Jump to content

பெரியார் சிலை தகர்ப்பு- பின்னணிச் சதியை உணர்க! - பழ.நெடுமாறன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் சிலை தகர்ப்பு- பின்னணிச் சதியை உணர்க!

- பழ.நெடுமாறன்

திருவரங்கத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை தகர்க்கப்பட்ட நிகழ்ச்சி தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரையும் கொதித்தெழ வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டை கலவரபூமி ஆக்கும் திட்டத்துடன் இந்தச் செயலை இந்து பாசிச வெறியர்கள் செய்திருக்கிறார்கள்.

தமிழர்களைத் தட்டி எழுப்பி தன்மானம் உள்ளவர்களாக ஆக்கியவர் தந்தை பெரியார் ஆவார். அவருடைய தொண்டு என்பது தமிழர்களை விழிப்படைய வைத்து முன்னேற்றப்பாதையில் நடைபோட வைத்தது.

ஆண்டாண்டு காலமாக வருண தருமத்தின் பெயரால் இம்மண்ணின் மைந்தர்களை சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி அடிமைச் சேற்றில் ஆழ்த்திய கூட்டம் பெரியார் மீது ஆத்திரம் கொண்டு அலைகிறது.

தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை சகல துறைகளிலும் ஒழித்துக்கட்டிய பெருமைக்குரியவர் பெரியார் ஆவார். அவருடைய தொண்டு தொடராமல் போயிருந்தால் பெருந்தலைவர் காமராசரோ, அறிஞர் அண்ணாவோ, கலைஞர் கருணாநிதியோ, ஜீவானந்தம் அவர்களோ அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்க முடியாது.

50 ஆண்டு காலத்திற்கு மேலாக தனது ஈடுஇணையற்ற உழைப்பின் விளைவாக தமிழ்நாட்டில் மதவெறி, சாதி வெறி , மூடநம்பிக்கை போன்றவற்றை களைந்தெறிந்து பண்பட்ட பகுத்தறிவு நிலமாக பெரியார் ஆக்கிவைத்தார்.

ஆனால் தமிழ்மண்ணில் பெரியார் வாழ்ந்த காலம் வரை தலைதூக்க அஞ்சிய இந்து பாசிச வெறிக்கூட்டத்தை பல்லக்கில் சுமந்து வந்து, தமிழ்நாட்டில் காலூன்ற வைத்தவர்கள் திராவிடக் கட்சிகளைச் சார்ந்தவர்களே ஆவார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், போட்டிபோட்டுக்கொண்டு அதிகார வெறியிலும், ஒருவரை யொருவரை அழித்திடவேண்டும் என்ற ஆத்திரத்திலும் இந்து பாசிச வெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்தார்கள். இவர்களின் தோளில் சவாரி செய்து தமிழ்நாட்டில் காலூன்றிக் கொண்ட இந்து பாசிசக் கூட்டம் பெரியார் சிலையையே உடைக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது.

இதைக் கண்டு இப்போது வருந்திப்பயன் இல்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இந்து பாசிச வெறிக் கூட்டம் தமிழ்நாட்டில் வெறியாட்டம் போடுகிறது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு, அவர்கள் கூட்டும் மாநாட்டுக்கு தடை, என பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் இரு கழக அரசுகளும் கடந்த 10 ஆண்டுக்காலத்தில் மதவெறியை ஊட்டும் வகையில் பேசியும் மதக்கலவரங்களுக்கு வித்திட்டும் வரும் இந்து பாசிச அமைப்புகளுக்கு தடைவிதிக்கவோ அவர்கள் மீது. வழக்குத் தொடரவோ முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். அதுமட்டும் அல்ல மத்தியில் இந்து பாசிச ஆட்சி இப்போது இல்லை என்றாலும் கூட இந்த இரு கழகங்களும் இன்று வரையிலும் இந்து பாசிச அமைப்புகளைக் குறித்து எத்தகைய விமர்சனங்களும் செய்வதில்லை என்பது அப்பட்டமான உண்மையாகும். ஏனென்றால் எதிர்காலத்தில் மீண்டும் மத்திய ஆட்சிக்கு இந்து பாசிச அமைப்பு வந்துவிடுமானால் அதனுடன் இணைந்து செல்லவேண்டி இருக்குமே என்ற அச்சத்தினால் அவர்கள் வாய் திறப்பதில்லை.

பெரியார் சிலைத் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சியைக் கண்டு கொதிப்படைந்து எதிர்போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியது தி.மு.க. அரசு. ஆனால் பெரியார் சிலைத் தகர்ப்பு சதியின் மூலவர்களான தயானந்த சரசுவதி, இராம. கோபாலன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.

திருவரங்கம் பெரியார் சிலைத் தகர்ப்பை இந்த பின்னணியில் நாம் பார்க்கவேண்டும். பெரியார் சிலையைத் தகர்ப்பதின் மூலம் தமிழ்நாட்டில் அவரால் பரப்பப்பட்டுள்ள அனைத்தையுமே வீழ்த்துவதற்கு இந்து பாசிச வெறியர்கள் முயலுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல் நாம் பேசுவது வந்திருக்கக்கூடிய அபாயத்தை முழுமையாக உணரவில்லை என்பதையே காட்டும்

- நன்றி தென் செய்தி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.