Jump to content

இப்ப துரோகிகள் அப்ப ஹிரோக்கள் .


Recommended Posts

இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது ....

நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ...

பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம் உள்ளவர்கள் உடனம் பக்கவாடாக சப்போட் கொடுக்கசொல்லி கட்டளை வருகிறது,வோக்கியை கையில் ஏந்தியபடி தனது கோல் கொமாண்டோ ரைபிளை தூக்கி பெடியள் வேகம் வேகம் என்கிறார் தீபக் மாஸ்டர்,பிள்ளைகள் மாட்டிட்டு அடிச்சு எடுங்கோ வெளியில் என மாறி மாறி மேஜர் சுஜாத், ஜெனாவின் செக்சனுக்கு சொல்லிக்கொண்டு சண்டை நடக்கும் இடம் நோக்கி குனித்த படியே மூன்றும் மையில் ஓடும் நிலை,கொஞ்சம் நிமித்தாலும் எங்காவது வெடி கொழுவும் என்னும் பயம் எல்லோரு மனங்களிலும் ஓடியபடி இருக்கிறது .....

முன்னாடி போன அணி சண்டையில் பின் வளங்கள் இல்லாமல் போக சண்டை தளர்வு நிலைக்கு வருகிறது அது எதிரிக்கு வாய்பை கொடுக்கிறது, வேவுக்காரர் வருகிறார்கள் நிண்டு பிடியுங்க சப்போட் வந்து சேர்த்திடும் என அவர்களுக்கு தைரியம் கொடுத்தபடி, உள் நுழைகிறது தீபக் மாஸ்டர் அணி நிலை எடுங்க அவசரம் வேணாம் வளங்கள் வரும்வரை தக்க வைக்கணும் என்னும் நிலையில் களம் இருக்கிறது....

ஒரு வி வடிவில் நாலு காவல் அரணையும் எதிரி தனது கட்டுப்பாடில் கொண்டுவந்தான், இங்கிருத்து அங்கால கடக்க முடியாது மற்ற பக்கம் உள்ளவர்கள் இந்த பக்கம் நகர முடியாமல் ஆறு குறுக்கே இருந்தது , ஒன்றில் இந்த பக்கம் உடைச்சால் மட்டுமே அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் அல்லது தனிப்படும் இங்குள்ள நிலைகள் வளங்கள் வருவது கடினம் என்னும் நிலை மதியம் நெருங்க சோர்பு களைப்பு பசி என ஒரு மந்தமான சூழல் நிலவுகிறது அந்த பதட்டம் பொறுப்பாளர்கள் கண்களில் தெரிகிறது சும்மா அடிக்க வேணாம் ரவுஸ் முடிக்க வேணாம் உதவி வரும்வரை தாக்கு பிடியுங்க ......

ஒகே ஆக்கள் கிட்ட வந்திட்டாங்கள் இப்ப வந்திடுவாங்கள் ஒகே ஒகே என வோக்கியின் ஒலியில் தெரிகிறது நம்பிக்கை ,தலையில் கறுப்பு துணி (முறால் துணி) என்பர் கைகளில் பவரான ஆயுதங்கள் ஒன்பது பெயரில் மூன்று பேர் இடம் எல் ம் ஜி இருந்தது அணியை கூட்டி வந்த பொறுப்பு கட்டளை இடுகிறான் பொடியள் அங்கிட்டு போட்டு உசக்க அடி ,டேய் நீங்க மருக்கா போட்டு கொடுங்க சப்போர்ட் இவனுக கொடுப்பாங்க என பரபரப்பாக பேசும் போது தெரிகிறது அவரின் பேச்சு மொழியில் மட்டக்கிளப்பு ஜெயந்தன் அணி என ....

நம்ம ஆக்கள் செல் போட்டு கொடுப்பங்க பின்னேரத்துக்குள் சண்டை தொடங்கி மீண்டும் நாலு நிலையும் பிடிக்க வேணும் ,மீண்டும் தொடங்கியது பெரும் சமர் எதிரியின் மிக அதீத சூட்டு வலுவை எதிர்த்து இரண்டு அணிகளாக உள் போகிறது போராளிகள் அணி அடிச்சு மூடினால் முன் நிக்கும் தங்கள் வீர்கள் நிலை கேள்வி என யோசிச்சு எதிரி பின் நகர தொடங்க போராளிகள் மன நிலை உற்சாகம் அடைகிறது ஓடுறான் அடி அடி என வேகம் எடுக்கிறது சண்டை ,எல்லாம் முடிந்து வழமைக்கு திரும்பும் போது பதினாறு போராளிகள் மண்ணை முத்தமிட்டு இருந்தனர் ...

மச்சான் ஆள் முடிச்சாம் என சாவை சாதரணமாக சொல்லிக்கொண்டு காவி போனார்கள் சக தோழர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயந்தன் படையணியைப் பற்றி எழுதின அஞ்சரன், ஜெயந்தன் படையணியை உருவாக்கி,ஜெயசுக்கூறு போரை வழி நடத்தின அந்தணியின் தலைவரைப் பற்றி எழுதக் காணோம்!...துரோகி என்று சொல்லி விடுவார்கள் என்ட பயமா???

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

ஜெயந்தன் படையணியைப் பற்றி எழுதின அஞ்சரன், ஜெயந்தன் படையணியை உருவாக்கி,ஜெயசுக்கூறு போரை வழி நடத்தின அந்தணியின் தலைவரைப் பற்றி எழுதக் காணோம்!...துரோகி என்று சொல்லி விடுவார்கள் என்ட பயமா???

ஒருநாளும் இல்லை அந்த  களத்தில் நின்ற  போராளிகளுக்கு  தெரியும்  கருணாம்மான்  தியாகம்  உழைப்பு  என்ன  என ,என் நிலையில் பொதுவில்  அவரை துரோகி  என  இன்றுவரை  சொன்னதில்லை, தலைவர்  கூட  சொன்னதில்லை  அமைப்பில் ஒழுக்காற்று  நடவடிக்கை கொண்டு  நீக்கபட்டவர்  அவ்வளவுதான் அதற்கு  புலி  சீன்  போடுபவர்கள்  துரோகி  என  குமுறுவதை  ஓரமாக  வைக்கவும் .

 

சமருக்கு  எல்லாம்  தாய்  சமரை  வழிமறித்து  கிடந்தவர்கள்  அவர்கள் ,ஒரு  தனிமனித  தவறுக்கு  ஒட்டுமொத்த  போராளிகள்  நோக்கி எங்கள்  துப்பாக்கிகள்  திரும்பியது  வரலாற்று  பெரும் தவறு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அஞ்சரன் said:

ஒருநாளும் இல்லை அந்த  களத்தில் நின்ற  போராளிகளுக்கு  தெரியும்  கருணாம்மான்  தியாகம்  உழைப்பு  என்ன  என ,என் நிலையில் பொதுவில்  அவரை துரோகி  என  இன்றுவரை  சொன்னதில்லை, தலைவர்  கூட  சொன்னதில்லை  அமைப்பில் ஒழுக்காற்று  நடவடிக்கை கொண்டு  நீக்கபட்டவர்  அவ்வளவுதான் அதற்கு  புலி  சீன்  போடுபவர்கள்  துரோகி  என  குமுறுவதை  ஓரமாக  வைக்கவும் .

 

சமருக்கு  எல்லாம்  தாய்  சமரை  வழிமறித்து  கிடந்தவர்கள்  அவர்கள் ,ஒரு  தனிமனித  தவறுக்கு  ஒட்டுமொத்த  போராளிகள்  நோக்கி எங்கள்  துப்பாக்கிகள்  திரும்பியது  வரலாற்று  பெரும் தவறு .

புரியும் ...
ஆனா புரியாது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எங்கன்ட கீரோக்கள் இளையராஜாவும்,ரகுமானும்......அன்னக்கிளியே உன்னைதேடுதே என விசிலடிச்சு கொண்டு திரிந்தோம் பிறகு அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டேன் என்று விசிலடிச்சு கொண்டு திரிந்தோம்..........
சகல போராளிகளும் விடுதலை என்ற எண்ணத்துடனே சென்றனர்....

Quote

   இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல 

,

மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல

 

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மானை விசாரிக்க கூப்பிட்டவை கூட பக்கத்திலை இருந்த பாப்பா, தேவரண்ணை (ஆறுமுகம் தங்கவேலாயுதம் - வல்வைக்குமரன்) போன்றோரை விசாரிக்கவே இல்லை. அதோடை மற்ற எல்லாரும் மதுபானம் குடிக்கக் கூடாது புகைக்கக் கூடாது ஆனால் தேசத்தின் குரல் எண்டால் அதுக்கொரு எக்ஸம்சன் இருக்கு அது பிழையில்லை, அவையளே போராளிகளை விட்டு வாங்கிக் குடுப்பினம்! 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 2/16/2016 at 4:28 AM, வாலி said:

கருணா அம்மானை விசாரிக்க கூப்பிட்டவை கூட பக்கத்திலை இருந்த பாப்பா, தேவரண்ணை (ஆறுமுகம் தங்கவேலாயுதம் - வல்வைக்குமரன்) போன்றோரை விசாரிக்கவே இல்லை. அதோடை மற்ற எல்லாரும் மதுபானம் குடிக்கக் கூடாது புகைக்கக் கூடாது ஆனால் தேசத்தின் குரல் எண்டால் அதுக்கொரு எக்ஸம்சன் இருக்கு அது பிழையில்லை, அவையளே போராளிகளை விட்டு வாங்கிக் குடுப்பினம்! 

 

இதில  பாப்பா  கட்டையில்  ஏற்றியது  சுடுவதற்கு  அவரின்  மனைவி  திலகா  அக்கா  தான்  மன்னிக்க  சொல்லி  மறிச்சது  அதாலால்  தப்பித்தவர்  பின்னர்  அவரே  திருமணம்  செய்தார்  வேறு  வழியில்லை  பாவம்  என  ....அதன்   பின்னர்  அவர்களின்  குடும்ப  பிரச்சினைகள்  மல்லாவியில்  வாழ்த்த  அனைவருக்கும்  தெரியும்  சாதி  சார்த்து நடந்தது ....தேவர்  அண்ணையை  நீக்கி  விட்டார்கள்  அமைப்பில்  இருந்து .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.