Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மழைக்காலம் துவங்கும் - ராஜன் விஷ்வா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

12549026_10205698755653779_8192344968966

 

மழைக்காலம் துவங்கும்

மேய்ச்சல் நிலங்களை
புற்கள் போர்த்தியிருக்கும்

எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து
மூங்கில் துளிர்க்கும்

நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள்
நான்கை ஈனும்

நீண்ட குரலெடுத்து பாடும்
ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும்

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

குயவனின் கனவுகளுக்குள்
தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும்

சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும்
பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும்

செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி
சிலந்தியின் பின்னலில்

சன்னல்களை வரைந்திருக்கும்

 

விட்டில் பூச்சியின் சிறகில்

விடிந்த பின்னும்  ஒளிர்ந்தபடி

விளக்கு மரங்கள் 

 

செம்படவனின் தோணிக்குள் தங்கமீன்

புதுநீர்பரப்பை கண்டதாய் சிலாகித்திருக்கும

மீண்டுமொரு மழைக்காலம் இப்படியான
ஏதாவதொன்றை பிரசவிக்கும்

புலரா இரவில் பெய்யும்
பெருமழையில் நடந்தபடி நான்
நனைந்து கொண்டிருப்பேன்...

 

-ராஜன் விஷ்வா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாவ்... சுப்பர்...! நல்லதொரு மழைக்காலம்...!

கடைசியில் எனக்கு இப்படித் தோன்றியது:

புலரா இரவில் பெய்யும்

சாரலில் நனைந்தபடி நான்

நடந்து கொண்டிருப்பேன்....!  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தூவானம் பட்டு துளிர்த்தது மனம் ஓடி விளையாடும் ஓடைகள் கண்டு உயிர் வந்தது உழவனுக்கு ஒரு பிடி உலகுக்கென்று......... சோறு??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருமை, ராஜன் விஷ்வா...!

மழையில் நனைந்த அனுபவம் ஏற்பட்டது...!

ஒரு கவிதையின் கருக்கட்டலும்.. அதன் பிரசவத்தின் வலியும் ஒரு தாயின் வலியைப் போலத் தான்...! 

நமது ஊரின் மழைக்காலத்து வாசனையை நுகர்ந்து நீண்ட காலமாகி விட்டது..! சிவப்புக் கம்பளப் பூச்சிகளுக்காகவும்...ஆங்காங்கே ஓடித்திரியும் மஞ்சள் பொட்டுகள் வைத்த கருநிற வண்டுகளுக்காகவும் ஏங்கி நிற்கிறது மனசு! 

அத்துடன் மழைக்காலத்து இரவுகள் தரும் வசந்த காலத்து நினைவுகளும் வந்து போகின்றன!

 

உடலைப்  பிரிந்த சேலைத் தாவணிகள்....

ஊடல் முனகல்களால் தூக்கம் கலையும்!

 

விடி விளக்குளின் வெளிச்ச நாக்குகள்,

மெல்லத் தங்களை உள்ளிழுத்துக்  கொள்ளும்!

 

நனைத்த முற்றங்களின் பாதிக் கோலங்களை...

கூந்தலின் ஈரம் மெல்லக் கலைக்கும்!

 

இன்னுமொரு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ராஜன் விஷ்வா கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன்!

அதன் விளைவு தான் எனது வரிகள்!

தொடர்ந்தும் கவியுங்கள்.. விஷ்வா!

,

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் கவிதை. 80 களில் நான் சிறுவனாக இருந்தபோது அனுபவித்த மழைக்காலத்தை அனுபவிப்பது போல இருக்குது. ஆனால் இப்பொது அப்பிடியான மழையும் இல்லை அனுபவிக்க நேரமும் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி சேயோன், சுவி, முனிவர்ஜீ :)

 

நீங்கள் எழுதியது இன்னும் சிறப்பாக உள்ளது சுவி அண்ணா.. சாரலில் தானே நனைய முடியும்.. 

 

கவிதைக்கெல்லாம் பதில் போடுறீங்க தனி மடலனுப்பினால் ஒன்றும் அனுப்புவதில்லை.... உங்களதும், சர்வேயரின் நினைவுகளை கிளறி விட்டதே இந்த கவிதை அதன் இலக்கை அடைந்துவிட்டதாக மனம் உணருகிறது... எப்போதும் போல உங்களன்பிற்கு எனது வணக்கங்கள் புங்கை அண்ணா.. :)

 

உங்கள் முன் நான் கத்துக்குட்டி தான் என்றைக்கும்.. 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

Link to post
Share on other sites
On 2016-01-29 at 4:35 AM, ராஜன் விஷ்வா said:

 

 

 

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

 

 

-ராஜன் விஷ்வா

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 மழைக்கால கவிதை அருமையாக இருக்கின்றது விஷ்வா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 1/30/2016 at 11:11 PM, விசுகு said:

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

மிக்க நன்றி அண்ணா... மழை எல்லா ஊரிலும் தானே பெய்யுது கவலையை விடுங்கள்.. மழையில் மழழையாய் மாறி மகிழ்ந்து இருங்கள்.  :)

On 1/30/2016 at 11:46 PM, நிழலி said:

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

நன்றி சகோ வாழ்த்திற்கு :)

On 1/30/2016 at 0:12 AM, suvy said:

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

உங்களது குறைகள் என்னை மேருகூட்டத்தானே, மகிழ்வே என்றும்  :)

நன்றி கு.சா மாமா... விகடகவி அண்ணா :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On Friday, February 05, 2016 at 3:57 AM, கலைஞன் said:

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

Aa

ஆகா மறந்தேவிட்டேன்.. 

 

விளக்கு மரங்களின் வெளிச்சத்தை

இறந்த பின்னுன் ஈசல் ஒளிர்ப்பதாய் எழுதியுள்ளேன். 

 

நன்றி அண்ணா கருத்திற்கும் பச்சை புள்ளிக்கும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உணர்வோடு ஒன்றாய் எழுவோம்! – கஜதீபன் இனமான உணர்வோடு நாளைய (28) கதவடைப்பு போராட்டத்தில் ஒன்றுபடுமாறு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார். நாளை கதவடைப்பு போராட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது.   அதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம். இருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது. இச்சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளையதினம் கதவடைப்பு போராட்டம் இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும், மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. எமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்கள, தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக அறிகிறோம். ஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” – என குறிப்பிடப்பட்டுள்ளது. https://newuthayan.com/உணர்வோடு-ஒன்றாய்-எழுவோம்/
  • போராடிய விவசாயிகள் மீது பாஜக வினர் கொடூர தாக்குதல்    
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் நடைபெறுவது என்ன? விளக்குகின்றார் கிருபாகரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இலங்கை விவகாரமும் இந்தக் கூட்டத் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்தும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடகால அவகாசம் அடுத்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் போது என்ன நடைபெறும் என்பதையிட்டும் பிரான்ஸிலிருந்து செயற்படும் தமிழ் மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் சா.வி.கிருபாகரன் தினக்குரல் இணையத்துக்கு விளக்குகின்றார். கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக ஜெனீவாவிலிருந்து கிருபாகரன் செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.   http://thinakkural.lk/article/72485  
  • இன்னொரு திரியில் நான் பதிந்த கருத்தை (கவிதை?) தலைப்பு பொருத்தம் கருதி இங்கே மீள் பதிவு செய்கிறேன். பாலா,  பிறப்பால் நீ  தெலுங்கன் உணர்வால் தீந்  தமிழன்    தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை   எம் உரிமை கானங்களை உணர்ந்து பாடியவன் நீ  எம் யுத்த ரணங்களுக்கு எல்லாம் மருந்தும் ஆனவன் நீ  யாவரும் கேளிர் என வாழ்ந்து காட்டியவன் நீ  அதனால்தான் உனக்கு உலகின் அத்தனை மூலையும் ஊராகிப் போனது  போய்வா தமிழ் திரையிசையின் தலை மகனே   தமிழா,   உனக்கு இப்போ கிடைக்கிறது அரச மரியாதை  ஆனால் தமிழ்  இருக்கும் வரை உனக்கு கிடைக்கும் இராஜ மரியாதை .   கீழே இருப்பது  இரெண்டாம் உலக யுத்ததின் பின் ஜேர்மானியரான பாதிரியார் மார்டின் நீம்லெர் எழுதிய உரைவடிவிலான மன்னிப்பு கவிதையின் ஆங்கில வடிவம். இதை மொழி பெயர்த்து வீரியம் இழக்க செய்ய விரும்பாதபடியால் அப்படியே பதிகிறேன். First they came for the socialists, and I did not speak out—      Because I was not a socialist. Then they came for the trade unionists, and I did not speak out—      Because I was not a trade unionist. Then they came for the Jews, and I did not speak out—      Because I was not a Jew. Then they came for me—and there was no one left to speak for me.
  • சென்ற வருடம் நடப்பட்ட மரக்கன்றுகள் இந்த வருடம் மரமாக மகிழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் உறவு!  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.