Jump to content

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....


Recommended Posts

   டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

 

 

                              http://www.apnaopinionbol.com/uploads/uploads/Capture_jpgAA_.jpg

 

 

12370807_936040746443119_376055240022008

 

 

                                                                                12369215_936041259776401_812038472666816

 

 

20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்  இந்தியாவில் நடைபெற உள்ளது. 

இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி,  இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும்,

பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணிஉட்பட மொத்தமாக 10 அணிகள் மோதவுள்ளன.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை போட்டிகள் இடம் பெறும்.

பெங்களூரு, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு ஏ: பங்களதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: சிம்பாவே, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங், ஆப்கானிஸ்தான் 

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் திகதி முதல் 13-ம் திகதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன. 

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணியானது  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள பிரிவு 2-விலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி பிரிவு 1 இன் அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும். 

எனவே தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை தொடர்கிறது. மொத்தமாக 35 போட்டிகள் பெங்களூரு, சென்னை, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் முறையே புதுடெல்லி மற்றும் மும்பையில் நடைபெற, மார்ச் 3-ம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இந்த போட்டி தொடர்பான செய்திகள் கருத்துகள் இந்த திரியில் தொடரும்...

Link to comment
Share on other sites

  • Replies 357
  • Created
  • Last Reply

உலகக்கோப்பை டி20: மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்; டேரன் சமி கேப்டன்

 

கிறிஸ் கெயில். | படம்: ஏ.பி.
கிறிஸ் கெயில். | படம்: ஏ.பி.

டி20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் தற்போது நம்பர் 1 இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்காக கிறிஸ் கெயில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டேரன் சமி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பவுலிங் செய்யாமல் த்ரோ செய்வதாக இடைக்கால தடை விதிக்கப்பட்ட சுனில் நரைனும் மே.இ.தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

2012-ல் சாம்பியன் ஆன மே.இ.தீவுகள் அணியிலிருந்து இந்த அணியில்11 வீரர்கள் உள்ளனர், புதுமுக வீரர்களாக ஜேசன் ஹோல்டர், இடது கை ஸ்பின்னர் சுலைமான் பென், ஆந்த்ரே பிளெட்சர், ஜெரோம் டெய்லர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மிக முக்கியமாக அதிரடி ஆல்ரவுண்டர்களான டிவைன் பிராவோ, கெய்ரன் பொலார்ட் ஆகியோரும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஒரு தகுதி பெறும் புதிய அணி ஆகியவற்றுடன் மோத வேண்டும்.

பிரதான சுற்றுக்கு முன்னதாக இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முறையே மார்ச் 10 மற்றும் மார்ச் 13-ம் தேதிகளில் பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகள் விளையாடுகிறது.

பிறகு மார்ச் 16-ம் தேதி மும்பையில் இங்கிலாந்தை உலகக்கோப்பை டி20 முதல் போட்டியில் சந்திக்கிறது மே.இ.தீவுகள்.

மே.இ.தீவுகள் அணி விவரம்:

டேரன் சமி (கேப்டன்), சாமுயெல் பத்ரீ, சுலைமான் பென், டேரன் பிராவோ, டிவைன் பிராவோ, ஆந்த்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், கெய்ரன் பொலார்ட், தினேஷ் ராம்தின், ஆந்த்ரே ரசல், மர்லன் சாமுயெல்ஸ், லெண்டில் சிம்மன்ஸ், ஜெரோம் டெய்லர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article8171939.ece?homepage=true

Link to comment
Share on other sites

உலகக்கிண்ண போட்டியில் நடுவர்களுக்கும் ஹெல்மெட்

January 31, 2016

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டியில் நடுவர்களுக்கும் ஹெல்மெட் வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துகளால் ஏற்படும் காயங்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்தால் காயம் அடைந்து மரணமடைந்தார்.

helmet_001

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகமானது. ஆனால் அதன் பிறகும் கிரிக்கெட் களத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழகம்- பஞ்சாப் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயல்பட்ட ஜான் வார்டு, பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில் அவர் ஹெல்மெட் அணிந்து பணிபுரிந்தார். இந்நிலையில் இதை கவனத்தில் கொண்ட சர்வதேச கிரிக்கெட் வாரியம் எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் நடுவர்களுக்கும் ஹெல்மெட் வழங்க முடிவெடுத்துள்ளது. ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லை என்று தெரிவித்த ஐ.சி.சி, அப்படி பாதுகாப்புக்காக அணிந்து கொண்டால் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=8645&cat=2

Link to comment
Share on other sites

T 20 உலகக்கிண்ண போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

February 01, 2016

இந்தியாவில் அடுத்த மாதம் நடைப்பெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந் அணியில் மிச்சேல், சான்ட்னெர், இந்தர்பீர் சிங் சோதி, நாதன் மெக்கல்லம் ஆகிய 3 சுழற்பந்து வீரர்கள் அணிக்கு உள்ளெடுக்கப்பட்டுள்ளனர்.

New-Zealand-Squad-for-T20-World-Cup-2016

நியூசிலாந்து அணி விவரம் வருமாறு, வில்லியம்சன் (அணிதலைவர்), மார்ட்டின் கப்டில், ரொஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல், எல்லியாட், ஆண்டர்சன், கோலின் முன்ரோ, லுகே ரோஞ்சி, மிச்சேல் சான்ட்னெர், நாதன் மெக்கல்லம், போல்ட், மெக்லகன், ஆடம் மிலின், சோதி, சவுத்தி.

நியூசிலாந்து அணியின் நம்பிக்கை சிகரமான அதிரடி துடுப்பாட்ட வீரர் பிரண்டன் மெக்கலம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் தொடருடன் சர்வதேச அரங்கில் ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ள நிலையில், வில்லியம்சன் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=8691

Link to comment
Share on other sites

இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க

இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க

February 2, 2016  12:53 pm

Bookmark and Share
 
எதிர்வரும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண தொடர் ஆகிய போட்டிகளின் போது இலங்கை அணித் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஏஞ்சலோ மெத்தியூஸ் குறித்த இரண்டு போட்டித் தொடர்களின் போதும் உப தலைவராக செயற்படுவார் என்றும் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.
Link to comment
Share on other sites

டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே வாய்ப்பு: பிரையன் லாரா

 

 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-0 என்று டி20 கோப்பையை வென்ற இந்திய அணி. | படம்: கெட்டி இமேஜஸ்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-0 என்று டி20 கோப்பையை வென்ற இந்திய அணி. | படம்: கெட்டி இமேஜஸ்.

எதிர்வரும் டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறிய லாரா, மேற்கிந்திய அணியும் அச்சுறுத்தலாகத் திகழும் என்றார்.

துபாயில் பத்திரிகை பேட்டி ஒன்றில் லாரா கூறும்போது, "தங்கள் நாட்டில் இந்தியாவே வெல்லும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்திய அணி தற்போது உலகின் சிறந்த அணிகளுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்திய அணி வெல்லும் என்பதே எனது கணிப்பு.

ஆனால் மேற்கிந்திய அணியைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டும், அவர்கள் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளார்கள் எனவே மற்ற அணிகளுக்கு இது கவலையளிப்பதாகவே அமையும். வீரர்கள் ஒற்றுமையுடன் ஆக்ரோஷமாக ஆடினால் மே.இ.தீவுகளும் கோப்பையை வெல்லும் அணியின் பட்டியலில் இருக்கும்.

கிறிஸ் கெயில், டேரன் பிராவொ, கெய்ரன் பொலார்ட் உள்ளிட்டவர்கள் இணையும் போது அவர்களிடையே கெமிஸ்ட்ரி உள்ளது. இவர்கள் நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

ஆனால் சில வேளைகளில் மே.இ.தீவுகள் அணி சீரற்ற முறையில் விளையாடுவதையும் பார்த்து வருகிறோம். எனவே வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை எதுவும் கணிக்க முடியவில்லை” என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் 1-ல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் தகுதிச்சுற்று அணி ஒன்று ஆகியவற்றுடன் உள்ளது. இது கடினமான பிரிவே.

பிரதான போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது மே.இ.தீவுகள்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article8183831.ece

Link to comment
Share on other sites

சங்காவின் கணிப்பு பலிக்குமா?

February 02, 2016

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலககிண்ணத்தை இந்திய அணி கைப்பற்ற அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று இலங்கை அணியின் முன்னால் அணித்தலைவர் சங்கக்காரா கூறியுள்ளார்.

sanka_

இதுகுறித்து அவர் கூறியதாவது,
நெருக்கடியை கையாள்வதில் டோனி சிறந்தவர். அதுவும் இந்திய மண்ணில் விளையாடும் போது இதில் கைதேர்ந்தவர்.

அவர் இந்திய அணிக்கு நீண்ட காலமாக அணித்தலைவராக இருக்கிறார். நெருக்கடியை கையாள்வதில் அவரைவிட சிறந்த அணித்தலைவர் யாரும் இல்லை.

20 ஓவர் உலகக்கிண்ணத்தை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. உலகக்கிண்ண வெற்றிக்கு சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். இந்திய அணியில் உலகின் தலைசிறந்த சுழல்பந்து வீரர்கள் உள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=8729&cat=2

Link to comment
Share on other sites

3 minutes ago, arjun said:

இந்தியா வெல்லாது .

சரி போட்டியை வைத்தால் போச்சு..:grin:

நீங்கள் தயாரா பங்கு பற்ற:)

Link to comment
Share on other sites

டி 20 உலககோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு

 
 

6வது டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நஷீர் ஹோஸைன், முகமது மிதுன் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டில் ஜிம்பாப்வே தொடரில் விளையாடியிருந்தனர்.

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி குருப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அணிகளும் உள்ளன. வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 9ம் தேதி நெதர்லாந்தை சந்திக்கிறது.

அணி விவரம்:

மோர்டஸா(கேப்டன்), ஷாகிப் அல்-ஹசன், தமிம் இக்பால், முகமது மிதுன், மஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், ஷபீர் ரகுமான், நஷீர் ஹோசைன், முஸ்டாபிஜூர் ரகுமான், அல்-அமீன் ஹொசைன், தஸ்கின் அகமது, அரபாத் ஷன்னி, அபு ஹைதர், நுருல் ஹசன்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8192543.ece

 

Link to comment
Share on other sites

டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு! அணியில் யுவராஜ், ஹர்பஜன்

 

ஆசியக் கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அணி  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸி தொடரில் சிறப்பாக விளையாடிய அனைவரும் இந்த தொடரில் இடம் பிடித்துள்ளனர். புவனேஷ் குமார், மணீஷ் பாண்டேவுக்கு பதில் பவன் நகி, முகமது சாமி இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 

12669616_1069974566357569_43026882361688

அணி விவரம் பின்வருமாறு:
 

தோனி,
ரோஹித் ஷர்மா
ஷிகர் தவான்
விராட் கோலி
ரஹானே
ரெய்னா
யுவராஜ் சிங்
ஹர்திக் பாண்ட்யா
ஜடேஜா
அஸ்வின்
பூம்ராஹ்
நெஹ்ரா
ஹர்பஜன் சிங்
முகமது சமி
பவன் நகி

http://www.vikatan.com/news/sports/58601-team-india-announced-for-t20-worldcup.art

Link to comment
Share on other sites

அலசல்: டி20 உலகக் கோப்பை அணித் தேர்வும் புரியாத புதிரும்

 

 
இர்பான் பத்தான். கோப்புப் படம்.
இர்பான் பத்தான். கோப்புப் படம்.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை டி20 தொடர்களுக்கான அணியில் இர்பான் பதான், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

ஆசியக் கோப்பை டி20 மற்றும் உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, எதிர்பார்த்தது போல்தான் அணித் தேர்வும் நடைபெற்றுள்ளது. சாத்தியமாகக் கூடிய சிறந்த அணியைத்தான் தேர்வு செய்துள்ளனர் என்றாலும் அமித் மிஸ்ரா, இர்பான் பத்தானுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆனால், இரண்டு வீரர்கள் தேர்வு கேள்விக்குரியதாக உள்ளது. ஒன்று மொகமது ஷமி. அணித்தேர்வு செய்யும் நாளான இன்று கூட அவரது உடல் தகுதி நிச்சயமானதாக இல்லை. "30 நாட்களில் தெரியும் ஷமியின் நிலை என்னவென்று, அவர் குணமடைந்து பந்துவீசத் தொடங்கியுள்ளார் இப்போதைக்கு இவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்” என்று தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

அணித்தேர்வுக் குழு தலைவருக்கே ஒரு வீரரின் உடல் நிலை என்னவென்பது ‘இவ்வளவுதான் தெரியும்’ என்றால் அவரை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏதோ மாற்று வீரர்களே இல்லை என்பது போலான ஒரு தோற்றத்தை இது அளிக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் என்றால் சரி அனுபவம் முக்கியம், ஆனால் டி20 தொடரில் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஏன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரீந்தர் ஷரணுக்கே ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாமே?

ஆஸ்திரேலியாவுக்கான தொடருக்கு முக்கியமாக இருந்த ஷரணின் பெயர் இந்தியாவில் நடைபெறும் தொடருக்கு அல்லது கிட்டத்தட்ட இந்திய நிலைமைகள் உள்ள வங்கதேச ஆசிய டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படாமல் விடப்பட்டதன் தர்க்கம் என்னவென்பது நமக்குப் புரியவில்லை.

மேலும் சமீபமாக உள்நாட்டு தொடர்களில் இர்பான் பதான் அருமையாக ஆடி வருகிறார். சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் இர்பான் பதான் என்பது யாருக்குத் தெரியாவிட்டாலும், ஒரு அணித்தேர்வுக்குழு தலைவருக்கோ, அல்லது வழிநடத்தும் கேப்டனுக்கோ தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான். 10 போட்டிகளில் இர்பான் பத்தான் 17 விக்கெட்டுகளை 15.76 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் 200 ரன்கள் எடுத்துள்ளார்.

ஷமிக்கு பதிலாக நிச்சயம் இர்பான் பதானே டி20 வடிவத்தில் சிறந்த தெரிவு என்பதில் ஐயமில்லை. ஷமியைத் தேர்வு செய்ததன் மூலம் அணித்தேர்வுக்கான தகுதிகள் என்னன்ன என்ற கேள்வி எழுகிறது. காயமடைந்து பந்து வீசத் தொடங்கியிருப்பதை ஒரு தகுதியாகக் கொள்ள முடியுமா? இன்னும் சொல்லப்போனால் முனாப் படேலே சிறந்த தெரிவுதான், அவரும் டி20 போட்டிகளில் சிக்கனமாகவே வீசி வருகிறார். ஆல்ரவுண்டர் தேவை என்றால் இர்பான் பத்தானைத்தான் தேர்வு செய்திருக்கலாம். ஆஷிஷ் நெஹ்ரா மீது வைக்கும் நம்பிக்கையில் கொஞ்சம் இர்பான் பதான் மீதும் வைத்து ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்:

கடந்த டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலராவார் அமித் மிஸ்ரா. அதன் பிறகும் கூட அவர் டெஸ்ட் போட்டிகளுக்குத் திரும்பிய போதும் நன்றாக வீசிவருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜடேஜா நன்றாக வீசியதால் ஒருநாள் டி20 அணியில் மீண்டு நுழைய முடிகிறது என்றால், அதே டெஸ்ட் போட்டிகளிலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நன்றாக வீசிவரும் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதேன்?

நிச்சயம் ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக அமித் மிஸ்ராவுக்குத்தான் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். மேலும் பவன் நேகி எதற்கு என்று புரியவில்லை. சென்னை சூப்பர் கிங்சில் விளையாடியவர் என்பதைத் தவிர அவரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்வாஷ் வெற்றியில் அஸ்வின், ஜடேஜா அருமையாக வீசினர். துணைக்கண்ட பிட்ச்களில் இவர்களே போதும், வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், விராட் கோலி, ரோஹித் சர்மா என்று அனைவரும் வீசப்போகிறார்கள், எதற்காக ஹர்பஜன், பவன் நேகி? நிச்சயம் இவர்கள் இடத்தில் அமித் மிஸ்ராதான் இருந்திருக்க வேண்டும்.

உலகம் முழுதுமே ஒரு பந்து வீச்சு வரிசையில் லெக் ஸ்பின்னர் எவ்வகையான ஒரு மாற்றத்தை விளைவிப்பார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் இந்திய அணித்தேர்வுக்குழு மட்டும் திறமையான லெக் ஸ்பின்னரை ஒதுக்கி வைக்கின்றனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லிமிடட் ஓவர் தொடரில் அஸ்வின் இல்லாத நிலையில் அமித் மிஸ்ரா தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் அருமையாகவே பயன்படுத்தி வீசினார். மேலும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் அமித் மிஸ்ரா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், விக்கெட்டுகள் பட்டியலில் பவன் நேகி பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் மிஸ்ரா சமீப காலங்களில் பேட்டிங்கும் அருமையாக ஆடி வருகிறார்.

எனவே மீண்டும் மீண்டும் விளையாடிய வீரர்களையே சேர்ப்பதும், பேருக்குப் புதிய வீரர்களைச் சேர்ப்பதும் பிறகு அவர்களை ஓரிரு போட்டிகளுக்குப் பிறகு கழற்றி விடுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. பேட்டிங்கில் அதேபோல் சிட்னியில் அருமையாக சதம் எடுத்து மிகப்பெரிய ஸ்கோரை விரட்டி வெற்றி பெற வைத்த மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் அம்பாத்தி ராயுடுவுக்கு ஏற்பட்ட கதிதான் மணிஷ் பாண்டேவுக்கு ஏற்படும் என்கிற ஐயத்தை தவிர்க்க முடியவில்லை.

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள், பிற கிரிக்கெட் தொடர்களில் காட்டும் திறமைதான் அணித்தேர்வுக்கு அடிப்படை என்றால் அமித் மிஸ்ரா, இர்பான் பத்தான் தேர்வு செய்யப்படாதது புரியாத புதிர்தான்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8198244.ece?homepage=true

Link to comment
Share on other sites

இருபதுக்கு20 உலகக் கிண்ண ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

 

இருபதுக்கு20 உலகக்கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருபதுக்கு20  உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி  ஆறாவது இருபதுக்கு 20 உலகக்கோப்பை போட்டிக்காக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 வீரர்கள் கொண்ட இந்திய அணி விபரம் இதோ: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வோர்னர், அஷ்டன் ஏகர், நாதன் கோல்டர் நைல், ஆரோன் பிஞ்ச், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், ஜேம்ஸ் ஃபாக்னர், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், க்ளென் மாக்ஸ்வெல், பீட்டர் நெவில் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரூ டை, ஷேன் வாட்சன், ஆடம் சாம்பா.

cwc2015-Australia.jpg

http://www.virakesari.lk/article/2936

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை டி20: அப்ரீடி தலைமையில் 15 வீரர்கள் கொண்ட பாக். அணி அறிவிப்பு

 

 
பாகிஸ்தான் அணி. | படம்: ஏ.பி.
பாகிஸ்தான் அணி. | படம்: ஏ.பி.

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத புதிய வீரர்கள் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். குர்ரம் மன்சூர், பாபர் ஆஸம் ஆகிய பேட்ஸ்மென்கள், வேகப்பந்து வீச்சாளர் ருமான் ரயீஸ், மற்றும் ஆல் ரவுண்டர் மொகமது நவாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அகமது ஷெசாத், ஷோயப் மக்சூத், சாத் நசீம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் மொகமது ரிஸ்வான், ஆல்ரவுண்டர் ஆமீர் யாமின், வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. வேகப்பந்து வீச்சில் 7 அடி உயர மொகமது இர்பான், மொகமது ஆமிர், வஹாப் ரியாஸ், அன்வர் அலி ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி விவரம்:

ஷாகித் அப்ரீடி (கேப்டன்), மொகமது ஹபீஸ், ஷோயப் மாலிக், உமர் அக்மல், சர்பராஸ் அகமது, பாபர் ஆசம், இப்திகார் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர், மொகமது நவாஸ், குர்ரம் மன்சூர், ருமான் ரயீஸ்

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8219079.ece

 

Link to comment
Share on other sites

’’ஊதிய பிரச்சனை எனவே உலக கிண்ணம் இல்லை’’ சமி

February 10, 2016

ஊதிய பிரச்சனையால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் டி20 உலகக்கிண்ணத் தொடரை புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் டேரன் சமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

darren-sammy_2770227

ஏற்கனவே ஊதிய பிரச்சனையால் அணியில் இருந்து முண்ணனி வீரர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டனர். தற்போது அவர்கள் டி20 உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில், மீண்டும் ஊதிய பிரச்சனை வெடித்துள்ளது. புதிய ஊதிய ஒப்பந்தம் வீரர்களுக்கு போதுமானதாக இல்லை என்று அணித்தலைவர் டேரன் சமி கிரிக்கெட் வாரியத்திடம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் ஜமைக்காவின் ரேடியோ ஒன்றிற்கு பேட்டியளித்த கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் முர்கெட், ’வீரர்களின் பேச்சை நாங்கள் ஒருபோதும் கேட்கப் போவது இல்லை. ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்து போடாமல் மேற்கிந்திய தீவுகளின் கடற்கரையை கூட தாண்ட முடியாது.

அப்படி சரிவராத வீரர்களை அணியில் இருந்து உடனடியாக நீக்கி அவர்களுக்கு பதிலாக உலகக்கிண்ணத்தில் மாற்று வீரர்களை களமிறக்குவோம்’ என்று அதிரடியாக கூறியுள்ளார்.  அதேசமயம் டி20 அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டேரன் சமி, ’மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஊதிய ஒப்பந்தம் பெரிய நிதி பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நாங்கள் ஒருபோதும் இந்த ஒப்பந்ததற்கு ஒத்துப் போகமாட்டோம்’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த ஊதிய விவகாரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=9043&cat=2

Link to comment
Share on other sites

உலக இருபது 20, இந்தியாவுடனான தொடர் இலங்கை அணித் தலைவி சஷிகலா
2016-02-11 10:48:38

14801sashikala.jpgஇந்­தி­யாவில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) மகளிர் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை அணிக்கு சஷி­கலா சிறி­வர்­தன தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

 

உதவி அணித் தலை­வி­யாக சமரி அத்­தப்­பத்து பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

 

இவர்­க­ளி­ரு­வரும் இந்­தி­யா­வுக்­கான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் விஜ­யத்­தின்­போதும் முறையே அணித் தலை­வி­யா­கவும் உதவி அணித் தலை­வி­யா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரண­சிங்க, டிலானி மனோ­தரா, பிர­சா­தனி வீரக்­கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்­கு­சூ­ரிய, உதே­ஷிகா பிர­போ­தனி, இனோக்கா ரண­வீர, சுகந்­திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்­சிமா கரு­ணா­ரட்ன, நிப்­புனி ஹன்­சிகா, ஹர்­ஷிதா மாதவி ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றனர்.

 

இவர்­களில் ஹர்­ஷிதா மாதவி தவிர மற்­றைய அனை­வரும் இந்தி­யா­வு­டனான இரு­த­ரப்பு இரு­பது 20 தொடரில் விளை­யா­ட­வுள்­ளனர்.

 

இத் தொடரில் மாத­விக்குப் பதி­லாக நிப்­புனி ஹன்­சிகா குழாமில் இணைக்­கப்­பட்­டுள்ளார்.

 

தயார்­நிலை வீராங்­க­னை­க­ளாக ஸ்ரீபாலி வீரக்கொடி, மதுரி சம்முதிகா, அனூஷ்கா சஞ்சீவனி, லசன்தி மதுஷானி, சந்திமா குணரத்ன பெயரிடப்பட்டுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14801#sthash.zbgZJquq.dpuf
Link to comment
Share on other sites

உலகக்கோப்பை டி20: தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் தேர்வு; மோர்கெல் இல்லை

 

ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க டி20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு. | படம்: ஏ.பி.
ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க டி20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு. | படம்: ஏ.பி.

உலகக்கோப்பை டி20 தொடருக்கான ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான அணியை தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது.

இந்த சீசனில் தென் ஆப்பிரிக்கா ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 6 டெஸ்ட்களில் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி அவரை உலகக் கோப்பை டி20 அணியில் தேர்வு செய்துள்ளது.

வேகப்பந்து வீச்சு வரிசையில் கேகிஸோ ரபாதா, கைல் அபாட் உள்ளனர், மோர்னி மோர்கெல், இல்லை, உடற்தகுதி உத்தரவாதம் இல்லாத ஸ்டெய்னைத் தேர்வு செய்து மோர்னி மோர்கெலை விட்டு விட்டனர்.

ஆனால் ஆல்ரவுண்டர்களாக டேவிட் வீஸ மற்றும் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன கிறிஸ் மோரிஸ். கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய ஆல்பி மோர்கெலும் உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. இவர் கட்டாக்கில் இந்தியாவுக்கு எதிராக 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின் வரிசையில் இம்ரான் தாஹிர், ஆரோன் பாங்கிஸோ தேர்வு செய்யப்பட 8 பேட்ஸ்மென்கள் அணியில் உள்ளனர். குவிண்டன் டி காக்கும் இடம்பெற்றுள்ளார்.

டி காக் அணிக்குள் வந்துள்ளதால் தென் ஆப்பிரிக்க மிடில் ஆர்டர் டுபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ், பெஹார்டீன், டுமினி, ரைலி ரூசோவ் என்று வலுவாக உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி:

ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், கைல் அபாட், ஆம்லா, ஃபர்ஹான் பெஹார்டீன், குவிண்டன் டி காக், டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பாங்கிஸோ, காகிஸோ ரபாதா, ரைலி ரூசோவ், டேல் ஸ்டெய்ன், டேவிட் வீஸ

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article8222996.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

...

ஆறாவது இருபதுக்கு 20 உலகக்கோப்பைக்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு

 

இருபதுக்கு20  உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆறாவது இருபதுக்கு 20 உலகக்கோப்பை போட்டிக்காக இயான் மோர்கன் இங்கிலாந்து அணி  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம்:-

இயான் மோர்கன் (அணித்தலைவர்), மொயீன் அலி, சாம் பைலிங்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், ஸ்டீவன் ஃபின், அலெக்ஸ் ஹால்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ரொய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லீ, ஜேம்ஸ் வின்சென்ட், டேவிட் வில்லி.

http://www.virakesari.lk/article/3050

Link to comment
Share on other sites

டுவன்ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்தினால் வெற்றியீட்ட முடியும் - அலிஸ்டயார் குக்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

டுவன்ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்தினால் வெற்றியீட்ட முடியும் - அலிஸ்டயார் குக்


எதிர்வரும் டுவன்ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியினால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கப்டன் அலிஸ்டயார் குக் தெரிவித்துள்ளார்.


தனியொருவராக போட்களில் வெற்றியீட்டக்கூடிய திறமையான வீரர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஏனைய அணிகளைப் போன்றே இங்கிலாந்து அணியும் சம பலத்துடன் சிறந்த முறையில் போட்டியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


டுவன்ரி20 போட்டித் தொடர்களைப் பொருத்தவரையில் சிறிதளவு அதிர்ஸ்டமும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


பத்து ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கட் விளையாடி வரும் குக் இதுவரையில் 126 போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்கத்கது. இங்கிலாந்து டுவன்ரி20 அணியை இயோன் மோர்கன் வழிநடத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128866/language/ta-IN/20------.aspx

Link to comment
Share on other sites

வீரர்களின் பாதுகாப்புக்கு பிசிசிஐ உத்தரவாதம்

 
bcci_2250023h.jpg
 

இந்தியாவில் யாரும் அச்சத்துடன் விளையாடவேண்டிய நிலை இருக்காது. அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது, மேலும் தங்கள் நாட்டு அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் டி 20 உலககோப்பையில் பங்கேற்க முடியும் என பாக். கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. மேலும் பொதுவான நாடு ஒன்றில் பாக். அணி பங்கேற்கும் போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் பாக். வாரியம், ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர் இதுகுறித்து கூறும்போது:

"இந்தியாவில் யாரும் அச்சத் துடன் விளையாடவேண்டிய நிலை இருக்காது. அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்கு முன்பு பல உலகக்கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தி யுள்ளது. யாரும் இங்கே அச்சம் கொள்ளவேண்டாம். இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் யாருக் காவது பிரச்சனை இருந்தால் அவர்கள்தான் அதைப் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8222055.ece

Link to comment
Share on other sites

20 ஓவர் உலக கிண்ணபோட்டியில்  பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்பதில் சிக்கல்

20 ஓவர் உலக கிண்ணபோட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்பதில் சிக்கல்

February 12, 2016  02:32 pm

Bookmark and Share
 
6–வது 20 ஓவர் உலக கிண்ண போட்டி வருகிற மார்ச் 15 ம் திகதி முதல் ஏப்ரல் 3 ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது.

‘ஏ’ பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியதீவு, இங்கிலாந்து அணிகளும்.

‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

2 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு பெறும். இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மார்ச் 19 ம் திகதி தர்மசாலாவில் நடக்கிறது.

இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டித் தொடர் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்தன.

ஆனால் இந்த போட்டி தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்தது.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கிண்ணத்துக்காக பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆனால் திடீரென்று பாகிஸ்தான் அணி இந்தியாவில் சென்று விளையாடுவது பற்றி பாகிஸ்தான் அரசு முடிவு எடுக்கும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீடியா இயக்குனர் அம்ஜத் உசேன் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் நாளைக்குள் அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசுஅனுமதி அளித்தால் இந்தியா சென்று விளையாடுவோம்.

வீரர்களின் விசா பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் விளையாடுவது பற்றி இப்போது பிரச்சினை எழவில்லை. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.

ஒரு வேளை பாகிஸ்தான் அரசின் அனுமதி கிடைக்காவிட்டால் அந்த அணி உலக கிண்ணத்துக்காக பங்கேற்குமா என்ற கேள்விக்குறி நிலவுகிறது.

இதேபோல் மேற்கிந்தியதீவு அணியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அந்த அணியில் கெய்ல், பொல்லார்ட், பிராவோ, சுனில் நரேன் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

ஆனால் வீரர்களுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் ஊதிய ஒப்பந்தத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வருகிற 14ம் திகதிக்குள் ஒப்பந்தத்தில் வீரர்கள் கையெழுத்து போட வேண்டும் என்று மேற்கிந்தியதீவு கிரிக்கெட் வாரியம் கெடு விதித்து உள்ளது.

வீரர்கள் கையெழுத்திட மறுத்தால் 2ம் தர அணியை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் முதல்தர மேற்கிந்தியதீவு அணி பங்கேற்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
 
Link to comment
Share on other sites

மேற்கிந்தியத் தீவுகளின் 15 பேர் குழாமிலிருந்து பொலார்ட், சுனில் நரைன் விலகினர்
2016-02-12 23:43:25

14842pollard.jpgஉலக இருபது20 சுற்றுப்போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகளின் 15 பேர் குழாமிலிருந்து சகல துறை வீரர் கீரொன் போலார்ட், சுனில் நரைன் ஆகியோர் வாபஸ் பெற்றுள்ளனர்.

 

கீரொன் பொலார்ட் தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழமையாக குணமடையாததால் விலகியுள்ளார் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சுனில் நரைன், தனது பந்துவீச்சுப் பாணியை திருத்துவதற்கான பணியில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால் விலகியுள்ளார் எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

 

14842_sunil-narine.jpgகீரொன் பொலார்ட்டுக்குப் பதிலாக சகல வதுறை வீரர் கார்லோஸ் பிரேத்வெய்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.  சுனில் நரைனுக்குப் பதிலான மாற்று வீரர் இன்னும் தெரிவுசெய்யப்படவில்லை.


இவ்விரு வீரர்களின் விலகல், உலக இருபது20 போட்டிகளுக்குத் தயாராகுவதில் மேற்கிந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14842#sthash.KeB3C3SO.dpuf
Link to comment
Share on other sites

T 20 க்கான சிம்பாப்வே அணி அறிவிப்பு

February 14, 2016

எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ண தொடருக்கான சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், ஒரு ஆண்டு இடைவேளிக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் சட்டாரா இடம் பெற்றுள்ளார். இதேபோல பான்யன்கராவும் அணிக்கு தேர்வாகி உள்ளார். மேலும், துரதிஷ்டவசமாக சிபன்கா, முசாராபானி, பிரைன் விட்டோரி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Zimbabwe cricketer celebrate after the dismissal of the Bangladesh cricketer Imrul Kayes during the second T20 cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e Bangla National Stadium in Dhaka on November 15, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

ரி20 உலகக்கிண்ண தொடருக்கான சிம்பாப்வே அணி வருமாறு, ஹேமில்டன் மசகட்சா (அணிதலைவர்), சீயன் வில்லியம்ஸ், சட்டாரா, மசகட்சா, பான்யாசாரா, பீட்டர்மூர், சிங்கும்புரா, சிக்கந்தர் ராசா, ரிச்சமண்ட், லுகே ஜான்வே, சிசோரா, நெவிலிமட்சிவா, மல்கோல் வாலர், சிரெம்மர். இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் மார்ச் 8ந் திகதி முதல் ஏப்ரல் 3ந் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=9304

Link to comment
Share on other sites

’’பாகிஸ்தான் விலகினால் சட்ட நடவடிக்கை எடுப்போம்’’ ICC

February 16, 2016

இந்தியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண போட்டி தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலகினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரி-20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே போட்டியில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

pakistan-cricket-team

இதற்கிடையிலேயே ஐ.சி.சி இவ்வாறானதொரு எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி கருத்து தெரிவிக்கையில், ரி-20 உலகக்கிண்ண தொடரில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஐ.சி.சி. எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கவில்லை. அரசின் அனுமதியை பொறுத்து தான் எங்கள் அணி பங்கேற்பது முடிவாகும். என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் இந்தியாவின் விருப்பமின்மையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இத் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் அதற்கு பதிலடியாக இதை புறக்கணிக்கின்றது எனவும் ஒரு தரப்பு கூறுகின்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=9417&cat=2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் டீம் போட்டோ நல்லாயிருக்கு.ஆனால் கடைசியில சம்மந்தம் இல்லாமல் ஒரு அக்காச்சி எட்டிப் பார்ப்பது தான் பொருந்தவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.