Jump to content

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....


Recommended Posts

ஓமன் அணியில் ஒரு மலிங்கா

March 12, 2016

டி20 உலகக்கிண்ணத் தொடரில் ஓமன் அணியில் விளையாடும் முனிஸ் அன்சாரி, மலிங்காவைப் போன்று பந்துவீசி அனைவரையும் வியக்க வைக்கிறார். கடந்த 9ம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய ஓமன் அணியின் முனிஸ் அன்சாரி அயர்லாந்து அணியின் 3 முக்கிய முன்வரிசை வீரர்களை வீழ்த்தி அசத்தினார்.

Asia-Cup-Qualifiers-Lasith-Malinga-s-tips-for-Munis-Ansari_StoryPicture

இந்தப் போட்டியில் ஓமன் 2 விக்கெட்டுகளால் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முனிஸ் அன்சாரியின் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் பிறந்த முனிஸ் அன்சாரிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஓமன் அணிக்காக விளையாடி வருகிறார்.

http://www.onlineuthayan.com/sports/?p=10481&cat=1

Link to comment
Share on other sites

  • Replies 357
  • Created
  • Last Reply

’’நாங்கள் தான் உலகக்கிண்ணத்தை வெல்வோம்’’ டுபிளசி

March 12, 2016

நாங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் உலகக்கிண்ணத்தை வெல்வோம் என்று தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டி20 அரங்கில் தென்ஆப்பிரிக்கா சிறந்த நிலையில் உள்ளது. அந்த அணியில் டுபிளசி, டிவில்லியர்ஸ், மில்லர், அம்லா, டி காக் என பல அதிரடி வீரர்கள் உள்ளனர்.

f74f66d9-b4be-4482-a0be-de41c435cc50

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ”எங்களது திறமைக்கு ஏற்ப முழு திறமையை வெளிப்படுத்தினால், கிண்ணத்தை வெல்ல முடியும் என்பதை அறிவோம்.

உலகக்கிண்ணத்தை வெல்ல எல்லா அணிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்திய அணி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, அவர்களுக்கு வாய்ப்பு சற்று அதிகமாக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். கடந்த காலங்களில் இந்திய துணை கண்டத்தில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்.

மேலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் சற்று ஏமாற்றம் அளித்தாலும், உலகக்கிண்ணத்தில் இந்திய மண்ணில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்“ என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=10485&cat=2

Link to comment
Share on other sites

இந்தியாவிற்க்கு புறப்பட்டது பாகிஸ்தான் அணி

March 12, 2016

உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று (சனிக்கிழமை) காலை இந்தியா புறப்பட்டு சென்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் இந்திய பயணத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து இன்று 15 வீரர்கள், 12 அலுவலர்கள் என 27 பேர் கொண்ட பாகிஸ்தான் குழு இன்று இந்தியா புறப்பட்டுள்ளது.

 

பலத்த பாதுகாப்புடன் கராச்சி விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அபுதாபி விமானத்தில் செல்லும் இந்த பாகிஸ்தான் குழுவினர் அபுதாபியில் ஓய்வெடுத்து பின்னர் இன்று மாலை கொல்கத்தாவை சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், ‘இந்தியாவில் எங்களுக்கு சிறப்பான விருந்தோம்பல் அளிக்கப்படும் என்பதை இதற்கு முன்னர் நாங்கள் அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறோம்.

மார்ச் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய அணியுடனான போட்டியில் மாத்திரம் கவனம் செலுத்தாது ஒவ்வொரு அணியையும் எவ்வாறு கடந்து செல்வது என்பது தொடர்பில் பாகிஸ்தான் அணி கவனம் செலுத்தும்.’ என்று தெரிவித்துள்ளார். இந்தியா செல்லும் பாகிஸ்தான் குழுவில் அனுபவம்வாய்ந்த முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் இந்திகாப் ஆலம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=10502&cat=2

உலக கிண்ண சீருடையோடு பாகிஸ்தான் வீரர்கள்.

1505067_1141996499154514_393636280430667

10583863_1141996489154515_45088628076202

12805779_1141996725821158_23442860657951

12813976_1141996732487824_64188205884019

1475863_1141996872487810_553679592641273

 

 

Link to comment
Share on other sites

இன்றைய இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்து  8 விக்கெட்களால் வெற்றி

Hong Kong 127/7 (20/20 ov)
Scotland 78/2 (8/10 ov, target 76)
Scotland won by 8 wickets (with 12 balls remaining) (D/L method)
 
பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி
 
South Africa 196/8 (20/20 ov)
India 192/3 (20.0/20 ov)
South Africa won by 4 runs

 

Link to comment
Share on other sites

சூப்பர் 10 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான்

ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.

இத்தகுதிகான் சுற்றில் 8 அணிகள் பங்கேற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. 'ஏ" பிரிவில் பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும், 'பி" பிரிவில் சிம்பாபே, ஆப்கானிஸ்தான், ஹாங் கோங், ஸ்கோட்லாந்து அணிகளும் இடம் பெற்றன.

இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு நுழையும்.

'பி" பிரிவில் தகுதிகான் சுற்றின் போட்டிகள் நாக்பூரில் நேற்று முடிவடைந்தன. ஆப்கானிஸ்தான் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தை பிடித்து சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 59 ரன்னில் வீழ்த்தியது. ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 10 சுற்றில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியதீவுகள் அணிகள் இடம் பெற்ற குழு 1 பிரிவில் இருக்கிறது.

236507.jpg

http://www.virakesari.lk/article/4118

 

Link to comment
Share on other sites

சூப்பர் 10 சுற்றுக்கு பங்களாதேஷா ஓமானா செல்லும்

...

 

ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் தகுதிகான் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.

'சூப்பர் 10" சுற்றுக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பது இன்று தெரியும். 'ஏ" பிரிவில் இன்று நடைபெறும் இறுதி தகுதிகான் சுற்று போட்டிகளில் அயர்லாந்து, நெதர்லாந்து, பங்களாதேஷ், ஓமன் அணிகள் மோதுகின்றன. 

அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன. இதனால் அந்த அணிகள் மோதும் ஆட்டத்தில் எந்த பலனும் இல்லை.

பங்களாதேஷ்,  ஓமன் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி 'சூப்பர் 10" சுற்றுக்கு தகுதி பெறும். பங்களாதேஷ் அணி ஓமனை வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்து மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

ஓமன் அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. நெதர்லாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து ஆனது. பங்களாதேஷ்ற்கும் அதிர்ச்சி கொடுக்கும் ஆர்வத்துடன் ஓமன் காத்திருக்கிறது.

இரு அணிகளும் இருபதுக்கு 20 போட்டியில் முதல் முறையாக இன்று மோத இருக்கின்றன.

http://www.virakesari.lk/article/4120

Link to comment
Share on other sites

ஐபிஎல் அனுபவம் உதவும்: ஸ்மித்

 

கேப்டன் ஸ்மித். | படம்: கெட்டி இமேஜஸ்.
கேப்டன் ஸ்மித். | படம்: கெட்டி இமேஜஸ்.

டி 20 உலக கோப்பையில் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஐபிஎல் அனுபவம் உதவும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

உலக கோப்பையில் டி 20 டிராபி மட்டும் தான் எங்களிடம் இருந்து தப்பித்துள்ளது. நாங்கள் எல்லா ஆட்டத்திலும், தொடரிலும் வெற்றி பெற விரும்புகிறோம். எங்கள் அணி சிறப்பாக உள்ளது. டி 20 உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 15 வீரர்கள் அணியில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வென்றுள்ளோம். வீரர் களின் ஆட்டத் திறனில் முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதால் நல்ல பார்மில் இருக்கிறோம்.

எங்களது திறனை நாங்கள் நிச்சயமாக வெளிப்படுத்துவோம். நாங்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எங்களை வீழ்த்துவது கடினமாக இருக்கும். அணியில் அதிக அளவிலான ஆல் ரவுண் டர்கள் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதுடன் வலுவான பேட்டிங்கையும் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் அதிக அளவி லான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற் றுள்ளோம். அதனால் இங்குள்ள சூழ்நிலைகள் பற்றி தெரியும். நாங்கள் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

தொடரை வெற்றிகரமாக தொடங்குவது மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வந்துள்ளேன். மீண்டும் அதே போன்று ஆட்டம் அமைந்தால் சிறப்பானதாக இருக்கும். சமீபத்தில் ஆடிய சில ஆட்டங்களில் நல்ல முறையில் ரன் சேர்த்தேன். அதனை இந்த தொடரிலும் எடுத்து செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/article8348610.ece

Link to comment
Share on other sites

நியூஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

 
 
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பந்தை சிக்ஸருக்கு விளாசிய நியூஸிலாந்து வீரர் வில்லியம்சன்.
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பந்தை சிக்ஸருக்கு விளாசிய நியூஸிலாந்து வீரர் வில்லியம்சன்.

டி 20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நியூஸிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 39 பந்தில், 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 63 ரன் எடுத்தார்.

மார்ட்டின் கப்தில் 16, நிக்கோல்ஸ் 14, லூக் ரோன்ஜி 13, ராஸ் ஷான்டர் 10, நாதன் மெக்கலம் 2, கிராண்ட் எலியாட் 14, மெக்லினஹன் 1 ரன் எடுத்தனர். டெய்லர் 19, டிம் சவுதி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராய் 55, ஹேல்ஸ் 44, ஜோ ரூட் 12, மோர்கன் 20 ரன்கள் எடுத்தனர். பட்லர் 24, பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் நாதன் மெக்கலம் 2 விக்கெட் கைப்பற்றினார்.

சூப்பர் 10 சுற்றில் நியூஸி லாந்து தனது முதல் ஆட்டத்தில் 15ம் தேதி இந்தியாவையும், இங்கிலாந்து 16ம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் அணி யையும் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8348612.ece

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை விட அன்பு அதிகம் இந்தியாவிலேயே கிடைக்கும் - அப்ரிடி

பாகிஸ்தானை விட அன்பு அதிகம் இந்தியாவிலேயே கிடைக்கும் - அப்ரிடி

 

6வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மார்ச் 15-ம் திகதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 19-ம் திகதி இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் அணி இந்தியா வருவதை தாமதித்து வந்தது. இந்திய உள்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து நேற்று மாலை கொல்கத்தா வந்தடைந்தது பாகிஸ்தான்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் சாகித் அப்ரிடி, “இந்தியாவில் விளையாடும் போது எனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி அளவுக்கு மற்ற இடங்களை விட அதிகம். என் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் இருக்கிறேன். இந்தியாவில் எனக்கு கிடைக்கும் அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வேன்.

இந்தியாவில் எங்கள் மீது காட்டப்படும் அன்பானது, பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிகம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் யார் அழுத்ததை சமாளித்து ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும்” என்று அப்ரிடி தெரிவித்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=77932

Link to comment
Share on other sites

டி 20 உலக கோப்பை தொடர்: 30 வயதை கடந்த 43 வீரர்கள் 

 
nehra_2772987h.jpg
 

ஆறுவது டி 20 உலக கோப்பை தொடரில் விளையாடும் அணிகளில் 30 வயதை கடந்த 43 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சூப்பர் 10 சுற்றில் விளையாடும் அணிகளில் உள்ள வீரர்கள் குறித்த தகவல்கள் சில.....

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா 37 வயதை நெருங்குகிறார். உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் திறம்பட செயல்படாத நிலையில் டி 20 அணியில் இடம் பெற்றுள்ளார் நெஹ்ரா.

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பிய போதும் தனது ஸ்விங் பந்து வீச்சால் முத்திரை பதித்து வருகிறார். ஹர்பஜன்சிங் 35, தோனி 34, யுவராஜ்சிங் 34, ஷிகர் தவண் 30 வயதுடனும் உலக கோப்பை தொடரை சந்திக்கின்றனர்.

ஆஸி. அணியில் அதிக வயதான வீரராக வாட்சன் இடம் பிடித்துள் ளார். 34 வயதான அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளதால் அந்நாட்டு வாரியம் அவரை பயன்படுத்திக் கொண்டுள்ளது. வாட்சனுக்கு இது கடைசி உலக கோப்பை என்பதாலும், ஆஸ்திரேலிய அணி இதுவரை டி 20 உலக கோப்பையை கைப்பற்றியதில்லை என்பதாலும் தனது சிறப்பான பங்களிப்பை அவர் அளிக்கக்கூடும்.

நடப்பு சாம்பியனான இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தில்ஷானுக்கு 39 வயதா கிறது. சூப்பர் 10 சுற்றில் இடம் பிடித்துள்ள அணிகளில் அதிக வயதுடையவர் இவர் தான். இந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹராத் 37 வயதை கடந்த வர் ஆவார். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் அணிக்கு இவர்கள் புதுத் தெம்பு அளிக்க முயற்சிக்கக் கூடும்.

பாகிஸ்தான் அணியில் 30 வயதை கடந்த வீரர்கள் 7 பேர் உள்ளனர். இவர்களில் அப்ரீடிக்கு 36 வயதாகிறது. தேர்வுக்குழுவினர், பயிற்சியாளருடன் மோதல் போக்கு மற்றும் மோசமான தோல்விகள் ஆகியவற்றால் அப்ரீடியின் கேப்டன் பதவி கேள்விக்குறியாக உள்ள நிலையில் நெருக்கடியுடன் அவர் உலக கோப்பையை எதிர்கொள்கிறார். மற்ற வீரர்களில் ஹாலித் லத்திப் 30, முகமது ஹபீஸ் 35, முகமது இர்பான் 33, முகமது சாமி 35, ஷோயிப் மாலிக் 34, வஹாப் ரியாஸ் 30 வயதுடன் போட்டிகளை எதிர்கொள்கின் றனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிக வயதுடைய வீரராக இம்ரன் தகிர் உள்ளார். அவருக்கு 36 வயதாகிறது. டி வில்லியர்ஸ், ஆம்லா, ஸ்டெயின், பெஹார்தின் ஆகியோர் 32 வயதை கடந்தவர்கள். வைஸ் 30, டுமினி 31, டுபிளெஸ்ஸி 31 வயதுடன் உலக கோப்பை தொடரை சந்திக்கின்றனர். இவர்களில் டி வில்லியர்ஸ் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றும் திறன் கொண்டவர்.

அதிகபட்சமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 30 வயதை கடந்த 9 வீரர்கள் இடம் பிடித்துள் ளனர். சிக்ஸருக்கு பெயர் பெற்ற கெய்லுக்கு 36 வயதாகிறது. அவருக்கு அடுத்தப்படியாக மார்லோன் சாமுவேல்ஸ் 35 வயது டனும், டேரரன் சமி 32 வயதுடனும் தொடரை எதிர்கொள்கின்றனர்.

நியூஸிலாந்து அணியில் 4 வீரர்கள் 30 வயதை கடந்தவர் களாக உள்ளனர். அந்த அணியின் ராஸ் டெய்லர் 31, லூக் ரோன்ஜி 34, நாதன் மெக்கலம் 35, கிராண்ட் எலியாட் 36 வயதில் களம் காண்கின்றனர். இங்கிலாந்து அணியில் 30 வயதை கடந்த ஒரே வீரர் லயாம் புளுங்கெட் மட்டுமே.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-30-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-43-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8348608.ece

Link to comment
Share on other sites

ஓமான் 41/2 

மழை குறுக்கிட்ததால்    10.48pm A resumption imminent. The new target is 152 off 16 overs. The Bangladesh fielders are already out there. The umpires walk out.

45/4 மீண்டும் மழை

Link to comment
Share on other sites

கிரிக்கெட்: ஓமன் அணியை வீழ்த்தியது வங்கதேச அணி
 
 
 

தர்மசாலா : உலக கோப்பை தொடரின் சூப்பர்-10 சுற்றுக்கு வங்கதேச அணி முன்னேறியது. இன்று நடந்த லீக் போட்டியில், டக்வொர்த்-லீவிஸ் முறையில் ஓமன் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற ஓமன் அணி முதலலி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கடின இலக்கை நோக்கி பேட்டிங்கை துவக்கிய ஓமன் அணி மழை குறுக்கீடு காரணமாக ஓவர் குறைக்கப்பட்டு, டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. முடிவி்ல் 12 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டும் எடுத்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1477720

Link to comment
Share on other sites

பயிற்சி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றி

Link to comment
Share on other sites

10013902_559653207529842_289870002058337

 

 

 

இலங்கை அணி இன்று பாகிஸ்தான் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது

Link to comment
Share on other sites

டி20 உ.கோ. முதல் சோதனை: 'மெக்கல்லம் வழி' நியூஸி.யை எதிர்கொள்ளும் 'தோனி வழி' இந்தியா!

 
பயிற்சியில் கேப்டன் தோனி. | படம்: பிடிஐ.
பயிற்சியில் கேப்டன் தோனி. | படம்: பிடிஐ.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நாளை (செவ்வாய்) நாக்பூரில் இந்தியா-நியூஸிலாந்து போட்டியுடன் தொடங்குகிறது.

2007 உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தனது உச்சகட்ட ஃபார்மில் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியிடம் தோல்வியடையாத ஒரு டெஸ்ட் விளையாடும் அணி உள்ளதென்றால் அது நியூஸிலாந்துதான்.

வாண்டரர்ஸ் மைதனத்தில் 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு நியூஸிலாந்து நிர்ணயித்த இலக்கு 190. 2009-ல் வெலிங்டனில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த இலக்கான 149 ரன்களை துரத்தி வெற்றி கண்டது. 2012-ல் சென்னையில் நடைபெற்ற டி20 போட்டியில் நியூஸிலாந்து இந்திய அணிக்கு நிர்ணயித்த இலக்கு 168. ஆனால் இந்திய அணி 166/4 என்று நெருக்கமாக வந்து தோற்றது.

2007-ம் ஆண்டு மே.இ.தீவுகளில் நடைபெற்ற 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறி கடும் பாதிப்புக்குள்ளான அணி அதன் பிறகு கடுமையாக உழைத்து அதற்குப் பிறகான ஒருநாள் போட்டிகளில் குறிப்பாக அயல்நாட்டில் வென்று ஓரளவு ஸ்திரப்படுத்திக் கொண்ட நிலையில் முதல் டி20 உலகக்கோப்பை இளம் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் அப்போது கோப்பையை இந்தியா வெல்லும் என்று ஒருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. இளம் அணியைக் கொண்டு தோனி அதனை சாதித்தார்.

2010-லும் இங்கிலாந்து வெல்லும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல்தான் மே.இ.தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் வென்ற போதும் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை, எனவே இந்த டி20 வடிவம் ஓரிரு பந்துகளில் அணியின் அதிர்ஷ்டங்களை மாற்றவல்லது.

அந்த வகையில் இந்த உலகக்கோப்பை ஃபா டு பிளெஸ்ஸிஸ் கூறுவது போல், “அனைத்து அணிகளுக்குமே வாய்ப்பு உள்ள ஒரு திறந்த டி20 உலகக்கோப்பை தொடர்” ஆகும்.

தோனியும், டி20 கிரிக்கெட்டில் அணிகளுக்கு இடையிலான இடைவெளியை பெரிதாக பார்க்க முடியாது என்று தெளிவுபட கூறியுள்ளார். ஏனெனில் 2007 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோற்கவில்லையா?

எனவே இந்த உலகக்கோப்பை தொடர் முழுதும் சுவாரசியம் மிகுந்த திருப்பங்களைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மெக்கல்லம் வழியில் நியூஸிலாந்து:

டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எந்த வடிவமாக இருந்தாலும் அதில் சிறப்பாக ஆட, எதிரணியினரை அச்சுறுத்த சிறந்த வழி ‘மெக்கல்லம் வழியே’ என்று நியூஸிலாந்து அணி முடிவெடுத்து ஆடி வருகின்றனர். மார்டின் கப்தில் (ஐபிஎல் ஏலத்தில் சீண்டப்படாதவர்), கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கொலின் மன்ரோ, கோரி ஆண்டர்சன், கிராண்ட் எலியட், ஹென்றி நிகோல்ஸ், லூக் ரோங்கி, சாண்ட்னர், டிம் சவுதி என்று மிக நீண்ட அதிரடி பேட்டிங் வரிசை கொண்டது.

அந்த அணியின் சமீபத்திய தாரக மந்திரம், என்ன சூழ்நிலையாக இருந்தாலும் அதிரடி வழிமுறைகளை விட்டுவிடக் கூடாது என்பதாகவே உள்ளது. இது டி20 மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள் என்று அந்த அணி கடைபிடித்து வருகிறது, தோல்வியைக் கண்டும் அஞ்சுவதில்லை, அணுகுமுறையே முக்கியம் முடிவு முக்கியமல்ல என்று ஆடும் எந்த ஒரு அணியும் மிக மிக அபாயகரமான அணியாகும். அந்த வகையில் நியூஸிலாந்து இந்திய அணிக்கு ஒரு தொடக்க சவாலாகும், சோதனையாகும்.

பவுலிங்கில் டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர், மெக்லினாகன், கோரி ஆண்டர்சன், அதிவேக ஆடம் மில்ன என்று ஆல்ரவுண்ட் திறமை வாய்ந்ததாக இருக்கிறது. இலங்கைக்கு எதிராக (226) நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் அதிரடி காட்டி அச்சுறுத்தினர், ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக மொயீன் அலி (1/30), அடில் ரஷீத் (3/15) ஆகிய ஸ்பின்னர்களிடம் தடுமாறினர். எனவே இந்தியாவுக்கு இதுதான் சரியான இடம். ஜடேஜா, அஸ்வின் ஆகியோரை தோனி எவ்வளவு சிறப்பாக பயன்படுத்துகிறாரோ அந்த அளவுக்கு வெற்றி சாத்தியம் இந்திய அணிக்கு உள்ளது.

இன்னொரு சாதகம் இந்திய அணி சார்பாக உள்ளது என்னவெனில் 2014க்குப் பிறகு ஆசிய மண்ணில் நியூஸிலாந்து ஆடவில்லை. எனவே ஸ்பின் மற்றும் நியூஸிலாந்து அணியின் தயாரிப்பின்மை ஆகியவை இந்திய அணிக்குச் சாதகமாக இருப்பதோடு, இந்திய அணி இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக 11 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஆசியக் கோப்பையையும் வென்று வலுவாக உள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகளை எளிதில் வீழ்த்திய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை அருகில் வந்து அச்சுறுத்தி தோற்றது. கிறிஸ் மோரிஸ் தோனியின் அந்த பெரிய ஷாட்டை ஆட விடாமல் செய்தார். ஆனால் அந்தப் போட்டியும் அறிவுறுத்துவது என்னவெனில் எவ்வளவு பெரிய இலக்கிற்கும் தற்போதைய இந்திய அணி அஞ்சாது என்பதே. தோனி கூறுவது போல் இப்போதைய இந்திய அணி எந்த ஒரு அணியையும் எங்கு வேண்டுமானாலும் வீழ்த்தும் திறமை கொண்டது.

ஆனாலும் அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா 4 ஓவர்களில் 51 ரன்களை கொடுத்தது சற்றே கவலையளிக்கக் கூடியதாகும் அணித் தேர்வில் மீண்டும் சோடை போய் விடக்கூடாது, மொகமது ஷமியின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக ஆஷிஷ் நெஹ்ராவை கைவிட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

ஏனெனில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மொகமது ஷமி, அணியில் தன் இடத்தைத் தக்க வைக்க கூடுதல் முயற்சிகளில் ஈடுபடுவது அணிக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம், மாறாக அனுபவமிக்க ஆஷிஷ் நெஹ்ரா, தொடக்க ஓவர்களில் பெரிய ஹிட்டர்கள் விக்கெட்டுகளை நமக்கு சமீபகாலங்களாக வீழ்த்திக் காண்பித்து வருகிறார். இந்தியா பெற்ற இந்த 10 வெற்றிகளில் ஆஷிஷ் நெஹ்ராவின் பங்களிப்பை மொகமது ஷமிக்காக விட்டுக் கொடுக்கும் முடிவை எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

தோனி அருமையாக கீப்பிங் செய்து வருகிறார், அது இந்தத் தொடரில் ஒரு முக்கிய பலமாக இந்திய அணிக்கு உள்ளது. அதே போல் கேப்டன்சியில் ஒன்று அஸ்வினை தொடக்கத்தில் வீசச் செய்வது இல்லையேல் 12-வது ஓவர் கொண்டு வருவது என்ற இரண்டு துருவ முரண் கையாளுதலை விடுத்து ஒரு விக்கெட் விழுந்தவுடனேயே அஸ்வினை கொண்டு வந்து எதிரணியினரை நசுக்க வேண்டும். அஸ்வினை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும், அதாவது அஸ்வினிக்கு இன்னும் ஓவர் உள்ளது என்ற அச்சத்தை எதிரணியினர் எப்போதும் கொள்ளுமாறு அவரை தோனி பயன்படுத்துவது நலம். அதே போல் பும்ரா அடிவாங்கினால் அவரை உடனே கட் செய்து தாக்குதலிலிருந்து காப்பதும் அவசியம். ஏனெனில் அவரது தன்னம்பிக்கை இந்தத் தொடரில் மிக முக்கியமானது.

இலங்கை அணி ஒருகாலத்தில் வெற்றி தோல்வியைக் கண்டு அஞ்சாமல் ஆக்ரோஷமாக ஆடி உலக அணிகளை அச்சுறுத்திய வழியில் தற்போது நியூசிலாந்து ஆடி வருகிறது. இத்தகைய மனநிலை கொண்ட அணியை வீழ்த்துவது கடினமே. ஆனால் இந்த மனநிலையே அந்த அணிக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தவல்லது.

அதாவது தோனி எதிரணியினரின் பலத்தில் புகுந்து விளையாடப் போகிறாரா? அல்லது அதன் பலவீனத்தில் புகுந்து விளையாடப் போகிறாரா என்பதே ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article8351905.ece?homepage=true

Link to comment
Share on other sites

இந்தியா பயணமானார் லசித் மாலிங்க 

ஆறாவது  இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்­தி­யாவில் கடந்த 8 ஆம் திகதி  ஆரம்­ப­மா­னது. நேற்றுடன் தகு­திகான் சுற்­றுக்கள் முடிவடைந்து  நாளை முதல் சுப்பர் 10 சுற்று ஆரம்­ப­மா­கின்­றது. 

இந்­நி­லையில் நாளை ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண "சுப்பர் 10" போட்டிகளில்  கலந்துக்கொள்ள இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று இந்தியா பயணமானார்.

ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி கடந்த 8 ஆம் திகதி  இந்தியா பயணமானமை குறிப்பிடத்தக்கது.

1423820723700.jpg

http://www.virakesari.lk/article/4173

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கும் வாய்ப்புள்ளது

 

Comments

InUnderEHussey.jpg

 

உலக இருபதுக்கு-20 தொடரில், கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து அணியைக் கருதுவதாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்காக, இத்தொடரில் ஆலோசராகச் செயற்படும் மைக்கல் ஹசி, இத்தொடரை வெற்றிகொள்ளும் அணிகள் பற்றிய தனது கருத்தை வெளியிட்டார்.

 

இத்தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்புள்ள நாடுகளாக, இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் காணப்படுவதாகத் தெரிவித்த மைக்கல் ஹசி, அவ்விரு அணிகளும் பலமானவையாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார். எனினும், கிண்ணத்தை வெல்லக்கூடிய எதிர்பாராத அணியாக, இங்கிலாந்து அணியைக் கருதுவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், அணியின் பயிற்றுநர் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோரின் பண்புகளை மைக்கல் ஹசி உயர்வாக மதிப்பிட்டார்.

 

'அவர்களிருவரும், விடயங்களை அமைதியாகக் கையாளவுள்ளனர். இருபதுக்கு-20 கிரிக்கெட் என்பது, அதிக அழுத்தத்தையும் அதிக கவனத்தையும் அதிக சக்தியையும் கொண்ட விளையாட்டு என்பதோடு, நிலைமை மிகச்சிறப்பாக இருந்தாலோ அல்லது மோசமாக இருந்தாலோ, வழிதடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது" என்றார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'அவர்களால் வெல்ல முடியுமென நிச்சயமாக நான் நினைக்கிறேன். மிக அதிகமான திறமையும் திறனும் இங்கிலாந்துக் குழாமில் காணப்படுகிறது" என்றார்.

http://tamil.wisdensrilanka.lk/article/3126

Link to comment
Share on other sites

12832489_559884534173376_309921578668350

டி20 உலகக்கிண்ண 'சூப்பர்-10' சுற்றில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் Nagpur இல் மோதுகின்றன.

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் ‘சூப்பர்-10’ சுற்றுக்கு தகுதி பெற்றன. 'சூப்பர்-10' சுற்றுப் போட்டிகள் :- 'சூப்பர்- 10' சுற்றில் விளையாடும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘குரூப்-1’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

‘குரூப்-2’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம்பெற்றுள்ளன.

இந்தியா : டோனி (அணித்தலைவர்), தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா, அஸ்வின், பும்ரா, நெக்ரா, ரஹானே, ஹர்பஜன் சிங், முகமதுஷமி, பவான் நெகி.

நியூசிலாந்து : வில்லியம்சன் (அணித்தலைவர்), குப்தில், டெய்லர், கோலின் முன்ரா, கோரி ஆண்டர்சன், எலியாட், சவுத்தி, நாதன் மெக்குல்லம், போல்ட், மெக்லகன், ஆடம் மிலின், ஹென்றி நிக்கோலஸ், ரோஞ்சி, சான்ட்னெர், இஷா சோதி.

Link to comment
Share on other sites

எனக்குப் பதில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதே சிறந்தது! தேர்வாளர்களை காப்பாற்றுவதற்காகவே இந்தியா செல்கிறேன்!!- லசித் மலிங்க கூறுகிறார்
2016-03-15 10:28:42

(கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து 
நெவில் அன்­தனி)

 

இந்­தி­யாவில் நடை­பெறும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு பூரண தேகா­ரோக்­கியம் இல்லை எனவும் தனக்குப் பதி­லாக இளம் வீரர் ஒரு­வரை குழாமில் இணைப்­பதே உசி­த­மா­னது எனவும் இரு­பது 20 அணியின் முன்னாள் தலைவர் லசித் மாலிங்க கூறு­கிறார்.

 

இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்யும் வழியில் 'மெட்ரோ ஸ்போர்ட்ஸ்' எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கையில் லசித் மாலிங்க மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

1553026.jpg'எனது இடது முழங்கால் எலும்பில் ஏற்­பட்­டுள்ள வீக்கம் கார­ண­மாக என்னால் விளை­யா­டு­வது கூடு­மான காரி­ய­மல்ல என கிரிக்கெட் தேர்­வா­ளர்­க­ளிடம் நான் தெரி­வித்­த­போ­திலும்  அவர்கள் 15ஆவது வீர­ராக குழாமில் சேர்த்­துள்­ளார்கள்.

 

அத்­துடன் 15ஆம் திக­திக்கு முன்னர் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­யு­மாறும் என்னைக் கோரினர். என­வே தான் நாள் இந்­தியா பய­ணிக்­கின்றேன்'' என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

ஆப்­கா­னிஸ்தான் அணிக்கு எதி­ரான போட்­டியில் விளை­யாட முடி­யுமா என மாலிங்­க­விடம் கேட்­ட­போது, ஆப்­கா­னிஸ்­தா­னு­டான போட்டி 17ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

 

எனவே அதற்கு முந்­திய இரண்டு தினங்கள் நான் பந்­து­ வீசி எனது உடற்­த­கு­தியை நிரூ­பிக்க வேண்டும்.

 

அந்த சந்­தர்ப்­பத்தில் மீண்டும் உபாதை ஏற்­பட்டால் குழா­மி­லி­ருந்து விலக நேரி­டலாம். உபாதை ஏற்­ப­டாத பட்­சத்தில் தொடர்ந்து விளை­யா­டுவேன். 

 

இவை அனைத்து எனது உடற்­த­கு­தியில் தான் தங்­கி­யி­ருக்­கின்­றது. இப்­போ­து­ கூட தேர்­வா­ளர்­களைக் காப்­பாற்­று­வ­தற்­கா­கவே நான் இந்­தியா பய­ணிக்­கின்றேன். அல்­லது உபா­தைக்­குள்­ளான ஒரு­வரை எவ்­வாறு தெரிவு செய்­தார்கள் என ஐ சி சி கேள்வி எழுப்பும்" என அவர் பதி­ல­ளித்தார்.

 

ஐ சி சி உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­முடி­யாமல் போனால், சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறும் உத்­தேசம் உண்டா எனக் கேட்­ட­தற்கு,

 

அப்­படி ஒரு உத்­தே­சமும் இல்லை. அதைப்­பற்றி சிந்­திக்­கவும் இல்லை. ஆனால் அப்­படி ஒரு தீர்­மானம் எடுப்­ப­தற்­கான வாய்ப்பு இல்­லா­மலும் இல்லை என மாலிங்க பதி­ல­ளித்தார்.

 

உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டா­விட்டால் ஐ பி எல்லில் விளை­யாடும் உத்­தேசம் உண்டா என அவ­ரிடம் கேட்­ட­போது, "இப்­போ­தைக்கு எதையும் உறு­தி­யாகக் கூற­மு­டி­யாது.

 

ஐ பி எல் ஆரம்­ப­மா­வ­தற்கு இன்னும் ஒரு மாதத்­திற்கு மேல் இருக்­கின்­றது. அதற்குள் எனது உபாதை நீங்கி நான் குண­மடைந்து ­வி­டுவேன் என கரு­து­கின்றேன்.

 

ஆனால் ஐ பி எல் போட்­டி­க­ளிலும் விளை­யா­டு­வது உறு­தி­யில்லை. ஏனெனில் சிகிச்­சை­யுடன் சில காலம் ஒய்வு பெறு­வது அவ­சியம்.

 

அந்த ஓய்­வு தான் பூரண ஆரோக்­கி­யத்தைத் தரும். எனவே ஐ பி எல்லின் கடை­சிக்­கட்டப் போட்­டி­களில் விளை­யா­டக்­கூ­டி­ய­தாக இருக்கும் என எதிர்பார்க்­கின்றேன்" என்றார்.

 

"கடைசி நேரத்தில் இலங்கை கிரிக்கெட் குழாமில் திடீர் மாற்­றங்கள் செய்­யப்­பட்டு இருவர் இணைக்­க­ப்பட்டமை குறித்து மாலிங்­க­விடம் கேட்­ட­போது, உண்­மையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடி பிரகாசிக்கத் தவறியவர்கள் தான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கவேண்டும்.

 

ஆனால் அவர்கள் நீக்கப்படாமல் சரியான சந்தர்ப்பம் வழங்கப்படாத வேறு இருவர் நீக்கப்பட்டனர். இது நியாயமாக எனக்குப் படவில்லை" என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15530#sthash.iwmeE0Cf.dpuf
Link to comment
Share on other sites

அரவிந்த, சங்கா மீது மாலிங்க அதிரடித் தாக்குதல் : தொடரிலிருந்து விலகுவேன் எனவும் அறிவிப்பு

 

அரவிந்த டி சில்வாவை தலைவராகவும் குமார் சங்கக்கார மற்றும் களுவித்தாரன உள்ளிட்டவர்களை  உறுப்பினர்களாகவும் கொண்ட புதிய தெரிவுக் குழு மீது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளளும் இருபது-20 அணியின் முன்னாள் தலைவருமான லசித் மாலிங்க கடுமையாக தாக்கியுள்ளார். 

Malinga-attacks-new-selection-committee.

உபாதை காரணமாக போட்டியில் களமிறங்க முடியாது எனவும் ஆசிய கிண்ணத் தொடரில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகவும் அணித் தலைவர் பதவியிலிருந்து மாலிங்க விலகினார்.

இதனையடுத்து உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைவராக நியமிக்கப்பட்டதோடு மாலிங்கவும் இடம்பெற்றிருந்தார்.

ஏற்கனவே இலங்கை அணி இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்று நியூசிலாந்துடன் பயிற்சி போட்டி ஒன்றிலும் மோதியிருந்தது.

 

இந்நிலையில் மாலிங்க நேற்றைய தினமே இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். கொல்கத்தா விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே மாலிங்க புதிய தெரிவுக்குழு மீது அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

"எனக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக என்னை தெரிவு செய்ய வேண்டாம் என்று தெரிவுக்குழுவுக்கு கூறியிருந்தேன். ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னதாகவே நான் அறிவித்திருந்தேன். ஆனால் என்னைத் தெரிவு செய்தார்கள். எனது உடல் நிலையில் 70 வீதம் கூட முன்னேற்றம் இல்லை. எனினும் என்னை விளையாடுமாறு வற்புறுத்தினார்கள். எனக்கு விளையாட முடியாது என்றால் அதை விளங்கிகொள்ள வேண்டும். எனக்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

கிரிக்கெட் உலகில் என்னதான் சாதனைகளை மேற்கொண்டிருந்தாலும் களத்தில் அணியின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாவிட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை.

எனது காலில் ஏற்பட்ட உபாதை குணமாவதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனினும் இன்னும் ஓரிருநாட்களில் எனது உடல் நிலையில் முன்னேற்றமடைந்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குவேன். போட்டிக்கு முன்னதாக களப்பயிற்சியில் ஈடுபடும் போது உடல்நிலை மோசமாக இருந்தால் உடனடியாக இந்த தொடரில் இருந்து என்னை விலக்குமாறும் இளம் வீரர் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்குமாறும் தெரிவுக்குழுவிடம் கோரிக்கை விடுப்பேன்.

32 வயதுடைய மாலிங்க சர்வதேச இருபது-20 அரங்கில் 31 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இருபது-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பறிய வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/4203

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.