவைப் படுகுது.#+#x-?

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: ocean and nature

புவி வெப்பமயமாதலை, இதனை விட அழகாக குறிப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®®à¯à®ªà®¨à¯à®¤à®©à¯, à®à¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯, மாவ௠à®à®³à¯à®³ பà®à®®à¯

அடுத்த... தீபாவளிக்கு,  "சம்சும்"  கும்பலிடமிருந்து,  நியூஸ் வராது, என்பது  சந்தோசம். 

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காசி ஆனந்தனாக மாறிய காளிமுத்து சிவானந்தன் வைகாசி 6 ஆம் திகதி மாலைவேளை, நல்லூர் முடமாவடிப்பகுதியில் அமைந்திருந்த பத்மனாதனின் வீட்டிற்கு அருகில் தனது அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை தங்கத்துரை வேவுபார்க்க அனுப்பியிருந்தார். இருள் பரவத் தொடங்கியவேளை பத்மானாதனும் அவரது மனைவியும் காரில் ஏறிச் சென்றதாக அவருக்கு உறுப்பினர்கள் செய்தியனுப்பினர். அதனையடுத்து பத்மனாதனின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் அவரது உறுப்பினர்கள் சிலரும், அங்கிருந்த பத்மனாதனின் பிள்ளைகள் ஒருவரிடம் தாம் பத்மனாதனின் மனைவியிடம் திருமணம் ஒன்றை பதிவுசெய்வது தொடர்பாகப் பேச வந்திருப்பதாகக் கூறினர். பத்மனாதனின் மனைவி திருமணப் பதிவாளராகச் செயற்பட்டு வந்திருந்தார். தமது பெற்றோர், நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவார்கள் என்றும் பிள்ளைகள் தங்கத்துரையிடம் கூறினர். இதனைத் தொடர்ந்து, தாம் வீதியின் ஓரத்தில் அவர்கள் வரும்வரைக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியே சென்றனர் தங்கத்துரையும் உறுப்பினர்களும்.  பத்மனாதன் திரும்பிவரும்வரை அவரது வீட்டு முகப்பில் அவர்கள் காத்திருந்தனர். பத்மனாதன் காரை விட்டு இறங்கி வாயிற்கதவை திறக்க எத்தனித்தபோது ஜெகன் தனது கைத்துப்பாக்கியினால் பத்மனாதனின் நெற்றிப்பொட்டில் சுட்டார். 55 வயது நிரம்பியிருந்த பத்மனாதன் நிலைகுலைந்து வீழ்ந்து அவ்விடத்திலேயே மரணமானார். அவரைக் கொன்றவர்கள் எதுவித தடயமும் இன்றி இருட்டினுள் மறைந்துபோனார்கள். பத்மனாதனின் கொலையுடன், வடக்கில் பொலீஸாரின் கட்டமைப்பை அழிக்கவே போராளிகள் முயல்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட அரசு, தேவநாயகம் தயாரித்து வந்த போராளிகளுக்கெதிரான சட்டங்களை உடனடியாக உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியது. அதன்படி புலிகளையும், அவர்களின் அமைப்பினை ஒத்த ஏனைய அமைப்புக்களையும் தடை விதிக்கும் சட்டத்தின் வரைவினை தேவநாயகம் முன்வைத்தார். இந்த வரைபு அரசியலமைப்புச் சட்ட ஆணைக்குழுவினரிற்கு ஜே ஆர் இனால் அனுப்பப்பட்டதோடு, அதனை உடனடியாக சட்டமாக்கும்படியும் அவரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஒரு பகுதியில் இயங்கிவந்த நீதிமன்றிற்குச் சென்ற தேவநாயகம் இத்தடை சட்டமாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந்த வழக்குத் தொடர்பான சில தகவல்களை நான் டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் பதிவிட்டிருந்தேன்.  இச்சட்டத்தின் ஊடாக பொலீஸாருக்கும், இராணுவத்திபருக்கும் வழங்கப்படவிருக்கும் அதீத அதிகாரம் குறித்து நீதிமன்றம் அச்சம் கொண்டிருந்தது. இச்சட்டம் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கு சந்தேக நபர்களைக் கைதுசெய்தல், தடுத்து வைத்தல், அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல், மரண தண்டனை வழங்கல் உட்பட பல தங்குதடையின்றிய அதிகாரங்களை வழங்கியிருந்தது. இசாட்டத்தினைப் பாவித்து அரசாங்கம் எதிர்க்கட்சிக்குச் சார்பான தொழிற்சங்கங்களைக் கூட துன்புறுத்த முனையும் என்றும் சிறிமாவின் வழக்கறிஞர் தனது கட்சியின் அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தேவநாயகம் எதிர்க்கட்சியினரது அச்சம் தேவையற்றது என்றும், இச்சட்டம் ஒருவருட காலத்திற்குள் அகற்றப்பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். இந்தச் சட்டத்தை அரசாங்கம் நீட்டித்துக்கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா என்று நீதிபதிகள் வினவியபோது, தேவநாயகம் பின்வருமாறு பதிலளித்தார், "நாம் இந்தச் சட்டத்தினை ஒருவருடத்திற்கு மேலாக நீட்டிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த ஒருவருட காலத்திற்குள் பயங்கரவாதிகளை முற்றாக அழித்துவிடுவோம் என்று எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது" என்று கூறினார். இதனையடுத்து இச்சட்ட நகலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இச்சட்டத்தின் மூல அரசியல் யாப்பிற்கு பாதிப்பேதும் ஏற்பட்டுவிடாதென்று கூறியதோடு, இதனை பாராளுமன்றத்தில் விவாதப்பொருளாக்கவும் அனுமதியளித்தது. பாராளுமன்றத்தில் இந்த வரைபு பலத்த ஆதரவுடம் வைகாசி 18 ஆம் திகதி சட்டமாக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து சுதந்திரக் கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிராக வக்களிக்க 131 ஆதரவு வாக்குகளுக்கு 25 எதிர் வாக்குகள் என்கிற அடிப்படையில் இந்தத் தடை சட்டமாக உருவாக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த அறுதிப்பெரும்பான்மையினைப் பாவித்து மிக இலகுவாக இச்சட்டத்தினை ஜே ஆர் நிறைவேற்றினார். காசி ஆனந்தன்  இச்சட்டத்தினைப் பாவித்து பொலீஸார் பிரபாகரன் தலைமையிலான 38 போராளிகளின் பெயர்களை தேடப்படுபவர்களாக அறிவித்தனர். இந்த போராளிகளின் படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகளை கொழும்பிலும், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பொலீஸார் ஒட்டினர். இவ்வாறு தேடப்பட்ட போராளிகளில் பலர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதும், இவர்கள் முன்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தேடப்பட்டு வந்த 38 இளைஞர்கள் 26 இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்கிணங்க வைகாசி 26 ஆம் திகதி பொலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களுள் காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், புஸ்பராஜா, நடேசானந்தன், சிறி சபாரட்ணம், சபாலிங்கம் மற்றும் சந்ததியார் உற்பட பலரும் இருந்தனர். இவர்கள் எவருமே பஸ்டியாம்பிள்ளையின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லையென்பதும், அக்கொலையில் ஈடுபட்ட எவருமே சரணடையவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.  தேடப்படும் இளைஞர்களின் பட்டியலில் காசி ஆனந்தனின் பெயரும் சேர்க்கப்பட்டது கேலிக்குரிய விடயமாக பல தமிழ் ஊடகவியலாளர்களால் அன்று பார்க்கப்பட்டது. அவரது உண்மையான பெயர் காளிமுத்து சிவானந்தன் ஆக இருந்தபோதும், கவர்ச்சிக்காக தனது பெயரை அவர் காசி ஆனந்தன் என்று மாற்றியிருந்தார். அவர் மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கவிதைகளை  எழுதிவந்ததோடு, சமஷ்ட்டிக் கட்சியின் கூட்டங்களில் தனது கவிதைகளைப் பாடியும் வந்தவர். சமஷ்ட்டிக் கட்சி வன்முறையற்ற போராட்டங்களை ஆரம்பித்த 60 களின் காலப்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன.  ################################# "பத்துதடவை படை வராது, பதுங்கிப் பாயும் புலியே தமிழா' செத்து மடிதல் ஒரு தரம் அன்றோ?, சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!"  ################################# "வெறிகொள் தமிழர் புலிப்படை, அவர் வெல்வார் என்பது வெளிப்படை"   காசி ஆனந்தனின் கவிதை எழுதும் விருப்புப் பற்றிப் பொலீஸார் அறிந்திருக்கவில்லை. இவை புலிகள் அமைப்போ அல்லது அவர்களின் முன்னைய அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் அமைப்போ உருவாகும் முன்னரே வெளிவந்திருந்த கவிதைகள். தனது கவிதைகளில் புலி எனும் பதத்தினைப் பாவித்தமைக்காகவே காசி ஆனந்தனையும் தேடப்படுவோர் பட்டியலில் பொலீஸார் சேர்த்திருந்தனர். சோழர்களின் வழித்தோன்றல்கள் என்றும் தம்மை கூறிக்கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் புலியினை தமது இலட்சினையாக வரிந்துகொள்வது அக்காலத்தில் இயல்பாக இருந்தது. என்னிடம் உமா பேசும்போது பஸ்டியாம்பிள்ளையின் கொலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து பிரபாகரன் திருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறினார். பஸ்டியாம்பிள்ளையின் கொலைச் சம்பவத்தினூடாக பொலீஸாரிடமிருந்து புலிகள் கைப்பற்றியிருந்த உப தானியங்கித் துப்பாக்கியை பிரபாகரன் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வைத்திருந்ததாக உமா கூறினார். சமூக விரோதிகளின் கொலைகளுக்கான உரிமை கோரல்கள் மற்றும் தம்மீதான தடை ஆகியவற்றின் மூலம் உலகில் அடக்குமுறைக்குள் அகப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காககப் போரிடும் போரட்ட அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள்.   தம்மீதான தடையினை ஜே ஆர் தமக்களித்த பரிசாக பிரபாகரன் கருதியதாக உமா கூறினார். "தமிழ் ஆயுதக் ககுழுவுக்கெதிராக தமது அரசாங்கம் போராடுவதாக ஜே ஆர் உலகிற்கு அறிவித்தார். இதைவிட மேலான பரிசொன்றினை ஜே ஆரினால் புலிகளுக்கு வழங்கியிருக்க முடியாது. ஆகவே, ஜே ஆர் எமக்கு வழங்கிய கெளரவத்திற்கு நாம் தகுதியுடையவர்கள் தான் என்பதை நிரூபிக்க நாம் ஏதாவது பாரிய நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று எண்ணினோம். இங்கிருந்தே அவ்ரோ விமானத்தைத் தகர்க்கும் திட்டம் உருவானது" என்று உமா மேலும் கூறினார்.  புலிகளையும் ஏனைய தமிழ் ஆயுத அமைப்புக்களையும் தடை செய்யும் தீர்மானத்தை ஜே ஆர் நிறைவேற்றியபின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனமை போராளிகளுக்குக் கடுமையான ஏமாற்றத்தினை அளித்திருந்தது. ஆத்திரமடைந்த இளைஞர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இத்தலைவர்களுக்கு எதிராக யாழ் வைத்தியசாலை மதிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறியது,  " கேட்டது தமிழ் ஈழம்,  கிடைத்ததோ ஜப்பான் ஜீப்"  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்ட ஜப்பானிய ஜீப் வண்டிகளை முன்வைத்தே மேற்படி வாசகம் எழுதப்பட்டிருந்தது. தந்தை செல்வா இருக்கும்வரை அரசாங்கத்திடமிருந்து வந்த சலுகைகள் எல்லாவற்றையும் வேண்டாம் என்று உதறித்தள்ளியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அவற்றை மிகுந்த ஆவலுடன் பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு இறங்கியிருந்தனர்.  அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்த அவரது நிலைப்பாடுபற்றிக் கேட்டேன்,  "அவர்கள் இன்னும் வெறும் பையன்கள் தான். சூழ்நிலையின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை" என்று என்னிடம் அவர் கூறினார்.  மேலும், தான் கூறப்போவதை வெளியே பதிவிட வேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டபடியே, "உங்களின் எதிரி யாரென்பது குறித்து நீங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். எங்கள் மீது பாய்வதற்கு அவர் தயாராகிக்கொண்டு இருக்கிறார்" என்றும் அவர் கூறினார். உண்மையாகவே அப்படியான பாரிய திட்டம் ஒன்றில் ஜே ஆர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது திட்டம் கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அவரது நோக்கம் தமிழர் ஐக்கிய முன்னணியினரை தமிழர்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பலவீனப்படுத்துவதாகவே இருந்தது. இதன் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அடங்கிப்போய், தன்னிடம் பணிந்து வந்து தனது தயவினை நாடுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். இதன்மூலம் சர்வதேசத்தில் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும் என்றும், தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்துவிட முடியும் என்றும் அவர் நம்பினார்.  தமிழர்களைத் தாக்குவதற்கென்றே ஜே ஆரினால் அரவணைக்கப்பட்டு வந்த சிறில் மத்தியூ எனும் சிங்கள இனவாதியை அமிர்தலிங்கத்தின்மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கும்படி ஜே ஆர் ஏவிவிட்டார். இதனையடுத்து விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய சிறில் மத்தியூ புலிகளுக்குப் பின்னால் இருந்து தூண்டிவிடுவது அமிர்தலிங்கமே என்று அடித்துக் கூறினார். புலிகளின் உரிமைகோரல் கடிதமே அமிர்தலிங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்துகிறது என்று அவர் வாதிட்டார். இதன்ம்முலம், அமிர்தலிங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ள சிறில் மத்தியுவினால் முடிந்தது. அமிர்தலிங்கமும் சிறில் மத்தியூ வைத்த பொறிக்குள் வீழ்ந்ததுடன், புலிகளால் வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்றும், பொலீஸாரே இந்த கடிதத்தினைப் புலிகளின் பெயரில் வெளியிட்டனர் என்றும் கூறத் தலைப்பட்டார். "சகல சந்தேகங்களுக்கும் அப்பால், இக்கடிதம் பொலீஸாரின் உயர்மட்டத்தின் திட்டப்படி வெளியிடப்பட்டது என்பதை முழு அத்காரத்துடன் என்னால் கூறமுடியும். புலிகளால் வரையப்பட்ட கடிதம் என்று போலியாக அனுப்பப்பட்ட இக்கடிதம் அரச அதிகாரத்திலிருக்கும் சில சக்திகளால் உருவாக்கப்பட்ட நாடகம்" என்று  பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் கூறியதோடு, புலிகள் என்கிற அமைப்பே இல்லையென்றும் வாதிட்டார்.  மேலும், அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசிக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் இறங்கிய சிறில் மத்தியூ, தமது கனவான ஈழத்தை அடைய சிங்களவரின் குருதியில் குளிக்க தமிழர் தயாராக இருப்பதாக மங்கையற்கரசி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும் அவர் கூறினார். மேலும், சிங்களவர்களின் தோலில் செருப்புக்களைச் செய்து தாம் அணியப்போவதாக மங்கையற்கரசி பேசியதாகவும் அவர் கூறினார். இவ்விரு குற்றச்சாட்டுக்களையும் அமிர்தலிங்கம் முற்றாக மறுத்திருந்தார். ஜே ஆர் பின்னர் இன்னொரு பொறியினையும் அமிர்தலிங்கத்திற்கெதிராக வைத்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஆனி 10 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன், இதற்கு மிகப்பெரிய பிரச்சாரத்தினையும் வழங்கினார். போராளிகள் இதனால் சினமடைந்தனர். ஆகவே, இந்த அழைப்பினை ஏற்கவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அவர்கள் கூறினர். ஆனால், அவர்களின் வேண்டுகோளை அமிர்தலிங்கம் நிராகரித்தார்.   தங்கத்துரை அணியினர் மீண்டும் தாக்குதலில் இறங்கினர். பஸ்டியாம்பிள்ளைக்குப் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணித்து வந்த இன்னொரு தமிழ் பொலீஸ் அதிகாரியான  உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் குட்டிப்பிள்ளை குமார், வெள்ளிக்கிழமை அன்று கோயிலிக்குச் செல்லும்போது தனது கைத்துப்பாக்கியைக் கொண்டுசெல்வதில்லை என்பதை தங்கத்துரை அணியினர் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே ஆனி 9, வெள்ளிக்கிழமை அன்று கோயிலில் பூஜைக்காக வாழைப்பழங்களையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்ய வல்வெட்டித்துறை நகர்ப்பகுதிக்கு கால்நடையாக குமார் வந்தார். அப்பகுதியில் மறைந்திருந்த குட்டிமணியும் ஜெகனும் குமார் மீது பாய்ந்து அவரை கீழே வீழ்த்திக் கொன்றனர். குமாரின் கொலை ஜே ஆருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்பட்டது. ஜே ஆரின் தடைபற்றி தாம் சிறிதும் கவலைகொள்ளவில்லை என்று டெலோ அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்க மிகத் தெளிவானது, "ஜே ஆர் உடன் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம்" என்பதே அது.  அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஆனி 10 ஆம் திகதி அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர். அங்கு பேசிய ஜே ஆர், மாவட்ட ரீதியிலான நிர்வாகத்தை மக்கள் முன் எடுத்துச் செல்வது குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஆகவே மாவட்ட மட்டத்திலான அமைச்சர்களை நியமிப்பது குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டம் வெற்றிபெற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தனக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "உங்களுக்கு நான் சில மாவட்ட அமைச்சர் பதவிகளைத் தரப்போகிறேன், நீங்களே அந்த மாவட்டங்களை நடத்திக்கொள்ளுங்கள். ஆகவே, இதுபற்றிச் சிந்தித்து, இத்திட்டம் வெற்றிபெற நாம் ஒன்றிணைந்து வேலை செய்யலாம்" என்று அவர்களைப் பார்த்து ஜே ஆர் கூறினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இதுபற்றி மேலதிக விபரங்களைத் தாருங்கள், நாம் இதுகுறித்து சாதகாமன் முறையில் பரிசீலிக்கிறோம்" என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையின் தகவல்கள் லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான டெயிலி நியூஸ், தினகரன் மற்றும்  தினமின ஆகிய நாளிதழ்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்டன. தான் செய்ய விரும்பியதை ஜே ஆர் செய்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் போராளிகளுக்கும் இடையே பகைமையினை இதன்மூலம் அவர் உருவாக்கினார். அமிர்தலிங்கத்தின் இந்த செயற்பாடு போராளிகளை மிகவும் ஆத்திரப்பட வைத்திருந்தது, குறிப்பாக டெலோ இதுகுறித்து கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தது. ஆகவே அவர்களின் பிரச்சாரக் கிளை ஜே ஆர் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும் மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் தமிழ் மக்களிடமிருந்து போராளிகள் பற்றிய தகவல்களைத் தமக்கு வழங்கிவருபவர்களின் எண்ணிக்கை வற்றுப்போனதையும், தமிழ் மக்கள் பொலீஸாரிடமிருந்தும், இராணுவத்திடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பதையும் பொலீஸார் தெளிவாக அறிந்துகொண்டனர்.  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிளவு இங்கிருந்து விரிவாகத் தொடங்கியிருந்தது.    
  • யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 03:57 PM நாடளாவியரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் அங்கு இடம்பெறவில்லை. அதனால் தூரப்பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டனர்.  வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நோயாளர்களும் சிகிச்சை பெற முடியாத நிலையில் திரும்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/147717
  • மொட்டை செல்லங்கள், எங்க கை விட்டு விடுவாங்களோ எண்டு கவலைப்பட்டேன். இந்தா வந்துடாங்கள். தெய்வங்கள் மாதிரி, வந்து, உலகத்துக்கு, சிங்களத்தினை புரிய வைக்கிறார்கள். 🐕
  • தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணா குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.