Jump to content

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....


Recommended Posts

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இலங்கைக்கு பயிற்சிப்போட்டி

February 16, 2016

டி20 உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்திற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. டி20 உலகக்கிண்ண போட்டிக்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். அதன்படி இலங்கை அணிக்கு 2 பயிற்சி ஆட்டம் இருக்கிறது.

West-Indies-vs-Sri-Lanka-XI-Tour-Match-Live-Score-at-9-11-Oct-2015

மார்ச் 10ம் திகதி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் நியூசிலாந்து அணியுடனும், மார்ச் 14ம் திகதி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியுடனும் இலங்கை மோதுகின்றது. அதேபோல் இலங்கை மகளிர் அணியின் ஆட்டம் மார்ச் 10ம் திகதி (வங்கதேசத்திற்கு எதிராக), மார்ச் 12ம் திகதி (இந்தியாவுக்கு எதிராக) பெங்களூரில் நடக்கிறது.

http://www.onlineuthayan.com/sports/?p=9394&cat=2

Link to comment
Share on other sites

  • Replies 357
  • Created
  • Last Reply

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது

 
 

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக் கெட் தொடர் அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இலங்கை, போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 35 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா சூப்பர் 10 பிரிவு 2ல் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் உள்ளன. இவற்றுடன் தகுதி சுற்றில் ஏ பிரிவில் வெற்றி பெறும் அணியும் இணையும்.

முதல் சுற்று போட்டிகள் மார்ச் 8ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது சுற்றான சூப்பர் 10, மார்ச் 15ம் தேதி தொடங்கு கிறது. சூப்பர் 10 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 15-ம் தேதி, நியூஸிலாந்தை சந்திக்கிறது. 19-ம் தேதி பாகிஸ்தானை தர்மசாலா விலும், 23-ம் தேதி ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடனும், கடை லீக் ஆட்டத்தில் 27-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகி றது. இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா இரு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது. மார்ச் 10-ம் தேதி கொல்கத்தாவில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனும், 12-ம் தேதி மும்பையில் தென் ஆப்பிரிக்காவுடனும் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article8247417.ece?homepage=true

Link to comment
Share on other sites

டி20 உ.கோப்பையில் ஹாங்காங் அணிக்கு ஆடும் 44 வயது முன்னாள் ஆஸி.வீரர் கேம்பல்

 

ரியான் கேம்பல். | 44 வயதில் உலகக்கோப்பை டி20-யில் களமிறங்குகிறார். அணி. ஹாங்காங். | படம்: ஏ.எஃப்.பி.
ரியான் கேம்பல். | 44 வயதில் உலகக்கோப்பை டி20-யில் களமிறங்குகிறார். அணி. ஹாங்காங். | படம்: ஏ.எஃப்.பி.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரியான் கேம்பல், தனது 44 வயதில் ஹாங்காங் அணிக்காக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறார்.

ஆஸ்திரேலியாவுக்காக 2 ஒருநாள் போட்டிகளில் 14 ஆண்டுகளுக்கு முன்பாக ஆடிய ரியான் கேம்பல் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஹாங்காங் அணிக்காக 44 வயதில் சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார்.

இவர் முதல்தர கிரிக்கெட்டில் 98 போட்டிகளில் 6009 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 203. 11 சதங்கள், 37 அரைசதங்களை இவர் எடுத்துள்ளார். இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் 267 கேட்ச்களைப் பிடித்துள்ளதோடு 15 ஸ்டம்பிங்குகளையும் அவர் செய்துள்ளார்.

ஜனவரி 17, 2002-ல் ஆஸ்திரேலிய அணிக்காக தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஆடிய இவர் டிசம்பர் 22, 2002-ல் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடினார்.

ஹாங்காங் வந்த இவர் இங்கு தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடினார், இதில் 18 மாதங்களுக்கு முன்பாக கேம்பல் கவ்லூன் கிரிக்கெட் கிளப்புக்காக 107 பந்துகளில் 303 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில் ஜூலை 2013-ல் கேம்பல் ஹாங்காங் அணியின் பேட்டிங் பயிற்சியாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பு குறித்து கூறிய கேம்பல், “நான் தொடக்கத்தில் இறங்கவே விரும்புகிறேன். குறிப்பாக டி20-யில் தொடக்கத்தில் இறங்குவது எனக்கு பிடித்தமானது. குறிப்பாக இந்தியாவில் தொடக்கம் கை கொடுக்கும் தொடக்கத்தில் இறங்கி பிறகு ஸ்பின்னர்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

டி20 கிரிக்கெட்டில் 2 பேட்ஸ்மென்கள் சிறப்பாக ஆடினால் போதும், போட்டியை வென்று விடலாம். டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறுவதே இலக்கு. அப்படி நுழைந்தாலே அது ஹாங்காங் கிரிக்கெட்டுக்கு பெரிய தொடராக அது அமையும்” என்றார்.

இவரது ஸ்பெஷாலிட்டி என்னவெனில் தில்ஷனே அறிமுகம் செய்ததாகக் கருதப்படும் தில் ஸ்கூப் என்ற ஷாட்டை இவர் தில்ஷனுக்கு முன்னதாகவே ஆடியிருக்கிறார் என்பதே.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-44-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article8249170.ece

Link to comment
Share on other sites

உலக இருபது 20 போட்டிகளில் பாகிஸ்தான் பங்குபற்றத் தவறினால் ஐ.சி.சி. சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் என்ற செய்தி அர்த்தமற்றது - பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் நஜாம் சேதி
2016-02-17 11:30:38

பாது­காப்பு கார­ணங்­களைக் காட்டி உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் பாகிஸ்தான் பங்­கு­பற்றத் தவ­றினால் அந் நாட்டு கிரிக்கெட் சபைக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) எச்­ச­ரித்­தி­ருப்­ப­தாக ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டி­ருப்­பது அர்த்­த­மற்­றது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறை­வேற்றுக் குழுத் தலைவர் நஜாம் சேதி தெரி­வித்­துள்ளார்.

 

1495016.jpg‘‘உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் எமது பங்­கேற்பு குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எம்­மிடம் கேட்­டுள்­ளது.

 

இந்­தி­யா­வுக்கு பய­ணிப்­ப­தற்­காக பாகிஸ்தான் அரசின் அனுமதியைப் பெறும்­பொ­ருட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எழுத்­து­மூலம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக நாங்கள் அவர்­களுக்கு (ஐ.சி.சி) அறி­வித்­துள்ளோம். 

 

இவ் விட­யத்தில் அர­சாங்­கத்தின் அனு­ம­திக்­கான பதி­லுக்­காக காத்­தி­ருக்­கின்றோம்’’ என பாகிஸ்தான் ஊடகம் ஒன்­றுக்கு சேதி தெரி­வித்­துள்ளார்.

 

‘‘இவ் விட­யத்தில் வேறொன்றும் இல்லை. இவ் ­வி­டயம் தொடர்­பாக சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எம்­மிடம் எத­னையும் கேட்­க­வுமில்லை, நாங்கள் அது பற்றி அவர்­க­ளிடம் தொடர்பு கொள்ளவும் இல்லை’’ என அவர் மேலும் கூறினார்.

 

‘‘இந்­தி­யாவில் வரும் மார்ச் மாதம் நடத்­தப்­ப­ட­வுள்ள உலக இருபது 20 கிரிக்கெட் போட்­டிகள் தொடர்­பாக பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவ­லைப்­ப­டு­வது அடிப்­ப­டை­யற்­றது.

 

இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள பாது­காப்பு குறித்து (ஐ.சி.சி.) திருப்தி அடைந்­துள்­ளது’’   என ஊட­க­மொன்றில் வெளி­யான செய்தி ஒன்றில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.  

 

அந்த செய்தி அறிக்­கையில், ‘‘பெரு­ம­ள­வி­லான பாகிஸ்தான் போட்­டி­யா­ளர்கள் இந்­தி­யா­வுக்கு பய­ணித்து தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் கலந்­து­கொள்ள முடி­யு­மாக இருந்தால், சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் முக்­கிய போட்­டியில் 20 பாகிஸ்­தா­னி­யர்­களை பங்­கு­பற்றச் செய்­வ­தற்கு அனு­ம­திக்­க ­மு­டி­யா­த­தற்கு காரணம் எதுவும் இல்லை’’ எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

பாகிஸ்தான் அணி இந்­தியா விஜயம் செய்­வ­தற்கு அர­சாங்கம் அனு­ம­திக்­காத பட்­சத்தில் தங்­க­ளது உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களை நடு­நி­லை­யான மைதா­னத்தில் நடத்­து­மாறு சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யிடம் பாகிஸ் தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹா­ரியார் கான் கடந்த 9 ஆம் திகதி கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் மார்ச் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன.

 

பாகிஸ்தான் அணிக்கு இந்­தி­யாவில் குறிப்­பி­டத்­தக்க அச்­சு­றுத்தல் இருப்­பதால் தமது இந்­திய விஜயம் அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தாக கான் கூறி­யி­ருந்தார்.

 

பாகிஸ்­தா­னுக்கு குறிப்­பி­டத்­தக்க அளவு அச்­சு­றுத்தல் இருப்­பது அண்­மைய சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­வ­தாக கான் தெரிவித்தார்.

 

‘‘பங்­க­ளா­தேஷில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இருந்தது போன்ற சாதா­ரண அச்­சு­றுத்­தல்கள் அல்ல அவை. எனி னும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா தனது அணியை அனுப்பவில்லை’’ என்பதை கான் சுட்டிக்காட்டினார்.

 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அவஸ்திரேலியா வாபஸ் பெற்றிருந்தது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14950#sthash.hbSNgZAK.dpuf
Link to comment
Share on other sites

கெவின் பீட்டர்சன் தென்ஆபிரிக்காவிற்காக விளையாட மாட்டார்

 

கெவின் பீட்டர்சன் தென்ஆபிரிக்காவிற்காக விளையாட மாட்டார்


இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், தென் ஆபிரிக்க தேசிய அணியை பிரதிநிதி;த்துவம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
35 வயதான கெவின் பீட்டர்சன் தென் ஆபிரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு கெவின் பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.


2018ம் ஆண்டு தென் ஆபிரிக்க அணிக்காக விளையாட கெவின் பீட்டர்சன் சட்ட ரீதியாக தகுதி பெற்றுக்கொள்வார். பீட்டர்சனின் நெருங்கிய நண்பரான முன்னாள் இங்கிலாந்து அணி வீரர், டெரக் கொப் பீட்டர்சன் தென் ஆபிரிக்காவிற்காக விளையாடக் கூடுமென ஊகம் வெளியிட்டிருந்தார்


எனினும், பீட்டர்சன் தென் ஆபிரிக்க அணிக்காக விளையாடக்கூடிய சாத்தியம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பீட்டர்சன், அவுஸ்திரேலிய பிக்பாஸ் உள்ளிட்ட டுவன்ரி20 போட்டித் தொடர்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129117/language/ta-IN/--.aspx

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

 

%DA%86%D8%B1%DB%8C%DA%86%DA%A9.jpg

இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையினால் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நடைப்பெறவுள்ள 6வது இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மாலிங்கவும் உப தலைவராக என்ஞலோ மெதிவுஸ_ம் தலைமை தாங்கவுள்ளனர்.

அணி விபரம்

லசித் மாலிங்க (தலைவர்)

என்ஞலோ மெதிவுஸ் (உப தலைவர்)

தினேஷ் சந்திமால் 

திலகரத்ன டில்ஷான் 

நிரோஷன் டிக்வெல்ல 

ஷேகான் ஜெயசூரிய 

ஷாமர கப்புகேதர 

மிலிந்த சிறிவர்த்தன 

தசுன் சானக்க 

நுவான் குலசேகர 

துஸ்மந்த சமீரா 

திஸர பெரேரா 

சஜித்திர சேனநாயக்க 

ரங்கன ஹேரத் 

ஜெப்ரி வண்டேர்சி 

http://www.virakesari.lk/article/3336

Link to comment
Share on other sites


பிராவோக்கு பதில் சாள்ஸ்
 
 

article_1456042725-Charles.jpgஎதிர்வரும் எட்டாம் திகதியிலிருந்து ஏப்ரல் மூன்றாம் திகதிவரை இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில், துடுப்பாட்ட வீரர் டரன் பிராவோவுக்கு பதிலாக, விக்கெட்காப்பாளர் ஜோன்சன் சாள்ஸ் பிரதியீடு செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டே, இக்காலகட்டத்தில், தனது முன்னுரிமை எனத் தெரிவித்து, மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் சபையினால், கடந்த வாரம் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்திருந்தார்.

இருபத்தேழு வயதான சாள்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 23, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருந்ததோடு, இறுதியாக, கடந்த நவம்பரில், மேற்கிந்தியத்தீவுகளுக்காக போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.

உலக இருபதுக்கு-20 தொடரின், சுப்பர் 10 பிரிவில், குழு 1இல் மேற்கிந்தியத்தீவுகள் இடம்பெற்றுள்ளது. இக்குழுவில், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, முதலாவது சுற்றிலிருந்து தெரிவாகும் ஒரு அணியும், இக்குழுவில் இடம்பெறவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/166578/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B3-%E0%AE%B8-#sthash.MNqXPGvs.dpuf
Link to comment
Share on other sites

தவறாது T20 உலகக்கிண்ணத்தொடரில் பங்கேற்க்கும் 19 வீரர்கள்

February 24, 2016

எந்தவொரு உலகக்கிண்ண தொடரையும் தவறவிடாமல் தொடர்ச்சியாக 6வது உலகக்கிண்ணத் தொடரில் 19 வீரர்கள் அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெறவுள்ள 6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது. இதில் எந்தவொரு உலகக்கிண்ணத் தொடரையும் தவறவிடாமல் மொத்தம் 19 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ICC-T20-World-Cup-Trophy

இந்தப் பட்டியலில் இந்தியாவின் டோனி, யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், பாகிஸ்தானின் அப்ரிடி, இலங்கையின் மலிங்கா, டில்ஷான், அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோரும் அடங்குவர்.

http://www.onlineuthayan.com/sports/?p=9690&cat=2

Link to comment
Share on other sites

Breaking Now இந்தியாவில் வந்து உலகக் கோப்பை 20 -20 தொடரில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி

Read more at: http://tamil.oneindia.com/
Link to comment
Share on other sites

T20 தொடரிலிருந்து ஸ்டீபன் விலகல்

February 27, 2016

உலகக்கிண்ண ரி-20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீபன் ஃபின் விலகுவதாக அறிவித்துள்ளார். இடது காலில் காயம் காரணமாக ஸ்டீபன் ஃபின்; விலகுவதால் அவருக்க பதிலாக லியாம் பிளங்கெட் உலகக்கிண்ண இங்கிலாந்து அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

article-2512220-1987A35300000578-870_634x450

இது குறித்து ஸ்டீபன் ஃபின் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில், ‘ மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கின்றது. இதனை விபரிக்க முடியாது. தோழல்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என ஸ்டீபன் ஃபின் குறிப்பிட்டுள்ளார். ஆறாவது உலகக்கிண்ண ரி-20 தொடரானது எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=9864&cat=2

Link to comment
Share on other sites

தென்ஆப்பிரிக்கவின் உலகக்கிண்ணப் பாடல்

February 29, 2016

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உலகக்கிண்ண டி20 பாடல் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் விரைவில் களைகட்டவிருக்கிறது.

இந்தப் போட்டிகளுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் இந்த தொடருக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ், மில்லர், ஸ்டெய்ன், ரபாடா, டுபிளசி என அனைத்து வீரர்களும் தோன்றி நடனமாடுகின்றனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=9940&cat=2

Link to comment
Share on other sites

‘20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்’–சுமித்

February 29, 2016

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகி வரும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நேற்று சிட்னியில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால் எந்த அணியும் அபாயகரமானதாக இருக்க முடியும். இதே போல் தனிப்பட்ட வீரர் ஆட்டத்தின் போக்கை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து விட முடியும்.

இந்த உலக கோப்பையில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் சிறந்த அணியாக இருக்கிறார்கள். அதை எங்கள் நாட்டில் வைத்து 20 ஓவர் தொடரில் விளையாடிய போது பார்த்தோம். 20 ஓவர் உலக கோப்பையை மட்டும் நாங்கள் இதுவரை வென்றதில்லை. இந்த கோப்பையை கைப்பற்றினால் அது மிகச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது தான் எங்களது லட்சியம். இந்தியாவில் உள்ள சீதோஷ்ண நிலை கடினமாக இருக்கும் என்பதை அறிவோம். அதே சமயம் உண்மையிலேயே சாதிக்கும் முனைப்புடன் உள்ளோம். இவ்வாறு சுமித் கூறினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9912&cat=2

Link to comment
Share on other sites

பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையெனில் உலகக் கோப்பையிலிருந்து விலகுவோம்: பாகிஸ்தான் வாரியம்

 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சேர்மன் ஷஹாரியார் கான். படம்: ஏ.பி.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சேர்மன் ஷஹாரியார் கான். படம்: ஏ.பி.

தரம்சலாவில் நடைபெறும் இந்திய-பாகிஸ்தான் உலகக்கோப்பை டி20 போட்டியில் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங் தெரிவித்ததையடுத்து வீரர்கள் பாதுகாப்பு குறித்த வெளிப்படையான திட்டவட்ட அறிவிப்பை இந்தியா வெளியிட்டால் மட்டுமே உலகக்கோப்பை டி20-யில் பங்கேற்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே அந்த அணிக்கு உலகக்கோப்பையில் பங்கேற்க அனுமதி அளித்தது. ஆனால், பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி இமாச்சல மாநில முதல்வர் வீர்பத்ர சிங், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் தரம்சலாவில் போட்டி நடத்தபடக் கூடாது என்றும், பதான்கோட் தாக்குதலையடுத்து உள்ளூர் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இதனைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருக்கிறது என்று மறுத்திருந்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யார் கான் கூறும்போது, “இந்த அச்சுறுத்தல்கள் பாகிஸ்தானை நோக்கியது. இப்போது கூட பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றே இமாச்சல பிரதமர் கூறியிருக்கிறார்.

எங்கள் நாட்டு அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது என்றாலும் இந்த சமீபத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும், அரசியல் கட்சியான சிவசேனா, தற்போது காங்கிரஸ் ஆகியவை எங்களை விளையாட அனுமதியளிக்காதவாறே தெரிவித்துள்ளன.

இந்த புதிய அச்சுறுத்தல்கள் பற்றி நாங்கள் ஐசிசி-யிடம் தினப்படி தெரிவித்து வருகிறோம். இந்த அச்சுறுத்தல்கள் ஊக்குவிப்பதாக இல்லை.

இந்திய அரசு இதில் ஒரு அடி முன்னே எடுத்து வைத்து பாகிஸ்தான் அணியை வரவேற்கிறோம், முழு பாதுகாப்பு உறுதி அளிக்கிறோம் என்று பொது அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐசிசியிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

இந்திய அரசு பாதுகாப்பு உறுதி குறித்து நம்பக அறிக்கையை வெளியிட்டால்தான் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இந்திய அரசு பாதுகாப்பு உத்தரவாத அறிக்கை தரவில்லையெனில் நாங்கள் இந்தியாவில் உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம்தான். இதற்காக இறுதிக்கெடு எதுவும் தேவையில்லை நாங்கள் கடைசி நேரத்தில் கூட விலகி விடுவோம்” என்று அச்சுறுத்தியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8310042.ece

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கட அலப்பறை தாங்க முடியேல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/29/2016 at 3:41 AM, நவீனன் said:

‘20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்’–சுமித்

February 29, 2016

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நேற்று சிட்னியில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால் எந்த அணியும் அபாயகரமானதாக இருக்க முடியும். இதே போல் தனிப்பட்ட வீரர் ஆட்டத்தின் போக்கை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து விட முடியும்.

 

http://www.onlineuthayan.com/sports/?p=9912&cat=2

நம்ம ஆள்.. என்ன சொல்ல வாறார், நவீனன்?

ஒரே குழப்பமாய்க் கிடக்குது!

Link to comment
Share on other sites

11 hours ago, புங்கையூரன் said:

நம்ம ஆள்.. என்ன சொல்ல வாறார், நவீனன்?

ஒரே குழப்பமாய்க் கிடக்குது!

கொஞ்சம் பொறுமையாக எழுதவேண்டிய விடயம். நேரம் கிடைக்கும்போது விரைவில் எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

`டி-20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி பிரகாசிக்கும்'

இந்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாக உள்ள டி-20 உலகக் கோப்பை போட்டிகளில், தான் விளையாட உள்ளதாக இலங்கையின் மூத்த வீரர் லசித் மலிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

150316123401_lasith_malinga_512x288_afp.
 உலகக் கோப்பை போட்டிகளில் நான் விளையாட வேண்டும் என்பதை, அணியில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்

 

இலங்கை கிரிக்கெட் அணி, அண்மைய நாட்களாக போட்டிகளில் பிரகாசிக்க தவறி வரும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

உடல் உபாதை காரணமாக இலங்கை அணியின் லசித் மலிங்க போட்டிகளிலிருந்து ஓய்வெடுத்து வருவது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்ததாக கிரிக்கட் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

லசித் மலிங்கவின் பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதையே, போட்டிகளில் அவர் பங்குபெற முடியாமல் போனதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

"நான் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை, அணியில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்" என்று தெரிவித்த லசித் மலிங்க, தற்போது தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், உலகக் கோப்பை போட்டிகளில் தன்னால் சிறந்த முறையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஏழு ஆண்டுகளில், தாம் பங்குபற்றிய ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில், இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதை நினைவுபடுத்திய அவர், இனிவரும் போட்டிகளிலும் தமது அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்று கூறினார்.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160304_srilanka_cricket

 

Link to comment
Share on other sites

’’நான் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்’’ மலிங்கா

March 04, 2016

இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பது தொடர்பாக இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். ஆனால் ஆசியக்கிண்ண தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் சிறப்பாக செயல்பட்டார்.

370180-lasith-malinga-gen-sad-700

ஆனால் அதன் பின்னர் நடந்த இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அந்த 2 போட்டிகளிலுமே தோற்று இலங்கை தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் மலிங்கா டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இருந்தும் விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த மலிங்கா, “உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முதல் போட்டி 17ம் திகதி தான் வருகிறது. அதற்கிடையில் 3 வாரங்கள் இருப்பதால் நன்றாக ஓய்வு எடுக்க முடியும்.  தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். முதல் போட்டிக்குள் நான் முழுவதும் குணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “சில பேருக்கு நான் பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் இருப்பது பிரச்சனையாக தோன்றும்.  ஆனால் நிர்வாகம் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளது. இதனால் முதல் போட்டியில் களமிறங்கும் வகையில் முழுவதும் தயாராவேன் என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=10136&cat=2

Link to comment
Share on other sites

15 hours ago, புங்கையூரன் said:

நம்ம ஆள்.. என்ன சொல்ல வாறார், நவீனன்?

ஒரே குழப்பமாய்க் கிடக்குது!

அவுஸ்திரேலியா அணியின்  போட்டிகள் நடைபெறபோகும் மைதானங்கள்  பெங்களூரு, தரம்சலாமொஹாலி அங்குதான் பிரச்சனை.

இந்த போட்டிகள் இரவில்தான் நடைபெறும்.  இரவில் ஏற்படும் ஈரலிப்பான காலநிலையால் (சிறிய அளவிலான பனிபொழிவு)  இரண்டாவதாக பந்து வீசும் அணி மிகுந்த சிரமப்படும். பந்து வீசமுதல் ஒவ்வொரு தடவையும் பந்தை துடைத்துதான் வீசவேண்டும். சுழல் பந்து வீசுபவர்பாடு ரொம்ப கடினம். IPL போட்டிகளில் இதே பிரச்சனை இருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெறுவது மிகமுக்கியம்.

இதைத்தான் உங்கள் ஆள் குறிப்பிட்டு இருக்கலாம். அதை விட அதிஷ்டம் வேணும்..:)

இன்னும்  ஓன்று இந்திய ஆடுகளங்கள்  வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கபோவதில்லை. அஸ்வின் ஜடேஜா காட்டில்தான் மழை..:rolleyes:

அதைவிட ஆஸ்திரேலியவீரர்கள் பலர்  IPL இல் விளையாடுவதால் இதை எல்லாம் அறிந்தவர்கள்தான்.

எங்கையாவது சறுக்கி இறுதி போட்டிக்கு வரமுடியவில்லை என்றாலும் என்று  இப்படி ஏதாவது விளங்காதமாதிரி முதலே சொல்லி வைப்பதும் நல்லதுதானே..<_< அதைத்தான் ஸ்மித் செய்து இருக்கிறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

அவுஸ்திரேலியா அணியின்  போட்டிகள் நடைபெறபோகும் மைதானங்கள்  பெங்களூரு, தரம்சலாமொஹாலி அங்குதான் பிரச்சனை.

இந்த போட்டிகள் இரவில்தான் நடைபெறும்.  இரவில் ஏற்படும் ஈரலிப்பான காலநிலையால் (சிறிய அளவிலான பனிபொழிவு)  இரண்டாவதாக பந்து வீசும் அணி மிகுந்த சிரமப்படும். பந்து வீசமுதல் ஒவ்வொரு தடவையும் பந்தை துடைத்துதான் வீசவேண்டும். சுழல் பந்து வீசுபவர்பாடு ரொம்ப கடினம். IPL போட்டிகளில் இதே பிரச்சனை இருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெறுவது மிகமுக்கியம்.

இதைத்தான் உங்கள் ஆள் குறிப்பிட்டு இருக்கலாம். அதை விட அதிஷ்டம் வேணும்..:)

இன்னும்  ஓன்று இந்திய ஆடுகளங்கள்  வேகபந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கபோவதில்லை. அஸ்வின் ஜடேஜா காட்டில்தான் மழை..:rolleyes:

அதைவிட ஆஸ்திரேலியவீரர்கள் பலர்  IPL இல் விளையாடுவதால் இதை எல்லாம் அறிந்தவர்கள்தான்.

எங்கையாவது சறுக்கி இறுதி போட்டிக்கு வரமுடியவில்லை என்றாலும் என்று  இப்படி ஏதாவது விளங்காதமாதிரி முதலே சொல்லி வைப்பதும் நல்லதுதானே..<_< அதைத்தான் ஸ்மித் செய்து இருக்கிறார்

 

விளக்கத்துக்கு நன்றி, நவீனன்!

நம்ம ஆள்...கெட்டிக்காரப் பயல்...!

ஏதாவது நடந்தால்,,, அப்பவே சொன்னேனே..நவீனனின் திரியைப் பார்க்கவும்,,என்று சொல்லவும் கூடும்!:mellow:

Link to comment
Share on other sites

இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுக்காக 2 லட்சம் பேர் பதிவு

 

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கு கிறது. இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் 19ம் தேதி தர்மசாலா வில் நடைபெறும் என போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

பதான்கோட்டில் நடைற்ற தீவிரவாத தாக்குதலில் மரணடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா கிரிக்கெட் மைதானம் அருகே உள்ளது. இதனால் இந்தியா-பாக். போட்டியை நடத்த எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கிடையே இந்த போட்டிக் கான டிக்கெட் கேட்டு இணைய தளத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article8317550.ece?homepage=true

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை டி20; இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: இயன் சாப்பல்

 

ian_chappel_2764361f.jpg
 

உலகக் கோப்பை டி20-கிரிக்கெட் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் ஒரேயொரு பலவீனம் என்னவெனில் பின்வரிசையில் ஒரு பெரிய ஹிட்டர் இல்லாதது. ஆனால் இந்தக் குறைப்பாட்டை அவர்கள் தங்களது டாப் ஆர்டர் பேட்டிங்கை வைத்து திறம்பட அகற்றி விடுகின்றனர். மேலும் தோனியின் பினிஷிங் திறமைகளும் கைகொடுக்கின்றன.

இங்கிலாந்து சமீபத்தில் இந்த வடிவத்தில் சிறந்து விளங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது. இவர்களுக்கு சவால் அளிக்கும் அணிகளாக ஓரளவுக்கு தென் ஆப்பிரிக்காவைக் கூறலாம். அதாவது நாக் அவுட் நிலைக்கு வரும் வரை அந்த அணி சவாலாக இருக்கும். மெக்கல்லம் இல்லாவிட்டாலும் நியூஸிலாந்தும் ஒரு அச்சுறுத்தும் அணியே.

நான் மேற்கிந்திய தீவுகளையும் சேர்ப்பேன், ஆனால் அங்கு கிரிக்கெட் நிர்வாகிகளுக்கும் வீரர்களுக்கும் வேறுபாடுகள் முற்றி வருகிறது.

முன்பெல்லாம் பாகிஸ்தானின் பலமாகக் கூறப்படுவது அதன் எதிர்பாராதத் தன்மை ஆனால் இப்போது சீரற்ற ஆட்டம் என்ற பல்வீனமாக இது மாறியுள்ளது.

குமார் சங்கக்காரா, மகேலா ஜெயவர்தனேயின் ஓய்விலிருந்து மீள இலங்கை அணி தட்டுத் தடுமாறி வருகிறது.

எனவே அரையிறுதியில் குரூப் 1-இலிருந்து இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும், குரூப் 2-லிருந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுமே தகுதி பெற வாய்ப்பு.

இந்த 4 அணிகளிலும் இந்தியா வெல்லவே சாதகச் சூழ்நிலைகள் உள்ளன. ஏனெனில் அவர்களுக்கு உள்நாட்டு சாதகங்கள் உள்ளன. அணியும் தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு மிட்செல் ஸ்டார்க் இல்லாதது தாக்கம் ஏற்படுத்தும், இங்கிலாந்துக்கு ஸ்டீவ் ஃபின் இல்லாதது பின்னடைவே, மேலும் தரமான ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தடுமாற்ற குணமுடையது. ஆனாலும் அதிரடி ஆல்ரவுண்டர்கள் இங்கிலாந்தில் அதிகமுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய விஷயம் அதன் தன்னம்பிக்கையின்மை, ஆனால் தற்போது ரபாதா, டேல் ஸ்டெய்ன் வருகையினால் புத்துயிர்ப்பு பெறும். மேலும் இந்தியாவில் சமீபமாக டெஸ்ட் போட்டியில் ஸ்பின் பந்து வீச்சின் பூனைக்குட்டிகளாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் ஆக்கப்பட்டதையும் அவர்கள் நினைவிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.

மேலும் தற்போதெல்லாம் பெரிய தொடர்கள் நடத்தும் நாடே அந்தத் தொடர்களை வென்று விடுவதும் வாடிக்கையாகி வருகிறது, எனவே இதற்கு எதிராகச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article8320431.ece

Link to comment
Share on other sites

லென்டில் சிமன்ஸ் இல்லை: அன்ட்ரே றசல் விளையாடுவார்
 
06-03-2016 06:45 PM
Comments - 0       Views - 4

article_1457263814-TamilSioutWI.jpgஉலக இருபதுக்கு-20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து, அவ்வணியின் துடுப்பாட்ட வீரர் லென்டில் சிமன்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகு உபாதை காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

எனினும் லென்டில் சிமன்ஸூக்குப் பதிலாக யாரைச் சேர்ப்பது என்பது குறித்து, தேர்வாளர்களுக்கிடையில் இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லையென அறிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய சகலதுறை வீரர் டுவைன் ஸ்மித், இதில் தெரிவாகக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்ட வீரராகக் காணப்படுகின்ற போதிலும், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள ஜொனதன் கார்ட்டர், தெரிவாகக்கூடிய வாய்ப்புகளுள்ள மற்றொரு வீரராகக் கருதப்படுகிறார்.

இதேவேளை, ஊக்கமருந்துச் சோதனைகள் மூன்றைத் தவறவிட்ட மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரரான அன்ட்ரே றசல், உலக இருபதுக்கு-20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் சேர்க்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்துச் சோதனைகள் மூன்றைத் தவறவிட்டால், ஒருவர் ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்ததாகவே கருதப்படும் என்ற நிலையில், இத்தொடரில் அவர் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் காணப்பட்டது. எனினும், அவர் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை, தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, றசலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/167554#sthash.gOj3HYJF.dpuf
Link to comment
Share on other sites

டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த முறைகேடுகளும் நடக்காது: ஐசிசி நம்பிக்கை

 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் போன்ற எந்த விதமான முறைகேடுகளும் நடக்காது என்று நம்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஊழல் தடுப்புத்துறை தலைவர் சர் ரோனி பிளானகன் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புத்துறை தலைவர் சர் ரோனி பிளானகன், மும்பையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

58 போட்டிகள்

டி20 உலகக்கோப்பையில் ஆண்களுக்கும், பெண்களுக் குமாக சேர்த்து மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஊழல்கள் நடக்காமல் தடுக்க அனைத்து விதமான நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சூதாட்டக்காரர்களின் வலையில் சிக்காமல் இருப்பது குறித்து ஒவ்வொரு அணியின் வீரர்க ளுக்கும், அவர்களுடன் வரும் பயிற்சியாளர்களுக்கும், போட்டி நடுவர்களுக்கும் பாடம் நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஊழல் தடுப்புத்துறையின் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தங்களை யாராவது அணுகினால் உடனடி யாக வீரர்கள் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

450 புகார்கள்

கிரிக்கெட்டை ஊழல் இல்லாத ஒரு விளையாட்டாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். கடந்த ஆண்டு ஊழல் தடுப்புத்துறையின் தொலைபேசி எண்ணுக்கு 450 புகார்கள் வந்தன. நாங்கள் அதுகுறித்து தீவிரமாக விசாரித்து நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தத் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஊழல் முறைகேடுகள் ஏதும் இல்லாத தூய்மையான தொடராக இருக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சர் ரோனி பிளானகன் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8323344.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.