• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

மீனா

உங்க வீடும் இப்படியா??

Recommended Posts

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

1929852_866008173554439_1939118402058047

12524112_866008166887773_732643354545873

12794339_866008210221102_378059263413196

12805656_866008223554434_695747341463473

12814286_866008216887768_759050457682690

12804641_866008250221098_773552130349920

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அரசின் தமிழர்சார் கொள்கைகளை ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டும் – உதயகுமார்            by : Vithushagan தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  “கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் ஒரு துரோகமாகத்தான் கருதப்படும். த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள் சில பல மாயையான தோற்றப்பாடுகளை நம் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்து அவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் இந்த ஏமாற்று வித்தைகளை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உதிரிக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் பல கட்சிகளுக்கு பிரிவதனால் அவர்களை உறுப்பினர்களாக தெரிவு செய்வதனை விடுத்து அச் செயற்பாடானது அரசின் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அடக்கு முறைகளுக்கு உறுதுணை அளிப்பவைகளுமாவேதான் அமையும் இதனை தமிழ் வாக்காளப் பெருமக்கள் அறிந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எமது வேட்பாளர்களும் புத்திஜீவிகளும் பல முறை கூறியதனைப் போன்று த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பேரினவாத அரசின் ஆசீர்வாதத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடையின்றி செயற்படுத்துவதற்கான ஆணையினை பெறுவதற்காக களமிறக்கப்பட்ட கட்சிகளாகும் இக் கட்சிகளின் தலைவர்களான அவர்கள் மொட்டுக் கட்சியுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக பலமுறை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்கள். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற இளைஞர்கள் பொதுமக்கள் பத்திஜீவிகள் அரசியல்வாதிகள் ஆகியோரை மொட்டுக் கட்சி தலைவர்களின் வேண்டுதலுக்காக அவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்காக படுகொலை செய்தவர்கள் இப்போது மட்டுமென்ன தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காகவா ஒப்பந்தம் செய்திருப்பார்கள். மாறாக எஞ்சி இருக்கின்ற தமிழ் தேசிய வாதிகளையும் எமது கட்சியான த.தே.கூட்டமைப்பினையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நாடு பூராகவும் மேலோங்கச் செய்வதற்காகவுமே இவர்கள் ஒப்பந்தம் செய்திருப்பார்கள். எனவே எமது ஆணையினைக் கொண்டு எம்மையே அழிப்பதற்கான கபட நாடகத்தினை தற்போதைய பேரினவாத அரசு மேற்கொண்டுள்ளது இதற்காக மூன்றாம்நிலை கடைக்கோடி உதிரிக் கட்சிகளான தங்களின் எடுபிடிகளை இதற்காக அரசு பயன்படுத்தியுள்ளதானது எமது விரலைக் கொண்டு எமது கண்ணையே குத்துகின்ற செயற்பாட்டினை இந்த அரசு மேற்கொள்வதனைப் பார்த்தால் சில முட்டாள்களைக் கொண்டு எமது மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணம் இந்த அரச தலைவர்களிடம் இன்னுமே மாறவில்லை என்பதனையே இது காட்டுகின்றது” என்றார். https://athavannews.com/அரசின்-தமிழர்சார்-கொள்கை/
    • இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டமுடியாததற்கு தமிழ் தலைமைகளே காரணம்- கஜேந்திரகுமார்            by : Litharsan 13ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து தரப்புக்களும் இந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். சரித்திரத்தில் முதல் தடவையாக நான்காவது அரசியலமைப்பு இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அந்த நான்காவது அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சியாக இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அதனை ஆதரிக்கும் நிலைமை உருவாகப் போகிறது. சர்வதேசம் இன்றைக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பொன்று உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றது. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால்தான் இந்தத் தீவில் இனப் பிரச்சினை இல்லை எனவும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைய முடியும் என்பதையும் வலியுறுத்துகின்றார்கள். ஆனால், அந்த இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்திலே, போருக்குப் பிற்பாடு இதுவரைக்கும் எமது தலைவர்களாக இருந்தவர்கள் 13ஆவது திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்தபடியால்தான் இன்று அபத்து உருவாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/இனப்-பிரச்சினைக்கு-நிரந்/
    • யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்            by : Litharsan சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளை எதிர்கொண்டுள்ள யஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக 50இற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புக்களும் 150 முக்கிய நபர்களும் கையெழுத்திட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதலாம் திகதி யஸ்மின் சூக்கா, வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கையின் தேசிய புலனாய்வுத்துறை பணிப்பாளர் மேஜர் சால்லேயை அவமரியாதை செய்யும் வகையில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த 18ஆம் திகதி யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்களுக்கு சுரேஸ் சால்லே தனது முறைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். அத்துடன், தன்மீது சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்காக யஸ்மின் சூக்காவும், அவரின் நிறுவனமும் 10 பில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கவேண்டும் என்று கோரி சால்லே சட்டக் கோரிக்கை கடிதத்தை அனுப்பியிருந்தார். இந்நிலையில், யஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக மனித உரிமைகள் அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கத்தினால் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்த விரும்புகின்றன. சூக்காவிற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்களும் அச்சுறுத்தல்களும் மனித உரிமைகள் பாதுகாவலராகவும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞராகவும் உள்ள சூக்காவினுடைய நீண்ட காலப் புகழை பாதிப்படையச் செய்வதாக உள்ளன. ஜூலை 2010இல் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது புரியப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றி ஐ.நா பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவில் ஜஸ்மின் சூக்கா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சூக்காவிற்கு எதிராக இலங்கை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டிருப்பவை சூக்காவிற்கும் அவருடைய அமைப்பிற்கும் மனித உரிமைகள் சமூகத்திற்கும் எதிரான தாக்குதல் மட்டுமல்லாது இது அவருடைய பணியுடன் தொடர்புபட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் மீதான தாக்குதலும் ஆகும். மனித உரிமைகளையும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் அவருடைய சட்ட ரீதியான செயற்பாடுகள் மேலும் குறிப்பாக உண்மை மற்றும் நீதிக்கு ஆதரவான அவரது செயற்பாடுகளுக்கு நேரடிப் பதிலடியாகவுள்ள சூக்காவிற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து நாங்கள் எமது ஆழ்ந்த கரிசனையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை சர்வதேச உரிமைகளை மீறுவதாக உள்ளதுடன் நீண்ட காலமாக உள்ள அநீதி மற்றும் இலங்கையில் நிலவும் குற்றத்தில் இருந்து பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இன்னுமொரு முயற்சி இதுவாகும். இந்நிலையில் இவற்றுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ள அனைவரும், பொறுப்புக் கூறலுக்கும் மற்றும் மனித உரிமைகள் பற்றிய குறிக்கோள்களுக்காகவும் பாடுபடுபவர்களை தொடர்ச்சியாகப் பலவீனப்படுத்துவதை விட மனித உரிமைகளை மதிப்பதற்கு தனது தீவிரமான ஈடுபாட்டை வெளிக்காட்டுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/யஸ்மின்-சூக்காவிற்கு-எதி/
    • இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா? – சம்பிக்க          by : Dhackshala இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா? என்பது தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் இல்லாத விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் தற்போது பெற்றுக்கொள்ளப்படுகின்றன. நானும், இதுதொடர்பான எனது வாக்குமூலத்தை வழங்கினேன். இதன்போது, இஸ்லாம் அடிப்படைவாதம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நான் கூறினேன். விசேடமாக, 2019, மே மாதம் மஹிந்த ராஜபக்ஷ பேராதனை விகாரையொன்றுக்கு சென்றபோது, அங்கிருந்த விகாராதிபதி கெப்பட்டியாகொட ஸ்ரீவிமல நாயக்க தேரரிடம் கருத்தொன்றை முன்வைத்திருந்தார். அதாவது, இந்த அடிப்படைவாதிகளுக்கு அரச புலனாய்வாளர்களால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியானால், யாருக்கு அந்த அரசாங்கம் சம்பளம் வழங்கி தகவல்களை பெற்றுக்கொண்டது, பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் எவ்வாறான தன்மையுடையவை என்பது தொடர்பாக விசாரணை செய்ய முடியும். இதனை விசேட விசாரணையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் நான் கோரியிருந்தேன். அதேபோல், ராஜபக்ஷவினர் காலத்தில் அவன்காட் நிறுவனத்தின் ஊடாக சர்வதேச கடற்பாதுகாப்புத் துறையினருக்கு, இலங்கையில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனவே, அவன் காட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்த ஆயுதப் பயிற்சியில் இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். அடிப்படைவாதிகளின் பின்னணியில் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் உள்ளார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால், இதுதொடர்பான விசாரணைகள் எந்தவொரு அரசியலுக்கும் உள்ளாகாமல் இடம்பெற வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/இஸ்லாம்-அடிப்படைவாதிகளு/
    • சிறை கைதியுடன் பழகிய 174 பேருக்கு பிசிஆர் சோதனை!   வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியான கைதியுடன் பழகிய 174 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி இன்று (07) சற்றுமுன் தெரிவித்துள்ளார். இவர்களது முடிவுகள் இன்று மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://newuthayan.com/சிறை-கைதியுடன்-பழகிய-174-பேர/