Archived

This topic is now archived and is closed to further replies.

ராஜன் விஷ்வா

மழைக்காலம் துவங்கும் - ராஜன் விஷ்வா

Recommended Posts

12549026_10205698755653779_8192344968966

 

மழைக்காலம் துவங்கும்

மேய்ச்சல் நிலங்களை
புற்கள் போர்த்தியிருக்கும்

எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து
மூங்கில் துளிர்க்கும்

நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள்
நான்கை ஈனும்

நீண்ட குரலெடுத்து பாடும்
ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும்

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

குயவனின் கனவுகளுக்குள்
தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும்

சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும்
பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும்

செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி
சிலந்தியின் பின்னலில்

சன்னல்களை வரைந்திருக்கும்

 

விட்டில் பூச்சியின் சிறகில்

விடிந்த பின்னும்  ஒளிர்ந்தபடி

விளக்கு மரங்கள் 

 

செம்படவனின் தோணிக்குள் தங்கமீன்

புதுநீர்பரப்பை கண்டதாய் சிலாகித்திருக்கும

மீண்டுமொரு மழைக்காலம் இப்படியான
ஏதாவதொன்றை பிரசவிக்கும்

புலரா இரவில் பெய்யும்
பெருமழையில் நடந்தபடி நான்
நனைந்து கொண்டிருப்பேன்...

 

-ராஜன் விஷ்வா

Share this post


Link to post
Share on other sites

அருமை. வாழ்த்துகள்!

Share this post


Link to post
Share on other sites

வாவ்... சுப்பர்...! நல்லதொரு மழைக்காலம்...!

கடைசியில் எனக்கு இப்படித் தோன்றியது:

புலரா இரவில் பெய்யும்

சாரலில் நனைந்தபடி நான்

நடந்து கொண்டிருப்பேன்....!  :)

Share this post


Link to post
Share on other sites

தூவானம் பட்டு துளிர்த்தது மனம் ஓடி விளையாடும் ஓடைகள் கண்டு உயிர் வந்தது உழவனுக்கு ஒரு பிடி உலகுக்கென்று......... சோறு??

Share this post


Link to post
Share on other sites

அருமை, ராஜன் விஷ்வா...!

மழையில் நனைந்த அனுபவம் ஏற்பட்டது...!

ஒரு கவிதையின் கருக்கட்டலும்.. அதன் பிரசவத்தின் வலியும் ஒரு தாயின் வலியைப் போலத் தான்...! 

நமது ஊரின் மழைக்காலத்து வாசனையை நுகர்ந்து நீண்ட காலமாகி விட்டது..! சிவப்புக் கம்பளப் பூச்சிகளுக்காகவும்...ஆங்காங்கே ஓடித்திரியும் மஞ்சள் பொட்டுகள் வைத்த கருநிற வண்டுகளுக்காகவும் ஏங்கி நிற்கிறது மனசு! 

அத்துடன் மழைக்காலத்து இரவுகள் தரும் வசந்த காலத்து நினைவுகளும் வந்து போகின்றன!

 

உடலைப்  பிரிந்த சேலைத் தாவணிகள்....

ஊடல் முனகல்களால் தூக்கம் கலையும்!

 

விடி விளக்குளின் வெளிச்ச நாக்குகள்,

மெல்லத் தங்களை உள்ளிழுத்துக்  கொள்ளும்!

 

நனைத்த முற்றங்களின் பாதிக் கோலங்களை...

கூந்தலின் ஈரம் மெல்லக் கலைக்கும்!

 

இன்னுமொரு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ராஜன் விஷ்வா கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன்!

அதன் விளைவு தான் எனது வரிகள்!

தொடர்ந்தும் கவியுங்கள்.. விஷ்வா!

,

 

 

Share this post


Link to post
Share on other sites

சுப்பர் கவிதை. 80 களில் நான் சிறுவனாக இருந்தபோது அனுபவித்த மழைக்காலத்தை அனுபவிப்பது போல இருக்குது. ஆனால் இப்பொது அப்பிடியான மழையும் இல்லை அனுபவிக்க நேரமும் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

நன்றி சேயோன், சுவி, முனிவர்ஜீ :)

 

நீங்கள் எழுதியது இன்னும் சிறப்பாக உள்ளது சுவி அண்ணா.. சாரலில் தானே நனைய முடியும்.. 

 

கவிதைக்கெல்லாம் பதில் போடுறீங்க தனி மடலனுப்பினால் ஒன்றும் அனுப்புவதில்லை.... உங்களதும், சர்வேயரின் நினைவுகளை கிளறி விட்டதே இந்த கவிதை அதன் இலக்கை அடைந்துவிட்டதாக மனம் உணருகிறது... எப்போதும் போல உங்களன்பிற்கு எனது வணக்கங்கள் புங்கை அண்ணா.. :)

 

உங்கள் முன் நான் கத்துக்குட்டி தான் என்றைக்கும்.. 

 

 

Share this post


Link to post
Share on other sites

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

Share this post


Link to post
Share on other sites
On 2016-01-29 at 4:35 AM, ராஜன் விஷ்வா said:

 

 

 

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

 

 

-ராஜன் விஷ்வா

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

Share this post


Link to post
Share on other sites

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

Share this post


Link to post
Share on other sites

 மழைக்கால கவிதை அருமையாக இருக்கின்றது விஷ்வா

Share this post


Link to post
Share on other sites
On 1/30/2016 at 11:11 PM, விசுகு said:

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

மிக்க நன்றி அண்ணா... மழை எல்லா ஊரிலும் தானே பெய்யுது கவலையை விடுங்கள்.. மழையில் மழழையாய் மாறி மகிழ்ந்து இருங்கள்.  :)

On 1/30/2016 at 11:46 PM, நிழலி said:

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

நன்றி சகோ வாழ்த்திற்கு :)

On 1/30/2016 at 0:12 AM, suvy said:

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

உங்களது குறைகள் என்னை மேருகூட்டத்தானே, மகிழ்வே என்றும்  :)

நன்றி கு.சா மாமா... விகடகவி அண்ணா :)

Share this post


Link to post
Share on other sites

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

Share this post


Link to post
Share on other sites
On Friday, February 05, 2016 at 3:57 AM, கலைஞன் said:

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

Aa

ஆகா மறந்தேவிட்டேன்.. 

 

விளக்கு மரங்களின் வெளிச்சத்தை

இறந்த பின்னுன் ஈசல் ஒளிர்ப்பதாய் எழுதியுள்ளேன். 

 

நன்றி அண்ணா கருத்திற்கும் பச்சை புள்ளிக்கும்.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில் கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான் ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல் எய்தவனை  விட்டுவிட்டு அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம் இப்போ  சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????
    • 1) சுமந்திரனின் கருத்துக்கள் பேச்சுக்கள் செயற்பாடுகள் என்பது சுமந்திரன் என்கின்ற தனி நபரை பிரதிநிதித்துவம் செய்யும் கருத்துக்கள் அல்ல. அவர் அங்கம்வகிக்கும் TNA யின் கருத்துக்கள் (மிகப் பெரும்பாலும்).  TNA வடக்கு கிழக்குத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆகவே TNAயை பிரதிநிதியின் கருத்துக்கள் செயற்பாடுகளுக்கு அக் கட்சியினை விமர்சிக்க வேண்டுமென்பதுதான் சரியான செயற்பாடாக இருக்கும். கட்சிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி மீதுதான் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவரை மட்டும் குறிவைத்து அடிப்பதன் நோக்கம் என்ன ? 🤥 சுமந்திரனை நீக்கிவிட்டால் TNAயின் கொள்கைகள் சரியானதாக ஆகிவிடுமா ☹️ சுமந்திரன் TNA க்குள் வருவதற்கு முன்னர் அவர்களின் செயற்பாடு தமிழர்களின் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி இருந்ததா 🤔  அல்லது சுமந்திரன் வந்த பின்னர்தான் TNAயின் செயற்பாடுகள் மாற்றம் கண்டனவா ? 😀 அல்லது சுமந்திரன் இல்லாதவிடத்து வேறொருவர் வந்தால் TNA யின் நிலைப்பாடு மாற்றமடைந்துவிடுமா 😀 உங்கள் உண்மையான கரிசனை தமிழ்த் தேசியம் என்பதாக இருந்தால் நாம் எல்லோரும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது TNAயின் நிர்வாகம் மீதுதானே தவிர சுமந்திரன் என்கின்ற தனி மனிதர் மீதல்ல. 👍  2) சமய ரீதியில் அவர் இலக்கு வைக்கப் படுவதாக கேள்விக்கிடமின்றி நான் நம்புகிறேன். அதனாலேயே எனது கருத்துக்கள் சுமந்திரன் சார்புடையதாக வெளிவருகின்றன. உண்மையில் சமய ரீதியிலான பிளவு தமிழ்த் தேசியத்தை சிதைக்கும். ☹️ RAW மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயற்படுகிறது. அதற்கு எமது எட்டு அப்பர்களைக் (எட்டப்பர்) கொண்டவர்கள் துணை போகின்றார்கள். அவர்களுடைய முழுமையான நோக்கமும் ஒன்றுதான். அதாவது TNA யை கிறீத்துவ நீக்கம் செய்தல். 😡 அதன் பின்னர் தமிழ்த் தேசியத்தை சிதைத்தல். இறுதியில் இலங்கைத் தமிழர்களை இந்தியாவிற்கு சேவகம் செய்பவர்களாக மாற்றுதல். அதன் இறுதியில் வடக்கு-கிழக்கு இந்தியாவுடன் இணைக்கப்படும். 😡      
    • செல்போனில் இருந்து வரும் கதிர்கள் குறைந்த அதிர்வுடைய ரேடியோ கதிர்கள் (no ionized low frequency radio frequency energy) National Cancer Institute ஆய்வு அறிக்கையின்படி இதனால் கான்சர் வரும் சாத்தியத்துக்கு இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை. இதயத்துக்கு ஏதாவது தீமை இருக்குமா என்று பல ஆய்வுகள் நடந்துள்ளன. அப்படியும் ஒரு தீங்கும் விளைவிப்பதாக தெரியவில்லை. இதயத்தில் நிறைய மின்சார ஓட்டம் தொடர்ந்து நடப்பதால், செல்போன் அதிர்வுகள் இந்த மின்சார ஓட்டத்தை இடையூறு செய்து அதனால் இருதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்து பலதரப்பட்ட வயது, மற்றும் பலதரப்பட்ட உடல் நிலை உள்ள மனிதர்களை வைத்து Clinical studies பல செய்தும் பார்த்து அப்படி இதயத்துக்கு ஒரு பாரதூரமான விளைவுகளும் இருப்பதாக கண்டு பிடிக்கவில்லை. எனது மகனின் நண்பன் (Ross)  அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது அவரின் தமயன் எறிந்த baseball தவறுதலாக  Ross இந்த நெஞ்சில் பட்டுவிட்டது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் நேரத்தில், மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும் இடத்தில போய் பந்து அடித்தபடியால் இதயத்தின் மேல் அறைகளில் மின்சார ஓட்டம் குழம்பி அதனால் இதயத்துடிப்பும் குழம்பி (Atrial Fibrillation) போதிய அளவு இரத்தம் மூளைக்கு போவது குறைந்து விட்டது. அந்த இடத்தில் ஒரு Defibriliator இருந்திருந்தால் அன்று அப்படி ஒரு விபரீதம் நடந்திருக்காது. Defibrillator ஐ அதில் கூறியிருப்பது போல நெஞ்சில் பிடித்தால் மீண்டும் மின்சார ஓட்டம் சீராக ஓடத்தொடங்கி இதயமும் ஒழுங்காக துடிக்கத்தொடங்கும். அதனால்தான் இப்போதெல்லாம் First aid kit க்கு பக்கத்தில் defibrillator ஐயும் வைத்திருக்கிறார்கள். நாம் எல்லோருமே ஒரு அடிப்படை முதல் உதவி பயிற்ச்சி பெற்று  வைத்திருந்தால் சிலவேளைகளில் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன்படும். Ross உடனேயே Helicopter மூலம் அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அவரது மூளை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. 3 மாதம் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லும்போது அவர்களின் குடும்பத்தார் விட்ட அறிக்கையில் " Ross இன்று இரண்டாம் தடவையாக ஒரு குழந்தையாய் வீடு செல்கிறான்" என்று குறிப்பிட்டார்கள். இன்று அவன் 22 வயது இளைஞன். ஆனால் 3 வயதுக்குரிய மூளை வளர்ச்சி மட்டுமே இருப்பதால் படுக்கையில் தான் இருக்கிறான். செல்போனை பற்றிய எனது கருத்து என்னவென்றால், எந்த ஒரு இயற்கைக்கு மாறான பொருளிலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதனால் கூடியவரையில் அதை எமக்கு மிக அருகில் வைக்காமல் தவிர்ப்பது நல்லம். மனித குலம் 5 மில்லியன் வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறோம். ஆனால் எமது நவீன விஞ்ஞானம் , தொழில் நுட்பம் எல்லாம் ஒரு சில நூற்றாண்டுகளில் தான் முன்னேறியது. எமது ஆதி காலத்து ஞானிகள்  விஞ்சானிகள் கண்டுபிடித்த எவற்றையும் நாம் இன்னும் மீள் கண்டுபிடிப்பு செய்யவில்லை. அதனை ஊக்குவிப்பார்களும் இல்லை (அநேகமான). எனவே எமது ஒரு சில நூற்றாண்டுகளே ஆன விஞ்ஞான , மருத்துவ தொழில்நுட்ப கண்டு பிடிப்புக்கள் எல்லாமே இன்னும் குழந்தையாக தவண்டு கொண்டு இருக்கிறது. தத்தி தத்தி நடந்து, நிமிர்ந்து நடப்பதற்கு இன்னும் பல நூறாண்டுகள் தேவை.  எமது உடல் ஒரு விசித்திரமான மிகவும் சிக்கலான ஒரு இயந்திரம். அதனை பற்றி நாம் அறிந்திருப்பது 1% மட்டுமே. அத்துடன் எமது உடல், உலகம் பற்றியதான எமது பார்வை, விளக்கம் எல்லாம் இந்த ஐந்து உறுப்பை கொண்டே . அதுக்கும் மேலாக எமது ஐம் புலன்களால் அறிய தெரிய முடியாத  விடயங்கள் நிறய, எமது கற்பனைக்கு எட்டாத அளவு உள்ளன. இந்த விளக்கங்களை நான் வாசித்த, கேள்விப்பட்ட, எனது சிந்தனைகளை வைத்து நானே விளங்கிக்கொண்டவை. இவற்றை எனது மாணாக்கர்களுக்கு கூறும்போது மிகவும் சந்தோசப்படுவார்கள் . வேறு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது  நான் அண்மையில் அழகப்பா பல்கலை கழக கடல் ஆராச்சி  பீட மாணவர்களுக்கு கடலை பற்றி சொன்ன விடயங்களை எழுதுகிறேன். சிறி எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிச்சாச்சு.
    • பார்வைகள்  வித்தியாசப்படும் . நெருப்பில்லாமல் புகையாது நீங்கள்  என்னடாவென்றால் ஒன்றுமே நடக்கவில்லை என  நிறுவமுற்படுவது பிழையான ஒன்று.