Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kavi arunasalam said:

5-F3-A0583-4-C3-F-4-E26-A1-AF-ADC0-FE2-A

பாய்மரக்  கப்பல், அற்புதமான கற்பனை. 👍 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, Kavi arunasalam said:

5609158-D-0664-40-DC-96-FD-68-ADEBBF7018

அட.... நம்ம, சுத்துமாத்து... சுமந்திரன் தம்பி, 
புலம் பெயர் தமிழர்களை அழைக்கிறார்.
பிஞ்ச... செருப்பு,  தரலாம். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கவி அருணாசலம்   உங்கள் கருத்துப்படங்கள் அத்தனையும் நியாயமான காடசிகள். பாராட்டுக்கள்.  தெய்வம் நின்று கொல்லும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொன்றும் முத்து முத்தான கார்ட்டூன்கள் .......!  👍

நன்றி கவி அருணாசலம்.......!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

D991-F523-8-D26-4-EEA-8009-498-AD728-EE7

வடக்கிலிருந்து கையால் குப்பை தொட்டிக்குள் போடுவதிலும் பார்க்க தெற்கில் இருந்து காலால் உதைத்து குப்பை தொட்டிக்குள் தள்ளினால் இன்னும் சிறப்பு :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

DB6-A8-F7-D-A247-468-B-9599-E2-BCEDB5-E1

அருமை.

வீடு கொளுத்தினால்த் தான் யோசிப்பார்களோ?

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று நள்ளிரவு முதல்... அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம், எரிபொருளை விநியோகிப்பதற்கு தீர்மானம். நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைசார்ந்த வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறுந்தூர போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் பெருமளவு இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிராமபுற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1288720
    • எந்த நேரத்திலும்... முழுமையாக முடங்கும் அபாயத்தில், இலங்கை? இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் தற்போது ஆயிரத்து 100 தொன் பெற்றோல் மற்றும் 7 ஆயிரத்து 500 தொன் டீசல் மட்டுமே உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் கப்பல் வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் எனவும் குறித்த நாழிதல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள குறைந்தளவான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்ற விடயம் எனவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாததால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1288728
    • விசுகர், "கடுகு சின்னன் என்றாலும், காரம் பெரிசு" என்று... சும்மாவா சொன்னார்கள். 😂
    • கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்நாடு முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும்படி பெங்களூருவில் உள்ள தகவல் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். வழக்கறிஞரும் ஆர்டிஐ செயல்பாட்டாளருமான டி.நரசிம்மமூர்த்தி, இந்த கடிதத்தை பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிபதிக்கும் எழுதியிருக்கிறார். அதில், நகைகள், புடவைகள் மற்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள பல சொத்துக்களை ஏலம் விடலாம் என்றும் அந்தப் பணத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். விதான் சவுதாவில் உள்ள கர்நாடக மாநில கருவூலத்தில் இப்போது ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் உள்ளன. "ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்றால், அவற்றை உணர்பூர்வமானதாக கருதி அவரது தீவிர தொண்டர்கள் வாங்குவார்கள். அதன் மூலம் கற்பனை செய்ய முடியாத பொது ஏலத் தொகையைப் பெற முடியும்,'' என்று நரசிம்மமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். கருவூலத்தில் கிடக்கும் பல்வேறு பொருட்களில், புடவைகள், நகைகள் மற்றும் சால்வைகள் அடங்கும். லட்சக்கணக்கான ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் இருப்பதால் நல்ல தொகையை ஈட்ட முடியும்," என்றும் தமது யோசனை குறித்து பிபிசியிடம் பேசிய நரசிம்மமூர்த்தி கூறினார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு (சிறப்பு நீதிமன்றம்) மாற்றப்படும் முன்பே, இந்த பொருட்கள், 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றத்தின் உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்டன. ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2017 வரை ஜெயலலிதா: வழக்கு முதல் இலங்கை தமிழர் விவகாரம் வரை - ஒரு பத்திரிகையாளனின் நினைவலைகள்   பட மூலாதாரம்,ANI   படக்குறிப்பு, நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் விவரம் தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள், ரத்தினக்கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் போன்றவை உள்பட 468 நகைகள் பட்டியலில் உள்ளன. மேலும், சில வகை மின்னணு பொருட்கள், ரொக்கம், விலை உயர்ந்த சேலைகள், சால்வைகள், காலணிகளும் அந்த பட்டியலில் உள்ளன. இதில் புடவைகளின் எண்ணிக்கை மட்டும் 11 ஆயிரத்து 344, சால்வைகளின் எண்ணிக்கை 250, காலணிகள் 750 என குறிப்பிடப்பட்டுள்ளது.   சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் 1996ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஜெயலலிதாவின் இல்லத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட குறிப்பேட்டில், 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசி மற்றும் இன்டர்காம்கள், 131 சூட்கேஸ்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 9 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்டுகள், 750 காலணிகள், 31 டிரெஸ்ஸிங் கண்ணாடி டேபிள்கள் மற்றும் 215 படிக வெட்டுக் கண்ணாடிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. புடவைகளின் தரம் குறையும் - நிபுணர்கள் ஜவுளி நிபுணர்கள், "ஜவுளிப் பொருட்களில் சில வகை பொருட்கள் மடிந்த நிலையில் நீண்ட காலம் இருந்தால் அவை நாளடைவில் தரத்தை இழந்து, நிறமும் மங்கலாகலாம்," என்று தெரிவிக்கின்றனர். சால்வைகள் கெட்டுப்போகலாம். இதே போல், காலணிகள் மற்றும் பிற தோல் அல்லது பொருட்கள் அவற்றின் தரம் மற்றும் வலிமையை இழக்கலாம். அப்படியானால், ஏ,பி,சி பட்டியலில் உள்ள பொருட்கள் தரமற்றதாகவும் அதன்பின் எந்தப் பயன்பாட்டிற்கும் தகுதியற்றதாகலாம் என்று கடிதத்தில் நரசிம்மமூர்த்தி கூறியுள்ளார். எனவே உரிய சட்ட நடைமுறைகளில் நீதி பரிபாலன முறைகளுக்கு உட்பட்டு எது தகுதியாக இருக்குமோ அதைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இணைப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொருட்களை ஏலத்தில் விற்க உரிய அதிகாரிகள் மூலம் அனுப்பலாம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மாநில கருவூலத்தில் வரவு வைத்து மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று நரசிம்மமூர்த்தி கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.bbc.com/tamil/india-61954468
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.